​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 17 May 2025

சித்தன் அருள் - 1861 - அன்புடன் அகத்தியர் - மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா!







11/4/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோயில். தெல்லிப்பழை. காங்கேசன் துறை வீதி வடக்கு யாழ்ப்பாணம் ஸ்ரீலங்கா. 


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!

11/4/2025 இந்த நாளில்.. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் நடந்தது.

 அன்றைய தினத்தில் குருநாதர் உத்தரவுப்படி அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா கந்தசாமி ஆலயத்திற்கு சென்று வணங்கி பின் குருநாதர் அங்கு ஜீவநாடியில் வாக்குகள் தந்தார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு 20/7/2024 அன்று இந்த ஆலயத்தில் போகர் மகரிஷி வந்து... இந்த ஆலயத்திலேயே யான் தங்கி இந்த திருத்தலத்தை புதுப்பித்து செய்வேன் அதுவரை யான் இங்கிருந்து எங்கும் செல்லப் போவதில்லை என்றும்

பரிசுத்தமாக இக்கோயில் கும்பாபிஷேகத்தை நிச்சயம் அதிவிரைவிலே பின் நடத்தியும் பின் யாங்கள் சித்தர்கள் அனைவரும் வருவோம் ஞானிகளும் வருவார்கள் மீண்டும் வாக்குகள் செப்புவோம் 

என்று போகர் மகரிஷி இந்த ஆலயத்தை பற்றி கூறிய வாக்கு 

சித்தன் அருள் வலைத்தளத்தில் அன்புடன் அகத்தியர் 1657.ல் வெளிவந்துள்ளது மீண்டும் அனைவரும் படிக்கவும். நன்றி!!





ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே அனைவருக்குமே ஆசிகளப்பா!!

அப்பனே கந்தனும் வள்ளி தெய்வானையோடு வந்து அப்பனே பின் அனைவரின் அப்பனே குறைகளையும் கூட பின் கேட்டறிந்து நிச்சயம் படிப்படியாகவே அப்பனே... நிச்சயம் பின் அனைவருக்கும் அப்பனே பின் அருளாசிகள் இன்னும் பலமாக கொடுத்து அவரவர் பிரச்சினைகளை கூட அப்பனே நிச்சயம் தீர்த்து வைப்பானப்பா.!

அப்பனே பல பல பின் அதாவது பின் அரசர்கள் ஆயினும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அரசி ஆயினும்... அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் இங்கு வந்து!!!!. சாப விமோசனம் அப்பனே!!!

. அப்பனே!!
அவர்கள் பல சாபங்கள் பெற்றிருந்தனர் என்பேன்... அவையெல்லாம் இங்கு வந்து நீக்கிட்டு அப்பனே சென்றனர் அப்பனே!! அவையெல்லாம் நீக்கிட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாகவே அப்பனே பல வழிகளிலும் கூட இறைவனுக்கு பல அரசர்கள் சேவைகள் செய்தனர் என்பேன் அப்பனே!!


(சோழ அரசி மாருதப்புரவீகவல்லி தனது முன் ஜென்மவினையின் விளைவாக குஷ்டநோயும் குதிரை முகம் கொண்டவராக  சாபம் இருந்ததை இங்கு வந்து சாப விமோசனம் பெற்று குதிரைமுகம் நீங்கி மீண்டும் பழைய நிலையை வந்தடைந்தார். அந்த அரசி இந்த ஆலயத்திற்கு பல சேவைகளை செய்துள்ளார். அவருடைய குதிரை முக உருக் கொண்ட சிலையும் சாபம் நீங்கி சோழ இளவரசியாய் அந்த ஆலயத்திற்கு பல சேவைகள் செய்த சிலையும் ஆலயத்தில் உள்ளது. இவை   இந்த ஆலயத்தில் தல வரலாறில்  உள்ளது)

இதனால் அப்பனே இன்னும் கூட அவர்கள் நிச்சயம் தன்னில் கூட உடம்பை எடுக்காமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன் ஆத்மாவோடு அலைந்து திரிந்து கொண்டிருப்பதால்.. அப்பனே அவர்களும் வந்து அப்பனே நல்விதமாகவே அப்பனே. 

ஆனாலும் பின் அவர்களுக்கெல்லாம் முருகன் அப்பனே அப்பனே சாபத்தை எடுத்து... அப்பனே பின் அவர்களும் கூட..

 அதாவது அவர்கள் ஆன்மாவும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட...

முருகா!!!.... பின் எப்பொழுதும் எங்கு நிச்சயம் தன்னில் கூட இவ் ஆன்மா நிச்சயம் தன்னில் கூட உன்னை சரணடைய வேண்டும் என்பதையெல்லாம் நிச்சயம் தன்னில்  கூட!!!
 அப்பனே அவர்களும் கூட அப்பனே வந்து வந்து அப்பனே!!!

இதனால் அப்பனே மீண்டும்.. பின் நல்விதமாக பிறப்புக்கள் அப்பனே பிறந்து இன்னும் அப்பனே... திருத்தலங்கள் எல்லாம் அப்பனே பின் அரசர்கள் அப்பனே காப்பார்களப்பா!! வரும் வரும் காலங்களில் என்பேன் அப்பனே!!

இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே பின் அநியாயம் அக்கிரமங்கள் இன்னும் அப்பனே நிச்சயம் பின் இருக்கின்ற பொழுதும் கூட... இதற்கு தகுந்தார் போல் அப்பனே...

முருகனே!!!... அப்பனே எவை செய்ய வேண்டும்?? எவரை பின் நியமிக்க வேண்டும்??? என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம்.. அப்பனே சமநிலைப்படுத்தி.. அப்பனே நிச்சயம் பின் அனைத்தும் தருவானப்பா. 

அப்பனே நிச்சயம் கலியுகத்தில் ஒரு பக்கம் அழிவுகள் என்ற போதிலும்... அதாவது தர்மம் தலைகீழாக சென்று கொண்டிருக்கும் போதிலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட யாங்கள் வந்து நிச்சயம் அதை எப்படியாவது யார் மூலம்?? எதை என்று நிச்சயம் அப்பனே... கந்தன் அருளோடே!!!!! அப்பனே நிச்சயம் பின் அனைத்தும் பின் கொடுத்து அருள்வோம் என்போம் அப்பனே.

இதனால்... மாயப்பிறவியை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் தெரியாமலும் அப்பனே பின் பிறந்திருப்பதால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் பிறப்பு மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே நன்மைகளாகவே அப்பனே இவ்வுலகத்திற்கு எடுத்து எடுத்து சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே. 

ஆனாலும் அதை தன் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் நீங்களே.. அதாவது மனிதர்களே காரணமாகின்றார்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

மோட்சம் ஆவதும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் கஷ்டங்கள்.. பெற்று பெற்று மீண்டும் உடம்பை பெற்று பெற்று பெற்று அப்பனே பிறப்பதாயினும் அப்பனே மனிதரிடத்திலே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

இதற்காக தகுதியை இறைவன் அழகாக புத்திகளை அப்பனே கொடுத்துத்தான் அனுப்புகின்றான் அப்பனே. 

ஆனாலும் அதை யாரும் சரியாக உபயோகப்படுத்துவதில்லை என்பேன் அப்பனே. 

அதை யார் ஒருவன் சரியாக உபயோகப்படுத்துகின்றானோ !? அவந்தனக்கு வெற்றிகள் பல உண்டு என்பேன் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இங்கேயும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் வசிஷ்டன் அப்பனே தவங்கள் செய்து கொண்டிருந்தான் அப்பனே. அறிந்தும் கூட அப்பனே. 

அதாவது ஈசனை காண வேண்டும் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அறிந்தும் கூட பின்... அதாவது இவ்வுலகத்திற்கு இவ்வாறு செய்தால் நன்மைகள் தரும் என்பதற்கிணங்க இவ்வுலகத்தின் நன்மையை வேண்டி அப்பனே பின் வசிஷ்டன் தவத்தை மேற்கொண்டு இருந்தானப்பா!!!

அப்பனே ஆனாலும் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அப்பனே பின் ஒரு அரசன் இங்கு வந்து எதை என்று அறிய அப்பனே அப்பொழுது இத் திருத்தலத்தை மூடியிட்டு இருந்தார்களப்பா!!!

(ஆலயம் திறக்காமல் அடைக்கப்பட்டு இருந்தது) 

ஆனாலும் அறிந்தும் கூட பின் மறைமுகமாக வேடத்தை அணிந்து நிச்சயம் தன்னில் கூட அவ் அரசனும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அதாவது... வேறொரு நாட்டு அரசன் எதை என்று அறிய... அவந்தனும் இவந்தனை கொல்வதற்காகவே!!

ஆனாலும் இவந்தன் பல வழிகளிலும் கூட முருகனுக்கு சேவைகள் செய்தவன். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் அதாவது அவ் நாட்டை விட்டு நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம்  பின் அதாவது மறுரூபம் (மாறுவேடம்) எடுத்து நிச்சயம் அங்கும் இங்கும் அலைந்தான்! 

இதனால் இங்கு வந்து பின் ஒளிந்து கொள்ளலாம்.. என்பதற்கு நிச்சயம் தன்னில் கூட!! இங்கு வந்து பார்த்தால்.. நிச்சயம் இவ்வாலயம் மூடி கிடந்தது!!

ஆனாலும் பின் அங்கும் இங்கும் ஓடினான்... பின் எங்கு ஒளிய ????எதை என்று அறிய!!!

ஆனாலும் இங்கு வசிஷ்டன் தவம் செய்து கொண்டிருந்தான்.. நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது எதை என்று அறிய அறிய. 

ஆனாலும் நிச்சயம் இவ் முனிவன் அதாவது.. வசிஷ்டன் என்று தெரியவில்லை. 

ஆனாலும் ஓடோடி வந்து நிச்சயம் முனிவரே!!!!! முனிவரே!! என்னை காப்பாற்றுங்கள்!!! நிச்சயம் பின் வேறொரு அரசன் என்னை கொல்வதற்கு பின்!!! நிச்சயம் பின் அறிந்தும் கூட!! பின் பார்த்து நிச்சயம் தன்னில் கூட!!
பல பல பின் சீடர்களையும் (வீரர்களை) கூட அனுப்பி வைத்து இருக்கின்றான்!!
நிச்சயம் தன்னில் கூட!!

ஆனாலும் யான் முருக பக்தனே!!!... ஆனாலும் பின் நாட்டிற்கு நல்லதையே செய்தேன்.. ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது படையெடுத்து நிச்சயம் அதாவது என் மக்களே... அவந்தனுக்கு நிச்சயம் தன்னில் கூட அதாவது  என்னிடத்தில் இருந்த. நிச்சயம் தன்னில் கூட.  பல பல வழிகளிலும் கூட நன்மைகள்!!!!



ஆனால் அவர்கள் எல்லாம் அவந்தனக்கு சொல்லி... என்னிடத்தில் இருந்தவர்களே நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக என்னை காண்பித்து விட்டார்கள் 
( காட்டிக் கொடுத்து விட்டார்கள்)

இதனால் யான் முருக பக்தனே அறிந்தும் கூட!!! பின் உந்தனுக்கு தெரியவில்லை? என்று!!

ஆனாலும் வசிஷ்டனும் கண் விழித்து பார்த்த பொழுது... நிச்சயம் பின் 

மகனே!!! அறிந்தும் எதை என்று புரிய... உந்தனுக்கு நிச்சயம் தன்னில் கூட.. பல வழிகளில் பின் உந்தனுக்கு உதவிகள் செய்கின்றேன் என்று!!

ஆனாலும் அமைதியாக அறிந்தும் பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... ஆனாலும் நிச்சயம் பின் இங்கே உன்னை அதாவது அறிந்தும் கூட இதை என்றும் நிச்சயம் தன்னில் கூட உன்னை மயிலாக மாற்றுகின்றேன். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட அனுதினமும் முருகனுக்கு சேவைகள் செய் !!நிச்சயம் தன்னில் கூட!!

உன்னை யாரும் பின் கண்டுகொள்ளப் போவதில்லை என்று!!

நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாகவே மயிலாகவே நிச்சயம் தன்னில் கூட அவ் அரசனையும் கூட பின் வசிஷ்டன் செய்தான். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அனுதினமும் பின் மயில் வடிவில் வருவது நிச்சயம் முருகனுக்கு சேவை செய்வது!!!

ஆனாலும் நிச்சயம் முருகன் தெரிந்து கொண்டான்... என் அதாவது நம் பக்தன் தான் என்று!!!

அறிந்தும் கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அப்பனே முருகனோடு அறிந்தும் எதை என்று அறிய அறிய இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் அவ் மயிலுக்கு எப்பொழுதும் கூட நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம்...அரசனாக இருந்து .நாம் ஆட்சிகள் புரிந்தோமே!!! நிச்சயம் தன்னில் கூட   அவ்வாறு நற்பலன்களை செய்தோமே ஆனாலும் இப்படி ஆகிவிட்டதே என்றெல்லாம்!!!

ஆனாலும் இவை தன் பின் வசிஷ்டனுக்கு தெரியும்!பின் முருகனுக்கும் தெரியும்!!!

ஆனாலும் அப்படியே மயிலாக இருந்து சேவைகள் செய்து கொண்டிருந்தான்.

ஆனாலும் இங்கு பல அறிந்தும் கூட பின் அவந்தனுடைய (எதிரி அரசனின்) புலவர்களும் வந்து விட்டனர் பின் எங்கு அரசன்??? என்று தேடி தேடி!!!

ஆனாலும் மயில் ரூபத்தில் அரசன் இருப்பது நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பின் இருப்பது யாரும் அறியவில்லை.

ஆனாலும் இவ் அரசனுக்கு இன்னும் பின்.. ஆயுள் பலம் பின் இன்னும் அதிகரித்து அதாவது பின் அறிந்தும் கூட பின் நீண்ட ஆயுளோடு தான் இருந்தான்.

 இதனால்தான் அறிந்தும் எதை என்று புரிய... இதனால் பல புண்ணியங்கள் செய்ததினால் நிச்சயம் தன்னில் கூட...இவந்தனையும் இப்படி மாற்ற முடிந்தது. 


(அரசன் செய்த புண்ணியத்தால் வசிஷ்டர் அரசனை மயிலாக மாற்றி வாழ வைக்க முடிந்தது)


இதனால் நிச்சயம் தன்னில் கூட இன்னும் முருகனுக்கு பின் சேவைகள் செய்து கொண்டே இருந்தான். 

ஆனாலும் அனைத்து புலவர்களும் கூட பின் அங்கும் இங்கும் தேடி தேடி அறிந்தும்.. எதை என்று புரிய பின் சீடர்களும் தேடி தேடி பின் பார்த்தனர்..

இதனால் வீரர்கள் அறிந்தும் வீரர்கள் குவிக்கப்பட்டனர்... எங்கே அவ் அரசன்??? என்று!!

ஆனாலும் அவர்கள் கண்களுக்கு தெரியவே இல்லை!!!

ஆனாலும் அனைவருமே இங்கு அறிந்தும் கூட அமர்ந்து விட்டனர் அப்படியே... நிச்சயம் இங்கேயாவது இருப்போம்!!!... பல வழிகளிலும் அரசனைத் தேடினோம் ஆனாலும்.. எங்கும் நிச்சயம் பின் கிடைக்கவில்லை என்று!!

ஆனாலும் தேடினார்கள் இன்னும் இன்னும்.. ஆனாலும் இங்கேயே அமர்ந்து.. அறிந்தும் கூட இங்கேயே சமைத்து.. உண்டு!!... நிச்சயம் தன்னில் கூட பின் காண வேண்டும் அவனைக் கொல்ல வேண்டும் என்பதற்கே.

ஆனாலும் பின் மறைமுகமாகவே நிச்சயம் பின் மயிலாகவே பின் இருந்திருக்கின்றான்..இவ் அரசன். 

ஆனாலும் அதை யாரும் நிச்சயம் கண்டுணரவில்லை.

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் சில மாதங்கள் நிச்சயம் தன்னில் கூட பின் பார்த்தார்கள். 

ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய அவன் நிச்சயமாகவே இல்லை!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் எவை என்றாலும் கூட ஆனாலும் சென்று விட்டனர்...

ஆனாலும் அவ்வரசனுக்கு நிச்சயம் தன்னில் கூட அவ் அரசன் இறந்து விட்டான் என்று தூது!!

 நிச்சயம் அனைவரும் சேர்ந்து பின் மீண்டும் அதாவது உயிரோடு இருக்கின்றான் என்றால் ???   பின் மீண்டும் மீண்டும் நிச்சயம் இவ் அரசன்... அவந்தனை தேடச் சொல்வான்.

அதனால் அரசன் இறந்து.. அதாவது இறந்து கிடக்கின்றான் என்று... ஆனாலும் மற்றொரு பிணத்தைப் பார்த்து நிச்சயம் இதை அவன் தான் இறந்து விட்டான் என்று நிச்சயம் தன்னில் கூட போயிட்டு அவ் வீரர்கள் சொல்லிவிட்டார்கள். 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் பின் நாடகமே என்று!!

ஆனாலும் இங்கிருந்து அறிந்தும் கூட இவையெல்லாம் நடந்து கொண்டே இருக்கும் பொழுது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வசிஷ்டனும் பின் நிச்சயம் தன்னில் இமயம் நோக்கி புறப்பட்டான். 

ஆனாலும் பின் அறிந்தும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட மயில் தன்னில் கூட அவ் உயிர் அழகாகவே அதாவது அரசன் நிச்சயம் தன்னில் கூட. 

ஆனாலும் நிச்சயம் பின் ஆனாலும் எதை என்று அறிய அறிய அங்கு இமயம் தன்னில் கூட சேர்ந்து விட்டான் நிச்சயம் தன்னில் கூட பின் வசிஷ்டனவனே.


இதனால் பின் அங்கு தவத்தை மேற்கொள்ள வசிஷ்டன் சென்று விட்டான். 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் அதாவது அவ் மயிலானது இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் பின் இவ்வாறு ஆக்கிவிட்டு வசிஷ்டன் சென்று விட்டானே... ஆனாலும் அதற்குள்ளே பின் தியானத்தில் அமர்ந்து விட்டனே!!! என்று!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் தியானம் செய்தாலும் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது நிச்சயம் யாம் சென்று கூப்பிட்டாலும்... நிச்சயம் இன்னும் பின் தவத்தை ஏன் கெடுத்தாய் என்று முனிவன் சாபம் இட்டு விட்டால்!?!?!?!?!?;

 !?!?!... பின் நிச்சயம் முனிவன் என் மீது கோபம்  ஆகிவிட்டால்????? என்றெல்லாம்... அதாவது மயில் வடிவத்தில் இருக்கும் இவ்வரசன் அதாவது பயந்தான்.

நிச்சயம் தன்னில் கூட அதனால் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அதாவது பின் இவந்தனக்கு தெரிந்து விட்டது!! அரசன் இறந்து விட்டான் என்று நிச்சயம் மற்றொரு அரசனிடம் கூறி விட்டார்கள் வீரர்கள்..

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் கூட ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட...

ஆனாலும் பின் நிச்சயம் மயிலோ!!!!!!

முருகா!!!!... நிச்சயம் பல வழிகளிலும் கூட உன்னை சேவித்தேன்!!!
நிச்சயம் தன்னில் கூட. 

பின் இங்கு ஏன் எதற்கு? எவை என்று புரிய என்றெல்லாம்!!!

நிச்சயம் தன்னில் கூட பின் இன்னும் பல ஆலயங்களுக்கு சென்று விடுகின்றேன் அதற்குள்ளே வசிஷ்டன் மீண்டும் இங்கு வந்து விட்டால் நிச்சயம் எந்தனுக்கு பின் என் உருவத்தை கொடுத்து விடு என்று!!

நிச்சயம் தன்னில் கூட முருகனும் கேட்டுக் கொண்டிருந்து... அதற்கேற்ப நிச்சயம் பல பல திருத்தலங்களுக்கும் சென்று நிச்சயம் பல பல சேவைகளும் செய்திட்டு நிச்சயம் அதாவது பின் இன்னும் எங்கெல்லாம் பின் முருகன் ஆலயங்கள் இருக்கின்றதோ!!!!!!

அங்கெல்லாம் பின் சென்றான்! 

ஆனாலும் மீண்டும் இங்கு வந்து விட்டு அறிந்தும் கூட பின் முருகா !!!  நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்றும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் எந்தனுக்கு பின் விடிவு காலமே இல்லையா???????

நிச்சயம் தன்னில் கூட இப்படியே மயிலாகவே அலைகின்றேனே!!!.....

நிச்சயம் பின் அதாவது ஒரு சாபத்தை நிச்சயம் பின் வசிஷ்டனும் தந்து விட்டானே என்று... நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் மிகுந்த மிகுந்த மிகுந்த பின் வேதனைகள்.. நிச்சயம் தன்னில் கூட!!! நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருந்தது... நிச்சயம் அவ் மயிலும் கூட எதை என்று அறிய அறிய.. அதாவது அரசன் அவ் மயிலில் இருப்பது நிச்சயம் தன்னில் கூட பின்.. எதையும் உட்கொள்ளாமல்!!!

ஆனாலும் இது முருகனுக்கு தெரிந்தது..இவ் வேதனை!!!.. எதை என்று புரிய!!

நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட.. எதை என்றும் கூட ஆனாலும் பின் அறிந்தும்!!

முருகன் 

 அரசனே!!!!... இவை தன் நிச்சயம் யான் ஆக்கி விடுவேன் உன்னை அதாவது பின் மனிதனாகவே!!!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வசிஷ்டனிடம்.. செல்!! அறிந்தும் கூட என்றெல்லாம். 

நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அறிந்தும் பின் அதாவது நீ வசிஷ்டனிடம் செல்!!!
அங்கே சென்று பின் அதாவது தியானங்கள் செய்து ஆழ்ந்திருப்பான்!!! நிச்சயம் தன்னில் கூட அங்கே அறிந்து பின் அதாவது அவனுக்கு முன்னே எதிரில் நின்று நிச்சயம் தன்னில் கூட... அதாவது அவன் முன்னே நின்றாலே போதுமானது!!! அவனுக்கு தெரிந்து விடும் என்றெல்லாம். 


நிச்சயம் தன்னில் கூட அதே போல் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது கஷ்டங்கள் பட்டு செல்கின்றேன் என்று. 

ஆனாலும் நிச்சயம் மயிலானது பின் அங்கும் இங்கும் கஷ்டங்கள் பட்டு அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அடைந்தது இமயத்தை. 

வசிஷ்டனும் அழகாகவே.. அறிந்தும் கூட தியானங்கள் அதாவது ஈசனை நோக்கி நிச்சயம் தன்னில் கூட தவத்தை மேற்கொண்டு இருந்தான்.

மீண்டும் பின் மயிலானது அறிந்தும் எதை என்று புரிய பின் அமர்ந்து... அழகாகவே வசிஷ்டன் முன்னே அமர்ந்தது. 

ஆனாலும் வசிஷ்டனும் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது காதுகளில் கேட்டது சப்தம். 

பின் ஆனாலும் வந்திருப்பவன் அரசன் தான் என்று புரிந்து கொண்டான்.. இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட ஆனாலும் இவை தன் புரியாமல் இருந்தாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் நிச்சயம் வசிஷ்டனோ... நிச்சயம் தன்னில் கூட பின் கேட்டவர்களுக்கு வரத்தை தருவதில் கருணை உள்ளவன்.

 இதனால் அதாவது பின் வரம் தருவோமா!? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

வசிஷ்டன் கண்களைத் திறந்து நிச்சயம் பின் மயிலே!!! எதை என்று அறிய அறிய அரசனே!! நீ அரசன் ஆகுக!!!! என்றெல்லாம் !! பின் அதாவது மனித ரூபம் எடுத்து விட்டான்! 

இதனால் நிச்சயம் தன்னில் கூட வசிஷ்டனும் கூறினான்!!!

நிச்சயம் உந்தனுக்காகவே பல வழிகளிலும் கூட இரண்டு முறை அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஈசனை நோக்கி தவம் இருந்தேன்... ஆனாலும் நீயும் அதை கெடுத்து விட்டாய்.. எதை என்று அறிய அறிய!!!

(இலங்கையில் ஒரு முறை 
இமயத்தில் ஒரு முறை 
வசிஷ்டரின் தவத்தை) 

நிச்சயம் தன்னில் கூட பின் இதற்கு தீர்வாக நிச்சயம் தன்னில் கூட பின் முருகனிடம் செல்வோம் வா!!!.... என்று நிச்சயம் தன்னில் கூட அதாவது முருகன் நிச்சயம் தன்னில் கூட பின்.. ஈசனை அழைத்தால் பின் தானாகவே.. ஈசன் வந்து விடுவான்! 

ஆனால் பின் அறிந்தும் அதாவது முருகன் பின் தன்.. தந்தையைக் கூட அறிந்தும் கூட.. அன்போடு அழைத்தாலே வந்துவிடுவான்.. என்பதற்கிணங்க!! நிச்சயம் தன்னில் கூட.. பின் அங்கு முருகனிடம் அழைத்துச் செல்கின்றேன் வா!! என்றெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட. 

அவ் அரசனும் கூட நிச்சயம் இருவரும் இமயத்தில் இருந்து மீண்டும் இங்கு வந்து விட்டார்கள்!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் அதாவது அவ் அரசன் முருகனைப் பார்த்து... பாடி நிச்சயம் பல பாடல்களை பாடி.. முருகன் நிச்சயம் தன்னில் கூட முருகனே!! நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட... இப்படியா ஒரு பிறப்பு!!!

நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட சேவைகள் செய்து பல மக்களுக்கு பின் நன்மைகள் செய்து பல வழிகளிலும் கூட ஞானத்தை பின் அறிந்தும் கூட மக்களுக்கு ஊட்டினேன். பல புண்ணியங்களை செய்தேன். 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பார்த்தால் நிச்சயம் பின் அறிந்தும் கூட.. எவை என்று கூட தோல்வியில் முடிவடைந்து விட்டது என் வாழ்க்கை என்றெல்லாம். 

நிச்சயம் பின் அதாவது பின் நிச்சயம் முருகனும் கூட...

நிச்சயம்  தோல்வியை அடையவில்லை நீ!!!!!

எதை என்று புரிய அரசனே!!!!... நீதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்!!.. ஆனால் உன் சேவைகள் தொடரும்!!....

 இது ஒரு.. பக்குவம்! 

இதனால் நிச்சயம் தன்னில் கூட.. என்றெல்லாம் அறிந்தும் கூட. 

அரசனும் முருகனை பார்த்து!!!

இதனால் பின் அதாவது வசிஷ்டனுக்கு கூட...  உன் தந்தையை காண வேண்டும் தாயையும் காண வேண்டும்.. அவர்களைப் பார்த்து ஒரு கேள்வியை கேட்க வேண்டும் என்றெல்லாம் இருக்கின்றான்!!

நிச்சயம் பின் அதாவது பின் உன்னுடைய பக்தனாக இருக்கின்றேனே!!!... இதற்காகவாவது!!! 

பின் யான் என்ன செய்தேன் பின் தீங்கு????

எதை என்று புரியப் புரிய அனைத்தும் நல்லதற்காகவே செய்தேன்.. பின் நீ சொல்லியவாறு தான் யான் நடந்து கொண்டிருந்தேன் என்றெல்லாம்!!!

நிச்சயம் பின் அழகாகவே நிச்சயம் தன்னில் கூட பின் அதி விரைவிலே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட...

பின் ஈசனும் பின் பார்வதி தேவியும் கூட!!!

இதனால் வசிஷ்டனும் மகிழ்ந்தான்!!

நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் அதாவது ஈசனாரும் நிச்சயம் தன்னில் கூட... பின் வசிஷ்டனே உந்தனுக்கு என்ன வரம் வேண்டும்???? என்று கூற!!!

நிச்சயம் தன்னில் கூட... வசிஷ்டனும்!!!

 உங்களை பார்த்ததே பெரும் பாக்கியம்!!!
நிச்சயம் தன்னில் கூட என் மனதில் பின் உள்ளதை கூட நீங்கள் நன்றாக அறிவீர்கள் இருவரும் கூட.. தாய் தந்தையாக இருந்து நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறாகவே ஆகட்டும் என்று... நிச்சயம் பார்த்து விட்டாய் அல்லவா என்று.. இருவரும் சென்று விட்டார்கள். 

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் இவ்வாறாகவே நிச்சயம் பின் அதாவது அவ் அரசனும் பின் அதாவது மகிழ்ச்சி அறிந்தும் கூட பின்... வசிஷ்டனுக்கு என்ன மகிழ்ச்சியோ அதை பின் யான் ஏற்கின்றேன்... நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சுப நிகழ்ச்சிகள் அதாவது இங்கு பல வழிகளிலும் கூட பின் திருவிழாக்கள் நடைபெறுகின்றதோ அப்பொழுதெல்லாம் உன் தாய் தந்தையை அழைத்து நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் கூட அறிந்தும் எதை என்று புரிய பின் ஆசீர்வாதங்கள் கொடு என்றெல்லாம்!!! நிச்சயம் தன்னில் கூட!!

(மாவிட்டபுரத்தில் கந்தசாமி ஆலயத்தில் நடக்கும் அனைத்து திருவிழாக்களிலும் உற்சவங்களிலும் முருகன் தன் தாய் தந்தை ஆன ஈசனையும் பார்வதி தேவியையும் அழைத்து வந்து அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் கொடுக்க வேண்டும் என்று வரங்கள் கேட்டார் அரசன்)

இன்றளவும் கூட அப்பனே பின் வந்து கொண்டே இருக்கின்றார்கள்... ஈசனும் பார்வதியும் கூட. 

இதனால் அப்பனே நல்விதமாக பின் இன்றும் கூட... மனித ரூபமாக வந்து ஈசனும் பார்வதியும்.. பின் அனைவரையும் ஆசீர்வதித்து சென்று விட்டனர்... பல குறைகளையும் கூட நீக்கி விட்டனர். 

இவ்வாறாகத்தான் அப்பனே தெய்வங்கள் அழகாகவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் நீங்கள் கேட்கலாம் அப்பனே... எதை என்று அறிய அறிய சில கஷ்டங்கள்... ஏன் எவை என்று அறிய அறிய ஏன் யுத்தங்கள்????? என்றெல்லாம்! வருகின்றது என்று!!

ஆனாலும் அப்பனே சரியாகவே நீதி நேர்மையாகவே கடைப்பிடித்து இருந்தால் அப்பனே...

ஆனாலும் அப்பனே இவை கூட நடக்கவில்லை என்றால். தெய்வம் பின் இல்லை என்று சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பான் அப்பனே. 


அதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அநியாயங்கள் அக்கிரமங்கள் நிச்சயம் பின் தலைவிரித்து ஆடுகின்றது இக்கலியுகத்தில்!!!

இதனால்தான் அப்பனே சில அழிவுகள் கூட நிச்சயம் பின்... ஏற்படுத்தினால் தான் மனிதன் திருந்துவான் அப்பனே. 

நிச்சயம் மனிதன் சொல்வது அனைத்தும் நடந்து விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் தான் பின் தெய்வம் என்று சொல்லிவிடுவான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே அவ் அரசனும் கூட எதை என்று அறிய அப்பனே பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் முருகனிடத்தில் வேண்டிக் கொண்டான். 

நிச்சயம் பின்  முருகா!! எதை என்று புரிய புரிய பின் எதை என்று அறிய பல வழிகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் எவ்வகையான சாபங்களும் நிச்சயம் இருந்தாலும்.. உன்னிடத்தில் இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட சேவைகள் செய்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட மனிதருக்கு
 (அங்கு இருக்கும் )
என்ன தேவை??? என்று சிறு சிறு உதவிகளும் செய்து!!! இப்படி செய்து கொண்டே இருந்தால் அவ் சாபங்களும் நிவர்த்தியாகும் நிச்சயம் என்று

பின் சத்தியத்தை எவை என்று... அறிந்தும் கூட இப்போது எனக்கு செய்து கொடு என்று!!!

நிச்சயம் முருகனும் சத்தியம் செய்து கொடுத்தான் நல்விதமாகவே!!!

அறிந்தும் கூட இதே போல தான் நிச்சயம் பல பல மனிதர்களுக்கு கூட பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் கூட பல சாபங்களையும் கூட நிச்சயம் தன்னில் கூட விலக்கிக் கொண்டே இருக்கின்றான் இன்றையளவிலும் கூட முருகன்!!!

இதனால் பின் அறிந்தும் கூட பின்...

""""""" சாப நிவர்த்தி முருகன் !!!...........

என்றே நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் அறிந்தும் பின் அவ் சாபத்தை எப்படி எல்லாம் நிச்சயம் பின் கர்மா பின் கழிந்தோடுகின்ற பொழுதுதான் நிச்சயம் முருகன் இங்கு அழைப்பான். 

இன்னும் விசித்திரமான திருத்தலங்கள் உள்ளது நிச்சயம் தன்னில் கூட...

அவை எல்லாம் நிச்சயம் புண்ணியம் செய்தால் மட்டுமே பின் சென்றிட முடியும்.. நிச்சயம் தன்னில் கூட அழகாகவே. அறிந்தும் எதை என்று அறிய... நிச்சயம் தன்னில் கூட பின் முருகனுக்கு பிடித்தார் போல் நிச்சயம் தன்னில் கூட அழகாகவே பின் மயில் மீது எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட இங்கு வந்து அமர்ந்தான். 

அதாவது யான் சொன்னேனே அரசன்.. அறிந்தும் எதை என்று அறிய அறிய அதாவது பின் முருகன் பின்.. அவ் அரசனே நிச்சயம் தன்னில் கூட இங்கு மயில்.. அறிந்தும் கூட!!!

 பின் சாபம் எவை என்று அறிய இருக்கின்றதோ அதன் மீது சென்று நிச்சயம் தன்னில் கூட பின் பல வழிகளிலும் கூட அறிந்தும் பல உண்மைகளை பல மனிதர்களுக்கு தெளிவடைய செய்தான்!!!

 இன்றளவும் கூட அறிந்தும் எதை என்று அறிய.. நிச்சயம் பிறந்துள்ளான் அவ் அரசனும் கூட!!

பல மனிதர்களுக்கு நிச்சயம் தன்னில்  கூட சேவையாற்றுவான். 
அதாவது முருக பக்தனாக இருந்து!!

இதனால் தான்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில ஆன்மாக்கள் பின் நிச்சயம் மீண்டும் எவை என்று. அறிய பின் இறைவன் நிச்சயம் பின் பிறப்பெடுத்து நிச்சயம் பின் அதாவது பின்... நல்லோர்கள் எதை என்று அறிய அறிய சேவை செய்யவே.. நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறு தான் அப்பனே அவை மட்டுமில்லாமல் சில தோஷங்கள் பின் ராகு கேது எவை என்று அறிய அறிய பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட... ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் கூட தானாகவே இங்கு விலகிப் போகுமப்பா. 

இன்னும் அப்பனே பின் வரிசையாகவே அப்பனே அதாவது அப்பனே.. ஒன்றிலிருந்து ஆரம்பமாகி முடிக்க வேண்டும் அப்பனே.. அது மட்டுமில்லாமல் 

 அதாவது... கதிர் காமத்தில் இருந்து இங்கு...

அப்பனே இங்கிருந்து கதிர்காமம்... மீண்டும் அப்பனே சென்றடைய வேண்டும்!!!

(மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தரிசனம் முடித்து கதிர்காமம் தரிசனம் 
மீண்டும் கதிர்காமத்தில் இருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி தரிசனம்)



இதே போலத்தான் அப்பனே அறுபடை வீடுகளையும்... செந்தூரில் தொடங்கி அப்பனே பின் எவை என்று அறிய அறிய திருத்தணிகையில் முடிக்க வேண்டும். 

இல்லையென்றால் எதை என்று கூற இப்படியும் முடிக்க வேண்டும்.. அப்பனே மாற்றலாம் அப்பனே!!!

 அதாவது திருத்தணிகையில் இருந்து தொடங்கி அப்பனே.. திருச்செந்தூரில் முடித்திடலாம்!!

 அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே!!! ஆனாலும் அங்கு முடித்து அப்பனே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் அதாவது கடல் நீரை அப்பனே இல்லத்தில் வைத்து அப்பனே பின் முருகனாகவே பாவித்து பூஜைகள் செய்யலாம்!!

(திருத்தணி மலையில் இருந்து அறுபடை வீடுகள் பயணம் மேற்கொண்டு திருச்செந்தூரில் முடித்து திருச்செந்தூரில் இருந்து கடல் நீரை கொண்டு வந்து அதை ஒரு கலசம் அல்லது கும்பம் போன்ற குடத்தில் ஊற்றி வைத்து அதை முருகனாக நினைத்து பூஜைகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்)

அதேபோல் பக்தர்கள் திருச்செந்தூரில் இருந்து யாத்திரையை தொடங்கினால் அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு திருத்தணிகை மலைக்கு வந்து கோயிலுக்கு செல்லும் வழியில் கிடைக்கும் அல்லது சுத்தமான பசும் சாண விபூதியை வாங்கி முருகனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு அல்லது சமர்ப்பணம் செய்துவிட்டு அதை கொண்டு ஒரு கலசத்தில் அல்லது ஒரு குடுவையில் பூஜை அறையில் வைத்து முருகனாக பாவித்து பூஜைகள் செய்து வர வேண்டும். 


மேலிருந்து கீழாக அல்லது கீழிருந்து மேலாக தொடங்கலாம் இரண்டும் சமமே என்று குருநாதர் கூறியிருக்கின்றார். 

வட தமிழ்நாட்டில் வசிக்கும் பக்தர்கள் திருத்தணிகை மலையில் இருந்து தொடங்கலாம் தென் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் திருச்செந்தூரில் இருந்து தொடங்கலாம் இது அவரவர் இஷ்டமே)




அதேபோலத்தான் அப்பனே திருத்தணிகையில் நிச்சயம் தன்னில்  முடித்தால்... அங்கு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே.. வழிகளில் கூட விபூதிகள். 

அப்பனே பின் அதாவது விபூதிகளை முருகனுக்கு பின் சமர்ப்பித்து.. அப்பனே பின் அவ் விபூதியை முருகனாகவே பாவித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட வழிபட்டாலே போதுமானதப்பா!!!

சில சில தரித்திரங்கள் நீங்கும் அப்பனே!!

இன்னும் அப்பனே பல பல உண்மைகள் விசித்திரமான உண்மைகளை எல்லாம் நிச்சயம் சித்தர்கள் சொல்வார்களப்பா!!!

அதை ஏற்றுக்கொண்டு நடந்தாலே போதுமானதப்பா.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே கஷ்டங்கள் வராதப்பா அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... இறைவனே இப்புவி தன்னில்..!!!!!

இறைவன். விளையாடிய பூமி.. எதை என்று அறிய அறிய அப்பனே இப் பூமியை அவனே பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே. 



வரும் காலத்தில் குளிர வைப்பான் என்பேன் அப்பனே. 

சில மாற்றங்கள் அப்பனே நிச்சயம் தன்னில்  கூட பின் பல வழிகளிலும் கூட அப்பனே பின் நிச்சயம் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது துன்பங்கள் வரலாம் ஆனாலும் அப்பனே இறைவன்.. அழகாக காத்துக் கொள்வான் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிய பின் ஏன் எதற்கு.. என்று அப்பனே ஒரு பகுதி அழிவு நிச்சயம் தன்னில் கூட 

ஒரு பகுதி நிச்சயம் தன்னில் கூட.. இதுதான் அப்பனே பாதி எவை என்று அறிய அப்பனே அதாவது பாதி எவை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு அப்பனே அழிவுகள் பலம் எதை என்று புரிய ஆனாலும் அப்பனே பின் அவற்றுக்கெல்லாம் தீர்வுகள் கொடுத்து அப்பனே சித்தர்கள் யாங்கள் காத்தருள்வோம்.. ஆசிகள்!! ஆசிகளப்பா!! ஆசிகள்!!


மாவிட்டபுரம் கந்தன்
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள, மாவிட்டபுரம் கந்த சாமித் திருக்கோவில்.;

இலங்கை நாட்டின் புகழ் பெற்ற பழம் பெரும் கந்தன் ஆலயம், நகுல முனிவருக்கு கீரியின் முகம் நீக்கியருளிய தீர்த்தம் இருக்கும் கோவில், சோழர், பாண்டியர் என பல்வேறு மன்னர்களும் போற்றி வழிபட்ட கோவில் என பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்குகிறது இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள, மாவிட்டபுரம் கந்த சாமித் திருக்கோவில். மாவிட்டபுரம் என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. மா + விட்ட + புரம் என பிரித்து பொருள் கொண்டால், மா மரவடிவிலான அசுரனை, சம்ஹாரம் செய்து, அவ்வடிவம் நீங்கிய தலம் என்று பொருள் கொள்ளலாம். மற்றொன்று, மாருதப்புரவீகவல்லியின் மா– குதிரை/பெருநோய், விட்ட– நீங்கிய, புரம்– தலம் என்பதால், மாவிட்டபுரமானதாக, மற்றொரு காரணம் கூறப்படுகிறது.
தலபுராணம் சோழமன்னனின் மகளாகப் பிறந்தவள், மாருதப்புரவீகவல்லி. பேரழகு மிகுந்த இவளை சீராட்டி, பாராட்டி வளர்த்தனர். ஆனால், முற் பிறவியில் அயக்கிரீவ முனிவரின் சாபத்தால் குன்மநோயும், குதிரை முகமும் தோன்றி இளவரசியை வாட்டியது. இக்குறை தீர சோழ, பாண்டிய சேரநாட்டு திருத்தலங்கள் பலவற்றிலும் நீராடி இறைவனை வழிபட்டுவந்தாள். தல யாத்திரையின்போது பேரூர் ஆதீன முதல்வரான சாந்தலிங்க முனிவரைத் தரிசனம் செய்தாள். முனிவர் அவளிடம், இலங்கை நாட்டில் அமைந்துள்ள நகுலேச்சரம் என்ற தலத் தீர்த்தமான கண்டகித் தீர்த்தத்தில் நீராடினால் சாபம் முழுவதும் நீங்கும் என்றார். (அன்னை பார்வதி நீராடி மகிழ, சிவ பெருமானால் உருவாக்கப்பட்ட தீர்த்தமாகும் இது. இந்து மகாக் கடலில் இது அமைந்துள்ளது).
அதன்படியே கதிர்காமம் தீர்த்தம் முடித்து, நகுலேச்சரம் வந்து நகுலமுனிவரைச் சந்தித்தாள். எனக்கு ஏற்பட்ட கீரிமுகம், இத்தலத்து நீராடிய பிறகே நல்லமுகம் கிடைத்தது. அதேபோல்  நளன், அர்ச்சுனன் முதலானோர் நலம் பெற்றதைக் கூறி, இத்தலத்து தீர்த்தத்தில் நீராடி வழிபட நகுலமுனிவர் அறிவுரை கூறினார். அதன்படியே நீராடி, கந்தனை வணங்கி வழிபட்டு வந்த அவளுக்கு, நோய் நீங்கி, இயல்பான அழகு முகம் கிடைத்தது. இச்செய்தி நாடெங்கும் பரவியது. அது முதல் இத்தலம் துரகானன விமோசனபுரி என்று வடமொழியிலும், மாவிட்டபுரம் என தமிழிலும் அழைக்கப்பட்டது.
தன் மகளின் நோய் தீர்த்த இறைவனுக்குக்  கோவில் கட்ட மன்னன் முயற்சி செய்தான். அதன்படியே மிகப் பெரிய ஆலயம் எழுப்பப்பட்டு வந்தது. எம்பெருமானால் திருவுள்ளப்படி தில்லை மூவாயரவருள் ஒருவரான பெரிய மனத்துளார் என்பவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவில் இருந்து கந்தசாமியின் விக்கிரகம், இலங்கை துறைமுகம் வந்து இறங்கியது. இதுவே காங்கேயன் துறைமுகம் என தற்போது அழைக்கப்படு கிறது. 
இத்தலத்தில் மாருதப்புரவீகவல்லி மீது காதல் கொண்ட உக்கிரசிங்கசேனன், இளவரசியின்  தந்தையிடம் அனுமதி பெற்று, கோவில் திருப்பணி முடிந்த பிறகு, மணம் புரிய சம்மதித்தான். அதன்படி, மாவிட்டபுரம் கந்தன் ஆலயம் வெகு நேர்த்தியாக கட்டி முடிக்கப்பட்டு,  குடமுழுக்கு சிறப்பாக நடத்தி, ஆலய நிர்வாகத்தை தீட்சிதரிடம் ஒப்படைத்தனர். ஆலய நிர்வாகத் தீட்சிதர் பரம்பரை, குறைவின்றி நிர்வாகம் செய்து வந்தது.
இளவரசி மாருதப்புரவீகவல்லி, உக்கிரசிங்கசேனனின் பட்டத்தரசியானாள்.


 இதன் பிறகு, போர்ச்சுகீசியர்களுக்கும், பகைமை கொண்ட நாட்டு மக்கள் சிலராலும், உள்நாட்டு யுத்தம் காரணமாகவும் பல்வேறு இன்னல்களை அனுபவித்தது இவ்வாலயம்.


 1996–ல் இவ்வாலயத்தின் புனரமைப்பு பணி மீண்டும் தொடங்கியது. 2011 –லிருந்து மக்கள் வழிபடத் தொடங்கினர். 


ஆலய அமைப்பு ஆலயம் நான்கு திசைகளிலும் வாயில்களைக் கொண்டிருந்தாலும், கிழக்கு, மேற்கு, தெற்கு வாசல்கள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன.    மேற்கு வாசலில் 80 அடி உயர ராஜகோபுரம் கலைநயத்துடன் விண்ணை முட்டி நிற்கின்றது. அருகே வேட்டை மண்டபம் அமைந்துள்ளது. நான்கு மாடவீதிகள் விளங்க, மூன்று பிரகாரங்களுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயம், வில்லு மண்டபம், தட்டி மண்டபம், ராஜகோபுரம், வசந்த மண்டபம், துவார கோபுரம், ஸ்தம்ப மண்டபம், ஸ்நபன  மண்டபம், மகா மண்டபம் அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவையும் முறைப்படி கட்டப்பட்டுள்ளன. இளவரசியின் குதிரைமுகம் மற்றும் அழகு முகம் கொண்ட சிலைகள், சிற்பங்கள் நிறைந்த ஸ்நபன மண்டபத்தில் அமைந்துள்ளது.
ஆலயத்தில், விநாயகர், சந்தானகோபாலர், மகாலட்சுமி, சிதம்பரேஸ்வரி சமேத சிதம்பரேஸ்வரர், தண்டாயுதபாணி, வைரவர், நவக்கிரங் கள், நாகராஜர், சண்முகர், முத்துக்குமார சுவாமி, சுப்பிரமணியர், சந்திரசேகரர், மாயூரர், ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம்  நடுநாயகமாக மாவைக்கந்தன் வள்ளி தெய்வானை சமேத கந்தசாமியாக நின்ற கோலத்தில் அருள் வழங்குகின்றார்.   இவர்களின் பின்புறம் காவலாக, மயில் அழகுற காட்சி தருகின்றது. இந்த வடிவம் சோழர் காலத்தைச் சார்ந்தது என ஆய்வாளர்கள்  கூறுகின்றனர்.


இவ்வாலயத்தில் மாருதப்புரவீகவல்லி வழிபட்ட செம்புவேல், சிவலிங்கம்,  தான் தோன்றி விநாயகர்  மூன்றுமே இன்றும் காட்சி தருகின்றன.  முதல் மரியாதை இவர்களுக்கு செய்த பிறகே பிற தெய்வங்களுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன.விழாக்கள் ஆடி அமாவாசையில் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பு. தைப்பூசம் லட்சார்ச்சனை, ஆனி, ஆடியில் 25 நாட்கள் பிரமோற்சவம், அலங்காரத் திருவிழாவாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இலங்கையின் அனைத்துப் பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. இது தவிர, ஐப்பசி  சுக்ர வாரம், நவராத்திரி, கந்தசஷ்டிவிழா, கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவெம்பாவை என விழாக்கள் குறைவின்றி  நடைபெறுகின்றன.



இவ்வாலயம் மாவை ஆதீனம் வாயிலாக சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கி.பி. 789–ம் ஆண்டில் பெரியமனத்துளார் என்ற தீட்சிதரால் தொடங்கப்பட்ட ஆலயம். இன்று 39–வது ஆதீனமாக ரத்தினசபாபதி குருக்கள் நிர்வாகம் செய்துவருகிறார்.

 ஆறுகால பூஜை நடைபெறும் இவ்வாலயத்தை, காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தொடர்ச்சியாக தரிசனம் செய்யலாம்.

 பூஜைகள் அனைத்தும் குமார தந்திரப்படி மேற்கொள்ளப்படுகிறது. 

தலமரம் 

காஞ்சீபுரத்தில் இருந்து கொண்டு வந்த மாமரமே, தலமரமாகும். தலத் தீர்த்தம் கண்டகித் தீர்த்தம் என்னும் இந்து மகா சமுத்திரம் ஆகும். இது சிவபெருமானால்,   பார்வதியின் குளியலுக்காக உருவாக்கப்பட்ட புண்ணிய தீர்த்தமாகும். இது யுகங்களைக் கடந்து, கலியுகத்திலும் தன் அருளையும், சக்தியையும் தொடர்ந்து  வழங்கி வருகிறது.  இத்தீர்த்தத்தில் நீராடிய பிறகே,  மாருதப்புரவீகவல்லியின் நோயும், குதிரை முகமும்  குணம் பெற்றது.
பரிகாரத் தலம் மாவைக் கந்தன் எவ்விதவேண்டுதலையும் நிறைவேற்றித் தரும் வள்ளலாக விளங்குகின்றான். வேண்டுதலுடன் வருபவர், கண்டகி  தீர்த்தத்தில் நீராடி, நகுலேசுவரரை வழிபட்டு, மாவைக் கந்தனிடம் வந்து மனமுருகி பிரார்த்திக்க வேண்டும். வேண்டுதலை ஓராண்டுக்குள் நிறைவேற்றித் தருவது, மாவைக் கந்தனின் வழக்கம் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அமைந்துள்ளது.


அமைவிடம்

இவ்வாலயம்,  இலங்கை நாட்டின் வட பகுதியான யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,  தெல்லிப்பழை வட்டத்தில், காங்கேசன்  துறைமுகத்தில் இருந்து  தெற்கே 5 கி.மீ., யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 17 கி.மீ., தொலைவில், மாவிட்டபுரம்  திருத்தலம் அமைந்துள்ளது. பலாலி விமான தளம் மேற்கே 2 கி.மீ. தொலைவிலும்,  அமைந்துள்ளது. மாவிட்டபுரத்திற்கு  பேருந்து,  ரெயில் வசதிகள் உள்ளன.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. முருகா நன்றி 🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete