வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- பட்டினி கிடந்து உயிரை விட்டால், அது மிகவும் உயர்ந்த நிலையை ஒரு மனிதனுக்கு நல்கும். இறையருளை தரும்.
- தாவர இனங்களை உண்பதால் குறைந்த பட்ச பாபம் வரும். எனவே இறைவனிடம் பிறவியே வேண்டாம் என வேண்ட வேண்டும்.
- உயிர் கொலை பாபங்கள், எந்த தர்மத்தாலும் நீற்று போகாது.
- பரிபூரண சரணாகதி தத்துவத்தில் ஆழ்ந்தபின், சாஸ்திரங்களை அதிகம் கவனிக்க வேண்டாம்.
- ஒருவன் பக்குவமடைய, அவன் கர்மவினை இடம் தரவேண்டும்.
- தீய செயல்களை முயற்சி செய்து வெற்றிபெற்றால் பாவமாகும். தூய செயல்களை முயற்சி செய்து தோற்றாலும் பாதகமில்லை, புண்ணியமே வரும்.
- இறைவனைத் தொடு, ஒருவனுக்கு பின், சிகிர்ச்சையே தேவையில்லையப்பா.
- ஆத்திரம் அறிவுக்கு சத்ரு.
- உயர் நிலையில் நிதானம் வேண்டும்.
- பிறர் பிரச்சினை தீர்க்க நினைக்கின்; உன் பிரச்சினையை இறைவன் தீர்ப்பான்.
- செய்த பாபங்களை குறைத்துக்கொள்ளவும், இனி பாபங்கள் சேராமல் விழிப்புணர்வுடன் வாழவும் தான் இவ்வுடல் தரப்பட்டுள்ளது.
- நல்ல விஷயங்களை ஒரு சித்தன் சொல்லி செய்யவேண்டியதே இல்லை.
- இறைவனே தவறு செய்ய தூண்டினாலும், விதியே தவறு செய்ய அழைத்தாலும், போராடி, மறுத்துவிடு.
- உடலுக்காக மட்டும் வாழாதே!
- "சித்" எனப்படும் "சித்தம்" தெளிவடைய, உண்மையான சித்தர்களின் வழி, வாக்கு, ஏன் எதை எந்த காலத்தில் உரைக்கிறோம் என்பது தெளிவாகும்!
- ஒரு மனிதன் பாபத்தை நீக்குவதற்கும், பாபம் செய்யாமல் இருப்பதற்கும் போராடத்தான் வேண்டும்.
- நல்லவை எண்ணுதலும், நல்லவை சொல்லுதலும், நல்லவையே செய்தலும், எப்பிறவியிலும் ஒரு மனிதனுக்கு நல்லதை தேடித்தரும்.
- எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு பாபங்களை செய்யாமல் இருந்தால், பிறவிச்சுழற்சியில் மாட்டிக் கொள்ளமாட்டான்.
- சித்த வழி தொண்டு செய்து, சித்தர் வழியில் இறையை காண வேண்டும்.
- உள்ளுக்குள் இறையை பார்த்துப்பழக, விதி ஒருவனுக்கு சாதகமாக மாறும்.
- அண்ட சராசரங்களை படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தருவதற்கு என்று ஒன்றுமில்லை, தன் உள்ளத்தை தவிர.
- ஒரு மனிதன் பக்குவம் பெற நிறைய சோதனைகளையும், வேதனைகளையும் தாங்க வேண்டும்.
- சித்தர்களை போன்ற பற்றற்ற தன்மை வந்துவிட்டால் கட்டாயம், இறை காட்சி கிடைக்கும்.
- பரிகாரங்களை விட மனம் ஒன்றிய பிரார்த்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை!
- நடக்கட்டும் நம்புகிறோம் என்பது மனிதர்கள் வாக்கு. நம்புங்கள் நடக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.
- ஜபத்தின் ஒரு கட்டத்தில் ஒன்றும் இல்லாத வெறுமை வரும். அதனுள் வரும் வெற்றிடம்தான் மகா சக்தி அல்லது பூரண சக்தி.
- காமத்தை வெல்ல - அபிராமி அந்தாதி ஓதுக.
- ராம நாம ஜெபம், ஒருவனுக்கு வரும் காமத்தை ஓட்டும் என்பதே உண்மை.
- நாராயண ஜெபமோ, நமச்சிவாய ஜெபமோ, தொடர்ந்தால், ஒருவனுள் "அந்த" தன்மையை விதைக்கும்.
- உருவாகும் ஒன்று பின்னர் இல்லாமல் போய்விடும் என்பதே இறை சித்தாந்தம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
No comments:
Post a Comment