​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 1 May 2022

சித்தன் அருள் - 1127 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் ரிஷி நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம்!








22/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம். 
நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம் 
தாருகாவனம். 
தேவ்பூமி துவாரகா மாவட்டம். 
குஜராத் மாநிலம்.

உலகத்தை படைத்து அழகாக ஆட்சி செய்கின்ற நாகேஸ்வரனையும் நாகேஸ்வரியையும் பணிந்து வாக்குகளாக பரப்புகின்றேன் புசண்டன். 

எதை?? என்று பின் எடுத்து வந்தாயோ!!! அதனையும் எடுத்துச்செல்ல அருகதை இல்லை மனிதனுக்கு!!!

மனிதனுக்கு என்னென்ன? வேண்டும்!? என்று தேவைகளை பூர்த்தி செய்ய மனம் துடிக்கின்றது!!

இதுதான் மாயை!!!

அவ் மாயையை நிறுத்திவிட்டால் இறைவனை நேரடியாகவே காணலாம்....!!!! தரிசனத்தையும் கூட.

எதை என்று குறிப்பிட்ட பின் வரும் ,வரும் என்பதை எதைக்கொண்டு நோக்க நோக்கி விட்டால் இல்லை துன்பங்கள்.

துன்பங்களை துன்பங்களால் தான் அடிக்க முடியும்!!!.... என்பது கருத்தாக செயல்படுகின்றது.

செயல்படுகின்றது, இவ் நாகேஸ்வரனையும் பல வழிகளிலும் யான் எதையென்று பல யுக யுகங்களாக வாழ்ந்துட்டு வருகின்றேன்.

ஆனாலும் இவ் நாகேஸ்வரனும் நாகேஸ்வரியும்... கணிக்க தக்கதல்ல!!!....

யான் பிறந்த...... ஆனாலும் இதையன்றி கூற முதல்... முதல் இவ்வுலகத்தில் முதல் இறைவனே..... ஈசனே!!!! என்பேன் யான். 

எதனையென்று அனைத்து பிரம்மாக்களையும் பார்த்து விட்டேன். 

ஆனால்???!!!  ஈசனோ!!  காணகிடைக்காத அற்புதம்!!!!!!!!

இதனையும் அதனால் இவனை நம்பி நம்பி தொழுவோர்க்கு ஒரு குற்றங்களும் இல்லை.

குற்றங்கள் இல்லை நாராயணனும் நாராயணனும் அழகாக பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

ஈசன் அருளைப் பெற்றுவிட்டால் நாராயணனும் எளிதில் இறங்கி விட்டு அனைத்து ஐஸ்வர்யங்களையும் கொடுப்பான்.

இதுதான் விதியின் பாதை. வகுத்த கட்டாயம்.

கட்டாயங்கள் ஒன்றுமில்லை இதனையும் அறிந்து அறிந்து பல திருத்தலங்களையும் இதையன்றி கூற தான் தன் இஷ்டப்படியே அமைத்துக்கொண்டான் ஈசன்.

ஈசன் என்பதற்கிணங்க இன்னும் பல ஆலயங்களும் உற்பத்தியாகும்.

பழைய!! எதனையுமென்று இன்னும் சக்திகள் வாய்ந்த.....

இதுவும் ஓர் சக்தி வாய்ந்த திருத்தலம்.

ஆனாலும் இவையன்றி கூற.... """வரட்டும் என்னுடைய ஆலயங்களுக்கு!!!!!

பின் வினைகளை யான் தீர்ப்பேன்... என்பதை கட்டாயமாக குறிப்பிட்டுள்ளான் ஈசனே!!!

இதனை யாங்களே தெரிவித்திருந்தோம் இதனால்தான் ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு சிறப்புரிமை உண்டு.

ஒரு மாணவன் ஒரு குருகுலத்தில் பயில்கின்றான்.. ஆனாலும் இதை மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் !!ஏன்?? குருகுலத்தில் போகவேண்டும்?? குருகுலத்தில் தான் கற்க வேண்டுமா???

தம் இல்லத்தில் கற்கக் கூடாதா??? என்று நினைப்பவன் முட்டாளே!! என்பேன்.

அவ் முட்டாளின் எவ்வாறு? வாழ்க்கை நலம் குறிக்கின்றது??

