​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 30 May 2022

சித்தன் அருள் - 1144 - அன்புடன் அகத்தியர் - பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் முருகர் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில்

காசியிலிருந்து கங்கை தீர்த்தம்
நேபாளத்திலிருந்து கண்டகி நதி தீர்த்தம்
ராமேஸ்வரத்திலிருந்து 21 ஆழி தீர்த்தம்
முக்கூடல் சங்கமத்திலிருந்து நதி தீர்த்தம்
முடிவாக
கிரௌஞ்சகிரியிலிருந்து விபூதி(பால்கட்டி)
அகத்தியர் ஜீவநாடி

போன்றவையுடன், திரு.ஜானகிராமன், அபிஷேகத்துக்காக, பாலராமபுரம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலுக்கு வந்திருந்தார். அபிஷேக பூஜைகளுக்குப்பின் நாடி வாசித்தார்.

கேள்வி ஒன்றுதான், இந்த கோவிலின் புராண வரலாறு தெரிய வேண்டும். இந்த கோவிலுக்கும், எரித்தாவூர் முருகர் கோவிலுக்கும், அனந்த சயனம் பத்மநாபா சுவாமி கோவிலுக்கும் உள்ள தொடர்பை, அறிய வேண்டும் என நிர்வாகத்தினர் கேட்க, அகத்திய பெருமான் வருவார் என எதிர்பார்த்திருக்க, ஓதியப்பர் வந்து வாக்கு உரைத்தார். 

வாக்குரைத்தவர் - ஓதியப்பர்
இடம் - அகத்தியர் கோவில், பாலராமபுரம்!

என் தாயை, தந்தையை பணிந்து நாட்டுகின்றேன் வாக்குகளாக, வேலனவன். அகத்தியனை பற்றி எவ்வாறு அவன்தனே கூறுவான்? அவன்தன் புகழுக்கு எவ்வாறு அதிபதி? புகழை அவன்தன் வாயால், நிச்சயம் உரைக்க மாட்டான். அகத்தியனை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இல்லை என்பதற்கிணங்க, பலப்பல மனிதர்களையும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றான், இரவு பகலுமாக. ஆனாலும், தாய் தந்தையரும் இவ்வாறு கூறினார்கள்.

"மகனே! அகத்தியா! எவ்வாறு, மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றாயே, ஆனாலும், மக்களோ, தன தன வழிப்பாதையில் சென்று மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை, இதனைத்தான் என்னிடத்தில் கூறினான்.

முருகா! நீயும் நானும் ஒன்றா? ஒன்றாய் இருப்பதற்கு வழி கொடு என்று. ஆகவே, இது அகத்தூயனா, நானே தானா, என்று யாரும் உணர முடியாது, இத்தலத்தில். இத்தேசத்தில், ஒரு காலத்தில், மக்கள் பாடுபட கொடுமைகள் நிகழ்ந்தது. கொடுமைகள் நடந்ததால், அங்கும், இங்கும் திரிந்தனர் மக்கள். வாழத்தெரியாமல், பின் பல மலைகளிலும் ஏறி, மக்கள் தம் உயிரை காத்துக் கொண்டனர். இதனை அறிந்த அகத்தியனோ மனது வருந்தினான். இவ்வாறு மக்களும், உண்ண உணவில்லாமலும், நல்லவர்கள் கூட மறைந்து வாழ்வதை கண்டு தந்தைக்கு உத்தரவிட்டான்.

"ஈசா! அப்பா! மக்கள் எல்லோரும், நல்லவர்கள் கூட, எவ்வாறு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்களே!" என்று.

ஆனாலும் ராசனோ "இவையன்றி, அறிவதற்கு ஒன்றும் இல்லை. தான் தான் கர்மத்தை தான் தான் அனுபவிக்க வேண்டும்" என்று இணங்க மறுத்துவிட்டான்.

அகத்தியனோ, "இல்லை, இதற்காக யாம் என்ன செய்ய வேண்டுமோ அதை யாம் செய்வோம். எந்தனுக்கும், தாய் தந்தையர், பலப்பல சக்திகளை கொடுத்து விட்டனர். அதனை பயன் படுத்திக்கொண்டு மக்களை காப்பாற்றினான். கூட்டங்களை சேர்த்தான். பின் என்னிடத்தில் அகத்தியன் வந்தான். வந்தான், எதை ஒன்றையும் கூறுவதற்கு?

"முருகா, தாய் தந்தையும் அமைதியாக இருக்கின்றனர். நீயாவது வா! என்று கூற, யானும் வந்துவிட்டேன், அகத்தியனுக்கு, உதவிகரமாக. உதவிகரமாக வந்துவிட்டு, எப்படியோ பல மக்களையும் காத்துவிட்டேன். இதற்க்கு காரணம், அகத்தியனே என்று. அதனால், பல மக்களும் உயிர் பிழைத்தனர். இத்தேசத்தில் வந்து வந்து, பல விஷயங்களையும் கணித்து, கணித்து பல மக்களையும் காத்துக் கொண்டிருக்கின்றான்.

அனுதினமும் வரும் காலம், பங்குனி, சித்திரை, வைகாசி. அனுதினமும் வருவான்.

வரும் நேரம், என்னையும் அழைத்துக் கொண்டான். "முருகா, மக்கள் இங்கு எவை என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். ஆனாலும் ஒவ்வொரு யுகத்திலும் கூட, எவை என்று கூறும் அளவுக்கு, அதிசயங்களை நிகழ்த்தினேன். ஆனாலும் கூட, மனிதர்களுக்கு யான் செப்பவில்லை. இங்கு, பங்குனி, சித்திரை, வைகாசியில் மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என, என்னையும் பணித்துக்கொண்டான்.

ஆனாலும் இவை அறிந்து, "அகத்தியர், கலியுகத்தில், மனிதர்கள், இவை எல்லாம் ஏற்க மாட்டார்கள். நீ சொன்னாயே, ஒரு வார்த்தைக்காக யான் வருகின்றேன். ஆனாலும், வார்த்தைக்காக அல்ல, அன்புக்காகவே வருகின்றேன். ஆனாலும், பல அதிசயங்களை, உன்னாலும் நிகழ்த்த முடியும். எம் தந்தைக்கு சமமானவன் நீயே. ஏதும் நிகழ்த்த முடியும். ஆனாலும், சாதாரண மனிதனாக அன்பை காட்டி அழைக்கின்றாயே, அதற்குத்தான், யான் பணிந்தவன். இதை மக்கள் அனைவரும் உணரட்டும். அதனால் கூறுகின்றேன், அனைவரும், இங்கு உட்கார்ந்து இருப்பவர்களும், ஒவ்வொரு, நலத்துக்காகத்தான் கேட்க அமர்ந்திருக்கிறார்கள். ஆனாலும், இறைவனைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. தனக்கே தானம் வேண்டும், தன் தொழில் சிறக்க வேண்டும். இவ்வாறு நினைத்தால், எவ்வாறு நாங்கள் செய்வோம். அதனால்தான், அன்பை காட்டு. அன்புக்குரியவன் அகத்தியனே என்பேன். அகத்தியரின் அருளை பெற வேண்டும் என்றால், நிச்சயம், அன்புதான் வழி. மற்றவை எல்லாம் செல்லாது. ஆனால் அன்பை காட்டினாள், என்ன வேண்டும் என்று கூற, அகத்தியன் நடத்திக்காட்டுவான்.

ஆனாலும், எது என்று கூறும் அளவுக்கும் கூட எந்தனுக்கும் ஓர் உதவி செய்தான், அகத்தியன்.

யான், என் பக்தர்களுக்கு கட்டங்கள் வரும்போது, பிரம்மாவிடம் சண்டையிட்டேன். சண்டையிட்டதை கண்டா பிரம்மா "முருகா உன்னால் முடிந்ததை பார், என்னால் முடிந்ததை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.

ஆனாலும் நான் கதி கலங்கினேன். இப்படிப்பட்ட என்னை பிரம்மாவும் இப்படி சொல்லிவிட்டானே. எதை என்று கூற? பின் "நீ பார்த்துக்கொள், யான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறி மௌனமாக சென்றேன்.

யானும் அமைதியாக உட்கார்ந்தேன். உட்கார்ந்து யோசித்தேன். பிரம்மா விதியை சரியாக எழுதுபவன். அவனிடத்தில் சண்டை இட்டேன்.

அந்த நேரத்தில் ஒரே யோசனை. அகத்தியன் மீதே.

அகத்தியனை நம் பக்கத்தில் உட்கார வைப்போம், என்ன தான் சொல்லப் போகிறேன் என்று?

ஆனாலும், பின் மனதார அகத்தியா என்றழைத்த உடன் வந்துவிட்டான்.

அதும் "அடியேன்! வந்துவிட்டேன்! முருகா" என்று கூட.

