​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 16 September 2026

சித்தன் அருள் - 2314 - அன்புடன் அகத்தியர் - காகபுசண்டர் சித்தர் வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்டர் சித்தர்   மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு -  சிவபுராணம் என்பது என்ன?

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி !!!

அகிலத்தை ஆளக்கூடிய அகிலாண்ட தேவியே!!!, அகிலாண்ட ஈஸ்வரனே!!! பணிந்து பரப்புகின்றேன், புசண்டனே. 

அறிந்தும்  இன்றும் இதை என்று புரியாத வகையிலும் இருந்தாலும், முதலில் சொற்கள் சரியில்லை. பேசுவது—அதாவது சரியில்லை—எப்படி? 

அதாவது, ஒன்றை கேட்கின்றேன்; அதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம். உங்கள் திறமை எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம். 

பின்பு, அதாவது, வாய்தான் அறிந்தும் எதை என்று கூற, அறிந்தும் முன்னுக்குச் செல்கின்றதே தவிர, நிச்சயம் உள்ளங்கள் முன்னுக்குச் செல்லவே இல்லை. 

வாயினால் அனைத்தும் ஜெயிக்கலாம் என்று இருக்கின்றார்கள்; 

ஆனாலும் அவ்வாயில் எதை என்று அறிய, உணவு மட்டுமே உட்கொள்ள முடியும். 

அதுவும் ஏது என்று புரியாத நிலையில் இருந்து, எவை உணராத வகையில் கூட. 

காகபுசண்ட மாமுனிவர் :-  இதனால், ஒன்றுக்கு மட்டும் அர்த்தம் சொல்லுங்கள் பார்ப்போம். 

பின்பு, நீங்கள் திறமைசாலிகளா என்று பின் பார்ப்போம். 

***** அதாவது, சிவபுராணம் என்பது என்ன? *****

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, காகபுசுண்டர்  என்ன சொல்றார் என்றால், "வாய் விடுறீங்களேப்பா, வாய் பேசுறீங்களேப்பா" அதிகமா. சிவபுராணம் என்றால் என்ன?

அடியவர் 1:-  ஈசன் அய்யா. ஆதி  ஈசன். இறைவன் அய்யா.

காகபுசண்ட மாமுனிவர் :- இவ்வளவுதான் உன் புத்தி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இது பதில் இல்லை) சிவபுராணம் என்றால் என்ன? உங்களோட புத்தி எவ்வளவு நிலைமையில, நீங்க வந்து எவ்வளவு நிலைமையில இறைவன் இருக்கிறாங்கன்னு சொல்லிட்டு கேட்கிறார். 

அடியவர் 2 :- ஐயனே, வணக்கம். இறைவனைப் பற்றிய, ஈசனைப் பற்றிய முழுமையான விளக்கம் சிவபுராணத்தில் இருக்குங்க  அய்யா. 

காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று அறிய, அறிந்தும் அறிந்தும் ஏனையோர்கள் சொல்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதான், ஏனையவர்கள் சொல்க.  அடுத்து? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா , பேசுங்க  அம்மா சிவபுராணம் என்றால் என்ன?

அடியவர் 3:- நம்ம மனசுல இருக்க அழுக்கு, இருள். நம்ம கிட்ட இருக்கிற அழுக்கு, இருள்—இதெல்லாம் நீக்கணும். இதை நீ தான்ப்பா போக்கணும். இந்த பிறவி பயனை நீ தான்… உன் காலடியில் சமர்ப்பிக்கிறோம். எங்களுக்கு இனி பிறவி வேண்டாம். அப்படின்னு இறைவனை நினைந்து, கெஞ்சுவது, ஏங்குவது நினைந்து நிறுத்தி…..

காகபுசண்ட மாமுனிவர் :-  எவை ஏது என்று புரிய, அறிவு அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து?

அடியவர் 4:- ஐயா, இறைவனுடைய …(ஆடியோ தடங்கல்) … சொல்ல சொல்ல, நம்முடைய மனம் சுத்தமாகி, இறைவனுடைய ஆசீர்வாதமும் மன நிலையும் உயரும்.

காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று புரிய, அனைத்தும் சொன்னாலும் மனம் சுத்தமாகுமா என்ன? இறைவன் நினைத்தால் மட்டுமே உண்டு. இல்லையென்றால் சுத்தமும் ஆகாது, எதை என்று அறிய.

அடியவர் 4:-  முயற்சி தான், ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, எவ்வாறு என்பது எல்லாம். பின் முயற்சி எடுத்தாலும் சரியாக நடந்து விடுமா என்ன? அனைத்தும் இறைவன் முயற்சி எடுக்க வேண்டும். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, அடுத்துங்க. ஐயா? 

அடியவர் 5:-   காகபுசுண்டர் அப்பாவுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். எனக்கு என்ன தோணுதுன்னா….அப்பா…. இந்த இறைவன்—இறைவன் நிலையிலிருந்து எப்படி ஒரு ஆன்மா பிரிந்து வந்து, பல்வேறு பிறவி எடுக்குது?  சிரமப்படுது? மீண்டும் என்ன மாதிரி வாழ்ந்தா இந்த பிறவிக் கடலை நீந்தி, மீண்டும் இறைவனிடம் சேரலாம் என்ற அந்த…..

காகபுசண்ட மாமுனிவர் :-  எது என்று அறிய, எவை என்று அறிய. அதாவது, பயணக்கணக்கை சொல்லிக் கொண்டிருக்காதே. உடனடியாக ஒரு பதில் சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :-   பயணக்கணக்கை சொல்லிக் கொண்டிருக்கின்றாதே. உடனடியாக ஒரு பதில் சொல்.

அடியவர் 5:-  எப்படி ஒரு மனித ஆன்மா… எப்படி வாழ்ந்து….மீண்டும் இறைவனை அடைவது.. பிறவியை நீக்குவது…..அப்படிங்கறதை சொல்லக்கூடியதா இருக்குன்னு நினைக்கிறேன் அப்பா.

காகபுசண்ட மாமுனிவர் :-  எவை, ஏது என்று புரிய, மீண்டும் உன் பயணத்தை சொல்லிக் கொண்டிருக்காதே. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, ஒரே ஒரு வரியில் ஏதாவது சொல்லுங்க. டக்குனு. இதா, அதா?

அடியவர் 6:- அவன் அருளாலே , அவன் தாள் வணங்கி.

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, ஏது என்று அறிய, இவ்வளவுதான் அறிவு.

அடியவர் 7:-  ஐயனே, புராணம் என்பது வரலாறு.  ஆதி முதல் அந்தம் வரை, ஆதி தோற்றம் முதல் கடைசி வரை உள்ள…. ஈசனுடைய படைப்பு முதல், ஆதி முதல் அந்தம் வரை உள்ள புராணங்கள்  ஐயனே.

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, ஏது என்று புரிய, உன் புராணமே உனக்கு தெரியவில்லை. அறிந்தும் அதாவது, சிவனுடைய புராணத்தை நீ அறிந்திருக்கின்றாயா என்ன?

அடியவர் 7:-   இன்னும் அறியல ஐயனே.. அடியேனைப் பத்தி.

காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும் இத்தனை அறிவுகள் இருந்து…. அகத்தியன் எதை என்று புரிய, அகத்தியன் எவ்வளவு பெரிய அறிவானவன். ஆனாலும், நீங்கள் எதை என்று அறிய  சிறிது அளவிலாவது அறிவு இருக்க வேண்டும் அல்லவா? அறிவே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அகத்தியன்  எவ்வளவு பெரிய அறிவாளி.  நீங்க அந்த அறிவாளி கொஞ்சமாவது இருக்கணும். ஏதாவது சொல்லுங்கன்றார்.

அடியவர்1:-  ஐயா, சிவபுராணம் உலகை காக்கும் கவசம் ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை என்று அறிய, உனையே காக்கவில்லை. சிவபுராணம். உலகை காக்கின்றதா என்ன?

அடியவர் 8:- ரிஷி மகானுக்கு என்னுடைய தாழ்மையான பணிவன்பான வணக்கங்கள், ஐயா. நம்மளுடைய பிறவி… முற்பிறவி…. நம்ம அடுத்த பிறவி…. எல்லாம் இருக்கப் போறோம்….அப்படின்றது நம்மளுக்கு தெரிஞ்சுக்க முடியறது சிவபெருமானின் கருணையினால் தான். நம்ம காணவோ, கணக்கிடவும், உணரவும் முடியும். அதுதான் சிவபுராணம் கூறுவது.

காகபுசண்ட மாமுனிவர் :-  எது என்று புரிய, அதாவது, அனைத்தும் ஏது என்று புரிய, ஏதோ அறிந்தும் சிவனை பின் நோக்கிச் சென்றால், அறிந்தும்—அதாவது, பின் அறிந்தும்—எதை என்று புரிய, ஆசீர்வாதம் கொடுத்துவிட்டானா? கொடுத்துவிட்டானா? எவை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட இதனால் ஈசனையே உணரவில்லை. இதனால் எப்படி?  எதை என்று கூற?  பின் அழைத்தால் வருவானா என்ன? கொடுப்பானா என்ன? அறிந்தும் மூதாட்டியே கேள்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 

அடியவர் 4:-  குருநாதருக்கு வணக்கம். மனிதனுடைய கர்மா நீங்குவதற்கு இறைவன் கொடுத்த எளிய வாய்ப்பு.

காகபுசண்ட மாமுனிவர் :- எதை, ஏது என்று புரிய, அனைத்தும் எளிமையானால், எது எவை என்று புரிய, இதையெல்லாம் யாம் ஏற்க முடியாது.

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 

அடியவர் 9 :- குருநாதருக்கு பணிவான வணக்கங்கள்.  ஆணவமும் கன்மமும் மாயை போன்ற மும்மலங்களை நீக்கி, பிறவியில்லா பெருங்கடல் நீந்தி, இறையை பாதத்தை அணுகுவதற்காக என்று தோன்றுகிறது, ஐயனே.


காகபுசண்ட மாமுனிவர் :-  எதை தோன்றுகின்றதோ, இருக்கின்றதோ, இல்லாததோ—எவையெல்லாம் இங்கே சொல்லக்கூடாது. பெரியவனே….. அறிந்தும் சொல்லுதல்  வேண்டும். எவரோ செப்பியது…. எவரோ எதை என்று கணித்தது எல்லாம்….. எண்ணத்தில் சொல்லக்கூடாது. அறிந்தும் இதனால் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை என்று புரிய, எதை என்று புரிய,  இப்படி அறிந்தும் அறிவாளியாக இருக்கின்றீர்கள். இவ் அறிவாளி……அறிவாளிகளால் என்ன செய்ய முடியும் என்று நீங்களே பின் சொல்லுங்கள்?

சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு அறிவாளியா இருக்கிறீங்களே நீங்க….. உங்களால என்ன செய்ய முடியும்னு கேட்கிறார்?

அடியவர் 5:- ஒன்றும் செய்ய முடியாதுங்க, ஐயா.

அடியவர் 7:-  ஐயனே, எங்களால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் தந்தை அகத்திய பெருமான் அருளால்…..

காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று புரிய, யான் வந்திட்டால் இப்படி சொல்வது. ஆனால் சென்றிட்டால்….. ஏது.. ஏதோ… பேசுவது. நியாயமா?..... 

சுவடி ஓதும் மைந்தன் :-   நான் வந்துட்டா…. என் முன்னாடி இப்படித்தான் சொல்லுவீங்க. எங்களுக்கு அறிவு இல்லைன்னு சொல்லிட்டு…… ஆனா இல்லாதபோது… அறிவு இருக்குமே, பேசுவதுன்றார். 

( சில உரையாடல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் அவர் விடையே வரல. நீங்க உங்களுக்காகவே காத்துட்டு இருக்கார்.

சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம பேசாத யாருன்னு சொல்லணும். அவருக்கு சான்ஸ் கொடுத்துட்டார். ரெண்டு தடவை யாருன்னா சொல்லணும். ஏதாவது புக்ல ஏதாவது எடுத்து சொல்லுங்க. திடீர்னு எங்காவது பக்கத்துல ஏதாவது புக்கையோ, ஏதாவது இருந்தா.

அடியவர் 3:-   நமச்சிவாய வாழ்க !!!!!  இது ஈசனைப் பத்தி…. முழுக்க முழுக்க ஈசனைப் பத்தி…. ஈசனோட படைப்பைப் பத்தி….. ஈசன் தான் எல்லாம்—அப்படிங்கிற உணர்த்துதல் பத்தி…. எல்லாமே ஈசன் தான்…. அப்படின்னு.

காகபுசண்ட மாமுனிவர் :-  அது போல் நீ நினைத்துக் கொண்டிருக்கின்றாய், அவ்வளவுதான். அவன் நினைப்பானா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இது பதில் அல்ல …) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படித்தான் நினைச்சுட்டு இருப்ப. 

காகபுசண்ட மாமுனிவர் :- இதனால் அறிந்தும்—ஏது என்று அறிய, அதாவது, ஈசனைப் பற்றியே தெரியவில்லை. இருந்தும் எவை என்று கூற, ஈசனை நோக்கி, எவை என்று கூற, தவம் இருப்பதா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் யாருன்னே தெரியல. 

காகபுசண்ட மாமுனிவர் :- எதை என்று புரிய, சிவபுராணம் என்று எவை என்று புரிய. இதனால் பின் எதற்காக சொல்கின்றோம் என்று தெரியாமல் இருக்கின்றீர்கள். 

காகபுசண்ட மாமுனிவர் :- அதனால் பின் எவை என்று புரிய, பின்—அதாவது, இப்படித்தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கின்றீர்கள். தெரியாதது…. தெரியாது என்று சொல்லி விட்டு போய்விடலாம். ஆனால் சமாளிக்கின்ற—சமாளிக்கின்றீர்களே…. அதுதான் பெருமையாக இருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  தெரிஞ்சா சொல். தெரியாதது வந்து, "எனக்கு தெரியலப்பா"ன்னு சொல்லிட்டு இருக்கலாம். ஆனா இப்படி எல்லாம் சொல்லி சமாளிக்கிறீங்க பாருங்க….

அடியவர் 7:- தந்தையே, சிவபுராணம் ஈசனால் இயற்றப்பட்டது. மாணிக்கவாசர்களால் உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அந்த புராணத்தை மாணிக்கவாசகரே பல ஆயிரம்… பல நூறு வருடங்களாக….. திரும்பத் திரும்ப படித்தும்…. ஒரு சில பொருள் விளங்கவில்லை என்று ஈசனிடமே முறையிட்டுள்ளார். அவ்வாறு இருக்க, நாங்கள் எளிய மனிதர்கள்.  எங்களுக்கு புரியறதுக்கான வாய்ப்பில்லை, தந்தையே.

காகபுசண்ட மாமுனிவர் :- மானிடனை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மானிடனை விடு. சரி, விடுப்பான்றார்.

அடியவர் 7:-  தாங்களே அதை—தாங்களே அதை அருள் கூர்ந்து எங்களுக்கு விளக்குங்கள், தந்தையே.

காகபுசண்ட மாமுனிவர் :- எதை, ஏது என்று புரிய, அனைவரும் நீ கேட்டு பார். அறிந்தும்—எப்படி சமாளிக்கிறார் என்று பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் நீ கேட்க சொல்லு முதல்ல. ஏதாவது ஒன்னு கேட்டு, உங்களுக்கு தெரியுமான்னு நீயே கேட்க சொல்றார். 

சுவடி ஓதும் மைந்தன் :- தெரியலன்னா, அப்புறம் நான் சொல்றேன். நீயே கேளுப்பா. எல்லாரையும் யாராவது தெரியுமா, யாராவது சொல்றீங்களா?

