​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 30 June 2024

சித்தன் அருள் - 1640 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 2


இறைவா!!!! அனைத்தும் நீ

அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 2

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-அப்பனே இதையும் நானே எடுத்துரைத்து விட்டேன். 

அடியவர்:- துன்பப்பட்டால்தான் இறைவனை..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இதே போலத்தான் அப்பனே உன் வாயை அமைதியாக வைத்திருந்தால் துன்பமே வந்திருக்காது அப்பனே. ( தனி வாக்கு) 

அடியவர்:- ( சில கேள்விகள் , தனி வாக்கு)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன்னை யான் எழச்சொன்னேன். அவன் எதற்கு எழுந்தான் கூறு? 

அடியவர்:- ( சில உரையாடல்கள், தனி வாக்கு) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே தகுதி ஒன்று வளர்த்துக் கொள்ள வேண்டும் அனைவருமே அப்பனே. தகுதி வளர்த்துக்கொள்வதற்குத் துன்பம் தேவைப்படுகின்றதப்பா. 

அடியவர்:- கண்டிப்பாகத் துன்பம் கொடுக்கவேண்டும் ஐயா. துன்பம் கொடுத்தால்தான் திருந்தமுடியும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( சாவின் விளிம்பிற்குச் சென்ற ஒருவரை நம் குருநாதர் கருணைக் கடல் அகத்திய மாமுனிவர் பிழைக்க வைத்துள்ளார்கள். இது அந்த அடியவருக்கே புதிய தகவல் இங்கு.) 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள்:- ( பல உரையாடல்கள் தனி வாக்கு ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- இதனால் தான் அப்பனே இறைவன் பார்த்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே. யார் யாருக்கு எப்பொழுது பின் கொடுக்க வேண்டும் என்று, அப்பனே அப்பொழுது கொடுப்பான் அப்பனே. அப்பொழுது வாங்கிக்கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியும் உண்டு அப்பனே. தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இருவரும் உட்கார். ( நின்ற இருவரையும் குருநாதர் அமரச் சொன்னார்கள்) 

அப்பனே பின் தொடர்சியாகக்கூறு? ( முன்பு தொடங்கிய உரையாடலை மீண்டும் தொடங்க உத்தரவு இட்டார்கள்) 

அடியவர்:-  ( அங்கு உள்ள அடியவர்களைப் பார்த்து ) ஐயா ( நீங்கள் அனைவரும் ) உங்களை எப்படி நீங்கள் அறிகின்றீர்கள். உணர்கின்றீர்கள். ஒவ்வொருவராக்க் கூறுங்கள்? 

அடியவர் 1  :- அகத்தியர் அருள் இல்லாமல் நாங்கள் இல்லை

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுதான் அப்பனே முதலில் அப்பனே தன்னை உணர வேண்டும் அப்பனே. யாரும் தன்னை உணரவில்லை அப்பா இங்கு இருப்பவர்கள் சொல்லிவிட்டேன் அப்பனே. அப்பொழுது துன்பங்கள் எப்படியப்பா வராமல் போகும்? சொல்லுங்கள் நீங்களே? 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உன்னை நீ அறிந்தால் அப்பனே எப்படி இருப்பாய் அப்பா நீ கூறு? 

அடியவர்:- என்னுடைய அறிவு முழுமை ஆகிவிடும். இறைவனை உணரலாம். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவரை அப்பனே இறைவனை நீ உணரவே இல்லை அப்பனே நீ. அப்படித்தானே பொருள் இது? 

அடியவர்:- ஆத்மாவை இன்னும் முழுமையாகத் தூய்மைப் படுத்துகின்ற முயற்சியில்….

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆத்மா என்றால் என்ன?

அடியவர்:- அணு…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதைப்பற்றி யான் கேட்கவே இல்லை அப்பனே. 

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆன்மா அப்பொழுது என்ன? 

அடியவர்:- உயிர்த்துகள்கள் எல்லாம் சேர்ந்தது..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆத்மா என்பதுதான்டா ஆன்மா. 

அடியவர்:- ( சில உரையாடல்கள் ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஒவ்வொரு நாளும் நீங்கள் அனைவருமே செத்துச் செத்துத்தான் வந்து கொண்டியிருக்கின்றீர்கள் அப்பனே. இதற்கு யாராவது ஒருவன் சரியாகப் பதில் கூற வேண்டும்? 

அடியவர்:- செல்கள் அழிந்து பிறக்கின்றது. 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே சரியான பதில் இது இல்லை. 

அடியவர் 2 :- தினசரி உறக்கம் தான் , நாம் இயங்குவது அறிவினை (தத்துவம்) மூலம் இயங்குகின்றோம். அவ் அறிவினை தினசரி ஆன்மாவைத் தூங்க வைத்து மறுநாள் தேவையான சக்தி கொடுத்து இயங்க வைக்கின்றது….

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் சரியான பதில் அப்பனே ஓரளவுக்குத்தான் என்பேன் அப்பனே. ஆனால் உங்களுக்குத் தெரியாதப்பா.  யானே கூறுகின்றேன் அப்பனே. இப்பொழுது ஆத்மா என்று சொல்லிவிட்டான் அப்பனே. நீங்கள் அனைவருமே பாவ புண்ணியம் செய்தவர்கள்தான் அப்பனே. அப்படி இருந்தால்தான் புண்ணியம் , பாவம் எதை என்றும் புரிந்து புரிந்து உலகத்தில் அப்பனே பிறக்க முடியும் அப்பனே. 

( அடியவர்களே , இப்போது உலகம் அறியாத உங்களின் தூக்கம் குறித்த ரகசியம் ஒன்றை உரைத்து அருளினார்கள் கருணைக் கடல். ) 

நீங்கள் அனைவரும் உறங்கிக்கொண்டுள்ளீர்கள் அல்லவா அப்பனே அப்பொழுது இவ்ஆன்மா அப்பனே இறைவனை நோக்கிச்சென்று யான் இவ்வளவு நல்லது செய்தேன்,  இவ்வளவு தீயது செய்தேன் என்றெல்லாம் அப்பனே அங்கு கைக்கட்டி பதில் கூறி வருமப்பா. இதனால்தான் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள்,  செய்யுங்கள் என்றெல்லாம் ( யாங்கள் தொடர்ந்து கூறுகின்றோம்). 

இவ் ஆன்மா அங்கு செல்லும் பொழுது யான் புண்ணியம் செய்திருக்கின்றேன் என்று அப்பனே இறைவன் எழுதிக்கொள்வானப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே. புரிகின்றதா? 

இவை எல்லாம் யாருக்கும் தெரியாதப்பா. இறைவனை வணங்கினால் அனைத்தும் கிடைத்து விடுமாம் அப்பனே. அனுதினமும் இவ்ஆன்மா இறைவனைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது என்பேன் அப்பனே. அப்பொழுது ஏன் திருத்தலங்களுக்குச் செல்கின்றீர்கள் என்று கூறுங்கள்? 

( இது குறித்து வாக்கு ஓன்றை குருநாதர் முன்பு உரைத்துள்ளார்கள். அந்த வாக்கு :-

சித்தன் அருள் - 1585 - அன்புடன் அகத்தியர் - மீர் கட், கங்கை கரை!

9/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசியில் மீர் காட் கங்கை கரையில்.

அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே பின் செத்து செத்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே.... எவை என்று அறிய அறிய அப்பனே

எவை என்று புரியப் புரிய அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் உறங்கும் பொழுது அப்பனே உன் ஆன்மா எதை என்று அறிய அறிய மேல் லோகத்திற்கு சென்று விடுமப்பா.....

அங்கே வரிசையாக நின்று அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மாவிடம் தீர்ப்புகள் எதை என்று கூட யான் என்ன செய்தேன்? எதை என்று புரிய  புரிய எந்தனுக்கு பின் முக்தியை கொடு!!! கொடு !!!என்றெல்லாம் அவ் ஆன்மா ஏங்கிக் கொண்டிருக்கும் அப்பனே !! அவை இவை என்றெல்லாம் அப்பனே

ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே ஒவ்வொரு நாளும் அப்பனே செத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!

ஆனால் பிரம்மாவிற்கும் அவ் ஆன்மாவிற்கும் சண்டை வரும் பொழுது பின் மூண்டும் எவை என்று அறிய அறிய காலையில் எழுந்திருக்கும் பொழுது அப்பனே பிரம்மா கொடுத்து விடுவானப்பா கட்டளைப்படி.... இவந்தனை முடித்து விடலாம் என்று!!!அப்பனே!!! முடித்து விடுவான் அப்பனே !!! பின் ஆன்மா மீண்டும் மேல் நோக்கி சென்று அப்பனே அலைந்து திரிந்து ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய பின் சாதாரணமாக பிரம்மாவிடம் எடுத்துக் கூறி கூறி அப்பனே பாசக்கயிற்றை பின் எமதர்மன் எவை என்று கூட வீசிக்கொண்டு எதை என்று அறிய அறிய அப்பனே சித்திரகுப்தனிடம் பின் கணக்கை அதிகமாக எதை என்று அறிய அறிய அப்பனே முடித்துவிடு!!! என்றெல்லாம் அப்பனே எவை என்று கூட)

( வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் ) 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( விளக்கம் அளித்தார்கள் ) 

அடியவர் 2:- அறிவை பன்படுத்தனும். இறைவனை நோக்கி செலுத்தவேண்டும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே கலியுகத்தில் பக்தியைப் பொய்யாக்குவதே மனிதனுடைய வேலை என்பேன் அப்பனே. 

அடியவர் 2:- மாயையில் உள்ளார்கள்..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அறிவுகளே இல்லையப்பா. இதனால் கலியுகத்தில் போராட்டங்கள்தான் அப்பனே. அப்பனே ஏற்கனவே கணிக்கப்பட்டதப்பா. அப்பனே கலியுகத்தில் கெட்டது நடக்க வேண்டும் என்று அப்பனே. 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( சில விளக்கங்கள் ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதை எவ்வாறு மாற்றுவது நீ கூறு அப்பனே?

அடியவர் 2:- எல்லோருடைய அறிவும் பண்படணும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனுக்கு அறிவு என்பதே மங்கிவிட்டது என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே இறைவன் துன்பம் கொடுத்துத்தான் நல்வழிப்படுத்துவான் என்பேன் அப்பனே. இது தவறா?

அடியவர் 2:- ( தவறே இல்லை) நிச்சயமாக நிச்சயம். 100க்கு 100 உண்மை. 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே நீங்கள் செய்த தவறுகள் நீங்களே இறைவனிடத்தில் முறையிடுகின்றீர்கள் அப்பனே. மீண்டும் அப்பனே (தவறு செய்துவிட்டு , இறைவனிடத்தில்..) எப்படியப்பா? 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். மனிதன் தவறு செய்து விட்டு தினமும் தூங்கும்போது இறைவனிடத்தில் சென்று அனைத்தும் ( தவறு உள்பட) கூறி விட்டு, பின் மனிதன் ஆலயங்களுக்குச் சென்றால் எப்படி அப்பா நியாயம் ஆகும்? புண்ணியம் செய்து கொண்டே வந்தால் விதியை மாற்றலாம்.) 

அடியவர்கள்:- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே விதியை மாற்றுவதற்கும் தகுதியானவர்கள் யார்?

அடியவர்கள் அனைவரும்:- சித்தர்கள். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இப்பொழுதும் அறிவு மங்கிவிட்டது. நீங்கள்தான் அப்பனே. 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். ஆன்மா தினமும் இரவில் இறைவனிடம் சென்று புண்ணியக் கணக்கைச் சொல்லிவிட்டு வரும். அதற்குத் தகுந்தாற்போல் இறைவன் விதியை மாற்றுவார். மனிதர்கள்  அனுதினமும் செய்யும் நல்லவைகளே விதியை அழகாக மாற்றும். புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் தானாகவே விதியை இறைவன், குருநாதர் மாற்றி அமைப்பார்கள்.) 

அடியவர்கள்:- ( அமைதி )

அடியவர் 3:- நல்லது செய்தால் நல்லது நடக்கும். 

அடியவர் 2:- ஞானத்திற்கு விளக்கம் என்னவென்றால் அறிவின் துணை கொண்டு இறை நிலையை உணர்வதே ஞானம். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அவை உணர்வதே இல்லை அப்பனே. அப்படி உணர்ந்துவிட்டால் மற்றவர் சொல்வதை நீ கேட்கமாட்டாயப்பா. 

அடியவர் 2:- பைத்தியக்காரனாகிவிடுவான்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- 
( தனி வாக்கு) 

அடியவர் 2:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இறைவனை எதன் மூலம் கானலாம்? 

அடியவர்:- அன்பால்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அதைப் பல பல வழிகளிலும் கூட ஞானியர்களும் உரைத்துவிட்டனர். ஆனால் கேட்கின்றீர்களா நீங்கள்? அப்பனே.

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முதலில் தாய் தந்தையோடு பாசத்தில் (பாசத்தோடு) இருங்கள் என்று. ஆனால் இருப்பதே இல்லையப்பனே. இறைவன் மீது அப்பனே பின் நேரடியாக ( பாசத்தோடு ) இருந்துவிட்டால் என்ன பயன் அப்பா? 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். அம்மா, அப்பாவுடன் பாசத்தோடு இல்லாமல், இறைவன் மீது மட்டும் பாசம் வைத்து என்ன பயன் என்று குருநாதர் கேட்கின்றார். ஐயா புரியுதுங்களா?) 

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இல்லத்தில் சண்டைகள், சச்சரவுகள் பின் இருந்து பின் இறைவனிடத்தில் சென்றாலும் இறைவன் ஆசிர்வதிப்பானப்பா. எப்படி ஆசிர்வதிப்பான் என்றால் அப்பனே பின் அப்படியே இரு. அங்கேயே சென்று விடு. வந்தாலும் வீண் என்று. 

அடியவர்:- ( அமைதி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இன்று போய் நாளை வா என்ற கதைதான். 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- (தாய், தந்தையரை மதிக்காமல்) அப்ப நீங்க கேட்டாலும் கொடுக்க மாட்டார். 

அடியவர் 4 :- முன்னோர்களுக்கு ( தர்ப்பணம் ..) மரியாதை கொடுக்க வேண்டும். 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அதைக் கொடுப்பதே இல்லை அப்பனே. ( பெற்றோர்களுக்கு உரிய மரியாதை) அதைக் கொடுத்திருந்தால் அப்பனே (உன்) பிள்ளைக்குக் கஷ்டங்களை வந்திருக்காது என்பேன் அப்பனே. 

அடியவர் 4:-  ( தனி உரையாடல்கள் ) 

சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் :- ஐயா உங்கள் பிள்ளை உங்களுக்கு மரியாதை கொடுத்திருந்தால் உங்கள் பிள்ளைக்குக் கஷ்டங்கள் வந்திருக்காது. 

(அடியவர்களே, இங்கு இந்த வாக்கை பொதுவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். பல இல்லங்களில் தாய், தந்தையரை மதியாததால் அவ்பிள்ளைகள் கஷ்டங்கள் படுகின்றனர். தாய் தந்தையை மதிக்கும் பிள்ளைகள் அனைத்தும் சாதிக்கின்றனர். அனுபவத்தில் உணர இயலும்) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- தந்தையானவனும் , தாயானவனும் அப்பனே எவர், யார்? 

அடியவர் 4:- இறைவன்

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அனைவருமே அதாவது தன் பிள்ளையை விட்டுக்கொடுக்காமல்தான் செப்புவார்கள் அப்பனே. 

அடியவர்:- ( சில தனி கேள்வி ) 

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-  ( விதியை அழகாக எடுத்துரைத்தார்கள் ) 

அடியவர்:-

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- நிச்சயம் தாய், தந்தையரைத் தெய்வமாக நினைத்துக்கொள்பவர்களுக்குக் கஷ்டம் என்பதே வராதப்பா. ( தாய் தந்தையை மதிக்காததனால் பலர் கஷ்டங்கள் படுகின்றனர்). 

அடியவர்:- ( சில தனி உரையாடல்கள், அதன் பதில்கள் ) 

( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….) 

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 27 June 2024

சித்தன் அருள் - 1639 - அன்புடன் அகத்தியர் - மதுரை அருள்வாக்கு - 1


இறைவா!!!! அனைத்தும் நீ - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 1

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- விதியில் வந்தவை அப்பனே பின் பொறுத்திருந்துதான் நீக்க முடியும். அப்பனே எண்ணங்கள் அப்பனே ஆராய்ந்துதான் நீக்க முடியும் என்பேன் அப்பனே. அதனால்தான் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே சில புண்ணியங்கள் செய்தாலும் அப்பனே ஏன் எதற்குக் கஷ்டங்கள் வருகின்றது என்று பார்த்தால் அப்பனே எதை என்று புரிந்தும் கூட அறிந்தும் கூட விதியின் தன்மையே என்பேன் அப்பனே.

விதியின் தன்மையைக் கூட அப்பனே அதாவது இரண்டு இரண்டு என்றே அப்பனே இரவு பகல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இரவை பகலால் வெல்ல முடியுமா அப்பனே ? பகலை பின் இரவால் வெல்ல முடியுமாஅப்பனே? மாறி, மாறி இன்பம் துன்பம்.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இதை அனைவருமே எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பனே. இதை பல வாக்கியத்தில் கூட யான் எடுத்துரைத்துவிட்டேன் அப்பனே. அப்பனே கஷ்டங்கள் இல்லை என்றால் அப்பனே இறைவன் எதை என்று புரியப்புரிய அப்பனே அதி விரைவிலேயே அப்பனே உங்களை மேல் லோகத்திற்கு அழைத்துக்கொள்வான் அப்பனே.

அப்படி இன்பமே வந்தாலும் அப்பனே எதை என்றும் புரியப்புரிய அப்பனே, எவை என்று அறிய அறிய இவன் தனக்கு அனைத்தும் கொடுத்து விட்டோமே என்று எண்ணி அவன் எதை என்று அறிய அறிய இறைவன் பக்கத்தில் அப்பனே பின் அதாவது உயிரை எடுத்துக்கொள்வான் அப்பனே. இப்பொழுது புரிகின்றதா அப்பனே? எவை என்றும் அறிய அறிய அப்பனே துன்பம் வந்து கொண்டே இருந்தால்தான் ஆயுள் நீடிக்கும் என்பேன் அப்பனே. துன்பம் வரவில்லை என்றால், அப்பனே இன்பமே வந்து கொண்டிருந்தால் எதை என்றும் புரியப் புரிய அதிவிரைவில் ஆயுளை முடித்துவிடுவான் இறைவன் அப்பனே . இப்பொழுது என்ற கூறுகின்றீர்கள் ? துன்பம் வர வேண்டுமா? இன்பம் வர வேண்டுமா?

அடியவர்கள்:- ( சற்று நேரம் சலசலப்பு, அமைதி..)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய எனை நம்பிக்கொண்டே வந்தவர்களும் கூட அப்பனே ஏன் துன்பத்தைக் கொடுக்கின்றேன் என்று அப்பனே புரிகின்றதா என்பேன் அப்பனே ????

அத்துன்பத்தை அப்பனே கடந்தால்தான் அப்பனே எவை என்று புரியப்புரிய ஆயுள் நீட்டிக்குமப்பா. அதனால்தான் என் பிள்ளைகளுக்கும் கூட ஆயுள் நீட்டிக்கின்றேன் என்று யான் மௌனத்தைக் காத்துக்கொண்டிருக்கின்றேன் அப்பனே.

விதி அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மதி அப்பனே எதை என்றும்
புரியப்புரிய அதை வைத்து அதாவது அப்பனே விதியை மதியால் வெல்லலாம் என்பேன் அப்பனே. அதை எவை என்று அறிய வெல்வது ( சித்தர்கள் ) எங்களால் மட்டுமே முடியும் என்பேன் அப்பனே. இதனால் ஒரு நொடி போதுமப்பா அப்பனே உங்களை மாற்றுவதற்கு. ஏன் யான் மாற்றவில்லை அப்பனே கூறுங்கள். உடனடியாக அப்பனே இறைவனிடத்தில் செல்ல வேண்டுமா என்று யோசியுங்கள் சிறிது அப்பனே.

இறைவன் செய்வது அப்பனே நல்லதிற்கே. ஆனால் மனிதன் நினைப்பது அப்பனே எவை என்று அறியத் தீயவற்றுக்கே அப்பனே சொல்லி விட்டேன்.

அடியவர்கள்:- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே உணர்ந்து கொள்ளுங்கள். ஏன் அனைவரையும் ஒன்றாக அப்பனே பின் அழைத்து வந்து அப்பனே கூறுகின்றேன். ஆனாலும் சிலர் பின் பயந்து அப்படி எதை என்று கேட்டால் பின் இப்படி என்றெல்லாம்.

ஆனாலும் அப்பனே தெரியாமலேயே கேட்கின்றேன் அப்பனே. மருத்துவனிடம் சென்று பொய் சொல்லலாமா என்று அப்பனே. அதனால் அப்பனே ஒரு குறை அப்பனே மற்றவரிடத்தில் அப்பனே பின் கூறும் பொழுது அக்குறை தீருமப்பா. அப்பனே புண்ணியங்கள் மட்டும் எதை என்று புரியப்புரிய யான் புண்ணியங்கள் செய்தேன் என்று மட்டும் எல்லாம் கூறுகின்றீர்கள் அப்பனே. ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய அதே போலத்தான் அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. பாவத்தைக்கூட நீங்கள் செப்பவில்லை என்றாலும் யான் செப்பினால் அப்பனே, அதாவது சித்தர் காறித்துப்பினால் பாவம் போகும் அப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே.

அடியவர்கள் :- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அதனால்தான் அப்பனே, எவை என்றும் அறிய அறிய அனைவரையும் ஒன்றாக இனைத்தேன் அப்பனே. தனித்தனியாக என்னாலும் கூற முடியும் என்பேன் அப்பனே. ஆனாலும் அவ் தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. அதனால் பாவத்தை முதலில் போக்க வேண்டும் அப்பனே. எவை என்றும் அறிய அறிய போக்காவிடில் எதை என்றும் அறிய அறிய அப்பனே, இதனால்தான் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

இறைவன் எதை என்று புரியப்புரிய அப்பனே யார் ஒருவனுக்கு அப்பனே எதை என்று அறிய அறிய இளவயதில் பல கஷ்டங்கள் எதை என்று கூற எண்ணி எண்ணி இறைவன் கொடுக்கின்றான். அதாவது கஷ்டங்கள் கொடுப்பது எவ்வாறு என்பதற்கு இணங்க அப்பனே அனைத்தும் முன்னேறுவதற்காகவே அப்பனே.

இன்பத்தை ஏன் இறைவன் கொடுக்கின்றான் என்றால் அப்பனே துன்பத்திற்குப் பின் அடியோடு அப்பனே அழைத்துச் செல்லத்தான் என்பேன் அப்பனே.

அதனால் துன்பம் வருவதே சிறப்பு என்பேன் அப்பனே. அப்பனே அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ள வேண்டும். பாவத்தைக் கழிக்க வேண்டும் என்றெல்லாம்
எண்ணுகின்றீர்கள் அப்பனே. அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய இவ்வாறு நீங்கள் நினைத்ததை அடைந்து விட வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே துன்பத்திற்கு அப்பனே ஆளாக வேண்டும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே.

துன்பம் இல்லாமல் எதைக் கொடுத்தாலும் அவை நிச்சயம் அப்பனே தங்காதப்பா சொல்லி விட்டேன் அப்பனே.

அடியவர்கள் :- ( அமைதி )

நாடி அருளாளர் :- எல்லோருக்கும் ஐயா இது. புரிஞ்சிகோங்க ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதை என்று அறிய அறியத் தெரிந்து கொண்டு வாழுங்கள். அப்பனே என் பக்தர் ஆயினும் இன்னும் அப்பனே தெரியாமல் வாழ்ந்து வருகின்றார்கள். அப்பனே பின் அகத்தியன் அதைச் செய்வான் , இதைச் செய்வான் என்று. ஆனால் நிச்சயம் செய்வான் அப்பா. அப்பனே பிறக்கும் பொழுதே அப்பனே அதாவது பாவ மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு.

அப்பனே மனிதன் அதாவது எதை என்று அறிய அறிய நீங்கள் செல்லும் பொழுது நிழல் எப்படித் தொடர்கின்றதோ அதே போலத்தான் பாவமும் பின்னே வருகின்றதப்பா. அப்பப்பா அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய உலகத்தில் எதை என்று கூற தெரியாமலே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே. ஆனாலும் நிச்சயம் சிறிது சிறிதாகவே போக்க முடியும் என்பேன் அப்பனே.

சிறிது சிறிதாக பின் போக்கினால் தான் மட்டுமே , அப்பனே ஒன்றைச் சொல்லுகின்றேன் அப்பனே அனைவருக்குமே அப்பனே.

உடனடியாக எந்தனுக்குக் கொடுக்க வேண்டும். துன்பத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என்று. அப்பனே அப்பொழுது சிறு குழந்தையாகப் பிறக்கின்றாய். உடனடியாக 20 வயது பின் எவை என்று கூற இளைஞனாக மாற்றலாமா?

நீங்கள் கூறுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் இப்பொழுது திரிந்து பின் வலம் வந்து கொண்டிருக்கின்றான்.

அதனால் அப்பனே யோசியுங்கள். யோசியுங்கள் அப்பனே. எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே. இறைவனை எவை என்று அறிய அறிய நீங்கள் தொடுகின்றீர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய, அப்பனே இதனால் துன்பம் வரும் பொழுதுதான் அப்பனே இறைவனை சிறிது சிறிதாக இறைவனை நெருங்குகின்றீர்கள் என்று அர்த்தம். இன்பமே வந்து கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனை பின் வந்து அடைய முடியாதப்பா.

அப்பொழுது இறைவனை நெருங்க வேண்டுமென்றால் ஒரே வழி அப்பனே துன்பம்தானப்பா. அப்பொழுது எதனை ஏற்றுக் கொள்வீர்கள்? அப்பனே நீங்களே கூறுங்கள்.

பல அடியவர்கள் :- துன்பம்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே துன்பமும் எவை என்று அறிய அறிய அப்பனே துன்பத்தால் அப்பனே எவை என்று அறிய அறிய அடிக்க வேண்டும் என்பதைக்கூட ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே. இன்பத்தை அப்பனே துன்பத்தால் அழிக்க வேண்டும். யாராவது பதில் கூறுங்கள் இதற்கு?

நாடி அருளாளர் :- ஐயா யாராவது கூறுங்கள்? உங்களுக்கு ஒரு chance கொடுத்துள்ளார்.

அடியவர்கள்:- ( அமைதி )

நாடி அருளாளர் :- இன்பத்தைத் துன்பத்தால் அழிக்கனுமாம். கூறுங்கள் யாராவது?

அடியவர் :- மன வைராக்கியத்தால்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியப்புரிய நிச்சயம் அப்பனே எவை என்றும் புரியப் புரிய, அப்பனே கல்வி கற்றாயா?

நாடி அருளாளர்:- கல்வி கற்றாயா என்று (குருநாதர்) கேட்கின்றார் ஐயா. படிச்சிட்டு வந்தீங்களா?

அடியவர் :- கற்றுக்கொண்டு உள்ளோம் ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆசிரியன் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கேட்கவேண்டும் என்றால் இப்படித்தான் கேட்பாயா? அப்பனே. முதலிலேயே அப்பனே இன்னும் அப்பனே பக்குவப்படுத்த எவை என்று அறிய அறிய இப்பொழுதே எதை என்று கூறினாய் அப்பனே. மீண்டும் ஒரு வார்த்தை கூறு?

நாடி அருளாளர்:- இப்போ என்ன கூறினீர்களோ, அதை இன்னொரு முறை கேட்கச் சொல்கின்றார் ( நம் குருநாதர் ).

அடியவர்:- ஐயா கற்றுக்கொண்டு உள்ளேன்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் கற்றுக்கொள்ளவே இல்லையப்பா. அப்பனே வயதை ஆகிவிட்டது. எப்படியப்பா அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். அப்பனே பின் அதாவது பள்ளிக்குச் செல்கின்றாய் அப்பனே. ஆசிரியன் ஒரு கேள்வி கேட்கின்றான் உன்னைப்பார்த்து. அப்பனே அப்பொழுது நீ எப்படிச் சொல்வாய்? இப்படி உட்கார்ந்துதான் சொல்வாயா அப்பனே? அப்பனே இப்பொழுதே உந்தனுக்கு அதாவது பின் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பூஜ்ஜியத்திலேயே இருக்கின்றாய் அப்பனே. இப்படிப் பின் பூஜ்ஜியத்தில் இருந்து பின் எவை என்று கூற அழைத்து வருவது எவ்வளவு கஷ்டங்கள் என்று நீயே சிந்தித்துப்பார் மகனே.

