​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 31 December 2022

சித்தன் அருள் - 1252 - அகத்தியர் வாக்கு - 5


கேள்வி: "தெரிந்தவரையில் பூஜை என்பதை இறைவனுக்கு செய்கிற பொழுது, பஞ்ச பூதங்களுக்கும் பூஜை செய்வது எப்படி?

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! எவை என்று உணர்ந்து! உணர்ந்து! அப்பனே! காற்றை போற்றுதல் வேண்டும் அப்பனே! அதாவது, எதை என்று உணர்ந்து உணர்ந்து! இறைவா! இலவசமாக கொடுத்திருக்கின்றாயே! பின் அதற்கும் நன்றி! இப்படியே தெரிவித்துக்கொள் அப்பனே! பார்ப்போம்!".

கேள்வி: "அடியேன், நீங்கள் சொன்ன இந்த கூற்றை எத்தனையோ முறை அனைவரிடமும் சொல்லிவிட்டேன்!".

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! இவ்வாறெல்லாம் சொன்னால், நீ பைத்தியக்காரன் என்பர்! கெட்டதை சொல், நீ நன்றாக பெயர் எடுத்துவிடலாம்! கெட்டதை சொல்கிறாயா என்ன?"

அடியேன்: "அது முடியாது! உங்கள் வழியில் வந்து, உங்கள் பாதத்தில் அமர்ந்து ஒரு விஷயத்தை கூறுகிற பொழுது........"

குருநாதர்: "கெட்டதை சொன்னால், நல்லவன் என்று பெயர் எடுக்கலாம்!"

அடியேன்: "அது வேண்டாம்! கோடி கோடியாக கொட்டினாலும், அடியேனுக்கு வேண்டாம்!"

இதை கேட்க காரணம் என்னவென்றால், "சித்தன் அருள்" வலைத்தொகுப்பு உங்களுடையது. குருதக்ஷிணை கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என வினவிய பொழுது, இறைவன் உத்தரவினால், சித்தர்கள் நாங்கள் வழிகாட்டுகிறோம். அதற்கு, இறைவனுக்கு நன்றி கூறு! அதை இறைவன் ஏற்றுக்கொண்டால், அதுவே எங்கள் குருதக்ஷிணை ஆகும் என்றீர்! ஆனால் மனிதர்களுக்கு, இத்தனை சொல்லித் தந்த உங்களுக்கு ஒரு நன்றியை கூட சொல்லத் தெரியவில்லை. இப்படிப்பட்டவர்களுக்காகவா நீங்கள் இத்தனை சிரமப்படுகிறீர்கள், என்ற ஒரு ஆதங்கம்தான்."

குருநாதர்: "நாங்கள் என்றுமே, மனிதர்களிடமிருந்து நன்றியை எதிர் பார்ப்பதில்லை. உனக்கு சரியாக புரியவில்லை. இதனை (வலைப்பூவில் வரும் அகத்தியர் அருளிய வாக்கினை) கூட பலவழிகளிலும் உயர் பெரியவர்கள் இதனையும் எடுத்துக் கொண்டு, சரியாக பயன்படுத்துகின்றார்கள். ஏனோ தானோ என்று இருப்பவர்கள்தான் முட்டாளாகிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பேன், அப்பனே! எதை என்று அறிய! எவை என்று அறியாமலே, தெரியாமலே, எங்கள் அருளால்தான் அனைத்தும் நடக்கின்றது என்று வைத்துக் கொண்டால், உந்தனுக்கு கவலை இல்லை.

அடியேன்: "சரி! அப்படியே எடுத்துக்கொள்கிறேன்! ஏன் என்றால், குறைந்தது, உங்களுக்காவது அவர்கள் நன்றி கூற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்! அதனால் தான்"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய! அறிய! நான் நன்றியை எதிர் பார்ப்பதில்லை! எதை என்று கூற? மனிதன் பாவம் என்று தான் நானே இருக்கின்றேன்! இப்படியெல்லாம் வாழ்கின்றானே என்று கூட!"

அடியேன்: "உங்களுடைய குழந்தைகள், சிஷ்யர்கள், அடியவர்கள் அனைவரும் இறைவனை நோக்கி சென்றுவிடவேண்டும் என்று தானே நீங்கள் விரும்புகின்றீர்கள்! ஒன்றாம் வகுப்பில் வாய்ப்பாடு, ஒன்றும் ஒன்றும் இரண்டு என படிப்பது போலத்தானே, இப்படி படித்து/செய்து முன்னேற முடியும்?"

குருநாதர்: "அப்பனே! ஒரு ஆசிரியனுக்கு, தன் மாணவனை எப்படி பிடிக்கும் என்று தெரிந்து கொள் அப்பனே! அதுபோல்தான் அப்பனே! சரியாக இருந்தால், எங்களுக்கு பிடிக்கும், சுலபமாக உயர்த்திவிடுவேன், கிரகங்கள் எப்படி இருந்தாலும் சரி, கர்மாக்கள் எப்படி இருந்தாலும் சரி! ஆனால், தவறான வழியில், எதை என்று அறிந்து அறிந்து சென்று கொண்டிருந்தால்தான், கவலையும் கூட. அவனை, நாங்களே உதைப்போம் என்பேன் அப்பனே! இப்பொழுதும் கூட சொல்லிவிட்டேன்!"

அடியேன்: "மிக்க நன்றி!, நமஸ்காரம் குருநாதா!"

குருநாதர்: "ஆசிகள்! ஆசிகள்! அனைவருக்கும் எனது ஆசிகள் என்பேன்! நலமாகவே, நலமாகவே, எதை என்று உணர்ந்து உணர்ந்து, பின்னர் எது என்று தெரியாத  மனிதர்களுக்கு கூட, நன்மைகளாக முடியட்டும், இது கலியுகம் என்பேன். எது என்று கூற, பின் பித்தலாட்டம், எது என்று கூற! எதை என்று அறிய அறிய, பொய், களவு, அநியாயம்தான் ஓங்கி நிற்கும் என்பேன், ஆனாலும் எங்கள் அருளை பெற்றவர்களுக்கு, நிச்சயம் எதை என்று உணர்ந்து, யார் மூலம் எதை செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் யாங்களே செய்வோம் அப்பனே! முன்னின்று அப்பனே, ஆனால் சரியாக எங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!, சித்தனின் விளையாட்டு, கடைசியில் பின்பற்றித்தான் நடக்கும் என்று கூட மனிதன் உணர்வதே இல்லை அப்பனே! அவந்தனுக்கு எதை சொல்வது, எதை கொடுப்பது என்பதை, யங்கள் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், மனிதனை நாங்கள் அடித்தால், ஒரு அடி கூட தாங்கமாட்டான், என்பதையும் யாங்கள் அறிவோம். ஆனால் மனிதன் அதை உணரவே இல்லை! அதனால்தான் மனிதனை பொய் வேடக்காரன் என்போம், மனிதனை!

அடியேன்: "நல்வாக்கு உரைத்ததற்கு நன்றி! நமஸ்காரம் குருநாதா!"

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 30 December 2022

சித்தன் அருள் - 1251 - அகத்தியர் வாக்கு - 4


கேள்வி: "கோவில்களின் பராமரிப்பில் நிறைய அளவுக்கு தவறுகள் நடக்கிறது, அரசியல் ரீதியாக எல்லோரும் தலையிட்டு, எல்லாவற்றையும் கெடுத்து விடுகிறார்கள், நிறைய கோவில்களை இடிக்கிறார்கள். பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் தலையீடும் உள்ளது!"

குருநாதர்:"அப்பனே! எதை என்று அறிய! இவை எல்லாம் பார்த்திட்டு, இறைவனே அமைதியாக இருக்கிறான் என்றால், என்ன அர்த்தம் என்று நீ கூறவேண்டும்!"

"எல்லாம் கர்மாப்படி நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்!"

குருநாதர்:  "அப்பனே! எதை என்று அறிய, அப்பனே! கலியுகம் என்றாலே, அழியும் காலம் என்றுதான் அர்த்தம். ஆனால், நிச்சயம் இறைவன், தன்னை பார்த்துக் கொள்வான் அப்பனே! மனிதன் எதை என்று கூற? தன்னை பார்த்துக் கொண்டால் போதுமானது.

"இந்த கேள்வியை குறிப்பாக கேட்க காரணம் என்னவென்றால், அதில் எத்தனையோ கோவில்கள், அனைத்து கோவில்களும், சித்தர்கள், கட்டின ஆலயங்கள், புண்ணியத்தலங்கள்!"

குருநாதர்: "அப்பனே! எதை என்று அறிய, அறிய, அப்பனே! எங்களால், கட்ட முடிந்ததை யாராவது இடிக்கச்சொல் பார்ப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

Thursday, 29 December 2022

சித்தன் அருள் - 1250 - அகத்தியர் வாக்கு - 3


கேள்வி: தர்மம் செய்வதற்கான வழிகளை கொஞ்சம் சுருக்கமாக அருள வேண்டும்!

குருநாதர்: "அப்பனே எதை என்று அறிய அறிய. அப்பனே, நிச்சயம், பின் ஆசைகளை நிறுத்திக்கொண்டு, பயன் பெறாது இது என்று அறிந்து, இதுவும் எதற்கும் உதவாது என்று தானம் அளித்தால் தான்  தர்மமாகிப் போய்விடும்!

அப்பனே! அதுமட்டும் இல்லாமல், நாம் எத்தனை தர்மங்கள் செய்தாலும் நம்தனுக்கு உதவாது என்று செய்ய வேண்டும். அப்பனே, எதையும் எதிர்பார்க்காமல், நம்தனுக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை உள்ளத்தில் வைத்துக்கொண்டு செய்தால் அதுவும் ஒரு பாபம்தான்..

அப்பனே! இதை தெரிந்து கொண்டாயா, அப்பனே? அப்படி செய்தால், பின்னர் இறைவனாலும்  ஒன்றும் செய்ய இயலாது. அதனால்தான் அப்பனே! பல பெரியோர்கள், எதையும் எதிர் பார்க்காமல், அதனையும் கொடுத்துவிடு என்று சொல்வார்கள். அவந்தனுக்கு புண்ணியம் சேருகின்றது அதனால், எது என்று அறிய.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 28 December 2022

சித்தன் அருள் - 1249 - அகத்தியர் ராஜ்ஜியத்தில் லோபாமுத்திரா தாயாரின் திருநட்சத்திரம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம்பிமலை/கோடகநல்லூர் வாக்கில், திரு ஹனுமத்தாசன் அவர்கள் நாடி வாசித்த பொழுது, அகத்தியப்பெருமான் இவ்வாறு கூறினார்.

"என் இல்லாள், லோபா முத்திரை, எம்முடனே எப்பொழுதும் இருக்கிறாள். யாராவது ஒருவராவது, லோபாமுத்திரையை பற்றி விசாரித்தீர்களா? அதில், அவளுக்கும் சற்று வருத்தம் உண்டு!" என்றார்.

அன்றே, அடியேனின் மனதுள் பதிந்த இந்த வாக்கியம், புது உருப்பெற்றது. அன்றுவரை, அகத்தியர் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம், அகத்தியப்பெருமானின் காயத்ரி மந்திரத்தை மட்டும் ஜெபித்து வந்த அடியேன், அன்று முதல் லோபாமுத்திரா தாயாரின் நாமத்தையும் சேர்த்து ஜெபித்து, மரியாதை செய்து வந்தேன். எத்தனையோ கேட்டும், தனிப்பட்ட அஷ்டோத்திரமோ மந்திரமோ கிடைக்கவில்லை. என்றேனும் நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால், தாயாரின் திருநட்சத்திரம், அஷ்டோத்திர மந்திரம் இவை இரண்டும் பற்றி கேட்டு, மிக சிறப்பாக ஆராதனை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது நாடி வாக்கின்படி இன்றைய தினம் அமைந்தது.

ஒரு அகத்தியர் அடியவர் 108 நாமாவளி மந்திரத்தை அனுப்பித் தந்தார். அகத்தியப்பெருமான் திரு நட்சத்திரத்தை அருளினார். அனைத்தும் குருவருளுடன் ஒன்று சேர்ந்த பொழுது, மிக சிறப்பாக அமைந்தது.  

அகத்தியர் ராஜ்ஜியமான பாலராமபுரத்தில் இன்று, மார்கழி மாத சதயம் நட்சத்திரத்தில், லோபாமுத்திரா தாயாருக்கு, சிறப்பான அபிஷேகத்ததுடன் பூஜைகள் நடந்தேறியது.

தாயாருக்கும், குருநாதனுக்கும், ஒரு அகத்தியர் அடியவர் சமர்ப்பித்த, வஸ்த்திரம், கல் அட்டிகை, பூமாலை சார்த்தி பூஜை, தீபாராதனை நடந்தது.

முன்னரே, எண்ணைக்காப்பு சார்த்தி, மூன்று நதி தீர்த்தங்களை அபிஷேகம் செய்து, பின்னர் பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், தேன், மாதுளை, அரிசி மாவு, சந்தானம், 108 மூலிகைப்பொடி, இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, பச்சைக்கற்பூரம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. கடைசியாக விபூதி, குங்குமம் உச்சியிலும், பாதத்திலும் அபிஷேகம் செய்யப்பட்டு, அபிஷேக பூஜை நிறைவு பெற்றது.

குருநாதருக்கும், தாயாருக்கும், சர்க்கரை பொங்கல், அப்பம் போன்றவை நிவேதிக்கப்பட்டு, கனிவகைகளுடன் தாம்பூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

அகத்தியப்பெருமான் லோபாமுத்திரா படம் பதிக்கப்பட்ட காசு வந்திருந்த அகத்தியர் அடியவர்களுக்கு, அம்மாவின் திருநட்சத்திர பரிசாக, அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அகத்தியப்பெருமானிடம் கேட்டு அடியவர்கள் ஒன்று சேர்ந்து, ஏதோ தெரிந்த அளவுக்கு எளிய மரியாதை செய்திருக்கிறோம். நிறைவாக இருந்தால், அதன் பெருமை அவரை சேரும். குறைகள் இருந்தால் அடியவர்களை சேரும். இருப்பினும் ஏற்றுக் கொள்ளுங்கள் என பிரார்த்தித்த பொழுது, மென்மையாக கோவிலிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழை பெய்தது. தாயார் அடியவர்களின் சமர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதற்கு, இதை விட ஒரு நற்சான்று இங்கில்லை.

ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா அஷ்டோத்தர சதநாமாவளி:

1. ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா மாத்ரே நம:
2. ஓம் ஸ்ரீ அகஸ்தியேஸ்வரியே மாத்ரே நம:
3. ஓம் ஸ்ரீ ப்ரஹ்மஸ்வரூபிண்யே நம:
4. ஓம் ஸ்ரீ சக்திமாயாயை நம:
5. ஓம் ஸ்ரீ தேவிரூபாயை நம:
6. ஓம் ஸ்ரீ ப்ரணசைதன்யாயை நம:
7. ஓம் ஸ்ரீ ரக்ஷபாலாயை நம:
8. ஓம் ஸ்ரீ கர்மகாரிண்யேயை நம:
9. ஓம் ஸ்ரீ மனோசைதன்யயே நம:
10. ஓம் ஸ்ரீ வாக்சைதன்யயே நம:

11. ஓம் ஸ்ரீ ரக்ஷரூபிண்யே நம:
12. ஓம் ஸ்ரீ தீபாரூடாயே நம:
13. ஓம் ஸ்ரீ ஷப்தாரூடாயே நம:
14. ஓம் ஸ்ரீ வாயுரூபிண்யே நம:
15. ஓம் ஸ்ரீ ப்ரித்வீஸ்வர்யை நம:
16. ஓம் ஸ்ரீதேவோபாசகாயை நம:
17. ஓம் ஸ்ரீ ரிஷிபத்னியாயை நம:
18. ஓம் ஸ்ரீ ரிஷிரூபிண்யை நம:
19. ஓம் ஸ்ரீ நக்ஷத்திரரூபிண்யை நம:
20. ஓம் ஸ்ரீ ஆஷரக்ஷேஶ்வர்யை நம:

21. ஓம் ஸ்ரீ நவ நவகர்மண்யே நம:
22. ஓம் ஸ்ரீ நவரசப்ரியாயை நம:
23. ஓம் ஸ்ரீ சப்தசாகரரூபிண்யே நம:
24. ஓம் ஸ்ரீ அந்தகடாஹதீப்தியே நம:
25. ஓம் ஸ்ரீ பிரபஞ்சஷப்தப்ரதாயின்யே நம:
26. ஓம் ஸ்ரீமனோலங்காராதேவியே நம:
27. ஓம் ஸ்ரீ பக்தஜன ரக்ஷகாயே நம:
28. ஓம் ஸ்ரீ சிவசக்திரூபிண்யை நம:
29. ஓம் ஸ்ரீ பரம்ஜ்யோதியே நம:
30. ஓம் ஸ்ரீ அலங்காரப்ரியாயே நம:

31. ஓம் ஸ்ரீ தீபசைதன்யயே நம:
32. ஓம் ஸ்ரீ வாஸ்துஷில்பிந்யே நம:
33. ஓம் ஸ்ரீ ரூபலாவண்யயே நம:
34. ஓம் ஸ்ரீ சாந்தீஸ்வரூபிண்யே நம:
35. ஓம் ஸ்ரீ ரிஷீஸ்வர்யே நம:
36. ஓம் ஸ்ரீ த்ரிலோக சாந்திதாயின்யே நம:
37. ஓம் ஸ்ரீ சிவபூஜநிரதாயே நம:
38. ஓம் ஸ்ரீ சக்திபூஜநிராதாயே நம:
39. ஓம் ஸ்ரீ கணேஷபூஜநிரதாயே நம:
40. ஓம் ஸ்ரீ ஷண்முகபூஜநிரதாயே நம:

41. ஓம் ஸ்ரீ போதஸ்வரூபிண்யே நம:
42. ஓம் ஸ்ரீ ரக்ஷகரணசக்தியை நம:
43. ஓம் ஸ்ரீ ஷிக்ஷகரணசக்தியை நம:
44. ஓம் ஸ்ரீ மௌபதேஷிகாயை நம:
45. ஓம் ஸ்ரீ சக்திவாரேண்யாயை நம:
46. ​​ஓம் ஸ்ரீ ஐம் ஸ்வரூபசக்தியை நம:
47. ஓம் ஸ்ரீ த்ரிலோக கர்மராக்ஷாதேவியை நம:
48. ஓம் ஸ்ரீ சௌந்தர்ய ஸ்வரூபாயை நம:
49. ஓம் ஸ்ரீ கார்யகாரணபோதினாயை நம:
50. ஓம் ஸ்ரீ நவகீர்த்திஷக்த்யை நம:

51. ஓம் ஸ்ரீ காவேரி மாத்ரே நம:
52. ஓம் ஸ்ரீ ப்ரஹ்மாண்டசக்தியை நம:
53. ஓம் ஸ்ரீ ப்ராஹ்மணப்ரியாயை நம
54. ஓம் ஸ்ரீ ஸத்யதர்மஸ்வரூபிண்யை நம:
55. ஓம் ஸ்ரீ சதுர்க்ஷா மாத்ரே நம:
56. ஓம் ஸ்ரீ சத்ருசம்ஹார சக்தியை நம:
57. ஓம் ஸ்ரீ யந்திர பால மாத்ரே நம:
58. ஓம் ஸ்ரீ தந்த்ர பால மாத்ரே நம:
59. ஓம் ஸ்ரீ ரத்னஸ்வரூபிண்யே நம:
60. ஓம் ஸ்ரீ வ்ருக்ஷப்ரியாயை நம:

61. ஓம் ஸ்ரீ அன்னரக்ஷா மாத்ரே நம:
62. ஓம் ஸ்ரீ ப்ரணரக்ஷ மாத்ரே நம:
63. ஓம் ஸ்ரீ குடும்ப ஐக்யப்ரதாயின்யை நம:
64. ஓம் ஸ்ரீ சந்தானரக்ஷகாரிண்யை நம:
65. ஓம் ஸ்ரீ புவனேஸ்வர்யே நம:
66. ஓம் ஸ்ரீ பிரபஞ்சசக்தியை நம:
67. ஓம் ஸ்ரீ வித்யாரக்ஷகாயை நம:
68. ஓம் ஸ்ரீ ஜீவரக்ஷகாயை நம:
69. ஓம் ஸ்ரீ வாராதிப சேவாதல்பராயயே நம:
70. ஓம் ஸ்ரீ மாசாதிப சேவநிராதாயை நம:

71. ஓம் ஸ்ரீ திதிசக்திதேவ்யை நம:
72. ஓம் ஸ்ரீ நக்ஷத்ரஶக்திதேவ்யை நம:
73. ஓம் ஸ்ரீ தெய்வபக்தி அநுக்ரஹதாயின்யை நம:
74. ஓம் ஸ்ரீ மானவரக்ஷதாயின்யை நம:
75. ஓம் ஸ்ரீ ஸஹரிஷிஷாந்தியை நம:
76. ஓம் ஸ்ரீ ஸஹமதாரக்ஷகாயை நம:
77. ஓம் ஸ்ரீ சைஷாந்திரூபிண்யை நம:
78. ஓம் ஸ்ரீ அம்ருதானந்தரூபிண்யை நம:
79. ஓம் ஸ்ரீ வானரக்ஷா மாத்ரே நம:
80. ஓம் ஸ்ரீ வானரக்ஷா மாத்ரே நம:

81. ஓம் ஸ்ரீ பவனரக்ஷா மாத்ரே நம:
82. ஓம் ஸ்ரீ பர்யபர்த்ரு சுகதாயின்யை நம:
83. ஓம் ஸ்ரீ வாத்யகலாவித்யா ரக்ஷகாயை நம:
84. ஓம் ஸ்ரீ மனோசக்தி ரூபிண்யை நம:
85. ஓம் ஸ்ரீ கர்மசக்தி மாத்ரே நம:
86. ஓம் ஸ்ரீ ஞானதீப மாத்ரே நம:
87. ஓம் ஸ்ரீ ஸஹதேவத்யானா மாத்ரே நம:
88. ஓம் ஸ்ரீ ஔஷத ஸ்வரூபிண்யை நம:
89. ஓம் ஸ்ரீ ராஜ்யமாத்ருகா மாத்ரே நம:
90. ஓம் ஸ்ரீ சத்யகர்ம தேவ்யை நம:

91. ஓம் ஸ்ரீ மானஸகர்ம ஷுத்திப்ரதாயை நம:
92. ஓம் ஸ்ரீ வச்சகர்ம ரக்ஷகாரிண்யை நம:
93. ஓம் ஸ்ரீ ஜீவஜ்யோத்யை நம:
94. ஓம் ஸ்ரீ பஞ்சப்ராணேஷ்வர்யை நம:
95. ஓம் ஸ்ரீ தசப்ரணேஷ்வர்யை நம:
96. ஓம் ஸ்ரீ அஷ்டாங்கவித்யாரூபிண்யை நம:
97. ஓம் ஸ்ரீ ஹடயோக விசாரதாயை நம:
98. ஓம் ஸ்ரீ ஔஷத ஶக்த்யை நம:
99. ஓம் ஸ்ரீ ஜீவசைதன்ய மாத்ரே நம:
100. ஓம் ஸ்ரீ பரமசத்ய ப்ரதீபாயை நம:

101. ஓம் ஸ்ரீகாமப்ரதாயன்யை நம:
102. ஓம் ஸ்ரீ ஆனந்தப்ரதாயின்யை நம:
103. ஓம் ஸ்ரீ மோக்ஷதாயின்யை நம:
104. ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷதேவ்யை நம:
105. ஓம் ஸ்ரீ சங்கீதப்ரியாயை நம:
106. ஓம் ஸ்ரீ ஓம்காரஸ்வரூபாயை நம:
107. ஓம் ஸ்ரீ ஶிவஶக்த்யைக்ய ஸ்வரூபிண்யை நம:
108. ஓம் ஸ்ரீ அகஸ்த்ய தர்மபத்ன்யை நம:

ll இதி ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா அஷ்டோத்தர ஶதநாமாவளி ஸம்பூர்ணம் l

வேறு இடங்களில் உள்ள லோபாமுத்திரா சமேத அகத்தியர் திரு சன்னதிகளிலும், இன்று மார்கழி சதயம் பூஜை சிறப்பாக நடை பெற்றது.



[பஞ்சேஷ்டி அகத்தியர் கோவில்]


[சின்னாளபட்டி ஶ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் - அன்னை லோபாமுத்ரா திருஅவதார மார்கழி சதய வழிபாடு]

[பனப்பாக்கம் அகத்தியர் கோவில்]
[ மதுரை பசுமலை அகத்தியர் சன்னதி]

[கல்யாண தீர்த்தம் பாபநாசம்]
[அகத்தியர் அடியவர் இல்லத்தில்]



[ ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம், பெங்களூரு] ↑↑

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......தொடரும்!

Tuesday, 27 December 2022

சித்தன் அருள் - 1248 - அகத்தியர் வாக்கு - 2


கேள்வி: "மறுபடியும் அந்த கிருமியின் தாக்கம் உலகமெங்கும் பரவி வருவதாக கூறுகிறார்கள்? அனைவருக்கும் பாதுகாப்பு அருள வேண்டும்!"

"அப்பனே! எதை என்று அறிய! அப்பனே! உணர்ந்து உணர்ந்து அப்பனே! யான் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!  இப்பொழுது இங்கு மின்சாரம் நிறுத்திவிட்டால் என்னேவாகும் கூறு!"

"இருட்டாகிவிடும்!"

"அப்பனே! மீண்டும் வந்துவிட்டால்?"

"வெளிச்சமாகும்!"

"அப்பனே! அப்படித்தான் வாழ்க்கை! அப்பனே! இப்படித்தான் நடக்கும்!"

விளக்கம்:[போகும், வரும், இதுதான் நடக்கும் என்கிறார்!]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 25 December 2022

சித்தன் அருள் - 1247 - அகத்தியர் வாக்கு - 1


அய்யனே! உங்களின் திருநட்சத்திர ஜெயந்தி ஜனவரி 09ம் தேதி வருகிறது. உங்கள் சேய்கள் அனைவரும் மிக சிறப்பாக உங்களுக்கு பூஜை செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறோம். அதற்கு நீங்கள் அனுமதியும் தந்துவிட்டீர்கள். நீங்கள்தான் நடத்திக்கொள்ள போகிறீர்கள் எனவும் சொல்லிவிட்டீர்கள். அது தொடர்பாக இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்துங்கள்.

லோபாமுத்திரா தாயார் பிறந்த தமிழ் மாதமும், நட்சத்திரமும் சொல்லுங்கள். அந்த திருநட்சத்திர நாள் அன்றும், அம்மாவுக்கும் அதே போல சிறப்பாக பூஜை அபிஷேகம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறோம். அதற்காகத்தான் கேட்கிறோம்!

குருநாதர்:- "எதை என்று உணர்ந்து உணர்ந்து, அறிய அறிய. ஆனால் ஒன்றை மட்டும் நான் இங்கு குறிப்பிடுவேன். சித்தர்களுக்கு நாள் இல்லை, நட்சத்திரம் இல்லை, ராசிகள் இல்லை, ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து செய்கின்றார்கள், அதையும் யான் ஏற்றுக் கொள்கிறேன், அப்பனே! நிச்சயம் இவ் மார்கழி திங்களிலே, சதயம் (நட்சத்திரம்), கும்பம் (ராசி). அப்பனே! அவளும் வந்தவள், நானும் வந்தவன், இப்போது புரிந்து கொண்டிருப்பாய் நீ!"

சித்தர்களுக்கு நாள் நட்சத்திரம் கிடையாதுதான்! ஆனாலும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்மாவுக்கும் சிறப்பாக பூசை செய்யலாமே என்ற எண்ணத்தில் தான்.

குருநாதர்:- அப்பனே! நீயும் தீர்மானித்துக்கொள். யான் சொல்லிவிட்டேன்.

நிச்சயமாக நடத்திவிடலாம். இந்த வருடத்திலிருந்து, அம்மாவுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்ய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கு சொல்லிவிடலாம் அந்த பாக்கியத்தை கொடுத்துவிடலாம். அவர்களும் ஏதேனும் ஒரு சன்னதியில், எங்கெங்கு தாயாரோட குருநாதர் இருக்கிறாரோ அங்கு அவர்கள் அந்த தினத்தில் பூஜையில் பங்கு பெறுவார்கள். (28/12/2022 - புதன்கிழமை).

குருநாதர்:- அப்பனே! இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். அப்பனே! யான் பல பிறவிகளை கடந்தவன். எந்தனுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை அப்பனே! இவை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் குழப்பங்கள் ஆகிவிடும் அப்பனே! அதனால் 27 நட்சத்திரங்களுக்கும் யான் சொந்தக்காரன்.

உண்மைதான்! மனிதர்களாக இருப்பவர், ஏதேனும் ஒரு நட்சத்திரத்தை, உதாரணமாக சிவபெருமானுக்கு திருவாதிரை, முருகனுக்கு பூசம், பெருமாளுக்கு திருவோணம், உங்களுக்கு ஆயில்யம் என ஒரு குறிப்பிட்ட தினத்தில் சிறப்பு பூசை செய்வது போல், லோபாமுத்திரா தாயாருக்கும் சிறப்பாக அபிஷேக பூசை செய்யலாமே.

குருநாதர்:- அப்பனே! அது மட்டும் அல்லாமல், என் தகுதிகள் பல. லோபாமுத்திரையும் என்னைவிட சக்தி மிகுந்தவள் என்பேன். ஆனால் பொறுத்துக் கொண்டு இருக்கின்றாள் அனைத்தும். எதை என்று கூற. என் மணாளனை காட்டிலும் உயர்ந்தவள் இல்லை என்று கூற. அதனால்தான் அப்பனே! பெண்கள் எந்த உயர் நிலையில் இருந்தாலும், எந்தனுக்கு ஒன்றும் தெரியாது என்ற நிலையில் இருந்தால் அவர்கள் வாழ்க்கை பிரமிப்பாக இருக்கும்.

{அகத்தியர் அடியவர்களே! யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் கூறட்டும். இதுவல்ல, அது என்றோ, பிறப்பா? என்ன வேடிக்கையாக இருக்கிறதே! எனவெல்லாம் கூறினாலும், அனைத்தையும் விலக்கிவிட்டு, மார்கழி, சதயத்தன்று ஏதேனும் ஒரு சன்னதியில் ஒரு பூவேனும் சமர்ப்பியுங்கள். ஏன் என்றால், இதேபோல் கேலி செய்தவர்களை புறக்கணித்து ஒரு திருநட்சத்திரத்தன்று பூஜை செய்ய, இறைவனே தரிசனம் தந்து அருளவும் செய்தான். அதன் பின் அடியேனுக்கு வாழ்க்கையில் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமே வரவில்லை. உங்களுக்கு, புரியும் என்று நினைக்கிறேன்.}

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Saturday, 24 December 2022

சித்தன் அருள் - 1246 - அன்புடன் அகத்தியர் - குருநாதருடன் ஒரு அனுபவம்!


வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!

சித்த மார்க்கம் என்பது சாதி மதம் இனம் மொழி இவற்றை அனைத்தையும் கடந்த ஒன்று!!!!!

அன்பே சிவம்!!!! என்பதையும் ஒன்றே குலம் !!ஒருவனே தேவன் !!என்பதையும் சித்தர்கள் எப்பொழுதும் வலியுறுத்தி கொண்டே வருவார்கள்!!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமானின் வாக்குகளையும் சித்தர்களின் வாக்குகளையும் உணர்ந்து படித்து வருபவர்களுக்கு சித்தர்களின் பாதையில் வருபவர்களுக்கு இது தெரிந்த ஒன்று....

இறைவன் ஒருவனே!!!! அதாவது ஏகன் அனேகனாக இருக்கின்றான் என்பதை தெளிவாக சித்தர்கள் தன்னுடைய வாக்குகளில் செப்பிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றார்கள்!!!!

காகபுஜண்டர் மகரிஷி காசியில் தன் வாக்கில் ( சித்தன் அருள் 1178)

இன்னும் பல

இறைத்தூதர்களையும் அழைத்து!! அழைத்து!! ஆனால்

மூலன் (திருமூலர்) கூற்றுப்படி

இறைவன் ஒன்றே!!!

ஆனாலும் இறைவன் ஒன்றே !!! என்பதை எப்படி யாங்கள் உரைப்பது!! என்றால்..... நீங்கள் எல்லாம் சரியாகப் புரிந்து கொண்டால் தான் அதையும் யாங்கள் உரைக்க வருவோம்!!!!!!

நிச்சயம் ஒரு நாள்

அனைத்தையும் சொல்வோம்!!!!

நம்குருநாதர் அகத்தியபெருமான் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலய வாக்கில் (சித்தன் அருள் 1063)

இதனையும் என்று கூற நீங்கள் செய்த புண்ணியங்கள் பின் நிச்சயமாய் திருத்தலத்திற்கு பின் இங்குள்ள சக்திகள் எவ்வாறு என்பதைக்கூட பின் விநாயகப் பெருமான் முருகன் பின் இன்னும் கூட பைரவன் இவை என்று கூற அனைத்து தெய்வங்களும் சேர்ந்து அழைக்கும்.

ஆனாலும் மூலன் (திருமூலர்) கூற்றுப்படி ஒன்றே தெய்வம் ஒன்றே.

இதனையும் என்று கூற இத் தலத்தை(சுசீந்திரம் திருக்கோயில்) பற்றியும் விவரமாக விவரிவித்தால் இதனையும் என்று கூற அனைத்திற்கும் ஈசனே காரணம். ஈசன் ஒருவனே என்பது தான் இங்கு நிச்சயமாக ஆனாலும் அவரவர் விருப்பப்படி அவரவர் வடிவிலும் பின் வணங்குகின்றார்கள் என்பதை இதைப் பற்றிக் கூட யான் தெளிவாக தெரிவிக்கின்றேன் வரும் காலத்தில்.

சித்தன் அருள் 1204 ல் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது கேள்வி பதில்களில்

ஈசன் வேறா??  பின் பார்வதி வேறா??? என்றெல்லாம் ஆனாலும் மூலனின் கூற்றுப்படி இறைவன் ஒன்றே

ஆனாலும் பல அவதாரங்கள் உங்களுக்குச் சொல்லிவிட்டாலும் மனிதர்களுக்கு புரியாது !!!

சித்தர்களின் தன்மைகள் அதனால் மனிதனுக்கு ஏற்றவாறே உரைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பன்களே!!! 

மதுரா வாக்கில் கூட குருநாதர் அப்பனே!! எதையென்று அறிய அறிய அதனால்..... அப்பனே மூலன்(திருமூலர்) கூட ஒன்றே குலம்!!! ஒருவனே தெய்வம்!!!.......

அப்பனே எதை எதை என்று ஆராய்ந்து ஆராய்ந்து இதையும் கூட அப்பனே இன்னும் இன்னும்... வரும் வாக்குகளில் எதற்காக இதை சொன்னான்!!! என்பதையும் கூட நிச்சயமாய் எடுத்துரைப்பேன் அப்பனே நலமாகவே!!!!

சிவராத்திரி அன்று காசியில் ஈசன் உரைத்த தன்னுடைய வாக்கில் கூட 
பின் எத்தனையோ எத்தனையோ ஞானிகளை உருவாக்கினேன். உருவாக்கிவிட்டு பல நூல்களையும் எழுதச் சொன்னேன்.

ஆனாலும் இதையெல்லாம் மனிதனிடத்தில் போய் சேர்ந்தது.

ஆனாலும் இதனை கூட பயன்படுத்த தெரியாத மனிதனை முட்டாள் தான் என்று கூறுவேன்.

இதையும் பல சித்தர்களும் என்னிடத்தில் கூறிவிட்டார்கள்.

ஆனாலும் உரைத்ததை உரைக்குமாறே பின் பின் அழிவைத் தேடிக் கொள்வான்.

மதங்கள் இதனை என்று வெறுத்தால் கூட உண்டு என்பதற்கு ஒன்று இல்லை.இதனை அழகாக

சுட்டிக்காட்டினான் என்பக்தன் மூலன் (திருமூலர்).

ஆனாலும் இதை மனிதன் ஏற்பதாக தெரியவில்லை.

தெரியவில்லை நலன்கள் எவ்வாறு உருவாவதற்கு மேன்மை நிலைகள் உண்டு என்பதற்கிணங்க பல சித்தர்களும் வழிகாட்டியாக மக்களை அழகாக கொண்டு சென்றனர். 

என்று வாக்குகள் தந்திருந்தார்.

மனிதர்களாகிய நாம் மட்டும் தான் மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டு என் இறைவன் பெரியவன் உன் இறைவன் பெரியவன் சிறியவன் என்ற மனப்பான்மையோடு மத சண்டை இன மோதல்கள் என வாழ்ந்து வருகின்றோம்.

இயேசு நபிகள் நாயகம் முதல் இறைத்தூதர்கள் மனம் வருந்தும்படியான செயல்களை மனிதகுலம் செய்து கொண்டே வருகின்றது.

ஆனால் சித்த மார்க்கத்தில் இவ்விதமான கருத்து மோதல்களும் வேறுபாடுகளும் இல்லவே இல்லை. சித்தர்களுக்கு அன்பு ஒன்றுதான் பெரியது அந்த அன்பையே தெய்வம் என நமக்கு வழியாக காட்டி உபதேசித்து வருகின்றார்கள். மதரீதியான இன ரீதியான மொழி ரீதியான வேறுபாடுகள் எதுவும் சித்தர்கள் பார்ப்பது கிடையாது அனைவரும் அவர்களுடைய பிள்ளைகள் தான்!!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் எத்தனையோ மனிதர்களுக்கு உபதேசம் செய்து நல் வாழ்க்கையை தந்திருக்கின்றார். அந்த மனிதர்கள் யார் ?என்ன மதம் ? என்ன இனம் என்ற வேறுபாடு பார்ப்பதே இல்லை !!!

உண்மையான பக்தியும் நல்ல ஒழுக்கமும் தொண்டு உள்ளமும் இருந்தால் குருநாதரே தேடிச்சென்று வாக்குகள் தந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி அருளாசிகள் தருவார் !!அப்படி ஒரு சம்பவம் தான் நாம் இப்பொழுது பார்க்கப் போவது!!!

அகத்தியரின் ஜீவநாடி சுவடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை குருநாதர் அடிக்கடி வட இந்திய யாத்திரைக்கு செல்ல பணித்ததுண்டு!!!

அப்படி சில இடங்களுக்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் அகத்தியர் அடியவரை திரு ஜானகிராமன் ஐயா அவருடன் இணைத்து பயணிக்க வைப்பதும் உண்டு.

அப்படி ஒரு சமயம் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை வட இந்திய யாத்திரைக்கு குருநாதர் சுவடியில் உத்தரவு தர அதன்படியே ஜானகிராமன் அய்யாவும் யாத்திரைக்கு வந்தார். குருநாதரின் உத்தரவுப்படி ஒரு அகத்திய அடியவர் அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து ஒரு தற்காலிக ஓட்டுநரை அழைத்து வந்திருந்தார்.

அந்த ஓட்டுநர் ஒரு மலையாளி கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் பெயர் வர்கீஸ் ஆபிரகாம். இவர் கேரளாவை சேர்ந்திருந்தாலும் வாழ்வது வட இந்தியாவில் அதற்கு முன்பு சிறிது காலம் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்திருந்தார் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சரியான வேலைகள் அமையாமல் மனைவி மக்களுடன் வட இந்தியாவில் தான் வசித்து வருகின்றார். மனைவி ஒரு மருத்துவமனையில் செவிலியர் பணி இரு பெண் குழந்தைகள் அவருக்கு.

வெளிநாட்டில் இருந்து திரும்பி அவருக்கு சரிவர வேலை வாய்ப்புகள் அமையாததால் மிகவும் சோர்வுடன் தான் இருந்தார் அந்த அகத்தியர் அடியவருக்கு இவர் மிகவும் நெருங்கிய நண்பர் அதனால் திரு ஜானகிராமன் ஐயாவை வாகனத்தில் அழைத்து வர அவரை அழைத்துக்கொண்டு சென்றிருந்தார்.

திரு ஜானகிராமன் ஐயா அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு வரும் வழியில் அடியவரும் ஜானகிராமன் ஐயாவும் குருநாதரை பற்றி பேசிக்கொண்டே வரும் பொழுது அதை கவனித்துக் கொண்டே இருந்த வர்கீஸ் குருநாதரை பற்றி மேலும் அறிந்து கொள்ள சில கேள்விகளை எழுப்பினார் அதற்கு அந்த அடியவரும் குருநாதரை பற்றி குருநாதரின் மகத்துவத்தை பற்றி எடுத்துரைக்க அவரும் கேட்டுக் கொண்டே வந்தார்.

நல்லபடியாக பயணத்தை முடித்துக் கொண்டு அந்த அகத்தியர் அடியவரிடம் வர்கீஸ் தயங்கிக் கொண்டு நீங்கள் அகத்தியரை பற்றி கூறிய ஒவ்வொன்றையும் நான் கேட்டுக் கொண்டேன். நான் ஒரு கிறிஸ்தவன் இருந்தாலும் அகத்தியரை பற்றி உங்களுடைய பேச்சால் தெரிந்து கொண்டேன் அவர் எனக்கும் வாக்குகள் தருவாரா என்று ஆவலுடன் தயக்கத்துடன் கேட்டார்.

அந்த அகத்தியர் அயவரும் என்ன கேட்டு விட்டீர்கள் நீங்கள்!!!! குருநாதர் அகத்திய பெருமான் பெருமான் கருணை மிகுந்தவர் அவருக்கு அன்பும் ஒன்றுதான் பெரியது. அவரை நம்பியோரை அவர் கைவிட்டதாக சரித்திரம் இல்லை. நீங்கள் அவரை நம்பி அவர் வாக்குகளை கேட்பதற்கு ஆசைப்பட்டு விட்டீர்கள் கண்டிப்பாக உங்களுக்கு வாக்குகள் தருவார். திரு ஜானகிராமன் அய்யாவின் பயண களைப்பு தீரட்டும். மாலை நேரத்தில் நீங்கள் வாருங்கள் குருநாதரிடம் தங்களுக்கு வாக்குகள் கேட்டு விடுவோம் என்று கூறி விட!!!!

வர்கீஸ் ஆபிரகாம் அவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் வீட்டிற்கு சென்றார். 

மாலை நேரம் அகத்தியர் அடியவரும் ஜானகிராமன் அய்யாவும் குளித்துவிட்டு ஜீவநாடிக்கு பூசைகள் செய்யும் பொழுது வர்க்கீஸ் அவர்கள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தார் அவரை அமரும்படி கூறிவிட்டு சுவடி பூஜை புனஸ்காரங்கள் முழுமையாக செய்துவிட்டு வர்கீஸ் அவரை அமர சொல்லி சுவடியை திரு ஜானகிராமன் ஐயா பிரித்து வாசிக்க தொடங்கினார்!!!!

ஆதி ஈசனின் பொற்கமலத்தை  பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்!!!! 

இதனையுமென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஏசுநாதனும் பின் நல்விதமாகவே ஆசிகள் கொடுத்து விட்டான்!!!!

யான் சொல்வதை எதை என்று கூற இவ்மந்திரத்தை மட்டும் எங்கு சென்றாலும் செப்பி வரவேண்டும்!!!!

"""" நம் தேவனாகிய கர்த்தர் ஒருவரே பரிசுத்தர்!!! பரிசுத்தர்!!! பரிசுத்தர்!!!

அவர் சதாகாலமும் ஜீவிக்கிறார்!!!

அவர் ஆதி வழி அன்பினால் நம்மை மீட்டவர்!!! அவரை துதியுங்கள் !!அவர் நல்லவர்!! அவர் கிருபை என்றும் உள்ளது!!!!

எனும் மந்திரத்தை மட்டும் செப்பி வா!!!!

பின்பு கடைசியில் அனைத்தும் கொடுத்தாயே இறைவா !!!உந்தனுக்கு நன்றி என்று கூறிவிட்டு உறங்கச் செல்!!!!

அவை மட்டும் இல்லாமல் சங்கீதம் எனும் புதிய எவை என்று கூற பின் பழைய
(புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு பைபிள் ல் இருக்கும் சங்கீதம் அதிகாரம்) சங்கீதத்தில் கடைசி அப்பனே இதையன்றி கூற...... இலவசமாக காற்று வந்தவனுக்கு துதிக்கின்றேன்!!!! இதையன்றி கூற இலவசமாக அனைத்தையும் தந்தவனுக்கு துதிக்கின்றேன் என்று சங்கீதத்தில் வரும்!! பின் அதிகாரங்கள்!!!

பின் இவையன்றி கூற நூற்றின்( அதிகாரம் 100க்கு மேல்) மேலே வரும்!! அதையும் பின் உறங்கும் பொழுது பின் நல்விதமாகவே பின் சொல்லிக் கொண்டே வந்தால் அனைத்து குறைகளும் நீங்கும் உன் எதை என்று கூற இயேசு நாதனும் உன் பிள்ளைகளை பார்த்துக் கொள்வான்!!! கவலைகள் இல்லை அப்பனே!!!

நன்றியுடனே இரு!!! அப்பனே வெற்றிகள் கிடைக்கும் பணமும் கிடைக்கும் அப்பனே கவலைகள் இல்லை!!!!

என்று வாக்குகள் குருநாதர் தந்தார். இதை அப்படியே அந்த அகத்திய அடியவர் வர்கீஸ் அவர்களுக்கு மொழிபெயர்த்து தர அவர் மனம் மகிழ்ந்து போய்விட்டார்!!!! குருநாதரை வணங்கி விட்டு குருநாதர் வாக்குகள் தந்திருந்ததை  ஒலிபதிவாக செய்து எடுத்துக் கொண்டு அதன்படியே கேட்டுக் கொண்டு இன்று அவர் நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றார். வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு தக்க சமயத்தில் குருநாதர் வாக்குகள் தந்தது அவருக்கு மிகவும் பெரும் ஆறுதலையும் தைரியத்தையும் தந்தது . இன்று வர்கீஸ் அவர் சொந்தமாக குளிர்சாதன கருவிகள் பழுது பார்க்கும் பணியை சொந்தமாக நடத்திக் கொண்டு வாழ்க்கையில் எந்த குறைவும் இல்லாமல் தற்போது வாழ்ந்து வருகின்றார். அந்த அகத்திய அடியவரை பார்த்தால் எப்பொழுதும் திரு ஜானகிராமன் அய்யாவும் அகத்தியரும் மீண்டும் வருவார்களா என்று பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி கேட்பதும் உண்டு.

நம்பிக்கையும் அன்பும் நல் பக்தியும் இருந்தால் குருநாதர் அகத்திய பெருமான் விதியில் எப்படி இருந்தாலும் அதை மாற்றி நல்வாழ்க்கை வாழ நல்வழிகள் காட்டித் தந்து விடுவார் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் ஏராளம் ஏராளம் யுகம் யுகங்களாக நடந்து கொண்டிருக்கின்றது அகத்தியரின் கருணை வெள்ளம் பாய்ந்து கொண்டே இருக்கின்றது!!! நன்றிகள் நமஸ்காரங்கள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...... தொடரும்!

Friday, 23 December 2022

சித்தன் அருள் - 1245 - அகத்தியர் அருள்வாக்கு - 1


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

குருநாதருடன் நாடியில் பேசியபோது கிடைத்த அருள்வாக்கு!

எம் வழியில் வருபவர்கள், கீழ்கண்டவைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சித்தர்கள் வாக்கில் உண்மையே இருக்கும். சித்தர் உரைத்திருந்தால் அது நிச்சயமாக நடக்கும். நடக்கும் வரை பொறுமை தேவை.

எம் வாக்கில், இருபொருள், முப்பொருள் இருக்கும். ஆகவே சேய்கள் எம் வாக்கை உன்னிப்பாக கவனித்து, உள்வாங்கி, உணர்ந்து அதன் படியே செயல் பட வேண்டும். ஒருவன் கர்மா படி அவனே முடிவெடுத்து செயல் படட்டும் என்றுதான் இரு பொருள். முப்பொருள் கொண்ட வாக்கை உரைக்கின்றோம். தீர்மானிப்பதும், செயல்படுவதும், அதன் பலனை அனுபவிப்பதும் அந்த ஒருவன்தான்.

ஒரு செயலை, சித்தன் உரைத்ததை விட மேன்மையாக செய்தால், நாங்களே அடிக்கடி இறங்கி வந்து மேலும் நிறைய இறை சேவை செய்ய வாய்ப்பளிப்போம்.

சித்தனுடன் அமர்வது, அவர்களின் அருகாமை என்பது இறைவன் பாதத்தில் அமர்வதற்கு சமம்.

அவசர புத்தி, எதிலும் ஆபத்து. நிதானமும், கவனமும் ஒரு பொழுதும் இழக்ககூடாது.

இறைவனும், சித்தர்களும் உன்னை தேடி வரும்படி வாழ்க்கையில் நடந்து கொள்.

சித்தன் பார்வையே கர்மாவை சிதறடிக்கும்.

சித்தனிடம் வந்தால் வாங்கி வந்த கர்மாவை முதலில் அனுபவிக்கவிட்டு கரைத்து, பின்னரே எம் வழியில் சேர்ப்போம். அது எம் மைந்தனாக இருந்தாலும் சரி. பாரபட்சம் கிடையாது.

மனிதன் என்றாலே, கர்மாதான்.

சித்தன் என்றாலே இறைவனின் தூதுவர்கள். நேரமும், வெளிச்சமும் அவர்களுக்கு பொன்போன்றது. இதை முதலில் உணர்ந்து செயல்படுங்கள்.

நீ சம்பாதித்த சொத்து உன் கர்மாவைத்தான் கூட்டவோ குறைக்கவோ செய்யும். இறைவனுக்கும்/சித்தர்களுக்கும், உன் இதயத்தை தவிர வேறு எதுவும் தேவை இல்லை.

நல்ல செயலை செய்வதானால், உடனேயே செய்துவிடு. கெடுதலை செய்ய ஒரு போதும் நினைக்காதே.

எங்கும், எதிலும் தொடர்பு வைத்தால், கர்மா பங்கு வைக்கப்படும்!

மௌன விரதம் என்பது பேசாமல் மட்டும் இருப்பதல்ல, உள்ளே எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது.

ஏமாற்றுபவன் உன்னை பதட்டமடைய செய்து வெற்றி பெறுகிறான். உன்னிப்பாக கவனித்து நடந்து கொண்டால் இழப்பு இருக்காது.

இறைவன் ஏகன்/அனேகன், அதை முதலில் உணருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 22 December 2022

சித்தன் அருள் - 1244 - லோபாமுத்திரா தாயாரின் திருநட்சத்திரம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப்பெருமானின் உத்தரவால், அவரது ஜீவநாடி, அகத்தியர் ராஜ்ஜியம் என்கிற பாலராமபுரம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. காகபுசுண்டர் சித்தர் வந்து வாக்குரைத்தார். அதன் பின்னர் அகத்தியப்பெருமான் வந்தமர்ந்து பொது கேள்விக்கான வாக்குகளை அளித்தார். பல கட்டங்களாக உரைக்கப்பட்ட அருள் வாக்குகளில், மிக முக்கியமான ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் அடியேனை மிக உற்சாகம் அடையச் செய்தது. அதை உங்கள் அனைவரிடமும் உடனேயே தெரிவிக்க நினைத்து இந்த ஒரு தொகுப்பு. கவனிக்க! இந்த வாக்கின் அடிப்படையில், அகத்தியர் அடியவர்கள் ஏதேனும் செய்ய விரும்பினால், அதிக நேரம் இல்லை. ஆகவே, அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு, இதை மட்டும் கூறுகிறேன்.

நாடியில் அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வி:-

"உங்களுடைய திருநட்சத்திர ஜெயந்தி ஜனவரி 09ம் தேதி வருகிறது. உங்களுடைய குழந்தைகளாக இருக்கிற நாங்கள் எல்லோரும், மிக சிறப்பாக உங்களுக்கு அபிஷேக பூஜை செய்யவேண்டும் என விருப்பப்படுகிறோம். அதற்க்கு நீங்கள் அனுமதி/ஆசிர்வாதம் அளித்துவிட்டீர்கள். நீங்கள்தான் நடத்திக்கொள்ளப் போவதாகவும் சொல்லிவிட்டீர்கள். அது தொடர்பான ஒரு விஷயம் என்னவென்றால், இரண்டு செய்திகளை கூறுங்கள்.

லோபாமுத்திரா தாயார் பிறந்த தமிழ் மாதமும், நட்சத்திரமும் சொல்லிக் கொடுங்கள். அந்த தினத்திலும், உங்கள் சேய்கள், தாயாருக்கும் சிறப்பாக அபிஷேக பூஜை வருடத்தில் ஒரு நாளேனும் செய்ய விருப்பப்படுகிறார்கள். அதற்காகத்தான் கேட்கிறோம்."

அகத்தியப்பொருமானின் பதில் வாக்கு:-

"எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே. ஆனால், ஒன்றை மட்டும் யான் உறுதிப்படுத்துவேன். சித்தர்களுக்கும் எது என்று அறிய, நாள் இல்லை, நட்சத்திரம் இல்லை, ராசிகள் இல்லை. ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து செய்கின்றார்களோ, அதையும், யான் ஏற்றுக்கொள்வேன் அப்பனே.

ஆனாலும், எதை என்று அறிய, கூறுகிறேன், இவ் மார்கழி திங்களில், கும்பம் (ராசி), சதயம் (நட்சத்திரம்)." (அடியேன் விரிவான வாக்கினை பின்னர் தெரிவிக்கிறேன்).

உடனேயே, சதயம் நட்சத்திரம் என்று வருகிறது என பார்க்க, பஞ்சாங்கத்தை புரட்டினால் 28/12/2022, புதன் கிழமை அன்று வருகிறது. இது ஒரு மிகப்பெரிய தகவல். உடனேயே, பாலராமபுரம் கோவில் பூஜாரியிடம் பேசி அன்றைய தினம் மிக சிறப்பாக லோபாமுத்திரா தாயாருக்கு அபிஷேக பூஜைகளை செய்ய வேண்டும் என வேண்டினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

அடியவர்களே! உங்களால் இயன்றவரை அன்றைய தினம் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அகத்தியர் கோவிலில், இருவருக்கும் அபிஷேக பூஜைகளை செய்து, அம்மாவுக்கு சிறப்பான தினமாக மாற்ற வேண்டுகிறேன். எண்ணம் இருந்தும், அருகில் அகத்தியர் கோவில் இல்லை என்றால், பாலராமபுரம் கோவிலில் தொடர்பு கொள்ளுங்கள். பாலராமபுரம் கோவில் தொடர்பு விவரங்கள் "அகத்தியப்பெருமானின் சித்தன் அருள்" வலை தளத்தில் வலதுபக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற விஷயங்கள் பின்னர் தெரிவிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 20 December 2022

சித்தன் அருள் - 1243 - பாலராமபுரமே "அகத்தியர் ராஜ்ஜியம்"!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில் திரு. ஜானகிராமன் அவர்கள் வாசிக்கும் அகத்தியப்பெருமானின் ஜீவநாடி, அவர் உத்தரவின் பேரில் பாலராமபுரத்திற்கு பூஜைக்காக கொண்டு வரப்பட்டது. அவர் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின்னர் அகத்தியப்பெருமானின் உத்தரவுடன் "பொது வாக்கு" வாசிக்கப்பட்டது.

அடியேனுக்கு, சில கேள்விகள் குருநாதரிடம் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு கேள்வியும், அதற்கான அழகான பதிலும், அடியேனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நாடியில் அகத்தியரிடம்

"வணக்கம் அய்யா! அடியேன் எங்கோ வாசித்தேன். பாலராமபுரத்தின் புராணப் பெயர் "அகத்தியர் ராஜ்ஜியம்" என்று. அது உண்மையா?"

அகத்தியப் பெருமானின் பதில்!

"ஆம்! உண்மையே! நீ படித்தது உண்மையே! தெரிந்த பின் கேட்கலாமா?"

உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதற்காக,

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 15 December 2022

சித்தன் அருள் - 1242 - அன்புடன் அகத்தியர் -குருநாதர் உபதேசம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

நம் குருநாதர் அகத்திய பெருமானை !!! குருவாக!! தெய்வமாக!! எண்ணி நிறைகுடமாக எண்ணற்ற அகத்தியர் பக்தர்கள் இந்த உலகத்தில் உள்ளனர்.

இவர்களுக்கெல்லாம் ஓலைச்சுவடியின் மூலம் குரு நாதரின் உபதேசங்கள் கிடைக்கின்றதா என்றால் அவர்களுக்கு தேவையான சமயத்தில் சூட்சுமமாக ஏதாவது ரூபத்தில்  உபதேசமோ வழிகாட்டுதலோ குருநாதர் கிடைக்கும்படி செய்து விடுகின்றார்.

ஒரு சில அடியவர்கள் ஜீவநாடி வாசிக்கும் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு ஓலைச்சுவடியின் மூலம் உபதேசம் பெறுகின்றார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திரு ஜானகிராமன் அய்யாவை தொடர்பு கொண்டு ஜீவநாடி உபதேசத்தை கேட்கும் அடியவர்கள் அவர்களுக்கு சில விஷயங்கள் புரியாமல் போய்விடுகின்றது.

எதிரில் இருந்து பதில் தருவது தெய்வம் என்பதை மறந்து புரியாமல் சில தேவை இல்லாத கேள்விகளை எழுப்பவும் செய்கின்றனர்.

வீடு இல்லை!! பணம் இல்லை!! வேலை இல்லை பரிகாரம் என்ன??  எப்பொழுது நான் பணக்காரன் ஆவேன்?? எப்பொழுது எனக்கு உயரிய வேலை கிடைக்கும்?? எனக்கு எப்பொழுது அதிர்ஷ்டம் வரும்?? அந்த அதிர்ஷ்டத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்??? எனக்கு எப்பொழுது தலைமை பொறுப்பு வரும்?? நான் சமுதாயத்தில் எப்பொழுது பெரிய ஆள் ஆவேன்?? அரசியலில் பிரகாசிப்பேனா??? விரும்பிய பெண்ணை வசியம் செய்ய முடியுமா??? எனவும்!!!  சில  பக்தர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று எந்தனுக்கும் ஓலைச்சுவடிகள் வேண்டும்!!! பணம் வேண்டும் பதவிகள் வேண்டும்!!! பட்டங்கள் வேண்டும்!!! என்றெல்லாம் கேட்கின்றனர். இப்படி எல்லாம் அறியாமல் கேட்பதால்தான் இறைவன் என்ன உங்களுடைய வேலையாளா????? கேட்டதெல்லாம் கொடுப்பதற்கு என்றெல்லாம் சினத்திற்கு ஆளாக நேரிடுகின்றது!!!

நமக்கு நம் குருநாதர் அகத்திய பெருமானின் ஓலைச்சுவடி வாக்குகள் கிடைப்பதற்கே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

நம்முடைய சுயநலத்திற்காக எதுவும் கேட்கக் கூடாது. இதை குருநாதர் தன்னுடைய ஒவ்வொரு வாக்கிலும் அருளுரையாக தந்து கொண்டே இருக்கின்றார் ஆனாலும் மக்கள் அதை புரிந்து கொள்வதே இல்லை.

தனிப்பெரும் கருணை தெய்வத்தை ஒரு ஜோதிடர் போலவே எண்ணிக் கொண்டு கேள்விகளை மனதில் சுமந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

நம் குருநாதர் கூறுவது என்னவென்றால்

 "" யானே பெரும் பொக்கிஷம்!!!

யானே அருகில் இருக்கும் பொழுது கவலைகள் இல்லை குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை அனைத்தையும் யான் பார்த்துக் கொள்வேன் என்று கூறுவதை யாரும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.

குருநாதர் உபதேசங்களை தொடர்ச்சியாக உணர்ந்து கொண்டு பின்பற்றி வருபவர்களுக்கு அனைத்தும் புரிந்திருக்கும்.நாம் செய்த பாவங்கள் புண்ணியங்கள் அடிப்படையிலேயே நமக்கு வாக்குகளும் சரி நமக்கு வாய்ப்புகளும் சரி விதியும் சரி அமைகின்றது.

உண்மையான பக்தியும் குருநாதர் வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளும் விதமும் சேவை மனப்பான்மையும் இருந்தால் குருநாதர் அகத்திய பெருமானே விதிகளை மாற்றி வைத்து பிரம்மனிடம் சண்டையிட்டு வாழ்க்கையவே மாற்றி நல்வாழ்வு தந்திருக்கின்றார் இதற்கு ஏராளம் ஏராளம் உதாரணங்கள் இருக்கின்றன இது யுகம் யுகங்களாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

குருநாதர் அகத்தியரின் வாக்குகளை கூட சரியாக படிக்காமல் அதை உணராமல் அதன்படி நடக்காமல் தன்னுடைய வாக்குகளை மட்டும் கூறினால் போதும் என்று நினைப்போரும் உண்டு அவர்களுக்கும் குருநாதர் வாக்குகள் தருகின்றார் அவர்களுக்கும் ஒரு மண்டலம் !!! இரு மண்டலம் என செய்ய வேண்டியவற்றை செய்யச் சொல்லுகின்றார் ஆனாலும் அதை யாராவது சரியாக பின்பற்றுகின்றார்களா என்றால் அதுவும் கிடையாது.

நம் குருநாதர் அந்த பரிகாரம் செய் இந்த பரிகாரம் செய் என்றெல்லாம் கூறுவது இல்லை அனுதினமும் ஏதாவது உயிரினத்திற்கு உணவளியுங்கள் அனுதினமும் தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள் மேன்மையான பக்தியை காட்டுங்கள். சித்தர்கள் நாங்கள் பரிந்துரைக்கும் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள் அனைத்தும் விலகும் அனைத்தும் நல்படியாக நடக்கும் என்று தான் அனைவருக்கும் உபதேசம் செய்து வருகின்றார். இதுவரை எத்தனை ஆலயங்களை குருநாதர் அந்த ஆலயத்தின் மகிமை பற்றியும் அந்த ஆலயத்திற்கு சென்றால் என்னென்ன நடக்கும் என்னென்ன பிரச்சனைகள் மாறும் என்பதை கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல நமக்கு கூறிக் கொண்டு வந்திருக்கின்றார்.

இதையெல்லாம் நாம் உணர்ந்து கொள்ளாமல் நம் இஷ்டத்திற்கு நடந்து கொள்வதால் தான் சித்தர்களின் சினத்திற்கு ஆளாக நேரிடுகின்றது காகபுஜண்டர் முனி வந்தாலே சினத்துடன் அனைவருக்கும் அதாவது மனித குலம் இக்குலத்திற்கு மட்டும் தன்னுடைய சினத்தை வெளிப்படுத்துகின்றார்.

இதுவரை இந்த உயிரினம் இந்த தவறை செய்திருக்கின்றது இந்த பறவையினம் இந்த தவறை செய்து இருக்கின்றது இதுவரை இந்த கால்நடை இனம் தவறிழைத்திருக்கின்றது இந்த மிருகங்கள் தவறான வழியில் செல்கின்றன என்று இதுவரை சித்தர்கள் கூறியதே கிடையாது ஏனென்றால் மனித குலமாகிய நாம் மட்டும் தான் நம் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு அனைத்தையும் அழித்துக் கொண்டு எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுகின்றோம் சித்தர்களுடைய வாக்குகளையும் முழுமையாக உணராமல் கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் மட்டுமே இறைவனின் நோக்கி சித்தர்களை நோக்கி ஓடுகின்றோம்!!

 இந்தப் பாதையை நாம் கண்டிப்பாக மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்!!!

சித்தர்கள் மனிதர்களாகிய நமக்காகவே வந்துள்ளார்கள் நமக்கு சேவை செய்யவே காத்திருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் நமக்காக அருள் செய்வதற்கு நம்மிடம் தகுதிகள் இருக்க வேண்டும் சித்தர்கள் கூறும் வழிகளை நாம் பின்பற்ற வேண்டும் நல் பக்தி வேண்டும் தொண்டுள்ளம் தர்ம காரியங்கள் செய்யும் எண்ணம் வேண்டும்!! இறைவனே கதி என்று இருக்க வேண்டும் தூய மனதோடு எதற்கும் ஆசைப்படாமல் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் சித்தர்கள் நமக்காக ஓடோடி வந்து அனைத்தையும் செய்வார்கள்!!!

 குருநாதரிடம் வாக்குகள் கேட்கும் அடியவர்கள் புரிந்து கொள்வதற்காகத்தான் இந்த உபதேசங்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாள் முன்தினம்!!!

இப்படி எல்லாம் நடக்கின்றது இப்படி எல்லாம் அடியவர்கள் இறைவனை கேட்காமல் அழிந்து போகும் பொருள்களுக்கு மட்டுமே ஆசைப்பட்டு அலைந்து திரிகின்றார்கள் என்று குருநாதர் சில வாக்குகளை உதிர்த்தார்!!! அதனுடைய தொகுப்பினை இப்பொழுது பார்ப்போம் உணர்வோம்!!!

அப்பனே எவை என்று இதனையும் என்று கூற ஒரு அதாவது எப்பொழுது எதை என்று அறிய இவ் அண்ணாமலையிலே உரைக்கின்றேன்!!! அப்பனே!!

அப்படி எதை எதை என்று அறிய மனிதன் இப்படித்தான் நினைக்கின்றான் அப்பனே விதியில் இல்லாததையும் கூட பின் கேட்டதெல்லாம் எதை என்று அறிந்து அறிந்து கேட்டுக் கொண்டிருந்தாலே யான் எப்படி தருவது என்பேன் அப்பனே!!!  அதனால் தான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து விதியின் பாதையில் சென்றாலும் மோட்சம் கிடைக்க பொறுத்திரு!! பொறுத்திரு !!! என்றெல்லாம் அப்பனே மக்களுக்கு உரைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

ஆனாலும் என் மீது பாசமழை பொழிந்து விட்டால் அப்பனே எப்படியாவது எதை என்று அறிந்து அறிந்து செய்து விடுவேன் விதியை மாற்றியும் கூட!!!

அப்பனே அனைவரும் கோடிகள் வேண்டும் பணங்கள் வேண்டும் என்று கேட்கின்றார்கள் அப்பனே எதற்கு என்று கேட்டால் தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார்கள் என்னிடத்தில் அப்பனே அதை நீங்கள் செய்தால் தான் உண்டா??

அப்பனே எதை எதை என்று அறிய நீங்கள் செய்தால் தான் உண்டா!??? நீங்களும் என்னை தந்தை தந்தை என்று கூறிக்கொண்டு வருகின்றீர்கள் அப்பொழுது நீங்கள் செய்தால் என்ன??? யான் செய்தால் என்ன??

அப்பனே கடன்களை நீங்கள் உருவாக்கிக் கொண்டு என்னிடத்தில் அதற்கான வழிகளை கேட்கின்றீர்கள்!!!

அப்பனே எதை எதை என்று அறிய என்னை நம்பி வந்தவர்கள் அப்பனே எதை என்று அறிய கவலைப்படாமல் இருக்க வேண்டும் ஆனாலும் எப்படியாவது சமாளிக்கும் திறனை கூட உங்களிடத்தில் யான் கொடுத்திருக்கின்றேன். கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

நலமாகவே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே நான் கொடுத்துவிட்டாலும் அதன் மூலம் கர்மா சேராமல் தான் ஆராய்ந்து தான் யான் கொடுப்பேன் அப்பனே. கர்மா சேராமல் கொடுப்பதுதான் சாலச் சிறந்தது என்பேன் அப்பனே!!

அப்பனே இதனால் எதை எதை என்று அறிய ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே சித்தனை நோக்கி வருபவன் எதை என்று அறியாமலே முதலில் யான் கர்மத்தை தான்  தீர்ப்பேன் என்பேன் அப்பனே!!!
அதனால் கஷ்டங்கள் ""வந்து ""தீரும் !!!! என்பேன் அப்பனே!!!

எதை என்று அறிந்து ஆனால் அப்பனே எந்தனுக்கு கஷ்டங்களே தேவையில்லை... எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் பாவங்கள் தான் சுமப்போம் என்று கூறிவிட்டால் அப்பனே  நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால் எந்தனுக்கும் கூட முதலில் அப்பனே எவை எவை என்று கூட அப்பனே மனிதனுக்கு கூட பல வகையிலும் கூட இன்பங்கள் இன்பங்கள் என்று கூட தேடிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! அவையெல்லாம் தானே கர்மத்தை தேடிக்கொள்வது என்பதுதான் அர்த்தம்!!! அதனால் அப்பனே எந்தனுக்கும் வேதனையாக தான் உள்ளது எதை என்று அறிந்து அறிந்து!!!

என்னையும் வணங்கியும் இப்படி செல்கின்றார்களே என்று!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் என்னை நம்பியவர்களை நிச்சயம் யான் கர்மத்தில் விடமாட்டேன் என்னை திட்டினாலும் சரி!!!!!

அப்பனே அதனால் எதை எதை என்று அறிய அப்பனே எவை எவை என்று அறிய அதனால்  பரிகாரங்கள் எல்லாம் அப்பனே என்னிடத்தில் செல்லாது என்பேன் அப்பனே!!!!

அதனால் எதை எதை என்று அறிய அறிய இத்தனை பரிகாரங்கள் செய்தேன் இவை என்று கூற அன்னதானங்கள் செய்தேன் புண்ணியங்கள் செய்தேன் என்பதெல்லாம் நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!

மனிதன் பாவப்பட்டவன் என்பேன் அப்பனே இதனால் மனிதன் என்றால் பாவம் என்பேன் அப்பனே அதனால் இப்பாவ பிறவிக்கு அப்பனே என்னதான் யான் சொல்வது!!!! கூறுங்கள்!!!

அப்பனே எதை என்று அறிய மனித குலத்தை காக்கவே அப்பனே சித்தர்கள் எதை என்று அறிந்து எப்படி எல்லாம் மனித குலத்தை காக்கலாம் என்றெல்லாம் வந்து கொண்டு இருக்கின்றோம் ஆனாலும் அப்பனே இதில் கூட ஏமாற்று வேலைகள்!!

அதனால்தான் இனிமேல் யாங்கள் விடமாட்டோம் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே சென்று கொண்டிருந்தால் சித்தர்கள் என்ற நிலைமை இல்லாமல் போய்விடும் என்பேன் அப்பனே!! 

நலமாகவே அதனால் நிச்சயம் எவை என்று அறிய எதையென்று உறுதியாக சொல்கின்றேன் அப்பனே

என்னை நம்பி வந்தவர்களை நிச்சயம் யான் கைவிடப் போவதுமில்லை அப்பனே நல்முறையாக கர்மத்தை அழித்து மோட்ச கதியை தான் அடையச் செய்வேன் .அடையச்செய்வேன்!!! 

அப்பனே நலமாக எதை எதை என்று அறிய உங்களுக்கு எதை என்று செய்யாவிட்டாலும் அப்பனே எதை என்று அறிய ஆனாலும் அப்பனே என்னை திட்டினாலும் சரி!!! அப்பனே எதையென்று கஷ்டங்களை அனுபவிக்கும் பொழுது பாவங்கள்  விலகிக் கொண்டிருக்கிறது... அகத்தியன் ஒன்றுமே செய்யவில்லை என்றெல்லாம் அப்பனே!!!!

யான் விட்டுவிடுவதில்லை உங்கள் பிள்ளைகளை கூட!!! ஏதாவது ஒரு முறையில் நல்வழிப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றேன் அதனைப் பற்றி நீங்கள் பெருமைப்படுங்கள்!!!!

இவ்வளவு புண்ணியங்கள் செய்தோமே!! இவ்வளவு நல்ல காரியங்கள் தர்ம காரியங்கள் செய்தோமே!!! என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள் அப்பனே!!! அப்புண்ணியங்கள் எல்லாம் உங்கள் பிள்ளைகளை சேரும் என்பேன் அப்பனே!!!

அப்பனே எதை எதை என்று அறிய அனைவருக்கும் அனைத்தும் செய்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!! அதனால் குறைகள் இல்லை அப்பனே நலமாகவே நலமாகவே ஈசன் அருள் பெற்று நலமாகவே வாழுங்கள்!!!

அப்பனே நாளைப் பொழுதில் அதாவது( 6/11/2022 கார்த்திகை தீபம் ஏற்றும் நாள்) அதிகாலையிலே ஈசனும் பார்வதியும் வந்து செல்வார்கள் அப்பனே நல்படியாக திருத்தலத்திற்கு சென்று ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்!!!

அப்பனே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன் அனைவருக்கும் கேட்டுக் கொள்ளுங்கள் அப்பனே!!!

இறைவன் தரிசனம் காண அப்பனே மனதில் பின் எதை என்று அறிந்து எதுவுமே இருக்கக் கூடாது என்பேன் அப்பனே!!!

பந்த பாசங்களை நீக்க வேண்டும் என்பேன் அப்பனே எதன் மீதும் பற்று இருக்காமல் இருக்க வேண்டும் அப்பனே !!

அப்படி இருந்தால் அதாவது இறைவனே என்று கதியாக இருந்தால் அவந்தனுக்கு மனித ரூபத்தில் இறைவனே நிச்சயம் வருவான் என்பேன் அப்பனே !!! அப்படி யாராவது இருக்கின்றார்களா?? கூறுங்கள்!!!

அப்பனே எதை எதை என்று அறிய ஆனாலும் நிச்சயம் ஆனாலும் எதை என்று அறிய அறிய மாயை திரையை கிழித்துக்கொண்டே தான் இருக்கிறேன் அப்பனே!!

எதை எதை என்று அறிய  எதன் மீதும் பற்று இருக்கக் கூடாது என்பதுதான்....( ஆசையே துன்பத்திற்கு காரணம்) எதனால் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட அப்பனே.... இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!

இங்கு வந்துள்ள அனைவருக்கும் கஷ்டங்கள் கஷ்டங்கள் அப்பனே அனைவருக்கும் ஒவ்வொரு கஷ்டங்களுடன் தான் வந்திருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. இவ் சனி மாறட்டும் என்பேன் அப்பனே( தை மாதத்தில் வரும் சனிப்பெயர்ச்சி) பின் வாக்குகள் உரைக்கின்றேன் அப்பனே இன்னும் கூட!!!! தெளிவாகவே!!!

அப்பனே யான் உங்களுக்கு எதைச் செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு எக்கர்மாக்களும் சேராமல் ஆராய்ச்சி செய்து தான் கொடுப்பேன் அப்பனே!! சனி மாறட்டும் என்பேன் அப்பனே!! 

அப்படியே அனைவரும் முதலில்( குருவிடம் வாக்குகளாக) எதை கேட்பது என்பதை கூட சரியாக ஆராய்ந்து விட்டால் அப்பனே நலமாகவே அனைத்தும் சொல்லுவேன் அப்பனே!!!

அப்பனே அனைவரும் அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் கேட்டுவிட்டு கடைசியாக இறைவனை கேட்கின்றார்கள்!!! இதற்கு அவர்களே புரிந்து கொள்ள வேண்டும் பக்தி என்பது என்ன? என்பதை அப்பனே!!!

அப்படி அனைவரும் தன் சுயநலத்திற்காகவே அனைத்தையும் கேட்டுவிட்டு கடைசியில் இறைவனை இழுக்கின்றார்கள். அப்பனே!!!!

அப்பனே இன்னும் கூறுகின்றேன் அப்பனே போலியான மனிதர்களை நாடி, நாடி அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே எவை எவை என்று அறிய ஆனாலும் அப்பனே அனைத்தும் செய்துவிட்டு அங்கு சுவடி வாசிக்கின்றார்கள் இங்கு சுவடி வாசிக்கின்றார்கள் என்றெல்லாம் ஓடோடி அப்பனே அப்பொய்யான மனிதர்களின் சுவடியில் வந்து வாக்கு கேட்டால் அதை செய் இதை செய் என்றால் அப்பனே நடந்து விடுமா என்ன????

சுவடி வாசிப்பவர்கள் எதை எதையோ கூறி அப்பனே அவர்களுக்கே அவர்கள் வாழ்க்கை பற்றி தெரியவில்லை உங்களுடைய வாழ்க்கையைப் பற்றியா? தெரிந்து விடப் போகின்றது?? அப்பனே இதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும்!!!!

அதனால் அப்பனே எதை எதை என்று அறிய  அதனால் யானே வந்து உதவிகள் செய்து விடுகின்றேன் ஏனென்றால் என்னையும் நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!! செய்தே ஆக வேண்டும் பொறுத்திருக!!!

சில விஷயங்கள் தெரிவதே இல்லை என்பேன். அப்பனே மக்களுக்கு !!!

யான் என்னென்ன செய்து கொண்டிருக்கின்றேன் விதியை எப்படி எல்லாம் மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதை எல்லாம் மக்களுக்கு தெரிவதே இல்லை அப்பனே!!!!

யான் விதியை ஆராய்ந்து தான் கொடுப்பேன் அப்பனே அப்படி விதியில் கர்மா சேர்ந்து விட்டால் அப்பனே மறுபிறவி வந்துவிடும் என்பேன் அப்பனே அப்பொழுது மறுபிறவி வேண்டுமா?? உங்களுக்கு அல்லது எவையென்று அறிய அறிய அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கட்டுமா??

அதனால் அப்பனே பொறுத்திருந்தால் யான் அனைத்தையும் செய்து தருவேன்!!!

ஏனென்றால் எதை என்று அறிந்து அறிந்து நம்பி நம்பி சுவடிகளை நம்பி நம்பி ஆனாலும் ஒன்றில் கூட பதில் உங்களுக்கு வரவில்லை என்பேன். இப்படியே ஏமாந்து ஏமாந்து அப்பனே கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லையே என்று கூட  சித்தர்களே இல்லை என்று கூட சொல்லிவிடுகின்றார்கள் அப்பனே!!

அதனால் மனிதன் செய்த தவறால் அதனால் எதை என்று அறிய அப்பனே மனிதன் மீது தான் யான்  தவறு என்பேன் அப்பனே!!

அதனால் தான் மனிதன் என்றால் யான் பாவம் வினை என்று கூட சொல்லி விடுவேன் அப்பனே!!!

அப்பனே விதியின் பாதையை நான் மாற்றி தருவேன் அப்பனே அப்பொழுது அகத்தியன் யார்? என்பதை அனைவரும் தெரிந்து கொள்வீர்கள் பொறுத்திருங்கள் !!!

அதனால் அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே ஒரு கூட்டமே இருக்கின்றது ஏமாற்ற அப்பனே!!!!

அப்பனே அனைத்து சித்தர்களும் இருக்கின்றார்கள் அப்பனே ஆனால் மனிதன் வார்த்தை தான் பொய்!!!!

அப்பனே!!ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்வது( பனை ஓலைகளை) அப்பனே எழுதிக் கொள்வது அதிலிருந்து இவை நடக்கும் அவை நடக்கும் என்றெல்லாம் உங்களை சந்தோஷப்படுத்துவது.... அப்பனே உங்கள் பணங்களை பிடுங்குவது அப்பனே பின் குடிப்பது கூத்தாடுவது அப்பனே எதை என்று யான் சொல்ல??? அப்பனே!!!

மீண்டும் எதை எதை என்று அறிந்து அதனால் அப்பனே யான்  உங்களிடம் உள்ள எது என்று கூட நீங்களும்( போலி சுவடி வாசிப்பவர்கள்) அவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றீர்கள் என்பது தான் கர்மா!!!!!

அப்பனே எதை எதை என்று கூற பின் ஏதோ ஒன்றை கேட்பது எதை எதை என்று அறிய அகத்தியன் என்னதான் சொல்கின்றான் என்று பார்ப்போம் என்றெல்லாம் அப்பனே!!!

ஆனால் விதியில் உள்ளதை தான் யான் சொல்வேன்!!!

அப்பனே அதனால் குறைகள் கொள்ளாதீர்கள் யாரும் எது என்று அறிய பின் எவை என்று அறிய  அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே ஆனாலும் கவலைகள் இல்லை அப்பனே நிச்சயம் ஒரு விடிவெள்ளி உங்களுக்கு உண்டு என்பேன் அப்பனே!!!

பொறுத்திருந்து பாருங்கள் இன்னும் கூட பக்குவத்தை தான் யான் உங்களுக்கு ஏற்படுத்துவேன் அப்பனே!!!

இவ்வுலகம் மாயமானது என்பதை கூட எடுத்துரைத்து விடுவேன் உங்களுக்கு ஏனென்றால் எதை எதை என்று அறிய மனிதன் கர்மத்திற்காகவே பிறந்தவன் கர்மத்திற்காகவே பிறந்தவன் அதை அனுபவித்து விட்டு தான் எதை என்று அறியாமலே சென்று விடுகின்றான் ஆனால் அவ் ஆன்மா கவலைப்படுவதில்லை ஆனால் மனிதன் தான் ஐயோ!!!!! போய்விட்டானே போய் விட்டானே என்று கவலைகள் படுகின்றது!!!

ஆனால் அவ் ஆன்மா இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டோமே என்று சந்தோசம் அடைகின்றது!!!

அப்பனே எதை என்று கூற மனிதன் ஒரு வார்த்தை கூறுகின்றேன் அப்பனே!!!

மனிதன் நியாயமானவன் என்றால் அப்பனே ஒரு எதை என்று கூட !!....

ஒரு கோமாதா இறக்கட்டும் கவலைப்படுகின்றானா என்ன???

எதையென்று அறிய ஏதாவது ஒரு பைரவர் இறக்கட்டும் கவலைப்படுகின்றானா என்ன???

ஏன் ஒரு எறும்பு இறக்கட்டும் அப்பனே கவலைப்படுகின்றானா என்ன???

அப்பனே இவற்றிற்கெல்லாம் எவை என்று பதில் கூறாமல் மனிதன் இறந்து விட்டால் அப்பனே!!!......... அதனால்தான்.                      """"""" கர்மத்தை பார்த்து கர்மா அழுகின்றதாம்!!!!!!!!

அதனால்தான் அப்பனே மனிதப் பிறவியை கடக்க வேண்டும் என்பேன் அப்பனே!!! மனிதப் பிறவியை கடப்பது சாதாரண விஷயம் இல்லை என்பேன் அப்பனே!!

கஷ்டங்கள் பட்டால் தான் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே ஆனாலும் இன்னும் உங்களுக்கு விளக்கம் அளிக்க போகின்றேன் அப்பனே மனிதன் எவ்வாறு எல்லாம் பிறக்கின்றான் எவ்வாறெல்லாம் வளர்கின்றான் என்பதையெல்லாம் ஆனாலும் ஒவ்வொரு திருத்தலத்தை பற்றி தான் பிரம்மாவிடம் கேட்டு இன்னும் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள் என்பேன் அப்பனே!!!

அதனால் பொறுத்திருங்கள்!! பொறுத்திருங்கள்!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் பிறக்கும் பொழுது இவ் ஆசைகள் கொண்டு வந்தீர்களா என்ன???
இறக்கும் பொழுதும் அவ் ஆசைகள் இல்லை உங்களுக்கு!!!

ஆனாலும் அப்பனே நடுவில் வந்தவை தான் பெரும் பிரச்சனையப்பா!!!!

ஆனாலும் இதனைத் தான் தடுக்க வேண்டும் இதனை தடுப்பதற்கும் பின் நிச்சயமாய் பிரம்மாவிடம் எதை என்று அறிந்து அறிந்து இதைக் கூட யான் சொல்லிவிட்டால் பிரம்மாவிற்கு என்மீது கோபம் வந்து விடும் என்பேன் அப்பனே!!! ஏனென்றால் மனிதன் தப்பித்துக் கொள்வான் என்பேன் கர்மா நிலையிலிருந்து அதனால் எடுத்துரைக்கப் போகின்றேன்!! எடுத்துரைக்கப் போகின்றேன்!! பொறுமையாக இருங்கள்!!

அப்பனே நலன்கள் ஆசிகள் ஆசிகள் !!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 13 December 2022

சித்தன் அருள் - 1241 - குருநாதம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

முன்னர் எல்லாம், குருநாதர் அகத்தியப்பெருமானிடம் ஏதேனும் ஒரு விஷயத்துக்கு கேள்வி கேட்டால், மிகத்தெளிவாக, அவரது பதில் உரைக்கப்படும். மேலும் தொடர் கேள்விகள் கேட்கிற பொழுது, அதற்கான பதிலில், நம் "இந்துமதப்படி" நாம் செய்கிற பல விஷயங்களுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்று புரியும்.

ஒரு முறை பூக்களை பற்றி, எந்த விதமான பூக்களை பூஜைக்கு எடுக்கலாம், சில பூக்கள், ஒரு சில தெய்வ மூர்த்தங்களுக்கு மட்டும் என கூறப்படுகிறதே என எளிய கேள்வியை கேட்ட பொழுது, பல உண்மைகளை உரைத்தார். ஞாபகத்தில் இருக்கிற சில விஷயங்களை இங்கு தருகிறேன்.

  1. பூக்கள் இறை வழிபாட்டுக்கு என படைக்கப்பட்டவை.
  2. மனித தேவை என்பது கடைசி பட்சம்.
  3. இறந்த மனிதனின் உடலுக்கு பூக்களை உபயோகிக்க கூடாது.
  4. இறந்த மனிதன் மகானாக வாழ்ந்து சென்றவன் என்றால், ஒரு துளசி இலை மாலையை போடலாம். ஒரு போதும் பூக்களை உபயோகிக்கக் கூடாது.
  5. இறந்தவனை கொண்டு செல்லும் வழி எங்கும் பூக்களை வாரி வீசுவது கூடாது.
  6. மனிதன் தன் கால்களால் பூக்களை மிதிப்பது கூடாது.
  7. கோவில் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் இறை மூர்த்தங்களுக்கு சாற்றிய பூ மாலை போன்றவை, மனிதர் கழுத்தில் அணிவது கூடாது. கையில் பெற்று கண்களில் ஒற்றிக்கொண்டு, இல்லம் கொண்டு சென்று இறை மூர்த்தங்களுக்கு அணிவிக்கலாம்.
  8. பெண்டிர் தலையில் சூடிக்கொள்ள வாங்கும்/தொடுத்து கட்டும் பூவை, ஒரு நாழிகை நேரமாவது இல்லத்தில் இறைவன் மூர்த்தத்தில் அல்லது பூசை அறையில் பக்தியுடன் சார்த்திவிட்டு பின்னர் தலையில் சூடிக்கொள்ள, உபயோகிக்க வேண்டும்.
  9. திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளுக்காக வாங்கும் பூவை, முதலில் இல்லத்தின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோவிலில் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து பூசை செய்த பின் நல்ல நிகழ்ச்சிகளுக்கு உபயோகப் படுத்த வேண்டும்.
  10. வீட்டில் பூக்கும் பூக்களை பூசைக்காக பறிக்கும் பொழுது, விரலில் உள்ள நகம் படாமல், கத்தி/கத்திரிக்கோல் போன்ற இரும்பு படாமல்/உபயோகிக்காமல் பறிக்க வேண்டும்.
  11. பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு பூசை செய்யக்கூடாது.
  12. பூச்செடிகளிலிருந்து பூமியில் உதிர்ந்த பூக்களை, பூசைக்கென எடுத்தால், சுத்தமான நீரில் கழுவிய பின் இறைவன் பாதத்தில் உபயோகிக்கலாம்.
  13. அரச்சனை செய்த பூக்கள், கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி புதைத்துவிடலாம். இல்லையெனில், நன்றாக வாடும்வரை வீட்டில் பாதுகாத்து, பின்னர் அக்னிக்கு சமர்ப்பிக்கலாம்.
  14. செடியில் பூத்திருக்கும் பூக்களை, சும்மாவேனும் மணந்து பார்ப்பதற்காக பறித்து பின்னர் எங்கேனும் தூர எறிவது கூடாது.
  15. குறிப்பாக, குழந்தைகளுக்கு அத்தனை விஷயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஏன் என்றால் அவர்களிடம் தான் பூவெடுத்து விளையாடும் குணம் அதிகம்.

மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் வாழ்க்கையில் ஒருவர் மிக கவனமாக கடைப்பிடித்து வாழவேண்டும் என்றார். ஏன் என சற்று விளக்கமாக கூறுங்களேன் என கேட்ட பொழுது, காரணத்தை மிகத்தெளிவாக உரைத்தார்.

"இறைவனை நோக்கி தவமிருக்கும், ரிஷிகளும், முனிவர்களும், மகான்களுக்கும், முன்னர் இறைவன் தோன்றி ஆசீர்வதித்த பின், "உங்களுக்கு என்ன வேண்டும்?" என கேட்பார்.

அவர்களும், இறைவனிடம் "பெருமானே! அடுத்த ஜென்மம் என ஒன்றிருந்தால், அதில் பூவாக பிறந்து, உங்கள் பூஜையில், பாதத்திலோ, மார்பிலோ, கழுத்தில் மாலையாக சூடப்பட்டோ, அப்படி ஒரு பாக்கியத்தை பெற்று, அடியேன்கள் முக்தியை அடைய வேண்டும். அதுவே, எங்கள் வேண்டுதல், என்பர். அப்படியே பூவாக பிறந்து வாருங்கள் என இறைவனும் அருளுவார்!"

எல்லா பூக்களும் இறைவனை அடைகின்றதா? பூஜையில் சேர்கின்றதா?அப்படி பிறக்கின்ற பூக்கள் தான், மனிதர் கைகளில் இந்த பாடு படுகிறது. அவர்களின் தவத்தால் பெற்ற வரத்தை அடைய விடாமல் செய்வதே மனிதர்களின் செயலாக உள்ளது. முன் காலங்களில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறையை உன்னிப்பாக கவனித்திருந்தால் இன்றைய மனிதர்களுக்கு பல விஷயங்களை சரியாக செய்ய முடியும். உதாரணமாக, வீட்டு வாசலில் பூ கூவி விற்கும் பெண்மணியிடம், வீட்டில் உள்ள பெண்கள் பூவை உதிரியாக வாங்கி மாலையாக கட்டி, அப்படி செய்யும் பொழுது அடுத்த தலை முறைக்கும், குழந்தைகளுக்கும் கதைகளுடன் கற்பித்து, பின்னர் வீட்டில் விளக்கேற்றி, பூஜையறையில் ஸ்வாமிக்கு சார்த்தி, ஒரு நாழிகை கழிந்து, அனைவருக்கும் சூடிக்கொள்ள சிறு துண்டுகளாக கொடுப்பார். அதில் பக்கத்து வீடு, எதிர் வீடு முதல் அனைத்து பெண் குழந்தைகளும் இருக்கும். இந்த முறையால், தலைமுறையாக ஒரு பூவை எப்படி கையாள வேண்டும் என்கிற அறிவு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேலும் பூக்களில் ஜீவனுடன் இருந்த அந்த புண்ணிய ஆத்மாக்கள், பூஜையறையில் விளக்கேற்றி சாற்றப்படுவதால், அவர்கள் எண்ணமும் ஈடேறி, அனைவரையும் ஆசீர்வதிக்கும். அப்படிப்பட்ட பூக்கள் எம் சன்னதியிலும் பூவாக, மாலையாக பூஜைக்கு வரும் பொழுது யானே சிவமாகவும், நாராயணனாகவும் இருந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலையை செய்கிறேன். அந்த பூக்களை தவறாக கையாளும் பொழுதுதான், அதில் மனிதர் அறியாமல் பிறப்பெடுத்த புண்ணிய ஆத்மாக்களின் சாபத்தை அவர்கள் பெற வேண்டியுள்ளது. ஆதலால், எனக்காக ஒரு வேலையை நீ செய்யேன். என்னுடைய, லோபாமுத்திராவினுடைய தரிசனத்துக்கு வருகின்ற தினத்தில், இரவு பூஜை முடியும் வரை காத்திருந்து, அத்தனை பூ மாலையையும் வாங்கி சென்று, இல்லத்தில் பூசை அறையில் வைத்திருந்து, அந்த பூக்கள் வாடிய பின் அக்னியில் சேர்த்துவிடு" என ஒரு வேலையை கொடுத்தார்.

அடியேனும், இல்லத்திலிருந்து ஒரு பெரிய துணிப்பையை பாலராமபுரம் அகத்தியர் கோவிலுக்கு கொண்டு  சென்று அனைத்து சன்னதிகளிலும் உள்ள பூமாலையை கழட்டி தரச்சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து, பூஜை அறையில் உள்ள அனைத்து இறை மூர்த்தங்களும் சாற்றிவிடுவேன். பெரிய மாலைகள் வந்தால் அதை போட்டுக்கொண்டு நிற்க ஒரு மூன்று அடி உயர ஓதியப்பரையும் வாங்கி வைத்திருக்கிறேன். அவருக்கு எப்போதுமே செழிப்புதான். நான்கு அல்லது 5 நாட்களில் பூ மாலை வாடி, அதிலுள்ள ஜீவன் விலகிய பின் அக்னிக்கு சமர்பித்து விடுவேன்.

அகத்தியப்பெருமான் அருளிய இந்த வேலையை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை கோவிலுக்கு போய் செய்து விடுகிறேன்.

நம் குருநாதர் எப்படின்னா, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவார். அவர் கோவில் வாசல் முன் நின்று "குருநாதா" என மனதுள் கூப்பிடும் போதே, "இதோ சரியா வந்துட்டான் கொள்ளைக்காரன். இன்னிக்கு எல்லாரையும் மயக்கி, எல்லாத்தயும் உருவிண்டு போயிடுவான், என தாயிடம் கூறுவது" கேட்கும். குருநாதர் குடுத்த பட்டத்துக்கு ஏற்றாற்போல் வாழவேண்டும், ஆதலால் அடியேனும், பிள்ளையார், கிருஷ்ணர் (இவரை பார்க்கத்தான் பாவமாக இருக்கும். எல்லாவற்றையும் உருவியபின், நிர்வாண குழந்தையாக மாறிவிடுவார்), ஓதியப்பர் சிலா மூர்த்தங்களில் உள்ள அத்தனை பூக்களையும் கழட்டி தரச்சொல்லி, கடைசியில் குருநாதர் சன்னதியில் இரண்டு மாலைகளை விட்டு வைத்து (மறுநாள் காலை நிர்மால்ய தரிசனம் பார்க்க பூ மாலை வேண்டும்), அத்தனை மாலைகளையும் இல்லத்திற்கு கொண்டு வந்து விடுவேன்.

இப்படி ஒரு வேலை உங்களில் யாராவது ஒருவருக்கு அமைந்தால், உடனடியாக ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த கோவில்களில் பூஜாரி மாலையை கழுத்தில் போட வந்தாலும், மறுத்து, கையில் வாங்கி, வீட்டில் பூஜை அறையில் சாற்றி இது போல் செய்து பாருங்கள். உங்கள் வாழ்வில் நிறைய அதிசய அருள் கிடைக்கும். ஏன்? அகத்தியப்பெருமானே உங்கள் வீடு தேடி வந்து, இன்னிக்கு ஏன் வேலை பார்க்க வரவில்லை? என்று கேட்பார்.

விஷயம் தெரிந்த பெரியவர்கள் நம்மை கண்டதும், "இப்ப யாரிடம் வேலை பார்க்கிறாய், மகனே?" என நம்மிடம் கேட்கும் பொழுது, சுருக்கமாக "அகத்தியப்பெருமானிடம்" என சந்தோஷமாக கூறலாம், அவர்களும் அதன் உண்மை அர்த்தத்தை உடன் புரிந்து கொள்வார்கள். நமக்கும், தினமும் நேர்மையாக ஒரு செயலை செய்கிற வாய்ப்பு அமையும்!

அனைத்து சந்தோஷமும், ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........ தொடரும்!

Sunday, 11 December 2022

சித்தன் அருள் - 1240 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ மோராயா கோஸ்வி கணபதி மந்திர்!





14/11/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஜீவசமாதி வாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ மோராயா கோஸ்வி கணபதி மந்திர், பிம்பிரி சிஞ்வாட். புனே மகாராஷ்டிரா.

ஆதிபகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே!!!! எதையென்று ஆனாலும் அப்பனே முற்காலத்தில் அப்பனே!!! மிக உயர்ந்த பக்திகளையும் அப்பனே!!! இறைவன் மீது பின் எதை எவ்வாறு என்பதையும் கூட அப்பனே பல பக்திகளை காட்டி காட்டி அப்பனே பின் உயர்ந்த பிள்ளைகளை பெற்றனர்.

அப்பனே!!!

இதனால் அப்பனே!!! எதை என்றும் உணர்த்தும் அளவிற்கும் கூட இப் பிள்ளையை பற்றியும் யான் சொல்கின்றேன் அப்பனே!!!!!

ஆனாலும் பின் """  சுகந்தி தேவி""!!!!!......... ஆனாலும் எதை நிமித்தம் நிமித்தம் என்று... அப்பனே இவள்தன் குடும்பத்தில் பின் பல கஷ்டங்கள்!! பல கஷ்டங்கள் உருவானது !!!

எதனை எவற்றில் இருந்து கூட வந்தவை என்று கூட தெரியாமல்.

ஆனாலும் இவ் தேவி அதாவது பின் குடும்பத்தை பின் சரியாக பார்க்க முடியவில்லை அப்பனே எதை என்று பின் இவளுடைய தாய் தந்தையரும் வறுமை வறுமையில் வாடி வாடி ஆனாலும் நிச்சயமாய் கணபதியை விட்டு விடவில்லை!!!!

பின் கணபதியையே நாடி நாடி... இதன் பக்கத்தில் உள்ள பல பல கணபதிகளையும் ( அஷ்ட விநாயகர்  எனப்படும் எட்டு விநாயகர்கள் . மகாராட்டிரா புனே மாவட்டம், ராய்கட் மாவட்டம் மற்றும் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் எட்டு விநாயகர் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது) பின் துதித்து துதித்து... ஆனாலும் இதனைப் பற்றியும் கூட வரும் காலங்களில் நிச்சயம் கணபதி எவ்வாறெல்லாம் நிச்சயம்!!! பின் தன் மாற்றத்தை ஏற்படுத்தினான் என்பதை கூட நிச்சயம் ஆலயங்களில் சுற்றி சுற்றி தெரிவிக்கின்றேன் அப்பனே!!!! ( அஷ்ட விநாயகர் கோயில்கள் தல வரலாறு பற்றி) இதன் மூலம் அப்பனே நல்முறையாகவே மனிதன் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே வெற்றி நிச்சயம் அப்பனே!!!!

வெற்றி என்பது அப்பனே சாதாரணமாக வருபவை அல்ல அப்பனே!!!!

முன்னோர்கள் அதாவது அப்பனே புண்ணியங்கள் செய்து இறைவன் பக்தியை கடந்து கடந்து அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இறைவனே கொடுத்ததை அப்பனே இப்பொழுது கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே இதுதான் உலகம்!

ஆனாலும் அப்பனே இதையென்று ஆனாலும்.... தாய் தந்தை மாண்டு ( சுகந்தி தேவியின் தாய் தந்தையர்) ஆனாலும் அப்பனே இதனையும் ( விநாயகர் வழிபாடு) விட்டுவிடவில்லை அப்பனே!!!!

பின் எதை என்று அறிவதற்குள் பின் ஆனாலும் இவள்தனை பின் யாரும் மதிக்கவில்லை என்பதற்கிணங்க உற்றார் உறவினர் எதை என்று தெரிவிக்கும் அளவிற்கு கூட யாரும் உதவிகள் செய்யவில்லை உதவிகள் செய்ய வரவில்லை!!!

இதனால் கணபதி தான் நிச்சயம் துணை என்று எண்ணி பின் கணபதி பின் பல இடங்களில் பின் எதை என்றும் எதை என்றும் ஆங்காங்கே திருத்தலங்களுக்கு சென்று கடைசியில் இங்கே வந்து அமர்ந்தாள்!!!

வந்து அமர்ந்தவுடன் அப்போது இவையெல்லாம் காடுகள் !!!

ஆனாலும் இதனை அறிந்து ஒரு ஞானி அவ் ஞானி எதை... ஆனாலும் எதனையும் காட்டி காட்டி ஆனாலும் நிச்சயமாய் அவ் ஞானி... இவ்வாறு சொன்னான் அவ் பெண்மணிக்கு!!!!

அதாவது இப்படி நீ பல சோகத்தில் மூழ்கி இருக்கின்றாய் அம்மையே!!! ஆனாலும் உந்தனுக்கு கூட யாரும் உதவிகள் செய்ய முன்வரவில்லை அதனால் நிச்சயம் பல பல இடங்களுக்கு சென்றால் நிச்சயம் பல வழிகளிலும் கூட ஞானத்தை பெற்று உந்தனுக்கு ஒரு பிள்ளை பிறப்பான்!!!!!

அப் பிள்ளை நிச்சயமாய் இவ்வுலகத்தில் பல பல இன்னல்கள் அதாவது உன்னைப் போன்ற பல கஷ்டங்கள் படைத்த பெண்களுக்கும் கூட பல பல வழிகளிலும் கூட பின் உதவிகள் அக்குழந்தை செய்யும் என்பது தீர்க்கமான கணிப்பு!!!!

இதனால்  அப் பெண்மணி நிச்சயமாய் எதையென்று அறிய அறிய  பல திருத்தலங்களுக்கு நாட வேண்டும் ஆனாலும் எங்கிருப்பதை??(ஆலயங்கள்) என்பதை கூட தெரியாமல் போனது!!!!!

ஆனாலும் நிச்சயமாய் பின் மீண்டும் மீண்டும் தியானத்தை செய்ய தொடங்கினாள்!!!! தொடர்ந்து செயல்பட்டாள்!!!! தொடர்ந்து செயல்பட்டு ஆனாலும் நிச்சயமாய் பின் விடிவெள்ளி!!!! ஆனாலும்  இதற்கு சம்பந்தமான நிச்சயம் பின் அதாவது கணபதியே நிச்சயமாய் இவள்தனுக்கு துணை புரிந்தான்!!!!

கணபதி பின் குழந்தை ரூபத்தில் வந்து அதாவது பின் ஓர் பதினைந்து வயதுடைய குழந்தை ரூபத்தில் வந்து கணபதியே!!!!!!

அவ் தேவியை தாயே!!! என்று எண்ணி பின் எந்தனுக்கும் யாரும் இல்லையே!!! இதனையும் அறிந்து அறிந்து உந்தனுக்கு கூட பல வழிகளிலும் யான் சேவை செய்கின்றேன். நிச்சயமாய் யான் பார்த்துக் கொண்டே இருந்தேன்!!!
ஓர் ஞானியவன் உந்தனுக்கு என்னென்ன? கூறினான் என்று கூட!!!

அதனால் புறப்படுவோம் வா!!!! யானும் எதை என்று அறிந்து அறிந்து இதனால் முதலில் கணபதி எதை என்று கூட கணபதி கையைப் பிடித்து முதலில் பல வழிகளிலும் இங்கிருந்து நடை பயணத்தை மேற்கொள்ள நிச்சயம் அங்கங்கே பல வழிகளிலும் கூட உண்ண ஆகாரங்கள் எதை என்று நிமித்தம் காட்டி ஆனாலும் கணபதி நினைத்திருந்தால் பின் ஏதாவது வழியாக தூக்கிச் சென்றிருக்கலாம்!!!

ஆனால் கர்மா இப்படித்தான் பின் அனுபவித்து பிறந்தால்தான் இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்கும் நல்லது செய்ய முடியும்!! என்று ஆனாலும் இதனையும் முதலில் பின் பிள்ளையோன்பட்டி தற்பொழுது கூட """பிள்ளையார்பட்டி!!!!! எதை என்று கூட அனைவராலும் அன்பாகவே அழைக்க ஆனாலும் முதலில் அங்கு தான் இவ் அம்மையை அழைத்துச் சென்றான்!!!

அங்கு பல பல வழிகளிலும் கூட உண்மைகளை புரிந்து புரிந்து ஆனாலும் இதையன்றி அறிந்து அறிந்து ஆனாலும் பின் அவ் அம்மைக்கு ஞாபகத்தில் வந்தது நிச்சயம் இறைவன் நிச்சயம் பிள்ளையை கொடுப்பான்!!!

அப் பிள்ளையை இவ்வுலகத்தில் உள்ள பல பல வழிகளிலும் கூட பின் எதை என்று அறியாமலே எதையென்று புரிந்து புரிந்து பல வழிகளிலும் கூட ஞானத்தை பெற்று நிச்சயம் உதவிகள் செய்யும் ஞானிக்கு ஞானி ஆவான் என்று கூட உரைத்திருந்ததை நிச்சயம் அவ் அம்மை நிச்சயம் இறைவன் இன்னும் இன்னும் கூடுதலாக நமக்கு நல்லாசிகள் தந்து கொண்டே இருக்கின்றேன். என்பதிற்கிணங்க நிச்சயமாய் சந்தோஷங்கள் சந்தோஷங்கள்!!!! 

ஆனாலும் பிள்ளையோனை பார்த்து இப்பொழுது தான் இவ் அம்மை சந்தோஷபடுகின்றாள் என்பதை கூட...... மீண்டும் அங்கிருந்து பின் செந்தூருக்கு!!!! ( திருச்செந்தூர்)  முருகனை காண!!!! 

ஆனாலும் இதையென்று அறிய அறிய சரியாகப் புரிந்து கொண்டான் வந்தது யார் ??என்பதை கூட முருகனே!!!!!

ஆனாலும் முதலில் கூட பல பல திருத்தலங்களுக்கு கூட பின் முருகன் தலங்களுக்கு கூட பின் கடைசியில் பழனி தன்னில் அமர்ந்து விட்டாள்!!!  இவள்தன் அங்கே நிச்சயம் கர்ப்பம் தரித்தாள்!!!! இறைவன் நிச்சயமாய் பின் எதை என்று ஆனாலும் இதனை நிமித்தம் காட்டி காட்டி பின் பிள்ளையோன் அறிந்து கொண்டான்... நிச்சயம் ஞானி பிறக்கப் போகின்றான் என்று!!!!

