​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 10 March 2011

சித்தன் அருள் - 6


எனக்கு மட்டும் "தெய்வ ரகசியமாக" சொன்ன தகவல் இது. 

"இவன் ஒரு சிவ பக்தன்".  கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தான். கோயம்பத்தூருக்கு அருகே தொழிலொன்றைத் தொடங்கினான்.  அதிஷ்ட தேவதை இவனுக்கு கை கொடுத்தது.  மிக விரைவிலேயே பெரும் பணக்காரனாக மாறினான்.

இவனுக்கு திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இவனுக்கும், இவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை மனதில் கொண்டு, சில உறவினர்கள் கணவன்-மனைவி உறவில் புகுந்து, அவர்களுக்கு இடையே பிரிவை உண்டாக்கினர்.

இப்பொழுது, இவன் எல்ல சொத்துக்களையும் வைத்து கொண்டிருந்தாலும், வீட்டை விட்டு ஒரு நாள் இரவு யாரிடமும் சொல்லாமல் வெளியே வந்து விட்டான்.

பல இடங்களில் பரதேசி போல் இவன் திரிய, உறவினர்களது வாரிசுகள் அனைவரும் இவன் இறந்து விட்டான் என்று எண்ணி (மனைவி உள்பட) சொத்துகளை அங்கு பங்கு போட்டு கொண்டிருக்கின்றனர்", என்று இந்த மனிதரின் கடந்த கால வரலாற்றை சொல்லி "இவன் கண்டிப்பாக பிழைப்பான்" என்பதை மட்டும் அந்த பெரியவரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை.

சிரித்தபடியே கையில் மீதி இருந்த பூச்சி மருந்து பாட்டிலை திறந்தார்.

நான் வெல வெலத்துப் போனேன்.

அகத்தியர் சொல்லிவிட்டார். நீங்கள் கண்டிப்பாக பிழைத்து விடுவீர்கள், என்று மட்டும் அந்த பெரியவரிடம் சொன்னேனே தவிர, அவரது கடந்த கால வரலாற்றை பற்றி மூச்சு விடவே இல்லை.

ஏனெனில், அகத்தியர் நாடியை நான் படிக்கும்போது, எதிரே உள்ளவரின் வாழ்க்கைப் பற்றி ஒரு குறிப்பினை சொல்லி விடுவார். இதை "தெய்வ ரகசியம்" என்று குறிப்பிடுவதினால், இதை பற்றி ஒரு போதும் வாய் திறந்து யாரிடமும் நான் சொல்வது கிடையாது.

"நீங்கள் விஷம் குடித்திருந்தாலும் கண்டிப்பாக பிழைத்துவிடுவீர்கள்"  என்று சொல்லி மருத்துவமனைக்கு  போகும்படி வற்புறுத்தினேன்.

"எனக்கு சரியாக சொல்லவேண்டும். அகத்தியர் என்ன சொன்னார்? மீண்டும் ஒரு முறை படியுங்கள்" என்றார்.

எனக்கு எரிச்சல் வந்தது. ஏதோ காலை சுற்றின பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கே! என்று அவரை மனதுக்குள் திட்டிக்கொண்டே "கண்டிப்பாக பிழைப்பான் இவன்" என்று அகத்தியர் சொன்னதை அப்படியே படித்தேன்.

"நான் இதை நம்பவில்லை" என்று சொன்னவர், சட்டென்று கையில் இருந்த பூச்சி மருந்து பாட்டிலை எடுத்து, அதன் மூடியை திறந்து, அதில் மீதி இருந்த விஷத்தை மடமடவென்று குடித்தார்.

சித்தன் அருள்.................. தொடரும்!

2 comments:

  1. I am delighted to read and know the Agathiyar arul vakku through your blog. Thank you. I also hope that one day Agathiyar will be giving his good lessons and good records for me and my wife who are now above 60. We want love and peace from all our friends and relatives. For now, from relatives is a question mark. May Agathiyar help me to have peaceful life hereafter.

    ReplyDelete