அகத்தியர் அறிவுரை!
Wednesday, 27 December 2023
சித்தன் அருள் - 1549 - அன்புடன் அகத்தியர் - பூமாலை வாக்கு பாகம் - 2
Monday, 25 December 2023
சித்தன் அருள் - 1548 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம்.பூமலை பர்கூர்!
Sunday, 24 December 2023
சித்தன் அருள் - 1547 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமான் உரைத்த வாக்கு!
19-12-2023 அன்று முருகப்பெருமான் உரைத்த வாக்கு.
அன்பின் எல்லையாக விளங்கும் என் தாயையும், என் தந்தையையும் பணிந்து வாக்குகள் ஈகின்றேன் குமரனவனே.
நிச்சயமாய் ஏற்றங்களே.
ஏற்றங்களே ஏன் எதற்கு என்பவை எல்லாம் கூர்ந்து கவனித்தாலே புத்திகள் இல்லையப்பா.
இல்லையப்பா. எத்தனை பிறவிகள் ஏது எங்குச் செய்ய வேண்டும்?
ஆனால் எதை அறியும் அளவிற்கும் கூட சக்திகள் உண்டா?
உண்டு உண்டு அதற்கும் தகுந்தாற்போல். அதற்கும் தகுந்தாற்போல் எண்ணங்கள் ஏற்கொண்டு, ஏற்கொண்டு …
ஏன்? எதற்கு? அலைந்து திரிந்து அங்கும் இங்கும்..என்னால் முடியவில்லையே என்று எண்ணினாலும் அதாவது நிச்சயமாய் அண்ணாமலை , உண்ணாமலை தேவியை.
ஏன்? எதற்கு? எவை? என்று அறிகின்ற பொழுது , அறியாமல் போய்விடுகின்றதை வாழ்க்கை.
ஆனால் விட்டு விடவில்லை உந்தனையும் கூட.
உணர்ந்து உணர்ந்து ஆனாலும் கொடுக்க வில்லையே பல மனிதர்களுக்கு.
ஏன் இந்த தரித்திர மனிதனுக்கும் கூட உண்மைகள் பல உண்மைகள் தெரிய வில்லையே !!!!.
அதனால் தான் உலகத்தின் அழிவுகள் மிஞ்சி காணப்படும் வருங்காலங்களில்.
அதனைக்கூட அதாவது என் தந்தையே அழிவுகள் ஏற்பட… ஏன் அழிவுகள்????
ஏன் அழிவுகள்??????????
என் தந்தையே அனைத்து உயிர்களையும் படைத்திருக்கும் போது, அவ் உயிரினத்தை எல்லாம் கொன்று குவித்து….
ஆனாலும் என் தந்தைக்குக் கோபங்கள். ஆனாலும் அதை நிறுத்த அகத்தியனும் கூட பொறுப்பாய், பொறுப்பாய் அப்பா என்றெல்லாம் என் தந்தையிடம் கூட …
அதனால்தான் யான் வந்து உந்தனுக்கு இப்போது செப்பிக் கொள்ள….
கருணை ஏற்படுவது உறுதி.
ஏன் அறிந்தும் கூட அவை ஒன்றும் இல்லையே. எதனை என்று மனதில் நிற்கும் முன் இவை தோன்றவில்லையே என்றெல்லாம்… கடமையைச் செய். நிச்சயம் யான் வருவேன்.
அண்ணாமலை அவை அறிந்தும் எதற்கு என்று கூற நிச்சயம் அப்பொழுது அப்பொழுது எண்ணிக்கொள்.
எண்ணிக்கொண்டு நிச்சயம் பாடலைப்பாடு அண்ணாமலையை நினைத்து. அதாவது இங்கு என் தந்தை என்று கூறிவிடலாம்.
ஆனாலும் பின் எப்பொழுதும் இறங்கி வந்து மனிதனுக்கு சொல்வாகின் இப்படித்தான் சொல்ல வேண்டும்.
மகனே, அன்பு உருவமாகவே உண்டு. ஆனால் பக்தி என்பதைக் கூட மனிதனுக்குத் தெரியாமல் தான் போகின்றது. எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பவை எல்லாம்.
அதனால்தான் சித்தர்கள் இன்னும் வந்து வந்து அதனால் சித்தனுக்கே பிடிக்கவில்லை மனிதன் வாழ்வது எப்படி என்பதைக் கூட.
ஆனாலும் இதனால்தான் உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளவே.
அதனையும் மறுத்து , மறுத்து ஏன்? எதற்கு? இப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றான் என்று கூட யான் பார்த்திருக்கின்றேன்.
ஆனாலும் அதனையும் கூடத் தவறுகள் செய்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து, இதனால் சில துன்பங்கள் இருந்தாலும் அதனையும் கூட அகத்தியன் பார்த்துக்கொண்டிருக்க…
ஏன் பார்த்துக்கொண்டிருக்க? அதை நீக்க முடியுமே என்று நீ எண்ணலாம்.
ஆனாலும் கர்மா வினையை (அனுபவித்தே ஆக வேண்டும்) ஆனாலும் சிறிதளவாவது அனுபவிக்க வேண்டும். ஆனாலும் பெரிய அளவாக வந்திருக்கக் கூடியது ஆனால் சிறிய அளவாகவே (அனுபவிக்கச் செய்து கர்மா கழித்துவிட்டான்). இதுதான் அகத்தியனின் பெருமை.
ஆனாலும் அருகிலேயே இருக்கின்றான் அகத்தியன். அதனால் நிச்சயம் அங்கும் இங்கும் ஏன்? எதற்கு? எவை என்றும் அறிய அறியத் தகுதியான இடத்திலே யாங்கள் இருப்போம். தகுதி உடையவனுக்கே அனைத்தும் கொடுப்போம் என்பதெல்லாம் சித்தன் வாக்கு.
எதை அறிந்து கொண்டான் என்று, அறியாதவனுக்கு எதைக் கொடுத்தாலும் பயன்படுத்தத் தெரியாது. அதைக் கொடுத்துட்டு சிறிது காலம் வாழ்வானே தவிர மீண்டும் இறங்கிவிடுவான்.
ஆனால் அறிந்தவனுக்கு சில சோதனைகளை ஏற்படுத்தி பின் கொடுத்து பின் நீண்ட காலம் வாழ வைப்பான்.
இதில் எவை, எங்கு என்று கொண்டு சேர்ப்பது என்பது தெரியாமல் போய் விடுகின்றது.
மற்றொன்றும் கூறப் போனால் ஆனாலும் அறிவின் பின் அறிந்தும் கூட இதனால் எக்குறைகளும், அனைத்தும் நன்மைக்கே என்று எப்பொழுது மனிதன் நினைக்கின்றானோ அப்பொழுது தான் பின் பக்தியின் மேல் இருக்கின்றான் என்பது பொருள்.
ஆனால் அவ்வாறு நினைப்பதில்லையே!!!
அப்பொழுது பக்தி எங்கிருக்கின்றது கூறு?
கூறு அவை, இவை என்று சொல்ல ஆனால் அறிந்தும் கூட, இவை எல்லாம் இதனால் ஏதாவது ஒன்றை எடுத்தால்தான் நிச்சயம் அறிந்தும் கூட மற்றொன்றை பின் நீடிக்க முடியும் என்பவை எல்லாம் நீ அறிந்ததே.
அப்பப்பா ஒன்றை ஒன்று சொல்லிக்கொள்கின்றேன். சிறிதாவது கஷ்டம் இல்லை என்றால் இன்ப நிலைக்கும் பின் அதாவது இன்ப நிலையிலே சென்று கொண்டிருந்தாலும் பின் நன்மையாவதற்கு, நன்மை ஆவதைக்கூட நிச்சயம் பின் புரியாமல் போய்விடும்.
அதனால்தான் சில சில உண்மைகள் எடுத்துரைத்து பின் சில பின்னோக்கி, முன்னோக்கி போக வேண்டும்.
அறிந்தும் கூட அதனால் பின்னோக்கி வந்து விட்டோமே என்று எண்ணினால் முன்னோக்கிச் செல்ல இயலாது மகனே.