ஆனாலும் என்னை விட சக்திகள் அகத்தியனுக்குத்தான் உண்டு. பார்த்தீர்களா! இப்பொழுது கூட புரிந்து கொண்டிருப்பீர்கள். அனைத்தும் தெரிந்தவன், ஏதும் பேசமாட்டான்! இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடியேனுக்கு உத்தரவு கொடு என்று.

நான் பிரம்மாவிடம் சென்றேன்.  மக்களை பல பல துன்பத்திலிருந்தும், மாற்றி அமைக்க. ஆனாலும் இதை யான் கோபமாக கூறியதும், பிரம்மாவும் கோபமாக எதை என்று கூறிவிட்டான். அகத்தியர் நீ உணர்ந்துகொள்! என்று கூட.

"அப்பனே முருகா! இவை எல்லாம் பேசக்கூடாது! விளக்கங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதிப்பு உண்டு. அதை நிச்சயம் நீ ஏற்கத்தான் வேண்டும்! அதனால், நீ சொல்லியது தவறே. கோபங்கள் கூடாது என்பேன். அதனால், திரும்பவும் பிரம்மாவிடம் செல்வோம்."

சென்றோம், நாங்கள் இருவரும்.

ஆனால், ப்ரம்மாவோ, என்னை கண்டுகொள்ளவே இல்லை. அகத்தியா, அகத்தியா! என்று முதலில் அகத்தியனைத்தான் அழைத்தார். என் சீடன் அகத்தியன். இப்பொழுது புரிந்து கொண்டு விட்டீர்களா. குருவை மிஞ்சிய சீடன், அகத்தியன். எனவேதான், அகத்தியனை மிஞ்சிய சீடர்களைத்தான், அகத்தியனுக்கு பிடிக்கும். சொல்லிவிட்டேன். அதனால் தான், பல ஏமாற்றக்காரர்களும் இப்படித்தான் அகத்தியனை சீடனாக எண்ணிக்கொண்டு யான்தான் குரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் ப்ரம்மா முதலில் சொன்னது "அகத்தியா, அகத்தியா!" என்று. யானும் மனம் கலங்கினேன். யானும் இவை போன்று பல பட்டங்களை பெற்றவன். ஆனால் அகத்தியனோ, எவை என்று கூற, அகத்தியனுக்கே பல மரியாதைகள். ஆனாலும் உணர்ந்து கொண்டேன்.

"என்ன அகத்தியன்? எம்மை காண வந்தீர்?" என்று பிரம்மா கூற,

ஆனாலும், அனைத்தையும் அறிந்த அகத்தியன் பிரம்மாவிடம்,

"ஏனப்பா! கோபங்கள்!"

ஆனாலும், பிரம்மாவும் "இவ்வாறு செய்து விட்டதற்கு இணங்க, யான் செய்தது தவறா? அவர் செய்வது தவறா? என்று நீயே கேட்டுப்பார், ஆனாலும் எமக்கும் கோபம் வந்துவிட்டது.

எவை என்று கூற, "எம்மாலும் அனைத்தும் நடத்த முடியும்" என்று யான் கூற

"எம்மாலும் முடியும் என்று பிரம்மா" கூற, வாக்கு வாதங்கள் முற்றிவிட்டது.

ஆனாலும் அகத்தியன் "நில்லுங்கள், இவ்வாறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலே, எவ்வாறு உண்மை நிலை அறிய முடியும்?" என்றார்.

இருவரும் சண்டையிட்ட பொழுது, அகத்தியன் தான் இருவரையும் நிறுத்தினான், "முருகா! முருகா! என்றழைத்து.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்! 

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete
  2. ஓதியப்பர்:-

    என் சீடன் அகத்தியன். இப்பொழுது புரிந்து கொண்டு விட்டீர்களா. குருவை மிஞ்சிய சீடன், அகத்தியன். எனவேதான், அகத்தியனை மிஞ்சிய சீடர்களைத்தான், அகத்தியனுக்கு பிடிக்கும். சொல்லிவிட்டேன். அதனால் தான், பல ஏமாற்றக்காரர்களும் இப்படித்தான் அகத்தியனை சீடனாக எண்ணிக்கொண்டு யான்தான் குரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்

    ஓதியப்பர் திருவடிகள் போற்றி.
    அகத்தியர் திருவடிகள் போற்றி. ஓம் நமசிவாய சிவாய நமக

    ReplyDelete