​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 30 May 2025

சித்தன் அருள் - 1874 - அன்னதானம் - அகத்தியப்பெருமானின் செய்தி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் அகத்தியப்பெருமானுடன் நாடியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்து, நீங்கள் அனுப்பிய கேள்விகளுக்கு விடை பெற்றது நினைவிருக்கும்!

அந்த உரையாடலின் பொழுது, நிறைய விஷயங்கள் பேசப்பட்டது. நீதி, நேர்மை, நியாயம், தர்மம், அதர்மம் போன்ற தலைப்பில் பலவிதமான கேள்விகளை அடியேன் எழுப்பினேன். பேசிய பல விஷயங்களை சித்தன் அருளில் வெளியிடவே இல்லை. ஆனால் ஒரு தலைப்பைப் மட்டும் வெளியிட்டு, அனைவரையும் தெரிவித்து விடலாம் என சில நாட்களாக தோன்றிக் கொண்டே இருந்தது. ஆகவே, அவர் கூறியதை அடியேன் புரிந்து கொண்ட வரையில் இங்கு தெரிவிக்கிறேன். இது "அன்னதானம்" செய்வதை பற்றிய விளக்கம்!

பொதுவாக சித்தர்கள், குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட இடங்களில் அன்னதானம், நீர் மோர் போன்றவை அங்கு வரும் பக்தர்களுக்கு பலர் பங்குபெற்று, பொருள், பண உதவியுடன் உடல் உழைப்புடன் அடியவர்கள் செய்வது வழக்கம். இதில்  அறிந்தவர்கள் முதல், முகமறியாத, தூரத்தில் வசிக்கும் அடியவர்கள் பங்களிப்புடன், இந்த தானத்தை செய்வது உண்டு. நிற்க! இனி உரையாடலுக்குள் செல்வோம்!

அடியவர்: சித்தர்கள் கூற்றுன்படி, அவர்கள் வழிகாட்டுதலுடன் பல இடங்களில் இறைவனை தொழ வருகின்ற  அடியவர்கள், பசியுடன் திரும்பி செல்லக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தில், அடியவர்களின் பசியக்கற்றும் விதமாக, இறை, சித்தர்கள் அனுமதி, ஆசீர்வாதத்துடன் அன்னம் அளிக்கப்பட்டது. அனைத்திலும் ஓடி ஓடி பங்கு பெற்ற என்னை, இறைவன்/சித்தர்கள் ஏன் நொண்டி/ஊனமுற்றவனாக ஆக்கினார்கள்? இதற்கு தாங்கள் விடை அளிக்க வேண்டும்!

அகத்தியர்: என்ன வென்று கூற? இறைவனுக்கு என்று வைக்கப்பட்ட உணவை நீ உண்டாய்! அதன் தண்டனை தான் இது!

அடியவர்: அதெப்படி? எனெக்கென தனியாக எதுவும் தயார் செய்து உண்ணவில்லையே. அடியவர்கள் கூட அமர்ந்து, அவர்களுக்கு கொடுப்பதை தானே உண்டேன். மூன்று நான்கு நாட்கள் மலை மேல்/காட்டுக்குள் வருகின்றவருக்கு உணவளிக்க பங்கு பெறுகிற நான் எப்படி உண்ணாமல் இருக்க முடியும்? மட்டுமல்ல, அடியவர்களுக்கு உணவளிப்பதே முதன்மையானது என்று சித்தர்கள் கூற அவர்களைத்தான் கவனித்தோம். இதில் இறைவன் எங்கு வந்தார்?

அகத்தியர்: நீங்கள் கை நீட்டி வாங்கிய ஒவ்வொருவனும் என்னென்னவோ செயலை செய்து சம்பாதித்துவிட்டு, அன்னதானத்துக்காக கொடுத்து தன் கெட்ட கர்மாவை கழித்துக் கொள்ளலாம் என்று கொடுத்த பணத்தில் தான் நீயும் உண்டாய், அவன் கர்மாவை நீயும் வாங்கிக்கொண்டாய்.

அடியவர்: கெட்டவன் கையில் வாங்குகிற பணம் (தெரிந்தோ/தெரியாமலோ) அன்னதானத்துக்கு உபயோகப்படுத்தினால், மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வருமென்கிற உண்மையை இதுவரை நீங்கள் யாரும் கூறவில்லையே. மட்டுமல்ல, பத்து பேரிடம் பிச்சை எடுத்து, இயன்றவரை அன்னம் பாலித்தால், இப்படி கர்ம பரிவர்த்தனை வருமென்ற உண்மையை நீங்கள் கூறவில்லையே. இது யாருடைய தவறு?

அகத்தியர்: அப்படித்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற விதி இருந்தால், அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

அடியவர்: சித்தர்கள் வந்து கூறுகிற தெளிவில்லாத/நிறைவு பெறாத வார்த்தைகளால் கவரப்பட்டு, ஏதோ ஒன்றை மனிதன் செய்யப் போய், அடிவாங்கி சிதறுபவர்களை தான் இன்று பார்க்க முடிகிறது. என் சேய்கள் என்று கூறுகிற அகத்தியப்பெருமானுக்கு கூட, தன் மைந்தன் சரியாக புரிந்து கொண்டு, சரியாக செயல் படுகிறானா என்பதை கவனிக்கிற கடமை என ஒன்று உள்ளதா?

அகத்தியர்: சித்தர்கள் நாங்கள் சரியாகத்தான் வழி நடத்துகிறோம். மனிதன் தான் வழி தவறி செல்கிறான், காசுகள் சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்தில். ஒரு விதத்தில் பார்த்தால் சித்தர்கள் எங்களையே வியாபாரப் பொருளாக மாற்றி விடுகிறார்கள்.      

சித்தன் அருளை வாசிக்கிற எத்தனையோ பேர்கள் அன்ன தானத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறீர்கள். இந்த உண்மை தெரிந்தபின், நமக்கு இது தேவையா என்று உங்களுக்கு தோன்றலாம். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று முன்னே செல்பவர்களுக்கு, மிகுந்த ஆபத்திலிருந்து தப்பிக்க ஒரு வழி, 

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, எந்த காரணத்தாலும், அன்னதானத்தை வாங்கி உண்ணாதீர்கள். யார் கர்மா எப்படி உங்கள் வாழ்வில் புகுந்து விளையாடும் என்று தெரியாது.

நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கையில் வைத்துக் கொண்டு, அதில், அந்த நேரத்தில் வெளியிலே உண்ணுங்கள்.

இது ஒன்றுதான் தப்பிக்க, அடியேனுக்கு தெரிந்த வழி!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

26 comments:

  1. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. மிக்க நன்றி அக்னிலிங்கம் அன்பரே 🙏

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி ஐயா, இதையெல்லாம் படித்தால் மனது கனமாகி ஏற்றுகொள்ள வெறுமை தான் வருகிறது ஐயா..

    ReplyDelete
  5. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இங்கு வோண்டுபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்

    குருநாதருடைய வாக்கில் அன்னதானம் சேவை செய்பவர்கள் மற்றும் பசியாற்றுபவரும்
    சிவபுராணம் ஒத சொல்லியது .. நமக்கு காப்பாக அமையலாம். அன்னபூரணி தாயாருக்கு வேண்டுதல் செய்வோம், அவர்களும் அருள் புரிவார்

    ReplyDelete
  6. மிகவும் நன்றி சகோதரர் அவர்களுக்கு.

    ReplyDelete
  7. ஓம் சிவாய நம ஓம் அகத்தீஸாய நமஹ விளக்கத்திற்கு நன்றி ஐயா. எந்த கோவிலில், எங்கு அன்னதானமிட்டாலும் இறைவன் அருள் என்று உண்பது வழக்கம் ஐயா

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  9. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17!
    https://siththanarul.blogspot.com/2023/11/1505-04092023-17.html

    அடியவர்:- ஐயா தீபக்குழு சரியா பயன் ( செயல் ) பட சொல்லுங்க?

    குருநாதர்:- அப்பனே அப்பொழுதே சொல்லிவிட்டேன்.

    நாடி அருளாளர்:- ( இதறக்கு முந்தைய வாக்கில் குருநாதர் அறவுரை சொல்லி உள்ளார்கள்)

    குருநாதர்:- அப்பனே சில கருமங்கள் கூட எப்படி சேரவிடாமல் யான் பார்த்துக் கொள்கிறேன் அப்பனே.

    (பின் வரும் மகத்தான வாக்கு மிக முக்கிய வாக்கு. மூன்று முறை உள்வாங்கி படித்து இது போல் செயல்படுத்தவும்)

    எப்படி செய்ய வேண்டும் என்று கூற சரியான முறையில் செய்தால் அப்பனே கர்மம் நெருங்காதப்பா. அப்பனே ஒருவன் ஓருவன் கர்மம் சம்பாதித்துக்கொண்டே , இதனால் அனைவரையும் அழைத்து அப்பனே ஒன்று கூடி எதை என்று புரியாமல் அப்பனே பல பல வழிகளில் கூட இயலாதவருக்கு கொடுத்து அப்பனே சிவபுராணத்தை அப்பனே பின் ஓதி நல்ல விதமாகவே அப்பனே செய்து வந்தாலே போதுமானது அப்பா. ஆனாலும் இதை முடித்த பிறகு அப்ப எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் அப்பனே. ஆனால் அப்பனே சொல்லி விடுகின்றேன், அதை சொல்வதே இல்லை. அதனால்தான் கஷ்டங்கள் அப்பா.கர்மா சேருகின்றது என்பேன். ஆனாலும் சிறுவயதில் தன் பிள்ளைக்கு தாய், தந்தையர் இப்படி இருந்தால்தான் நல்லது. இப்படி இருந்தால் கெட்டது. இப்படித்தான் வாழ வேண்டும். இப்படித்தான் பயன்படுத்த வேண்டும். இறைவன் இருக்கின்றான் என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள் சிலர் மட்டுமே. அது போலத்தான் நீங்களும். அப்பனே (மக்களிடம் எடுத்து நேரில்) சொல்லி சொல்லி மாற்றம் அடைய (செய்ய) வேண்டும் என்பேன் அப்பனே. பின் அப்படியே செய்தாலும் கூட அவர்களுடைய கர்மா அடைந்து விடும் உங்களை. அதனால்தான் அப்பனே சொல்லி இருக்கின்றேன் அப்பனே. இதை கெட்டியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே.

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
  10. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1498 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 12!
    https://siththanarul.blogspot.com/2023/11/1498-04092023-12.html


    குருநாதர்:- அப்பனே இதனால் இவ் பக்குவங்கள் உங்களை ஏன் சில பேர் மட்டும் யான் இங்கு (மதுரை அடியவர் இல்லத்தில்) அழைத்து உள்ளேன் என்றால், அப்பனே முதலில் நீங்கள் நன்மை செய்தாலும் அப்பனே சில தானங்கள் செய்தாலும் இவை எல்லாம் இப்படித்தான் என்று கூறி அவர்களுக்கு (மக்களை ) திருத்தி வழி நடத்த வேண்டும் என்பேன் அப்பனே தெரியாதவர்களுக்கு அப்பொழுதுதான் ( உங்களுக்கு முதல் வகை ) புண்ணியம். அதை விட்டு விட்டு ஏதோ பின் அன்னத்தை கொடுத்து விட்டு அப்பனே இந்தா தின்னு என்று சொன்னால் அப்பனே ஒன்றும் பிரயோஜனமில்லை அப்பா. இதனால் கர்மாதான் அப்பனே. மீண்டும் கடைசியில் வந்து யான் அதை செய்தேன் , இதை செய்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே என்ன (பலன்)? அப்பனே. அதனால் தெரியாமல் எதையும் செய்யக்கூடாதப்பா.

    அன்னதானம் செய்யும் போது , உயர் முதன்மை புண்ணியம் பெரும் வழி முறை:-

    அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- “அனைவரும் அன்னத்தையும் மற்றவர்களுக்கு (இட்டு) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது பின் மற்றவர்களுக்கு (பொதுமக்களுக்கு) பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று (வழி/செயல் முறைகளை எடுத்து நேரில் சொல்லி) காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே.”

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
  11. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1495 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 10!
    https://siththanarul.blogspot.com/2023/11/1495-04092023-10.html

    அடியவர்:- அய்யா அதாவது உயர் தர புண்ணியம்னா என்ன? உணவு வழங்குதல் ஓரு புண்ணியம் அப்டின்னு சொல்றோம். கல்விக்கு வழி வகுத்தல் ஒரு புண்ணியம்ன்னு சொல்றோம். அப்புறம் வந்து இறை வழிபாட்டுக்கு அழைச்சு வர்ரது புண்ணயம்ங்குறோம். இதுல வந்து எது புண்ணியம் அதிகமானது மனிதனுக்கு புண்ணியம் அதிகம் சேரத்து அவனது கர்மாவை பலன்களை குறைக்கும்?

    குருநாதர்:- அப்பனே, “அனைத்தும் இறைவா நீ” என்று சொல்லிவிடு முதலில். அதிலிருந்து அப்பனே இறைவனே உனக்கு அனைத்தும் கொடுப்பான் அப்பனே. வாங்கிக்கொள். அதை மீறி என்னால் முடியும் என்று சென்றால் அங்குதான் அப்பனே கஷ்டங்களப்பா ( கர்மாக்கள் ). அதனால் புரிந்து கொள்.

    அதனால் அப்பனே பரமனே (மதுரை ஶ்ரீ அகஸ்தியர் இறைஅருள் மன்றம் அடியவர்) தெரிந்து கொள். ஏன் எதற்காக வந்து கொண்டிருந்தாய்? உன்னை கஷ்டங்கள் நெருங்கப் போகின்றது. ஏன் எதற்காக நீ கூறுவாய். அகத்தியனே உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தேனே இப்படி கஷ்டங்கள் ஆகி விட்டதே என்று. ஆனாலும் அப்பனே அனைத்தும் உந்தனுக்கு சொல்லிவிட்டேன் அப்பனே. இதையும் பரப்பு. எப்படி மனிதன் வாழவேண்டும்? எப்படி இருக்கவேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே. உன் கடமையை செய். மற்றவர்கள் கடை பிடிக்கின்றார்களோ இல்லையோ. நீ சொல்லிவிடு அப்பனே. அப்பனே அது கர்மா. அவனையே போய் சார்ந்துவிடும் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே. உந்தனுக்காக மட்டும் இங்கு வந்தேன் அப்பனே. ஆனால் மற்றவர்கள் எல்லாம் கர்மாவை சேகரித்து வந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான்.

    அடியவர்:- அமைதி

    குருநாதர்:- அதனால் அப்பனே புரிகின்றதா? என் பக்த்தனை எப்பொழுதும் யான் விடமாட்டேன் அப்பனே. இப்பொழுதிலிருந்து அதனால் அப்பனே என் பக்தனை கஷ்டங்கள் வருகின்றதென்றால் யானே அவனிடத்திற்கு சென்று பாடங்களை கற்பிப்பேன் போதுமா?

    அடியவர்:- அமைதி

    குருநாதர்:- நீ கேட்டாய் அப்பனே, அவை, இவை, இப்படிச்செய்தால் புண்ணியம் புண்ணியம் என்று, செய்துகொண்டே இரு அப்பனே யான் வருவேன். அவ்வளவுதான் அப்பனே. அப்பனே அதனால் தான் அப்பனே புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்படுகின்றது என்பேன் அப்பனே. யான் புண்ணியங்கள் செய்தேனே என்றெல்லாம். அதனால் அப்பனே யானே வந்து காத்தருளுவேன் வருங்காலங்களில் கூட அப்பனே. அதனால்தான் அப்பனே முதலில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூட தெரிந்து தெரிந்து செய்தால்தான் அப்பனே வெற்றி கிடைக்குமே தவிர இல்லை என்றால் தோல்விகள் தான் மிஞ்சும் என்பேன் அப்பனே. அப்பனே தோல்விகள், தோல்விகள் ஏற்பட, ஏற்பட ஒரு நாள் வெற்றியாகிவிடும் என்பேன் அப்பனே. துன்பங்கள் ஏற்பட ஏற்பட ஒர் நாள் இன்பமாகிவிடும் என்பேன் அப்பனே. பொய்கள் சொல்லச் சொல்ல ஓர் நாள் உண்மை ஆகிவிடும் என்பேன் அப்பனே. இவ்வாறு மனிதன் பொய் சொல்லிச் சொல்லி அப்பனே கடைசியில் கலியுகத்தில் உண்மை ஆக்கிவிட்டால் பாவி மனிதன் அப்பனே. அதை தடுக்கவே யாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம் அப்பனே. முதலில் அதை தடுத்துவிட்டு உங்கள் அனைவருக்குமே மோட்சகதியை யான் கொடுக்கின்றேன். நலங்கள். ஆசிகள்.


    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

    சித்தன் அருள் - 1488 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 8!
    https://siththanarul.blogspot.com/2023/10/1488-04092023-8_29.html

    குருநாதர்:- அப்பனே இதனால் தீபங்கள் அப்பனே ஏற்றுகின்றாயே, அப்பனே ஆனாலும் ஏற்றிவிட்டால் மட்டும் அப்பனே நண்மைகள் ஆகிவிடுமா என்ன? அப்பனே. இவை எல்லாம் (மதுரையில் உரைத்த வாக்குகள் அனைத்தும்) நீ சொல்ல வேண்டும். அப்பனே புண்ணியங்களும் செய்ய வேண்டும். இவை எல்லாம் அங்கு அங்கு செப்ப வேண்டும் மனிதர்களுக்கு அப்பொழுதுதான் புண்ணியம் மிகுந்து காணப்படும் அப்பா. இல்லை என்றால் அப்படியேதான் அப்பனே. மண்ணை கையில் எடுத்துக் கொண்டேதான் (பிரயோஜனம் ஏதும் இல்லாமல்) செல்ல வேண்டும் சொல்லிவிட்டேன்.

    அடியவர்:- ( அடியவருக்கு நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் எடுத்து உரைத்தார் பின் வருமாறு:- ஐயா தீபம் எத்தும்போது எப்படி வாழனும், எப்படி செய்யனும் அப்படீன்னு சொல்லுங்க. அப்பதான் கஷ்டம் நீங்கும்)

    குருநாதர்:- அப்பனே, இதை தொடங்கி வைத்தானே ,

    (அகத்திய பிரம்ம ரிஷி தனது நாடி வாக்கில் பல முறை தனது மைந்தன் என்று அழைக்கப்பட்ட அகத்தியர் திருவடி சேர்ந்த உயர்திரு. அகத்தியர் திருமகன், அகத்தியர் அதிஷ்ட தீபக்குழு நிறுவனர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் சிவபெருமான் , முருக பெருமான் , அகத்தியர் பெருமான் இவர்களின் ஆசி பெற்ற உயர் ஆன்மா ஆவார். ஐயா அவர்கள் அகத்திய பிரம்ம ரிஷி நாடி அருளாளர் திரு. ஹனுமன் தாசன் அய்யா அவர்கள் மூலமாகவும், அகத்தியர் ஜீவநாடி தஞ்சாவூர் கணேசன் ஐயா அவர்களின் ஜீவநாடி மூலமாகவும் ஆசி பெற்று அதன் மூலமாக உள்ளுணர்வு தூண்டப் பெற்று அகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழுவை அமைத்தார்கள். தஞ்சை அகத்தியர் நாடியில் திரிசூலம் மாமுனிவர்களாகிய அருள்மிகு அகத்தியர் மஹரிஷி, வசிஷ்ட மகரிஷி மற்றும் விஷ்வாமித்திர மகரிஷி ஆகியோர் ஆசி கொடுத்து மனித பிறவியை உருவாக்கி , அவர் மூலம் இந்த பூலோகத்தில் தீபங்கள் மூலம் அருள் வளம் பெற வாழ்ந்த ஒரு மாமனிதர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் பிருங்கி மகரிஷி மற்றும் பிருகு மகரிஷி ஆன்மா தொடர்பு உடையவர் என்பதை அடியவர்கள் அறியத் தருகின்றோம். நாடி வாக்கு தொடர்கின்றது.….. )

    பல பேருக்கும் நன்மை செய்தான் ஆனாலும் அப்பனே அவர்களுக்கெல்லாம் கஷ்டங்கள்தான். ஏன் வந்தது? ஆனாலும் வாழத்தெரியவில்லையப்பா. இவன்தனும் கற்றுக்கொள்ள அதாவது பின் சொல்லிக் கொடுக்கவில்லையே அப்பா. அதனால்தான் துன்பங்களாக போய்விட்டது அனைவருக்குமே. அதை நீ செய்து விடாதே வரும் காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே.

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete
    Replies
    1. அவர் தன் வலியோடு மற்றவர்கள் இழப்பை சந்திக்க வேண்டாம் என்ற நன் மனதோடு எச்சரிக்கை பதிவு இட்டுள்ளார், ஆறுதல் கூறாவிடினும் மேலும் அவரே காயபடுத்தாதீர்கள் 🙏

      Delete
    2. Iyya ungal padivugal nandraga irukiradhu.en manadhil paduvadhu ungalukkum oru jeeva naadi kidaithu vazhi kaatuvergal endru

      Delete
    3. என்னிடம் நாடி ஓலை வேண்டாம் என்பதே என் கருத்து! நல் வழி காட்டினால் மட்டும் போதும்!

      Delete
  15. Following up above comments - what is it you are trying to explain to readers. whether the answer to this explanation "நீங்கள் கை நீட்டி வாங்கிய ஒவ்வொருவனும் என்னென்னவோ செயலை செய்து சம்பாதித்துவிட்டு, அன்னதானத்துக்காக கொடுத்து தன் கெட்ட கர்மாவை கழித்துக் கொள்ளலாம் என்று கொடுத்த பணத்தில் தான் நீயும் உண்டாய், அவன் கர்மாவை நீயும் வாங்கிக்கொண்டாய்" is there? You are presenting analysis from different angles. What is the way to identify a person who donates to Annadhanam, whether his Karma is good or bad? Unnecessarily dragging a reader to not related angles will not clarify anything.

    ReplyDelete
  16. அடியவர்: கெட்டவன் கையில் வாங்குகிற பணம் (தெரிந்தோ/தெரியாமலோ) அன்னதானத்துக்கு உபயோகப்படுத்தினால், மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வருமென்கிற உண்மையை இதுவரை நீங்கள் யாரும் கூறவில்லையே. மட்டுமல்ல, பத்து பேரிடம் பிச்சை எடுத்து, இயன்றவரை அன்னம் பாலித்தால், இப்படி கர்ம பரிவர்த்தனை வருமென்ற உண்மையை நீங்கள் கூறவில்லையே. இது யாருடைய தவறு? What is your answer?

    ReplyDelete
  17. Getting money from sinner, giving money to sinner both create bad karma. This is what i understood after reading Agathiar vaaku. He even tells not to form Trusts

    ReplyDelete
    Replies
    1. நீருக்குள் விட்ட கை நனைவதுபோல்!

      Delete
  18. Vanakkam Ayya....If we are giving money to the beggar people or to old age people...what do we have to tell them when giving money to avoid karma parivarthanai. Kindly guide us

    ReplyDelete
    Replies
    1. சிவார்ப்பணம் அல்லது நாராயணார்ப்பணம் என்று கூறி செய்ததை உடன் மறந்துவிடவேண்டும்!

      Delete
  19. இந்த சம்பவம் மஹாபாரதத்தில் வருகிறது
    போர் முடிந்ததும் கிருஷ்ணர் தருமரை பீஷ்மரிடம் நீதிகளை கேட்க சொல்கிறார்.
    பீஷ்மரும் நீதிகளை எடுத்து உரைக்கிறார்.
    இதை கேட்ட பாஞ்சாலி சிரிக்கிறார்.
    பீஷ்மர் ஏன் சிரிக்கிறாய் என்று கேட்க உங்கள் நீதி அன்று என்னை காக்கவில்லையே அதனால் சிரித்தேன் என்கிறார்.
    அதற்கு பீஷ்மர் துரியோதனனின் இரத்தம் என் உடம்பில் இருந்தால் என்னால் நீதியை நிலைநாட்ட முடியவில்லை இப்போது கெட்ட இரத்தம் வெளியேறியதால் நான் இதில் இருந்து விடுப்பட்டேன் என்கிறார்.
    தீயவர்கள் உணவு கூட ஆபத்துதான்.
    வெளியே எங்கும் சாப்பிட கூடாது.
    சமைப்பவர் கூட சரியில்லை என்றால் அவ்வளவுதான்.
    அவர்கள் கர்மா உண்பவர்க்கு தான்.

    ReplyDelete
  20. அந்த காலத்தில் வெளியே சாப்பிட மாட்டார்கள்.
    காரணம் இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. இதை, ஆசாரம், அனுஷ்டானம் என்றார்கள். தமிழ்நாடு அதை கேலி செய்தது! இன்று அமைதி விலகிப்போய் எல்லாம் நடக்கிறது!

      Delete