​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 24 December 2016

சித்தன் அருள் - 546 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இகுதொப்ப,  ஒவ்வொரு துளியும், புவி சுழன்று சுழன்று காலத்தை மனிதனுக்கு அறிவுறுத்துவது "இறை நோக்கி செல், இறை நோக்கி செல், இறை நோக்கி செல்" என்பதுதான். ஒரு பிறவியில் அதை விட்டுவிட்டால், எப்பிறவியில்? என்பதை மனிதனால் நிர்ணயிக்க இயலாது. விலங்குகளுக்கு கிடைக்காத பாக்கியம், மனிதனுக்கு இறை தந்திருப்பது, இறையின் கருணை. விலங்குகளும் உண்ணுகின்றன. மனிதனும் உண்ணுகிறான். விலங்குகளும், தன் இனத்தை விருத்தி செய்கின்றன. மனிதனும் செய்கிறான். பின் எதில்தான் வேறுபாட்டை காட்டுவது? என்றால், விலங்குகள் குகைக்குள் வாழ்கின்றன. மனிதன் தனக்கு கொடுத்த அறிவை கொண்டு குகையை வடிவமைக்க கற்றுக் கொண்டுவிட்டான். எனவே, மனதை தூய கருவறையாக்கி உடலை ஆலயமாக்கி, மனதுக்குள் சதா இறைவனை அமர்த்த போட்டியிடவேண்டும். "எங்கு சென்று அமர்வது?" என்று தெரியாமல், இறை திணறவேண்டும். அந்த அளவுக்கு மனம், புத்தி, செயல், எண்ணம், வாக்கு புனிதமாக இருக்க வேண்டும். எனவே, சண்டை, சச்சரவில் மனதை செல்ல விடாமல், அவரவர் தொண்டையில் சுரக்கும் தீர்த்தத்தை உணர்ந்தால், அதுவே சுய தீர்த்தம், மெய் தீர்த்தம்

7 comments:

  1. ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ என் ஐயனின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க அவரின் திருவடிகளை வணங்குகிறேன்

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ என் ஐயனின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க அவரின் திருவடிகளை வணங்குகிறேன்

    ReplyDelete
  3. ஐயனின் திருவடி பாதங்கள் ேபாற்றி சரணம் சரணம்.... அவரை நம்பிக்கையுடன் சரணடைபவர்க்கு ஒரு ேபாதும் துன்பமில்லை... ஓம் அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  4. ஐயனின் திருவடி பாதங்கள் ேபாற்றி சரணம் சரணம்.... அவரை நம்பிக்கையுடன் சரணடைபவர்க்கு ஒரு ேபாதும் துன்பமில்லை... ஓம் அகத்தீஸ்வராய நமஹ

    ReplyDelete
  5. Saravanan Anna Excellent Visualisation, superb, Hats off, wishing you a great year 2017 ahead

    ReplyDelete
  6. [ROUGH TRANSLATION] With its every rotation, Earth is urging man: “Seek the Divine, Approach the Divine, Move towards the Divine”. If a man misses [it] in this birth, there is no saying in which next birth [he will get another chance]? Divine grace has granted this boon to man-kind, this is not available to animals. Both man and animals, eat and breed. Then what is the difference [between the two]? Animals live in caves. Man, using the intelligence given to him, has learnt how to build caves. So, man-kind should make efforts to transform his mind into a pure garba-griha, his body into a temple, and to seat the Divine in his mind always. So that even the Divine will be puzzled by so many [minds] for Him to be seated within. Upto that extent, mind, buddhi, actions, thoughts, speech should become sacred. So, stop diverting your mind into arguments and fights. Inside every one’s throat, there is a theertha [amrit], realise it, that is the real and true theertha.

    ReplyDelete
  7. Om sri lopamuthira sametha agathisaya namaga

    ReplyDelete