அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். பல அகத்தியர் அடியவர்களும், அந்த தினத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.
நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.
ராமரும் சீதையும் ராமேஸ்வரத்தில்:-
ராமேஸ்வரத்தில் சிவபெருமான் தானே விரும்பி அமர்ந்தார். சித்திரை மாதத்தில், ராமரும், சீதையும் அங்கே வந்து, வளர்பிறை ஏகாதசி அன்று (12/05/2022, வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு பூசை செய்து பத்து நாட்கள் அங்கு உறைவார்கள்.
ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:-
28/05/2022 - சனிக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம்.
நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)
08/08/2022 - ஆடி மாதம் - திங்கட்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, கேட்டை நக்ஷத்திரம்
பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)
09/08/2022 - ஆடி மாதம் - செவ்வாய்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.
திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)
09/08/2022 - ஆடி மாதம் - செவ்வாய்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.
ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.
24/08/2022 -ஆவணி மாதம் - புதன்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் (மாலை 3.35 முதல்).
கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
06/11/2022 - ஞாயிற்றுக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.
முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள் - 14/12/2022 புதன் கிழமை.
பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2022 முதல் 14/01/2023 க்குள் வருகிறது.
சிவபெருமான், சிதம்பரம்:-
06/01/2023 - வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி, திருவாதிரை நட்சத்திரம். ஆருத்திரா தரிசனம். சிதம்பரம் கோவிலில் சிவபெருமான், அபிஷேக நேரத்தில், ஸ்தல வ்ருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அன்று சிவபெருமானே விரும்பி அமர்கிறார். நாமும் அன்று அங்கு அமர வேண்டும் என்கிறார் அகத்தியப்பெருமான்.
அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-
09/01/2023 - திங்கட்கிழமை - மார்கழி மாதம், துதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.............தொடரும்!
சிவ தரிசனம். உத்திரகோசமங்கை யில் சொன்னது.நீங்கள் சிதம்பரம் என்று சொல்லி உள்ளீர்கள்.
ReplyDeleteஅப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்றுகூட சிதம்பர ரகசியம் என்கிறார்களே அவ் ரகசியத்தை ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.
ReplyDeleteஅப்பனே அத்திருத்தலத்தை ஈசனே அமைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை . அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.
அதை அங்கு அவன் வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.
அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான் நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.
சித்தன் அருள் -1060 -
ReplyDeleteஉத்திரகாேசமங்கை சிவாலயத்தில் ஈசன் தரிசனம் உத்திரகாேசமங்கை சிவாலயத்தில் ஈச தரிசனம் பற்றி அகத்திய மாமுனிவர் (குருநாதர்) ஜீவநாடி பாெதுவாக்கு
அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன். அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.
அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.
அதை அங்கு அவன் (ஈசன்) வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.
அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான். நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.
இவையன்றி கூற
அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.
பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன். அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.
அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு (ஈசனுக்கு) நல் முறையாக வருடத்தில் ஒரு நாள் அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன்.
அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.
அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.
ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள். ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான்.
*அவ்விடத்தில் (மரத்தடியில்) நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.
இவ்வாறு குருநாதர் அகத்தியர் வாக்கு உரைத்திருந்தார்.
உத்திரகோச மங்கை ஈசன் தரிசனம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பின்வாக்கு .
ஆருத்ரா தரிசனம் அன்று
உத்தரகோசமங்கையில் கூட ஈசனார் பின் பார்வதி தேவியுடன் வந்தானப்பா வந்தானப்பா அப்பனே சுற்றி அப்பனே வளைத்து கொண்டீர்கள் நீங்களும் அப்பனே இவை என்று கூற சோதித்தான் ஈசன் யார் இதை கூட தெரிவித்துவிட்டது என்பதைக்கூட பின் நெற்றிக் கண்ணில் பார்க்கும் பொழுது இவையோ
என்று கூற அப்பனே இவ் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது என்பேன் நினைத்தாலே அப்பனே முக்தி தருவது இறைவனுடைய கருணை ஈசனே என்பேன் அதனால் அப்பனே வர இயலாதவர்களுக்கும் அங்கு செல்லவில்லையே என்று யார் யோசித்து இருந்தார்களோ அவர்களுக்கும் அப்பனே நிச்சயமாய் அங்கிருந்தே ஆசீர்வதித்தான் அப்பனே அப்பனே நல்விதமாக ஒவ்வொருவருக்கும் அப்பனே எதனை என்று கூற சில சில வழிகளிலும் கொடுத்தனுப்பினான் ஆசிகள் .
இதனால் கவலைகள் இல்லை.
மறு வாக்கும் செப்புகின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.