​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 17 May 2022

சித்தன் அருள் - 1136 - அன்புடன் அகத்தியர் - சங்கரலிங்கம் ஆலயம், சங்கேஷ்வர்!









30/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் .சங்கரலிங்கம் ஆலயம். 
சங்கேஷ்வர். 
பெல்காம் மாவட்டம் 
கர்நாடகா. 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து உரைக்கின்றேன் அகத்தியன்.

அப்பனே நலமாக நலமாக அப்பனே இதையன்றி கூற இன்னும் சிறப்புக்கள் மிகும் என்பேன் இத்தலம்.

இத்தலம் வரும் காலங்களில் அப்பனே எவையெவை என்று கூற ஆதிசங்கரன் இதையன்றி கூற அப்பனே இங்கு வந்து வந்து பல பல பல வழிகளிலும் அப்பனே இங்கே தங்கி எதையன்றி கூற....ஆனால் இவையென்று கூற பன்மடங்கு பக்திகள் இறைவன் மீது...

இறைவன் மீது பக்தி கொண்டு இவையன்றி கூற இங்கே ஈசனும் வரவேண்டும்....இவையன்றி கூற பிரம்மாவும் வரவேண்டும்.. பின் விஷ்ணுவும் வரவேண்டும் என்று கூட அவந்தன் இங்கே தியானங்கள் மேற்க்கொண்டான். 

எதையெதை என்று கூற அதனால் பின் இவந்தனுக்கு பல தொந்தரவுகள் வழங்கப்பட்டது.எதையன்றி கூற பின் பக்கத்தில் உள்ள எதை என்று புரிந்து கொள்ளாத அரசர்களும் பல பல பின் செல்வந்தர்களும் இவந்தனுக்கு இவை என்று கூற பல தொல்லைகள் பல தொல்லைகள்  எதையன்றி கூற... அப்படியாயினும்  எதையென்று கூற...யான் எதையன்றி கூற.... 

இறைவா!!! உன் மீது பக்தி கொண்டேன் அதனால் எவ்வகையான மனிதர்கள் வந்தாலும் அதை நிச்சயமாய் எவையென்று கூறாக அளவிற்கும் கூட என்னை எதிர்த்தாலும் கொன்றாலும் இங்கேயே தவம் செய்வேன் என்று கூட....

ஆனாலும் இதனையும் பிரம்மா விஷ்ணு சிவன் இவையன்றி இவர்களும் பார்த்துக்கொள்ள ஆனாலும் இதனை மறுப்பதற்கு மறுப்பதற்கு என்றெல்லாம் பின் ஆதிசங்கரன் பின் தவத்தை மேற்கொண்டான்

பல மனிதர்கள் பல அரசர்கள் இதையன்றி கூற இவந்தனுக்கு தொந்திரவுகள்... இவையன்றி கூற... இவந்தனை அடித்து..... ஆனாலும் நிற்கவில்லை.... 

நமச்சிவாய!!!!!!!!.....  இவையன்றி கூற நாராயணா!!!!!!! பிரம்மா!!!!!! இதையன்றி கூற.... உரைத்துக்கொண்டே இருந்தான். 

ஆனால் இதையன்றி கூற திடீரென்று மூவரும் இங்கு வந்து இறங்கினர்.

பின் இவையன்றி ஆனாலும் மகிழ்ச்சி!!!! மகிழ்ச்சி என்பதைப்போல் இதையன்றி....இவற்றையன்றி என்று கூட மகிழ்ச்சியில் ஆழ்ந்தான் ஆதி சங்கரன்.

என் இறைவனே!!! பெரியவன்!!!! இவ்வுலகத்தில்!! எதையன்றி கூற....

ஆனாலும் ஆதிசங்கரனை எவ்வாறு என்பதைக்கூட... ஒன்றும் செய்ய முடியவில்லை.இதுதானப்பா!!!! எவையன்றி கூற அதனால் அப்பனே எதையெதை என்று கூறுவதாலும் எவையென்று விளக்கங்கள் கூறுவதாலும் ஒன்றும் அறிவதற்கு ஒன்றுமில்லை.

அதனால் இறைவன் மீது பக்தி கொண்டால் நிச்சயம் இறைவனே வழிகாட்டுவான் என்பதற்கு உரிய சிறந்த திருத்தலம் ஆக உள்ளது இவையன்றி கூற. 

இதனால் எவை எதையன்றி கூற ஆனாலும் பல செல்வந்தர்கள் இவனை எதையன்றி  கூற... அடித்தார்களே!!!!!  எதையன்றி கூற....சிவாஜி(சத்ரபதி சிவாஜி) இவந்தனை எவ்வாறு என்பதையும் கூட ...பின் பின் இவையன்றி கூற.. புலவர்களிடம் வைத் இவனை ஆட்கொள்ள நினைத்தார்கள் ஆனாலும் முடியவில்லை .

அதனால் பின் மாபெரியமன்னன்(சிவாஜி) அவந்தனும்.. இவந்தனை பின் .இங்கே வணங்கி... இவ்வளவு திறமைகளா!!! இன்று கூட பல பரிசுகளும் அளித்தான்.

ஆனாலும் அப் பரிசுகளை எல்லாம் பின் எதையென்றும் கூற  பின் இவையென்றும் கூற ஆதிசங்கரன்...இல்லை!! யான் இந்த பரிசுகளை எல்லாம் வைத்து எதை செய்யப்போகின்றேன்!! எவை பின் ... பரிசுகள் வேண்டாம்....பின் எங்கெங்கு செல்கின்றேனோ!!! அங்கங்கே ஸ்தலங்கள் அமைத்தால் போதும்... என்பதைக்கூட பின் மன்னனை வேண்டிக் கொண்டான்.

ஆனாலும் மன்னனோ இதையன்றி கூற... ஆனாலும் விடவில்லை...

இவையன்றி கூற.... ஆம்!!! சரி!!!.... 

இதனை என்று மறுப்பதற்கு ஒன்றுமில்லாமல் இதை இதை என்று கூற சரி பின் உன் இறைவனே பார்த்துக்கொள்வான் என்பதைக்கூட....

அதனால் ஆங்காங்கு பின் பல அதிசயங்களை நடத்தினான்.ஆதிசங்கரன்.

இதையன்றி கூற இவையின் பிற.. பிற பிற தலங்களுக்கும்.... எதையன்றி கூற பின் இங்கே... இதனையென்றும் கூற... சில அனுபவ சக்திகள் பிறக்கும். பின் ... சங்கரனுக்கு... இதனால் அங்கேயே பின் தங்கி உறங்கி உறங்கி அங்கே தலங்களை ஏற்படுத்திக் கொண்டான் என்பது...

ஆனாலும் இதையன்றி கூற இங்கே தலங்களை அமைத்தால் பல சூட்சமங்கள் காணப்படும் என்பதைக்கூட அறிந்ததே!!!

அதனால் அங்கங்கே அமர்ந்து அமர்ந்து அமர்ந்து அமர்ந்து பின் தியானங்கள் செய்து பல சூட்சமங்களாக இறைவனை வரவழைத்து பின் இறைவன் எதையன்றி கூற...பின் யார்? மூலம் எதனைச் செய்ய வேண்டும்?? என்பதை கூட உத்தரவிட்டு செய்யவைத்தான் பல திருத்தலங்கள் அப்பனே.

இவையன்றி கூற காட்சியளித்த ஸ்தலம் அப்பனே இவையன்றி கூற பிரம்மா விஷ்ணு எதையன்றி கூற பின் ஈசன்... இதையன்றி கூறுவதற்கும் ஆனாலும் பல மனிதர்களுக்கு ஒன்றும் தெரியாமலே சென்று கொண்டிருக்கின்றது இவ்வுலகத்தில்.

அதனால் அப்பனே பல தோஷங்கள் இங்கே நீங்கும் என்பேன் அப்பனே. இவ்வாறு என்பதையும் கூட சிறந்த பக்தியாக விளங்குவதற்கு சான்றாக உள்ளது என்பேன் அப்பனே.

அதனால் பல குற்றங்கள் நோய்கள் தீரும்.எதையெதையன்றி கூட. 

அப்பனே இங்கே எதையன்றி வருபவர்கள் இந் நீரில் (இரண்யகேசி நதியில்)  நீராடி அப்பனே நன்முறையாகவே... பிரம்மா விஷ்ணு வை( மனதில் தியானித்து)மேற்கொண்டு நல் விதமான மந்திரங்களை ஓதி ஓதி எதையன்றி கூற தன் மனதிற்கு...ஏற்றாற்போலே அன்பு மூலமே பின் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டும்.

இதையிதையன்றி கூற ஆனாலும் இவையன்றி  கூற விஷ்ணு என்று... பின்  பிரம்மா... என்று... இதையன்றி கூற பின் நமச்சிவாயா...!!! என்று கூட....

இவைகளும் ஒரு மந்திரமே !!!அன்பால் அழைத்தால்.!!!

இவையன்றி கூற இங்கே நீரில் மூழ்கி(நீராடி) இவையின் கூட பிரம்மா விஷ்ணு நமச்சிவாயா என்று அழைத்துக்(மனதில் கூறிக்கொண்டே) கொண்டே வந்து பின் இங்கே நல் முறையாகவே பின் எதையென்று கூட... மனதில் நினைத்த்துள்ளோமே!!... ஈசனிடம்..பின் பிரம்மாவிடம்... இதையன்றி கூற பின் வரும் யோகங்கள்... பின் விஷ்ணு... எதையென்று என்று கூற கூற இன்னும் பல பல வழிகளிலும் ஞானம் பிறக்கும்.

இதையன்றி கூற அதனால் பின் ஆதிசங்கரனே எங்கு? எதனால் ?என்பதையும் கூட நிரூபித்தும் நிரூபித்து பார்க்கும் அளவிற்கு கூட ஒன்றும் இல்லை. ஒன்றுமில்லை என்பதை ஏற்று வகையான பல வழிகளிலும் இங்கே இதனையும் என்று கூற முடியவில்லை... இங்கேயிருந்து.. மகாலட்சுமி (கோலப்பூர் மகாலட்சுமி ஆலயம் 60 கிமீ தூரத்தில் உள்ளது) அங்கே செல்லும்பொழுது எதைன்றி கூற இத்தலத்தை அமைத்து சென்றான். அங்கே... இதையன்றி கூற பல திருத்தலங்கள் அவந்தன் உணர உணர....

இதைத்தான் செப்பினேன்!!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பனே இதையன்றி ...இவையன்றி கூற அப்பனே இன்னும் ஒவ்வொரு சிறப்பையும் ஒவ்வொரு சித்தர்களும் சொல்வார்கள் அப்பனே.

நியாத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டவன்!!!! இவையன்றி அதனால்தான்  அப்பனே இறைவன் மீதே பற்று கொண்டு பாசம் கொண்டு அன்பு கொண்டு இதையன்றி கூற... இறைவா இறைவா என்று சொல்லிக்கொண்டிருந்தான் ஆதிசங்கரன்.

இதனாலே இறைவன் பலமாக இறங்கி விட்டான் அப்பனே. பல ஆசீர்வாதங்களையும் தந்துவிட்டான்.

ஆனாலும் எதை?? இத்தலம் எவையென்று கூற அறிந்தான்.. பின் ஆதிசங்கரன். இத்தலத்தை பின் சூறையாடுவார்கள் மனிதர்கள் எவை என்று கூற.... ஆனாலும் அப்பனே இதையென்று உணர்ந்து இவையன்றி ஈசனிடம் முறையிட்டான்.. அப்பனே.. 

இதை யான் முடித்து விட்டேன் ஆனாலும் இதை இதையன்றி கூற இதனையும் இவையன்றி கூற பின் கலியுகத்தில் அழிந்து போகுமே!?? யான் என்ன செய்வது???? இதையன்றி கூற... 

ஆனாலும் இதனை அழிப்பவர்கள்...முடியாது என்பேன். இதன் எதையென்று கூற ஒரு சூட்சுமத்தை சொல்லிக் கொடுத்தான் ஆதிசங்கரருக்கு .இவையன்றி கூற நாராயணன்.. எதையென்று ஆனால்..அதை வைத்து நல்முறையாகவே இதையன்றியும் கூற அப்பனே... அதையும் (லிங்கத்தின்) அடியில் வைத்து நல்விதமாகவே அமைத்துவிட்டான் ஆதிசங்கரன்.

இதனால் அப்பனே இத்தலத்தை எதனாலும் எவ்வகையான மனிதர்களாலும் பின் நிச்சயம் அப்பனே இதையன்றி கூற அழிக்கவும் முடியாது என்பேன்.அப்பனே சொல்லி விட்டேன். 

இதையன்றி கூற ஞானங்கள் உண்டு உண்டு என்பதற்கிணங்க அப்பனே இன்னும் சிறப்புக்கள் உண்டு... மாமனிதர்கள் எதையெதை என்று கூற ஆனாலும் ஆதிசங்கரனை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டனர் அப்பனே.

அதனால் அப்பனே இதையிதையன்றி கூற மகான்கள் இவை எதையன்றி கூற  மாமனிதர்கள் சிறப்புமிக்க புலவர்கள் எல்லாம் இத்தலத்தை வந்து வழிபட்டனர்.இதனால் பேரும் புகழும் அவர்களுக்கு வந்தது என்பேன்.

பொருட்செல்வமும், அருட்செல்வமும்... வந்தது என்பேன்.

அப்பனே இன்னும் சூட்சுமங்கள் ஆக அப்பனே பின் வந்து தான் செல்கின்றார்கள் என்பேன். அப்பனே இறை பலத்தோடு. எவ்வாறு என்பதைகூட... 

பிள்ளையோனின்(கணபதி) அருள் பரிபூரணமாக....

அப்பனே பல தோஷங்கள் நீங்குவதற்கு பல ஆலயங்கள் நிச்சயம் தேடி செல்ல வேண்டும்... தேடிச் செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.

எதையெதை என்று உணர்வதற்கு உணர்வதற்குள் இல்லையப்பா.... ஓடி விடுகிறது வாழ்க்கை... 

அப்பனே இன்பத்திலே சில காலங்கள் அப்பனே துன்பத்திலே சில காலங்கள் அப்பனே...இதை எவை என்று கூற.. சில காலங்கள் அப்பனே தான் ஏற்படுத்திக்கொண்ட சொந்த பந்தங்களுக்காக.. பின் இதனையென்று.. அறியாத மனிதன் அப்பனே வயது கடந்து போகின்றான் அப்பனே இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லாமலே போய்விடுகின்றது அப்பனே...

அதனால் பக்திக்குள் நுழைந்தால் அப்பனே இறைவன் அழைத்துச் செல்வான் நிச்சயமாக சொல்கின்றேன் அப்பனே.

அதனால் அப்பனே சில திருத்தலங்களுக்கும் அப்பனே இதையன்றி கூற அனைத்தும் அப்பனே சொல்கின்றேன்... எதையன்றி கூற... அனைத்திற்கும் தேடிச்சென்று போக முடிகின்றது... உன்னால் அப்பனே ......

திருத்தலங்களுக்கு செல்லமுடியவில்லையே அப்பனே.... பரிதாபத்திற்குரியது அப்பனே!!!! எதையென்று கூற... 

பல சித்தர்களும் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே...

இத்தலத்திற்கு எதை எதையென்று கூற அப்பனே ஆனாலும் இவையன்றி யாங்கள் சொல்வோம் அப்பனே ஆனாலும் சில மனிதர்கள் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிடுவார்கள் அப்பனே....

அதனால் யார் ? யாருக்கு ?? சொல்ல வேண்டும் என்பதை கூட யாங்கள் அறிவோம் அப்பனே...

அதனால் நிச்சயம் எதையெதை என்று கூற சித்தர் வழியில் வருபவர்களுக்கு நல் விதமாகவே செப்புவோம் அப்பனே!!!!

கலியுகத்திலும் அப்பனே கஷ்டங்கள் வரும் என்பதை கூட ஏற்கனவே கணித்து விட்டார்கள் அப்பனே... இதனால் எவையன்றி கூற அதனால் சிலசில கோயில்களுக்கும் நல்விதமாகவே சென்று வழிபட்டு வந்தால் அப்பனே சிறப்புக்கள்!!!  பின் சிறப்புக்கள் மிகுந்து காணப்படும். அப்பனே...

அதனால் இத்திருத்தலமும் அப்பனே... எதை பின் நீராழி இவையன்றி கூற(மழைக்காலங்களில் இரண்யகேசி நதியில் நீர்பெருக்கு ஏற்பபட்டு ஆலயத்தை வெள்ளம் சூழும்) அழிவுகளாக வரும் பொழுது அப்பனே இங்கு எதையென்று குறிப்பிடும்பொழுது அமைதியாகவே தியானங்கள் செய்தால் போதும்.

அப்பனே பல தரித்திரங்கள் நீங்கும். என்பேன் அப்பனே. 

இங்கு வழிபட்டு நல்விதமாக அப்படியே செல்லுதல் வேண்டும் என்பேன் அப்பனே பின் மகாலக்ஷ்மி தேவி.              

மகாலஷ்மி தேவியின் அருளையும் பெற்று விட்டால் அப்பனே ஒன்றும் இல்லை ...

அப்பனே இதையன்றி கூற அப்படியே செல்லுதல்  வேண்டும் ஐயனே!!!  பின் இதையன்றி கூற மேலே இருக்கும் ஓர் ஜோதிர்லிங்கனை அப்பனே இவந்தனையும் பார்த்து விட்டால்.. அப்பனே போதுமானது என்பேன் அப்பனே. 
(கர்நாடகாவில் சங்கேஷ்வர் சங்கரலிங்கம் தரிசனம் அடுத்து கோலப்பூர் மகாலட்சுமி அடுத்து பீமாசங்கர் ஜோதிர்லிங்கம் இவை மூன்று திருத்தலங்கள் தரிசனம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். சங்கேஷ்வர் யாத்திரையில் ஒரே நேர் வழியில் பெங்களூரு புனே எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையில் கோலப்பூர் மகாலட்சுமி ஆலயம் உள்ளது... பீமாசங்கரம் புனே அருகில் உள்ளது) 

இதையிதை என்று கூற பீமாசங்கர் என்பார்களே!!!  இதையன்றி கூற அவந்தனையும் பின் இதையன்றி கூற அங்கேயும் முப்பெரும் தேவர்களும் இதனையும் சரியான முறையில் கணித்தால் அப்பனே ஒன்றும் இல்லை அப்பனே...

இவையன்றி கூற அதனால் அப்பனே அனைத்தும் தேடிச் செல்லும்  உந்தனுக்கு திருத்தலங்களையும் தேடவேண்டும் அப்பனே..

தேடிப்பார்!!!!

இதையிதையென்று கூற எப்பொழுது செல்ல வேண்டும் என்பதைக்கூட அதனால் அப்பனே சிறப்புக்கள் மிகும்.

ஆனால் பந்த பாசங்களில் மனிதன் மாட்டிக் கொண்டு அப்பனே திரிந்து கொண்டு இருக்கின்றான்.... 

ஆனாலும் அப்பனே முதலில் இறைவனை தேர்ந்தெடுத்து திரிந்துகொண்டிருந்தால்..... அப்பனே பந்த பாசங்கள் அப்பனே தானாகவே இறைவன் ஏற்ப்படுத்துவான். எப்படி ?இவந்தனுக்கு எப்படி ?செய்தால் நன்று என்று. !!!! அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

இன்னும் சிறப்புக்கள் மிகுந்து காணப்படுகின்றது அப்பனே.. திருத்தலங்கள் பல இவையெல்லாம் அவற்றிற்கெல்லாம் மனிதனால் செல்ல முடியவில்லை அப்பனே.

ஏனென்றால் மனிதன் அப்பனே இன்பம் இன்பத்திற்காகவே அலைந்து கொண்டிருக்கிறான்... எப்போது இன்பம் கிடைக்கும் பணத்தின் மூலமா?? சுகத்தின் மூலமா?? அப்பனே இவை என்று கூற பணத்திற்காகவே அப்பனே பின் தேசம் விட்டு தேசம் அப்பனே  இவையன்றி அப்பனே...

எதையன்றி கூற அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் இவ்வாறெல்லாம் செல்கின்ற பொழுது ஏன் உன்னால் திருத்தலங்களுக்கு நாட முடியவில்லை??? 

கர்மா!!  அப்பனே அனைத்தும் சம்பாதித்து விட்டு கடைசியில் அப்பனே இறைவனிடத்தில் வருகின்றாய் அப்பனே... என்ன பிரயோஜனம்??  அப்பனே!!! 

இவையன்றி கூற அதனால் தான் அப்பனே திருந்திக்கொள்ளுங்கள் ....

ஏனென்றால் கலியுகத்தில் அப்பனே திருடர்கள் தான் அதிகம் என்பேன் அப்பனே.

பக்தி பக்தி என்று சொல்வான் அப்பனே இவை என்று கூற மறைமுகமாக அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றான்.

யான் உலகத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றேன்... சித்தர்களும் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.

இவையன்றி கூற அதனால் அப்பனே திருந்திக் கொள்ளுங்கள்... !!!

ஒவ்வொரு திருத்தலத்தை பற்றியும் அப்பனே...இதையன்றி கூற 

அப்பனே... யான் சொல்வதை அப்பனே ஒருவராவது,!!! இருவராவது!!! கேட்டாலே போதுமானது அப்பனே....

அவந்தன் பல மனிதர்களுக்கு உரைத்து விடுவான் அப்பனே.. 

நல்விதமாக நிச்சயம் எவ்வாறு மனிதனே மனிதனுக்கு பல அறிவுகள் இருக்கும் பொழுது... யாங்கள் சித்தர்கள் அப்பனே எப்படி ?எதனை காட்டுவது!!! எப்படி ஈட்டும் பொழுது ஈட்டுவதற்கான வழிகள் எப்படி இருக்கும் என்பதைக்கூட யாங்கள் அறிவோம். 

நிச்சயமாய் அப்பனே என் பக்தர்களை எதையெதை என்று கூற சரியான பாதையில் ஆனாலும் அப்பனே முடியாதவர்கள் எவை என்று கூற ஆனாலும் அவர்களுக்கும் ஓர் இரகசியத்தை சொல்லித்தருவேன் வரும் காலங்களில்.

அப்பனே குறைகள் இல்லை!! என்னுடைய ஆசிகள் அனுகிரகங்கள் அப்பனே... நீதி நேர்மை தவறாமல் வாழுங்கள் அப்பனே... பொய் சொல்லவேண்டாம் பொறாமைகள் வேண்டாம் அப்பனே.

வீண் அப்பனே இவையெல்லாம் ...

இவையெல்லாம் அப்பனே தன்னையே அழிக்ககூடியது.. அப்பனே திருந்திக்கொள்ளுங்கள் ஏனென்றால் அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே வியாதிகள் அப்பனே மிகுந்து காணப்படும். அப்பனே... இவையன்றி கூற... எதையென்று கூறும் பொழுது கூட மனதில் கஷ்டங்கள்.. கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும்...

அதனால் தான் செப்புகின்றேன் அப்பனே பல திருத்தலங்களை பற்றியும் சித்தர்கள் செப்புவார்கள் ..அவற்றையெல்லாம் நாடி நாடி சென்று அப்பனே ...வழியை பின் எதையென்று கூற... 

முதலில் இறைவனை தேடு!!!! 

அப்பனே இறைவனை தேடிக்கொண்டால் தானாகவே அனைத்தும் வரும் என்பதை கூட யாங்கள் பல வாக்குகளையும் செப்பி விட்டோம்.. அப்பனே.. 

நல்விதமாக இங்கு வருபவர்களுக்கும் சக்திகள் பிறக்கும்... அப்பனே நல்விதமாக...மனதில் நினைத்த காரியங்கள் அப்பனே எவையென்று கூற சோதனைகள் வந்தாலும் அது நிச்சயமாய் நிறைவேறும் என்பேன் அப்பனே .

கவலைகள் இல்லை கவலைகள் இல்லை... மீண்டும் ஒரு தலத்தில் சிறப்பாக வாக்கினை விளக்குகின்றேன் அப்பனே!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

சங்கரலிங்கம் ஆலயம். 
ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சாரியா கர்வீர் சன்ஸ்தான் மடம். 
மடஹள்ளி. ஹிரண்யகேசி நதிக்கரை. 
சங்கேஷ்வர். 591313
ஹக்கேரி தாலுகா. 
தேசிய நெடுஞ்சாலை. 4. AH47
பெல்காம் மாவட்டம் .
கர்நாடகா. 
தொடர்பு எண். ஆனந்த் போற்றி 8722664000

சங்கேஷ்வர் யாத்திரையில் குருநாதர் அகத்தியபெருமான் நடத்திய அற்புதங்கள். 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

நம் குருநாதர் அகத்திய பெருமானின் உத்தரவுப்படி பல திருத்தல யாத்திரை மேற்கொண்டு... வரும் வழியில் புனே பெங்களூர் எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையில் மகாராஷ்டிரா கர்நாடகா மாநில எல்லையோரம் அமைந்துள்ளது சங்கேஷ்வர் எனும் ஊர்.

இயற்கை வளம் மிகுந்த இரணியகேசி நதியோரம் அற்புதமாக அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு செல்ல செல்லும் வழியில் மனதை மாற்றி குருநாதர் உத்தரவிட்டார்...
ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கரர் நுழைவுவாயில் உடன் ஆலயம் அற்புதமாக இருந்தது ஆலயத்துக்கு உள்ளே சென்ற பொழுது மிக கம்பீரமாக மிகுந்த சக்தியுடன் திருநாமம் சாற்றி சிவலிங்கத் திருமேனி தரிசனம்.

போற்றிகள் என அழைக்கப்படும் பூசாரிகள் இருவர் இருந்தனர் அவர்களுக்கு குருநாதர் அகத்தியரின் ஜீவநாடி வைத்து பூஜித்து தர வேண்டி கேட்டுக் கொண்டோம்.

அவர்களுக்கு தமிழ் தெரியாது அதுமட்டுமல்லாமல் ஜீவநாடி என்றால் இதுவரை அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை என்று வடமொழி மற்றும் ஆங்கிலம் கலந்து கூறினர்.

ஜீவநாடியில் பெட்டகத்தைத் திறந்து காட்ட கூறினார். நம்பிக்கை இல்லாமல் இல்லை அவர்கள் அறிந்துகொள்வதற்காக கேட்டனர்.

நாங்களும் இது குருநாதர் அகத்தியரின் ஓலைச்சுவடி பனை ஓலையில் இருக்கும் என்று கருவறைக்கு முன்பாக உள்ள ஒரு டேபிளில் வைத்து விளக்கிக் கூறிக் கொண்டிருந்தோம்.

மொழி பிரச்சினையால் அவர்களுக்கு மெதுவாக எடுத்து கூறிக் கொண்டிருந்த பொழுது ஒரு அதிசயம் நடந்தது.

கருவறையின் மேல் பெரும்பாலும் எல்லா ஆலய கருவறையின் மேல் கஜலட்சுமியின் திருவுருவ சிலை இருக்கும். ஆனால் சங்கரலிங்க கருவறைக்கு மேல் கணபதியின் திருவுருவச் சிலை இருந்தது( புகைப்படத்தில் பார்க்க.) அவருக்கு சாற்றியிருந்த ஒரு செம்பருத்தி பூ ஜீவநாடியை குறித்து விளக்கி கொண்டிருந்த பொழுது மேலிருந்து ஓலைச்சுவடி யின் மீது விழுந்தது.

அப்பொழுது போற்றிகள் இருவரும் திகைத்துப் போய் விட்டனர்... அதுவரை சந்தேகத்துடன் இருந்த அவர்களுக்கு இந்த அதிசயம் நடந்தவுடன் தொட்டு வணங்கி இதன் மகிமையை உணர்ந்து பூஜித்து கொடுத்தனர் அதன் பிறகு இந்த ஆலயத்தைக் குறித்து குருநாதரின் வாக்கையும் கேட்க விருப்பப்பட்டு  ஈசன்  முன்பாக ஜீவநாடியை வாசிக்க வைத்து குருநாதர் வாக்குகளை கேட்பதற்கு பாக்கியம் கிடைத்தது என பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்...

குருநாதர் சொன்ன வார்த்தைகளை கேட்டு முற்றிலும் உண்மை !!!சங்கரலிங்கத்தின் அடியில் சக்தி வாய்ந்த ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இந்த ஆலயத்தில் இருந்து கோலாப்பூர் மகாலட்சுமி வரை செல்வதற்கு குகை பாதைகள் உண்டு... என்று மேலும் அவர்கள் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

சங்கரலிங்கம் ஆலயத்திற்கு நூறு அடி தூரத்தில் ஸ்ரீமன் நாராயணன் ஆலயமும் உள்ளது அங்கேயும் சென்று தரிசனம் செய்யுங்கள் என்று வழிகாட்டி கொடுத்தனர் குருவின் திருவருளால் நாராயணன் தரிசனம் கிட்டியது.

அதன் பிறகு மடப்பள்ளியில் குருநாதரின் மகிமையை குறித்து சிலாகித்து பெருமையுடன்.. பக்தியுடன் பேசி மகிழ்ந்தனர்.

ஆரம்பத்தில் சந்தேகத்துடன் விசாரணை செய்த அவர்கள் மடத்தில் குருநாதர் ஜீவநாடி ஓலைசுவடிக்கு தக்க உபசாரங்கள் செய்து எங்களுக்கு அன்பாக உணவையும்  அளித்து  உபசரித்து பிரியாவிடை கொடுத்தனர். எல்லாம் குருவின் திருவருளால் நடந்த அற்புதங்கள். 

ஹிரண்யகேஷி நதிக்கரையில் அமைந்துள்ள சங்கர்லிங் அல்லது ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்யா கர்வீர் மடத்தில் சங்கர்லிங் கோவில் உள்ளது. சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட இக்கோயில், பலமான மதில் சுவர் கொண்ட பெரிய பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. ரேகா நாகரா பாணியில் கட்டப்பட்ட ரட்ட காலகட்டத்தின் பொதுவான கட்டிடம் இது. பெலகாவி பகுதியில் ரட்டஸ் ஆட்சியின் போது கட்டப்பட்ட அனைத்து கோயில்களும் ஒரே பாணியில் உள்ளன.

பிரதான கோயில் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது- ரங்கமண்டபம், நவரங்கம், அந்தரளம் மற்றும் கர்ப்பகிரகம். ரங்கமண்டபம் வழியாக கோவிலுக்குள் நுழைய முடியும், மூன்று பக்கங்களிலிருந்தும் அணுகலாம், ஒவ்வொன்றும் ஒரு தாழ்வாரத்தால் மூடப்பட்டிருக்கும். ரங்கமண்டபத்தில் நவரங்கத்திற்கு செல்லும் பெரிய வட்ட வடிவ மேடை உள்ளது.

நவரங்கத்தின் உச்சவரம்பு மலர் செதுக்கலைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு தாழ்வாரத்தின் வழியாக இரண்டு பக்கங்களிலும் திறப்புகளைக் கொண்டுள்ளது. தாழ்வாரங்களில் ஒன்று ஒன்பது சதுர வடிவில் அழகாக செதுக்கப்பட்ட உச்சவரம்பைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் வெவ்வேறு மலர் வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்த தாழ்வாரத்திலிருந்து ஒரு பெரிய கதவு ஆற்றின் முன்புறத்திற்கு செல்கிறது.

நவரங்கமானது அந்தராலத்திற்கு இட்டுச் செல்கிறது, அதைத் தொடர்ந்து கர்ப்பகிரகம் ஒரு பெரிய சிவலிங்கத்தைக் கொண்டுள்ளது.

பிரதான கோயில் கூரைகள், கதவு பிரேம்கள் மற்றும் 38 தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கருப்பு சிஸ்ட் கல்லைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. தற்போது, ​​அசல் கல் பிரகாரத்தின் (முற்றம்) ஒரு பகுதி மட்டும் அப்படியே உள்ளது, மீதமுள்ளவை செங்கல் கொத்துகளைப் பயன்படுத்தி மீண்டும் கட்டப்பட்டுள்ளன.

இக்கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. 2019 ஆம் ஆண்டில், கோயில் வெள்ள நீரில் 8 அடி வரை மூழ்கியது. பின்னர், சிகரம் வர்ணம் பூசப்பட்டது மற்றும் கதவு அடைப்புகள் பித்தளையால் மூடப்பட்டன. பிரகாரத்தின் ஒரு பகுதி சமீபத்தில் நவீன கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி புனரமைக்கப்பட்டது, ஆனால் இது ஒரு ஒட்டும் தோற்றத்தை அளிக்கிறது.

முக்கிய கோயில்களைத் தவிர, இந்த வளாகத்தின் எல்லைக்குள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சாரதாம்பா மாதா கோயில் உட்பட பல சிறிய கோயில்கள் உள்ளன.

சமண பசதி

இந்த மடத்திற்கு அருகில் ஒரு பழமையான ஜெயின் பசதி உள்ளது. இது மற்றொரு பலகோண வடிவிலான கட்டிடக்கலை ரட்டா பாணியில் உள்ளது மற்றும் ஒரு தாழ்வாரம், நவரங்கா, அந்தரளம் மற்றும் கர்ப்பகிரகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரதான ஆலயம் தரையில் இருந்து மூன்றடி உயரத்தில் உள்ளது மற்றும் கயோத்சர்கா தோரணையில் (நின்று) பகவான் பர்ஷ்வநாதரின் சிலை உள்ளது, மேலே ஒரு முக்கிய பாம்பு திருவுருவம் உள்ளது.

நவரங்கத்தில் தூண்கள் மற்றும் கூரைகள் செதுக்கப்பட்டிருந்தாலும், முற்றத்தில் புதிதாக கட்டப்பட்ட 30 அடி உயரமான மானஸ்தம்பம் மற்றும் ஒரு புதிய கோவில் உள்ளது. கறுப்பு வண்டல் மண்ணில் நின்று, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஹிரண்யகேஷி நதிக்கு அருகில், வெளிப்புற சுவர்கள் மற்றும் பிற பகுதிகள் உள்ளன. 

நாராயணர் கோவில்

அதே தெருவில் மறைந்திருக்கும் மூன்றாவது கோவில் நாராயணர் கோவில். பாபு டோரோவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட டோரோ குடும்பத்தின் தனியாருக்குச் சொந்தமான கோயில் பல தசாப்தங்களுக்கு முன்னர் சங்கராச்சாரியார் மடத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கோயிலின் முக்கிய அமைப்பும் பல கோணத் தோற்றத்துடன் ரட்ட பாணியில் உள்ளது. இங்குள்ள ரங்கமண்டபம் மூன்று திறப்புகளைக் கொண்டது. ஆனால் அவற்றில் ஒன்று சேதமடைந்த கற்றைக்கு ஆதரவாக மூடப்பட்டது. கோவிலின் உள்ளே 12 தூண்கள் உள்ளன மற்றும் ரங்கமண்டபத்தில் ஒரு சில விட்டங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ரங்கமண்டபத்தின் உச்சவரம்பு இரண்டு அடுக்குகளில் விரிவான செதுக்கல்களைக் கொண்டுள்ளது, மைய அடுக்கு எண்கோண நட்சத்திர வடிவ செதுக்கலுக்குள் மலர் வடிவத்தைக் கொண்டுள்ளது. மேற்கூரையில் புராண விலங்குகள் மற்றும் சிலைகளின் சிற்பங்களும் உள்ளன.

ஒரு  இடத்தில் , ஆண் மற்றும் பெண் தெய்வம் காளையின் மீது சவாரி செய்வதைக் காணலாம். மற்றொன்றில் ஒரு ஆட்டுக்கடா உள்ளது, மூன்றில் ஒரு பன்றி போன்ற உருவம் உள்ளது (விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் சித்தரிப்பாக இருக்கலாம்). கருவறையின் வாசலில் இரண்டு சிறிய கோபுரங்கள் உள்ளன, ஒன்று கார்த்திகேயனும் மற்றொன்று விநாயகரும்.

உட்புற அறையின் இடது சுவரில் ஹலேகன்னடாவில் ஒரு பெரிய அளவிலான கல்வெட்டு உள்ளது.லக்ஷ்மி-நரசிம்ம கோவிலை சவடத்தியின் கல்யாண சாளுக்கியர்களின் மகாமண்டலேசுவரான ரட்ட மன்னன் கர்தவீர்யா, பிரம்மபுரியின் அஷேஷ் மகாஜனுக்கு வழங்கியது மற்றும் சிக்கேஷ்வர் தேவஸ்தானத்திற்கான பண மானியம் பற்றி விரிவாகக் கூறுகிறது. இந்தச் சுவரில் புலித் தலைகளின் (வியாக்ரமுகங்கள்) உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயக சதுர்த்தியின் போது நூற்றுக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நீலகர் கணபதிக்கு (நீலகர் குடும்பத்தால் நிறுவப்பட்டது) இந்த நகரம் பிரபலமானது.

இந்தக் கோயில்கள் நமது வரலாற்றைப் பற்றி நமக்குத் தெரியப்படுத்தினாலும், அவை சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. எனவே, இந்தக் கோயில்களை, குறிப்பாக நாராயணர் கோயிலைப் பழுதுபார்த்து பாதுகாக்க வேண்டும்...இறைவன் மனது வைக்க வேண்டும்.. வேண்டிக்கொள்வோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

4 comments:

  1. ஓம் சிவபார்வதி திருவடிகள் போற்றி.
    ஓம் அகதீசாய நமஹ.

    ReplyDelete
  2. எத்தனையோ பேர் வாழ்கையில் அதிகப்படியான போராட்டங்களை சந்தித்து கொண்டு வாழ்கின்றனர் அவர்கள் அனைவரையும் காக்க அகத்திய பெருமானே நீங்கள் முன் வரவேண்டும்

    ReplyDelete
  3. Namaskaram,

    King Sivaji lived between 1630 to 1680. Adi Shannkara lived around 6th, 7th and 8th century based on various sources. Please clarify who was the king as per our Guru.

    Thanks,
    Krishna

    ReplyDelete
  4. Translation:
    https://drive.google.com/file/d/1jB7wnAcLlrcoFDqB8NAGp_2xRZey5bMf/view?usp=sharing

    ReplyDelete