அடியவர் 7:-  ( இப்போது அனைவரிடமும் கேட்க ஆரம்பித்தார்கள் ) 

அடியவர் 7:-  ஐயா, இது—இது தவிர வேற எது விளக்கம் இருந்தா சொல்லுங்க, ஐயா. நான் கூறிய கருத்து என்னவென்றால், தந்தை பலமுறை கூறியிருக்கின்றார்.

அடியவர் 7:- மாணிக்கவாசகப் பெருமானுக்கே ஒரு சில வரிகளின் அர்த்தம் புரியவில்லை என்று…. நாம்…. இதை சிவபுராணத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் என்று கருத்தில் கொண்டு நாம் நினைக்கும்போது….. அவருக்கே தெரியவில்லை என்றால்…. உறுதியாக மனிதர்களுக்கு தெரிய வாய்ப்பே கிடையாது.

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை, ஏது என்று கூற, பேசுவார்களே. வளவள என்று.  பேச சொல், மானிடா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப.. எது எதோ பேசுவாங்க இல்ல, வளவளன்னு சொல்லிட்டு, இப்ப பேச சொல்லுப்பா  என்று சொல்றாரு. 

===========================
# அன்போடே சொல்கின்றேன். கவலைகள்  வேண்டாம். 
===========================

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை அறிந்தும்—அகத்தியன் உதவியோடு அறிந்தும் வந்தேன். அதாவது, சுலபமாகத்தான் யான் சொல்வேன். அன்போடே சொல்கின்றேன். கவலைகள்  வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் வந்து—அகத்தியர் சொன்னதுனால்தான் வந்தேன். நான் எதுவும் சொல்ல மாட்டேன். அன்போடுதான் சொல்றேன். நீங்க சொல்லுங்கன்றார்.

அடியவர் 3:- எங்களுக்கு தெரியல, நீங்களே சொல்லுங்க. 

அடியவர் 7:-  தந்தையே என் அறியாமைக்கு….( சொல்லி முடிப்பதற்குள் )


காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—தெரிந்தும்—அறிந்தும்—அதாவது, தெரியாமலும் எவை என்று அறிய. தெரிந்தது போல் நடிப்பது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி சொல்றான்னா, தெரியாதது ஒன்னு…. தெரிஞ்சது போல் நடிப்பது. 

காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—இவை எல்லாம் பாவத்தை உண்டாக்கும். 

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—எதை என்று அறிய, அறிந்தும்—இவை என்று புரிய, எதற்கு எவை என்று அறிய, பின் ஜீவ…அறிந்தும்—புராணமே என்று பொருள். அதாவது, உயிர் என்றே பொருள். 

அடியவர் 8:-  ( ஆச்சரியத்தில் ) அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன சொல்றார் தெரியுங்களா? ஜீவபுராணம்.

அடியவர் 1:- சிவபுராணம் — ஜீவ புராணம் என்று சொல்லிட்டார்கள். அருமை !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவ புராணம்.

அடியவர் 1:- ஜீவ புராணம். ஓகே.

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—எதற்காக ஜீவன்?  எதை என்று புரிய? அதாவது, பின் அறிந்தும்—எவை என்று அறிய.  

***** பின் உயிர் காப்பது ***** 

அறிந்தும்—எதை என்று அறிய. 

***** இதுவே இதன் தத்துவம். *****

சுவடி ஓதும் மைந்தன் :- உயிர் காப்பது, அதாவது, ஜீவ. ஐயா, சிவபுராணம்னா, ஜீவபுராணம். அப்ப உயிரை காக்கும். 

அடியவர் :- உயிரை காக்கக்கூடிய கவசம். 

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—மானிடா, உன்னை எப்படி காப்பது என்பதே அதன் அர்த்தம். அதாவது, எவை பொருள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதாவது, ஒரு மனிதனை…. ஐயா?

அடியவர் :- எப்படி காக்க வேண்டும் என்பதுதான் அதனுடைய அர்த்தம். 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்படி காக்க வேண்டும் என்பதே அதனுடைய பொருள். 

காகபுசண்ட மாமுனிவர் :- இதனாலே கூர்ந்து கவனித்து பார்த்தாலே அனைத்து விடயங்களும் தெரியும். அறிந்தும்—இதை எவை என்று புரிய, இதனையே பின் தெரியாமல் இருந்தால், ஈசன் எப்படி அருள் கொடுப்பான்? கர்மத்தை எப்படி தொலைப்பான்?  நீங்களே சொல்லுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- இதுவே தெரியல. சிவபுராணம்னா, ஜீவபுராணம். அது வந்து—.

அடியவர் 5:- புரியுதுங்க, ஐயா. புரியுது.

சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவபுராணம்.

சுவடி ஓதும் மைந்தன் :- ஜீவபுராணம். அதுவே வந்து தெரியாம, ஈசனை வணங்கினால், ஈசன் என்ன செய்வான் என்று கேட்கிறார். 

…….. ( ஆடியோ தடங்கல்கள்) …

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—இதன் தன்மையை, எதை என்று புரிய, இதனால் அனைத்தும் அறிந்தும் இப்படித்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உயிர் பிழைக்கும் என்று சொல்வதே ஜீவபுராணம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, ஒரு மனுஷன் இப்படித்தான் இருக்கணும். இப்படி வாழ்ந்தால்தான் இந்த உலகத்துல உயிர் பிழைக்க முடியும். ஐயா, புரியுதுங்களா?

அடியவர் 5:- புரியுது, ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான்—அதுதான்? 

அடியவர் 5:- சிவபுராணம். 

சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம். ஒரு மனிதனுக்கு என்னென்ன—ஒரு உயிருக்கு என்னென்ன தேவையோ, அது எழுதப்பட்டிருக்கிறது. வந்து….எப்படிங்க, எப்படி—எப்படி நம்ம பொருள் சொல்றது? நல்லா சொல்லுங்க, யாராவது.

அடியவர் 1:-  ஐயா, எப்படி வாழணும்? அறம், பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி, அந்த மாதிரி எப்படி வாழணும்னு சொல்லி பெருமானார் சொல்றாரு, ஐயா. இந்த ஜீவன் எப்படி….

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உயிர்.

அடியவர் 1:- அந்த உயிர் எல்லாமே—ஒரு உயிர் எப்படி பிறக்குது? என்ன மாதிரி பண்றோம்?  எத்தனை பிறப்பு எடுத்திருக்கோம்?  அந்த பிறப்போட சுழற்சி எப்படி?  அதோட எப்படி வாழணும்னு சொல்லி பெருமானார் சொல்றாரு, ஐயா. அதனால, இந்த ஜீவன் வந்து நம்ம உடம்புல இருந்து வாழணும்னா, தினமும் சிவபுராணம் படிக்கணும்ன்றது புரியுது, ஐயா.


காகபுசண்ட மாமுனிவர் :- எதை என்று கூற, பின் படித்தால், பின் நிச்சயம் தன்னில் கூட உயிர், எதை என்று புரிய. இதனால் உணர்ந்து ஓதுதல் வேண்டும். இதுவே தெரியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- படித்தால் மட்டும் போதாதுப்பா.

அடியவர் 1:-  நன்றி. ஓகே. குருநாதர்.

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம்னா என்னன்னு தெரிஞ்சுக்கணும் முதல்ல. 

காகபுசண்ட மாமுனிவர் :- அதன் விளக்கத்தை பின்பு சித்தர்கள் சொல்வார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இன்னும் அந்த சிவபுராணத்தை, அந்த விளக்கத்தை, இதையே வந்து இப்பதான் தெரிஞ்சுக்கிறீங்க. நீங்க வந்து…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா இதை ரெக்கார்ட் பண்ணுங்க. பொது வாக்குல உரைக்கலாம்… ( அனைவருக்கும் பகிரலாம் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப இதுவே இப்பதான் நீங்க தெரிஞ்சுக்கிறீங்க. இதுக்குள்ள இருக்கிறது வந்து எப்ப நீங்க—ஐயா, புரியுதுங்களா, ஐயா? ஹலோ?

அடியவர் 7:-  புரியுது, ஐயா. புரியுதுங்க, ஐயா.

அனைத்து அடியவர்களும் :-  புரியுது, புரியுது. சொல்லுங்க, ஐயா. 

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்— அறியாதவர் எவர்? 

உணர்ந்தும்—உணராதவர் எவர்? 

இதை இருந்தும்—அறிந்தும்—பின் எதை பெற்றோர் எவர்? 

பெறாதோர் எவர்? 

எவர் என்று கூற முடியுமா? 

அனைத்து அடியவர்களும் :-  ஐயா….?

அடியவர்கள் :- ( அமைதி ) 
………

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—இதனை கூட அறிந்தும்—பின் திருடரை  போல் முழிப்பார்கள். 

எதை என்று அறிய, 

***** அனைத்தும் உயிரே. *****

அறிந்தும்  இவ்வுயிரை காக்க, எதை என்று புரிய, அறிந்தும்—இதனால்—இதற்கூற , 

பின் அனைத்தும் இது அடங்கியுள்ளது. 

***** இதன் தத்துவமே ஜீவ புராணம். *****

சுவடி ஓதும் மைந்தன் :- உடலுக்குள்ள எல்லாமே என்னென்ன, ஐயா? 

அடியவர்கள் :-  ஐயா, சொல்லுங்க…கேக்குறோம்ங்க அய்யா எல்லோரும் 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றதுன்னா—எக்ஸ்பிளைன் பண்ணுங்க, யாராவது. …….ஐயா, …….ஐயா.

அடியவர் 5:- சொல்லுங்க, ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :- எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா. கொஞ்சம் மூச்சு வாங்குது.

அடியவர் 5:- அதான், ஐயா, எனக்கு புரிஞ்ச வரைக்கும் எப்படின்னாங்க, ஒரு மனித உயிர் எடுத்துட்டா, எப்படி வாழ்ந்தா, அது இந்த பிறவியிலும் காக்கப்பெறும். வந்த நோக்கமும் நிறைவு பெற்று.. இறைவனை அடைய முடியும். அப்படிங்கறதுக்கான வழிமுறைகள் அதுல சொல்லப்பட்டிருக்கு. அது வெறுமனே வாசிச்சா, வாயால வாசிச்சா பயன் கிடையாது. அதுல சொன்ன ஒன்னொன்னையும் உணர்ந்து, உணர்ந்து, பின்பற்றி வாழணும். அப்படின்னு சொல்றாங்க, அப்பான்னு நினைக்கிறேன், ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-  தலைப்பைப் பற்றியே தெரியவில்லை. அதில் இருக்கும் பின் சிறந்த எழுத்துக்களை எப்படி இவர்கள் பின் நிச்சயம் ஏற்பார்கள், அதாவது, பின் உணர்ந்து ஓதுவார்கள் என்று நீ நினைக்கின்றாயே? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன சொல்றார் தெரியுங்களா? தலைப்பைப் பற்றியே தெரியலையே, அப்பா. தலைப்பு என்னது, ஐயா?

அடியவர் 7 :- சிவனுடைய புராணம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஜீவபுராணம். 

அடியவர் 5:-  ஜீவபுராணம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஜீவன் என்றால் உயிர். அந்த உயிர் வாழ்வதற்கு என்னென்ன—அதுல ஏதோ இருக்குதுன்றார் வந்து. அந்த தலைப்பையே தெரியல இன்னும். இதுல இருக்கிறதுக்கு பொருள் எப்படிப்பா தெரியும்ன்றார்?

அடியவர் 5:- மாணிக்கவாசகப் பெருமானே கடைசில எழுதி இருக்காங்க. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் என்று. அந்த கண்டிஷனை சொல்லி இருக்காங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  தலைப்பே தெரியலன்றார். 

காகபுசண்ட மாமுனிவர் :-  அப்பா, இவ்வளவு அறிவுகள் வைத்திருந்தால், பின் எவை என்று கொடுக்க, அதனை அழகாக நீங்கள் எப்படி காத்துக் கொள்வீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு அறிவு வச்சு, ஏதாவது கொடுத்தா, உங்ககிட்ட நீங்க எப்படி காப்பீங்கன்றார் வந்து, ஐயா?

அடியவர் 5:- ம் …. சொல்லுங்க அய்யா 

காகபுசண்ட மாமுனிவர் :-  அப்பா, அறிந்தும்—பின் செல்லமாகவே சொல்கின்றேன். சித்தனை வணங்குவதற்கும் ஒரு தகுதி—தகுதி வேண்டும். அத்தகுதி யாரும் பெற்றிருக்கவில்லை. 

( அமைதி ) 

காகபுசண்ட மாமுனிவர் :- அகத்தியன் ஏதோ கருணை காட்டி, ஏதோ, பின் பிழைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டு வைத்திருக்கின்றான். அவ்வளவுதான். 

காகபுசண்ட மாமுனிவர் :-  சித்தனை வணங்குவதற்கும், அறிந்தும் அவ்வழியில் வருவதற்கும் எதை என்று புரிய.. வந்து பாருங்கள். எவ்வளவு அடிகள்  என்று, பின் நீங்கள் உணர்வீர்கள். எதற்கடா வந்தோம் என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? 

காகபுசண்ட மாமுனிவர் :-  ஆனாலும், எதை என்று புரிய, பின் சித்தர்கள் அறிந்தும்—அதாவது, எங்களைத் தேடி, (நீங்கள்) பின் வந்துவிட்டாலும், யாங்கள் ஏற்றுக்கொள்வோமா என்ன? 

காகபுசண்ட மாமுனிவர் :-  ***** உங்களைத் தேடி யாங்கள் வரவேண்டும். ***** 

***** அவ் பக்குவத்தை நீங்கள் பெற வேண்டும். *****

**** அவ்வளவுதான். *****

( அமைதி )

காகபுசண்ட மாமுனிவர் :- பக்குவங்கள் பெறவில்லை. ஆனால், ஏதோ, பின் பாவம் என்று—அதாவது, ஏதோ தவறு செய்துவிட்டார்கள். மன்னித்து விடுவோம் என்று, ஏதோ, பூர்வ ஜென்மத்தின் தொடர்பாக, அகத்தியன் வந்திருக்கின்றான். அவ்வளவுதான். 

காகபுசண்ட மாமுனிவர் :- பின் அப்படி, பின் வந்திருந்து, ஆனாலும், மிகப் பெரிய அறிவாளியாக—அறிவாளிகள் எல்லாம் இங்கு இல்லை. சாதாரண முட்டாள்களே. சிறிது அறிவு கொடுத்து, அகத்தியன் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். அவ்வளவுதான். 
…..
காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—ஏது என்று கூற, வாய்தான் அதிகம். பின்—அதாவது, வாய் அதிகம் என்பது, பின் பேசுவதல்ல, பொய் சொல்வது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, புரியுதுங்களா, ஐயா?

அடியவர் 1 :- புரியுது அய்யா.

காகபுசண்ட மாமுனிவர் :- எதை என்று புரிய, இதனால் அறிந்தும்—உண்மைதனை உணர வேண்டும். சித்தன் யார்? எதை என்று புரிய, யாருக்காவது தெரியுமா? சொல்லுங்கள், பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   சித்தன் யார்? யாருக்காவது தெரியுமான்னு கேக்குறாரு. திருப்பியும் இன்னொரு கொஸ்டின், ஐயா.

அடியவர் 4:- ஐயா, சித்தர்கள் எல்லாமே இறைவனுடைய அம்சம் தான்ங்க  ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது என்று புரிய, அறிய, பின் இறைவனையும் எங்களையும் இங்கே சேர்க்காதீர்கள்.

( அமைதி )

அடியவர் 4:-  மனித குலத்தை காப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்டிருக்காங்க, அப்படின்னு நினைக்கிறேன்.

காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது என்று புரிய, அதாவது, பின்னே வருபவனுக்கு இதுவே பதில். 

சுவடி ஓதும் மைந்தன் :- பின்னே வருபவன்னா….. யாரோ சொல்லிக் கொடுத்துக்கிறாங்க. அதை நீ சொல்லிக்கிற. அதான் பதில். 

காகபுசண்ட மாமுனிவர் :- பிரித்து எடுத்துக… பிரித்து எடுத்துக்க… பிரித்து எழுத்துக்களாக சொல்க…சித்தன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பிரித்து எடுக்க, பிரித்து எடுத்து, பொருள் சொல்கன்றார்.

அடியவர் 5:-  புஜண்டர்  அப்பாவுக்கு வணக்கம். (எனக்கு) தெரிந்த வரையில, சத்-சித்-ஆனந்தம்னு சொல்லும்போது…. சித்துங்கிற உயிரை….சத்துங்கிற இறைவனுடைய முழுமையாக… எப்பொழுதுமே லயமா வைத்திருக்கக்கூடிய உயர்ந்த ஜீவன்கள்… சித்தர்கள்னு நினைக்கிறேன், குருதேவா.

காகபுசண்ட மாமுனிவர் :- அடுத்து போகட்டும்.

அடியவர் 4:-  குருநாதா, சித்துன்னு சொல்ற மாதிரி… இந்த உயிரை உணர்ந்தவர்கள் சித்தர்கள்.

காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது என்று புரிய, ஏது என்று சொல்ல 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏது என்று புரிய… 

ஏது என்று சொல்ல என்றார். ஏது என்று புரிய, ஏது என்று சொல்ல. அடுத்து.

அடியவர் 1 :- ஐயா, சிவத்தை உணர்ந்தவர்கள் சித்தர்கள்னு சொல்லலாம், ஐயா. சி-ன்னா சிவம்.

அடியவர் 7:-  தன்னையும் அறிந்து, இறைவனையும் அறிந்து, உணர்ந்தவர்கள். 

காகபுசண்ட மாமுனிவர் :- அடுத்து, 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து.

அடியவர் 8:- ஐயா, சித்தத்தை அடக்கி ஆண்டவர்கள், ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-அடுத்து..

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து  அடுத்துனு வருது. 

அடியவர் 1:-  சித்தர்களை முற்றும் தெரிந்தவர்கள். 

காகபுசண்ட மாமுனிவர் :- இதை எல்லாம்—எதை என்று புரிய, அனைத்தும் தெரிந்ததே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமாம். தெரியாதது ஒன்று சொல்ல சொல்றார்.

அடியவர் 5:- குருநாதா, எனக்கு என்ன தெரிகிறது என்றால், நாயோட்டு மந்திரம் ஆகிய சி-மந்திரத்தை முழுமையாக உணர்ந்து, அறிந்து, தெளிந்து, உணர்ந்தவர்கள் என கருதுகிறேன், குருநாதா.

காகபுசண்ட மாமுனிவர் :- அட, மானிடர்களே, மந்திரங்கள் என்ன? எதை என்று கூற, அறிய, மந்திரங்கள் சொன்னால், அனைத்தும் வந்துவிடுமாம். பின் மனது தூய்மை இல்லாமல் சொன்னால், என்ன லாபம்? மந்திரங்களாவது…. பின் வணங்குதாவது….

அடியவர் 1:- ஐயா, சிவத்தை உணர்ந்து, தர்மத்தை போதிப்பவர்கள் சித்தர்கள், ஐயா.

அடியவர் 1:-  “சி”….”த்”….”த” - ன்னா …. தர்மம்.    “சி”-ன்னா சிவம்.

அடியவர்:-  சித்தர்கள் வாழும் காலத்திலேயே, மனம், மெய், ஒளி மூன்றையும் இறைவனை ஒடுக்கி அடங்கியவர்கள். 

காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது—அதாவது, சொல்கின்றேனடா, மானிடா. 

காகபுசண்ட மாமுனிவர் :- இதற்கு அறிந்தும்—சித்தம்—எவை என்று கூற, பின் பானை என்றும் வைத்துக்கொள்ளலாம். இவ் பானையில் இறைவனை வரவழைப்பதே சித்தம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா? 

அடியவர்:-  பானை 

சுவடி ஓதும் மைந்தன் :-  சித்தம் என்பது என்னன்னு தெரியுங்களா, ஐயா? ஐயா, ஒரு—ஐயா, 

அடியவர் 9:- புரியுதுங்க..

சுவடி ஓதும் மைந்தன் :-   புரியுதுங்களா? சித்தம் என்றால், ஒரு பானை மாதிரி. அந்த பானையிலேயே இறைவனை வரவழைக்கிறது தான் அவங்க சித்தம்ன்றார் வந்து. 

அடியவர்:-  உடம்பு வந்து, உடம்பே ஒரு பானை மாதிரி. பானைக்குள்ள எப்படி தண்ணிய அடக்குறோமோ, அதே மாதிரி இறைவனை வந்து, அந்த பானைக்குள்ள வந்து, அடக்கணும்ங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம்….

அடியவர்:-  வாழும் காலத்திலேயே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா, ஐயா? எக்ஸ்பிளைன் பண்ணுங்க, யாராவது ?

அடியவர் 5:- ஐயா, புரிந்த வரையில, தற்பரன் அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க. உயர்ந்த வார்த்தை. தனக்குள் பரனை சேர்த்து வைக்கக்கூடிய, வச்சுக்குறவங்க, தற்பரன் அப்படின்னு …நிலைக்கு அடைஞ்சிட்டாங்கன்னு சொல்லுவாங்க. அதுபோல தான் புஜண்டர் அப்பா  சொல்றாங்கன்னு நினைக்கிறேன். சித்தம் என்று சொல்லக்கூடிய இந்த தனக்குள்ள இறைவனை வந்து முழுமையாக நிலைநிறுத்தியவர்கள் சித்தர்கள். அப்படின்னு புரியுது.

காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது—எப்படி—எவை என்று கூற, பானை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி பானை என்று நான் சொன்னேன். அது யாருக்காவது தெரியுமான்றார். 

அடியவர்கள் :- ( அமைதி )

காகபுசண்ட மாமுனிவர் :-  இதனால்தான் சொல்வதை கேட்க வேண்டும். பின் அறிந்தும்—அகத்தியன் எத்தனை எத்தனை சொன்னான்? யாருக்காவது தெரியுமா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எத்தனையோ விஷயங்களை அகத்தியன் சொல்லி இருக்கார் வந்து. யாருக்காவது தெரியுமா என்னன்னு கேக்குறாரு. 

காகபுசண்ட மாமுனிவர் :- ஏதோ சித்தன் சொல்கின்றான். பின் அதைத்தன் எவை என்று புரிய, ஏதோ விட்டுவிடுவது. ஆனால் மனிதன், அதாவது, வாயால் சொல்வான். எதை என்று கூற, அதாவது, இறந்து போனவன் வாயால் சொல்வான். அதை கேட்டிட்டு, எதை எதையோ, எவை என்று அறிய. 

காகபுசண்ட மாமுனிவர் :- அதாவது, பின் இறந்துட்டவன், பின் எப்படி—அதாவது, மனிதன், பின் உயிரோடு இருக்கின்றான் என்று எண்ணி விடாதீர்கள். 

காகபுசண்ட மாமுனிவர் :- இறந்தவன், இறந்தவன், எதை என்று புரிய, ஏதோ சொல்லிக் கொண்டிருப்பான். அதனால் நீங்கள் அதை பயன்படுத்திக் கொண்டு, நீங்களும் அதேபோல் செய்தால், உங்களுக்கு எப்படி? அதாவது, நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். 

காகபுசண்ட மாமுனிவர் :-  பின், அதாவது, இறந்தவன்  பேச்சை கேட்டால், நீங்களும் பின் அனைத்து விஷயங்களையும் கூட, பின் எதை—ஏது என்று கூற. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன சொல்றாரு தெரியுங்களா?

அடியவர் 5 :- புரியுதுங்க, ஐயா. 

காகபுசண்ட மாமுனிவர் :-  இவை—ஏது என்று புரிய, இப்படி இருந்தால், அறிந்தும்—அதாவது, இறந்தவன் சொன்னால், உங்களுக்கு ஏதாவது நடக்குமா?..... என்று சொல்லுங்கள், பார்ப்போம்?

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு தெரியுங்களா? மனுஷன் ஏதோ சொல்றான்னா, அதையே நீங்க சொல்லக்கூடாதுன்றார் வந்து. அதை சொல்றான், இதை சொல்றான், இப்படி பயன்படுத்தலாம், அப்படி பண்ணலாம், இப்படி பண்ணலாம்னா, மனுஷன் யார்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் காகபுஜண்டர் சொல்றாரு. அடுத்த சித்தர் யாரோ சொல்லுவாரு இங்க வந்து. காகபுஜண்டர் அவர் எடுத்துக்காட்டா   என்ன சொல்றாருன்னா, மனுஷன் என்பவன் இறந்தவன். அந்த இறந்தவன் வாக்கு உனக்கு சொன்னா, என்ன ஆகும் வந்து? 

அடியவர் :- இறந்து போன வாய் அது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்து போன வாய் சொன்னா, அது யூஸ் இல்லாதது. அப்போ நீங்களும் என்ன? நீங்களும் யூஸ் இல்லாதது. 

அடியவர் 1:-  இறந்தவர் போல  

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படித்தான் ஐயா, புரியுதுங்களா இது? 

அடியவர் 1:-  புரியுது அய்யா.

அடியவர் :-  அப்போ அவங்களை ஃபாலோ பண்ணா…. நம்மளும் அப்படித்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறந்தவனை வந்து ஃபாலோ பண்ணீங்கன்னா, நீங்களும் வந்து, உங்களுடைய இதுவும் வந்து, எப்படி ஒன்னும் நடக்காதுன்றாரு இல்லையா? ஐயா, புரியுதுங்களா?

அடியவர் 7 :- புரியுது, ஐயா. அதாவது, நம்ம நம்மளே சுயமா பரிசோதனை செய்து, இறைவனை உணரணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  கரெக்ட், கரெக்ட். இதுதான் சத்தியம். நீங்க சொன்னீங்க பாரு, இதுதான் இது,  ஐயா. 

காகபுசண்ட மாமுனிவர் :-  இதனாலே, அகத்தியன் ஓடோடி வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றான். உனை, அதாவது, உங்களை நீங்கள் எப்போது வெல்வீர்கள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் அகத்தியன் அடிக்கடிக்கு வந்து, முதல்ல உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கோங்கடான்றார் வந்து. 

காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—எது என்று புரிய, அதாவது, உங்களைப் பற்றியே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால், இறைவனைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்களா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா? 

அடியவர் 3:- சரிதான், ஐயா. 

காகபுசண்ட மாமுனிவர் :- முதலில் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். பின்பு இறைவனை பார்ப்போம். இறைவனை ஒரு பக்கத்தில் வையுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை ஒரு பக்கத்தில் வைப்பா  என்றார். ஐயா.

அடியவர் 7:- குருநாதா, எங்களை நாங்கள் அறிந்து கொள்ள, முதல் முதல் முன்னெடுப்பு என்னவாக இருக்க வேண்டும்?

காகபுசண்ட மாமுனிவர் :- அறிந்தும்—ஏது என்று புரிய, உங்களால் அறிந்து கொள்ள முடியாது. அகத்தியனே தீர்வு. இதனால் அவன் முடிவெடுத்தால், நீங்கள் உங்களை அறிந்து கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, உங்களை எல்லாம் நீங்கள் அறிந்து கொள்ள முடியலன்றார் வந்து. அதனால, அகத்தியர் வந்து, கெட்டியா பிடிச்சுக்கோங்க. அவர் முடிவெடுத்தார்னா, உங்களைப் பற்றி நீங்கள் அறிஞ்சுக்கலாம்ன்றாருங்க, ஐயா. 

அடியவர்கள் :-  (அமைதி)

காகபுசண்ட மாமுனிவர் :-  மானிடனே, அறிந்தும்—உயிர் எதை நோக்கிச் செல்கின்றது என்று யாருக்காவது தெரியுமா?

அடியவர் 1:-  இறப்பை நோக்கி செல்கிறது, ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :- எதை—ஏது என்று புரிய, அதாவது, இதையெல்லாம் மனப்பாடம் என்று நினைக்கின்றேன். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் மனப்பாடம் பண்ணி சொல்லுறீங்களேப்பா. அப்படித்தான்ப்பா நினைக்கிறேன்றார்.

அடியவர் 1:- உண்மைதான் அய்யா. 

அடியவர் 1:- ( முன்பு குருநாதர் மதுரையில் உரைத்த  வாக்கை நினைவு கூர்ந்து… )  நாங்க ஒவ்வொரு நாளும் இறந்துட்டு தானே இருக்கோம்.

காகபுசண்ட மாமுனிவர் :- உயிர் எப்படி—அதாவது, போகின்றது என்று. அறிந்தும்—அதாவது, எவை என்று கூற, போட்டி, பொறாமை, காமம், இன்னும் பல பல மாயையை நோக்கி, பின்புதான் இதிலெல்லாம் நுழைந்து தான் கடைசியில் சென்று விடுகின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா?

அடியவர் 1:-  புரியுது.

அடியவர் 1:-  இந்த ஆறு குணத்துல……போட்டி, பொறாமை, பேராசை, சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு  மனப்பான்மை, வஞ்சம். 

காகபுசண்ட மாமுனிவர் :-  இதை எவ்வாறு, இவையெல்லாம் எப்பொழுது இல்லாமல் இருக்கிறதோ, அப்பொழுது அவுயிர் நேரடியாக இறைவனை சந்திக்கும். அப்பொழுதுதான் நீங்கள் நினைக்கும் காரியங்கள் நடைபெறும். இல்லையென்றால், பின் நீங்கள் எவ்வளவு இறைவனை வணங்கினாலும், வீணே. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, என்ன சொல்றார் தெரியுங்களா? ஐயா, யாராவது சொல்லுங்க, ஐயா.

அடியவர் 5:- ஐயா, வாழும் காலத்திலேயே, இந்த போட்டி, பொறாமை, இந்த கீழான எண்ணங்கள் முழுமையா நீங்கி, தூய நிலையில இருக்கிறபோது, அந்த மனிதன் இறைவனை உணர்வான். அதுக்கப்புறம் தான் வாழ்க்கையில…

சுவடி ஓதும் மைந்தன் :- உயிர் என்பது டைரக்டா இறைவனை பார்ப்போம்ன்றார். அப்பொழுது நம்மளுக்கு எல்லாமே நடக்கும்ன்றார்.

அடியவர் 5:-  ஆமாங்க, ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-  ஏது—இவை அறிந்து, எவை அறிவித்து, இதனாலே தெரியாமல் எதை செய்தாலும், அறிந்தும்—பின் வினை உங்களுக்கே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, தெரியாம எதை செய்தாலும், பாவம். ஐயா.புரியுதுங்களா, ஐயா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இது மாதிரி யாருமே சொல்ல மாட்டாங்க, ஐயா. ஆனா, இது மாதிரி இவர் சொல்றாருன்னாவே, ஒரு விதத்துல நீங்க ஏதோ ஒரு கஷ்டத்துல அடிபட்டு, நொந்துட்டு தான் இருக்கிறீங்கன்னு தான் தெரிஞ்சுக்கோங்கன்னு தான் சொல்றாரு இவர் வந்து. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சாதாரணமாக எல்லாம் சொல்ல மாட்டாரு இவர் காகபுஜண்டர் எல்லாம் வந்து. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதோ ஒரு விதத்துல சிக்கி, அழிந்து, சீரழிஞ்சு, ஏதோ ஒரு வந்துருக்கு. அப்படித்தான் இதெல்லாம் சொல்லுவாரு. நல்லா பக்குவம், எப்படியோ வந்து, ஏதாவது வச்சு, பொழைச்சுக்கோடாப்பான்னு சொல்லிட்டு தான் வருவாங்க, ஐயா. காகபுஜண்டர் எல்லாம் சொல்லுவாருங்க, ஐயா. ஐயா, புரியுதுங்களா, ஐயா?

அடியவர்கள் :- புரியுது, ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-  இதனால், இறைவன் என் உயிர் என்பது.  என் உயிர் மூச்சு என்பது. இவையெல்லாம் இறைவன் பார்க்கத்தான் போகின்றானா? கேட்கத்தான் போகின்றானா? இறைவன் எதை என்று புரிய, அறிந்தும்—மானிடன் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அது தெரியாம மனுஷன், இறைவன் தான் என் உயிர். இறைவன் தான் என் பேச்சு.. என் மூச்சு… அவர் தான் எல்லாம் சொல்லிட்டு, 

அடியவர் :-  கதை பேசுறது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   கதை பேசுறது. 

காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—இதனால், பின் எவை என்று அறிய, பின் அனைத்தும் செய்தாலும், எத்தனை நன்மைகள் செய்தாலும், எத்தனை புண்ணியங்கள் செய்தாலும், ஏன் ஒருவனுக்கு தீயதாகவே நடக்கின்றது என்று யாருக்காவது உணர்ந்து, உணர்ந்து, அதாவது, பின் யாருக்காவது தெரியுமா என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-   எவ்வளவோ நன்மை செய்றோம். ஏன் கெட்டதா நடக்கு, ஏன்? ஏன்னு கேக்குறாருங்க, ஐயா. 

அடியவர் 5:- நன்மை செய்றோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா, ஏன் கெட்டது நடக்குது?

அடியவர் 6:- ஐயா, முன்வினை கர்மா, முற்பிறவி கர்மா இருக்கு.

காகபுசண்ட மாமுனிவர் :-  மானிடா, இவை அனைவரும் சொல்வதே. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்பா, இது எல்லாரையும் சொல்வதுதான்ப்பா. எல்லாமே சொல்வதுதான், எல்லாருமே. ஆமா, இது எனக்கும், எல்லாருக்கும், அது வந்து என்ன சொல்றது? பூர்வ ஜென்ம கர்மா, உணர்வு கர்மான்னு எல்லாரும் சொல்றாங்கப்பா.

அடியவர் 5:- ஒருபுறம் புண்ணியங்கள் செய்துட்டு, தர்மங்கள் செய்துட்டு, இன்னொரு பக்கம்… 


அடியவர் 5:- நம்முடைய மனதுல எல்லாவிதமான போட்டி, பொறாமை இருக்கிறபோது, இறையருள் கிட்டாம போயிடும்.. அப்படின்னு.. அதுதான் காரணம்னு நினைக்கிறேன், குருதேவா.

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னது? 

அடியவர் 10:- ஐயா, அதாவது, தர்மம் செய்யும்போது, ஒரு பக்கம் தர்மம் செஞ்சாலும், ஒரு பக்கம் வந்து பாத்தீங்கன்னா, போட்டி, பொறாமை, அழுக்கோட செய்யும்போது, கிடைக்காது, அப்படின்றாரு. 

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை—ஏது என்று புரிய, நீங்கள் எதை எதிர்பார்த்து செய்கின்றீர்களோ…அது தர்மமும் இல்லை, தானமும் இல்லை, புண்ணியமும் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எதிர்பார்த்து செய்றது வந்து, எனக்கு அது நடந்தா, இது பண்ணா, எனக்கு அது நடக்கும்ன்னு சொல்லி, நீங்க செய்றது வந்து, தானத்துலயும் சேராது.

அடியவர் 1:- தர்மத்துலயும் வராது…. புண்ணியத்துலயும் வராது.

சுவடி ஓதும் மைந்தன் :-  தர்மத்துலயும் வராது. 

காகபுசண்ட மாமுனிவர் :-  அப்பொழுது நீங்கள் வெற்றே. பின்பு உளறிக் கொண்டிருக்க வேண்டியதுதான். நான் தர்மம் செய்தேன், புண்ணியம் செய்தேன் என்று. என்ன லாபம்? மனதில் இவ்வளவு அழுக்குகள் வைத்துக்கொண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா?

அடியவர் 1:-  புரியுதுங்க, ஐயா. புரியுது, ஐயா. புரியுதுங்க.

காகபுசண்ட மாமுனிவர் :-  அறிந்தும்—இதனால்தான்—இதனால் எதை என்று புரிய, இறைவன் யார் என்றே தெரியவில்லை. இறைவனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள், இன்னும் என்னென்னவோ, பின் கொடுப்பானா இறைவன்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் யார் என்றே தெரியல. அபிஷேகங்கள், ஆராதனைகள், போற்றி சொல்லிட்டால். ஏன் இதெல்லாம்? 

காகபுசண்ட மாமுனிவர் :-  ஏனடா மனிதா, இவையெல்லாம்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏனடா மனிதா, இவையெல்லாம்? எதற்காகடா செய்கின்றீன்னு கேக்குறாங்க, ஐயா. 

காகபுசண்ட மாமுனிவர் :-  அனைத்தும் இறைவனை பாதுகாக்கவா? அல்ல.  மனிதனை பாதுகாக்கவே. உன்னை நீ பாதுகாத்துக்கொள்ள. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா, ஐயா?

அடியவர் 1:- புரியுது, ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியணும். இப்படி செய்தால் நமக்கு நல்லது நடக்கும்.  ஐயா?

அடியவர் 3:- புரியுதுங்க, ஐயா.

அடியவர் 1:- புரியுது, புரியுது.

காகபுசண்ட மாமுனிவர் :-  எவை என்று அறிய, இதனால் எதை என்று கூற, அப்படி. அதாவது, உயிர் காப்பது யார்? 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, யாருமே காக்க மாட்டாங்க. அப்ப, கடைசில உயிர் காப்பது யார்?

அடியவர் 3:- இறைவனும் சித்தர்களும் தான் உயிர் காப்பாற்றுவார்கள் கடைசியில்…

காகபுசண்ட மாமுனிவர் :-  மானிடனே, இவ்வளவு சொல்லியும் ஒன்றும் கேட்கவில்லை. இறைவனும் எவை என்று அறிய, இதனால் எவை என்று புரிய, அதாவது, 

***** பின் நல் எண்ணங்கள் தான் உன் உயிரையே காக்கும். *****

அவ்வளவுதான்.

அடியவர் 5:- சரிங்க, குருதேவா.

சுவடி ஓதும் மைந்தன் :- உயிர் காப்பான்ட்டாரு. 

அடியவர் :- அவனவன் உயிருக்கு , அப்படின்றப்போ, அவனுடைய எண்ணங்களை சுத்தமா வச்சுக்கிட்டானா, அந்த இறைவன் வந்து காக்க முடியும். மேற்கொண்டு அடுத்த லெவல் போக முடியும். இல்லைனா  அடிப்படையில இருக்க வேண்டியதுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா, ஐயா? நம்ம நல்ல எண்ணங்கள் வந்து, நமக்கு உயிரை  காப்பாத்தும். 

காகபுசண்ட மாமுனிவர் :-  அவ் நல்லெண்ணங்கள், அவன் நல் உள்ளங்கள், அதாவது, நல் எண்ணங்கள். இல்லையென்றால், பின் அதாவது, தானும் அழிவான். பின் தன்னை சார்ந்தோரும், பின் சார்ந்தவரையும் அழிப்பான். அழகாக. இறைவன் எப்படி இதற்கு பொறுப்பாக, பொறுப்பாக முடியும்? மானிடர்களே , சொல்லுங்கள், நீங்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுங்களா? மனசே சரியில்ல. அப்ப, என்ன ஆகும்? 

அடியவர் :- மனசுல அழுக்கு, போட்டி, பொறாமை, கோபம், இந்த மாதிரியான எண்ணங்களை வச்சிட்டு, இறைவனை வணங்கினா, இறைவன் என்ன? இறைவன் பொறுப்பு. 

காகபுசண்ட மாமுனிவர் :-  எதை—ஏது என்று அறிய, தவறு செய்தாலும், அகத்தியன் தப்பித்து வைத்துக் கொண்டிருக்கின்றான் உங்களை. அவ்வளவுதான், கடைசியில் யான் சொல்ல முடியும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே வரில முடிச்சுட்டாரு. தவறு செஞ்சாலும்? 

அடியவர் :- குருநாதர் புண்ணியத்துல தான்  தப்பிச்சுட்டு இருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் வந்து உங்களை வந்து காப்பாத்திட்டு இருக்காரு. 

காகபுசண்ட மாமுனிவர் :-  திருந்துவான், திருந்துவான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- திருந்துவான், திருந்துவான் என்று. 

காகபுசண்ட மாமுனிவர் :-  ஆனால், அறிந்தும் பாசக்கயிரோன் வந்துவிட்டால், அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- பாசக்கயிறு என்றால் …. எமதர்மராஜா.

அடியவர்கள் :- எமதர்மராஜா.

காகபுசண்ட மாமுனிவர் :-  என்ன செய்வான்? கூறுங்கள் பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன செய்வான்? என்ன செய்வார்? அவர் என்ன செய்வார்ப்பா? ன்னு கேக்குறாருங்க, ஐயா.

அடியவர்கள் :-  உயிரை எடுப்பாராம்.

காகபுசண்ட மாமுனிவர் :-  அட, அட, மானிடர்களே , இதை கூட தெரியாமல் இருக்கின்றீர்கள். அதாவது, பாசக் கயிறை வீசுவான். உங்களிடத்தில் எவ்வளவு அழுக்குகள் இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு பாசக்கயிறு மெதுவாக உங்களிடத்தில் வருகின்ற பொழுது, நோய்களும், மனம் கஷ்டங்களும், இன்னும் எது எதுவோ வரும். பின்புதான், பின், அதாவது, பின்,அது, (பாசக்கயிறு) அவை என்று கூற, உன்னை தாக்கி, பின்பு உயிர் எடுக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுமா?

அடியவர்கள் :- உடனே எடுக்காது.

சுவடி ஓதும் மைந்தன் :- உடனே உன்னை, உடனே உன்னை வந்து, அது டக்குனு வந்து, உன்னோட அழுக்கை பொறுத்து…

அடியவர்கள் :- கிட்ட வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- கிட்ட வரும். (பாசக்கயிறு) அங்க போடுறது வந்து, மெதுவா என்ன பண்ணுவாரு வந்து, அதுக்கு?  

அடியவர் :- வச்சி செஞ்சுட்டு…. 

சுவடி ஓதும் மைந்தன் :- மெதுவா அங்கிருந்து எவ்வளவு நம்ம எண்ணங்களோ, அழுக்குகள், நம்ம பாவங்கள் இருக்கின்றதோ, 

அடியவர்கள் :- நோயை  கொண்டு வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அது இல்ல, அது வரும். அங்கிருந்து வர, ஐயா, அப்படி இல்லைங்க, ஐயா. வீசும்போதே, அது மெதுவா வரும். ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ, நாலு வருஷமோ, அஞ்சு வருஷமோ, ஆறு வருஷமோ, நம்மளுக்கு, ஐயா, புரியுதுங்களா, ஐயா?

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்க, ஐயா. 

அடியவர் 7 :- அப்படி பாசக்கயிறு வரும்போது, அதிக கர்மாக்களோ, பாவங்களோ இருந்தா, விரைவில் நம்மளை அடையும். அந்த அடைகின்ற நேரத்திற்கு ஏற்ப, நோய் நொடிகள் வந்து, கடைசியில் உயிரை எடுக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல அய்யா… 

அடியவர் 7 :-  நோய் நொடிகள்ங்கிறது வேற. அதாவது, அதிக கர்மாக்கள் இருக்கிறப்போ, மிக மிக மெதுவாக வந்து கொண்டிருக்கும். வந்து கொண்டிருக்கிற பொழுது…நோய்கள் வரும்… மத்த பிரச்சனைகள் வரும்….அனைத்து கெடுதல்களும் நடந்து கொண்டே இருக்கும்….இறுதியில், பாசக்கயிறால் எடுத்து விடுவார்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த பாசக்கயிறு வர்றதுக்கு, ஒரு ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ, நாலு வருஷமோ, அஞ்சு வருஷமோ, ஆறு வருஷமோ, ஏழு வருஷமோ, எட்டு வருஷமோ, இல்லனா ஒரு பத்து வருஷமோ வரும். 

காகபுசண்ட மாமுனிவர் :-   அறிந்தும் மீண்டும் எதை என்று புரிய, மீண்டும் அவ் வருடங்களில் கூட, மீண்டும் அவனிடத்திலே திருப்பி அனுப்ப புண்ணியங்கள் தேவைப்படுகின்றது. ஆனாலும், அப் புண்ணியங்கள் சில நேரங்களில் வேலை செய்வதே இல்லை.

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப, மெதுவா வருகின்ற பொழுது, சித்தர்கள் வந்துருவாங்க. அப்படித்தான் சொல்றாரு வந்து.  சித்தர்கள் வந்துட்டு, டேய், இதெல்லாம் புண்ணியம் செய்டா , புண்ணியம் செய்டான்னா கூட, நீங்கள் என்ன பண்ண மாட்டீங்க, ஐயா. புண்ணியம் செய்யப் போவதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது என்ன ஆகுது, ஐயா? வந்துட்டே, நெருங்குது வந்து. ஒருவேளை நீங்க வந்து, நிறைய நல்ல மனசு, திருந்தி , ஒழுங்கா இருந்தீங்கன்னா, அது என்ன ஆகும்? இன்னும் திருப்பி, அவர்களிடம் போகணும்ன்றாரு.

அடியவர் 9 :- சில புண்ணியங்கள் வேலையும் செய்றாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா, ஐயா?

அடியவர் 3:- புரியுதுங்க, ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :-  எனக்கும் புரியல. ஏன்னா, ஃபர்ஸ்ட் டைம். இதெல்லாம் சில விஷயங்கள் சொல்றாரு. யாருக்குமே புரியாது. நம்மளே வந்து, ( இந்த வாக்கை தட்டச்சு செஞ்சு) ஒரு கணக்கு எழுதி, திருப்பியும் கேட்டு, இதெல்லாம் தெரிஞ்சு,நம்ம கரெக்டா இருக்கணுங்க, ஐயா. அப்பதானே நமக்கு நல்லது நடக்கும். ஆமா, ஐயா.

அடியவர் 5:- ஐயா, குருதேவர் கிட்ட கேளுங்க. அந்த சில புண்ணியங்கள் வேலை செய்யாதுன்னு சொல்றதுக்கு என்ன பொருள்?  அப்பா சொல்றாங்கன்னு ( கேட்டு சொல்லுங்க )

காகபுசண்ட மாமுனிவர் :-    ஏது என்று புரிய, அதாவது, அறிந்தும் இதை தன் அறிய, அக் கயிறு பின் வந்து கொண்டே இருக்கின்ற பொழுது, அறிந்தும் எதை என்று அறிய, எப் புண்ணியமும் வேலை செய்யாது. 

காகபுசண்ட மாமுனிவர் :- ஆனாலும், மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும், அறிந்தும் பல வகையில் நன்மைகள். அதாவது, நல் மனதாக பின் ஏற்று செய்தால், அறிந்தும் கடைசியில் தான் எவை என்று நெருங்க, பின்பு எவை வெளிச்சத்திற்கு, எவ்வளவு எவை என்று, அவ் வெளிச்சத்தை பார்த்து, எவை என்று கூற, மீண்டும் பின் பின்னோக்கி செல்லும் அக்கயிறு. 

காகபுசண்ட மாமுனிவர் :-  அதாவது, எதை என்று புரிய புண்ணியம் தான் இங்கு வெளிச்சம் என்றும் நினைத்துக் கொள்ளலாம். பின், மானிடனே.

அடியவர் 5:- புரியுது, குருதேவா. நன்றி, குருதேவா.

சுவடி ஓதும் மைந்தன் :-  எனக்கும் புரியல. ஒரு தட்டச்சு செஞ்சு போடுங்க, ஐயா.

அடியவர் 7:-  சூப்பரான பதில் .

சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா, ஐயா?

அடியவர் 5:- புரியுது, ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-    அதனால், உன் ஆன்மா சக்தியை நீங்கள் பெருக்க வேண்டும். எப்படி பெருக்குவது? முதலில் நல்லெண்ணங்களை, அப்பொழுதுதான் பெருக்க முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன் சக்தி எப்படி பெருக்குறது? 

அடியவர் 10:- ஆன்ம சக்தியை கூட்டுறதுக்கு நல்ல எண்ணங்கள்னு சொல்லிட்டாரு. நல்ல எண்ணங்கள் தான். 

காகபுசண்ட மாமுனிவர் :-    இவையெல்லாம் உணராமல், யான் சித்தனை வணங்குகின்றேன். யான் இறைவனை வணங்குகின்றேன் என்றால், அவனுடைய பின் எவை என்று புரிய பின் அவனை விட ஒரு முட்டாள் இங்கு  இல்லை.

அடியவர் 7:- தந்தையே, ஒருவரிடத்தில் எவ்வளவு நல்லெண்ணங்கள் இருப்பது என்று என்பதற்கான அளவு போல் புரியுடுகிறது என்ன, தந்தையே?

காகபுசண்ட மாமுனிவர் :-    அறிந்தும் ஏது என்று புரிய, அதாவது, எவை என்று இப்படியும் யான் சொல்வேன்.  குழப்பி விடுவான். அதாவது, குழப்பி விடுவான். புசண்டன் என்று நினைத்து விடாதீர்கள். அதாவது, பின் இவை தன் அறிய, நீங்கள் நலமாகவே அறிந்தும், பின் இருந்தாலும், அதற்கு அருள் சித்தர்கள் தான் தர வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அந்த மனசு, நல்ல மனசு வருவதற்கும், அவங்கதான். சித்தர்கள் தான்ப்பா வாய்ப்பு தரணும். 

காகபுசண்ட மாமுனிவர் :-   இதனால், சித்தன் பேச்சை கேட்டால், பின் நிச்சயம் தருவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இதனால, சித்தன் பேச்சை கேட்டா?

காகபுசண்ட மாமுனிவர் :-    ஆனாலும் கேட்க முடியாதே. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனாலும், முடியாதுப்பா, உங்களால சித்தன் பேச்சை. ஐயா, புரியுதுங்களா, ஐயா?

அடியவர் 3:- புரியுதுங்க, ஐயா.

காகபுசண்ட மாமுனிவர் :-    எதை ஏது என்று அறிய, அவ்வளவு. ஆனாலும், இவ் அழுக்குகள் எப்படி மனிதன் உள் நுழைந்து இருக்கின்றது. குடலினில்   எவ்வாறு சரியாக, எத்தனை அளவில் இருக்கின்றது என்பதை எல்லாம் அகத்தியன் கண்டுபிடித்திருக்கின்றான். அதை சொல்வான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

காகபுசண்ட மாமுனிவர் :-    ஒரு எல்லைக்கு, அதாவது, எவை என்று புரிய, ஒரு அளவிற்கு பின் மேல் சென்று விட்டால், நிச்சயம் தன்னில் கூட எந் நோயும் பாதுகாக்க முடியாது. இதை அறிந்தே, இதனால் அறிந்தே, நிச்சயம் பின்.

சுருக்கமான, எளிய விளக்கம் :- இந்த உரையில் காகபுசண்ட மாமுனிவர் “பாசக்கயிறு” என்ற எமதர்மராஜாவின் சக்தி எப்படி மனிதனை மெதுவாக அணுகுகிறது என்பதை விளக்குகிறார். ஒருவரின் மன அழுக்கு, பாவங்கள், கர்மங்கள் அதிகமாக இருந்தால், பாசக்கயிறு உடனே உயிரை எடுக்காது; பல வருடங்கள் மெதுவாக நெருங்கி, அந்த காலத்தில் நோய்கள், மனக்கஷ்டங்கள், பிரச்சனைகள், துன்பங்கள் தொடர்ந்து வரும். நல்லெண்ணங்கள், புண்ணியங்கள் இருந்தால் அந்த பாசக்கயிறு சில நேரங்களில் பின்னோக்கி சென்று தள்ளப்படும்; ஆனால் சில சமயம் புண்ணியம் கூட வேலை செய்யாது. சித்தர்கள் வழி காட்டினாலும், மனிதன் நல்ல மனசு, நல்ல எண்ணம், ஒழுக்கம், நன்மை ஆகியவற்றை வளர்த்தால் மட்டுமே ஆன்ம சக்தி பெருகி, அந்த பாசக்கயிறின் தாக்கத்தை குறைக்க முடியும். அதிக அழுக்கு, கர்மம் இருந்தால் உடல், மனம் பாதுகாப்பு இழந்து, இறுதியில் உயிரை எடுக்கும் நிலை வரும். ஆகவே நல்ல எண்ணங்கள், நன்மை, ஒழுக்கம், புண்ணியம் — இவைதான் மனிதனை காப்பாற்றும் “வெளிச்சம்” என்று மாமுனிவர் கூறுகிறார். 

காகபுசண்ட மாமுனிவர்:- இவ்  பிரார்த்தனைக்கும் கூட.. ஆனால் ஒரு  ஒரு மனதை கூட நன்றாக இல்லையடா, மானிடர்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இங்க கூட்டு பிரார்த்தனை (அவர்) வந்திருக்கின்றார். 

காகபுசண்ட மாமுனிவர்:- ( தனி குழு வாக்குகள் ) 

காகபுசண்ட மாமுனிவர்:- இதனாலே, மானிடர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இதனால் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு— ஆனாலும், அதாவது, இதையும் யான் சொல்வேன். அறிந்தும், அதாவது, அறிவு இல்லை என்றால், நிச்சயம் பின், அதாவது, அறிந்து கொள்ள முடியாது. 
***** யாங்களே விலக்கி விடுவோம். அவர்களின் விதியில் கடுமையான தோஷங்கள் இருந்தால், அறிந்தும் எங்கள் அருகிலே எதை என்று புரிய வரவிடாமல் யான் செய்வேன். *****
***** ஆனால் அகத்தியனோ, கருணையோடு வரவழைத்துக் கொண்டே இருக்கின்றான், அறிந்தும். *****

காகபுசண்ட மாமுனிவர்:-  ஏனென்றால், அறிந்தும், மனிதன் இவ்வளவு அழுக்குகளை வைத்துக்கொண்டு திருந்துவானா என்று நிச்சயம் பின், அதாவது, அகத்தியன் தான் எண்ணிக்கொண்டிருக்கின்றான். ஆனால் எனக்கு நன்றாக தெரியும் மனிதனைப் பற்றி. 
***** ஏனென்றால், யுக  யுகங்களாக  மனிதனை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். ***** 
*****  அதாவது, திருடுவது தவிர அவனுக்கு ஒன்றுமே தெரியாது.  பாவம் மனிதன். *****

சுவடி ஓதும் மைந்தன் :- பல யுகங்களாக  நான்  மனுஷன பார்த்துட்டேன்  பா…. அகத்தியர் கூட கருணை கொண்டுவிடுவார். ஆனால் மனிதன்— பல யுகங்களாக   நான் பார்த்துக்கிறேன். 

காகபுசண்ட மாமுனிவர்:- மனிதன் திருடுவதற்காக— அறிந்தும், திருடுவது என்று பின் என்ன என்று கேள்வி கேட்பார்கள். 
சுவடி ஓதும் மைந்தன் :-   திருடுவது என்றால் என்ன என்று கேள்வி கேட்பார்கள். 
காகபுசண்ட மாமுனிவர்:-  பின் யான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன்: திருடுவது என்றால் என்ன? 
சுவடி ஓதும் மைந்தன் :-  திருடுவது என்றால் என்னன்னு கேட்கிறார்.
அடியவர் 4:- அய்யா  பிறகு அனுமதி இல்லாம, அவனுடைய பொருளையோ, உழைப்பையோ நாம பயன்படுத்தி…

காகபுசண்ட மாமுனிவர்:-  திருடுவது என்பது எதை என்று கூற, அறிய பல பாவ வினைகளை மனிதன் திருடுவதே என்பது பொருள். 
சுவடி ஓதும் மைந்தன் :- பல பாவ வினைகள் வந்து, நம்மே ஏத்துக்கறோம்ன்றாருங்க, ஐயா. வேற யாரும் ஏத்துக்கறது இல்லை, கொடுக்கறது இல்லை. இது நம்மளே தான். 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும், என்னென்ன— அறிந்தும், ஏது என்று புரிய, என்னென்ன திருடுகிறீர்கள்? 
அதாவது…
***** போட்டி ***** 
***** பொறாமை ***** 
***** துரோகங்கள் ***** 
***** வஞ்சகங்கள் ***** 
இன்னும் 
***** பொய் பேசுதல் *****  
இன்னும் எவை என்று கூற  
***** குறை கூறுதல் ***** ( பிறரை பற்றி புறம் பேசுதல் ) 
இவையெல்லாம் பின் நீங்கள் திருடிக் கொண்டிருக்கின்றீர்கள். புரியுதடா, மானிடா?
அடியவர் 2:- புரிகின்றது தந்தையே  நிச்சயமான உண்மை.
சுவடி ஓதும் மைந்தன் :-  இப்போ பாருங்க, ஐயா, நம்மளுக்கே தெரியாது, இவர் சொன்னதா உண்டு. எப்படி சொல்றார் பாருங்க, காகபுசண்டர் வந்து… நம்ம வந்து, வினை ஏற்படுத்தோம். நம்ம திருடினுக்கிறோம். அந்த— அதெல்லாம் வந்து திருடினுக்கிறோம். பொறாமை வந்து, நம்ம திருடுறோமாம். இப்ப பாருங்க, திருடி வச்சீங்கன்னா எவ்வளவு தண்டனை அதுக்கு வந்து. 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, சரியா சொல்லி இருக்காருங்க, ஐயா. ஒரு திருடனா, எது திருடனா, அந்த பொருள் எடுக்குறது இல்ல. அந்த ஒரு பொருள் எடுக்குறதே திருடனா, எவ்வளவு இது? எதை ? 

அடியவர் 10:- பாவத்தை, அடுத்தவங்களோட பொறாமையை….. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதை எடுத்து வச்சுட்டு இருக்கீங்க. அது ஒரு நாள் என்ன ஆகும்? வந்து, 

அடியவர் 10:- தண்டனைக்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :-   தண்டனைக்கு…

அடியவர்:- அவன் (கெட்டது) வச்சிருக்கிறான். நிறைய. நம்ம அவன்கிட்ட போய் பொறாமைப்பட்டு, அவன் திருடுறதை நம்ம எடுத்துக்கிட்டோம்.

சுவடி ஓதும் மைந்தன் :-   திருடினுக்கிறோம். நீயே திருடினுக்கிறோம் வந்து, எல்லாமே.

அடியவர் 9 :- இதைத்தான் திருவள்ளுவர் சொல்லி இருக்காருங்க, ஐயா. 
"உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக் 
கள்ளத்தால் கள்வேம் எனல். ."
(திருக்குறள் - கள்ளாமை)

காகபுசண்ட மாமுனிவர்:- எதை, ஏது என்று புரிய. அழகாக சொல் விளக்கத்தை, அனைவருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதை அழகா சொல்லுப்பா, எல்லாருக்கும் விளக்கத்தை.

அடியவர் 9 :- 
"உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக் 
கள்ளத்தால் கள்வேம் எனல். ."
அப்படின்னு திருவள்ளுவர் எழுதி இருக்காங்க. அதாவது, நம்ம உள்ளத்தால கூட, இன்னொருத்தரோட பொருளை, அதை எடுத்துடுவோம்டா, திருடுவோம்டான்னு நினைக்கிறது கூட, பாவத்தை சேர்க்கும் என்பது பொருளாகும்.

பிறர் சொத்தைக் கள்வத்தால் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மிகப் பெரிய தீமை. திருடும் செயல் மட்டும் குற்றம் அல்ல; திருட வேண்டும் என்ற மன நினைவு கூட மனிதனை அழுக்காக்கி, தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். பிறர் பொருளை வஞ்சித்து, சூழ்ச்சி செய்து, அவருக்குத் தெரியாமல் எடுத்து விடலாம் என்று உள்ளத்தில் நினைப்பதே தவறானது. ஆகவே, குற்றம் செய்கிற செயலுக்கு முன் மனத்தில் எழும் அந்த தீய எண்ணமே மனிதனின் நெறியை கெடுக்கும் 

காகபுசண்ட மாமுனிவர்:- இங்கு திருடுவது எதைச் சொன்னேன் யான்? 
சுவடி ஓதும் மைந்தன் :-  இங்கு திருடுவது எதைச் சொன்னேன்னு கேட்கிறார்?

அடியவர் 5  :-  அதாவது, மனிதனுடைய குணநலன்கள்.

காகபுசண்ட மாமுனிவர்:- அதாவது, சொன்னேனடா… எப்பொழுது பின் நல் விஷயங்களை திருடப் போகின்றீர்கள் நீங்கள்? 
சுவடி ஓதும் மைந்தன் :-   இப்ப என்ன சொல்றேன்னா, எப்பலாம் நீங்க நல்ல— எப்படி சொல்றது? 
அடியவர் 5  :- நல்ல விஷயங்களை திருடப் போறீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப நல்ல விஷயங்களை நீங்க திருடப் போறீங்க. 

காகபுசண்ட மாமுனிவர்:- இது தான் பின் அகத்தியனிடமே இருக்கின்றது. 

***** பின் அதையும் கூட திருட முடியவில்லையே உங்களால். ***** 
***** ஆனால் எப்படி வாழ்வீர்கள் நீங்கள் சொல்லுங்கள்? ***** 
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியனிடமே நல்ல இதெல்லாம் இருக்குதுடா.
அடியவர் :- அவங்க சொன்னதை கேட்டாலே…

சுவடி ஓதும் மைந்தன் :-  அவங்க, அவங்களிடம் எப்படிடா நீங்க திருடுறது? நல்ல விஷயங்கள் எல்லாம் கேட்டு, அதை நீங்க முதல்ல திருடுங்கடா. நீங்க நல்லா ஆயிட்டீங்க வந்து. அதையே நீங்க வந்து, அதை திருடல. நல்ல விஷயங்கள், நல்ல இது வந்து—
அடியவர் :-  ஐயா, அவங்களுக்கு நம்ம திருட மாட்டோம்னு தெரியும். தெரிஞ்சு சொல்றாரு. குருநாதர் சொல்றாரு இல்ல.. அதையும் கேட்க மாட்டேங்குறான்.

காகபுசண்ட மாமுனிவர்:-  இப்பொழுது தெரிகின்றதா?  எவை என்று அறிய மனிதன் எதை திருடுகின்றான். எதை திருடாமல் இருக்கின்றான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுது தெரிகின்றதா? அப்ப நல்லது சொன்னா, நல்லது சொன்னா, யாரும் கேட்க மாட்டார்கள். அப்ப நல்லது சொன்னா, அதுதான் திருடுறது. நல்லது சொன்னா வந்து, "டேய்,  நல்லதே செய்றேடா"ன்னு சொல்றாங்க இல்ல, அதை திருடு. அதை திருடுடா முதல்லன்றாரு. ஓ, ரைட். நல்லதே செய்றேன். அதை திருடுனா நல்லது. அடுத்து என்ன சொல்றாருங்க, ஐயா?

அடியவர் 6 :-  போட்டி, பொறாமை.

அடியவர் 8 :-  அகத்தியர் கிட்டயே இருக்கீங்க. அவர்கிட்ட இருந்து திருடுங்கங்கிறார்.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இல்ல, அப்படி இல்ல. நல்ல விஷயங்கள்—

அடியவர் 2 :- நல்ல விஷயங்கள் திருடனும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  நல்ல விஷயங்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க கிட்டே இருந்து திருடுங்கடா. நிறைய சொல்லி இருக்காரு. அதை, அதை யூஸ் பன்னுங்கடா என்றார் வந்து. 
காகபுசண்ட மாமுனிவர்:-  ஏது என்று புரிய. இப்பொழுது விவரமாக, அதாவது, அறிந்தும்— இதை என்று புரிய. உள்ளதே பின் ஒன்று, அதனுடனே பூஜ்யத்தை பின் கூட்டினால் என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்று, அதனுடன் பூஜ்யம் கூட்டினால் என்ன?

அடியவர் 6:- பத்து 

அடியவர் 7:- ஒன்று. 

காகபுசண்ட மாமுனிவர்:-  ஒருவன் சொல்கின்றான் பார், முட்டாள்தனமாக.

சுவடி ஓதும் மைந்தன் :-   உங்கள தான் சொல்றாரு. பத்து என்றார் இவர் வந்து. ஒரு முட்டாளாக சொல்கிறான் பாருன்றாரு. பத்து என்றார் ஒருத்தர் இங்க இருக்கிறவர். 

காகபுசண்ட மாமுனிவர்:- அப்பொழுது அறிந்தும் ஒன்றின் பின் பூஜ்யத்தை சேர்க்க எவ்வளவு?
அடியவர் 1 :- 10ங்க அய்யா .
காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் மீண்டும் பூஜ்யத்தை சேர்.
அடியவர் 1 :- 100ங்க அய்யா .
காகபுசண்ட மாமுனிவர்:-  மூன்றும்…
சுவடி ஓதும் மைந்தன் :-   அதாவது, இன்னொன்னு சொல்றாரு.
அடியவர் 1 :-  1000ங்க அய்யா . 
காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் இப்படியே சேர்த்துக்கொண்டால், நிச்சயம் ஒன்றுக்கு பின் மதிப்பு அதிகமாகும். அதே போலத்தான், இறைவன் ஒன்றே. நிச்சயம் பல்வேறு வடிவங்களாக அறிந்தும்— எதை என்று. ஆனால் அனைத்தும் ஒருவனைப் போய் சேரும். இதனையும் இன்னும் பின் விளக்கமாக தெரிவித்தால் தான் உண்டு. 

காகபுசண்ட மாமுனிவர்:-  இதனால் அகத்தியன் எவை என்று அறிய. நீங்கள் எல்லாம் பூஜ்யங்கள். அதனால் அகத்தியன் ஒன்று என்று நினைத்துக்கொள்வோம். இப் பூஜ்யங்கள் பின் நிச்சயம் ஒன்றின் பக்கம் இருக்க, நிச்சயம் மதிப்பு அதிகமாகும். அதைத்தன் பின் நிச்சயம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வீணே.

அடியவர் 5 :- சரிங்க , குருதேவா.

சுவடி ஓதும் மைந்தன் :-   என்ன சொல்றார் தெரியுமா இங்க  ?.

அடியவர்  9 :-  குருநாதர் முன்னாடி நிக்கிறார்… ஒன்னா.

சுவடி ஓதும் மைந்தன் :-   ஒன்னா நிக்கிறாரு. ஒன்னு. அவர் தான்.

அடியவர் :-  ஏன் (குருநாதர்) பின்னாடி போய் நிக்கணும்? ஒன்னு பின்னாடி போய் நின்னா தான் அதுக்குண்டான மதிப்பு வரும்…

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-   நீங்க எல்லாம் ஜீரோ. அப்படித்தான் சொல்றாரு. அப்ப ஒன்னுக்கு பக்கத்துல நின்றோம் என்றால் , உங்களுக்கு மதிப்பு கூடும்.

அடியவர்  7 :- கூடிட்டே இருக்கும். கூடிட்டே இருக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :-   இல்லையென்றால்?

அடியவர் 10  :- பூஜ்யம்தான் 

காகபுசண்ட மாமுனிவர்:-  அப்பா, அறிந்தும் உண்மைதனை இப்பொழுது சொல்லுங்கள். இங்கு ஒன்று பெரியதா?  பூஜ்யம் பெரியதா?
அடியவர்  7 :- ஒன்று பெரியது.
அடியவர் 6  :- ஒன்று தான் பெரியது. 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் யான் இல்லை என்று சொல்வேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-   நான் ஒன்று பெரியது இல்லைன்னு சொல்லுவேன்ப்பா.

அடியவ 7 :- ஒன்றுடைய மதிப்பை கூட்டுவது பூஜ்யம். அதிக பூஜ்யமே தந்தையே.

காகபுசண்ட மாமுனிவர்:-  அதனால் இப் பூஜ்யங்கள் சேர்த்து, அறிந்தும் ஒன்றுக்கு மதிப்பிட வேண்டும். இதுதான் பின் சீடனின் கடமை.

அடியவர்  7 :- சத்தியம். சத்தியம்.

அடியவர்   :-  ஏத்துக்கறோம்

அடியவர்  5  :-  சூப்பர். சூப்பர்.

அடியவர்  6   :-  புரியுது ஐயா .

அடியவர்  7 :- சத்தியம். சத்தியம். 

காகபுசண்ட மாமுனிவர்:-   அறிந்தும்— அதாவது, இன்னும் சொன்னால், அறிந்தும் நீங்கள்— அதாவது, பைத்தியக்காரர்களாக போய்விடுகிறீர்கள். அதனால் பின் அகத்தியன் எவை என்று அறிய பின், நல்லதே சொல்லி வரச் சொல்லி இருக்கின்றான். அதாவது, சொல்லிவிட்டேன். அதனால்தான் இன்னும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்திறமை வளர்த்துக் கொண்டால், உங்களுக்கு இன்னும் பல விஷயங்கள் தெளிவுபடுத்துவேன்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு திறமைதான். 

அடியவர்  3 :- அத்திறமையை வளர்த்துக்கொள்ள பாடுபடுகின்றோம், குருநாதா. 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் பின் பாடுபடுவதற்கும் அகத்தியர் வேண்டும். அதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.
அடியவர்  3 :- குருநாதா  திறமை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை அருள வேண்டும்.

காகபுசண்ட மாமுனிவர்:-  இதனால் எதை இனிமேல் திருடப் போகின்றீர்கள், கூறுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, எதை திருடப் போகிறீர்கள்?

அடியவர்  1 :-  அகத்தியர்கிட்ட நல்லதை திருடனும் ஐயா .

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் இதனால் பின் மக்களுக்கு எவ்வாறு நல் சொற்களை பின் எவை என்று எடுத்துச் சொல்லுதல் என்றெல்லாம், நீங்கள் எவை என்று அறிய யோசித்து செய்யுங்கள். அதுவே உங்களுக்கு நன்மையாக முடியும்.

அடியவர் 5  :-  புரியுது, குருநாதா…. புரியுது.

காகபுசண்ட மாமுனிவர்:-  இதனால் ஒவ்வொரு— எவை என்று அறிய— இலக்கங்கள். அதாவது, இலக்கங்கள் ஆகவும், அறிந்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுமையை ஏற்று நடந்திடுங்கள். அதுவே அச்சுமையை சரியாக செய்யுங்கள், போதும்.

அடியவர் 5  :- புரியுது, குருநாதா

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒருத்தர் ஒருத்தர்?

அடியவர் 7  :- ஒரு ஒரு வேலையும் செய்யணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு ஒரு வேலை செய்யணும். 

காகபுசண்ட மாமுனிவர்:-  செய்து கொண்டிருக்கும் பொழுது தடங்கள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  செய்து கொண்டிருக்கும் பொழுது தடங்கள் கூடாதுன்னா?

அடியவர் 5  :- அடுத்து உங்களுக்கு— அடுத்து உங்களுக்கு இடையூறு கொடுக்கக்கூடாது.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம். அதுதான். 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் சரியாக உன் வேலையை பின் செய்தாலே போதுமானது. கர்மம் சேராது. இப்பொழுது சொல்லுங்கள், எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன் வேலையை நீ செஞ்சாவே போதும். 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் ஏது என்று புரிய, அவரவர் பின் சுமையை அழகாக செய்யுங்கள், போதும். அறிந்தும் குற்றம் காணாதீர்கள். குற்றம் எதற்காக காணுகின்றீர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா குற்றம்? அதாவது, அவரவர் வேலை அவர் செய்யுங்கள்ன்றார் வந்து. குற்றம் எதுக்காக காணுகின்றீர்கள்னு கேட்கிறார். எதுக்காகங்க, ஐயா, குற்றம் காணுகின்றீர்கள்?

அடியவர் 5  :- இந்த குறை சொல்றதை பத்தி சொல்றாங்க, ஐயா. வேற ஒன்னும் இல்ல.

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுதான். எதுக்காக குறை சொல்றீங்கன்னு கேட்கிறார். யாராவது சொல்லுங்க, ஐயா. திருப்பி கேள்வி மட்டும் வந்துருச்சு.

அடியவர் 5  :- நகைச்சுவையாக சொல்றதுன்னா , குற்றம் கூறிக்கிட்டே இருந்தா தான் நம்மள பெரிய ஆளுன்னு நினைச்சுக்குவாங்க.

காகபுசண்ட மாமுனிவர்:- அப்பா, குறை உள்ளவன் தான் குற்றம் கூறுவானாப்பா. புரிகின்றதா?

அடியவர் 9 :- புரிகின்றது, தந்தையே 

அடியவர் :- குறு குறு என்பது  பொறாமையால தானே வரும். 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் ஏது என்று அறிய பொறாமைக்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள்?  பொறாமை ஒன்று இருந்தால், அனைத்தும் வந்துவிடுமாம். துரோகங்கள், ஏமாற்றங்கள்— அதாவது, எதை என்று கூற பொய் சொல்லுதல்— அனைத்தும். இதனால் பொறாமை என்பது சாதாரணம் இல்லை. இதனால் அதை பிரித்து எடுக்க…

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, பொறாமை என்பது பிரித்து எடுக்கன்றார்.

அடியவர் 1 :- பொறுத்துக்கொள்ள முடியாமையா, ஐயா? பொறாமை. பொறுத்துக்கொள்ள முடியாமையா.

அடியவர் 7  :- பொறுக்க முடியாமை. பொறாமை.

அடியவர் 10  :-  பொறுமை இல்லாமை.

காகபுசண்ட மாமுனிவர்:-  அப்பா, ஒன்று ஒன்று கூறுங்கள், அனைவரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாராவது கூறுங்கப்பா, ஒன்று ஒன்று.
அடியவர் 3  :- பொறுத்துக்கொள்ள முடியாது. அடுத்தவங்க கிட்ட ஒரு பொருள் இருந்துச்சுன்னா, நமக்கு வயிறு எரியுது இல்ல. அதுதான். 

அடியவர் 5  :- குருதேவா, பொறாமைக்கு திருவள்ளுவர் பெருந்தகை வந்து "அழுக்காறு"ன்னு ஒரு வார்த்தை பயன்படுத்துறாங்க. அப்ப அழுக்கு ஆறுனா பாதை வழி. தவறான வழியில் செல்வது பொறாமை. எந்த தவறான வழியையும் நம்மளையும் கொண்டு போய் சேர்க்கக்கூடிய குணமே பொறாமை, அப்படின்னு எடுத்துக்கலாமா, குருதேவா?

காகபுசண்ட மாமுனிவர்:- “மை” அறிந்தும் எது என்று கூறப்பின், எரிந்து விடுவாய் அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க “மை” மட்டும் எடுக்குறார் வந்து. மை, மை. குரு— குரு மை. பொறாமை. பொறா— பொறா— மை. கடைசி வார்த்தைல அந்த மை மட்டும்— மையை மட்டும் எடுத்தார். மை என்று— மை என்பது என்ன? எல்லாமே எரியுது தானே, மை. எல்லாம் கடைசில வந்து—

அடியவர் 7   :- எரிஞ்சுடுவாங்க.

காகபுசண்ட மாமுனிவர்:-  எது என்று கூற இருக்கும்போதே பின் மையாகவே சென்று கொண்டிருப்பாயடா, தேவையா இது உனக்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுமா ? “மை” மட்டும் எடுக்குறார். பொறா— போ— றா— பொறாமை இருக்குல்ல. “போ” எடுக்கல, “றா” எடுக்கல. “மை” மட்டும் எடுத்துட்டார். “மை” மட்டும் எடுத்துட்டாருங்க ஐயா. மை மட்டும் அட்ட சொல்றாரு. மை என்பது என்ன? எல்லாமே எரிஞ்சு சாம்பலாக போயிடும். அதனால நீங்க வந்து அந்த மை— அது வந்து, அது— இருக்கும் போதே நீங்க மை— மைய எரியுதுங்களா?
( பல உரையாடல்கள் ) 

காகபுசண்ட மாமுனிவர்:-  இதனால்தான் அறிந்தும் எது என்று அறிய— புத்தியை வளர்க்க கல்வியை சரியாக படியுங்கள், படியுங்கள் என்று. ஆனால் படிக்கவில்லையே. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான், டேய் , ஒழுங்கா படிங்கடா, படிங்கடான்னு சின்ன வயசுலயே அப்பா அம்மா சொல்றாங்க. எங்கடா படிச்சீங்க நீங்க எல்லாம். 

காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனால் படித்தது என்பதோ— பொறாமை, போட்டி, குறை சொல்லுதல், எவை என்று அறிய இன்னும் என்னென்னவோ. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் படித்தது என்பதோ— ஸ்கூல்ல போய் படிக்கல. என்ன படிச்சீங்க நீங்க எல்லாம்? ஏமாத்துறது, போட்டி, பொறாமை, எப்படி பேசுறது, எப்படி பேச தெரியாம இப்படி தான். 

காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனாலும் அறிந்தும் எதை என்று கூற— பேச வைத்து தெரிந்து கொண்டு— பேச எவ்வாறு பேசுவது என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். ஆனால் சித்தனிடத்தில் அவை நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய பயன்படாது.

சுவடி ஓதும் மைந்தன் :-  பேசுறத மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனால் சித்தனிடம் செல்லாது. 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும்— சரி, இப்படியே சொல்லிவிட்டேன். அறிந்தும்— ஏது என்று புரிய— அறிந்தும்— எவை என்று அறிய— இதனால் கேட்பீர்களோ என்ன?  கேட்பாதரோ என்ன?  காதுகள் இருந்தால் கேட்பீர்கள். காதுகள் இல்லை என்றால் பின் யார் எது என்று அறிய— பின் இவை என்று கூறிய பின் அறிந்தும் சென்று கொண்டே இருப்பான் பைத்தியம் போல. அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   கேட்டா கேளுங்க. கேக்கலைன்னா காது இல்லாதவன். காதும் இல்லாதவன் அவன் என்ன பண்ணிருப்பான்? ஒன்னும் தெரியாம பைத்தியம் போல சுத்தினே இருப்பான். எனக்கு என்னப்பான்னுட்டார். ஐயா, புரியுதுங்களா?

அடியவர்  5    :- கட்டாயம் கேட்பேன், குருநாதா.

அடியவர் 1  :-  கேட்போம் , குருநாதா. கேட்போம் , குருநாதா. 

காகபுசண்ட மாமுனிவர்:-  எதை ஏது என்று புரிய — அறிந்தும் — இதைத்தன் அறிய — இன்னும் — கொடுப்பதற்கு — யாங்கள் தயார். ஆனால் பக்குவம் இல்லையே உங்களிடத்தில். பக்குவம் இல்லாமல் கொடுத்தால் நீங்கள் எதை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :-  நாங்க கொடுக்க ரெடியாகுறோம்பா. வாங்குறதுக்கு தயாராக இல்லை. 

காகபுசண்ட மாமுனிவர்:- நல்லது— பின் அகத்தியன்— அதாவது, நல்லது செய்யுங்கள் என்றெல்லாம் அறிந்தும் கூட. ஆனால் அதையே எது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லது செய்யுங்கள் என்று அகத்தியரே சொன்னார். அதையே உங்களால அறிந்து கொள்ள முடியல. ஐயா (கேக்குதா) ?

அடியவர்கள் :- நான் கேக்குது , ஐயா. கேக்குது .

காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் அறிந்தும்— பாவங்கள் எப்படி தொலையும் என்பதை எல்லாம் அறிந்தும்… 
***** இதனால் பின் நல்லதையே செய்க.  *****

சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லதையே செய்ய சொல்றாருங்க, ஐயா. நாலு பேருக்கு சொல்ல சொல்றாரு வந்து. நல்லதையே செய், இப்படி இருப்பா, அப்படி இருப்பான்னு. 

காகபுசண்ட மாமுனிவர்:- பின் கேட்போர் சிலர். கேட்காமல் இருப்போர் பலர். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்பது சில பேர். கேட்காமல் இருப்பது?  

அடியவர்கள் :- பல பேர். 

சுவடி ஓதும் மைந்தன் :-   பல பேர். 

காகபுசண்ட மாமுனிவர்:- ஆனால் உன் கடமை செய், அவ்வளவுதான். அகத்தியன் சொல்லிவிட்டான் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன் கடமை செய், அவ்வளவுதான். அகத்தியன் சொல்லிட்டார், இறைவன். 

காகபுசண்ட மாமுனிவர்:-  இதை அறிவித்து— எவை என்று கூற— அறிய— இப்புண்ணியம் அறிந்தும் கூட— அகத்தியன் சொல்வதை கேட்டால் பெரும் புண்ணியமே. 
சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் சொல்றது சாதாரணம் இல்ல. அகத்தியர்  சொல்றதை கேட்டாலே ? 

அடியவர் :- பெரிய புண்ணியமே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பெரிய புண்ணியம் என்றார். 

காகபுசண்ட மாமுனிவர்:-   சுலபமாக கிடைக்கும் சில விஷயங்களை எல்லாம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- சுலபமாக கிடைக்கும் சில விஷயங்கள்  கிடைக்கும்ன்றார். 

காகபுசண்ட மாமுனிவர்:-    அறிந்தும்— ஏதாவது எவை என்று கூற— உங்களுக்கு என்ன தேவை இப்பொழுது? என் விளக்கம் போதும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என் விளக்கம் நான் சொல்லிட்டேன், அது போதும் எனக்கு. அகத்தியர் சொல்றதுக்காக வந்துட்டேன். உங்கள் விளக்கங்கள் என்ன வேணும்? நீங்க கேள்வி கேட்கலாம், ஐயா.

அடியவர் 11 :- குருநாதருக்கு வணக்கம், ஐயா. எங்கள் விளக்கம் மனசுல இருக்கு, நீங்களே சொல்லிட்டீங்க, ஐயா. இந்த சூழ்ச்சிகள்— இங்க சூழ்ந்து சூழ்ந்து உலகத்தில் நாங்க வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவனைப் பற்றி சொன்னாலும், நல்ல விஷயங்களை சொன்னாலும், கேட்டுக்கொள்ள மனப்பக்குவம் இல்லை. ஒருவர் ஒருவர் சொல்லிக்கொண்டு பொறாமை இல்லாமல்— அந்த போட்டு பொறாமை இல்லைன்னு உலகத்திலே நாங்க வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அப்ப எங்கள் பக்குவத்தை நீங்கள் இன்னும் அதிகமாக பெருக்கி, பேச வைக்கணும். இறைவனுடைய சித்தர்களுடைய விஷயத்தை நாங்கள் பரப்பவும் . எங்களுக்கு மன தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் நீங்களே வழங்க வேண்டும் என்று அது மூலம் கேட்டுக்கொள்கிறோம், இறைவனே.

காகபுசண்ட மாமுனிவர்:-   பக்குவம் எவ்வாறு என்பது— உயிரை உயர பக்குவங்கள் ஏற்பட வேண்டும். அறிந்தும்— பின் ஆளும் பின் தாழ்வு— பின் வரக்கூடாது எப்பொழுது. அதனால் நிச்சயம்— அறிந்தும்— பல மக்களுக்கு நன்றி. அறிந்தும்— அதாவது, அகத்தியன் பின் சொல்லியிருக்கின்றான் என்று சொல்லுங்கள். பின்— அதாவது, வாழ்ந்தால் பின் வாழட்டும்.

அடியவர் 11:-  சரி, குருதேவா. அதையே சொல்லிக்கொண்டிருக்கின்றோம். சித்தமாக நாங்க செய்கிறோம். செய்கிறோம் என்று— செய்கிறோம் என்று— செய்கிறோம், ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தது, ஐயா. ஐயா— கேள்வி— என்னென்ன பண்ணனும்னு கேளுங்க, ஐயா. என்ன வேணும்— என்ன வேணும்ங்க, ஐயா. சொல்லுங்க, ஐயா.

அடியவர் ஒருவர் :- குருநாதருக்கு வணக்கம். தங்களது அருள் ஆசிகள் வேண்டும். மேலும் நிறைய சிக்கல்கள்.  ……………………….. ஆபத்து ஏற்படுத்த துடிக்கிறார்கள்.

காகபுசண்ட மாமுனிவர்:-  மானிடனே அறிந்தும்— எதை என்று புரிய— அதாவது, சொல்லிவிட்டேன், இதனை— அதாவது, ஒன்றின் பக்கத்தில் இருந்தால் நன்மையே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் சொல்லிட்டாரு. உண்மைதான். அதன் பக்கத்துல பூஜ்ஜியமா இருந்து நீங்க வந்து— அவர் பார்த்துட்டு போறார் மொத்தம். அவ்வளவுதான்.

அடியவர் ஒருவர் :-  உண்மைதான், குருநாதா.

காகபுசண்ட மாமுனிவர்:-  அகத்தியன் சொன்னது போல் மக்களுக்கு நன்மை செய்யுங்கள். பின் உன்னை நீ பாதுகாப்பது போல்..
சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் சொன்னது போல வந்து— நன்மை செய்யுங்கள். அடுத்து— அடுத்து—

அடியவர் 5 :-  புஜண்டர் அப்பாவுக்கு சரணம். இப்ப கிளைமேட்டிக் கண்டிஷன்— எல் நினோன்னு ஒன்னு சொல்றாங்க. அதுல ஒரு பக்கம் கடுமையான வறட்சி இருக்கு. மழை இருக்கு. இந்த நிலை நீங்கி நல்ல நிலை வரணும், குருதேவா. அதுக்கு உங்கள் ஆசிகள்.

காகபுசண்ட மாமுனிவர்:-  இதுதான் அகத்தியன் சொன்னான். அறிந்தும்— ஏது என்று புரிய— அனைவரும் பின் கூட்டமாக கூடி— இன்னும் பலமாக சில மந்திரங்கள் உச்சரித்தாலே போதும். எதை என்று அறிய— அனைத்தும் நலமாகும். பின் ஏது என்று அறிய— இதனால் மனம் விரும்புவார்கள். பின்— அதாவது, ஞானிகளும் இன்னும் குருமார்களும் இன்னும்— எதை என்று அறிய— அதாவது, நீங்கள் கத்தினால் மட்டும் போதும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கத்தினால் மட்டும் போதும்னா? 
அடியவர் 5:- சரி, குருதேவா..புரியுது. 

சுவடி ஓதும் மைந்தன் :- கூட்டி— அவங்க கத்தினால் மட்டும் போதும்னா என்ன? 

அடியவர் 10 :- பாடல்.. பாடல் பாடுறது… வேண்டுறது—

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :-  (சித்தர்கள் மனிதர்களை நல்ல பாதைக்கு அழைக்க பல விதமான முறைகளில் மனதை “இறக்க” முயற்சிக்கிறார்கள். கூட்டமாக கத்தச் சொல்லுவது…அதாவது இறைவனை நோக்கி…..நல்  உணர்வுடன் பாடச் சொல்லுவது, மந்திரம் சொல்லச் சொல்லுவது— இவை எல்லாம் மனுஷன் உள்ளே இருக்கும் அழுக்கு, சோம்பல், சிதறல், அசுத்த எண்ணங்களை உடைக்க உதவும் வழிகள். காகம் கத்துவது போல கூட்டம் கத்தினால், மனம் விழித்தெழும்; அதனால் சித்தர்கள் அந்த கூட்டத்தை உருவாக்கி, மனிதன் உள்ளே இருக்கும் சக்தியை எழுப்ப முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற அறிவு உலகத்தில் எளிதாக கிடைக்காது; இதை புரிந்து கொள்ளவும், கேட்கவும், பெறவும் மனிதன் முன்பு செய்த சிறு புண்ணியங்களே காரணம். அதனால், சித்தர்கள் சொல்லும் வழிகளைப் பின்பற்றி, மனதை இறக்கி, நல்ல எண்ணங்களை வளர்த்தால் தான் ஆன்ம சக்தி பெருகி, மனிதன் நன்மை நோக்கி நகர முடியும். )

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் இதைத்தன் அறிய,  யாரை தேர்ந்தெடுப்பார்கள் சித்தர்கள்? அறிந்தும் எவை என்று கூற— கெட்டுப் போனவர்களை.

சுவடி ஓதும் மைந்தன் :-  சித்தர் யார் தேர்ந்தெடுப்பாங்க, ஐயா. ஐயா—

அடியவர் 4:- கெட்டுப்போனவங்களை தேர்ந்தெடுத்து, அவங்களை நல்லவங்களாக்கி, அதன் மூலம் உலகத்தை…

காகபுசண்ட மாமுனிவர்:-  இவ் வாய்ப்பை எதை என்று அறிய— நிச்சயம் தண்ணீர் கூட சரியாக— பின் அறிந்தும் கூட— அதாவது உண்மை இதனை உணர்ந்து, அனைவரும் ஒன்றாக செய்யுங்கள் போதும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  காக்காவை பாருங்கன்றாரு. எல்லாரும் ஒன்னா சேர்ந்து நல்லா செய்யுங்கப்பான்றாரு. காக்காவை பாருங்கப்பான்றாரு. 

காகபுசண்ட மாமுனிவர்:-  எதை என்று அறிய— அனைவரையும்— அதாவது கூட்டி— எதை என்று கூற— அறிந்தும்— ஒரு காக்கை பின் வரும் முதலில்— பின் அனைத்தும்— பின் அதாவது கூட்டத்தை கூட்டி— அனைவரும் சந்தோசமாக— அறிந்தும் கூட. அதற்கே அவ்வளவு அறிவு என்றால்— மனிதன் அவ்வளவு விட கேவலமானவனா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  காக்கைக்கே அவ்வளவு அறிவு இருக்குதுப்பா.

அடியவர் :- எப்படி சாப்பாடு வாங்கணும்னு தெரியும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  தெரியும். 

காகபுசண்ட மாமுனிவர்:-  எதை என்று கூற இப்பொழுது கூறுங்கள். அருளை எப்படி பெற வேண்டும் என்று? 

அடியவர் 4 :- அனைவரும்— அனைவரும் ஒன்றாய் சேர்ந்து….

சுவடி ஓதும் மைந்தன் :-  சத்தமா கேக்கணும், ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சத்தமா கேக்கணும். அப்பதான் இறைவன் என்ன பண்ணுவாரு? டேய் , யாரோ கதறுறாங்கடா. நம்ம ஏதாவது போயிட்டு சாப்பாடு போட்டு வருவோமேன்னு அப்பதான் நினைப்பாராம். 

காகபுசண்ட மாமுனிவர்:-  இதனால் எவை என்று கூற— பின் அறிந்தும் — ஏது என்று புரிய — பின் மனிதன் எவ்வாறு — என்பதையெல்லாம் — அதாவது நீங்கள் கேட்டால் இறைவன் கொடுத்து விடுவானா என்ன? இல்லை. இதனால் எவை என்று கூற — பின் அறிந்தும் கூட— இதனால் பின் அனைவரும் கூடி— அதாவது பின் சற்று— எவை என்று கூற— பின் எவை என்று கூற— ஒலி  விடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் சேர்ந்து— அதனால் நீங்க இறைவனை நீங்க கொடுத்தாலும் நீங்க கேட்டாலும் கொடுக்க போறதில்லை. இறைவன் ஒன்று. ஓகேங்களா, ஐயா. அதனால எல்லாரும் சேர்ந்து கும்பல்ல கோவிந்தா போட்டு ஓன்னு கத்தணும். ஐயா.

அடியவர் 4:- சரிங்க, ஐயா.

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும்— பின் அதாவது பின் சாகும் பிணத்தை பார்த்து— அனைவரும் ஓலை விடுவார்கள். எதற்காக தெரியுமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  சாகும் பிணத்தை பார்த்து எல்லாரும் ஓன்னு ஓலம் விடுவாங்க. எதுக்காக தெரியுமா?

அடியவர் 4:-  சொல்லுங்க, ஐயா. தெரியலைங்க.

காகபுசண்ட மாமுனிவர்:-  அப்பொழுதாவது இறைவன் உயிரை கொடுத்து விடுவானா என்று எண்ணி— ஆனாலும் எவை என்று கூற— இவை தன் இப்பொழுது கண்களில் தண்ணீராக…

சுவடி ஓதும் மைந்தன் :- தண்ணீர்ன்றாரு. இப்ப வந்து அது பேஷன் மாறிட்டாங்கப்பா. அப்பலாம் ஒவ்வொன்னும் கத்து வாங்கலாம். பிணம் எது இருந்தா ஒவ்வொன்னும் எல்லாரும் சேர்ந்து கத்து வாங்கலாம். ஆனா இப்ப என்ன பண்ணிட்டாங்க? உடனே உட்கார்ந்து கண்ணுல தண்ணி அழுகுறாங்கப்பா. 

காகபுசண்ட மாமுனிவர்:-  அப்பா, சித்தன் என்னென்ன சித்துகள் எப்படி எல்லாம் மனிதனை இயக்க வேண்டும் என்றெல்லாம். ஆனாலும் அதற்கு உங்களுக்கு சக்தி தேவைப்படுகின்றது. அவ் சக்திகள் இன்னும் அகத்தியன் தான் கொடுக்க வேண்டும். அசக்திகள் உங்களுக்கு கொடுத்துவிட்டால் உங்களை நீங்களே வெல்லலாம். பிறரையும் வெல்ல முடியும்.

அடியவர் 4:- ரொம்ப சிறப்பு, ஐயா. 
அடியவர் 9 :- சிறப்பு, ஐயா.

அடியவர் 5:- குருநாதா, உங்களுடைய ஆசீர்வாதத்தாலும் விரைவான அருள் தரணும்.

காகபுசண்ட மாமுனிவர்:-  எது என்று புரிய சிறப்பு, சிறப்பு என்கின்றீர்களே…என்ன சிறப்பு என்று? 
சுவடி ஓதும் மைந்தன் :-  சிறப்புன்னா என்னன்னு கேக்குறாருங்க, ஐயா.
அடியவர் 5:- சிறந்தவர்கள்.

காகபுசண்ட மாமுனிவர்:-  மானிடர்களே  சிறப்பு என்றால்— சீவன். அதாவது சிவன் என்றே பொருள்.

அடியவர் 4:-  அருமை
அடியவர் 9 :-  அருமை
அடியவர் 10:-  அருமை

காகபுசண்ட மாமுனிவர்:-  அருமை… முழுமை… முதுமை… இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருங்கள். வாய்க்கு வந்ததெல்லாம்.. 
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் ) 
சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் சொல்லுங்கடா… வாய்க்கு  சொல்றதெல்லாம் சிறப்பு. ஐயோ, எப்பா. ஐயா, என்ன சொல்றாரு? 
அடியவர்கள் :- ( பலத்த சிரிப்புகள் ) 
அடியவர் 10:-  அனைத்தும் வந்தவர் நீங்க. உங்களால மீறி உங்களால என்னங்கயா பேச முடியும்? கேட்டுட்டு தான் இருக்கேன். நீங்க சொல்றது கேக்குறது தானே என் வேலை.
அடியவர் 4:-  சின்ன பிள்ளைங்களோட அறிவுல என்ன தெரியுதோ அதை சொல்றோம்.

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும்— எது என்று புரிய— இதனால் பின்— அதாவது அறிந்தும்— எப்படி பின்— அதாவது பின்— அதாவது பின் நன்மைகள் செய்ய வேண்டும். அதாவது காக்கை போல் எப்படி பின் அழைக்க வேண்டும். அதாவது பின் வந்தால் உணவு. இல்லையென்றால் எவை என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார்ன்னா காக்கை போல் இருக்கணும். அப்பா…வாங்கப்பா.  நல்லது செய்றேன்னு.. சொன்னா… வந்தா சாப்பாடு. சாப்பாடுன்றது நமக்கு நல்லது நடக்கும். இல்லையென்றால் அப்ப யார் போல் இருக்கணும்ன்றாரு? காக்கா போல். 

காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனாலும் சில காக்கைகள் பின் வருகின்ற பொழுது எதையதோ பின் அறிந்து— எது என்று புரிய— பின் விரட்டும். 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் சில காக்கை என்ன பண்ணும்?

அடியவர் 7 :-  விரட்டும்.

சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒரு காக்கை அடுத்த காக்கையை )  குத்துமாம்.  குத்தும் இல்ல. விரட்டும்ன்றாரு. 

காகபுசண்ட மாமுனிவர்:-  ஆனாலும் அதுபோல் உங்களுக்குள்ளே நீங்கள் இருக்காதீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார் தெரியுமா? அதுக்குள்ள உங்களுக்குள்ளே…
( பல உரையாடல்கள்) 
சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால உங்களுக்குள்ளவே நீங்க அந்த மாதிரி இருக்காதீங்கடா. ஐயா, புரியுதுங்களா? ஐயா, சூப்பரா சொல்லி இருக்காருங்க, ஐயா. 

அடியவர் 7 :-   ஒற்றுமை, 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஒற்றுமை. ஏய், அதுக்குள்ள நீங்களே உங்களுக்குள்ளே நீங்க குத்திராதீங்கடான்றாரு. 

அடியவர் 9  :-   ஒற்றுமை… விட்டு கொடுத்தல்…

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா. 

காகபுசண்ட மாமுனிவர்:-  எதை என்று கூற— அதாவது பின்— பின் வாய் பேசும் இடத்தில் பேசுவதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   வாய் பேசும் இடத்தில்—

அடியவர் 9  :- பேசுவதில்லை.

சுவடி ஓதும் மைந்தன் :-   பேசுவதில்லை. 

காகபுசண்ட மாமுனிவர்:-  இப்பொழுது திறங்கள் பார்ப்போம் வாயை. என்னிடத்தில் கேளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இப்பொழுது வாய் திறந்து என்னிடத்தில் கேளுங்களேன். யாராவது நான் உங்களுக்கு சொல்றதுக்குன்றாரு.

அடியவர் 6  :- குருநாதர் கிட்ட என்ன நம்ம வாக்காட முடியாது.

சுவடி ஓதும் மைந்தன் :-   எப்படி செய்யணும்? ஏதாவது எப்படி செய்யணும்னு ஏதாவது கேளுங்க. ஏதாவது அழகா அவரே சான்ஸ் கொடுக்குறாருங்க, ஐயா. 

காகபுசண்ட மாமுனிவர்:- ஏதோ அறிந்தும் இன்றைய நாளில் அம்பாளுடைய அருளை அகத்தியன் அழகாக பெற்று தந்துவிட்டான். 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஏதோ இன்றைய நாள்ல வந்து அகத்தியர் வந்து அழகாக ஆசிகள் பெற்று தந்துவிட்டார் . 

காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-   திறமைகளை வளர்த்துக் கோங்கப்பான்றாரு.

அடியவர் 7 :- திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என தாங்கள் தான் உரைக்க வேண்டும்.

காகபுசண்ட மாமுனிவர்:- காகங்களை… கூட்டுக….  காகங்களை 

சுவடி ஓதும் மைந்தன் :-   மக்களை கூட்ட சொல்றாருங்க, ஐயா. வந்து—

அடியவர் 3 :- சரிங்க அய்யா .

காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— ஏது என்று புரிய— அதாவது காக்கை அனைத்தும்— ஏது என்று கூற— அதாவது அறிந்தும்— எவை என்று கூற— பின் அதாவது உணவை இடுகின்ற பொழுது ஒரு காக்கை அனைத்து காக்கைகளும் பின் நெற்றியில்— ஏது என்று புரிய— அழைக்கும். இதனால் அக் காகத்திற்கு எக்காகம் அழைத்ததோ அதற்கு புண்ணியம் அதிகமடா. 
அடியவர் :- சிவாய நம 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? எல்லாரும் கா கா கான்னு வாடா வாடான்னு சொல்லிட்டு அந்த காகத்துக்கு புண்ணியம். அதே மாதிரி நீங்க  வந்து மத்தவங்கள வந்து கூப்பிடுறோமா? எவ்வளவு நல்லது வா…நல்லது நடக்குது. சாப்பாடு போடுறோம், இது பண்றோம், அது பண்றோம்னு சொல்றது வந்து… உனக்கு புண்ணியம் என்று சொல்றார்.

காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் அறிந்தும்— ஏவை என்று புரிய— இதனால் மனிதனை முதலில் புண்ணியமாக்குவதே அகத்தியனுடைய வேலை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன்னா அகத்தியர் வந்து என்ன மனிதனை ஒரு புனிதனா ஆக்கணும்ன்றாரு. அகத்தியர் வந்து அதுதான் வேலையா வச்சிருக்காருப்பான்றாரு. 
அடியவர் :- புண்ணியவனாக்க— 
சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியவனாக்குறதுதான் அவருடைய வேலை என்றாரு. 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும்— இதனால் ஏது என்று புரிய— இதனால் பாவத்தில் இருப்போர் எல்லாம் புண்ணியம் ஆக்குவதே அவனுடைய வேலை. அழைத்து அழைத்து.  இதனால்தான் நீங்கள் பாவத்தில் இருந்து உள்ளீர்கள். அதனால்தான் உங்களை அழைத்துள்ளான். நீங்களும் மற்றவருக்கு அழைத்து புண்ணியத்தை பெற்றுத்தாருங்கள். போதும்.

அடியவர் 9 :-  சரிங்க, குருதேவா. சரிங்க, குருநாதா.

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும்— புரிந்தும்— குருதேவா, குருதேவா என்றால் என்ன? 
சுவடி ஓதும் மைந்தன் :-  குருதேவா, குருதேவா என்றால் என்னன்னு கேட்டாருங்க, ஐயா.

அடியவர் 5 :-  குரு என்பதற்கு இருளை நீக்குபவர் என பொருள் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

காகபுசண்ட மாமுனிவர்:- அப்பப்பா, அறிந்தும்— இவையெல்லாம் சொன்னதே சொல்லிக் கொண்டிருக்காதே. புதிதாக சொல்.

அடியவர் 11 :-  குரு என்பவர் ஆசிரியருக்கு சமமானவர், ஐயனே.

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் இவையெல்லாம் எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள். 
சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டாங்கப்பா. புதுசா சொல்லுப்பா.

அடியவர் 11 :-  ஐயா, புத்தகத்தில் எழுதாத செய்தியினை நீங்கள் தானே, ஐயனே, சொல்ல வேண்டும். நாங்கள் எல்லாம் எழுதினதை தான் சொல்ல வேண்டும்.

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும் ஏது என்று அறிய பின் ருணத்தை உணர்ந்தவன்.
சுவடி ஓதும் மைந்தன் :-  ருணத்தை உணர்ந்தவன்.  ருணம் உணர்ந்தவன்— 

அடியவர் 3:- ருணம் உடைய குணங்கள்.  
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, ருணம்னா ருணம்…
சுவடி ஓதும் மைந்தன் :-  ருணம், நோய், கடன்,  ருணத்தை உணர்ந்தவன்….

அடியவர் 7 :- துன்பம், ஐயா, துன்பம். 
அடியவர் 8  :- வலிங்க, கடன்….
அடியவர் 1   :- கடன்
அடியவர் 3    :- கடன்
காகபுசண்ட மாமுனிவர்:-  புரிகின்றதா? கடன் என்று சொல்லிவிட்டீர்கள். இதனால் அறிந்தும்
*****  பின் உங்கள் கடன்களை பல பிறவிகளில் அறிந்தும் எதை எதை விட்டு சென்றிருக்கின்றீர்கள் என்பதெல்லாம் உணர்ந்தவனே குரு. *****

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா, ஐயா?
அடியவர்கள் :- புரியுதுங்க, ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களுடைய விஷயங்கள் எல்லாம் இறைவனுக்குத்தான் தெரியும் என்றார்கள். உங்களோட கடமைகள் உங்களுக்கு என்னன்னா, நீங்க எல்லாம் ஒரு மனிதர்கள். அதெல்லாம் வந்து இந்த தர்மத்துல வந்து நீங்க வந்து தெரிஞ்சுக்கோங்கடா. ஆமா, குரு, புரியுதுங்களா? அது எப்படி இருக்குன்றத பார்த்தீங்களா? குரு அந்த “ரு”  போட்டு எடுத்துட்டு வந்தாரு. அப்புறம் குருக்கு அட்டை கொடுத்தாரு. “ரு” போட்டு ருணம்னு எடுத்துட்டு வந்தாரு. ஐயா, குரு இருக்குது இல்ல? அந்த “ரு”  போட்டு ருணத்தை எடுத்துட்டு வந்தாரு. அப்புறம் குரு எடுத்துட்டு வந்துட்டாரு. ஐயா, உண்மையிலேயே சொல்றேன் பாருங்க, ஐயா, இதெல்லாம் வந்து தெரிஞ்சுக்க முடியாத ஒன்றுங்க, ஐயா. வந்து உண்மையிலேயே இந்த விஷயங்கள் எல்லாம் ஒன்னு, ஐயா. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். ஏதோ அது இறைவன் தான், ஐயா. ஏதோ வந்து அவ்வளவுதாங்க, ஐயா. இனிமேல் நம்ம வந்து அது நல்லது நடக்குறதும், தீமை ஏற்பட்டிருக்கிறதும் நீங்க தான், ஐயா. அதனால தயவு செய்துங்க, ஐயா. நன்றாக பேசி எல்லாம் எல்லாமே ஒரு ஒரு வேலை ஒருத்தர் செஞ்சு செய்யுங்க, ஐயா. இவ்வளவு சொல்றாருன்னா நமக்காக இறங்கி வந்து அது நமக்கு ஒன்னும் தெரியாம மூடநம்பிக்கையா இருக்குன்னு அர்த்தம்.

அடியவர் 4:- குருநாதா, போர் சூழல் எல்லாம் இல்லாம அமைதியா உலகம் இருக்க உங்களுக்கு ஆசீர்வாதம். 
அடியவர்கள் :-  ஐயா? 

அடியவர் 4:-  இந்த போர் இல்லாத சூழல் ஏற்படணும். உலக மக்கள் அமைதியா இருக்கணும்.

காகபுசண்ட மாமுனிவர்:-  எது என்று புரிய— இதனால் அறிந்தும்— அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் நன்மையை செய்து கொள்ளுங்கள். அதாவது உங்களுக்கு அகத்தியன் என்ன சொல்கிறாரோ அதை கேளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதெல்லாம் நாங்க பார்த்துக்குவோம்பா. 

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும்— ஏது என்று கூற— பின் இறைவனை பின் வணங்கினால் எவை என்பதை பின் உடனே போரை நிறுத்தி விடுவானா? ஏற்பாடு செய்வதே இறைவன் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏற்பாடு செய்வதே இறைவன் தான். நீங்க சொன்னா இறைவன் கேட்டுருவாரா?
 
காகபுசண்ட மாமுனிவர்:-   எது என்று கூற. அழுது கூறுங்கள். அனைவரும் சேர்ந்து…. இறைவனும்  மனம் விரும்புவான். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏதோ எல்லாரும் ஒன்னு கூடி காக்கை போல அழுது….. எப்பா பண்ணாதீங்கப்பான்னு எல்லாத்தையும் ஏதோ ஒன்னு பரவாயில்லைன்னு சொல்லிட்டு அவர் விலக்கம் அளிப்பார். அவ்வளவுதான்.
அடியவர் ஒருவர்  :- குருநாதருக்கு வணக்கம். ஒரே ஒரு விஷயம், தாங்களுக்கு நான் நன்றி கூறவில்லை…….  என்ன விஷயம் என்றால் ……………… எனக்கு ஒரு ………அளித்தீர்கள். அப்போது…

காகபுசண்ட மாமுனிவர்:-  அறிந்தும்— என்று புரிய— எவை என்று அறிய பின் இவையெல்லாம் மறந்துவிட்டு அடுத்து என்ன செய்வது மக்களுக்கு என்று சிந்தித்துப் பாரடா. பின் அவை தானாக வந்து தெரியுமாடா அகத்தியன் தெரிவிப்பானடா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மக்களுக்கு நன்மை செய். உன்னால் முடிந்தவரை தானாக உனக்கு தெரிய வரும் என்றார். 

காகபுசண்ட மாமுனிவர்:-   ஆசிகள். அறிந்தும் எதை என்று அறிய. இன்னும் அகத்தியன் சொல்கின்ற பொழுது பின் இன்னும் ஏது என்று கூற சரியாக அறிவாளியாக இருந்து கேள்விகளை கேளுங்கள். நிச்சயம் தன்னில் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியரும் வருவாரு. அப்ப நீங்க அறிவாளியாக  கேள்வி கேளுங்கப்பான்னுட்டார்.

அடியவர்கள் :- சரிங்க, குருதேவா.

காகபுசண்ட மாமுனிவர்:-   அறிந்தும்— ஏது என்று அறிய— எவை என்று புரிய— ஆசிகள், ஆசிகள். மீண்டும் ஒரு நாள் வந்து. அப்பொழுது தவறுகள் செய்திருந்தால் நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய மன்னிப்பே கிடையாது.

அடியவர்கள் :- ஓகே, ஐயா. நன்றிங்க, நன்றிங்க.

அடியவர்கள் :- நமஸ்காரம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: