146. எங்களால் எதுவும் செய்ய முடியும், செய்ய முடியாதது என்பதே இல்லை எனக் கூறும் சித்தர்கள், எதுவும் செய்யமாட்டார்கள் என்பதற்கு, தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் அதர்மமே சாட்சி! முடிந்தால் எல்லாம் தெரிந்த இறைவனே அமைதியாக இருக்கிறான், உனக்கேன் கவலை என்கிறீர்களே!
இதை பற்றி உந்தனுக்கே சொல்லுகின்றேன்! இது அப்பா, மக்களே தேர்ந்தெடுத்தது என்பேன். நீங்கள் தான் அப்பனே! தேர்ந்தெடுத்தது என்பேன் அப்பனே. நீங்களே தேர்ந்தெடுத்து, நீங்களே அனுபவிப்பதுதானே முறை! இதற்கு பதில் கூறவும்! இதனால் அப்பா! மக்கள் ஒன்றிணைந்தால் அனைத்தும் சாதிக்க முடியும். ஏன் ஒன்றிணைய முடியவில்லை அப்பா? அப்பப்பா! யார் எக்கெடுதல் எப்படி எப்படி பட்டாலும் போகட்டும் என்று ஒதுங்கி விடுகிறார்கள் அப்பா. அதனால் தான் அப்பா! நீங்கள் செய்த தவறுகளுக்கு, மெதுவாகத்தான் சரி செய்ய முடியுமப்பா!
147. கடவுளின் மனித படைப்பு, ஒழுங்காக இல்லை என்பது நிதர்சனமாக தெரிகிற கலியுகத்தில், கலியுகத்துக்காக படைக்கப்பட்ட மனிதர்களிடம் நேர்மையை எவ்விதம் எதிர்பார்க்க முடியும்?
அப்பப்பா! நேர்மை உள்ளவர்களும் இருக்கிறார்களப்பா. நீ நேர்மை இல்லாதவனாக இருந்தால் அனைவரும் நேர்மை இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள் அப்பா. நீ நேர்மையாக இருந்தால், நேர்மையானவர்கள் உன்னிடத்தில் சேர்வார்களப்பா. அதனால், சேர்க்கை எதுவோ, அதுதான்! புரிந்து கொள்ளப்பா! இதனை எடுத்துரை நீயே கூட!
(இந்த விஷயத்தில் என்னை பொறுத்தவரையிலும், மனிதர்கள் நன்றி இல்லாதவர்கள்!)
அப்பப்பா! இதை, இப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடிந்ததா? இவ்வளவு நாட்கள் ஆகிறதா, இதை புரிந்து கொள்ள?
(இத்தனை நாட்களும், சித்தர் கூறுகின்றார், போகட்டும், போகட்டும் என்றிருந்தேன். இப்பொழுது அந்த உண்மையை உங்களிடம் கூறினேன்! அவ்வளவுதான்!)
இதனால் தான் அப்பா! மனிதனே இறைவனிடம் வந்து கேட்ப்பான். இறைவனும் கொடுப்பான். பின்னர், இறைவனையே, கல்லெடுத்து அடிப்பான். அவன் தான் மனிதன்.
148. திருடர்களுக்கும் இறங்குபவன் தான் அகத்தியன் என்று கூறுகிற சித்தர்கள் தான் அதர்மம் வளரவும் மறைமுகமாக உதவிபுரிகிறார்கள், இல்லையா?
இங்கு தவறாக எடுத்துக் கொண்டுவிட்டீர்கள் அப்பா! அதாவது தெரியாமல் ஒரு தவறு செய்தாலும், திருத்துவதே எங்கள் கடமை. ஆனால், மனிதர்கள், என்னிடத்தில் இறைவன் பேசுகின்றான் என்று (கூறினால்), அவனுக்கு பூசைகள் செய்வது யாரப்பா? நீங்கள் தானப்பா! மூட நம்பிக்கை என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றோமே! அதாவது காசுகள் கொடுத்து விட்டால், இவன் நல்லவன் என்று, அவனுக்கு திருத்தலத்தை கட்டி, காசு வரும் என்றால், திருமணம் நடக்கும் என்றால் அங்கு சென்றுவிடுவது, அதை பரப்புவது, என அனைத்தையும் நீங்கள் தானப்பா செய்கிறீர்கள்! யாங்களா செய்கின்றோம்! குழந்தை தவறுகள் செய்தாலும், ஒரு தாய் அதை திருத்தி செல்வது போல், அனைவரையும் திருத்துவதே எங்கள் கடமையப்பா. புரியாமல் கேட்கின்றானே, அவன் புரியாமலே வாழ்ந்து வருகிறானப்பா! இவனுக்கு அனைத்தும் கொடுத்தாலும், என்ன லாபம்.
149. அகத்திய மாமுனியே திருவண்ணாமலையில் பிடாரி அம்மன் சன்னதி எதிரில் உள்ள மரத்தில் உள்ள கௌளிகள் சித்தர்கள் என்று பக்தர்கள் வழி படுகிறார்கள். இதை பற்றி அப்பா நீங்க வாக்கு உரைக்க வேண்டுகிறேன்?
அப்பப்பா! அனைவரும் வழிபட்டு செல்கின்றார்களா? நீயும் வழிபட்டு செல். இதை பற்றி புரிய, நேரில் வரச்சொல்.
150. வணக்கம் ஐயா, கண் புரை நோய்க்கு மருத்துவம் சொல்லுங்கள் ஐயா.
அப்பப்பா! இதற்குத்தான் முதலில் சிரசாசனம் செய்யச் சொன்னேன். யாராவது செய்கின்றீர்களா அப்பா?
151.எளிய தியானம் பயிற்சி சொல்லுங்கள் ஐயா.
தியானப்பயிற்சி என்பதை, பின் குடும்பத்தில் நுழைந்துவிட்டால் பிரச்சினை உருவாக்கும்! பின் நேரில் வந்து கேட்கச்சொல்.
152. அன்னதானம்,புத்தக தானம்,ஆடை தானம் எப்படி கொடுக்க வேண்டும் ஐயா?
அப்பப்பா! எதையுமே எதிர்பாராமல் கொடுக்க வேண்டும்!
153. இந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியா,இங்கேயும் மதப்பிரச்சாரம் என்ற பெயரில் பெரும்பான்மை இல்லாத நாடாக மாறிவிடுமோ என்று பயமாக இருக்கிறது,அரசியல் சூழ்ச்சியால் இந்துக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்,இதை பற்றி உங்கள் கருத்து ஐயா?
மனிதர்கள், நீங்கள்தான் அப்பா இதற்க்கு காரணம்! அழியப்போகின்றதப்பா, உலகம்!
154. இயற்கை மற்றும் செயற்கை பேரழிவுகளில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள அகத்தியர் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
அப்பப்பா! சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பா! முதலில் நவகிரக தீபத்தை ஏற்றச்சொல்! எத்தனை பேர் ஏற்றினார்கள் என்று விளக்கத்தை அளிக்கச்சொல் அப்பா. நான்கு மாதங்கள் தொடர்ந்து செய்யச்சொல். இன்னும் வாக்குகள் செப்பும் பொழுது தொடர்ந்து செய்தால், பிழைத்துக் கொள்வீர்கள் அப்பா! இல்லை என்றால், ஆட்டம்தான்.
155.ஒரு மனிதனுக்கு கஷ்டம் வருகிறது என்றால் அதற்கு காரணம் இறைவனின் சோதனைகளா அல்லது அவரது கர்மாவா என்பதை எப்படி உணர முடியும்?
அப்பப்பா! நிச்சயம் தன்னில் கூட, கஷ்டங்கள் வந்தால் தான் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
156.மண் வளம், நீர் ஆதாரங்கள், விவசாயம், விவசாயிகள் காப்பாற்றப்பட குருநாதரின் ஆசிகளும், பிரார்த்தனை முறையும், வழிகாட்டுதலும் வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன்
அப்பப்பா அனைத்தும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பா!
157. ஒரு கோவிலில் பூஜை நடத்துவதற்கு அந்த கோவிலின் நிர்வாகம் ஐந்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு மூவாயிரம் ரூபாயை வரவுவைத்து, மீதி இரண்டாயிரத்தை அதிகாரியே எடுத்துக் கொள்கிறார். சித்தனே பூஜை நடத்து என்று சொல்லிவிட்டபடியால் இப்படிப்பட்ட தவறுகளை பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நேர்மையாக பார்த்தால் அப்படிப்பட்ட தவறு நடப்பதற்கு நானும் காரணாமாக இருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், இப்படி தவறை செய்து தான் ஒரு பூசையை நடத்த வேண்டும் என்றால், அந்த பூசையும் களங்கப்படுகிறது. இறைவனே, சித்தனே கூறினாலும், அங்கு பூசையை செய்ய முடியாது என்று மறுப்பது தானே சரி?
அப்பப்பா! நிச்சயம் தன்னில் கூட, நோய்கள். அவனவன் வாழ்க்கையை சென்று பார்த்தால் தெரியுமப்பா! முதலில் தாய் தந்தையரை வணங்குங்கள் என்று கூறுகிறோமப்பா! பின் குருவை மதியுங்கள் என்று கூறுகின்றோமப்பா! பின் இல்லறத்தில், தன கடமையை ஒழுங்காக செய்யுங்கள் என்கிறோமப்பா! இவை எல்லாம் செய்ய தெரியாத மனிதன் பின் அவைக்கு சென்றுவிட்டான். இறைவனுக்கு தெரியுமப்பா! நீங்கள் உங்கள் ஆசைக்குத்தான் செய்கின்றீர்களே தவிர, உண்மையாகவே செய்கின்றீர்களா அப்பா என்ன? நாங்கள் உங்களிடம் ஏதேனும் கேட்டோமா என்ன?
158. நவகிரகங்களை வீட்டில் வைத்து பூசை செய்யலாமா?
செய்யச்சொல். (பின்னர் இதை பற்றி விரிவாக கேட்ட பொழுது, குருநாதர் இவ்வாறு கூறினார். "லோக ஷேமத்துக்காக மட்டும், தன்/குடும்ப தேவைகளை தவிர்த்து, சித்தர்கள் வாக்களித்தால், நவகிரகங்களை வழிபடலாம்.)
159.அகத்தியர் அப்பாவிற்கும் லோபா அம்மாவிற்கும் பணிவான வணக்கங்கள் .குடியிருக்கும் வீட்டில் வைத்து வளர்க்க கூடாத விருட்சங்கள் மற்றும் செடிகள் எவையென்று வழிகாட்ட வேண்டும்? நன்றி ஐயா!
அப்பப்பா! இவ்வுலகத்தில் அனைத்தும், நல்லதிற்கே!
160. ஓதிமலையில் திருப்பணி முடிந்து ஓராண்டாகிவிட்டது. கும்பாபிஷேகம் நடக்காமல் தடைபடுகிறது. குருவின் அருள் வேண்டும்! கும்பாபிஷேக நேரத்தில், அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து அங்கு அன்னதானம் செய்ய அருள வேண்டும்.
அப்பப்பா! இப்பொழுது தான் சொன்னேனப்பா! மனங்கள் எங்கெங்கோ அலைபாய்கிறது! இதற்க்கு விடை இப்பொழுது இல்லை அப்பா! முருகனே நடத்திக் கொள்வான். அவ்வளவுதான்.
161. இறந்தவர்களின், ராசி நட்சத்திரப்படி இரண்டு அல்லது நான்கு மாதம் அடைப்பு என்று கூறுகிறார்களே! இது உண்மையா என்று உரைக்க வேண்டும் அய்யா!
நிச்சயம், உண்மையானது. பின்பற்றி செல்லச்சொல் அப்பா. கடமையை செய்யச்சொல். கடமையை செய்து கொண்டிருந்தால் போதுமானது. இதை பற்றிய ரகசியங்களை பின்னர் உரைப்பேன்.
162. விவசாயம் சார்ந்து, ஆடு, மாடு, கோழி போன்றவைகளை மேய்ச்சல் செய்து வந்தால் கர்மா சேருமா? அந்த கர்மாவை மாற்றுவது எப்படி?
அப்பப்பா! உண்மை சொல்லுகின்றேன்! மனிதனாக பிறப்பெடுத்தாலே, கர்மாதான் அப்பா! அனைத்தும் அனுபவித்துத்தான் ஆகவேண்டுமப்பா!
163. ஓம் அகத்தீசாய நம:.வணக்கம் ஐயா. நமது நாட்டில் தற்போது கோவில்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்து கோயில்கள் மற்றும் இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. குருவருளால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அட முட்டாள்களே! இவ்வாறு நடக்கின்றது என்பதால் தான், நாங்கள் இறங்கி வந்து அடித்துக் கொண்டு இருக்கின்றோம். பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றீர்கள். இனிமேலும் பார்ப்பீர்கள்!
164. 108 முறை கோளறு பதிகம் அல்லது குரு/இறை நாம ஜெபம், இரண்டில் எதை செய்வது?
அனைத்தும், இறைவனுக்காக செய்யுங்கள் அப்பா.
பொதுவாக:- அப்பப்பா! இன்னும் தெளிவுபடுத்தவில்லை. என் பக்தர்கள் ஆயினும், இன்னும் தெளிவு பிறக்கவில்லை. இதனால் அப்பனே, இன்னும் பல விஷயங்கள் செப்புவேன் அப்பா! இதனால், அனைவரையும் ஒருநாள் அழைப்பேன் அப்பா! நீ கேட்டாயே, அவை அனைத்தையும் எவ்வாறு செய்வதென்று கற்றுக்கொடுப்போம். அனைத்து சூழ்நிலையிலும் எங்களை நினைத்துக்கொள்ளுங்கள். யாம் வந்து காக்கின்றேன்/காட்டுகின்றேன்!
தர்மம் தலை கீழாக சென்று கொண்டிருக்கிறதப்பா! நிச்சயம் நாங்கள் இறங்கி வந்து தலை நிமிர்த்தி வைப்போம் அப்பா. எங்கள் பிள்ளை என்றாலும், பின் அடித்துத்தான் நிறுத்துவோம் அப்பா. யாங்கள் தான் இங்கு ஆட்ச்சியாளர்கள் அப்பா. அனைவருக்குமே ஆசிகள் அப்பா! நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இங்கு கூறியுள்ளேன்.
இத்துடன் கேள்வி பதில் தொடர் நிறைவு பெற்றது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete