​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 13 March 2011

சித்தன் அருள் - 11


அவர் பதில் சொல்லவில்லை.  மௌனமாக தலை குனிந்தபடி இருந்தார்.

"அதாவது வசியம்னு கொடுத்த மருந்தை அவ சாப்பிட்டா பிறகு அவ புத்தி தடுமாறி போச்சு.  இதை உங்களுக்கு சாதகமாக்க அவளுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு கதை கட்டி விட்டீங்க, வேஷம் போடறீங்க இல்லையா?"

"ஆமாம்"

"இப்போ அந்த பெண் கிட்டே இருந்து எப்படி சொத்தை வாங்க முடியும்?  இவதான் புத்தி சுவாதீனம் இல்லாம இருக்காளே?"

"உண்மைதாங்க"

"ஒருவேளை நீங்க இவளை மிரட்டி கிரட்டி வெத்து கடுதாசில வாங்கினா கூட, சட்டப்படி அது செல்லுபடி ஆகாதே, என்ன செய்யபோறீங்க?" என்றேன் அழுத்தமாக. 

"ஏதோ தப்பு பண்ணிட்டேன்.  அதுக்குதான் அகத்தியர் கிட்டே வந்திருக்கேன்.  நீங்கதான் ஒரு நல்ல வழியை காட்டணம்" என்று கெஞ்சினான், அந்த ஆள்.

"ஆமா.  இப்படி நீங்க தப்பு பண்ணி இருப்பது வேறு யாருக்கும் தெரியுமா?"

"யாருக்கும் தெரியாது.  நீங்க தான் இப்போ கண்டுபிடிச்சு சொல்லறீங்க.  என்னை மன்னிச்சுருங்க.  நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்றார் அழாத குறையாக.

மறுபடியும் அகத்தியரிடம் வேண்டினேன்.

"தங்கசாலைத் தெருவில் ஒரு வயதான இஸ்லாம் பெரியவர் இருக்கிறார்.  அவரிடம் இந்த பெண்ணை அழைத்து செல்லுங்கள்.  இரவு பதினோரு மணி முதல் பன்னிரண்டு மணிவரை அவர் இருப்பார்.  அவரால் தான் இந்த பெண்ணை குணப்படுத்த முடியும்" என்று அகத்தியர் வழிகாட்டினார்.

"அந்த பெண் பிழைத்தால் போரும்.  மற்ற விவகாரங்களை பிறகு பார்த்துகொள்ளலாம்" என்ற எண்ணத்தோடு தங்க சாலைத் தெருவுக்கு ஓடினார்கள், அவர்கள்.

"ஆனால், அந்த இஸ்லாம் பெரியவர் ரெண்டு மணி நேரத்துக்கு முன்பு தான் ஒரு விபத்தில் சிக்கி ஆஸ்பத்ரியில் அனுமதிக்க பட்டிருந்தார்.  தங்க சாலை தெருவில் இருக்கும் அந்த வயதான இஸ்லாம் பெரியவர் மிகவும் அபாரமான சக்தியைப் பெற்றவர்.  சிறு வயதில் இருந்தே பொது மக்களுக்கு நன்மைகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தினால் பல சாத்திரங்களையும் கற்றவர்.

சித்த வைத்தியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவருக்கு அதர்வண வேதத்தில் நம்பிக்கை ஏற்ட்டது.  மந்திர சக்தியால் நல்ல காரியங்களைச் செய்யவேண்டும் என்பதிற்காக அதர்வண வேதத்தை கற்றவர்.

அதர்வண வேதம் என்பது துஷ்ட தேவதைகளை கட்டுபடுத்தும் மந்திரங்கள் கொண்டது.  மேலும், மந்திர சக்தியால் நல்ல தேவதைகளை வரவழைத்து நல்ல காரியங்களை செய்வதாகும்.

இதற்க்கு மனோ பலம் வேண்டும்.  பயம் இருக்க கூடாது. அதோடு யாருக்காக எந்த காரியத்தையும் செய்ய ஆரம்பித்தாலும், முதலில் தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டு கொள்ள வேண்டும்.  இதை செய்ய தவறினால், அவர்களுக்கு பெரும் பதிப்பு ஏற்படும்.

பெரும்பாலும் இந்த மாதிரியான காரியத்தில் ஈடுபடுபவர்கள் மிக மிக குறைவு.  கேரளாவில் சில இஸ்லாம் நபர்கள் அதர்வண வேதத்தை கற்று பலருக்கு நன்மைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த காலத்தில் கூட இப்படிப்பட்ட துஷ்ட தேவதைகளைக் கண்டு பிடித்து கட்டு படுத்த முடியுமா?  நல்ல தேவதைகள் என்கிறார்களே, இதெல்லாம் உண்மையா?" என்று நம்மில் பலருக்கு சந்தேகம் வரும்.  இதில் தவறில்லை.

அதர்வண வேதம் கற்றவர்களும், இது பற்றி பல வருடங்கள் பழகியவர்களுக்கும் துர் தேவதைகள் யார் யார்? நல்ல தேவதைகள் யார் யார்? என்பதை கண்டு பிடிக்க முடியும்.

எந்த மந்திரத்தை எப்படி பிரயோகம் செய்ய வேண்டும்? எது எத்தனை காலத்திற்கு நல்ல பலனைத் தரும்.  அது போல எந்த மாதிரியாக கேட்ட பலனைத்தரும் என்பதை கூடத் துல்லியமாக கணக்கிட்டு விடலாம்.  இதில் எத்தனையோ ரகசியங்கள், மர்மங்கள் உண்டு.

ஒருவரை கெடுக்க நினைத்து செய்யப்படும் "பிரயோகம்" முதலில் எதிராளிக்கு வேகமாகச் செயல்பட்டாலும், அந்த குறுப்பிட்ட காலம் முடிந்தது, யார் இதை ஏவி விட்டார்களோ அவர்களை நூறு மடங்கு வேகத்தில் தாக்கும்.  இந்த தாக்குதல் படு பயங்கரமாக இருக்கும்.

இதனால் தான் நூறுக்கு, 99 பேர் அதர்வண வேதத்தில் இறங்குவதில்லை.   எனவே, கடைசியில் ஜெயிக்கபோவது பிரார்த்தனை ஒன்று தான்.

எதற்காக இந்த விளக்கத்தைச் சொல்கிறேன் என்றால் "யாரும் செய்வினை, பேய், பிசாசு, ஏவல் என்று பயந்து மனதையும் வாழ்க்கையும் கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவேண்டும்" என்பதற்காகத்தான்.

அகத்தியரால் "செய்வினை" யை குணப்படுத்த முடியாதா? பின் எதற்காக அந்தப் பெண்ணை தங்க சாலையில் இருக்கும் பெரியவரிடம் அனுப்பினார்? என்று கேட்கலாம்.

யார் - யார் எந்தக் காரியத்தில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களது திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு அகத்தியர் இப்படி பலரை அடையாளம் காட்டுவதுண்டு.

அகத்தியர் சொன்னபடி இரவு 11 மணிக்குள் தங்க சாலையை அடைந்து அந்த இஸ்லாம் பெரியவரிடம் அந்தப் பெண்ணை காட்டி, துர் தேவதையின் பிடியில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்று வேகமாகச் சென்றனர்.  ஆனால் அவர்கள் அங்கு செல்வதக்குள் "விதி" விளையாடி விட்டது. ரோட்டு ஓரமாக நடந்து சென்ற பொது அந்த பெரியவர் மீது ஆட்டோ மோதியது.  அதிர்ச்சியில் மயங்கி சரிந்த அவரை ஆஸ்பத்ரியில் சேர்த்தனர்.  இந்த தகவல்களை கேட்டு பெண்ணை அழைத்து சென்றவர்கள் அரண்டு, அதிர்ச்சி அடைந்து போனார்கள்.

அவர்களில் ஒருவர் என்னிடம் இரவோடு இரவாக திரும்பி வந்து "இப்போது என்ன செய்வது?" என்று கேட்டார்!

1 comment: