அவரோ, உதட்டோரம் வழிந்த அந்த விஷத்தை அப்படியே துடைத்துக் கொண்டு அமர்க்களமாக சிரித்தார்.
"அய்யா! மீதமுள்ள விஷத்தையும் குடித்து விட்டேன். இப்போ நான் எப்படி பிழைக்க முடியும்? அகத்தியர் சொன்னது தப்புதானே?" இந்த கேள்விக்கு மாத்திரம் பதில் சொன்னால் போதும்" என்று சொன்னார்.
எனக்கு உடம்பு வெல வெலத்துப் போயிற்று. இனியும் தாமதிக்க கூடாது. ஏதாவது செய்து இவரை இந்த இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கிளப்பியே ஆக வேண்டும் என்று மனசு படபடவென்று அடித்து கொண்டது.
அவரை வாசலில் உட்கார வைத்து விட்டு பூசை அறைக்குச் சென்றேன். சில நாட்களுக்கு முன்பு எனக்கு கிடைத்த பழனி நவபாஷாண முருகன் விபூதி பிரசாதமும், சந்தனக் காப்பு பிரசாதமும் என் கண்ணில் தென்பட்டது. அதில் சிறிது எடுத்து கொண்டு, வேகமாக வாசலுக்கு ஓடி வந்தேன்.
"இதை சாப்பிடுங்கள்" என்று அந்த பிரசாதத்தை கொடுத்து, தண்ணீரும் கொடுத்தேன்.
என்ன நினைத்தாரோ தெரியாது, நான் கொடுத்த விபூதி, சந்தனத்தை அப்படியே சாப்பிட்டார். சுற்று முற்றும், என்னையும் உற்றுப் பார்த்துவிட்டு "அப்போ நான் வரட்டுங்களா?" என்று நிதானமாக சொல்லி விட்டு புறப்பட ஆயுத்தமானார்.
எப்போடா இந்த இடத்தை விட்டு கிளம்புவார்? என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு அவரது வார்த்தைகள் நிம்மதியை தந்தது.
"சரி ஜாக்கிரதையாக போயிட்டு வாங்க, பக்கத்திலதான் ஆஸ்பத்திரி இருக்கு, அங்கே உடனே போறது நல்லது!'"
"எதுக்கு?"
"விஷம் சாப்பிட்டிருக்கீங்க உடனே போங்க. நான் வேணா துணைக்கு வரட்டுமா? என்றேன்.
"வேண்டாம், நானே போய்க்கறேன். அதான் அகத்தியரே சொல்லிவிட்டாரே, எனக்கு மரணமில்லைன்னு. பிறகு எதுக்கு ஆசுபத்திரிக்கு போகணம்? என்று கிண்டலாக சொல்லிவிட்டு சென்றார்.
அவர் செல்வதை பார்த்தேன். நடையில் உறுதி இருந்தது. அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன். இவருக்கு எந்த வித ஆபத்தும் வந்து விடக்கூடாதே என்று.
அன்று ராத்திரி முழுவதும் எனக்குத் தூக்கமே இல்லை. எந்த நிமிடத்தில் எந்த செய்தி வருமோ என்று. அரைமணிக்கு ஒருமுறை வாசலிலேயே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
விடியல் காலை மூன்று மணி ஆயிற்று. வழக்கம் போல அகத்தியரை வழிபட்டு, "அந்த பெரியவர் எதற்காக என்னை வந்து சங்கடபடுத்த வேண்டும்? அவர் இப்போது உயிரோடு இருக்காரா? இல்லையா?" என்று நாடியில் கேட்டேன்.
"இனிய மைந்தா! அவன் உயிரோடு தான் இருக்கிறான். அதோடு அவனுக்கு இருந்த நீண்ட நாள் குடல் வியாதியும் தீர்ந்து விட்டதால், ஆரோக்கியமாகவும் இருக்கிறான்" என்றார் அகத்தியர்.
"இருபது ஆண்டுகளாக நாடோடியாகத் திரிந்த அவனுக்கு குடல் நோய் ஏற்பட்டது. எங்கு சென்று வைத்தியம் பார்த்தும் குடல் நோய் தீரவில்லை. கடைசியாக யாரோ சொல்லி கொல்லிமலைக்குச் சென்றான். அங்கிருக்கும் சித்தர்கள் கொடுத்த மூலிகைகள் ஓரளவுக்கு பலன் தந்தது. ஆனால், முழுமையான பலன் தரவில்லை. கடைசியாக என்னை நோக்கி இங்கு வந்தான். சிவபக்தனாக இருப்பதால் அவன் நோயை குணபடுத்தலாம் என்று யாம் நினைத்தோம். அதற்குள் வயிற்று வலி தாங்காமல் விஷம் குடித்து விட்டு இங்கு வந்தான். அவசரப்பட்டு எடுத்த முடிவிலும் ஒரு நன்மை கிடைத்தது. அந்த நபரை காப்பாற்ற, நீ கொடுத்த அந்த நவபாஷாண விபூதி பிரசாதமும் சந்தன பிரசாதமும், அவனது குடல் நோயை முற்றிலும் குணமாக்கிவிட்டது. இலையெனில் அவன் புற்றுநோய் வந்து அவதிப்பட்டு இருப்பான் என்றார்.
"அப்படியானால் அவர் குடித்த விஷம்?"
"அகத்தியனை முழு அளவில் நம்பி இங்கு வந்ததால், அவன் குடித்த விஷத்தை நவபாஷாண முருகப்பெருமானுடைய விபூதியும் சந்தனமும் முறியடித்து விட்டது. இந்த விஷத்தை அருந்தினானே, அதுவே நவபாஷாண விபுதியோடும், சந்தனத்தோடும் கலந்து நீண்ட காலமாக இருந்து வந்த அவன் நோய்க்கு நல்லதொரு மாமருந்தாக மாறிவிட்டது" என்றார்.
"ஆச்சரியம் தான்!" என்று அதிசயித்தேன்.
"இதிலென்னடா ஆச்சரியம் இருக்கிறது. இனி அவன் வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடக்கபோகிறது. அதை கேட்டு நீயும் விழி உயர்த்தி வியக்க போகிறாய்" என்று முடித்தார் அகத்தியர்.
"எல்லாம் சரி, கோடிஸ்வரராக இருந்த அவர், வாழ்க்கை வெறுத்து பரதேசியாக மாறினார். தங்கள் அருள்வாக்கால் அவர் தன் குடும்பத்தாரோடு மீண்டும் இணைய வழிகாட்டக் கூடாதா?" என்று ஆதங்கத்தோடு கேட்டேன்.
"சில காலம் பொறுத்திரு. உனக்கு அவனை பற்றித் தகவல் வரும். அதற்கு முன்பு சில சோதனைகளை அவன் சந்திக்க வேண்டி இருக்கும்" என்று சொல்லி முடித்துகொண்டார்.
அகத்தியர் இதை சொல்லி முடிக்கவும், தட தட வென்று ஏழெட்டு பேர்கள் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் கையில் கூர்மையான ஆயுதங்கள் பல இருந்தன. பார்வையில் கொடூரம் தெரிந்தது. அவர்கள் கேட்ட முதல் கேள்வி இது தான்.
"நேத்திக்கு ஏதோ சாமியார் மாதிரி ஒருத்தர் இங்கே வந்தாராமே? இப்போ எங்கே இருக்கார்னு தெரியுமா?"
அவர்களின் மிரட்டல் தொனி அதிர வைப்பதாக இருந்தது.
பயத்தில் எனக்கு நாக்கு ஒட்டி கொண்டு பேச்சு வர மறுத்தது.
சித்தன் அருள் .................. தொடரும்!
edhuvum nambukiramari ilaya?
ReplyDeleteulagathila 600 kodi makkal irukanga ...
ellarukuma thani thaniya eludji vechi irukar....
apo...
evlo eludhi irukanumae........
ivlo thuliya solamudiyadhu.....
Om Agatheesaya Namah
ReplyDelete