அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024 ) - பகுதி 2 ( அன்னை ஶ்ரீ மகாலட்சுமி ரகசியங்கள் )
ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ் தொடர் சத்சங்க வாக்கின் முந்தைய பதிவுகள்:-
1. சித்தன் அருள் - 1867 - பகுதி 1)
குருநாதர் :- ( சில தனி வாக்குகள். ஒரு இக்கட்டான விதியை (கண்டத்தை) குருநாதர் இவ் தம்பதியரில் ஒருவருக்கு மாற்றி அமைத்துள்ளார். பல அடியவர்களுக்கு, அவர்கள் அறியாமலேயே நம் கருணைக்கடல் இது போல் பலருக்கும் மாற்றி அமைத்து நல் வாழ்வு அருளுகின்றார்கள். இவ் ரகசியத்தில் உள்ள விபரங்களை இப்போது பார்ப்போம். இது குறித்து , நம் குருநாதர் மேல் அளவு கடந்த பாசம் வைத்த அவ் தம்பதியர் அடியவர்களிடம் குருநாதர் கேட்ட கேள்வி. )
நீயும் சொல்ல வேண்டும். அவந்தனும் சொல்ல வேண்டும். எதற்காக யான் (விதியை) மாற்றி அமைத்தேன் என்று?
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள். தம்பதியர் பல புரிதல் விளக்க உரையாடல் அலைபேசியில். )
அடியவர் 2 :- (அலைபேசியின் மூலமாக உரைத்தது) அவர் (குருநாதர்) குழந்தைகளை அவர்தானே காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். அவர் குழந்தைகள் நாம் என்று சொல்லிவிட்டார் அல்லவா?
குருநாதர் :- அப்படியில்லை அப்பா. பாசங்கள் தான் இங்கு பெரியது. அறிந்தும் கூட அப்படி யான் செய்திருந்தாலும் ( விதியை மாற்றாமல், அப்படியே செயல்பட விட்டு இருந்தாலும்) , எனை நீங்கள் எவை என்று கூற பின் யோசித்துப் பார்த்தேன். ஆனாலும் வெறுப்பதில்லை. பின் வெறுத்திருக்க மாட்டீர்கள்.
——————
( வணக்கம் அடியவர்களே, பல முறை நம் குருநாதர் கூறுவது இவ் பாசம்தான் உயர்ந்தது இவ்வுலகில். அவ் பாசத்தை , கஷ்டகாலங்களிலும் வைக்கும் பொழுது பல அதிசயங்களை நம் குருநாதர் அனைவருக்கும் நடத்த வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவ் பாசம், அன்பு இல்லையென்றால் நீங்களே யூகித்துக்கொள்க. குருநாதர் மேல் உங்கள் பாசத்தை நிரூபிக்க விதியின் வழியே பல சோதனைகள், துன்பங்கள் வரலாம். இது பலரையும் நிலை தடுமாற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையை வெறுத்து, குருநாதரை விட்டு விலகி விடுவார்கள். ஆகையினால் எவ் துன்பங்கள் வந்தாலும் பாசத்தைக் குருநாதர் மேல் பொழிய என்றும் மறவாதீர்கள். கூடிய விரைவில் குருநாதர் அருளால் உங்கள் வாழ்க்கை வசந்தமாகும். சோதனைகளைக் கடந்தால் உங்கள் மகத்தான சாதனை நிச்சயம். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)
—————————
சுவடி ஓதும் மைந்தன் :- ( இவ்விடத்தில் மிக அழகாக அவ் பாசம் மிக்க அடியவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.)
குருநாதர் :- இதனால்தான் யார் ஒருவன் அன்பு, பண்பு, பாசத்தோடு உலா வருகின்றானோ - அவந்தனக்கு எம்முடைய ஆசிகள். தீய வழியில் சென்றாலும் , நிச்சயம் நல்வழிப்படுத்தி நன்றாக்குவேன்.
( தனி வாக்குகள் …….)
(கேள்வி பதில் மீண்டும் ஆரம்பம் ஆனது)
அடியவர் 3 :- அகத்தியர் என்ன சொல்கின்றாரோ அதை நான் கேட்கின்றேன்.
குருநாதர் :- பல உரைகளிலும் இதை உரைத்து விட்டேன். வாக்குகள் வந்து கொண்டே இருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தது ஏதாவது கேளுங்கள் அம்மா.
அடியவர் 3 :- என்ன கேட்பது என்று (மனதில்) தோன்றவில்லை.
குருநாதர் :- அம்மையே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. அதாவது எதை வேண்டுமானாலும் முயற்சிக்கள் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கிடைக்கும். ஒன்றுமே தோன்றவில்லை என்றால், நீ உறங்கித்தான் இருக்க வேண்டும் இல்லத்தில்.
———————
( வணக்கம் அடியவர்களே, இப்போது குருநாதர் இவ் அம்மையின் மூலம் உலகமே பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கும் செல்வம் தொடர்பான, அதிகாலை 3 மணி தொடர்பாக, ஒரு அதி உயர் பரம ரகசியத்தை உலகத்திற்கு எடுத்து உரைக்கும் விதம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)
அடியவர் 3 :- ( வேலை தொடர்பாக சில தனி வேண்டுதல்களைச் சொன்னார்)
குருநாதர் :- ( அங்குள்ள சில அடியவர்களை எழச் சொல்லி உரையாடலை ஆரம்பித்தார்கள். இவ் உரையால் பல தனிப்பட்ட வாக்கின் உள் உள்ள ஒரு மகத்தான பொது வாக்கு.)
அப்பனே எடுத்துரை. அதிகாலையிலே நீராடிவிட்டு தியானத்தில் இருக்கச் சொல் ஒரு மணி நேரம். இதே போலத்தான் அப்பனே உறங்கச் செல்வதற்கு முன்னும் தியானத்தில் இருக்கச்சொல். செய்கின்றாளா என்று பார்ப்போம் அப்பனே.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- அதாவது ஐயன் சொல்லும் அதிகாலை 3:30 மணி. சரியா? குளித்து விட வேண்டும்.
——-
(அதிகாலை மூன்று மணி ரகசியம்.
சித்தன் அருள் - 1713 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு 2
https://siththanarul.blogspot.com/2024/10/1713-2.html
YouTube :-
https://youtu.be/we1bgZHTdFk?si=bXQk9BgrMFXebiQe
சித்தன் அருள் - 1618 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!
https://siththanarul.blogspot.com/2024/06/1618.html
YouTube link:-
https://youtu.be/p3JvpfrU41U?si=-2A5ITPAasw832Z4)
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- மற்றொரு வாக்கில் பெண்கள் சாணியை கைகளால் வாசலில் தெளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள். இதைச் செய்துவிட்டு தியானம் செய்தால் உங்கள் (பிரச்சினைகள்) எல்லாம் சரியாகிவிடும் அம்மா.
( இது குறித்த வாக்கு :- சித்தன் அருள் - 1510 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 22!
https://siththanarul.blogspot.com/2023/11/1510-04092023-22.html
குருநாதர்:- அப்பனே இவை பெண்களுக்கும் இதற்கு மாற்று உண்டு என்பேன் அப்பனே. அதாவது அதிகாலையிலேயே நிச்சயமாய் பின் 4 மணி அளவில் எழுந்து நிச்சயமாய் இல்லத்தைச் சுத்தம் செய்து பின் அதாவது பசும் ( பசுமாடு ) எது என்று அறிய பின் மூலிகையை ( பசுஞ்சாணி) பின் கைகளால் பின் நிலத்தைச் சுத்தம் செய்து வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும். ஆனால் என்றாலும் யாரும் செய்வதில்லை. ஆனால் நிச்சயம் அதைச் செய்யாமல் இருந்தால் கோபங்கள் அதிகரித்துவிடும் பெண்களுக்குச் சொல்லிவிட்டேன்.)
————-
குருநாதர் :- யான் சொல்லிவிட்டேன். இதைக் கேட்டால் நன்று. தானாகவே பணியும் கிடைக்கும். முதலில் செய்ய வேண்டியவை செய்யட்டும். அதனால் எதற்குச் சக்தி? ( அதிகாலையில் 3 மணிக்குத் தினமும் குருநாதர் சொல்லியவாறு செய்தால் அதி சக்திகள் உண்டாகும்.) அவ்வாறு சக்திகள் (உங்களிடம்) இருந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல் எங்களாலும் செய்ய முடியும். நிச்சயம் சில கர்மாக்கள். இதை செய்திட்டே வரச்சொன்னால் நிச்சயம் யானே உதவிடுகின்றேன். ஆனால் செய்யப்போவதில்லை இவள்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- அம்மா ஐயா சொன்னதை strict ஆக ( நீங்கள் ) காலை மாலையில் செய்திட்டே வந்தால், ஐயாவே உதவுகின்றேன் என்று சொல்கின்றார். ( தனி விளக்கங்கள்.)
( அடியவர் தயக்கம் தினமும் அதி அதிகாலையில் எழ)
குருநாதர் :- அறிந்தும் கூட சோம்பேறி. அப்பனே இதுதானப்பா.
( “”””””உலகமே தேடும் , முதல் முறையாக இவ்வுலகிற்கு உரைத்த, இவ்வுலகைக் காக்கும் எம்பெருமான் பகவான் ஶ்ரீ நாராயணரின் இதயத்தில் என்றென்றும் அன்புடன் வாசம் செய்யும் அன்னை ஶ்ரீ மகாலட்சுமி தேவியின் அதி ரகசியங்கள்.”””””)
குருநாதர் :- ஆனாலும் பின் வாழ்வில் எவனொருவன் சோம்பேறியாக இருக்கின்றானோ, எவளொருவள் சோம்பேறியாக இருக்கின்றாளோ , எதை என்றும் புரியப் புரிய அதிகாலையிலே பின் லட்சுமி தேவி வருவாளப்பா. இவ்வாறு பின் அவ்வேளையில் எழுந்து சுறுசுறுப்பாக இருந்தால் நிச்சயம் அனைத்தும் கொடுத்திட்டுச் செல்வாளப்பா!!!!! அப்பனே இங்கு யார் இப்பொழுது எதை தவறு செய்கின்றார்கள் என்று நீயே கணி ( கண்டுபிடித்துச் சொல்) ?
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லுங்கள் ஐயா? அதிகாலையில் லட்சுமி தேவி வருவார்களாம். எல்லோரையும் பார்ப்பார்களாம். அந்த நேரத்தில் யார் ஒருவர் சுறுசுறுப்பாக இருந்து லட்சுமி தேவி கண்டிப்பாக உதவிடுவார்களாம். அப்போ (முன்னேறாமல் இருப்பதற்கு) யாருடைய தவறு? இறைவனுடைய தவறா அல்லது மனிதனுடைய தவறா? என்று கேட்கின்றார், ஐயா.
அடியவர் 4 :- இப்போது நீங்கள் வாசிப்பது அனைத்தும் எங்களுக்குப் புரிகின்றது. ஆனால் (உங்கள் வாக்குகளைப் பின்பற்றிச் செயல்பட ) follow செய்ய முடியாமைக்கு என்ன காரணம்?
( தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
⁃ திருக்குறள் 619 )
குருநாதர் :- அப்பனே உணவை வைத்து விட்டால் அப்பனே பசிக்கின்றது என்று ஓடோடி உண்ணுகின்றீர்கள். ஆனால் (புண்ணியங்கள்) செய்யச் சொன்னால், (தர்மத்தை) சொல்லச் சொன்னால்.. (நீங்கள் செய்வதில்லை) எப்படியப்பா நியாயம்?
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா பதில் சொல்லுங்கள்?
அடியவர் 4 :- முயற்சி செய்கின்றேன் ஐயா.
குருநாதர் :- அப்பனே நீங்கள் ஏதாவது சிறிதளவு முயற்சி செய்தால்தான், முழுவதும் என்னால் கொடுக்க முடியும் அப்பா. அப்பனே நீங்கள் சோம்பேறியாக இருந்தால், அப்பனே யான் எவ்வளவு தட்டி எழுப்பினாலும் பிரயோசனம் இல்லையப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்களைத்தான். பதில் சொல்லுங்கள்?
அடியவர் 4 :- முயற்சி செய்ய வேண்டியதுதான் ஐயா.
குருநாதர் :- அப்பனே இப்பொழுது கேட்டாளே வேலை, தேடி வராதப்பா. முயற்சி செய்ய வேண்டும் பலமாகே அப்பனே (ஒரு) தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பதைக்கூட பின் அதைக் கேட்கின்றார்களா அப்பனே? அதாவது முயன்று படித்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்றெல்லாம் பின் அறிந்தும் கூட முயற்சி செய்கின்றார்கள். பின் வெற்றியும் பெறுகின்றார்கள். அதே போலத்தான் அனைத்தும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( நல் விளக்கங்கள் )
குருநாதர் :- திருத்தலம் திருத்தலமாக ஓடச் சொல்லவில்லை யான். சிறு உபதேசமாகவே சொல்லியிருக்கின்றேன். அப்பனே இதைக் கடைப்பிடிக்கச் சொல் முதலில்.
குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் அடியவர் 1 :- ( வேலை கேட்ட அடியவருக்கு எடுத்துரைத்தார்கள்.) அதாவது ஐயா என்ன சொல்கின்றார் என்றால் இந்த கோயிலுக்குப் போ. அந்த கோயிலுக்குப் போ என்று ஓட விடவில்லை. உங்கள் வீட்டிலிருந்தே நீங்கள் உங்கள் சுய முயற்சிகளால் நீங்கள் செய்யும் விசயங்களைத்தான் சொல்லியிருக்கின்றேன் என்று சொல்கின்றார் அம்மா.
குருநாதர் :- அப்பனே சோம்பேறியாக இருந்து திருத்தலத்திற்குச் சென்றாலும், இறைவனைச் சுற்றி பின் வீழ்ந்து வளைத்தாலும் ஒன்றும் செய்யப் போவதில்லை இறைவன். அதனால் இறைவன் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றான். சரி சென்றிட்டே வா என்று சொல்லிவிடுவான்.
இதனால் மனிதன் குறை கூறுவான் இறைவனை. அதாவது இறைவனை இப்படி வணங்கினேனே, அப்படி வணங்கினேனே, இறைவனுக்கு அனைத்தும் செய்தேனே என்று. ஆனால் யார் மீது தவறு இங்கப்பா? சொல்லப்பா?
அடியவர் 1 :- மனிதன் மீதுதான்.
குருநாதர் :- இன்னும் கேளும். ( கேள்விகளைக் கேட்க நல் வாய்ப்பு நல்கினார்கள் கருணைக்கடல் )
அடியவர் 1 :- அம்மா இது உங்களுக்கு அருமையான வாய்ப்பு.
அடியவர் 3:- நான் எதுக்காக பிறந்திருக்கின்றேன்?
குருநாதர் :- யான் சொல்லியதை நிச்சயம் கடைப்பிடித்தால், அப்பொழுது யான் சொல்கின்றேன். ( தனி வாக்குகள்)
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் April 2024 ஆம் ஆண்டு ஈரோட்டில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…..)
(இங்கு வெளியிடப்படும் பல சத்சங்க வாக்குகளை அடியவர்கள் அனைவருக்கும் இலவசமாக , கட்டணம் ஏதும் இல்லாமல் , அகத்திய மாமுனிவர் குருகுலச் சேவையை ஒரு வகுப்பு எடுத்து, உலகம் முழுவதும் அனைவருக்கும் சொல்லுங்கள். நம் தலைமுறைகளை நன்கு வாழவைக்கும் மகத்தான வாக்குகள். அன்ன சேவை செய்யும் அடியவர்கள் அனைவரும் அன்ன சேவை செய்யும் இடங்களில் முதலில் சிவபுராணம் படித்து, இவ் சத்சங்க வாக்குகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி பின் அன்னமிட அவ் அடியவர்களுக்கு உயர் தர முதல் வகைப் புண்ணியங்கள் உண்டாகும். புண்ணியங்கள் மலரட்டும். தர்மம் செழித்து ஓங்குக. )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDelete