சித்திரை திருநாள் குருநாதர் உரைத்த பொது வாக்கு பாகம் 4
அப்பனே பின் மனிதனுக்கு தெரியாதப்பா... எவை என்று புரிய புரிய அப்பனே... அதனால்தான் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய அப்பனே பின் புண்ணியங்கள் எதை என்று கூற அதாவது நிச்சயம் அப்பனே சேமிப்பு கிடங்கில் அப்பனே பின் நிச்சயம்.. சேர்த்து வைத்து உள்ளவர்களிடம் மட்டுமே யாங்கள் இறங்கி வந்து வாக்குகள் செப்பி பக்குவங்கள் படுத்தி.. அப்பனே நிச்சயம் உங்கள் பொருளை (புண்ணியத்தை) நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்... என்று அப்பனே பின் எவை என்று அறிய அறிய!!
இப்பொழுது கூறுங்கள் அப்பனே வாழ்க்கை யாரிடம்??? உள்ளது என்பேன் அப்பனே!!
நிச்சயம் உங்களிடத்தில் தான் உள்ளது ஆனாலும் அப்பனே தெரிவதில்லை என்பேன் அப்பனே மக்களுக்கு.
அப்பனே ஏன் எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் எவை என்று அறிய அப்பனே பின்.. நிச்சயம் அவ் புண்ணியம் அப்பனே எடுக்காமல் எதை என்று புரிய.. அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் எதை என்று அறிய அறிய கிரகங்களும்.. கூட அப்பனே எதை என்று அறிய அறிய... நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிந்தும் கூட நிச்சயம் கிணற்றில்.. தள்ளிவிட்டால் அப்பனே... கிரகங்களும் வேலை செய்யாமல் போய்விடும் அப்பனே!!
(சித்தர்களால் ஆட்கொள்ளப்பட்டு கிணற்றில் தள்ளப்பட்டவர்களுக்கு.. கிரகங்கள் வேலை செய்யாது... அதாவது சித்தர்களுடைய அருள் பார்வை கிடைக்கப்பெற்று அவர்களால் நம்முடைய பாவ மூட்டையை கரைப்பதற்கு கிணற்றில் தள்ளப்பட்டு விடும் பொழுது... கர்மாவை கரைத்துக் கொண்டிருக்கும் பொழுது... கிரகங்களால் ஏற்படும் மாற்றங்கள் தோசங்கள் என எதுவும் வேலை செய்யாது)
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நீந்தி கொண்டிருக்கும் பொழுதே...... பல யோசனைகள் தோன்றுமப்பா!!! மனிதனுக்கு அப்பனே!!
அவை!!!... இவை!!... எங்கு செல்லலாம்??? இதற்கு தீர்வு.... இவனிடத்தில் செல்லலாமா??? என்றெல்லாம் அப்பனே..... புரிகின்றதா??? அப்பா!!!
(சித்தர்களால்!!!! நாம் செய்த புண்ணியத்தின் பயனால் அவர்களால் இரட்சிக்கப்படுவதற்கு கிணற்றில் தள்ளி பாவம் மூட்டையை கரைத்து பக்குவப்படுத்துவதற்குள்.... மனிதர்கள் குழப்பம் அடைந்து என்னுடைய பிரச்சனைக்கு எங்கு தீர்வு கிடைக்கும் அங்கு செல்லலாமா இங்கு செல்லலாமா அங்கு ஒரு சாமியார் இருக்கிறார் அங்கு சென்றால் பரிகாரம் கிடைக்கும் என மனிதர்களுடைய சிந்தனை!....
நம்மை மீட்பதற்காக தான் கிணற்றில் தள்ளிவிட்டு பாவ. மூட்டையை கரைக்கின்றார்கள் சித்தர்கள்... நமக்கான தீர்வை சித்தர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒரு தீர்வை நாடி செல்கின்றார்கள் மனிதர்கள்.)
அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே மீண்டும்... அங்கும் இங்கும் சென்று.. அப்பனே மீண்டும் அப்பனே மூட்டையை பெருக்குவானப்பா!!
(பாவ மூட்டையின் எடையை அதிகரிப்பான்)
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம்.... நீந்தாமல் பின் அப்படியே நின்றுவிட்டால்.... பின் என்ன செய்வான்? இறைவன்?????
அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் நீந்தாமல் இருந்தால் அப்பனே... எவை என்று அறிய அறிய நீ உள்ளுக்குள் சென்று விடுவாய்... என்பேன் அப்பனே..
மீண்டும் அப்பனே இறைவன் மேல் நோக்கி பின்.. அப்பனே எடுத்து வருவான் என்பேன் அப்பனே!!
அப்பனே மனித பிறவி சாதாரணமில்லை என்பேன் அப்பனே...
ஆனாலும் தெரிந்து கொள்வதற்கு மனிதனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையப்பா!!
இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே.. தெரியப்படுத்த போகின்றோம் அப்பனே... தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் இவ்வளவுதான் விஷயம்
என்று சாதாரணமாக சென்று கொண்டே இருப்பீர்கள் என்பேன் அப்பனே!!
இறைவனா?? பின் அவந்தன்... பக்கத்தில் இருக்கின்றான் பின் அவனால் என்ன செய்ய முடியும்??? என்று கூறி விடுவீர்கள்... மனிதர்கள்!!!
அப்பனே இறைவனும் அப்பொழுதுதான் சந்தோஷப்படுவான் என்பேன் அப்பனே..
பரவாயில்லை அனைத்தும் தெரிந்து வைத்திருக்கின்றான்.. என்று விட்டுவிடுவான் உன்னை கூட!!!
அப்பனே அவை தெரிந்து கொள்வதற்கே... அப்பனே 60 வயதுகள் அப்பனே ஆகின்றது என்பேன் அப்பனே....
அப்பனே ஆனாலும் அப்பனே ஏன்... அப்பனே பின் எளிதில் அதாவது தெரிந்துகொள்ள அப்பனே பின் முடியாது.
முடியவும் இல்லை என்றால் அப்பனே அதற்கெல்லாம் வரும் வரும் காலத்தில் அப்பனே... அனைத்தும் சொல்லிக் கொண்டு இருந்தாலும் அப்பனே உங்களுக்கு புரியாதப்பா!!!
அப்பனே இதற்கும் அப்பனே பின் தெளிவு பெற்று இருக்கின்றீர்கள் நீங்கள் அதனால் தான்... இதனை யான் உங்களிடத்தில் சொல்கின்றேன்.
(கூடியிருந்த அடியவர்களிடம்)
அப்பனே இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே எவை என்று புரிய அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அழகாகவே அப்பனே அறிந்தும் கூட பின்.. அதாவது அப்பனே மீண்டும் மீண்டும்... பின் சக்கரத்தை இயக்க வேண்டும் என்பேன் அப்பனே...அவ் சக்கரத்தை இயக்கினால் மட்டுமே நிச்சயம் அப்பனே தெளிவுகள் பிறக்கும் என்பேன் அப்பனே.
அப்பனே அவ் சக்கரத்தை இயக்கவில்லை என்றால்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே எதை என்று அறிய அறிய ஏன்???
அப்பனே விஷ்ணு கைகளில்... பின் சக்கரத்தை வைத்துக் கொண்டிருக்கின்றான் என்று யாராவது சிந்தித்துள்ளீர்களா?????
அப்பனே இல்லையப்பா!!!
ஏனென்றால்... அவனிடத்தில் சென்றால் உன்னிடத்திலே சக்தி இருக்கின்றது.. என்று காட்டுகின்றான் அவ்வளவு தான்... அப்பனே!!!!
அப்பனே அதைக் கூட பின் புரிந்து கொள்வதில்லை மனிதன் என்பேன் அப்பனே.
அப்பனே இறைவனை மனிதன் எப்பொழுது புரிந்து கொள்ள போகின்றான்????????
அப்பனே அறிந்தும் இவை எதை என்று புரிய... அப்பனே இதற்கும் எவை என்று.. புரிய இதனால்தான் அப்பனே நிச்சயம் பின்... எவ்வாறெல்லாம் அப்பனே பின் கண்டுபிடிப்புகள்... பின் இறைவன் எங்கே இருக்கின்றான் என்பதெல்லாம் அப்பனே... பின் அப்பனே எதை என்று கூற பல தவங்கள் செய்து பல.. ஆய்வு அப்பனே.. பல வருடங்கள் வாழ்ந்து அப்பனே நிச்சயம்..!!!!!
அப்பனே எளிதாகவே!?!?!?!?!?!? எதை என்று..!!!!!!!!
(இறைவனை காண்பது அவ்வளவு எளிதானதா?)
சாதாரணமில்லையப்பா!!!
அப்பனே பின் எவையென்று அறிய அறிய.. மூலனும் கூட (திருமூலர்) எவை என்று கூற அப்பனே பல வருடங்கள்... எவை என்று கூற இறைவன் எங்கிருக்கின்றான்????? என்று தேடி அலைந்து!!!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல் ராமலிங்கனும் கூட
(வள்ளளார் பெருமான்).. இறைவன் எங்கே இருக்கின்றான்?? என்று தேடி தேடி!!!... அலைந்து தான் அப்பனே கடைசியில்... உண்மை பொருளை அப்பனே!!!!
இவர்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் விஞ்ஞானிகளே என்பேன் அப்பனே!!!
அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய... அப்பனே இதனால் அப்பனே அறிந்தும்.. கூட பின். """""""" ஓம் !!!!! என்றெல்லாம் அப்பனே பின் எதற்கு சொல்லுகின்றோம்??? என்றால் அப்பனே நிச்சயம் பின்... அறிந்தும் எதை என்று புரிய அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட!!
இதனால் அப்பனே... பின் ஓம்காரமாகவே எவை என்று அறிய அறிய... அப்பனே நிச்சயம் ஒளி வடிவமாகவே... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எரிந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே... பின் எவை என்று அறிய அறிய... அனைத்து லோகத்திற்கும் மேலே!!!
(பிரபஞ்சத்தில் ஈரேழு 14 உலகத்திற்கு மேலே....ஓம் என்ற வடிவத்தில் ஒளி சூரியனைப் போல் ஒளிந்து எரிந்து கொண்டே இருக்கின்றது)
அப்பனே பின் அவை அதாவது பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது எவை என்று புரிய பின் எரிகின்ற அப்பனே பின் எரிகின்ற பொழுதே அப்பனே நிச்சயம்.. அதாவது அப்பனே பின்.. அதன் அப்பனே நிச்சயம் பின்... எதை என்று அறிய அறிய ஒளியானது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே.. பின் அறிந்தும் கூட அப்பனே...
""""""" ஓம் """"""""என்ற சத்தத்துடனே... பின் எரியுமப்பா!!!
(ஓஓஓம்ம்ம்....... என்ற ஒலியுடன் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது)
அதனால்தான் நிச்சயம் அப்பனே...அவ் சக்தி பின் உங்களிடமே இருக்க.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே... காந்தகம் எப்படி ஒரு பொருளை ஈர்க்கின்றதோ அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் அவ் சக்தியும் ஈர்க்க... அப்பனே திறமைகள் உங்களிடத்தில் கொடுத்திருக்கின்றான் அப்பா இறைவன்!!
ஆனாலும் அப்பனே மனிதன் அதை நிச்சயம் தன்னில் கூட அதை உபயோகிப்பதே இல்லை என்பேன் அப்பனே.
அப்பனே மந்திரங்கள் ஆவது?ஏது? எதை என்று புரிய!!!
அப்பனே பின் எதற்காக சொல்கின்றோம்.. என்பது தெரியாமல் சொன்னாலும் கூட... அப்பனே பின் எவை என்று புரிய.....
அப்பனே பின் எதற்காக ஓடுகின்றோம்??? அப்பனே எவை என்று அறிய அறிய.. திருத்தலங்களை நோக்கி!!!
அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே முடியாதப்பா!!
அப்பனே அறிந்தும் எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே
அதனால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே... அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கும்... புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே.. நல்விதமாக அப்பனே.
அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதிகம் பின் கஷ்டத்தோடு வாழ்பவனுக்கே... யாங்கள் வருவோம் இறங்கி வந்து உதவிகள் செய்வோம்!!
அப்பனே பின் எவை என்று அறிய அறிய... சித்தனின் பாதை ஒரு பைத்திய பாதை!! என்பேன் அப்பனே!!
சித்திரை திருநாள் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு பாகம் ஐந்தில் தொடரும்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete