இன்று "சரஸ்வதி பூஜை". உங்கள் அனைவருக்கும், நவராத்திரியின் சரஸ்வதி தின பூஜை வாழ்த்துக்கள். ஞானத்தை அருள்பவள் சரஸ்வதி தேவி. அதை அடைந்துவிட்டால் "நான்" என்கிற நிலை இல்லாமல் போய்விடும் என்கிறார் குருநாதர். நமக்கு அறிவை புகட்டும் புத்தகங்கள், ஓலை சுவடிகள், மந்திரங்கள், விருப்பமான விஷயங்களை இறை முன் சமர்ப்பித்து பூஜையில் வைக்கும் போது, "நான்" என்கிற உணர்வையும் சமர்ப்பித்து, இறையருள் பெற்றுக் கொள்ள வாழ்த்துகிறேன்.
இன்றைய குருநாதர் அருள் வாக்கை கீழே தருகிறேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
