​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 1 December 2016

சித்தன் அருள் - 524 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

விருக்ஷங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு. விருக்ஷங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள். நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும், பூஜிக்க வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும். ஏனென்றால், மரங்கள், தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும். அது மட்டுமல்லாது, மரங்கள் காதல் செய்கிறது. இதை மனிதர்கள் யாராவது நம்புவார்களா? மரங்களை ஓரறிவு என்று கூறினாலும் கூட, தேவர்கள், முனிவர்கள், தவம் செய்வதற்காக, மரங்களாக அவதாரம் எடுப்பார்கள். மரத்தின் மீது, "கூரானை" செலுத்துவது மகா பாவம். அது மட்டுமல்லாது, ஒரு மரமானது, எத்தனையோ உயிர்களுக்கு நிழலை, காயை, கனியை, உறைவிடத்தை தருகிறது. இப்படி பலவற்றை மரம் தருவதால், அதற்கு "தரு" என்ற ஒரு பெயர் உண்டு. "கற்பக விருக்ஷம்" என்று ஒவ்வொரு மரத்தையும் கூறலாம். அது மட்டுமல்லாது, ஒவ்வொரு மரமும், மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது. அவை பாவம் செய்வது கிடையாது. எனவே, மரங்கள் அனைத்துமே போற்றப்படவேண்டியவை என்பதால் தான், வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. "ஸ்தல விருக்ஷம்" என்று வைத்து, ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப் படுகிறது. அந்த விருக்ஷம் அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

3 comments:

  1. [ROUGH TRANSLATION] For trees, there are some special puja formalities. Even wedding relationship may be conducted between trees. There is no rule that only those trees compatible with your nakshatra should be grown or done puja to. All trees may be grown. A tree is capable to communicate with another distant tree. Not only that, trees may develop affection towards one another. Of course, man will dis-believe this. Though trees are endowed with single sense, some devas and munis may take the form of tree to perform tapas. It is a major sin to run chain-saw on trees. A tree gifts shade, vegetable, fruit, residence to other creatures. So, trees are also called as “daru”. Each tree can be called as “kalpaka-vriksha”. Further, each tree has many superior features compared to man. They don’t commit sin. So, vedas say that all trees must be highly regarded. In temple, there is sthala-vriksha. Understand that the sthala-vriksha is suitable to that soil.

    ReplyDelete
  2. Om Agatheesaya Namah

    "EACH tree has many superior features compared to man", this is the TRUTH.

    Thanks a lot for All such a beautiful translation

    ReplyDelete