​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Tuesday, 8 March 2011

சித்தன் அருள் - 2


முழங்கால் முடிச்சு என்று அழைக்கப்படும் காளி கோபுரத்துக்கு சென்ற அந்த தம்பதிகள் அங்கு தேடி பார்த்தபோது அந்த குழந்தையை காணவில்லை. இதை கண்டு கலங்கி போனார்கள்.

அகத்தியர் நாடியில் வந்த செய்திப்படி எட்டு மணி நேரத்துக்குள் அவர்கள் திருப்பதியில் உள்ள காளி கோபுரத்துக்கு சென்றிருக்க வேண்டும்.  ஆனால் அவர்கள் அங்கு சற்று தாமதமாகச் சென்றதால், அவர்களால் தங்களது குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இருப்பினும் அங்கு வருவோர் போவோரிடம் தங்கள் குழந்தையின் அங்க அடையாளத்தைச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். யாரும் சரியாகச் சொல்லவில்லை. எனவே கதி கலங்கி அழுது கொண்டே மலை மீது ஏறி இருக்கிறார்கள்.

திருமலையை அடைவதற்கு முன் ஓரிடத்தில் குழந்தையின் சட்டை ஒன்று அவர்கள் காலில் மிதி பட்டிருக்கிறது. யதேச்சையாக அதை எடுத்து பார்த்த போது அது அவர்களது குழந்தையுடையது போல் தெரிந்தது. யோசித்து பார்த்த போது, அந்த குழந்தை காணாமல் போன போது அந்த சட்டைதான் அணிந்திருந்தது. அவர்களுக்கு பதட்டம் கூடியது.

அந்த சட்டை கிடைத்தவுடன் மலை மீதிலிருந்து எனக்கு தொலைபேசி மூலம் பேசினார்கள்.

"என் குழந்தை உயிரோடு கிடைப்பாளா? இல்லை அந்த பாவி குழந்தையை கொன்று எங்கேயாவது வீசிவிட்டானா? என்று பயமாக இருக்கிறது" என்று கேட்டனர்.

"அகத்தியர் சொன்னால் அது பெரும்பாலும் நடக்கும். சிலசமயம் பல வேறு சோதனைகள் ஏற்பட்டு, அதையும் தாண்டி நல்லபடியாக முடியும். எனவே பயப்படவேண்டாம், போலீசில் புகார் கொடுத்தீர்களா?" என்று கேட்டேன்.

"போலீசில் புகார் கொடுக்கவில்லை. எங்களுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும், ஆங்கிலம் அல்லது தெலுங்கு தெரியாது. நாங்கள் சொல்லறதை இங்குள்ள போலீஸ்காரங்க புரிஞ்சுக்க முடியுமோ? முடியாதோ? தெரியவில்லை. என்ன செய்யலாம்?" என்று கேட்டனர்.

"எதற்கும் போலீசில் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துவிடுங்கள், யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள்" என்றேன்!

அவர்களுக்கு என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லை. ஏனென்றால் முழங்கால்முடிச்சு காளி கோபுரத்தில் குழந்தையை காணவில்லை என்றவுடனே இருக்கிற நம்பிக்கை அத்தனையும் இழந்துவிட்டனர்.

போதா குறைக்கு அந்தக் குழந்தையின் கவுன் மட்டும் கிடைத்ததும் நிச்சயம் தங்கள் குழந்தை உயிரோடு இல்லை என்ற முடிவுக்கு ஏறத்தாழ வந்து விட்டனர்.

அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்து விட்டு இதை பற்றி ஒரு வார்த்தை அகத்தியரிடம் கேட்டு விடலாம் என்றெண்ணி அவர்கள் சார்பாக நாடியை பார்க்க ஆரம்பித்தேன்!

"இழந்த பெண் குழந்தையை அந்த பெற்றோர் மீண்டும் திருமலையிலேயே பெறுவார்" என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார், அகத்தியர்.

இதற்கிடையில் திருமலையில் குழந்தையை தேடி அந்த பெற்றோர் புலம்பியதை பலர் பார்த்து பரிதாபத்துடன் விசாரித்தனர்.  இந்த விவரங்கள் மற்ற பக்தர்களிடமும் பரவியது. குழந்தையை கடத்தியவன் காதுக்கும் இந்த தகவல் எட்டியது.

எங்கே தான் பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் அந்த குழந்தை அணிந்திருந்த கவுனை கழற்றி ஓரத்தில் போட்டு விட்டு குழந்தையை மட்டும் தோளில் தூக்கிக்கொண்டு மலை ஏறி இருக்கிறான்.

இரண்டு நாளாக பெற்றோரை இழந்த அந்த குழந்தை, ஊர் விட்டு ஊர் வந்ததினாலும், சரியாக சாப்பிடாததினாலும், ஜுரம் வந்து ஜன்னி கண்டு புலம்ப ஆரம்பித்து இருக்கிறது.

இதை கண்டு பயந்து போன அவன், இந்த குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் காளிக்கு பலி கொடுக்க முடியாது. வேறு பிரச்சினையிலும் மாட்டி கொள்ள கூடாது என்றெண்ணி, அந்தக் குழந்தையை திருமலையில் உள்ள ஆஸ்பத்ரியில்  வேலை பார்க்கும் ஆயா ஒருத்தியை கண்டு, டாக்டரிடம் காட்டி முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.

இந்த குழந்தையின் பெற்றோர் எங்கே என்று தேடிய போது யாரும் காணவில்லை என்பதால் திருமலை போலீசில் தகவல் கொடுக்கபட்டது.

திருப்பதி பெருமாளின் கருணையால் அந்த குழந்தை பிழைத்துக்கொண்டது. அதே சமயம் திருமலை போலீசார் "மைக்" மூலம் யாராவது பெண் குழந்தையை தவற விட்டிருந்தால் போலீஸ் நிலையத்துக்கு வரவும் என்று அறிவித்தனர்.

ஆனாலும், அந்த குழந்தையின் பெற்றோருக்கு இந்த அறிவிப்பு எதுவும் காதில் சரியாக விழவில்லை. எல்லா இடத்திலும் குழந்தையை தேடி பார்த்துவிட்டு நொந்து போனார்கள்.

அப்பொழுது தான் அவர்களுக்கு அகத்தியர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. "குழந்தையை கடத்தியவன் இரண்டு நாள் திருப்பதியில் தங்கி இருப்பான்! அதற்குள் போலீஸ் உதவியுடன் குழந்தையை மீட்டுவிடலாம்". அடித்து புரண்டு போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். நல்ல வேளையாக போலீஸ் நிலையத்தில் தமிழ் தெரிந்தவர்கள் இருந்ததால், எல்லா விஷயத்தையும் கேட்டு கொண்டு, தைரியம் சொல்லி அப்படியே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கே, அவர்கள் குழந்தை இருந்ததை கண்டு "இது தான் எங்கள் குழந்தை" என்று உறுதிபடுத்தி, குழந்தையை அப்படியே அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தனர்.

தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்டு ஊருக்கு வரும்போது கண்டிப்பாக வந்து பார்ப்பதாக சொன்னார்கள்.

எல்லாம் ஒரே அதிசயமாக இருந்தது.  சில கேள்விகளும் எழுந்தது! குழந்தையை தூக்கி கொண்டு போனவன், நேரடியாக காளி கோவிலுக்கு அந்த குழந்தையை எடுத்து செல்லாமல் எதற்காக அந்தக் குழந்தையோடு திருப்பதிக்கு சென்றான்?  இதற்கு என்ன காரணம் என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது.

இதையும் அகத்தியரிடமே கேட்கலாம் என்று நினைத்து நாடியை பிரித்து பார்த்தபோது எனக்கு கிடைத்த தகவல்கள் அதிரவைத்தது.

தூக்கி சென்றவனை பற்றியும், காளி கோவிலை பற்றியும், காளிக்கு நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்று சொன்னவனை பற்றியும் வந்த தகவல்களை, உண்மையாகவே ஜீரணிக்க முடியவில்லை.

சித்தன் அருள்.................... தொடரும்!

5 comments:

 1. Thank god! the parents found their kid..

  ReplyDelete
 2. Dear Sirs ,

  Thanks for eye opening article. I would like to see the naddi jothidam . Kindly advise me the address and contact details.

  Thanks
  Eswarakumar.C

  ReplyDelete
 3. உங்கள் விலாசம் தருமாறு வேண்டுகிறோம்

  ReplyDelete