நாடி அருளாளர்:- ஐயா புரியுதுங்களா? அப்ப zeroலேயே இருக்கிறீங்களாம். என்னப்பா கற்றுக்கொண்டாய் என்று கேட்கின்றார்.

அடியவர்:- ( எழுந்து நின்றார் )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எதற்கு எழுந்தாய் அப்பனே?

அடியவர்:- ஐயா, விடை சொல்வதற்கு ..

அடியவர் 2:- ஆசிரியர் முன் ..

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதை முதலிலேயே வந்திருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஏன் பின் எவை என்று அறிய அறிய யான் சொல்லிய பிறகு வந்திருக்கின்றது ( எழுந்து நின்றது ) என்று விளக்கம் தர வேண்டும் நீ அனைவருக்குமே.

அடியவர்:- ( எழுந்து நின்றவர் ) கேள்வி கேட்கும்போது அதற்கு உரிய மரியாதையோடு சொல்ல வேண்டும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏன், எதை என்றும் அறிய அறிய அப்பனே இதை நீ நிச்சயம் தெரிவிக்க வேண்டும் அப்பனே எவை என்று அறிய அறிய மரியாதை தேவை இல்லை. எதை என்றும் புரியப் புரிய அப்பனே ஆனாலும் அப்பனே பின் என் பக்தர்கள் ஆயினும் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அப்பனே எவை என்றும் புரியப்புரிய அவை மனதில் இருந்தாலே போதுமானதப்பா. ( அடியரவரின் தனிப்பட்ட கேள்வி பதில் வாக்கு முடிந்தவுடன் பொது வாக்கு ஆரம்பமானது)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- ஆனால் அப்பனே ஒரு பழமொழியும் உண்டு. தன்வினை தன்னைச் சுடும் என்று.

அப்பனே அதனால் அவர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அப்பனே. அனைத்தும் அப்பனே இறைவன் சேமிப்புத்திறன் என்றெல்லாம் அப்பனே உடம்பில் வைத்துள்ளானப்பா. சேகரித்துக்கொள்ளும் அப்பா. ஆனால் கடைசியில் அப்பனே இவை எல்லாம் சொல்லிவிட்டு பின் இறைவனிடத்தில் செல்வானப்பா. பின்பு எவை என்று அறிய அறிய அப்பனே அவ்செய்தி எதை என்றும் அறிய அறிய அப்பனே தொடங்கிவிடுமப்பா. எவை என்று அறிய அப்பொழுது அறிய எப்படியப்பா அனைத்தும் நடக்கும் என்பேன். கூறு நீயே?.

நாடி அருளாளர் விளக்கம்:- எல்லோருக்கும் பொது இது. அப்போ நீங்க சொல்றதெல்லாம் memoryயாகிக்கிட்டு இருக்கு உடம்புக்குள்ள. நீங்க திரும்பி இறைவனிடம் செல்லும் போது நீங்க சொன்ன அனைத்தும் memoryல இருந்து அது இறைவனிடம் ஒலிக்கும். நீங்க பேசிய அனைத்தும் ( உண்மை, பொய், சூது, வஞ்சம், பிறரைக் குற்றம் கூறுதல், பொறாமைப் படுதல் இன்னும்) இறைவன் கேட்பார். அப்போ எப்படி இறைவன் நல்லது செய்வார் என்று கேட்கின்றார்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதனால்தான் அப்பனே மனிதனுக்கு இன்னும் வாழக்கற்றுத் தந்தாலும் தன் போன போக்கில்தான் அப்பனே செல்கின்றான். அதனால்தான் அப்பனே ஈசனே ஒரு அடியை அடித்து அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மற்றொன்றும் சொல்கின்றேன் அப்பனே. பின் இறைவன் அனைவரையும் படைத்தான் அப்பனே. அதாவது எதை என்றும் புரியப்புரிய அப்பனே நல் முறையாகவே அப்பனே. ஆனால் இறைவன் படைத்தாற்போல் மனிதன் இல்லை என்பேன் அப்பனே. மீண்டும் பின் எவை என்று கூற துன்பத்தைக் கொடுத்து மீண்டும் அவன்தன் இடத்திற்கு அழைத்துக்கொள்கின்றான் அப்பனே. இது நியாயமா எவை என்று கூற நீங்கள்தான் எவை என்று அறிய அறிய அப்பனே. இதுதான் உண்மையப்பா. அதனால் பின் கஷ்டங்களைக் கொடுப்பது இறைவன் தானப்பா. எப்படியப்பா இறைவன் ( உங்கள் பாவங்களை ) நீக்க முடியும் அப்பனே சொல்லி? அதனால் அடி கொடுத்துத்தான் நீக்குவான் என்பேன் அப்பனே. இதற்குப் பரிகாரங்களாம்? எப்படியப்பா நீங்கும் அப்பா? கூறுங்கள் நீங்களே?

அனைத்து அடியவர்கள் :- ( அமைதி )

நாடி அருளாளர்:- இறைவன் தான் கஷ்டம் வைக்கின்றார். திரும்பி இறைவனிடமே போனால் எப்படியப்பா என்று சொல்கின்றார்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :-

((அடியவர்களே, நமது பல கடினமான கண்டம் போன்ற கொடுமையாக விதியில் உள்ள பல கஷ்டங்களை எல்லாம், நம் அன்பு குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் நாம் அறியாமலேயே நீக்கி நாம் நல்வாழ்வு வாழ அருளுகின்றார்கள். அது தொடர்பான முக்கிய வாக்கு))

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே சனீஸ்வரன் எதை என்று அறிய அறிய அப்பனே உன் கால் கைகளை இதன்முன்னே உடைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தான் அப்பனே. ஆனாலும் யான் தடுத்து நிறுத்தினேன். ஆனாலும் அப்பனே அவை எல்லாம் பின் மனிதனுக்கு தெரியாதப்பா. ஒன்றுமே நடக்க வில்லை என்றுதான் புரியுமப்பா.

நாடி அருளாளர்:- (விளக்கம்)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அனைவருக்கும் ஒரு புது விசயத்தைக் கூறுகின்றேன் அப்பனே.

((( வணக்கம் அடியவர்களே, தர்ம தேவன் காலம், ஏழரைச் சனி தேவன் காலம் என்றால் என்ன?: நமது இராசிக்கு முந்தைய இராசியில் சனி தேவன் வந்து அமரும்போது ஏழரைச் சனி தேவன் பிடிக்கிறர் என்று சொல்கிறோம். முந்தைய இராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம இராசியில் இரண்டரை வருடம், நமது இராசிக்கு அடுத்த இராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனி தேவன் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரைச் சனி தேவன் காலம் என்கிறோம்.)))

(((((( சித்தன் -அருள் -1590 - அன்புடன் அகத்தியர் - கிரிஜாத்மஜ் கணபதி மந்திர் லேன்யாத்ரி அஷ்ட விநாயகர் குகை கோயில்! இடைக்காடர் சித்தர் வாக்கு :- தர்மத்தை தர்ம தேவதையை பற்றி ஏன் பின் கேவலமாக பேசுகின்றீர்கள்?????

தர்ம தேவதை!!! சனியவன். தர்ம தேவன்!!!! சனியவன்.  பின் நீங்கள் சொல்லி அனுப்பலாமே !!!! { ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க வருகின்ற மக்களுக்கு } தர்ம தேவதை சனியவன் ஆனால் இவ் தர்ம தேவனுக்கு இவை எல்லாம் பிடிக்கும் என்று யார் ஒருவன் சொல்கின்றானோ அவன் தான் ஜோதிடன். ஆனால் சொல்வதில்லையே!!!! )))))

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏழரை தன்னில் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நீ எதைச்செய்கின்றாயோ அதைச் சனீஸ்வரன் பார்த்துக்கொண்டே இருப்பான் அப்பனே. முதுமையில் கொடுத்து விடுவான் அனைத்தும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய கர்மத்துக்கு தகுந்தாற்போல. அதனால்தான் அப்பனே ஏழரை எவை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் தீய வழிகளில் அழைத்துச்செல்லும் என்பேன் அப்பனே. ஆனாலும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொண்டு இறைவன் பாதையில் மனம் செல்லுமேயானால் அப்பனே பின் வாழ்க்கையில் கடைப்பகுதியில் அப்பனே உயர்ந்து வாழலாம் என்பேன் அப்பனே. இதை அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே ஏழரை தன்னில் கூட.

நாடி அருளாளர் :- ( தனிப்பட்ட விளக்கம் )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- (ஏழரைச் சனிதேவன் தொடர்பான வாக்கு தொடர்கின்றது….)

அப்பனே இதே போலத்தான் பல முறையும் இல்லத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும், எதை என்று அறிய அறிய ஒரு ஒருவர் பிரிய வேண்டும் என்றெல்லாம் அப்பனே சனீஸ்வரன் என்னிடத்தில் கேட்பான் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய சனீஸ்வரனிடத்தில் சொல்லிவிட்டேன். எதைச் செய்தாலும் என்னிடத்தில் கேட்டுச் செய் என்று. ஆனாலும் எவை என்று புரியப்புரிய “ மாமுனிவரே!!!” அதாவது எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று அறிய அறிய “ஈசன் இட்ட கட்டளைப்படிதான் யான் செய்வேன்” என்று. ஆனாலும் பின் அமைதியாக பின் “சனீஸ்வரனே, பின் உந்தனுக்கும் பல உதவிகள் செய்துள்ளேன். மறந்து விட்டாயா?” என்று.

பின் “அகத்தியனே எதை என்றும் புரியப் புரிய இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் அப்பனே எவை என்றும் புரியப்புரிய அதாவது இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் என்னைக்கூடத் தலை குனிய வைக்கின்றாய் என்று”

( தனிப்பட்ட வாக்கு )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே ஏன் உனை நிற்க வைத்தேன்?

அடியவர் :- (குருநாதர்) கேள்வி கேட்டார்கள். உட்கார்ந்து பதில் சொன்னதால்…

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அப்படி இல்லையப்பா. கற்றுக்கொள்வதற்கு என்று நீதான் முதலில் கூறினாய் என்பேன் அப்பனே. இப்பொழுது என்ன சொல்லப்போகின்றாய் அதற்குப் பதில்?

அடியவர் :- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே புரிகின்றதா? அப்பனே எவை என்று அறிய அறிய யாரையும் எவை என்று அறிய அறிய திருத்த முடியாதப்பா. அவரவர் திருந்திக்கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.

நாடி அருளாளர்:- நம்ம சொல்லி யாரையும் திருத்த எல்லாம் முடியாது. அவரவர் திருந்தனும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே , ஒன்றைச் சொல்கின்றேன். அனைவருமே நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள் அப்பனே. பாவம் சுமந்து வந்திருக்கின்றான் அப்பனே. இறைவனே பாவத்தை அதாவது அனுபவிக்க பின் இவ்வுலகத்தில் மனிதனைப் பிறக்க வைத்தான் அப்பனே. அப்பொழுது எதை என்றும் புரியப் புரிய அவ்வளவு சுலபமாகப் பாவம் கரைந்துவிடுமா என்ன? அவ்வளவு சுலபமாக இறைவன் தன் தலத்திற்கு அழைத்து வருவானா என்ன? கூறுங்கள் நீங்களே?

நாடி அருளாளர்:- ஐயா புரியுதுங்களா?

அடியவர் :- புரிகின்றது ஐயா

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அறிந்தும் கூட பின் புரிந்தும் கூட அப்பனே இதனால்தான் அப்பனே மனிதன் மூட நம்பிக்கையில் ஒளிந்துள்ளான். அதை எடுத்துக் கொள்ளவே அப்பனே யாங்கள் வருவோம். அப்பனே வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே. இன்னும் சித்தர்கள் அப்பனே எவை என்று கூற அப்பனே வாக்குகள் செப்பும் பொழுது தெளிவு பெறுவீர்கள் அப்பனே. எவை என்று அறிய அறிய வெற்றியும் பெறுவீர்கள் என்பேன் அப்பனே. முதலில் உன்னை அறியுங்கள் அப்பனே.

அப்பனே உன்னை நீ எவ்வாறு அறிந்தாய் கூறு?

அடியவர் :- எனக்குள்ளே இருந்து எல்லாமாய் வழி நடத்துவது அகத்தியப் பெருமான் அருளே என்று நான் உணர்கின்றேன் ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே, எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப்புரிய பின் அனைவரையும் கேள் இதனை அப்பனே?

நாடி அருளாளர் :- இது சரிதானா என்று அனைவரையும் கேட்கச் சொல்கின்றார்.

( மேலும் சில விளக்கங்கள் அளித்த பின்னர்)

அடியவர் :- நீங்கள் எல்லாம் உங்களை எப்படி உணர்கின்றீர்கள் என்று ( குருநாதர் ) ஐயா கேட்கின்றார்கள். ஒவ்வொருவராகச் சொல்லுங்கள்.

அடியவர் 1:- ( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் ) ஐயாவை வணங்குகின்றோம்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இறைவனைக்கூட வணங்குகின்றீர்கள். என்ன பிரயோஜனம்?

அடியவர் :- ( அமைதி )

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இறைவனை எதற்கு வணங்குகின்றீர்கள்? அனைவருமே கூற வேண்டும்.

அடியவர் 2 :- ஐயா பெரும்பாலும் எல்லாரும் சுயநலமாக வணங்குகின்றார்கள்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே புரிகின்றதா அப்பனே. சுயநலமாக வணங்கினால் அப்பனே பின் அள்ளிக் கொடுப்பானப்பா துன்பத்தை.

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு இங்கு )

அடியவர் 4 :- பொதுவாக ( வணங்கவேண்டும் )

நாடி அருளாளர் :- அப்போ, சுயநலமாக வணங்கக்கூடாது. அள்ளிக் கொடுத்து விடுவாராம் துன்பத்தை, எடுத்துவிட்டு போப்பா என்று.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே அள்ளிக் கொடுப்பது பின் நன்மையா? தீமையா?

அடியவர் 5:- நன்மை

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே எவை என்று அறிய அறிய நன்மை என்று சொன்னாயே முன் நின்று எழுந்து நில்.

நாடி அருளாளர் :- நன்மை என்று எதற்குச் சொன்னீர்கள் என்று சொல்லுங்கள் ஐயா

அடியவர் 5:- ( எழுந்து நின்றார் ) துன்பத்தைக் கொடுத்தால்தான் இறைவனை உணர முடியும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே, யான் சொல்லிக் கொடுத்ததைத்தான் நீ சொல்லிக் கொண்டிருக்கின்றாய் அப்பனே.

நாடி அருளாளர்:- அகத்தியர் சொன்னதைத்தான் நீங்க சொல்றீங்க. வேற ஏதாவது சொல்லுங்க ஐயா.

அடியவர் 4:- ஐயா துன்பம் பட்டால்தான் ஐயா பக்குவம் வரும்.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் :- அப்பனே இதையும் நானே எடுத்துரைத்து விட்டேன்.

(வணக்கம் அடியவர்களே, பகுதி 1 - இவ்வாக்கு 1000 நொடிகள். தட்டச்சு நேரம் ஏறத்தாழ ஒரு வாரம் என்று அறியத்தருகின்றோம்.)

( March 2024 மதுரையில் நடந்த சத்சங்கம் தொடரும்….)

ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 26 June 2024

சித்தன் அருள் - 1638 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


சூரத் சத்சங்கம் பாகம் 13 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

சூரத் சத்சங்கத்தில் காலபைரவர் சன்னதியில் வைத்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கும் பொழுது 

புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஆசிர்வாதம் வேண்டும் என்று ஒரு அடியவர் குருநாதரிடம் வாக்குகள் கேட்ட பொழுது குருநாதர் தனிப்பட்ட முறையில் அவருடைய புண்ணியத்தின் பலனுக்கு ஏற்ப எப்படி வழிபாடு செய்ய வேண்டும் எப்படி எல்லாம் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்று தனிநபர் வாக்குகளாக அவருக்கு கூறிவிட்டு பின்பு

குருநாதர் இதை அனைவருக்கும் தெரிவித்து விடு அப்பனே !!!!  என்று குருநாதர் உத்தரவு இட்டார்!!!!

புதிதாக யார் தொழில் தொடங்கினாலும் வேலைக்கான முயற்சிகள் இருந்தாலும் இதனை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும் என வாக்குகள் தந்திருக்கின்றார் !!!

என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வரும் வாக்கியங்களில் காணலாம் !!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அறிந்தும் கூட அனைவருக்குமே தெரிவித்துக் கொள்!!!

எதை என்று கூட வேலை வேண்டுமானால் தொழில் செய்ய வேண்டும் என்றால்!!!!

முதலில் யான் நிச்சயம் இயலாதவர்களுக்கு யான் செய்கின்றேன் நிச்சயம் இறைவா!!!! எந்தனுக்கு கொடு என்று இறைவனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் அப்பனே!!!!

இதே போலத்தான் தொழில் வேண்டுமென்றாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இறைவா நீ படைத்தாய். 

எந்தனுக்கு பின் நிச்சயம் தொழில்!!!! பின் நிச்சயம் தந்தால் அதில் பாதி இயலாதவர்களுக்கு என்று இறைவனிடத்தில் சொன்னால் தான் இறைவன் அனைத்தும் கொடுப்பான். 

இல்லையென்றால் பின் கிடைத்தாலும் பின் அவை நிச்சயம் பின் அனைத்தும் பின் பணத்தை அதில் முதலீடு செய்வித்து இறைவனே திரும்பவும் வாங்கிக் கொள்வான். 

இதை அனைவருக்கும் தெரிவித்து விடு என்று வாக்குகள் கூறினார். 

(அதாவது புதிதாக யார் வேலைக்காக முயற்சிகள் செய்தாலும் தொழில் செய்தாலும் அதில் வரும் லாபத்தில் இயலாதவர்களுக்கு கொடுப்பேன் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டு தொழிலை செய்தால் இறைவனும் கொடுப்பான்!!!! தொழிலும் வளர்ச்சி பெறும்!!!  தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும் !!!!

கிடைக்கும் லாபத்தில் தான தர்மங்கள் செய்யவில்லையென்றால் திரும்பவும் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய வைத்து இறைவனே மீண்டும் பிடுங்கிக் கொள்வான்!!!! என்று வாக்குகள் கூறினார். 

இந்த வாக்கு எல்லோருக்கும் பொதுவான வாக்கு வேலை தேடுபவர்களும் சரி புதிதாக தொழில் செய்பவர்களும் சரி செய்து கொண்டிருப்பவர்களும் சரி குருநாதர் வாக்குகளை கடைப்பிடித்து கிடைக்கும் லாபத்தில் இயலாதவர்களுக்கு தான தர்மம் செய்வோம் என்று இறைவனிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு செய்தால் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்)

மற்றொரு அடியவரும் இது போன்று சொந்த பணிகள் செய்து கொண்டு சேவைகளும் செய்து வருகின்றார் அவர் பழைய செய்தித்தாள்கள் நூல்கள் இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக திரட்டி அவரது கிராமத்தில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு புத்தகங்கள் ஏற்பாடு செய்து தர விரும்பி குருநாதரிடம் இதற்கு அவர்களும் உதவ வேண்டும் இந்த புண்ணிய சேவை நல்லபடியாக செய்வதற்கு ஊராரின் ஒத்துழைப்பும் வேண்டும் அவர்களுடைய உதவிகளும் வேண்டும் அதற்கு ஆசீர்வாதம் தாருங்கள் என்று கேட்டதற்கு 

இதனால் நிச்சயம் பின் தொடர்ந்து சேவையை செய்து கொண்டு வந்தால் அப்பனே உங்கள் விதியில் ஏற்படும் பெரிய பெரிய கண்டங்கள் கூட அப்பனே மாறிவிடுமப்பா!!!

எம்முடைய ஆசிகள் இருக்கும் பொழுது கவலைகளை விடு அப்பனே!!! எதை என்று அறிய அறிய இன்னும் கொடுக்கின்றேன் அப்பனே நலன்களாக ஆசிகள் அப்பனே !!!

பின் நீ சேவைகளை செய்து வா தொடர்ந்து!!!!

எதை என்று அறிய அறிய """"""புண்ணியம் இருக்கின்றவன்!!!! செய்வான் !!!!

புண்ணியம் இல்லாதவன் பின் எவை என்று அறிய அறிய!!!!.......

அதனால் நிச்சயம் அதற்கும் புண்ணியம் வேண்டும்!!!

(அதாவது புண்ணியங்கள் செய்வதற்கே புண்ணியம் வேண்டும் !! புண்ணியம் இருந்தால் தான் புண்ணிய செயல்கள் தான தர்மங்கள் உதவிகள் செய்ய முடியும். 

அப்படி புண்ணியம் இல்லாவிட்டால் எந்த ஒரு தான தர்மம் செயலையும் செய்ய சேவைகளையும் செய்ய முடியாது)

அடுத்து ஒரு அடியவர் தனது அலுவலகத்தில் நிறைய மனிதர்கள் வருகின்றார்கள் பொறாமை எண்ணம் கொண்டவர்கள் தீய மனப்பான்மை கொண்டவர்கள் என வருகின்றார்கள் அவர்களுடைய எதிர்மறை தாக்குதல் எதுவும் அலுவலகத்தில் பாதிக்க கூடாது!!

நேர்மறையான எண்ணங்கள் தெய்வ சக்திகள் சுபிட்சம் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு குருநாதர்

அப்பனே கருங்காலி கட்டையை வை போதுமானது!!!

(அடியவர்கள் கவனிக்கவும் குருநாதர் கருங்காலி கட்டையை வீட்டில் அலுவலகத்தில் வைக்கலாம்.

ஆண்கள் பெண்கள் என அனைவரும் அணிந்து கொள்ளலாம்!!! வீடுகளில் அலுவலகங்களில் அப்படியே வைத்துக் கொள்ளலாம்!!!

அல்லது தாமரை !! வேல்!!! இறை மூர்த்தங்கள்!!! என ஏதேனும் ஒரு வடிவத்தில் கருங்காலி மரகட்டையில் செய்து எப்படி வேண்டுமானாலும் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே குருநாதர் வாக்குகளில் தனிநபர் வாக்குகளிலும் கூறியிருக்கின்றார்) 

இன்னும் கூட சொல்லப்போனால் அப்பனே ஒரு கண்ணாடி குவளையில் நீரை நிரப்பி எலுமிச்சை இட்டு பச்சை கற்பூரம் அதனுடன் அப்பனே  உப்பும் இட்டு  வைத்து வாருங்கள் அப்பனே இதை செய்து கொண்டே வாருங்கள் உங்களுக்கே புரியும்!!!

குருவே இப்படி வீட்டிலும் செய்யலாமா???

அப்பனே பின் செய் என்று சொல்லிவிட்டால் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே!!!

அப்பனே எதை என்று அறிய அறிய இதை தொடர்ந்து செய் உந்தனுக்கே புரியும் அப்பனே!!!

(ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பச்சை கற்பூரம்  உப்பு கலந்து ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் மிதக்க வைத்து விட வேண்டும் இதை தம் தன் அலுவலகத்தில் மேஜையில் வீட்டு வரவேற்பு அறையில் பூஜை அறையில் வைத்து விட்டால் எதிர்மறை சக்திகள் எதுவும் தாக்காது நேர்மறை தெய்வ சக்திகள் அதிகரிக்கும்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 24 June 2024

சித்தன் அருள் - 1637 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல்ல உபதேசங்கள் தொகுப்பு பாகம் 11

அறிந்தும் கூட மனிதர்கள் எடுக்கும் முடிவு அனைத்தும் தவறானது அறிந்தும் கூட பின் யாங்கள் எடுக்கும் முடிவே நிச்சயம் பின் அதாவது யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். 

இறைவன் எடுக்கும் முடிவு அதாவது பின் சரியான முடிவு. 

மனிதன் எடுக்கும் முடிவு தவறானது. 

அதனால் இறைவனிடத்தில் விட்டு விடுங்கள்.

என்னிடத்தில் வந்து விட்டால் அதாவது தந்தையிடம் வந்து விட்டால் நிச்சயம் பின் தன் பிள்ளைகளை அழகாக பார்த்துக் கொள்வான் தந்தை. 

இவ்வளவுதான் விஷயம். 

தந்தையை வைத்துக்கொண்டு எதை என்று அறிய அறிய தந்தையிடம் அது இது என்று கேட்கலாமா???

தந்தைக்குத் தெரியாதா???

அறிந்தும் எதை என்று அறிய இன்னும்  வாக்குகளாக அனைவருக்குமே சொல்கின்றேன் இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட நீங்கள் எங்கு பிறந்தீர்கள் எப்படி எல்லாம் என்னை வந்து அடைந்தீர்கள் நீங்கள் எதை என்றும் அறிய அறிய எங்கெல்லாம் மோட்சம் காணப் போகின்றீர்கள் எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய அனைவருக்குமே ஒவ்வொன்றாக சொல்கின்றேன் 

ஏனென்றால் இப்பொழுது பின் அறிந்தும் கூட தன் மக்களுக்கு எப்படியோ தன் குடும்பத்திற்கு எப்படியோ எப்படி வாழ போகின்றோமோ என்றெல்லாம் எண்ணங்கள். 

அவ் எண்ணங்களை போக்கி நிச்சயம் யான் சொல்கின்றேன் மீண்டும் இன்னும் வாக்குகள் பரப்புகின்றேன். 

அறிந்தும் இன்னும் காலங்கள் பின் எவை என்று அறிய அறிய இன்னும் யான் வாக்குகள் தந்து கொண்டே இருப்பேன்!!!

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே ஆசிகள். 

ஒரு பெண் அடியவர் அவர் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியான பிரச்சினைகளுக்கு குருநாதருடைய ஆசீர்வாதம் கேட்ட பொழுது குருநாதர் தந்த வாக்குகள் 

தாயே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய அறிய இதிலிருந்தே என்ன கர்மா இருக்கின்றது என்பதெல்லாம் தெரிகின்றது என்பேன் அறியும் வண்ணம் கூட எதை என்றும் புரிய புரிய

ஆனாலும் அறிந்தும் எவை என்று புரிந்தும் நல்விதமாக யான் இருக்கின்றேன் என்று சொல்லிவிடு !!!! அனைவரிடத்திலும் அறிந்தும் கூட!!!

பின் அறிந்தும் உண்மைதனை கூட எடுத்துரை!!!! எதை என்றும் அறிய அறிய 

ஒருமுறை அறிந்தும் கூட பின் நிச்சயம் யார் யாருக்கு கேட்க வேண்டியது என்பதையெல்லாம் அறிந்து நிச்சயம் இவர்களையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்று புரிவதற்கு கூட பின் சூரியனார் எனும் தலத்திற்கு (கும்பகோணம் திருமங்கலக்குடி நவகிரகங்களில் ஒன்றான சூரியனார் கோயில்) சென்று வரச் சொல். 

நிச்சயம் பின் கிரகங்களின் பிடியில் இவர்கள். 

அறிந்தும் கூட மனக்குழப்பங்கள் நீங்கும்!!!

நிச்சயம் அறிந்தும் கூட யான் அறிவியல் வழியாக எடுத்துரைத்தேன் அனைவருக்கும் கூட எதை என்றும் புரிய புரிய 

ஆனாலும் அங்கு நிச்சயம் அவ் அணுக்கள் தாக்குவதே இல்லை!!!

அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய அறிய ஏனென்றால் பின் அனைத்து எவ்??? எவ்?? கதிர்கள் எங்கெங்கு விழுகின்றது என்பதை எல்லாம் அறிந்தறிந்து யாங்கள் திருத்தலங்களை அமைத்தோம்!!!!

ஆனால் கர்மா அதாவது பாவம் அங்கு போக கூட தடுத்து ஆனாலும் அறிந்தும் கூட எப்படியாவது முயற்சிகள் செய்து சென்று விட்டால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட தாயே அறிந்தும் கூட யான் இருக்கின்றேன் என்று சொல்!!!!

அறிந்தும் கூட இதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம்.. 

பின் வந்தது எதை என்று அறிய அறிய வந்ததும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை... பின் யார் யார் சொந்தங்கள் என்றும் தெரிவதில்லை 

அனைத்தும் இவ்வுலகத்தில் ஏற்படுத்தி விட்டது அவ்வளவுதான். 

(ஏன் பிறந்தோம் ஏன் இறக்கின்றோம் என்பதும் தெரிவதில்லை சொந்தம் பந்தம் எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொள்வது இந்த உலகத்தில். 

சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஆத்மா தனி தனி ஆள்)

இங்கு அதாவது தனி ஆள் மனிதன். 

அறிந்தும் கூட சொந்த பந்தங்கள் இங்கே ஏற்படுத்திவிட்டு பின் போகும் பொழுது அழுவதா???

அடடா!!!!! அப்பா!!!! எவ்வளவு பெரிய புத்திசாலி!!! மனிதன்!!!

அறிந்தும் கூட யாராவது பின் வாயில்லா ஜீவராசிகள் இறந்தால் அழுகின்றீர்களா?????

பின் எவை என்று அறிய அறிய மனிதன் மனிதன் அதாவது சாகக்கூடிய மனிதன் எதை என்று அறிய அறிய பின் பின்பு யாமும் சாவோம் இப்படித்தான் என்று அழுது கொண்டிருக்கின்றான். 

எதை என்றும் அறிய அறிய அவ்வளவுதான் வாழ்க்கை. 

அறிந்தும் யார் யாருக்கு சொந்தம் என்று எதை என்று அறிய இவ் ஆன்மாக்கு எதை என்று அறிய அறிய சொந்தம் என்பதெல்லாம் அப்பனே யான் அறிவது!!!

அம்மையே இதனால் நிச்சயம் இறைவன் சொந்தக்காரன் அனைவருக்கும் 

முதலில் இறைவனை தேடுங்கள் அவ் சொந்தத்தை தேடுங்கள்!!!

அறிந்தும் மற்றவை எல்லாம் வீண் அறிந்தும் கூட. 

நிச்சயம் எதை என்று அறிய அறிய இந்த பூலோகத்தில் சொந்தங்களை எல்லாம் ஏற்படுத்துகின்றோம் அவ் சொந்தங்களால் பின்பு கஷ்டங்கள் ஏற்பட்டுவிடும் அவ்வளவுதான் வாழ்க்கை. 

அப்பனே இதுதான் மாயை.

அறிந்தும் இதனால் தம் தன் சுயநலத்திற்காகவே சொந்தங்கள் பந்தங்கள். 

அதனால் அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் சொல்கின்றேன் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

பின் அதாவது நிச்சயம் கல்வி என்றாலும் ஒரு நாள் மறைந்து விடும் அறிந்தும் கூட. 

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பின் மனிதனும் ஒரு நாள் மாண்டு விடுவான். அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பிள்ளைகளை பெற்றாலும் ஒரு நாள் எவை என்றும் அறிய அறிய போய்விடுவார்கள் அறிந்தும் எதை என்றும் அறிய பின் வணங்கியும் அனைத்தும் இப்படித்தான். 

அறிந்தும் கூட அப்பொழுது எவை சொந்தம்??? மனிதர்களுக்கு!!!! என்றால் இறைவனே!!!!

அப்பொழுது பின் அதாவது அறிவாளி மனிதன் யான் ஒத்துக் கொள்கின்றேன். அப்பொழுது அழுவான்.... அவள் போய்விட்டது இவை போய்விட்டது இவ் சொந்தங்கள் அவ் சொந்தங்கள் என்று!!!

ஆனால் பார்த்தால் சொந்தங்களே இல்லை மனிதன் ஒரு அனாதை. 

அறிந்தும் கூட இவ் பக்குவத்தை என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!!!

பின் இவ்வுலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை என்று!!!

அவ் பக்குவம் வந்துவிட்டால் என்னை காணலாம்!!!!

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் என் பக்தர்கள் நிச்சயம் இவைதன் உடனடியாகவே அறிந்தும் கூட எதை என்று கூட பின் புரிந்து கொள்ள வேண்டும். 

நலன்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே 

ஏன் எதற்கு என்றால் நீங்கள் அனைவருமே அறிந்தும் கூட பின் அதாவது பின் பாதி (பிறவி)கடலை தாண்டி விட்டீர்கள்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் நரகத்தில் இருந்தால் அப்பனே கடலில் நீந்துவது போலே என்று நினைத்துக் கொள்ளுங்கள். 

அப்பனே பெரிய பெரிய அப்பனே பின் எதை என்று கூட ஞானிகளும் இதை எடுத்துரைத்திட்டார்கள் அப்பனே. 

ஆனால் அப்பனே முட்டாள் மனிதன் யான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே. 

இதற்கு மேல் ஒரு அறிவாளி இருக்கின்றான் என்பதை மறந்து விட்டான் அப்பனே. 

ஆனால் அவன் தான் அப்பனே வரும் காலங்களில் அடிக்கப் போகின்றான். 

இதனால் தாயே கவலைப்படாதே என்று யான் தான் சொந்தக்காரன் என்று சொல்லிவிடு!!! பார்த்துக் கொள்வோம். 

அப்பனே எதை என்று புரிய புரிய எவை என்று அறிய அறிய இதனால் நல்விதமாகவே கவலையை விடுங்கள் எதை என்று அறிய அறிய இவள் தன் இன்னும் புண்ணியங்கள் செய்ய வேண்டும். 

புண்ணியங்கள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை எல்லாம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன். 

அவ்வாறு செய்யச்சொல்!!! பின் எதை என்று அறிய அறிய பின்பு வரும் சந்ததிகள் பின் நீடூழி வாழும்!!! பின் கவலைகள் இல்லாமல் வாழும்!!!

யானே அனைத்தும் பின் முன் நின்று செய்து வைக்கின்றேன்!!!

என்னை நம்பி விட்டு எதை என்று அறிய அறிய ஓடோடி எதை என்று அறிய அறிய அதாவது அகத்தியனை நோக்கி ஓடோடி வந்து விட்டால் நிச்சயம் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்.. கர்மத்தை அழித்து!!!!!

ஆனாலும் சில காலம் கஷ்டம் இருக்கும்!!!

ஆனாலும் அவ் கஷ்டம் நல்லதிற்காகத்தான் என்று என்ன வேண்டும்!!!

அப்பனே அதையும் கொடுக்காவிடில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது நீயே விளையாடி விடுவாய் யான்தான் பெரியவன் என்று!!!

அதனால்தான் அப்பனே பொறுத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!

அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய உடம்பு மட்டும் இல்லை. ஆனால் அனைத்திலும் யான் நுழைந்து பின் அடித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். 

இதனால் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்ன 

அன்பு பாசத்தை செலுத்துங்கள் தந்தையிடம் போதுமானது. 

அறிந்தும் எவை என்று அறிய அறிய...

எத் தந்தையாவது அறிந்தும் கூட எந்தனுக்கு திருத்தலம் கட்டு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றானா????????

இல்லை!!!!!

அறிந்தும் கூட ஆனாலும் தாய் தந்தையின் மீது பாசம் வைத்தால் நிச்சயம் யார் ஒருவன் தாய் தந்தையிடம் பாசம் வைத்திருக்கின்றானோ... அவன் அகத்தியன் மேல் பாசம் வைத்திருப்பான் அவ்வளவு தான் வாழ்க்கை. 

அறிந்தும் எதை என்று அறிய அறிய அதனால் நிச்சயம் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டாலும் அறிந்தும் கூட இப்படி எவை என்றும் அறிய அறிய ஆசைகளை வைத்துக் கொண்டாலும் நிச்சயம் அவ் எதை என்று கூட அன்பிற்கு ஏற்பவே யான் பின் செய்து கொள் என்றே சொல்லிவிடுவேன்!!!

ஆனாலும் ஒன்றை மட்டும் யான் கேட்கின்றேன் மனிதனைப் பார்த்து!!!!

தன் தாய் தந்தையை மறந்து நிச்சயம் இறைவனுக்கு!!!.........??????

அறிந்தும் கூட எப்படியப்பா????????

அப்பனே தாய் தந்தையருக்கு செய்யாமல் ஏன் இறைவனுக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றீர்கள்???? அப்பனே!!!

இதை நிச்சயம் கூறுங்கள் அப்பனே!!!

இதற்கு பதில் பின் மேலோட்டமாக இன்னும் அடிபணிந்து வரும். 

ஒரு அடியவர் இதற்கு அளித்த பதில் 

இறைவன் நிலையானவர் தாய் தந்தை பூலோகப் பிறப்பு 

குருநாதர் 

அப்பனே அறிந்தும் கூட எதை என்று கூட யார் சொன்னது???????? அது போல் !!!??????

அப்பனே இறைவன் நிலையானவர் பின் எதை என்று அறிய அறிய பின் தெரிந்து கொண்டு.... அவன் நிலைமையை அவன் (இறைவன் )பார்த்துக் கொள்ள மாட்டானா?????
என்ன???

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அவந்தன் எதை என்று அறிய அறிய உங்களுக்கு வாழ்க்கையை கொடுத்திருக்கின்றான் அப்பனே அதை நல்ல படியாக வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே எப்படியெல்லாம் கர்மா மனிதனை சேருகின்றது என்பதை எல்லாம் வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே 

அவை சரியாகவே பின் எதை என்று அறிய அறிய கவனித்துக் கொண்டால் அப்பனே நிச்சயம் நீடூழி வாழலாம் அப்பனே. வயது வரை இருக்கும் வயது வரை அப்பனே. 

அப்பனே இதனால் முதலில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது ஒரு தேர்வை எழுதுகின்றோம் அல்லவா அப்பனே அதற்கு முதலில் என்னென்ன தேவை என்று நிச்சயம் தெரிந்து கொண்டு எழுத வேண்டும் 
அப்பனே அறிந்து கூட 

 தெரியாமல் இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே எங்கு செல்வாய் ? என்பது
பின் நீங்களே அறிவீர்கள்.

அப்பனே இதனால் தெரிந்து கொண்டு அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட கர்மாவை தொலைத்திட்டு அப்பனே உங்களை வாழச் செய்வேன். அனைவரையும் கூட அப்பனே 

இன்னும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சொல்கின்றேன் அப்பனே 

பின் என்னுடைய பக்தர்கள் முதலில் எவை என்று கூட முதல் பாடத்திலே தேர்ச்சி பெற வேண்டும் அதனால் தான் அதுதான் என்னுடைய விருப்பம் கூட.

அப்பனே அறிந்தும் கூட அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே இவை எல்லாம் அப்பனே. 

இன்னும் சொல்வேன் அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே அனைவருக்கும் கொடுத்து விட்டேன் அப்பனே. 

யான் வந்துவிட்டேன் நீங்கள் வரும்பொழுதே யானும் வந்துவிட்டேன் அப்பனே அழகாகவே அப்பனே அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து விட்டேன் கவலைகள் இல்லை இன்னும் அப்பனே அனைவருக்கும் வாக்குகள் சொல்கின்றேன் நலம். 

சில சில மனக்குழப்பங்கள் சஞ்சலங்கள் எதை என்றும் அறிய அறிய இருந்தாலும் அப்பனே அதை போக்குகின்றேன் விதியையும் மாற்றுகின்றேன் அனைவருக்குமே நலன்கள் ஆசிகள் ஆசிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 22 June 2024

சித்தன் அருள் - 1636 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!






பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் பாகம் 10

வணக்கம் அகத்தியர் அடியவர்களே அனைவரையும் மனக்குழப்பம் அடையாமல் இருக்க பைரவர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று குருநாதர் கூறியிருந்தார் அதற்கு குருநாதர் அறிவியல் வழியாக விளக்கம் தந்தருளினார்!!!

அப்பனே அறிந்தும் கூட ஏன் மனக்குழப்பம் என்பேன் அப்பனே!!!

இதை அறிவியல் வழியாகவே விவரிக்கின்றேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே இன்னொரு படலம் எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு கதிர்கள் அப்பனே பின் இன்னும் இன்னும் அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட வந்தடையும் பொழுது!!!! மனிதனுக்கு அப்பனே அறிந்தும் கூட குழப்பங்கள் தானாகவே வந்து விடுமப்பா!!!

ஏனென்றால் அப்பனே மனிதனுடைய அணுக்களை கூட அங்கிருந்து வந்து பின் எவை என்று அறிய அறிய தாக்கும் அணுக்கள் கூட அப்பனே பின் வேறு வேறப்பா!!

அவை வந்து தாக்கும் பொழுது மனக்குழப்பங்கள் தானாகவே வந்து விடுமப்பா!!! அவற்றிற்கெல்லாம் யான் எடுத்துரைத்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!! நிச்சயம் நலமாகவே. 

ஏன் எதற்கு  தன் அதாவது  இயற்கை வகையான மூலிகைகளை கூட உட்கொண்டால் அப்பனே நிச்சயம் அவை சரியாகிவிடுமப்பா.... அதைக் கூட மனிதன் செய்வதில்லை என்பேன் அப்பனே. 

நான் நரகத்தில் தான் இருப்பேன் என்று சொல்லிவிடுகின்றான் அப்பனே 

அதனால் முதலில் எப்படி திருத்த பார்ப்பது என்று திருத்தி நல்வழியில் எடுத்து வந்து அப்பனே பின் விதியை மாற்றுவோம் யாங்கள் அப்பனே நலன்களாக ஆசிகள். 

அப்பனே ஒரு தந்தை எதை என்று அறிய அறிய மகனுக்கு சொல்லிப் பார்ப்பான் அப்பனே 

சொல்லிச் சொல்லி பார்ப்பான் அப்பனே 

அப்பொழுது பின் அவை எதை என்று கூட திருந்தா விடில் அப்பனே பின் கை மாறுவான் அப்பனே. பின் அறிந்தும் கூட வேறு அறிந்தும் கூட இதே போல தான் அப்பனே!!!

பின் பார்ப்பேன் அப்பனே அப்படி இல்லை என்றால் எதை என்று அறிய அறிய எங்கு எவை என்று அறிய அறிய அப்பனே பின்பு யான் எடுத்துரைப்பேன். 

அறிந்தும் கூட ஏனென்றால் அறிந்தும் கூட இவ்வுலகத்தில் தெரியாத விஷயங்கள் பின் சித்தர்களே அறிவார்கள் இன்னும் விவரிக்கின்றேன். 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே வர வர அப்பனே ஒரு நோய் தாக்கும் அதாவது புற்று (புற்றுநோய்) என்கின்றார்களே அப்பனே ஏன் எதற்கு அப்பனே இதனைப் பற்றி யான் விவரித்து விட்டேன் அப்பனே.... இதனால் அப்பனே 

அங்கு மேலே அப்பனே 

"""" புற !!  """"அக !!!! என்றெல்லாம் அப்பனே கதிர்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அவை நேரடியாக மனிதர்களை தாக்குமப்பா வரும் காலத்தில் அப்பனே. 

இதனால்தான் அப்பனே மரம் செடி கொடிகளை நடுங்கள் என்று சொல்லிவிட்டேன் அப்பனே 

அதையும் கூட பின் எவை என்று கூட ஏற்று கொள்ளாவிடில் அப்பனே பின் அறிந்தும் கூட பின் தாக்கும் பொழுது அப்பனே அவையெல்லாம் அப்பனே தீர்ப்பதற்கு வழிகள் இல்லை அப்பா 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

செல்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது தன்னுடைய அறிந்தும் கூட அப்பனே உண்மையான எவை என்று புரிய புரிய தன் உடம்பில் பல கோடி செல்கள் இருக்கின்றது அப்பனே உயிருடனே எதை என்று கூட அப்பனே... அவை நேரடியாக தாக்கும் பொழுது அவ் செல்கள் அழிந்து கொண்டே வரும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உயிர் பிழைக்க முடியாதப்பா.. அதனால்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... ஔஷதங்களை (குருநாதர் கூறிய மூலிகை மருந்து) எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அப்பனே

அவை (உடம்பில் உள்ள செல்கள்) உயிருடன் இருந்தால் எந்நோயும் வராதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே. 

அப்பனே இப்பொழுது புரிகின்றதா தன் நிலைமைக்கு தானே காரணம் என்று இதை எப்பொழுதே சொல்லிவிட்டார்கள் அப்பனே!!! முன்னோர்கள். 

எதையும் ஏற்கவில்லை தன் வாழ்க்கை தன்னிடமே என்று சொல்லிவிட்டார்கள் அதையும் ஏற்கவில்லை மனிதன். 

அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே பல விஷயங்கள் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

விஷயங்களைத் தெரிந்து கொண்டால் அப்பனே இதுதான் வாழ்க்கை என்று சாதாரணமாக அறிந்தும் கூட சாதாரணமா என்று சொல்லிவிடுவீர்கள் 

அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய  புரிய இவை நிச்சயம் என்னுடைய வாக்குகள் என்னுடைய பக்தர்களுக்கு சென்றாக வேண்டும். 

எதனைப் பற்றியும் குழப்பிக் கொள்ளாமல் அப்பனே அகத்தியன் இருக்கின்றான் என்று நேரடியாக செல்லுங்கள்!!!!

வாழ்க்கையே ஒரு போராட்டம் தான் அப்பனே முதலிலேயே யான் சொல்லிவிட்டேன் நரகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அப்பனே 

நரகத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது எப்படியப்பா ?போராட்டம் இல்லாமல் இருக்கும்!!!

போராடத்தான் வேண்டும் அப்பனே  அறிந்தும் கூட யான் இருக்கின்றேன் அப்பனே!!!

என்னை நம்பி விட்டீர்கள் அல்லவா யான் பார்த்துக் கொள்கிறேன்!!!

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே குருநாதர் இந்த வாக்கில்... குறிப்பிடும் புற மற்றும் அக இந்த கதிர்களை பற்றி ஒரு சிறிய விளக்கம். 

புற ஊதா  கதிர்கள்   (ultra violet radiation rays) UV

அக சிவப்பு கதிர்கள் (infrared rays) IR

இந்த கதிர்களை மனிதர்களால் பார்க்க முடியாது சில விலங்கினங்கள் பறவைகள் இந்த கதிர்வீச்சுகளை பார்த்தறியும் திறன் உள்ளவை. 

எளிமையாக சொன்னால் வெல்டிங் செய்யும் பொழுதும் எக்ஸ்ரே எடுக்கும் பொழுதும் வெளிப்படும் ஒளிக்கதிர்வீச்சுக்கள் இந்த (UV IR  radiation rays) கதிர்வீச்சுக்களை ஒத்தவை.

மேலிருந்து அதாவது சூரியனிலிருந்து வெளிப்படும் இந்த கதிர்வீச்சுக்கள் மேலே உள்ள ஓசோன் படலம் போல மற்றொரு படலத்தின் மூலம் வடிகட்டப்பட்டு பூமியை வந்தடைகின்றது. 

இந்த கதிர்வீச்சுகளின் பிரதிபலிப்பை ஏழு நிறங்களில் வானவில்லில் கூட காணலாம். 

இந்த கதிர்வீச்சுக்கள் மனிதனின் தோல் மற்றும் உடலுக்கு கேடு விளைவிப்பவை. நன்மை செய்யும் சூரியக் கதிர்வீச்சுக்கள் விட்டமின் டி பி 12 போன்றவை தருகின்றது. 

மனிதர்களுடைய செல்களை அழிக்கும் திறன் வாய்ந்த இந்த கதிர்வீச்சுக்களால் உடலில் உள்ள செல்கள் அதாவது உயிருடன் இருக்கும் செல்கள் அழிந்து விடும் அவை ஒரு முறை அழிந்து விட்டால் போராட வேண்டிய செல்கள் இல்லாததால் புற்றுநோய் ஏற்படும்....

மேலிருந்து வரும் இந்த கதிர்வீச்சுக்களை வடிகட்டுவதற்கு மேலே உள்ள படலம் பாதிப்படைந்து விடக்கூடாது. 

ஏற்கனவே ரசாயனங்கள் மரங்களை வெட்டுவதன் மூலம் வாயுமண்டலம் அசுத்தம் அடைந்து இருப்பதால் அந்த படலமும் மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றது.. ஒரு திரை போல ஒரு குடை போல அந்த படலம் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றது அந்த படலத்தில் மேலும் ஓட்டைகள் ஏற்பட்டால் கதிர்வீச்சுக்கள் நேரடியாக மனிதர்களை வந்து தாக்கும். 

அந்த படலம் பாதிப்பு அடையாமல் இருக்க மரம் செடி கொடிகளை நடுவதன் மூலம் அந்த படலம் பாதுகாக்கப்படும் அதனால் தான் குருநாதர் அனைவரையும் மரம் செடி கொடிகளை நட சொல்லி கொண்டிருக்கின்றார்.

செல்கள் உயிருடன் இருக்க இயற்கை மூலிகைகளையும் குருநாதர் பரிந்துரைத்த 32 வகையான மூலிகை மருந்துகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். 

32மூலிகை மருந்துகளை பற்றி ஏற்கனவே பல வாக்கில் தெரிவித்து விட்டோம்!!

இந்த மூலிகை மருந்துகள் திரு தனக்குமார் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் ( அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9566825599)

குருநாதர் நமக்காக வாக்கில் கூறிய வாழ்வியல் முறையை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 21 June 2024

சித்தன் அருள் - 1635 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 9

அப்பனே !!!!! அறிந்தும் கூட!!!!!!

அதாவது

அனைத்தும் தெரிந்தவன் அரை பைத்தியக்காரன்!!!! 

பின் எவை என்று அறிய அறிய எதை என்று கூட தெரியாதவன் இன்னும் அதைவிட பைத்தியக்காரன் அப்பனே !!!!

தெரிந்து வைத்துக் கொண்டு பின் கேள்விகளைக் கேட்பவன் இன்னும் அப்பனே பைத்தியக்காரன் என்பேன் அப்பனே. 

பைத்தியத்துக்கு அப்பனே எவ்வளவு எதை என்று அறிய புரிந்தாலும் அப்பனே சொன்னாலும் எதை என்று அறிய புரிந்து பின் எடுத்து அப்பனே கூறினாலும் அப்பனே மீண்டும் பைத்தியனாக வருவான் அப்பனே.

எவ்வாறு பைத்தியம் என்பது அப்பனே... பைத்தியம் என்பது என்ன? 

ஒரு அடியவர் தந்த பதில்.

அறிந்தும் புரிந்தும் தெரிந்தும் தெரியாமலும் இருப்பது. 

குருநாதர் 

அப்பனே அறிந்தும் கூட புரிந்தும் கூட அறிந்தும் உண்மைதனை புரியாதது எது????

அப்பனே புரியாதது எது???

அப்பனே அறிந்தும் கூட 

"""" இறைவன்!!!

தெரியாதது எது?????

ஒரு அடியவர் கர்மா என்று பதில் தர!!!......

அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய எப்படி சொன்னாய்????

அப்பனே !!!!

அப்பனே!!!! அறிந்தும் உண்மை கூட தெரியாதது அப்பனே அறிந்தும் கூட அப்பனே எவை என்றும் புரிய அப்பனே !!!!

மனிதனின்  """ பாவம் புண்ணியம் !!!!

அப்பனே அறிந்தும் கூட இதனால் பாதி பாவம் பாதி புண்ணியம் இதனால் அப்பனே பின் கஷ்டங்கள்!!!

பாவங்கள் பின் செயல்படுகின்ற பொழுது பின் கஷ்டங்கள் பட வேண்டும்!!!

பின் புண்ணியங்கள் செயல்படும் பொழுது அப்பனே புண்ணியத்திற்கு ஏற்ப பலன்கள் பின் அறிந்தும் கூட. 

அப்பனே இதனால் பாவத்தை மட்டும் எப்படி தூர விலக்குவது??? என்பதைக் கூட வரும் காலத்தில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே. 

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே பல திருத்தலங்களை அமைத்தோம்!!!! அப்பனே அறிந்தும் கூட 

ஆனாலும் எதற்கு என்று மனிதர்களுக்கு தெரியவில்லையே !!!!!!!!! அப்பனே!!

ஆனாலும் அப்பனே இன்னும் இன்னும் திருத்தலங்கள் இருக்கின்றது அப்பனே. 

அவற்றிற்கெல்லாம் சென்றால் அப்பனே பாவங்கள் தொலைந்து விடும். 

ஆனாலும் அவர்கள் அதாவது பகைவர்கள் அப்பனே இப்பொழுது திருத்தலங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னார்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இது முன்பிருந்தே எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே பல திருத்தலங்கள் அழிந்து போயிற்று என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அப்பனே இவையெல்லாம் இருந்தால் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்று அப்பனே. 

பூமிக்கு அடியில் இருந்து... ஈசனே வருவானப்பா வரும் காலத்தில்!!!!!!!

(அதாவது அழிக்கப்பட்ட ஆலயங்கள் பூமிக்கு அடியில் உள்ளது அவையெல்லாம் மீண்டும் எழுந்து வரும் ஈசன் திருவருளால். இந்த வாக்கை பற்றி ஏற்கனவே குருநாதர் ஈசனே ஆங்காங்கே எழுவானப்பா என்று குருநாதர் வாக்குகள் கூறியுள்ளார்

சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

பள்ளசூளகரைமல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

ஈசனே தன்னை உட்படுத்திக் கொண்டுதானே எழுவான் என்பேன் சுயம்புவாக இன்னும் பல இடங்களில் இன்னும்) 

அப்பனே அதனால் தாம் தன் கடமைகளை செய்து கொண்டே வாருங்கள் போதுமானது!!!

அப்பனே புண்ணியம் எதை என்று அறிய அறிய அப்பனே பாவம்!!!

அதிக பாவங்கள் இருந்தாலும் யான் என் அருகிலே வரவழைப்பேன் அப்பனே 

அதிக புண்ணியங்கள் இருந்தாலும் என் அருகில் யான் வரவழைப்பேன் அப்பனே!!!!

இதற்குக் காரணம் என்ன????

அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் பிறந்து விட்டான் அப்பனே ஆனாலும் அப்பனே பின் என் அருகில் வர வேண்டும் என்றால் அப்பனே பல பல வழிகளில் கூட அப்பனே பல ஜென்மங்கள் எடுத்து எடுத்து அப்பனே பல கஷ்டங்கள் பட்டு பட்டு அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய வந்தால்தான் அப்பனே எம்முடைய ஆசிகளும்!!!! அதாவது சித்தர்களின் ஆசிகளே கிடைக்குமப்பா!!!!!

அப்பனே ஆனாலும் எங்கள் பின் பலத்தை யாங்களே காட்டுவோம் அப்பனே!!!!

அப்பனே மனிதனிடம் அப்பனே கொடுத்தால் அனைத்தும் பின் தின்று விடுவான் அப்பனே...


அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் கஷ்டங்கள் அறிந்தும் அறிந்தும் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் உண்மை நிகழ்வுகளை சொன்னால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறையப்பா!!

ஆனாலும் யான் நீக்கிவிடுகிறேன் அப்பனே எதையும் கேட்டு விடாதீர்கள் என்பேன் அப்பனே. 

நலமாகவே!!!

அவரவர் குறை எந்தனுக்கு தெரியுமப்பா!!!

என்னை நம்பி வந்து விட்டீர்கள் அல்லவா...யானே உங்கள் குறைகளை நீக்குகின்றேன் கவலையை விடுங்கள்!!!!

அப்பனே ஆனால் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். 

அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே... இதனால் அப்பனே நல் முறையாக அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று புரிய புரிய அப்பனே அனைவருமே முடிந்த போதெல்லாம் அப்பனே பின் பைரவனை நோக்கிச் செல்லுங்கள் (காலபைரவர் ஆலயத்திற்கு) அப்பனே 

மனக்குழப்பம் பின் அடையாது இருக்கும்!!!

(பைரவர் ஆலயத்திற்கு சென்று வழிபட மனக்குழப்பம் அடையாது இருப்பீர்கள்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 20 June 2024

சித்தன் அருள் - 1634 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 8

அப்பனே சொர்க்கத்தில் சில திருத்தலங்கள் இருக்கின்றன அதையும் சொல்வேன் வருங்காலத்தில் அப்பனே 

அப்பனே முதலில் சொல்லி விடுகின்றேன் அண்ணாமலை. மட்டும் இப்பொழுது எடுத்துரைப்பேன் அப்பனே. 

அப்பனே அதனால்தான் நரகத்தில் இருப்பவர்கள் அப்பனே அங்கு நாடுகின்றார்கள் என்பேன் அப்பனே சொர்க்கத்திற்கு அப்பனே 

இன்னும் அப்பனே ஈசனே அழைப்பான்!! என்பேன் அப்பனே! ஏனென்றால் நரகத்தில்  இருந்து இருந்து வேதனைகள் அப்பனே!!

ஆனாலும் அப்பனே சொர்க்கத்தை நாட நாட ஆனாலும் சிறிதளவு அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்படி கஷ்டங்கள் வரும் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே சொர்க்கம்... திரு அண்ணாமலையே!!!!

அப்பனே அறிந்தும் இன்னும் வருவார்களப்பா அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் கூட இன்னும் சொல்கின்றேன் அப்பனே சொர்க்கம் எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே அதாவது 

அடுத்தபடியாக காசி தன்னில் என்பேன் அப்பனே 

அப்பனே அதை எவை என்று அறிய அறிய மூன்றாவது சொல்லிவிடுகிறேன் அப்பனே கேதாரநாதன். 

(பூலோகத்தில் இருக்கும் சொர்க்கங்கள் 

1. திருவண்ணாமலை 

2. காக்கும் சிவன் காசி 

3. கேதாரநாத். )

அப்படி அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இன்னும் சொல்கின்றேன் அப்பனே இவை போதுமப்பா இப்பொழுது!!!

அப்பனே அறிந்தும் ஆனாலும் அப்பனே ஒன்றிற்கு சென்றால் மற்றொன்றுக்கு செல்ல முடியாதப்பா!!!

எதனால் அப்பனே பின் அதாவது சொர்க்கத்திற்கு செல்ல எவ்வளவு கஷ்டங்கள் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள். 

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே 

அதனால் மனிதனாக பிறப்பெடுத்தால் அப்பனே பின் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

அதாவது என் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான். 

அப்பனே அனைத்தையும் யான் சொல்வேன் அப்பனே என்னுடைய பக்தர்களுக்கு அப்பனே!!!

அப்பனே பின் தெரிந்து அதாவது அப்பனே பிறப்பு எதை என்று அறிய அறிய அறியாமலே பிறந்து விட்டது!!!

ஆனாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய தெரிந்து ஏற்றத்திற்கு செல்லுங்களேன்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்படி தெரிந்து பின் அறிந்து பின் வலம் (சுற்றி)வந்து பின் சென்றால்தான் அப்பனே சொர்க்கமும் கிட்டும் அப்பனே மோட்சமும் கிட்டும்.

அப்பனே இன்னும் இன்னும் பல பேர் அங்கு சென்றேன் இங்கு சென்றேன்!!! ஆனால் ஒன்றும் ஆகவில்லையே என்று அப்பனே 

ஆனாலும் அப்பனே அவந்தனுக்கெல்லாம் அப்பனே இறை பற்றியே இன்னும் தெரியவில்லையப்பா!!!

இறையைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அப்பனே புரியாதப்பா 

அப்பனே அவனுடைய பாதை!!!! ஏனென்றால் போதைகளை கூட அப்பனே எதை என்று அறிய அறிய போதைக்கு அடிமையாகி அப்பனே இன்னும் எதற் எதற்கோ அடிமையாகி அப்பனே பேசுகின்ற பொழுது எப்படியப்பா???

அப்பனே எதை என்று அறிய அறிய யாங்கள் திருத்த முடியும்???????????

அப்பொழுது அடிதான் பலம்!!!

அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே அறிந்தும் கூட போதை எதை என்று அறிய அறிய அப்பனே பல விஷயங்கள் அப்பனே இன்னும் அப்பனே பிற உயிர்களைக் கொல்லுதல் இப்படி நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே இப்படி செய்துவிட்டு அப்பனே சொர்க்கத்திற்குப் பின் எவை என்று அறிய அறிய நுழைய சென்றால் அப்பனே பின் அதிக அளவு அப்பனே மீண்டும் அடித்து அப்பனே பின் பின்னோக்கி அப்பனே செல்ல வைப்பான் அப்பனே இறைவன் சொல்லிவிட்டேன். இன்னும் கஷ்டமாகும். 

அப்பனே நரகத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றான் மனிதன் ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட சொர்க்கத்திற்கு சென்றால் எப்படியப்பா??? ஏற்பான் இறைவன்??????

அடித்து நொறுக்குவான் இன்னும்!!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் எவை என்று அறிய அறிய இறைவன் எப்படிப்பட்டவன் அப்பனே இறைவனை எங்கு காணலாம் என்றெல்லாம் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே முதலில் தெரிந்து கொண்டு வணங்குங்கள் அப்பனே போதுமானது. 

அப்பனே அறிந்தும் கூட இவையெல்லாம் தெரிவதற்கு கூட புண்ணியம் வேண்டும் என்பேன் அப்பனே. 

புண்ணியசாலிகள் நீங்கள்!!!

அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அங்கும் இங்கும் அப்பனே எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய அப்பனே அங்கும் இங்கும் அப்பனே அலைந்து திரிந்து அப்பனே அவை இவை என்று சொல்ல அப்பனே பைத்தியமாக போய் விடாதீர்கள் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 18 June 2024

சித்தன் அருள் - 1633 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!


பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 7 

அறிந்தும் எதை என்றும் போதாததற்கு ஏன் எவ்வளவு எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் கர்மம் இருந்தால் அனைவரையுமே கர்மத்தில் இருப்பவர்களை ஒன்றாக சேர்ப்பேன்...

புண்ணியம் இருந்தால் புண்ணியத்தில் இருப்பவர்களை மட்டும் ஒன்றாக சேர்ப்பேன். 

ஆனால் கர்மம் எதை என்று அறிய அறிய அதாவது பாவம் புண்ணியம்...

பாவம் இருந்தால் யானே அறிந்தும் கூட பின் பாவத்தை பாவத்தாலே பின் அனைவரையும் அழைப்பேன்....

அறிந்தும் யார்? யார்? என் வாக்கை கேட்க வேண்டும் என்பதை அதாவது அறிந்தும் கூட பின் வாக்குகளை கேட்டு விட்டாலே போதுமானது பின் பாதி கர்மா பின் தொலைந்து விட்டது....

அறிந்தும் எதை என்று கூட பின் 

""""" அகத்தியனுக்கு மற்றொரு பெயர்   
"""""""""கர்மா !!!!!!!

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தில் கர்மா அனைத்தையும் தாக்கும் அனைவரையுமே தாக்கும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே என்னையும் தாக்கும் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே எந்தனுக்கு பின் இவை எல்லாம் அறிவியல் வழியாக கண்டுபிடித்து அதை யான் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் அப்பனே

அதனால் என்னை ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட சித்தர்களையும் தாக்குமப்பா!!! பின் கர்மா!!!

ஆனாலும் அப்பனே இவ்வாறு கர்மா சேராமல் இருக்க அப்பனே நிச்சயம் எப்படி என்றெல்லாம் அப்பனே பின் காடுகளிலும் கூட தவங்கள் செய்து அப்பனே இதற்கெல்லாம் அப்பனே விடிவெள்ளியாக அப்பனே அறிவியல் வழியாகவே யான் கண்டுபிடித்தேன் அப்பனே 

இதனால் அப்பனே இதனை அப்பனே அனைத்து சித்தர்களையும் கூட அப்பனே அறிவேன்!!!

அப்பனே இதனை பயன்படுத்திக் கொண்டுதான் அப்பனே நிச்சயம் கர்மா சேராமல் அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே ஒவ்வொரு சித்தனும் கூட அமைதியாக இருக்கின்றான் அப்பனே. எதை என்று புரிய புரிய மனிதரிடத்தில் பேசினால் கர்மா வந்துவிடும் என்று!!!

ஆனாலும் அப்பனே எதை என்று கூட வருவார்களப்பா அனைத்து சித்தர்களும் கூட வாக்குகள் செப்புவார்களப்பா கவலையை விடுங்கள்!!! எதை என்று அறிய அறிய இன்னும் சொல்லப் போகின்றேன் அப்பனே ரகசியங்களை எல்லாம் சொல்லப் போகின்றேன்!!!

வசிஷ்டனின் அத்திரியின் கூட விசுவாமித்திரனின் கூட அப்பனே வாழ்க்கை வரலாற்றை சொல்லப் போகின்றேன் அப்பனே வரும் காலங்களில் அவை மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் அப்பனே முதலில் சுக பிரம்மனின் 
(சுகர் பிரம்மரிஷி) வாழ்க்கை வரலாற்றை யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அப்பனே இப்படி சொல்லிவிட்டால் நிச்சயம் எப்படி எல்லாம் எவை என்று சித்தர்கள் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே அதாவது யாங்கள் பின் ஏதாவது அப்பனே உடம்பு எதை என்றும் புரிய அதாவது பின் மனித உடம்பை பெற்றுவிட்டாலே அப்பனே கர்மா சேர்ந்து விடும். 

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் இப்படித்தான் இருக்க வேண்டும். 

ஏனென்றால் அவனவன் செய்த வினைகள் அவனைத் தாக்கும் !!

பாவமானது புண்ணியமானது எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே பாதி பாவம் பாதி புண்ணியம் என்பதுதான் மனிதனின் படைப்பு என்பேன் அப்பனே.

அப்பனே அறிந்தும் கூட ஆனாலும்  அதனால் தான் அப்பனே பின் நரகத்தில் அப்பனே பாவம் இருக்கும் வரை நரகம். 

அப்பனே புண்ணியம் இருக்கும் வரை சொர்க்கம். 

அப்பனே சொர்க்கம் எங்கு இருக்கின்றது....??

அப்பனே பூலோகத்திலே அப்பனே... அதை காட்டுவேன் அப்பனே வரும் காலத்தில்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 17 June 2024

சித்தன் அருள் - 1632 - அகத்தியப்பெருமான் அருளிய மருத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், மூலிகை மருத்துவத்தை பற்றி ஆராய்ச்சி செய்யும் நண்பர் ஒருவரின், அகத்தியப்பெருமான் அருளிய தொகுப்பு ஒன்று கிடைத்தது. அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன்!

மனிதனின் உடம்பில் 4448 வியாதிகள் உள்ளன என்று தமிழ் சித்தர் அகத்தியர் கூறுகின்றார்.
  1. வாதம் - 84
  2. பித்தம் - 48
  3. கபம் - 96
  4. தனுர்வாயு - 300
  5. சயம் - 7
  6. பெருவயர் - 8
  7. சூலை - 200
  8. கண்நோய் - 96
  9. சிலந்தி - 68
  10. சன்னி - 76
  11. கழலை - 95
  12. சுரம் - 85
  13. மகோதரம் - 7
  14. தலைவீக்கம் - 5
  15. உதிரநோய் - 16
  16. பிளவை - 10
  17. படுவன் - 11
  18. பீலி - 8
  19. உருவசியம் - 5
  20. பேரறிகறப்பான் - 90
  21. கெண்டை - 10
  22. குட்டம் - 20
  23. கதிர்வீச்சு - 3
  24. மதிவட்டை - 5
  25. சோலிநோய் - 16
  26. இசிவு - 6
  27. மூர்ச்சை - 7
  28. வேலிநோய் - 46
  29. மூலம் - 9
  30. கழல்நோய் - 10
  31. கடிவிசம் - 52
  32. கிராணி - 25
  33. பல் நோய் - 76
  34. மாலை கண் - 20
  35. அதிசாரம் - 25
  36. கட்டி - 12
  37. கிருமி - 6
  38. முட்டு நோய் - 30
  39. முதிர் நோய் - 20
  40. சத்தி - 5
  41. கல்லடைப்பு - 80
  42. வாய்வு - 90
  43. திமிர் நோய் - 10
  44. மேகம் - 21
  45. நீராம்பல் - 5
  46. காதுநோய் - 10
  47. விக்கல் - 10
  48. அரோசிகம் - 5
  49. மூக்கறுப்பன் - 10
  50. கடிதோடம் - 500
  51. குத்து வெட்டு - 700
  52. கிரந்தி - 48
  53. பொறிவிடம் - 800
  54. துடிநோய் - 100
  55. பிள்ளைநோய் - 100
  56. குமிழி - 7
  57. விப்புருதி - 18
  58. விசபாகம் - 16
  59. பிரநீர்க்கோவை - 200
மேற்கூறிய வியாதிகளை சோதிக்க மனிதனின் உடலில் 72000 நாடி நரம்புகள் ரத்த குழாய்கள் உள்ளன. மேலும் இதனை சோதிக்க பெருநாடிகள் என்று 10 உள்ளன. அவையாவன,

1. இடகலை
2. பிங்கலை
3. சுழுமுனை
4. சிகுவை
5. புருடன்
6. காந்தாரி
7. அத்தி
8. அலம்புடை
9.சங்குனி
10. குரு நாடி

மேற்குறியவற்றுள் முக்கிய நாடி,

1. இடகலை :- அபானன் (வாதம்)
2. பிங்கலை :- பிராணன் (பித்தம்)
3. சுழுமுனை :- சமானன் (கபம்) - என்று அறிய வேண்டும்.

அகத்தியர் கூற்றின் படி

நாடியான் முன்னோர்சொன்ன நற்குறிக்குணங்களாலு
நீடிய விழியினாலு நின்ற நாட் குறிப்பினாலும்
வாடிய மேனியாலு மலமொடு நீரினாலுஞ்
சூடிய வியாதி தன்னைச் சுகம்பெற வருந்தி சொல்லே
சுகம்பெறவங்கமெல்லாஞ் சுருங்கிய குணங்களாய்ந்து
முகங்குறி நாடிமூக்குச் செவிநுத னயனநாடி
அகந்துடி யடக்குநாடி யதுதிசை விடுதிநாடி
உகந்துடி யுந்திநாடி யுண்மையாம் நடைகள்பாரே

- என்று அகத்தியர் நாடிகள் பரிசோதனை செய்யும் முறை பற்றி கூறுகின்றார்.

இதை தவிர கண்ணுக்கு தெரியாத நோய்கள் பல உள்ளன. இதனை இன்றைய விஞ்ஞான உலகத்தில் உள்ள "X-Ray", "C.T Scan", "M.R.I Scan" எந்திரங்களினால் கண்டறியமுடியாத நோய்களாவன:

1. காற்று
2. கருப்பு
3. பேய்
4. பிசாசு
5. பில்லி
6.சூனியம்
7. ஏவல்
8. செய்வினை
9. வைப்பு
10. கழிப்பு
11. மருந்து
12. கண்நேறல்

கைகண்ட அனுபவ மருத்துவம்!

(கீழ்கண்ட மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மலை வாழ்மக்கள் பயன்படுத்தும் மருத்துவக் குறிப்புகள். கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது. அனைவருக்கும் பயன்படவேண்டி தேடிப்பிடித்து பகிர்கிறேன். பாதுகாப்பாக இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கும்/நண்பர்களுக்கும் பயன்படும்.-

கைகண்ட [அனுபவ] மருத்துவம் !!

நாடோடி மக்களின் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்து, அதன் பயனாகப் பல மூலிகைகளின் சிறப்பை உணர்ந்து, சித்த வைத்தியத்திலும் தேர்ந்தவர் பிலோஇருதயநாத் அவரின் கைகண்ட அனுபவம் மருத்துவம் இவை."

சில எளிய மருத்துவம்: !!!

வயிற்றுவலிக்கு: முருங்கைக் கீரையை ஒரு கைப்பிடி எடுத்துச் சுத்தமான தண்ணீரில் கழுவி, உரலில் போட்டு நன்றாக இடித்துச் சாறு பிழிந்துகொண்டு, காலை, பகல், மாலையில் கொஞ்சம் சர்க்கரையுடன் அதைக் கலந்து உணவுக்குமுன் 1/4 ஆழாக்குச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.