அதனால் தான் சொல்கின்றேன்...ஓர் குருவை தேடித்தேடி பின் குருகுலத்தில் பாடம் கற்றுக்கொண்டால் அதன் சிறப்பு வியக்கத்தக்கது.!!!

இது தான் குருகுலம்!!!

யான் திருத்தலத்தை குருகுலம் என்றும் சொல்வேன்!!! 

அதனால்தான் சொல்வேன்!!!

திருத்தலம்!!! குருகுலம்!!!

இப்பொழுது  புரிகின்றதா??!!!

மானிட ஜென்மங்களே!!!! 

எதற்காக இறைவனை வணங்குகின்றோம் என்பதைக்கூட....

ஆனாலும் நற்செயல்கள் பெருகிக்கொண்டே போகும் திருத்தலங்களை அடைய!!! அடைய!!!

ஆனாலும் இதற்கும் விதியில் உள்ளதா?? என்பதை யோசித்துக் கொள்ளத்தான் வேண்டும்!!

யோசித்துக் கொள்ளத்தான் வேண்டும் இன்னும்...!! 

ஆனாலும் சிறப்புமிக்க திருத்தலங்களும் இன்னும் ஈசன் வாழ்ந்து வருகின்றான்.

அதனையும் ஒவ்வொரு படியாக எடுத்துரைக்கின்றேன். 

அவை மட்டுமில்லாமல் பழைய ஏனைய சித்தர்களும் ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு தலத்திலும் இருக்கின்றார்களப்பா!!! இதையும் உணர்வதற்கு ஒன்றுமில்லை.

ஒன்றுமில்லை இதனையும் அறிந்து  இங்கே நாகங்களும் வடிவமைத்து இவ் பாரதபோர் (மகாபாரதபோர்) தொடங்குவதற்கு இதையன்றி கூற அகத்தியன் பரிபூரணமாக எதை?? எப்படி?? அளவிட வேண்டும்?? என்பதையும் கூட கிருஷ்ணனிடம் அழகாக கூறிவிட்டான். 

அதனால் பின் இவ் போரை அழகாகவே கணிப்பதற்கும் அகத்தியனிடம் கிருஷ்ணன் பல பல வருடங்களாக ஏங்கி நின்றான்.

அதனால் கிருஷ்ணனுக்கும் வழிவகுத்தான்!! அகத்தியன்.

இவ்வுலகத்தில் அனைவருக்கும்  வகுத்துள்ளான்!! வழி வகுத்துள்ளான்!! அகத்தியனே!! என்பேன்.

அதனால் இதையன்றி கூற மானிட ஜென்மங்களே!!! 

சாதாரண மனிதனுக்கும் இரங்குவான் அகத்தியன்.!! வரும் வரும் காலங்களில்.

அதை புரிந்து கொண்டு நலமாகவே நடந்தால் நிச்சயம் எங்கள் அருளால் யாங்கள் காத்து புண்ணியப் பாதைக்கு அழைத்துச் சென்று பின் முக்தியை பெற்றுத்தருவோம்.!!!

பின் இறைவனையும் காண வைப்போம்!!!

எங்களால் முடியும்!!!!!. அனைத்தும் கூட....

சித்தர்களால் முடியாதது இவ்வுலகத்தில் ஏதுமில்லை!!!!

யாங்கள் சொன்னாலே இறைவனும் எதையென்று....

ஈசனும் இவையென்று சரி என்று சொல்லி விடுவான்.!!!!

பிரம்மாவும் சரியென்று சொல்லிவிடுவான்!!!!

எதையென்று கூற விஷ்ணுவும் சரியென்று சொல்லி விடுவான்.!!!!

அதனால் தான் திருந்துங்கள்!!! திருந்தி வாழ கற்றுக்கொள்ளுங்கள்!!! என்பது மெய்சிலிர்த்து இன்னும் வரும் வரும் காலங்களில் துன்பங்கள் பெருகும்!! நோய்கள் ஏற்படும்!!

அதனால் அத்துன்பத்தை எப்படி ?? பின் போக்க வேண்டுமென்றால்??? 

கருணை!!! கருணை பொங்கும் இல்லத்திலே இறைவன் அழகாக விளையாடுவான்..

அவ் கருணை பொங்கும் இல்லம் என்பதால் எதனையுமென்று குறிப்பிடுகிறேனென்றால்""உன் மனதே!! என்பேன்.

அதை முதலில் நீ செம்மைப்படுத்து. அங்கே இறைவன் குடி கொள்வான்.

இறைவன் சொன்ன பாதை ஏதும் வராது.....

கோவங்கள்!!! பொறாமைகள்!!! காமங்கள்!!! பின் எதனையும் விரும்பாத.... இறைவனை மட்டுமே விரும்பும் அப்பொழுது விரும்பி வந்தால் இறைவன் நேரடியாக தரிசனம் கொடுத்து உன்னை ஆட்கொண்டு. 

மகனே..!!!.. என்ன வேண்டும்??? என்று கூட கலியுகத்தில் சுலபமாகவே கேட்டறிவான் இதுதான் உண்மை.

அதை விட்டுவிட்டு இதைச் செய்தால் எவையென்று கூற கூற கூற அப்பனே முடியாதப்பா!!! .

மனிதனும் ஒன்றும் அறியாத முட்டாளாகவே வாழ்ந்து வருகின்றான்.

எதையென்று கூற சுலபமாக வாழ்ந்துவிடலாம் சுலபமாக வெற்றி கொள்ளலாம். இவ் வழியில் குறுக்கு வழியில் சென்றால் அனைத்தும் பெற்று விடலாம் என்றெல்லாம் நினைப்பது வீணப்பா!!!!

அதனால் வீணான வதந்திகளையும் எதையென்று... 

மனிதனின் வாய் துர்நாற்றமே அடைந்துள்ளது..அத் துர்நாற்றம் பின் அதை பின் துர்நாற்றம் மூலம் வரும் வாக்குகள் எப்படி பட்டது என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்!!!!

பொய்!!!!!  அத் துர்நாற்றத்தின் வழியாக வரும் வார்த்தைகள் எல்லாம் பொய்யப்பா!!! பலிக்காதப்பா!!!

எதை???? அதனால் இறைவனை நாடு!! நாடு!! நாடிநாடி வந்தாலே போதுமானது உன் தீங்குகள் அழியும் பாவங்கள் கரையும் பின்பு இதனையுமென்று அறிவதற்கு ஒன்றுமில்லை.

இறைவனே இதையென்று  இப்படி செய்க!!! என்று உன்னிடத்தில் வந்து விடுவான்.

அதன் பின் உன்னை யாரும் அசைக்கவும் முடியாது என்பேன்!!.

எதனையென்று ஆனாலும் கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் பல மனிதர்களுக்கு இறைவன்.
சோதனை என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் ஐயோ இவ்வளவு கஷ்டங்களா!! என்று மனமுவந்து பின் உட்கார்ந்து விட்டால் இறைவனும் இவந்தன் வீண்!! இவந்தனுக்கு என்ன செய்வது?? செய்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சென்றுவிடுவான்.
இதுதான் மெய்யப்பா!!!

அதனால் ஒருவன் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் இறைவா!!! இறைவா!!! என்று நினைத்தாலே நிச்சயம் இக்கலியுகத்தில் இறைவன் காட்சி தருவான்!!! காட்சி தருவான்!!!.... யாங்களே அழைத்துச் செல்வோம் இறைவனிடத்தில்...

இதைனையுமென்று இன்னும் பல பல பல சித்தர்களும் வழி வகுப்பார்கள் இவ்வுலகத்தை காக்க!!!

காக்க வந்தவர்களே ஆனாலும் அதனையும் சித்தர்கள் பெயர்களைச் சொல்லிச் சொல்லி பின் இவ் சித்தன் சொன்னான் பின் அவ் சித்தன் சொன்னான் என்றெல்லாம் என்றெல்லாம் இன்னும் கூட பின் வாய் பேசி வருகின்றனர் அவையெல்லாம் யாங்கள் வீண் என்று நிரூபிப்போம் வரும் காலங்களில்...

உண்மையை நிலைநாட்டுவோம்!!!

அதனால்தான் கிருஷ்ணனும் எப்போதெல்லாம் அதர்மம் தாங்கித் தாங்கி அழிந்து கொண்டிருக்கின்றதோ?! அப்பொழுதெல்லாம் யான் பிறப்பேன் என்று!!!!!

ஆனாலும் நிச்சயமாய் நிச்சயமாய் சொல்கின்றேன் , பின் அடுத்த வாக்கிலும் அதனைப் பற்றி விரிவாக கூறுவான் அகத்தியன்.

ஒன்றுமில்லை இதனால் நிச்சயம் தர்மம் செழித்தோங்கும்!! செழித்தோங்கும்!!!

நூறு வருடங்கள் எவை!? எதை?? என்று கூட பின் அநியாயங்கள்!! அக்கிரமங்கள்!!!   நடந்துவிட்டால் பின் நூறு வருடங்கள் பின் தர்மத்தின் வழியாக செல்லும் இவ்வுலகம் இதுதான் வழி.

ஆனாலும் தர்மத்தின் வழி செல்ல ஆனாலும் பல செய்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன இவ்வுலகத்தில்....

அதனால்தான் இவ்வுலகத்தை சற்றுத் தேற்றி !! தேற்றி!! சில வினைகளையும் அகற்றி அகற்றி தர்மத்தை நிலைநாட்டுவோம் நிச்சயம்!!!

இதனை நிச்சயம் உணரலாம் வரும் வரும் காலங்களில்!!!!

ஆனாலும் நினைக்கையில் மனம் வருந்துகின்றது!!!

மனிதன் இப்படியாக இருக்கின்றானே!!! புத்தி மட்டமாக இருக்கின்றானே!!! அழிந்து கொண்டிருக்கின்றானே!!! ஒன்றும் தெரியாமல்....

ஆனால் மனிதனோ நினைத்துக் கொள்கின்றான்... நம்தனக்கு அனைத்தும்  தெரியும் வாழ்ந்து விடலாம் என்று!!!....

ஆனால் யாங்களே!! ஐயோ!! பாவம் !!மனிதன்!! என்று யோசிக்கின்றோம். ஏனென்றால் மற்றவர்களை சொல்லிச் சொல்லி மனிதன் பிழைத்துக் கொண்டிருக்கின்றான்.

எப்பொழுது?? தானாகவே புத்திகள் வரும்??!

எப்பொழுது புத்திகள் தானாகவே வருகின்றதோ அவந்தனை யாங்கள் காப்போம் நிச்சயம்.

இதையன்றி கூற மனிதன் மனிதன் குறுக்கு வழியில் தெரிந்து தெரிந்து இயன்று இயன்று செல்கின்றான்.


இவ் நாகேஸ்வரனும் இன்னும் காட்சி அருள்கின்றான்... பல மனிதர்களுக்கு அருள்வான் என்பது உண்மை.

அதனால் வரும் காலங்களில் சிலசில வினைகளால் ஆனாலும் யாங்கள் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

பக்தியை கடைபிடியுங்கள்!!!

பக்தியை கடைப்பிடித்தால் ஒழுக்கங்கள் நிறையும்!!!

ஒழுக்கங்கள் நிறைந்தால் குடும்பங்கள் செழிப்புகள் அடையும்.

குடும்பங்கள் செழித்தால்.. இவ் நாட்டில் உள்ள அனைத்தும் மாறும்.

முதலில் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள் ஒழுக்கங்களை...!!! 

இதையன்றி கூற இவை ஆனாலும் பின் அவ் ஒழுக்கங்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்றால்  உந்தனை நிச்சயம் ஒழுக்கம் இல்லாமல் அக்குழந்தைகள் உன்னையே அழித்துவிடும்.

ஆனால் மனிதன் மனிதனை அழித்துக் கொள்வது தான் நிதர்சனமாகவே உள்ளது இப்புவியுலகில்.

ராஜ்யத்தை தேடி எங்கு அலைந்தாய்?? அலைந்தாய் உள்ளது உன்னிடத்திலே அவ் ராஜ்யத்தையும் கட்டுக்கடங்காமல் கட்டுக்கடங்காமல் இழந்துவிட்டாயே!!! மகனே என்று தான் யாங்கள் பாடிட்டு வருவோம்.

நித்தம் நித்தம் செயல்படுவது ஏது?? அதனையும் நீந்தி விடுவது ஏது??

நீந்திவிட்டால் பிறவிகள் இல்லை. பிறவிகள் இல்லை!! நீந்திக் கிடப்பது நீந்தின் மேலே... ஆற்றின் போலே வழி ஆற்றின் போலே நாம் பின் ஓட வேண்டும்.

எதற்காக ஓட வேண்டும்??

இறைவனைப் பிடிக்க ஓட வேண்டும்!!!

இறைவனை பிடிக்க ஓடி விட்டால் பின் ஆற்றின் வழியே தண்ணீர் ஓட ஓட கடைசியில் எங்கு சேர்கின்றது என்று பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள்.

இதைத்தான் மனிதன் சென்று கொண்டே இருந்தால் இறைவனை நோக்கி கடைசியில் இறைவனை பிடித்துக் கொள்வான் அனைத்தும் நடந்துவிடும் எளிதில்.

மக்களே இதையன்றி கூற அதனால் உசுப்பேத்துவார்களப்பா!!! இனிமேலும்....

இவையென்று கூற இதைச் செய்தால் இவ்வாறு செய்தால் என்றெல்லாம்....

ஆனாலும் பொய்களப்பா!!! நம்பி விடாதீர்கள்!!!

ஏமாந்து விடாதீர்கள்!!!!

நஷ்டம் ஆகி விடாதீர்கள்!!!


உங்களை முதலில் நீங்கள் நம்புங்கள் அப்பொழுது தெரியும் இறைவன். இறைவனைப் பிரார்த்தியுங்கள்... நல் முறையாகவே!!


நல் முறையாகவே பிரார்த்தித்தே வந்தால் நிச்சயம் இறைவனே வருவான் நிச்சயம் இக்கலியுகத்தில்...

அப்படித்தான் சென்று கொண்டிருக்கின்றது ஆனாலும் இறைவன் வந்துவிட்டாலும் ஆனாலும் இதையன்றி  கூற சில செய்கைகளால் உந்தனுக்கே அறியவரும்.
அறியவரும் உண்மை இல்லையப்பா.. வரும் வரும் காலங்களில் யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்... வரும் வரும் காலங்களில் பல பல மிகுந்த பின் அழிவுகள் ஏற்படும் என்பதைக்கூட...

ஆனால் அதுவும் யாரால்?? ஏற்படுமென்றால்?? மனிதர்களால்.

மனிதா!! நீ திருந்து.... காலம் திருந்திவிடும்....

அப்படியில்லை என்றால் நீ திருந்தவில்லையென்றால் காலமும் திருந்தாது... சொல்லிவிட்டேன்...


இவற்றுக்கும் ஒவ்வொரு பாடமும் இதையன்றி கூற...
நம்தனை இயக்குபவர்கள் இறைவன் என்றால் ஆனாலும் இதை தன் உணர உணர நிச்சயம்..



 ஓர் பிள்ளையை இயக்குபவன் தாய். இயக்குபவன் தன் தந்தை அதற்கும் மேலாக இயக்குபவன் தெரியும் தெரிந்து கொள்ளுங்கள் இதையென்றெல்லாம்...

தன்னை அறிந்து கொள்க!!! என்றெல்லாம் யாங்கள் பல வாக்குகளிலும் செப்பி விட்டோம்...

தன்னை அறியாதவாறு ஒன்றும் நடக்கப்போவதில்லை!!!

நடக்கப்போவதில்லை அப்படி நடந்து விட்டாலும் அதை எளிதில் இறைவன் பறித்துக் கொள்வான்...

இதனால்தான் சொல்கின்றேன்.... பக்தி என்ற பாதையை அனைத்து நலன்களையும் கொடுக்கும்.

கொடுக்கும்!!! இன்னும் பல வாக்குகளோடு சித்தர்களும் இனிவரும் காலங்களில் நல்வழி படுத்துவார்கள்!! நல்வழி படுத்துவார்கள்!!

 வாக்குகளும் செப்புகின்றேன் படிப்படியாகவே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

4 comments:

  1. வாக்கின் முடிவில் காக புஜண்டர் மகரிஷி ஆசி என்று கூறுவதில்லை. அவர் மனிதர்கள் மீது கோபமாக உள்ளார் போல. இறைவா அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்து சித்தர்கள் சொல்வதை தவறாமல் கடை பிடிக்க ஓவ்வொரு அடியவர்களும் முன் வர வேண்டும். நற்பவி நற்பவி நற்பவி

    ReplyDelete
  2. We are very much blessed to know about the details of the ancient temples. And also we are trying to visit each and every temple. Thanks o lot for sharing the nadi details .

    ReplyDelete
  3. ஸ்ரீ காகபுஜண்டர் திருவடிகள் போற்றி.
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.

    ReplyDelete
  4. Translation:
    https://drive.google.com/file/d/1dFKOcKsTyPbmbL4Ctb0iMvim-it0abr4/view?usp=share_link

    ReplyDelete