​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Friday, 18 March 2011

சித்தன் அருள் - 20


"பத்ராசலம்" சென்றால் பல அதிசயங்கள் நடக்கும் என்று அகத்தியர் சூசகமாக முன்கூட்டியே சொன்னது "இப்படி வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு திண்டடுவதர்க்குத்தானோ" என்று நினைத்தேன்.

சுற்றும் முற்றும் பார்க்கும்போது கோதாவரி வெள்ளம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிப்பது போல் தோன்றியது.  இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளம் வடிய குறைந்தது பத்து நாட்களாவது ஆகும் போல் தெரிந்தது.

கோவிலை சுற்றி கீழே அமைந்திருந்த வீடுகள், கடைகள் எல்லாம் இடுப்பளவு வெள்ளத்தில் மூழ்கி இருந்ததால், மலையை விட்டுக் கீழே இறங்கி பஸ் நிலையத்திற்கோ, ரயில்வே நிலையத்துக்கோ செல்ல முடியாத நிலை.

மனதை அமைதிபடுத்தினேன்.

"சரி.  இந்த ராமர் சந்நிதானத்திலேயே அமர்ந்து அகத்தியரிடம் கேட்டு விடுவோம்" என்று எண்ணி நாடியைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன். அகத்தியர் சொன்ன தகவல் என்னை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது.

அந்த தகவல்

"ராம பக்தர் ராமதாஸ் பற்றி அறிந்து இருப்பாய்.  அரசாங்க கஜானாவைக் கொள்ளைஅடித்து ராமபிரானுக்கு, ராமதாஸ் கட்டிய கோவில் இது.  இதனால் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் செய்தது தவறு என்பதால் அதற்குரிய தண்டனையைப் பெற்றாலும், அவர், தன் மீது கொண்ட பக்தியைக் கண்டு மெச்சினார் ராமர்.  ராமதாஸ் இருந்த சிறைக்கு ராமர் வந்து மங்களகரமாக காட்சி கொடுத்த நாள் இன்று தான்."

ராமார் காட்சி கொடுத்த அந்த புனித நாளன்றும் கோதாவரியில் வெள்ளம் வெகுண்டோடியது.  அதே போல் இன்றும் எதிர்பாராத விதமாக வெள்ளம் ஓடுகிறது.  ராமதாசுக்கு காட்சி கொடுத்த பின்னர், சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம் அவர் இந்தக் கோவிலுக்கு வந்ததும் இதே தினத்தில் தான்.  அந்த புனிதமான நாளன்று உனக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று தான் இங்கு வரவழைத்தேன்."

இன்னும் ஒன்றை நாழிகையில் இங்குள்ள கர்ப்ப கிரகத்திற்குள் ராமார் அரூபமாக வருவதால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  எந்த விதக் காரணம் கொண்டும் கண்ணைத் திறக்காமல் ராமரையே நினைத்திரு.  உன் நினைவலையில் ராமார் வருவதைக் காணலாம்.

ஒரு நாழிகையே அவரது தரிசனம் இங்கு கிடைக்கும், பின்பு, படி வழியாக இறங்கும் ராமர், கோதாவரி தாய்க்கு பூக்களால் நமஸ்காரம் செய்வார்.  தீப ஆரத்தியும் கட்டுவார்.  அதையும் உன் த்யானத்தில் பார்க்கலாம்.  அந்த தீப வழிபாடு முடிந்த பின்னர், கோதாவரி அன்னையின் ஆவேசம் தணியும். நான்கு மணி நேரத்தில் வெள்ளமும் வடியும்.  பிறகு, நீ இறங்கிச் செல்லலாம்" என்று அகத்தியர் அருள் வாக்கு அருளினார்.

இதைப்படித்து முடித்த பிறகுதான் எனக்கு மூச்சே வந்தது.

கண்ணில் அந்த ஓலைக்கட்டை ஒற்றி கொள்ளும் பொது ராமர் கோவிலின் நிர்வாக அதிகாரி இதை பார்த்து விட்டார்.  சில நிமிடங்களில் தயங்கியபடியே என்னிடம் வந்தார்.  நாடியைப் பற்றி விசாரித்தார்.  எல்லாவற்றையும் சொல்லாமல் நாடியைப் பற்றி மேலோட்டமாகச் சொன்னேன்.

இதை அவர் கொஞ்சமும் நம்பவில்லை.

"அப்படியோரு அபூர்வ சக்தி இந்த ஓலையில் இருந்தால் உலகத்தில் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்திருக்கலாமே? ஏன் செய்யமுடியவில்லை?" என்று நம்பிக்கை இல்லாதது போல் பேசினார்.

நம்பிக்கை இல்லையென்றால் விட்டு விடுங்கள் - இது நான்

அவர் விட்டபாடில்லை.

"என்னை பற்றி அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதை இப்போதே கேட்டுச் சொல்லுங்கள்" என்று பிடிவாதம் பிடித்தார்.

தர்ம சங்கடமான சூழ்நிலை.  காரணம், அகத்தியர் சொற்படி இன்னும் அரை நாழிகை கழிவதற்குள் ராமபிரானை தரிசிக்க நான் த்யானம் செய்ய துவங்க வேண்டும்.

"கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.  இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து தங்களுக்கு ஜீவநாடி படிக்கிறேன்" என்று அவரை சமாதானப் படுத்தினேன்.

நான் அவரை பகைத்து கொள்ள முடியாத நிலை.  ஏனெனில் கோவிலைச் சாற்றப் போகிறேன் கீழே போய் நில்லுங்கள் என்று அவர் என்னை வெளி ஏற்றலாம்.  அகத்தியர் சொற்படி நமக்கு தரிசனம் கிடைக்காமல் போய் விடுமோ?" என்ற சுயநலம் கலந்த பயம் தான்.

என் நல்ல காலம், கோவில் நிர்வாகி நான் சொன்னதை ஏற்றுக் கொண்டார்.  கோவில் பிரசாதத்தைக் கொடுத்து, கோவிலுக்குள் மழை நீர் வராத இடத்தில் அமர வைத்து உபசரித்தார்.  இது எனக்கு ஆச்சரியமளித்தது.

அகத்தியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, ராமரை நோக்கி த்யானத்தில் ஆழ்ந்தேன்.

அகத்தியர் ஜீவா நாடியில் கூறியது போல், சரியாக ஒன்னரை நாழிகை ஆனதும் பூட்டியிருந்த கார்ப கிரகம் திறக்கப்பட்டது.  யாரோ உள்ளே செல்வது போல் தோன்றியது.  அபூர்வமான மலர்களின் வாசனை மூக்கை துளைத்தது.  வாசனை திரவியங்களுக்கு நடுவே வேத மந்திர கோஷம் மங்களமாக காதில் விழுந்தது.

ஆஜானுபாகுவான உருவம் மெல்ல, கருவறையிலிருந்து வெளியே வர, அதனை தொடர்ந்து மூன்று உருவங்கள் சட்டென்று வெளியேறியது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.

கண்ணை மிக நன்றாக மூடிக் கொள்ள, ராம மந்திரம் தானாக என் நாவிலிருந்து வெளியே வந்தது.  பரவசமுடன் த்யானத்தை தொடர்ந்தேன்.

கோவில் கருவறையில் இருந்து வெளியே வந்த அந்த நான்கு பெரும் கோதாவரி நதிக்கரையில் நிற்பது போலவும், கோதாவரி அன்னைக்கு மங்கள ஆரத்தி கட்டுவது போலவும் என் மனக்கண்ணில் தோன்றியது.  சில வினாடிகள் கழித்து, அந்த காட்சி கண்ணிலிருந்து மறைந்தது, மெல்ல கண்ணைத் திறந்தேன்.

என் முன்னே அந்த கோவிலின் அதிகாரி நின்று கொண்டிருந்தார்.

"என்ன?" என்று கேட்டேன்.

"யாராவது கர்ப கிரகத்துக்குள் போனார்களா?  நீங்கள் பார்த்தீங்களா?" என்று கேட்டார்.

"ஏன்? என்ன விசேஷம்?" ஒன்றும் தெரியாத மாதிரி கேட்டேன்.

"இல்லை நைவேத்யம், பழங்கள் கடிக்கபட்டிருக்கிறது.  பால் அளவு குறைந்திருக்கிறது.  மாதுளையை உடைத்து முத்துக்களை சாப்பிட்டதால் தோல் மாத்திரம் தனியே கீழே விழுந்திருக்கிறது.  இதனால் தான் கேட்டேன்" என்றார்.

அவர் இதை சொல்லும்போது எனக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி.  ராமர் வந்தார்.  அவருக்கு பிடித்த மாதுளையை ருசித்துச் சென்றிருக்கிறார், என்ற சூட்சமத்தை புரிந்து கொண்டேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு அந்தக் கோவில் அதிகாரியே தொடர்ந்தார்.

"இது அடிக்கடி நிகழும் நிகழ்ச்சியல்ல.  ஒருவேளை இங்கிருக்கும் இரண்டு மூன்று குரங்குகள் செய்த சேட்டையாக இருக்கும்" என்று தனக்குத்தானே கூறிக்கொண்டார்.

அப்பாடா என்று மனதில் சொல்லி கொண்டேன்.

"இப்போ எனக்கு அகத்தியர் நாடி படிக்கலாமா?" என்று கேட்டார்.

சரி என்றேன்.

அவருக்காக நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து நன் நெறிகளை கடைபிடிக்க முயன்றாய்.  ஆனால் உன் முன்னோர் செய்த ஊழ்வினையின் பயனாய் பெண் ஒருத்தியோடு தகாத உறவு கொண்டு வாழ்ந்து வருகிறாய்.  பெற்றோருக்காக முறைப்படி மணம் செய்த பெண்ணோடு வாழ்ந்து வந்தாலும், அவர்கள் இருவருக்குமே துரோகம் செய்கிறாய்.  இருவரது வயதெரிச்சலும்  உன்னைத் தாக்குவதால், நீ இன்னும் ஒரு வருஷத்தில் பக்கவாத நோயால் பாதிக்கபடுவாய்.

இருப்பினும், அகத்தியனை நாடிக் கேட்டதால் அத்தகைய கொடிய பாவத்திலிருந்து நீங்க ஒரு வழி உண்டு.  இந்த ராமர் கோவிலில் அபகரித்த சொத்தைக் கொண்டு பணத்தை, உன் வீட்டு நெல் தானியத்தில் புதைத்து வைத்திருக்கிறாய்.  அதை மீண்டும் இந்த கோவில் உண்டியலில் சேர்த்து விடு.

மனைவி, துணைவி அவர்கள் இருவருமே முன் ஜென்மத்தில் உனக்கு மனைவிகளாக இருந்தவர்கள் என்பதால், அவர்கள் இருவரையும் எல்லோர் முன்னிலையில் மனைவிகளாக ஏற்று கொள். இதனால் சில பாதகங்கள் ஏற்படும். அது உன் கர்ம வினை. அதை அனுபவித்தே தீர வேண்டும். பின்னர் அகத்தியனை நோக்கி ப்ராத்தனை செய். நல்ல வழி கிடைக்கும்" என்று அகத்தியர் தன் அருள்வாக்கை கூற அந்த கோவில் அதிகாரி அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.

"அப்படி நான் இரு தார வாழ்க்கை வாழ்ந்தால் இந்த பொறுப்பிலிருந்து என்னை தூக்கிவிடுவார்களே" என்று பயந்தார்.

"போனால் போகட்டும், பக்க வாத நோய் வராமல் தப்பித்துக் கொள்வீர்களே" என்றேன்.

இதை அவர் ஏற்க்கவில்லை.

விதி யாரை விட்டது? என்று நினைத்துக்கொண்டேன்.

3 comments:

  1. வணக்கம் ஐயா. பத்ராசல ராமபிரான் எந்த மாதம் நாள் கோதாவரி அன்னைக்கு பூஜை செய்தார் என்று தெரியப்படுத்தவும். நான் தெலுங்கானாவில் உள்ளதால் அந்த தரிசனம் நல்கிட அகத்தியரை ப்ரார்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசி

      Delete