அறிந்தும் கூட சிறிதளவு பின்னோக்கி இறைவன் தள்ளிவிட்டால், ஆனால் பின் முன்னோக்கிப் பன் மடங்கு செய்து விடுவான்.
அதனால்தான் இதனைத் துன்பமாகவும் எண்ணிக் கொள்ளலாம். அறிந்தும் அறியாமலும் கூட மனிதனுக்குச் சிறிது இறைவன் பின் நோக்கித் தள்ளுகின்ற போது, மனிதன் கஷ்டங்கள் கொடுத்து விட்டானே என்று ஏங்குகின்றான்!!!!
ஆனால் உண்மை நிலை புரியவில்லையே !!!!!
இவ் உண்மைநிலை புரிவதற்குக் கூட காலங்கள் முடிந்து விடுகின்றது. ஆனால் அவ் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மீண்டும் பிறப்பெடுத்து வர வேண்டும்.
ஆனால் அப்பொழுதும் கூட உண்மை நிலை புரியவில்லை என்றால் மீண்டும் பிறப்பெடுத்து, பிறப்பெடுத்து அதாவது பல வழிகளிலும் கூட நொந்து, அவ் உண்மை நிலை தெரிந்து கொண்டால் பிறவி முற்று ஆயிற்றே!!!!
( பின் வரும் இந்த வாக்கு மிக மிக முக்கிய வாக்கு - உலகம் முழுவதும் ஆதி ஈசனின் கோபம் ஏன் என்ற வாக்கு)
ஆனால் இப்பொழுது கூட அழிவுகள், அழிவுகள் என்றெல்லாம் கலியுகத்தில் ஏன் எதற்காக என்று மனிதன் சிறிதாவது சிந்தித்ததுண்டா???????
இல்லை. மனிதன் தான் காரணம் என்று அப்பொழுது எங்கு போய் விட்டது புத்திகள்????????
ஆனால் தன் படைத்த அதாவது என் தந்தை படைத்ததை…….
(பரிதாபமான வாய் பேச முடியாத, ஏதும் அறியாத அப்பாவி ஜீவராசிகள் - எத்தனை ஆடுகள், கோடிக்கணக்கான கோழிகள், நல்லதை மட்டுமே செய்யும் பசுக்கள், நாட்டு மாடுகள், கடல் வாழ் உயிரினங்கள், மீன்கள், நண்டுகள், இன்னும் எத்தனை எத்தனையோ அப்பாவி ஜீவராசிகள். ஆதி ஈசனின் அன்பு செல்லக் குழந்தைகள் ஆன ஜீவராசிகளைக் கொன்று குவித்து, உண்டு….)
மனிதன் எவை என்றும் அறியாது இது ஈசனுடைய சொத்து என்றெல்லாம் தெரியாமல் கொன்று குவித்திருக்கின்றானே…..
ஆனால் அதுவும் இவையும் இப்படி உணர்ந்து உணர்ந்து நிச்சயம் மனிதனுக்கு கொடுத்தாய் என்றால் நிச்சயம் இப்படித் திரிந்து விடுவான் என்று எண்ணலாமே.
ஆனால் எண்ணுவதில்லையே…..
ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்பதெல்லாம் சித்தர்கள் எடுத்துரைத்து, எடுத்துரைத்து ஆனாலும் அவ் உயிர்கூட என் தந்தைக்குத்தான் சொந்தம் என்று தெரியவில்லையே.
பரவாயில்லை என்று போய் விடுகின்றான்.
ஆனால்…பரவாயில்லை என்று பின் சொல்லிவிடுகின்றானே, இப்பொழுது ( பரவாயில்லை என்று ) சொல்லச் சொல் பார்ப்போம் அழிவதற்குப்பின் பரவாயில்லை என்று.
அப்பனே புரிந்து கொள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வினைகள் உண்டு என்பதைக் கூட. அதையும் சமநிலைப் படுத்த வேண்டும்.
இப்பொழுது கூட என் தந்தை ( ஈசன் ) மிகுந்த கோபத்தில் தான் உள்ளான் அழித்து விடவேண்டும் என்று கூறி.
ஆனால் அகத்தியனோ (அனைவருக்காகவும்) நிற்கின்றான். தந்தையே…பொறுத்துக் கொள்ளும், பொறுத்துக் கொள்ளும் என்று.
இதனால் கருணையின் வடிவமாகவே விளங்கும் அகத்தியன்.
அதனால் பின்னோக்கி வந்து விட்டோமே என்று ஆனால் என்று எப்போது மனிதன் சிந்திக்கின்றானோ, பின்னோக்கி வந்து கொண்டிருக்கின்றோம். ஏதாவது பதில்கள் வருமா இறைவனிடத்தில் இருந்து என்று ஆனால் நல்லதற்காகவே என்று மனிதன் எண்ணவில்லையே.
அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன்.
மனிதனுக்குக் கொடுத்தாலும் அதை அழிவுக்குத்தான் பயன்படுத்துகின்றான் என்பதைக்கூட. ஏன் தெரியவில்லை.
ஆனால் ஓர் அழிவு வந்தால்தான் நிச்சயம் பின் தேடித்தேடி.. அழிவுகள்..கஷ்டங்கள்…வந்து கொண்டே இருக்கும் !!!!!!!.
இன்னும் திருத்தலங்கள் நிரம்பி வழியுமப்பா !!!!!!!!.
அப்பொழுது புரியும் யார் எங்கிருந்து செயல் படுகின்றார்கள் என்பதைக் கூட.
ஆனாலும் புத்திகள்..புத்திகள் இன்னும் இன்னும் மனிதனுக்குத் தெரியவில்லையே. எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் எப்படியப்பா யாங்கள் திருத்துவது?
ஆனாலும் இன்னும் மிதிக்கத்தான் போகின்றார்கள் பின் சித்தர்கள் கூட.
அதனால்தான் பின் சித்தர்கள் யார் என்பதைக்கூடத் தெரியவில்லை.
அதாவது யானும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!. என் மூத்தோனும் ஒரு சித்தனப்பா!!!!!!!!!.
அதனால் (மனிதர்கள்) முதலில் வணங்குவது சித்தனே என்பது தெரியாமல் மனம் அறிந்தும் கூட.
அறிந்தும் எதை என்றும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சிந்திக்க வேண்டும்.
ஏன் இப்படி ஆகிவிட்டது?எதற்காகப் பிறந்தோம்?
எதற்காக வாழ்கின்றோம் ? என்று எண்ணினால் சித்தர்கள் அப்பொழுது வந்து வாக்குகள் செப்புவார்களே தவிர, இன்னும் அவை இவை இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தால் சித்தனும் அமைதியாவான்.
அறிந்தும் கூட, இதனால் பிறவிப்பயன் என்ன என்று கூற முக்தி என்பதைக்கூட யோசிக்க ஞானம் , அவ்வளவு சுலபமாக ஞானம் நிச்சயம் கிடைத்து விடுமா என்ன?
அதனால் புரிந்து புரிந்து உண்மைகள் பல வகையும் கூட அறிந்தும் கூட இதனால் நிச்சயமாய் நீ இருக்கும் இடத்தையும் கூட என் தந்தை அழிவுக்கு இவ்தேசத்தை தாவி ஆனாலும் அழிக்க வேண்டும் என்று.
ஆனாலும் அகத்தியனும், (ஈசா, தந்தையே) பொறும், பொறும் என்னால் முடியும் , முடியும் என்றெல்லாம்.
எவை என்று நிரூபிக்கும் இதனால் எவை என்றும் அறிந்தும் இதனால் கலியுகத்தில் நல்லதற்கே பின் நிச்சயம் அறிந்தும் கூட…
மீண்டும் அகத்தியனை (ஆலயம்) அங்கு அமைப்பது, இங்கு அமைப்பது எவை என்றும் அறிய அறிய அகத்தியன் விரும்பினானா என்று சொன்னால் நிச்சயம் இல்லை. ஆனால் மனிதனோ பித்தம் ஏறி அனைத்தும் செய்துவிட்டு கடைசியில் அறிந்தும் அறிந்தும் என்ன லாபம்?
(விளக்கம்:- பலர் அகத்தியப்பெருமானிடம் உத்தரவு கேட்காமலேயே அவருக்கு ஆலயம் அமைக்கின்றனர். உத்தரவு கேட்காமல் அவ் ஆலயம் அமைப்பதில் அகத்தியப்பெருமானுக்கு விருப்பம் இல்லை. )
உன்னிடத்தில் அதாவது நீ இருக்கின்றாயே அதன் பக்கத்திலேயே ஒருவன் அறிந்தும் யான் அகத்தியனுடைய பக்தன், அகத்தியனுடைய பக்தன் என்றெல்லாம் ஆனால் அவன் அகங்காரம் கொண்டு எதை என்று யான் சொல்ல…
இறைவனை நம்பிவிட்டால் அனைவரையும் சமமாக எண்ணவேண்டும்.
கடமைப்பட்டு , கடமைப்பட்டு ஏன் , எதற்காக உந்தனுக்கு வாக்குகள் செப்ப வேண்டுமா? அவ்வளவு பெரிய மனிதனா ? என்று நீ நினைத்துக் கொள்ளலாம்.
ஆனால் (சில தனிப்பட்ட வாக்குகள்) இதனால்தான் யாங்களும் தேடி வந்து, தேடி வந்து ….( வாக்குகள் செப்புகின்றோம் ).
அதனால்தான் மனிதனை புண்ணியங்கள் செய்யச்செய்ய யாங்கள் தேடி வந்து எதையாவது செய்வோம்.
ஆனால் புனிதங்கள் அதாவது மனம், பின் புண்ணியங்கள் இல்லை என்றால் பின் அதையும்கூட, எங்களையும் கூட ஏற்காது.
(நல்ல மனம், புண்ணியங்கள் ஏதும் இல்லாமல்) மீண்டும் , மீண்டும் எங்களுடைய தலத்திற்கு வந்து , வந்து பின் ஒன்றும் செய்யவில்லையே!!!!!. அதை, எவை என்றும் அறிய வணங்கினேனே என்றெல்லாம் (மனிதன் புலம்பல்கள்).
ஆனால் இங்கு நிற்கின்றது புண்ணியங்கள்.
புண்ணியங்கள், புண்ணியத்தின் மூலமாகவே இறைவனைக் காண இயலும் என்பதெல்லாம் மனிதனுக்குத் தெரியாமல், பின் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றானே !!!!!!!
அதை மாற்றவே சித்தர்கள் முதலில் பின் நல் வழியாகவே எவை என்று அறிந்தும் அறிந்தும் இப்படி இருந்தால் இறைவனைக் காணலாம் என்பதற்காகவே நிச்சயம் சித்தர்கள் வாக்கு செப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்பொழுதுதான் இறைவனைக் காண முடியுமே தவிர நிச்சயம் நீ அவை இவை எதை என்று பயன்படுத்தி நிச்சயம் இறைவனிடத்தில் செல்லலாம் என்று கூற பின் அதாவது பின் இறைவனிடத்தில் சென்றுவிடலாம் என்று எண்ணி , மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
மனிதன் நினைப்பு நிச்சயம் அனைத்தும் கெடுத்துக் கொண்டிருக்கின்றது.
சித்தர்களின் நினைப்பு மனிதனை உயர்வடையச் செய்யும் என்பதே நிச்சயம்.
இதனால்தான் அறிந்தும் கூட.
ஆம் அதாவது அத்திருத்தலத்திற்குச் சென்றேன். இறைவனைக் கண்டேன்.
அத் திருத்தலத்திற்குச் சென்றேன். அங்கு பல வழிகளில் என்னென்னவோ செய்தேன் என்பவை எல்லாம்.
(எப்போது நாடி வாக்குகள் ஒருவருக்குக் கிட்டும் என்ற அதி சூட்சும வாக்கு)
ஆனால் வாழ்க்கை எப்படி?
எதை என்று கூற தன்னைப்பற்றித் தான் இப்படி இருக்கின்றோமே என்று எண்ணி எண்ணி இதற்கு என்னதான் பதில்.
எதற்காகப் பிறந்தோம்?
எதற்காக பின் அவை எவை என்று கூற பின் குடும்பத்தோடு வாழ்கின்றோம்?
ஏன் இந்தப் பிறப்பு?
ஏன்?
எதற்கு?
எப்படி?
எதற்காக வந்தோம்?
என்று எவன் ஒருவன் யோசிக்கின்றானோ அப்பொழுதுதான் அருளாசிகள் கிட்டி, வாக்குகளும் கிட்டி நிச்சயம் அறிந்தும் கூட பின் நல் வழிகளில் எடுத்துச் சென்று , புண்ணியங்கள் ஏற்படுத்தி தன் குடும்பத்திலும் கூட பிள்ளைகளையும் கூட நன்றாகவே வாழ வைக்கும் பின் அவ் ( நாடி வாக்கு ) பதில்கள்.
ஆனால் (எவ் மனிதனும்) இதைச் சிந்திப்பதில்லையே!!!!!
ஓடி ஓடிக் கொண்டிருக்கின்றான். திடீரென்று தோல்விகள் ஏற்பட்டு விட்டால், என்ன செய்வது என்று கூட தெரியாமல் இறைவனிடத்தில் ஓடி வருகின்றான். அப்பொழுது தான் பிரச்சினைகள் பின் இன்னும் பலமாகும் (என்று அனைவரும்) தெரிந்து கொள்ள (வேண்டும்).
இதனால் ஞானிகளுக்குச் சுலபமானதே. மனிதனுக்குக் கஷ்டங்கள் என்று தோன்றுகின்றதோ, இவை ஞானிகளுக்குச் சந்தோசம்.
ஆனால் மனிதனுக்கு எது இன்பமோ, அது ஞானிகளுக்குக் கஷ்டம் என்பதே அனைத்து சித்தர்களும் செப்பிச் செப்பித்தான் வருகின்றார்கள்.
மகனே, இதனால் கவலையில்லை விட்டுவிடு. அறிந்தும் கூட அனைத்திற்கும் காரணம் இறைவனே என்று நினைத்துக் கொள்.
ஆனால் ஒன்றின் பின் ஒன்றாக நிச்சயம் பின் உந்தனுக்கு சுலபமாகவே எடுத்துரைக்கின்றேன்.
ஒரு கருவியை நினைத்துக் கொள். கருவியை1 வைத்து விடுகின்றான். ஆனாலும் பின் அதை இயக்கும் சக்தி உன்னிடத்தில்தான் இருக்கின்றது. அதே போலத்தான் (இறைவன்) மனிதனைப் படைத்து விடுகின்றான். ஆனாலும் அதனை இயக்கும் சக்தி இறைவனிடத்தில் இருக்கின்றது என்பது சரியாக எவன் ஒருவன் உணர்ந்து விடுகின்றானோ, அப்பொழுது அவன்தன் புண்ணியப்பாதையில் செல்கின்றான்.
பின் அப்படி இல்லை என்றால் யான் அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று இறைவனுக்கு, எங்களுக்கு…யான் தான் அனைவருக்கும் நன்மை செய்யவேண்டுமே தவிர எங்களுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று… அதாவது இறைவனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்பதைக்கூட அறிந்தும் கூட சிந்தித்ததுண்டா மனிதன்?
ஆனால் சிந்திப்பதில்லை மகனே கேள். இவ் சிந்திப்பு இல்லை என்றால் என்ன கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்பதை எல்லாம்.
ஆனால் என் தந்தை (ஆதி ஈசன்) உன்னை விட வில்லை. இப்பொழுது கூட உன்னைப் பிடித்துக்கொண்டிருக்கின்றான். ஏன்? எதற்காக? ஞானங்கள் வர வேண்டும்.
ஏன்? எதற்கு? எப்படி ஞானங்கள் வர வேண்டும்? பின் துன்பத்தில் நுழைந்தால்தான் ஞானம் பிறக்குமே தவிர மற்றவை எல்லாம் ஞானம் கிட்டாது. எவ்வளவு, எங்கு, எதை என்றும் அறிய.
அவை தன், இவை தன் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் இல்லத்தில் எவராவது நிச்சயம் பின் தேவராயனின் பின் நல் பக்தனை எண்ணிக்கொண்டு அதாவது அவன் எழுதியதை ( பாடல்களை ) சரியாக பயன்படுத்திக்கொள்ள நன்று. அவை மட்டும் நிச்சயம் என் அருகிலேயே இருப்பான் எப்பொழுதும், என்னை எண்ணி எண்ணி வாழ்ந்தவனும் கூட பாம்பன் அவனுடைய நல்விதமாகவே என்ன சொல்லி இருக்கின்றான் என்பதைக்கூட அதையும் செப்பிவர நன்று நன்று.
(தேவராய சுவாமிகள் இயற்றிய நூல்களில் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற நூல்கள்: சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், குசேலோபாக்கியானம்மற்றும் நாராயண கவசம் ஆகும்.)
(ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முருகப் பெருமானின் பேரருள் விளைவினில் சைவம் தழைக்கும் பொருட்டு நம் தமிழகத்தில் அவதரித்தார்.ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியவைகளுள் பகைகடிதல், குமாரஸ்தவம், சண்முக கவசம், பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் முதலானவை மகத்தான பாடல்கள்.)
இதனால் அனுதினமும் அருணகிரி எப்பொழுதும் அறிந்தும் ஏதாவது ஒரு பாடலைப் பாடிட்டு வா.
இதனால் நிச்சயம் பல வகை அகத்தியன் கூடச் சொல்லிக் கொண்டே இருக்கின்றான். என்ன ஏது என்று விசயங்களை எல்லாம். சில விசயங்கள் எல்லாம் அதாவது உடம்பு உறுப்புகளைப் பக்குவப்படுத்தப் பல மூலிகைகள் கூட அதை எடுத்துவர நன்று. ஏனென்றால் இவ்வுலகம் நோய்வாய் பட்ட உலகமடா.
அறிந்தும் கூட அப்படி , எப்படி தப்பிக்க முடியும். அதனால் ஏற்கனவே இதை உரைத்ததுதான் மீண்டும் உந்தனுக்குச் சொல்கின்றேன்.
மனிதன் என்பவன் குற்றன். மனிதன் குற்றக்காரன். இப்பொழுது புரிகின்றதா? இப்புவிதன்னில் பிறந்து விட்டாலே மனிதன் பிறந்து விட்டான் என்று எண்ணுகின்றான். ஆனால் குற்றம் பிறந்து விட்டதே!!!! எப்படித் தப்பிக்க முடியும்?.
ஆனால் எங்கு எவை என்று அறிகின்றபொழுது, அக்குற்றத்திற்கு யார் காரணம் என்று அறிகின்ற பொழுது, அக்குற்றத்தை யார் தீர்ப்பவர்கள் என்று அறிகின்ற பொழுது சித்தர்கள் இருக்கின்றார்கள். நிச்சயம் அவர்களால்தான் பின் குற்றம் தீர்க்க முடியும். பின் மோட்ச நிலை கொடுக்க முடியும். இன்னும் ஞானங்களும் தந்து இன்னும் பரிசுத்தமான வழியில் நடக்கச்செய்து பல உண்மைகள் எடுத்துரைக்க முடியும்.
இதனால் உண்மை நிலை தெரியவில்லை. பொய்களாக்கி, பொய்களாகவே பின் சென்று கொண்டிருக்கையில் எப்படி அழிவுகள் ஏற்படாமல் இருக்க முடியும்?
இதனால்தான் அதைச் செய்கின்றேன். இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் நிச்சயம் தன் உயிரையே காப்பாற்றிக் கொள்ள முடியாத மனிதனுக்கு எப்படி?
முடிந்தால் முதலில் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளச் சொல் போதுமானது. மற்றவை எல்லாம் பின் மனிதனை காப்பாற்ற ஏற்பாடு செய்யலாம். ஆனால் இன்னும் இன்னும் மகனே கேள்.
போட்டி பொறாமைகள் செல்கின்றது. யான் பக்தன், இவை பெரியது, இத்திருத்தலம் பெரியது என்றெல்லாம்.
ஆனால் எவை என்று அறிகின்ற போது இங்கு இறைவன் பெரியவன் என்று யாரும் நினைப்பதில்லையே. இறைவனிடத்திலே இருந்து கொண்டு பல தகாத வார்த்தைகளையும் கூட…எப்படி? எப்படி?
எம்முடைய ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!