ஆனாலும் நிச்சயம் இவ் ஞானி எதை என்று அறியாமலே ஆனால் பிள்ளையோன் மனதில் கூட.... எதையென்று உணர்த்தும் அளவிற்கு கூட இவள் எங்கு எதனை என்றும் அறியாமலே பின் பிறந்தாளோ!!!! அங்கேயே பின் அழைத்து வரப்பட வேண்டும்.... அதனால் பின் இங்கு இருக்கும் ( மகாராஷ்டிரா) அனைவருக்கும் நலம் என்பதை கூட!!!

ஆனாலும் நிச்சயம் இதனையும் அறிந்து கொண்டான் முருகன்!!!! முருகன் அறிந்து கொண்டு பின் தம் பின் எதை என்று மூத்தோனே!!!!!! ( தன் அண்ணன் பிள்ளையார்) இவ்வாறு நினைக்கின்றானே!!!! என்று கூட ஒரு மயில் ஒன்றை அனுப்பினான்!!!!

நிச்சயமா எதை என்று அறிய அறிய இதனால் பின் கணபதிக்கு தெரிந்துவிட்டது!! அவ் மயிலில் அமர்த்தினான் அவ் அம்மையை!!!! அமர்த்தி எதை என்று நிமித்தம் காட்டி முதலில் அண்ணாமலைக்குச் செல்ல!!!!

ஆனாலும் அங்கேயும் பல பரிசுத்த பின் ஈசனும் பார்வதி தேவியும் ஆசிர்வதித்து பல சித்தர்களும் ஆசிர்வதித்து நிச்சயமாய் எதை என்றும் ஆனாலும் மயில்வாகனம் பின் எதை நிமித்தம் உண்டு என்பதற்கிணங்க... இங்கே எதை என்று அறிந்து அறிந்து பின் எங்கே நிற்கின்றதோ அங்கே நிச்சயம் பிள்ளையும் பிறப்பான்!!!! என்பதற்கிணங்க.... இதனால் பின் அங்கிருந்து( திருவண்ணாமலை) மேல் நோக்கி பின் எதை என்று அவ் மயிலும் இங்கே தோகை விரித்து இங்கேயே(புனே) பின் நின்று விட்டது!!!!

இதனால்  அவ் அம்மையும் பின் நிதானத்து!! நிதானித்து!!! அவ் ஞானி இங்கே தான் பிறந்தான்!!!!

பிறந்திட்டு அறியாமல் எதனை என்றும் ஆனாலும் மகிழ்ச்சி அவள்தனக்கும் மகிழ்ச்சி பிள்ளையோனுக்கு...பின் பெரும் மகிழ்ச்சி!!!!! 

இப்படி அவள் நம்தனை நினைத்துக் கொண்டே இருக்க!!!! நிச்சயம் பிள்ளை பிறந்து விட்டான்!! ஆனால் இவன் தன் ஞானி என்பதை கூட பிறக்கும்போதே...பின் எதையென்றும் எவற்றையென்றும் கூட பின் கணபதி...... கணபதியே !! கணபதியே!! என்று கத்திட்டுப் பிறந்தது!!!!

ஆனாலும் இன்னும் ஞானியர்கள் எவ்வாறு? பிறந்துள்ளார்கள் என்பதை கூட ஆனாலும் முதல் குழந்தை """   ஆ !!!!!!என்றே எதை என்று நிமித்தம் காட்டி பிறக்கும்.... ஆனால் பல ஞானியர்கள் """"""" சிவாய நம !!!!!!! நமச்சிவாயா!!!!! என்றெல்லாம் பிறந்திருக்கின்றார்கள்!!!அதிலும் ஒரு ஞானி இவன்!!!
கணபதியே!!! என்று கூட!!!

ஆனாலும் பிறந்திட்டு நலமாகவே வலம் வந்து வலம் வந்து இதனால் வளர தொடங்கியதற்கு சிறுவயதில் இருந்தே எதை என்று சிறுவயதில் இருந்தே.. பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டினான்!!! நிகழ்த்தி காட்டி!! காட்டி!! பல மனிதர்களை பல மனிதருக்குள் இடம் பிடித்து விட்டான்!!!15 வயதினிலே!!!

ஆனாலும் இதற்கும் சம்பந்தங்கள் உண்டு கணபதியும் 15 வயது ஆனாலும் ஆனாலும் கணபதிக்கு நல் எண்ணத்தோடு உயர்ந்த எதை என்று அறியாமலே மீண்டும் எங்கு( சிறுவன் ரூபத்தில் வந்த கணபதி) செல்லலாமோ அங்கு சென்று விட்டான்!!!!

ஆனாலும் அப் பெண்மணியோ தேடிட்டாள் கணபதியை!!!! ஆனாலும் வந்தது கணபதி என்பதை கூட சரியாக புரிந்து விட்டாள்!!!!

இதனால் பின் இப்பிள்ளையை அன்பாகவே ஆனாலும் எதனை என்றும் ஆனாலும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு நிச்சயம் இவன் ஞானி ஆகப் போகின்றான் பல மனிதர்களுக்கு உதவியும் செய்யப் போகின்றான் என்பதற்கிணங்க...அவ் தாய் சந்தோசமடைந்தாள்!!! 

சந்தோஷம் அடைந்து அடைந்து நிச்சயம் இப் பிள்ளை பல வழிகளிலும் கூட கணபதியின் அருளை பெற்று பல வழிகளிலும் கூட சித்து விளையாட்டுக்கள் பின் வருவோருக்கெல்லாம் நோய்களை தீர்த்து வைத்தல்!!! ஆனாலும் இத்தண்ணீரை பின் எதை அறிந்து நோய் சாதாரணமாக தீர்க்கப்படவில்லை!!! இத் தண்ணீர் எடுத்து எதை என்று எவ் நோயாக இருந்தாலும் அவர்கள் மீது தெளித்தாலே அனைத்தும் பின் சரியாகிவிடும் என்பதை கூட!!!

இதனால் இவன் புகழ் இவந்தனின் புகழ் அக்கம் பக்கத்திலும் கூட பரவியது!!!! 

இதனால் ஒரு ஞானி இருக்கின்றான் என்பதை கூட பல வழிகளில் கூட தேடி வந்தனர்!!!! எதை என்றும் கூட பல வழிகளில் கூட பின் மௌனமாக தியானித்து தியானித்து பல வழிகளில் கூட பல மனிதர்களுக்கு உதவிகள் செய்தான்!!!! இதனால் பின் முன்னேற்றம் இன்னும் இன்னும் தாயவளுக்கும் பின் மிக்க மிக்க சந்தோஷங்கள்!!!!

ஆனாலும் எதனை என்று கூட ஆனாலும் இவ் ஞானி !!!தாயவளுக்கு மரணம் ஏற்படுவதை கூட கணித்து விட்டான் !!!

அதன் முன்னே நிச்சயம்  இவள்தனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி நிச்சயமாய் பின் என்ன வேண்டும் தாயே???

உந்தனுக்கும் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது என்று கூற!!!!

அத் தாயவள் ஆனாலும் நிச்சயம் உன் மடியிலே யான் தூங்க வேண்டும் என்று!!!!!

ஆனாலும் பின் இவ் ஞானிக்கு சரியாக தெரிந்து விட்டது மடியில் தூங்கும் பொழுதே நிச்சயம் உயிர் போய்விட வேண்டும் என்பதை கூட!!!!! இதனால் நிச்சயமாய் எதை என்று அவ் தாய் எதை என்று எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட இவ் ஞானியின் மடியில் சாய!!!!! அப்படியே உயிரும் பிரிந்தது!!!

ஆனாலும் உயிர் பிரிந்த இடத்தில் நிச்சயமாய் இங்கேயே எதை என்று அறிந்து அறிந்து நல்விதமாகவே இன்னும் எண்ணற்ற பல வழிகளிலும் கூட இங்கே தான் அவள்தனும் இருக்கின்றாள்!!!

ஆனாலும் இன்றளவும் கூட பல பல பெண்களுக்கும் கூட உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றாள்!!!

ஆனாலும் மிக்க மிக்க மகிழ்ச்சிகள் மகிழ்ச்சிகள் பொங்கி கொண்டே !!!!!தன்மகன் இங்கு இன்னும் இன்னும் ஏராளமான எதை என்று ஆனாலும் இன்னும் கூட அவள்தன் கணபதியிடம் வரம் பெற்று இன்னும் கூட பல வழிகளில் கூட சுற்றித் திரிந்து கொண்டே இருக்கின்றாள்!!!!

ஆனாலும் கணபதியும் பிறப்புகள் கொடுக்கவா??? கொடுக்கவா??? என்றெல்லாம் எண்ணி!!! 

அவ்  அம்மையும் ஆனால் நிச்சயம் கணபதியே!!!! பிறப்புக்கள் வேண்டாம் ஆனால் நிச்சயம் யான் கேட்பேன் இவ்வுலகத்தில் இன்னும் பின் கர்மங்கள் எதை எதை என்று உணர்ந்து நிச்சயமாய் அக் கர்மங்கள் வந்த பிறகு பின் மனிதன் இன்னும் இன்னும் கஷ்ட நிலைகளுக்கு செல்வான் அப்பொழுது பிறவி கொடுத்தால் போதும் !!  என்பதை கூட  அவ் அம்மை கூறிவிட்டாள்!!!

இதனால் மிக்க மகிழ்ச்சியோடு இங்கு வருபவர்களுக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள் நலமாகவே நலமாகவே!!!

நலமாகவே இதை என்றும் ஆனாலும் இவ் ஞானி பல மனிதர்களை இன்னும் உருவாக்கினான்!!! பல பல வழிகளில் கூட இதனால் பல அரசர்களுக்கும் இவ் விஷயம் தெரிந்தது!!!!

இதனால் ஓடோடி வந்தார்கள்.... பின் நிச்சயம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் இவ் தேசத்தை என்று கூட!!!!

அதனால் பல வழிகளிலும் கூட பல அரசர்கள் இவர்களிடம் இவந்தனிடமே நிலைமை எதை என்று அறியாமல் கேட்டு கேட்டு நிச்சயம் இவ்வாறு செய்தால் நலன்கள்!!!

கணபதியை வணங்கினால் நலன்கள்!!!!!

அங்கு சென்றால் இங்கு சென்றால் நிச்சயம் யாராலும் பின் ஒன்றும் செய்ய இயலாது என்பதற்கிணங்க அதனால் அதைப்போலவே பன் மடங்கு நிச்சயமாய் எதை எதை என்று கூட அவ்வழியை பின்பற்றினார்கள்!!!! இதனால் பின் மகிழ்ச்சிகள் பொங்க பொங்க இளவரசிகளும் இளவரசர்களும் நன்றாக வாழ்ந்து வாழ்ந்து மடிந்தனர்!!!!-

ஆனாலும் நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் பிறப்புக்கள் இன்னும் பின் வந்து கொண்டே இருக்கும் ஏனென்றால் இவ்வுலகம் நிச்சயம் மாற்றப்பட வேண்டும் அப்பொழுதுதான் இயக்கம் இன்னும் தொடரும்!!!! தொடரும்!!!!!

அவ்வியக்கத்தை பெற்று பெற்று பல வளங்கள் வந்து வந்து இவ் ஞானி நிச்சயம் எதை என்று கூட இதனால் இவ் ஞானியை பின்பற்றியவர்கள் பலர்!!!!

ஆனாலும் அதில் கூட சீடர்கள் பல வழிகளில் கூட இவ் ஞானியை புரிந்து கொண்டு ஆனாலும் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் இவ் சீடர்களை யார் அனுப்பினார் என்று ஆனாலும் இவ் ஞானி யோசித்தான்!!!!

ஆனாலும் சரியாக கணபதி தான் அனுப்பினான் என்பதை உணர்ந்து கொண்டான்!!!!

இதனால் நிச்சயம் பற்று கொண்டு பற்று கொண்டு நிச்சயம் அவர்களும் பல வழிகளிலும் கூட உதவிகள் செய்தனர் அவர்களுக்கும் கூட !!!  இவ்ஞானியவன் உண்மையான பின் வித்தைகளை காட்டினான்!!!

ஏனென்றால் பின் குருவானவனுக்கு தெரியும் சீடர்கள் யார்? யார் ? என்பதை கூட அறிந்து அறிந்து இதனால் நிச்சயம் அது போலத்தான் எதை என்று அறிந்து அறிந்து எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!!!

""""" அப்பனே கேட்டுக் கொள்ளுங்கள்!!!!

"""""யானும் அது போல தான் கொடுப்பேன்!!!!!! 

அகத்தியன்!! அகத்தியன்!! என்று என்னை பல பேர் வணங்கலாம்!!!!....... ஆனால் அனைவருக்கும் யான் அருளாசிகள் கொடுத்து விடமாட்டேன்!!!!!

யார்???  எதனை கொண்டு சரியான வழியில் பின்பற்றி இவந்தனுக்கு கொடுத்து எதை என்று இவன் தவறான வழியில் பின் செல்வானா?????????? என்றெல்லாம் உணர்ந்துதான் யான் கொடுப்பேன்!!!!!!!

"""""ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!!!!!!!!! 

ஏனென்றால் இன்னும் இன்னும் பின் சித்தர்கள் பெயரைச் சொல்லிச் சொல்லி இன்னும் எதை என்று கூட கீழ்நோக்கி போய்க் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!

மனிதர்கள் பலர் சித்தர்களை வைத்துக் கொண்டே ஏளனம்!!!!!!

எதை என்று அறியாமலே அதனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன்!!!!

அகத்தியன் வாக்கு எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஒன்றை விட்டு விட்டால் நிச்சயம் அது நடக்காமல் எப்பொழுதும் கூட செல்லாது என்பேன்!!!!

இதனால் ஆனாலும் தற்போது நிலைமைகளில் என்னுடைய பெயரை சொல்லி பின் அகத்தியன் சொன்னான் என்று கூட பலர் பல வழிகளிலும் கூட பின் வார்த்தை பின் அவன் வழியாகவே விட்டுவிட்டு தோல்வியும் அடைந்ததுண்டு அப்பனே!!! 

இது எவ்வாறு நலன்கள் ஆகும்??????

அதனால் மீண்டும் எதனை என்று அறிந்து """

"""""அகத்தியன் ஒரு """""சொல் !!!!!!    விட்டு விட்டால்!!!!!!!!! அச் சொல் ஜெயிக்குமே!!!! தவிர தோல்வி அடையாது!!!!!!

தோல்வி என்றால் தோல்வி என்று சொல்லிவிடுவேன்!!!!

வெற்றி !!! என்றால் வெற்றி!!! இதுதான் நிச்சயம்!!!!

ஆனால் இல்லையப்பா!!!!

எதனையென்றும் அறிந்து அறிந்து அப்பனே பொய்களப்பா!!!!! 

இன்னும் இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அவர்களுக்கெல்லாம் என்னதான் காத்துக் கொண்டிருக்கின்றது!??? என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!!

அதனால் யாராக இருந்தாலும் அப்பனே என்னை வழிபட்டாலும் நிச்சயம் அவந்தனுக்கு எதை என்று அறியாமலே எதை என்று புரியாமலே அப்பனே எதை எதை என்று கூட எந்தனுக்கு எவை படைத்தாலும்!!!!!!!

ஏன்????  எந்தனுக்கு திருத்தலம் கட்டினாலும்!!!!! வணங்கினாலும்!!!! பூஜைகள் பல செய்தாலும் !!!!அவன் எதை என்று அறிய அறிய பின் மனம் சரியில்லை என்றால் அங்கேயே அவனை அழிப்பேன்!!!!! சொல்லி விட்டேன்!!!

இதை ஞாபகத்தில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும்!!!!!

அப்பனே பின் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே சித்தர்கள் எதற்காக இவ்வுலகத்தில் வந்து விட்டார்கள் என்பதற்கிணங்க.... அப்பனே அன்பை காட்டினால் அப்பனே யாங்களே அனைத்தும் உந்தனுக்கு கொடுப்போம்.

எதை என்று அறிந்து அறிந்து யாங்களே செய்வோம்!!!

திடீரென்று அப்பனே பின் எதை என்று அறிய பின் உயர் மாற்றங்கள் ஏற்படுத்துவோம் அப்பனே இதுதான் அப்பனே எங்கள் கடமையாகும்!!!!

அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே மனிதர்களை காக்கவே யாங்கள் அவதரித்து விட்டோம் அப்பனே இதன் மூலம் இறைத்தூதர்களாகவும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!
இறைவனுக்கு எதை என்று அறிய அறிய ஈசனுக்கு எவ்வகையில் ஆயினும் யாங்கள் சொல்லிவிட்டால் அப்பனே.... ஈசனும் நிச்சயம் முடிவெடுப்பான்!!!! அதுபோலவே!!!!

அதனால்தான் அப்பனே பின் பல பல எதை என்று கூற ஞானியர்களின் வாக்கு அதாவது........ சித்தனின் வாக்கு!!!! சிவனின் வாக்கு!!!! என்பது கூட அப்பனே !!!

இதனால் இவ் ஞானி எதை என்று அறிந்து அறிந்து அனைத்து திறமைகளையும்  கூட அப்பனே யான் தெரிந்து வைத்திருப்பதை எல்லாம்  எதையென்று உணராமலே பின் அனைத்து சீடர்களுக்கும் சொல்லிக் கொடுத்தான்!!!! அப்பனே!!!

அதனால் அப்பனே உண்மையான பக்தனுக்கு நிச்சயமாய் எந்தனுக்கு தெரிந்த அனைத்து விஷயங்களும் யான் சொல்வேன் அப்பனே சொல்லியும் தருவேன் அப்பனே!!!!! ....

ஆனால்??

ஆனாலும் அப்பனே அறிவதில்லை!!! அதை வைத்துக் கொண்டு மனிதன் பல ஆட்டங்களை ஆடி விடுவான் இப்பொழுது உள்ள நிலைமையில் கலியுகத்தில்!!!! அதனால்தான் யான் எதுவும் சொல்லித் தருவதில்லை அப்பனே!!!

நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து யார்? யாருக்கெல்லாம் சொல்லித் தர வேண்டுமோ ? அதை நிச்சயம் யான் சொல்லித் தருவேன் அப்பனே!! நலன்களாகவே!!!!

அப்பனே வித்தைகள் இதனால் அவ் சீடர்களும் அப்பனே நலமாக பல பல தேசங்களுக்கும் சென்று சென்று அப்பனே பல வழிகளில் கூட அப்பனே எதை என்று அறியாமலே இதனால் பின் அதாவது கணபதியின் நாமத்தை பின் உச்சரியுங்கள்!!! உச்சரியுங்கள்!!! என்பதையெல்லாம் கூறி கூறி அப்பனே பல தேசங்களுக்கு சென்று அங்கேயும் கணபதியின் பின் நாட்டத்தை நாட்டினார்கள் அப்பனே!!!!

இன்றும் கூட அப்பனே பல பல தேசங்களில் கூட கணபதி நாமத்தை கணபதி கூட அங்கேயே தவழ்ந்து வருகின்றான் அப்பனே இதனால் வெற்றியை குறிப்பவன் கணபதியே!!!

அப்பனே ஆனாலும் கூர்ந்து கூர்ந்து கவனித்து பார்த்தாலும் அப்பனே இன்னும் உண்மை நிலைகள் தெரிய வரும் என்பேன் அப்பனே.. இவ்வுலகத்திற்கு!!!!

அதனால் இவ் ஞானியானவன் எதை என்று அறிய அப்பனே மீண்டும் எதை என்று அறிய இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்தான் என்பேன் அப்பனே!!!! 

பின் கணபதியே நேரில் தோன்றி பின் எதை என்று அறிய அறிய பின் பிறப்புக்கள் எதை என்று அறிய இன்னும் வேண்டுமா??? என்று கூட.... 

ஆனாலும் நிச்சயம் பிறப்புக்கள் வேண்டாம் இப்பொழுது என்னால் முடிந்தவரை சேவை செய்து விட்டேன்!!!!

என் சீடர்களும் இனிமேலும் செய்வார்கள் என்பதற்கிணங்க நிச்சயமாய் யான் செல்கின்றேன்!!.....அதாவது எதை என்று இவ் உடலை விட்டு உயிர் நிச்சயமாய் ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட...

கணபதியே என்று உணர்ந்து உணர்ந்து நீயும் தவழ்ந்திட வேண்டும் என்னிடத்தில்!!!

பின் எதையென்று யான் என்னிடத்திற்கு எதை என்று அறிய அறிய நிச்சயம் பின் உயிராக இருந்து ஆனாலும் பின் உடம்பு இல்லாமல் நிச்சயமாய் பல மனிதர்களுக்கு நிச்சயம் சேவை செய்ய வேண்டும் என்பதற்கிணங்க.... இதனால் நிச்சயம் இங்கேயே உயிர் இருந்து கொண்டே இருக்கின்றது!!! சேவைகள் செய்து கொண்டே இருக்கின்றான்!!! இன்றளவும் கூட!!!!

பல மனிதர்களை உயர்ந்த மனிதர்களை உருவாக்கியுள்ளான் இவந்தன்.

ஆனாலும் நிச்சயம் அறிந்து வரும் காலங்களில் இவந்தனும் பிறப்பெடுப்பான்... இன்னும் தெய்வ காரியங்கள்!!!!

ஏனென்றால் இப்படியே சென்று கொண்டிருந்தால் இறைவன் பொய் என்பதை கூட இக்கலி யுகத்தில் சொல்லி விடுவான் மனிதன்!!!! இதனால் இவந்தனுக்கு நிச்சயம் எதை என்று அறியாமலே உடம்பைத் தேடிக் கொள்வான் என்பது சத்தியமான உண்மை!!!

இதையென்று அறிந்து அறிந்து பின் சீடர்களும் இவந்தன் எதை என்று அறியாத அளவிற்கும் கூட போய்விட்டானே என்பதற்கிணங்க.......... சீடர்களும்

ஐயோ!!!!!!!!!  நம் குருவானவன் இப்படி செய்து போய்விட்டானே!!!! எதையென்று அறிய அறிய இதனால்....நம் குருவானவன் எதையென்று அறியாமலே எங்கே!?  பின் உடம்பை விட்டு உயிர் மட்டும்..... அதாவது ஜீவசமாதி!!!!!!! என்று அறிந்து அறிந்து யாங்களும் இங்கே விடுவோம் என்று கூட அச் சீடர்கள் அனைவரும் இங்கேயே பின் எதை என்று அறிந்து அறிந்து.....(சீடர்களும் ஜீவசமாதி அடைந்துவிட்டனர்) இதனால் அப்பனே.... பல வழிகளிலும் கூட இன்னும் தவழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!!

இதனால் நிச்சயம் இவ் ஞானி பிறப்பெடுத்து விட்டால் அவ் சீடர்களும் தானாகவே வந்து விடுவார்கள் என்பேன் அப்பனே!!!!

அவ்வளவு!!!  எதையென்று அறிய அறிய அதிவிரைவிலே நிச்சயம் செந்தூரிலே ( திருச்செந்தூர்)  அவ் பிள்ளை நிச்சயம் எதை என்று கலியுகத்திலே பிறக்கும் என்பேன் அப்பனே!!!! பல வழிகளிலும் கூட நன்மைகளாக ஏனென்றால் எதையென்று அறிந்து அறிந்து பின் முன் ஜென்மத்திலே இவ் ஞானி அங்கே பிறந்திருக்க வேண்டும்!!!!

ஆனாலும் பின் கணபதியின் அருளைப் பின் எதை என்று அறிந்து மனதில் என்ன எதை என்று அறிந்து அறிந்து பின் முருகனும் இங்கே தன் மயில் வாகனத்தை அனுப்பி வைத்து விட்டான்!!!

இதனால் அப்பனே செந்தூரிலே!!!! நிச்சயம் உயர்ந்த ஓர் ஞானி பின் பிறப்பெடுப்பான் என்பது சத்தியமான உண்மை அப்பனே!!!!

இது கணபதிக்கும் தெரியும்!! கந்தனுக்கும் தெரியும் அப்பனே !!எதை என்று அறிய அறிய இதனால் அங்கே பிறந்து பல வழிகளிலும் கூட உயர்வுகள் பெற்று பல பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறியாமல் மனிதர்களுக்கு சேவை செய்வதற்கே பிறப்பு அதிவிரைவிலே நிகழப் போகிறது அதிவிரைவிலே நிகழப்போகும் என்பேன் அப்பனே!!!!

சித்தர்கள் இன்னும் இன்னும் அப்பனே நல்முறையாக மனிதர்களை மாற்றினாலும் ஆனாலும் ஏதோ எதையென்று அறிய அறிய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொன்றையும் அழித்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே. ஆனாலும் அழித்து என்ன பலன் ?? என்பதை கூட!!

ஆனாலும் அழித்து வருவது எதனை என்று கூட மாறுபட்ட விஷயமாகவே போய்க்கொண்டிருக்கின்றது அப்பனே!!!

இதனால் நிச்சயம் நல்லோர்க்கு நல்லோர்கள்!!! தீயோருக்கு தீயோர்கள்!!! அப்பனே பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்படியே யான் செய்வேன். அப்பனே!!!!

ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே என்னை வணங்குபவர்கள் நிச்சயமாக!!!!!! இங்கிருந்து யான் சொல்கின்றேன் அப்பனே!!!! போட்டி பொறாமைகள் எதையென்று அறிய அறிய இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

நிச்சயம் அவரைப் போன்று எதை என்று அறிய அறிய இப்படி இருப்பவர்களுக்கு """""யான் எதுவும் செய்ய மாட்டேன்!!!!! எதையும் செய்ய மாட்டேன்!!!! செப்பிவிட்டேன்""" அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

பின்.... பின் நாளில் அப்பனே எதை என்று அறிய.... அகத்தியனே உன்னை நம்பிக் கொண்டிருந்தேனே என்றெல்லாம் பிதற்றிக் கொள்ளாதீர்கள் என்பேன்!!! அப்பனே!!

ஏனென்றால் அகத்தியனை வணங்குபவர்கள்..... அகத்தியனுக்கு புகழ் சேர்க்க வேண்டுமே தவிர!!!.......

ஆனாலும் யான் புகழை விரும்புவதில்லை!!!!!!

ஆனாலும் எதை என்று அறிய அகத்தியன் பொய் என்று கூட யாரும் சொல்லலாகாது என்பேன் அப்பனே!!!!!!

இவைபோலே யான் விட்டிருந்தாலும் இனிமேலும் அப்பனே வரும் காலங்களில் அகத்தியன் பொய் என்பதை கூட மனிதன் அப்பனே பின் ஆணித்தரமாக சொல்லி இருப்பான்!!!

அதனால் யான் விட்டுவிடவில்லை சித்தர்களும் விட்டுவிடவில்லை அப்பனே!!! 

ஒவ்வொரு அடியும் ஒவ்வொருவனுக்கும் உண்டு உண்டு சொல்லி விட்டேன்!!! அப்பனே!!!

அகத்தியன் எதை என்று அறிய அறிய சித்தர்களை வணங்கினால் கஷ்டம் என்பதை எல்லாம் அப்பனே மனிதன் பின்... அதாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றான்!!! அறிவிழந்த மனிதன் அப்பனே!!!

ஆனாலும் உண்மை நிலைகளை யாங்கள் எடுத்துக் கொண்டே வருவோம்!!!! அப்பனே எப்படி எல்லாம் இவ்வுலகத்திற்கு நிச்சயம் எடுத்துக்கொண்டு எதை என்று செல்வோம் என்பதை கூட யானே அறிவேன் அப்பனே!!!!

இதனால் நிச்சயம் இவ் பூமி எதை என்று கூட நிச்சயம் எதை எதை என்று கூட எப்படி ஆக்குவது என்பதை கூட நிச்சயம் பின் கணபதியின் அருளாலும் கந்தப் பெருமானின் அருளாலும் ஈசனுடைய அருளாலும் அப்பனே!!!

ஆனாலும் இதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசங்கள் அப்பனே மூலனும்( திருமூலர்) வந்து வாக்குரைப்பான் என்பேன் அப்பனே.... நல்விதமாக!!!!

மூலன் இனிமேலும் ஒவ்வொரு ஞானியை பற்றியும் கூட உரைப்பான் என்பேன் அப்பனே!!!!

எப்படியெல்லாம் பக்திகளை பின்பற்றினார்கள் என்பதை கூட அப்பனே ஆனாலும் அவையெல்லாம் மறைந்து விட்டது என்பேன் அப்பனே... மூலன் வரும் காலங்களில் தெரிவிப்பான் என்பேன் அப்பனே நல் முறைகளாக இன்னும்!!!

பின்ஔஷதங்களும் கூட( மருந்துகள்) சொல்லி வைப்பான் அப்பனே!!! அவற்றை பயன்படுத்திக் கொண்டால் அப்பனே!!!!!.......

சித்தர் வழியில் வருபவர்களுக்கு அப்பனே சில கஷ்டங்கள்!!!! ஆனாலும் அப்பனே மனக்குழப்பங்கள் வரும் என்பேன் அப்பனே!!! நிச்சயம் ஏன் வருகின்றதென்றால் அப்பனே பின் வரும் காலங்களில் அதை தெரிவித்து விடுகின்றேன் அப்பனே!!!!

நிச்சயம் வந்துவிட்டாலும் நிச்சயம் எங்கள் வழியில் வருவோருக்கு பிறப்புக்கள் இல்லை அப்பனே!!!! 

எதையென்று நிமித்தம் காட்டி காட்டி ஆனாலும் இன்னும் இன்னும் அப்பனே இவ் ஞானியும் சீடர்களும் இங்கேயே தவழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்பனே!!! வருபவருக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் ஆசிகள்!!! இதன் மூலம் அப்பனே அனைவரும் நன்றாக தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!! 

இதனால் யான் சொல்லியவற்றை சரியாக பயன்படுத்திக் பயன்படுத்தி வந்தாலே போதுமானது அப்பனே!!!! அதிவிரைவிலே மாற்றங்கள் காண்பது உறுதி!!! உறுதி!! என்பேன் அப்பனே !!

ஆனாலும் இதற்கும் பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்!!!! 

என் வாக்கினை ஏற்று நடப்பவர்களுக்கும் பல எதையென்று அறியாமலே.... ஆனாலும் அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!!! 

அகத்தியா!!!!!!!!!!!  எதையென்று அறிய அறிய ஆனாலும் என்னால் முடியவில்லையே!!!! என்று மனதாலே வருந்தினாலே பின் யானும் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் இல்லத்திற்கு வந்து எதையென்று அறிய அறிய நிச்சயம் பல ஞானியர்களை எதையென்று அறியாமலே இல்லத்திற்கு வரச்செய்வேன்!!! அப்பனே!!! 

இதனால் தான் எதை என்று அறிய இன்னும் மாற்றங்கள் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே அதனால் நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் பல வழிகளிலும் கூட யானும் செய்வேன்!!!! என் பக்தர்களுக்கு அப்பனே உண்மையான பக்தர்களுக்கே அப்பனே!!!! 

நலமாக இதனால் இவ் ஞானியவன் இன்னும் இன்னும் அப்பனே பல மனிதர்களை உருவாக்குவான் என்பேன் அப்பனே!!

அதனால் அப்பனே அனைத்து சீடர்களும் இங்கே தான் அமர்ந்திருக்கின்றார்கள் அப்பனே!!!  இதனால் பரிசுத்தமான சில வியாதிகளும் அப்பனே சில கர்மாக்களும்..... இங்கு வந்து சென்றாலே தீரும் என்பது மெய்யான உண்மையப்பா!!!! 

அதனால் யான் எங்கெல்லாம் சென்றிருக்கின்றேனோ அப்பனே!!!!  அங்கெல்லாம் நிச்சயம் இச் சுவடியும் சென்று அப்பனே நல்முறைகளாகவே வாக்குகள் செப்பி!!!!! 

எதையென்று கூற நிச்சயம் அப்பனே பயன்படுத்துவார்கள் என்பேன் அப்பனே.... 

வரும் காலங்கள் அப்பனே எதை எதை என்று அறிய ஒருவன் இருந்தாலே போதுமானது பின் பற்றுவதற்கு!!!!!!! 

அவனை வைத்துக்கொண்டு பல வழிகளிலும் கூட யான் உருவாக்கிவிடுவேன் அப்பனே!!!! 

இதுதான் சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே!!!

பல மனிதர்கள் இருந்தும் அப்பனே ஒருவன் கூட உருவாகவில்லை அப்பனே!!! மனிதர். ஏனென்றால் அனைவரும் எதோ ஒரு மூலதனத்திற்காகவே இறைவனை வணங்குகின்றார்கள் அப்பனே!!!

அப்படி வணங்கினால் நிச்சயம் இறைவனும் கொடுக்க மாட்டான் யானும் கொடுக்க மாட்டேன் சொல்லி விட்டேன் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

நலமாகவே. !!!அப்பனே இன்னும் இன்னும் மாற்றங்கள் அப்பனே உண்டு!!! இவ்வுலகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு இடத்தில் செப்புகின்றேன் அப்பனே!!!

நலன்கள் ஆசிகள் ஆசிகள் அப்பனே இன்னும் இவ் ஞானியை பற்றியும் கூட எங்கெங்கு?? அமர்ந்தான் என்பதை கூட அப்பனே அவ் திருத்தலங்களை பற்றி அப்பனே இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய சொல்கின்றேன் அப்பனே நலமாகவே!!!

இதனால் இவ் ஞானி மிக உயரத்தில் எதை என்று அறிய கருணை மிக்கவன் அப்பனே.. நல்முறையாக வேண்டுதலை வேண்டிய படியே கொடுத்து விடுவான் அப்பனே முதலில் அப்பனே கர்மா அழியும்!! அழியும்!!!

அப்பனே!! மற்ற வாக்கும் எதை என்று அறியாமல் ஓர் திருத்தலத்தில் சொல்கின்றேன் அப்பனே நலமாகவே ஆசிகள் ஆசிகள்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

நாம் காணும் விநாயகர் ஊர்வலம் கணபதி வழிபாடுகளில் இந்த வார்த்தை கண்டிப்பாக நாம் கேட்டிருப்போம்

கணபதி பப்பா மோரியா”

மங்கள் மூர்த்தி மோர்யா!!! 

இதன் விளக்கம் கணபதி அப்பனே மோரியா என்று அர்த்தம். 

இதில் மோரியா என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் உண்டு!! விநாயகப் பெருமானின் துதிகளைப் பாடுவதற்காக பக்தர்கள் கணபதி பாப்பா மோரியாவை எப்போதும் கோஷமிடுகிறார்கள். ஆனால் மோரியா என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மோரியா என்ற வார்த்தையானது, பதினான்காம் நூற்றாண்டில், மோரியா கோசாவி என்ற புகழ்பெற்ற விநாயகப் பக்தரைக் குறிக்கிறது, “மோரியா கோசாவி கணபத்யா பிரிவைச் சேர்ந்த 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி. இவர் விநாயகரின் பெரும் பக்தர்.கணபதி பாப்பா மோரியா என்ற வார்த்தைகள் அவருக்குக் காரணம்மோரியா என்ற வார்த்தை, புனேவுக்கு அருகிலுள்ள சின்ச்வாட்டைச் சேர்ந்த, பதினான்காம் நூற்றாண்டில், மோரியா கோசாவி என்ற புகழ்பெற்ற விநாயகப் பக்தரைக் குறிக்கிறது. இது கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை சித்தரிக்கிறது இவருடைய ஜீவசமாதி இங்கே உள்ளது.

ஶ்ரீ மொரயா கோசவி கணபதி மந்திர்.பிம்பிரி சிஞ்வாட். புனே மகாராஷ்டிரா. 411033. தொடர்பு எண். 077688 81133

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
 
சித்தன் அருள்.....தொடரும்!