​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 7 March 2011

சித்தன் அருள் - 1


நாடியை பற்றி தெரிந்தவர்கள் நிறைய பேர். தமிழ்நாட்டில் எத்தனையோ அதிசயங்கள் உண்டு!  அதில் ஒன்று தான் நாடி.  இது நமது எதிர்காலத்தை அல்லது கடந்தகாலத்தை பற்றி துல்லியமாக தெரிந்து கொள்ள சித்தர்களால், நமக்காக எழுதிவைக்கபட்டவை.  இது மிகவும் அற்புதமானது. நாடியிலிருந்து வரும் விளக்கங்களை, பரிகாரங்களை செய்து தங்கள் வாழ்க்கையை சரி செய்து கொண்டவர்கள், ஆரோகயத்தை, அமைதியை வாழ்வில் திருப்பி பெற்று கொண்டவர்கள் ஏராளம். சரி! சித்தர்கள் யார்?

முக்காலத்தையும் அறிந்தவர்கள். ஞானிகள்.  ஒரு கம்பெனி தலைவருக்கு செக்ரட்டரி போல, இறைவனுக்கு தூதுவர்கள். இறைவனை பிரார்த்தனை செய்தும் நற்காரியம் எதுவும் பெறாத பக்தர்கள் பலர், இவர்களை நாடி வந்து, இவர்கள் மூலம் நன்மை பெற்றவர்கள் ஏராளம்.  இந்த அதிசயம் உலகில் வேறு எங்கும் நடப்பதாக தெரியவில்லை.

ஒரு சமயம் சித்தர்கள் அனைவரும் இறைவனிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். "யாரெல்லாம் தங்களை நாடி, பிரச்சினைகளை சொல்லி, சரணடைந்து விடுகிறார்களோ, அவர்கள் முற்பிறவியில் எவ்வளவு கொடுமைகாரர்களாக இருந்தாலும், அவர்கள் இப்பிறவியில் தண்டனை அடையாமல் காப்பாற்றி அருள வேண்டும்."

இறைவனும் சித்தர்களது வேண்டுகோளை ஏற்றார். அடுத்த வினாடியே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஓலை சுவடி மூலம் பாவத்தை தீர்க்க, கஷ்டங்களை போக்க, வியாதி கொடுமைகளை போக்க, குடும்பத்தில் காணப்படும் பிரமஹத்தி தோஷம் போக்க வழிமுறைகளை செந்தமிழ் பாட்டில் எழுதி வைத்து விட்டார்கள்.  இப்படி அவர்கள் எழுதி வைத்த ஓலை சுவடிக்கு பெயர் தான் "நாடி". நம் பிரச்சனைகளை தீர்க்க நாம்தான் சித்தர்களை தேடி போகவேண்டும்.  அவர்களாக வரமாட்டார்கள்.

இனி சில நிகழ்ச்சிகளை பார்ப்போம்! அந்த பெரியவர் (என் அபிமான நண்பர்) மனித குல ஷேமத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரிடம் ஜீவநாடி என்கிற சித்தர் ஏடு இருந்தது.  பலருக்கும் பார்த்து பதில் சொல்பவர். நாடியில் வந்த, நடந்த நிகழ்ச்சிகளை அவர் சொல்வதாகவே நினைத்து பார்ப்போம்!

அது ஒரு வெள்ளிகிழமை காலை ஒன்பது மணி இருக்கும். வழக்கம் போல அகத்தியருக்கு பூசை செய்துவிட்டு வெளியே வந்தேன்.  வீட்டு வாசலில் ஒரு இளம் தம்பதியர் மிகுந்த பதட்டத்தோடு, அதே சமயம் பரிதாபமாக நின்று கொண்டு இருந்தார்கள்.

அவர்களை வீட்டுக்குள் அழைத்து என்ன விஷயம் என்றேன்!

"எங்களுக்கு நாடி பார்க்கணும்" என்றார்கள்.

"எது விஷயமாக?" என்று வினவினேன்

"அது அகத்தியருக்கு தெரியும்! தயவுசெய்து மறுக்காமல் நாடி படிக்க முடியுமா?" என்றார்கள்.

"என்னிடம் இருப்பது ஜீவ நாடி.  சட்டென்று படிக்க முடியாது. அகத்தியரிடம் உத்தரவு கேட்கிறேன்.  அவர் சம்மதித்தால் படிக்கிறேன்" என்றபடி காலண்டரை பார்த்தேன்!

அன்றைய தினம் "அஷ்டமி" என்று போட்டிருந்தது.

பொதுவாக, அஷ்டமி, நவமி திதிகளிலும், கார்த்திகை, பரணி நட்சத்திரத்திலும் அகத்தியர் யாருக்கும் அருள்வாக்கு கொடுப்பதில்லை.

அவர்களிடம், திதி விஷயத்தை சொல்லி "இன்றைக்கு அகத்தியர் அருள் வாக்கு தரமாட்டார்.  அப்படியே நாடியை படித்தாலும் நல்ல வாக்கு வருமா என்பது சந்தேகம்.  ஆகவே, இரண்டு நாள் பொறுத்து வந்தால் நாடி படிக்கிறேன்" என்று சமாதானம் செய்து பார்த்தேன்.

இதை கேட்டதும் அவர்களுக்கு அழுகையே வந்து விட்டது.

"நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். திரும்பி போயிட்டு வர்ற மாதிரி இல்லை.  எப்படியாவது இன்னிக்கு அகத்தியர்கிட்டே பதில் கேட்டே ஆகணும். அவர் தவறாக எதுவும் சொல்லமாட்டார்னு நம்பறோம். எங்க மன வருத்தத்தை அவர் தாங்க போக்கணம்" என்றனர்.

"உங்க நிலை எனக்கு புரியுது.  வேறு யாரவது நாடி படிக்கிறவர்கள் இருந்தால் அங்கு செல்லலாமே" என்றதும் "இல்லைங்க! உங்ககிட்ட தான் நாடி பார்க்கணும்" என்பதிலேயே பிடிவாதமாக இருந்தனர்.

ஜீவ நாடி மற்ற நாடி போல அல்ல. அகத்தியர் மனம் வைக்க வேண்டும். ஏற்கனவே இந்த மாதிரி திதியில் பலருக்கு படித்து, அது சரியாக நடக்காமல் போன கதைகள் நிறைய உண்டு.

சரியாக எதுவும் நடக்காமல் போனாலும் பரவாயில்லை.  நேர் எதிர்மறையாக ஏதேனும் கெட்டதாக நடந்துவிடகூடாதே என்ற பயம் உண்டு.  ஜீவ நாடியை படிக்க அவர்கள் இத்தனை நிர்பந்தப்படுத்துவதில் எதாவது விஷயம் இருக்கும் என்று நினைத்து, "சரி! அகத்தியரிடம் பிரார்த்தனை பண்ணி நாடியை படிப்போம்.  அவர்களுக்கு பாக்கியம் இருந்தால் அவர் அருள் தரட்டும்" என்று தீர்மானித்து அவர்களை உட்கார சொல்லிவிட்டு நாடியை பிரித்து படித்தேன்!

"இரண்டு நாட்களுக்கு முன் உங்களுடைய பெண் குழந்தை காணாமல் போய் விட்டது.  அதை பற்றி தான் கேட்க வந்திருக்கிறீர்கள் இல்லையா?" என்று நாடியில் வந்த தகவலை வைத்து அவர்களிடம் கேட்டேன்.

அவர்களுக்கு அழுகை வந்து விட்டது.

"ஆமாம்! அந்த குழந்தை இப்போ எங்கிருக்கிறது? எப்போது எங்களுக்கு கிடைக்கும்? அந்த குழந்தை உயிரோடு இருக்கா?" மிகுந்த ஆவலோடு கேட்டனர்.

"அந்த குழந்தை உயிரோடு தான் இருக்கிறது" என்றதும் அவர்கள் மனதில் இருந்த வேதனை அப்படியே குறைந்ததை முகம் காட்டிகொடுத்தத்து.

"அந்த குழந்தையின் ஆயுளுக்கு பாதகமில்லை. அது உங்க கையிலே கிடைக்கணும்னா, இன்னும் எட்டு மணி நேரத்துக்குள்ளே திருப்பதி போகணும்!" என்றேன்

"என்ன? எங்க குழந்தையா திருப்பதிக்கு தூக்கிட்டு போயிட்டாங்கள? அங்கே போய்  எங்கே தேடறது? என்று கதி கலங்கி புலம்பினார்கள் அந்த பெற்றோர்.

"இங்கிருந்து பஸ்ல போன நாலு மணிநேரம் ஆகும். அங்கிருந்து பொடி நடையா மலைக்கு ஏறுகிற பாதையிலே நடந்து போனா, முழங்கால் முடிச்சு கோபுரம் வரும். அந்த கோபுரத்திலே ஒரு ஓரமா உங்க குழந்தை இருக்கு. அந்த குழந்தையை தூக்கிட்டு வந்தவன் திருப்பதி மலையிலே இரண்டு நாள் தங்கி இருப்பான்.  அதுக்குள்ளே நீங்கள் போலீஸ் உதவியோடு உங்க குழந்தையை மீட்டு விடலாம்" என்று ஜீவ நாடியில் அகத்தியர் விலாவாரியாக சொன்னதை அப்படியே அந்த தம்பதியரிடம் தெளிவாக சொன்னேன்!

"இப்பவே போறோம்" என்று சென்றனர்.

"எதற்காக இவர்கள் குழந்தையை கடத்தணும்? யார் அவன்? ஏதாவது சொத்து பிரச்சனையாக இருக்கும்" என்று நினைத்தேன்.  ஆனால் அதுவல்ல உண்மை.

"இந்த குழந்தையை பத்ரகாளி அம்மனுக்கு உயிரோடு காவு கொடுத்தா புதையல் கிடைக்கும்னு யாரோ சொன்னதால், அந்த புதையலை பெறுவதற்காக இத்தகைய ஈனச்செயலை அந்த பாவி செய்திருக்கிறான்" என்று எனக்கு அகத்தியர் நாடியில் சொன்னார்.

அந்த தம்பதியருக்கு எதற்காக அந்த குழந்தையை கடத்தினார்கள் என்பது தெரியாது. அஷ்டமி தினத்தன்று அகத்தியர் தனது நாடி வழியாக முதன் முறையாக, அவர்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டிவிட்டார் என்று நினைத்தேன்.

ஒரு அதிர்ச்சியான தகவல் அன்று மாலை எனக்கு வந்தது!

சித்தன் அருள்...................... தொடரும்!

17 comments:

 1. vanakkam. tharchayalaha naan entha blog parka
  naerittathu. mehavum nandraha ullathu.naan eppadi
  ungaludan thaudrbu kollvathu.naan vayathanavan.
  enava vazhi chollavum. naan thaduvathu ghanathai
  patri
  anbudan venkat

  ReplyDelete
 2. _/\_ Om SivaSiva Om _/\_ Good Beginning!
  Om Shri Lobamuthirai Agatheesaya Namaha!

  ReplyDelete
 3. அகஸ்தியர் azagutum azagana thamizh varigal innum uyir kodukkinradu intha varigalukku

  ReplyDelete
 4. Sairam..Sri ahastiya swamye potri

  ReplyDelete
 5. வணக்கம். என்னுடைய வேலை மற்றும் திருமணம் சம்பந்தமாக தங்களிடம் நாடி பார்க்க வேண்டுகிறேன். தங்களால் எனக்கு உதவ முடியுமா?
  manojj652@gmail.com

  ReplyDelete
 6. kindly give your contact number i need speak with u
  my name arulmurugan
  cell no. 8344384612
  mail : arunachalam.arulmurugan@gmail.com

  ReplyDelete
 7. om sivaya namaha
  om Agatheesaya Namaha!

  ReplyDelete
 8. i thank you akathyar swamy

  ReplyDelete
 9. Fortunately , Today I have seen this page unexpectedly. Thanks to my GURU Agasthiar.
  Can I meet you in person. Kindly provide your mobile Number please. My Name: SHAKTHEVEL Mobile No: is 9976230366. Thanks

  ReplyDelete
 10. Naadi parka epolouthu varalam nan chennai ullen

  ReplyDelete
 11. Om Agatheesaya Namah

  This is blogspot is Blessings of Mahamuni to all of us in this KaliYuga.....

  Thank you so much to all Deities, Siddhars, Rishi-Munis who guide through this forum and enlighten many souls. Thank You Karthikeyanji and Agnilingam ji along with all blessed soul team who worked for this blogspot.

  ll Om Lopamudra mata samhet Agatheesaya Namah ll
  ll Muruga Sharanam ll Sarvanabhavaya Namah ll

  ReplyDelete
 12. வணக்கம். தங்களிடம் நாடி பார்க்க விரும்புகிறேன். தங்கள் தொடர்பு விபரத்தை அனுப்ப வேண்டுகிறேன். நன்றி, கலை kalaivan25@gmail.com

  ReplyDelete