இடுப்பில் வரும் வண்ணார் புண்: இது சாதாரணமாய் எங்கே வாழ்ந்தாலும் சரி, சிலருக்கு உண்டாகும். இந்தப் புண் இருப்பவர்கள் இடுப்பைச் சுத்தமாகக் கழுவிக்கொண்ட பின், வாழைப் பழத்தோலின் உள் பக்கத்தைப் புண்ணின்மேல் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். சில நாட்களில் முற்றும் குணம் அடைந்து விடும்.

கண்நோய்: கடுமையான கண் நோய் இருப்பவரகளுக்கு நீலகிரியில் வாழும் ஆதிவாசிகள், வெங்காயத்தை வெள்ளைத் துணியில் மூட்டை கட்டிப் பிறகு நசுக்கிக் கண்ணில் பிறிவார்கள். சில மணி நேரங்களில் நோய் குணமாகிறது.

டான்சில்ஸ்: சுத்தமான குங்குமப் பூவை இரண்டு கீற்று எடுத்து வெற்றிலையில் வைத்து வியாதியுள்ளவர்களுக்கு காலை, மாலை கொடுக்க, இரண்டே நாட்களில் குணம் காணலாம்.

தேள் கொட்டினால்: கேரள நாட்டு ஆதிவாசிகள் தேள் கொட்டினால் உடலின் எந்தப் பக்கத்தில் கொட்டுகிறதோ. அதற்கு எதிர்ப்பக்கத்துக் கண்ணில் ஒரு சொட்டு சுத்தமான உப்புத் தண்ணீரை விடுகிறார்கள். உப்பு நீரால் தேள் கொட்டிய இடத்தில் கீழ்பக்கமாக உருவிக் கழுவ வேண்டும். 5 நிமிடத்தில் விஷம் இறங்கி விடுகிறது.

வயிற்றில் உள்ள நாக்குபூச்சி போக: வயிற்றில் நாக்குப் பூச்சி இருப்போர் கண்ட மருந்தும் சாப்பிடக்கூடாது. வயதுக்குத் தகுந்தாற்போல் நல்ல சிற்றாமணக்கெண்ணெய் ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதே எண்ணெயின் அளவுக்கு நாட்டுச் சர்க்கரையைப் போட்டு நன்றாகக் கலக்கிய பிறகு அதிகாலையில் சுமார் ஆறு மணிக்குக் குடித்துவிட வேண்டும். வயிற்றில் இருக்கும் பூச்சிகள் இந்த வெல்லத்தைச் சாப்பிட வரும். அந்த வேகத்தில் பேதியுடன் கலந்து பூச்சிகள் வெளியில் வந்து விடும். அன்று மிளகு ரசம் மட்டுமே சாப்பிட வேண்டும். குளிக்கக்கூடாது..பப்பாளிப் பாலுடன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சி இறந்துவிடும். பிறகு கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய் சாப்பிட்டால் பூச்சிகள் வெளியே வந்துவிடும். வயதுக்குத் தக்கபடி அளவுகள் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டைக் கம்மலுக்கு: சித்தரத்தை, அதிமதுரம், அரிசித்திப்பிலி வாங்கி ஒன்றாக இடித்து, அதை இரு பாகமாக்கி ஒரு பாகத்தில் எண்ணூறு மில்லியளவுத் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். அந்த கஷாயம் இருநூறு மில்லியளவுத் தண்ணீராகச் சுண்டியதும், அதை ஒரு நாளைக்கு மூன்று வேளையாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். மீதிப் பாதி மருந்தை மறு நாளைக்கு அதைப்போலவே செய்து மூன்று வேளை சாப்பிட வேண்டும். இதைப்போல் நான்கு நாட்களுக்கு சாப்பிட்டால் தொண்டைக் கம்மல் குணமாகும்.

ஒற்றைத் தலைவலி : மருதோன்றி (மருதாணி)யை “அழவான இலை’ என்றும் சொல்வார்கள். அந்த இலையை அரைத்து எந்தப் பக்கத்தில் தலைவலி இருக்கிறதோ, அந்தப் பக்கத்துக் காலின் அடிப்பாகத்தில், பாதத்தில் புதிய பத்துக் காசு அளவு வட்டமாக வைத்து, துணியால் கட்டிக் கொண்டு இரவில் படுத்துவிட வேண்டும். ஒரு தடவை செய்தால் போதும். உடனே ஒற்றைத் தலைவலி நின்றுவிடும். மறுபடி தலைவலி வரும்போது இப்படிச் செய்யலாம்.

அஜீரணம்: அடிக்கடி அஜீரணத்தால் துன்பப்படும் நண்பர்கள் தினமும் பப்பாளிப் பழத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட அஜீரணமும் போகும்.

கல்லீரல் வீக்கம்: கல்லீரல் வீக்கமும் காய்ச்சல் கட்டியும் உள்ள குழந்தைகளுக்குப் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடக் கொடுத்தால் சில நாட்களில் கட்டாயம் குணமாகும். பழத்தை அல்வா, ஜாம் முதலியவை செய்தும் சாப்பிடலாம்.

கக்குவான் இருமல்: அதிமதுர வேரை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் நீரை விழுங்கும்படி செய்யலாம். மக்காச் சோளக் கதிர்த் தண்டைக் கஷாயம் வைத்துச் சாப்பிடலாம்.இவற்றைக் கொடுத்தால் கக்குவான் இருமல் அடியோடு நீங்கி விடும் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் குறையும். குழந்தைகளுக்கு வாந்தி அதிகம் இராது. எப்படியும் மூன்று மாதம் இருந்த பின்தான் இருமல் போகும“.

குடல் வாதம்: முள்ளங்கியின் விதையைக் கஷாயமிட்டுச் சாப்பிடக் குடல் வாதம் அறவே நீங்கும்.

தாது விருத்தியாக: முள்ளங்கி விதையையும், முள்ளங்கிக் கிழங்கையும் அதிகமாக உடயோகித்து வந்தால் தாகு விருத்தியாகும்.

ஜலதோஷம்: பகலில் சாப்பாட்டின் போது ஒரு பச்சை வெங்காயத்தைத் துண்டு துண்டாக்கி உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.

வயிற்றில் கட்டி: வெள்ளை முள்ளங்கியின் சாற்றை எடுத்து அரை அவுன்சு வீதம் 90 நாட்கள் சாப்பிட வேண்டும். 91ம் நாள் குணம் தெரியும். காலையில் ஆகாரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அரை மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடலாம்.

தலையில் புழு வெட்டு : 1. ஆற்றுத் தும்மட்டிக்காயை நான்காக வெட்டி அதில் ஒரு பகுதியைத் தலையில் தேய்க்க வேண்டும். இதன் கசப்புத் தன்மையைத் தாங்காத பூச்சி, உடலில் இறங்கி ரத்தத்தின் வேகத்தில் இறந்துவிடும். தும்மட்டிக்காயைச் சுமார் 90 நாட்கள் தேய்க்க வேண்டும். 2. வெங்காயத்தையும் மூக்குப் பொடியையும் ஒன்றாக இடித்துத் தலையில் எப்பகுதியில் சொட்டை இருக்கிறதோ, அப்பகுதியில் எரிச்சலைப் பாராமல் சுமார் 15 நாட்கள் தேய்க்க வேண்டும்.

பாதத்தில் பித்த வெடிப்பு: ஐந்து நாட்களுக்கு விடாமல் வேப்ப எண்ணெயைத் தடவினால் பித்த வெடிப்பு மறைந்துவிடும். ஆறு மாதத்துக்கு இந்தத் தொல்லை இராது.

வெண்குஷ்டம் : மருதாணி வேர். அதாவது அழவான இøல் செடிவேர் சிறிது எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எடுத்துப் பசும்பால் விட்டு நன்றாக அரைத்துக் கொண்டு வெண்மையாக இருக்கும் தோலின்மேல் பூசவும். நாளடைவில் தோலின் வெண்ணிறம் மாறிவிடும்.

காலராவைத் தடுக்க: காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேன் குடித்தால் வாந்திபேதி வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

மூலம், வாய்ப்புண், வயிற்றுப்புண்: இந்த வியாதிகளுக்குத் துத்தி இலைக் கீரையைச் சமைத்துச் சாப்பிட வேண்டும். புளி ஊற்றக் கூடாது. பகல் உணவுடன் ஒரு வேளை மட்டும் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை சாப்பிடும்போது மற்றக் கீரைகளை உண்ணக்கூடாது.

கடுமையான சுளுக்கு: சுளுக்குப் பிடித்த இடத்தில் துத்தி இலையை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கிக் காலையில் தேய்த்த ஒரு மணி நேரத்துக்குப்பின், தாங்கக்கூடிய சூட்டில் வெந்நீரை ஐந்து நாட்களுக்கு விட வேண்டும். பிறகு குணமாகும்.

காதில் சீழ் வடிதல்: எட்டிக் கொட்டையை வேப்பெண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து “ஒரு கோணி ஊசியில் குத்திக் கொள்ள வேண்டும். எட்டிக் கொட்டையைக் கொளுத்தியதும் கொட்டையிலிருந்து எண்ணெய் சொட்டும். அதுதான் எட்டித் தைலம். மூன்று சொட்டு ஆற வைத்து, காதில் விட வேண்டும். சீழ் குணமாகும். (5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இதைத் தரக்கூடாது)

காலில் ஆணி: ஊறுகாய்க்கு ஊற்றும் காடியைப் பஞ்சில் எடுத்துக் கொண்டு அணி இருக்கும் காலில் ஒரு நாளைக்குப் பலமுறை தடவிக் கொண்டே வரவேண்டும். 45 நாட்களில் குணம் தெரியும் ஆணி மறைந்துவிடும்.

பல்வலி : 1. கீழாநெல்லி இலையைக் காலையில் நன்றாக மென்று அப்படியே பல் துலக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பல் துலக்கினால் போதும். குணம் தெரியும். 2. தென்னை மரத்தின் வேரை நன்றாக மென்று மூன்று நாட்களுக்குப் பல் துலக்க வேண்டும். குணம் தெரியும்.

வழுக்கைத் தலையில் முடி வளர: காலையிலும், இரவிலும் சாதாரண வெங்காயத்தைத் தலை நிறையத் தேய்த்து வந்தால் இரண்டு மூன்று மாதங்களில் கருகருவென்று முடி வளர்ந்துவிடும்.

நாட்டுப்புற மருந்துகள்

நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம்.

மகளிர் மருத்துவம்

திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.
2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்.
3.சீரற்ற மாதவிலக்கு - அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.
4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.
5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி - அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.
2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.
3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு - சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.
4. தாய்ப்பால் பற்றாக்குறை - பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

ஆடவர் மருத்துவம்

ஆண்களுக்கென்று உள்ள தனிநோய்களும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளும் பின்வருமாறு :

1. நீர் பிரிதலில் சிக்கல் - தாமரைப் பூவைப் பச்சையாகச் சிறிதளவு உண்டு வரத் தாராளமாய் நீர் பிரியும்.
2. மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
3. விந்து வெளியேறல் - ஒரு குவளை பசும்பாலுடன் பேரிச்சம்பழங்கள் சிலவற்றைப் போட்டுச் சாப்பிட்டு வர குணமாகும்.
4. ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
5. வெள்ளைபடுதல் - பழம்பாசி இலைகளைப் பசும்பாலில் விட்டு அரைத்துத் தொடர்ந்து இரண்டு வேளை காலையில் அளவாகப் பருகி வர நோய் விலகும்.

குழந்தையர் மருத்துவம்

அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
2. சளி - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.

பொது மருத்துவம்

ஆண், பெண், குழந்தை எனும் பாகுபாடில்லாமல் மனிதர்களைத் தாக்கும் பொதுவான நோய்கள் இப்பிரிவில் அடங்குகின்றன. அந்நோய்கள் பலவாகும். அவற்றுள் சிலவற்றிற்கான மருந்துகள் வருமாறு :

1. காய்ச்சல் - திராட்சை ரசத்தில் வெந்நீர் கலந்து உண்ண மட்டுப்படும்.
2. பொடுகுத் தொல்லை - வெள்ளை முள்ளங்கிச் சாற்றைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர நீங்கும்.
3. பேன் - துளசிச் சாற்றைத் தலையில் தேய்த்து வரப் பேன் தங்காது.
4. வெட்டுக்காயம் - மஞ்சளைப் பொடி செய்து வெட்டுக்காயத்தில் வைத்துக் கட்டலாம்.
5. முகப்பரு - பூண்டை உரித்து அதன் சதைப் பகுதியை முகத்தில் தேய்த்து வர மறையும்.

கால்நடை மருத்துவம்

கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்களுள் சிலவற்றையும் அவற்றைப் போக்குவதற்கான மருந்துகளையும் கீழே காண்க.

1. புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
2. ஆட்டிற்கு வயிற்றுப் போக்கு - தேங்காய் எண்ணெய் சிறிதளவைச் சங்கில் எடுத்து ஆட்டுக்குட்டிக்
குப் புகட்ட வயிற்றுப் போக்கு நிற்கும்.
3. கோழிகளுக்கு வயிற்றுப்போக்கு - கோழிகளுக்கு விளக்கெண்ணெயைச் சிறிதளவு கொடுக்கச் கழிச்சல் நிற்கும்.

நாட்டுப்புற மருத்துவத்தின் சிறப்புகள்

பக்க விளைவுகள் இல்லாதது. எளிய முறையில் அமைவது. அதிகப் பொருட் செலவில்லாதது. ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாத பல நோய்களுக்குக் குணம் தரக்கூடியது. அனுபவ முறையில் பெறப்படுவது. பெரும்பாலும் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மருந்துகளாகக் கொண்டுள்ளது. சற்று மெதுவாகச் செயல்பட்டாலும் நோய் முழுமையாகக் குணமடைவது. எளிய முறையில் மக்களுக்குப் புரிய வைப்பதால் நோயாளிகள் நோயின் ஆரம்ப கட்டத்திலேயே தடுப்பு முயற்சிகள் செய்துகொள்ள ஏதுவாகிறது. நாட்டு மருத்துவத்தை அறியக் கல்வியறிவு தேவையில்லை, பாமரரும் பின்பற்றலாம். பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் மருத்துவர்கள் நோயைக் கண்டறிவது மிக எளிதாகின்றது. உலக நாடுகளில் நாட்டுப்புற மருத்துவமே நவீன மருத்துவத்துக்கு அடிப்படையான உந்துதலாக அமைந்துள்ளது. உடல் ரீதியாக மட்டும் அணுகாமல் உளரீதியாகவும் அணுகுவதால் நாட்டுப்புற மருத்துவம் சிறப்பானதாகும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!