​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 3 May 2022

சித்தன் அருள் - 1128 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் பெருமான் வாக்கு - துவாரகை!





22/4/2022 அன்று புலஸ்தியர் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் :
துவாரகதீஷ் ஆலயம். 
துவாரகை. 
சௌராஷ்ட்ரம் 
குஜராத் மாநிலம். 

உலகை ஆளும் மகேஸ்வரனையும் ,    மகேஸ்வரியையும் பணிந்து என் குருநாதன் அகத்தியனையும் பணிந்து வாக்குகளாக ஈகின்றேன் புலத்தியனவன்

சூட்சுமங்கள் பல பல உண்டு ,உண்டு என்பதற்கிணங்க ஒன்றுமில்லை. 

ஒன்றுமில்லை என்பதற்கிணங்க என் குருநாதன் அகத்தியனை பற்றி என்ன கூறுவது???

பிரமிக்க வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஆனாலும் சொல்கின்றேன்....

மனிதர்கள் சித்தர்களைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு முயன்றால் நிச்சயம் முடியாது தான் என்று சொல்வேன்.

சொல்வேன் என்பதற்கு இணங்க இன்னும் இன்னும் பல பல வழிகளிலும் பின் ஆனாலும் பலப்பல யுகங்களாகவே பலப்பல இன்னும் எதையென்று கூற? பின் மனிதர்கள் சித்தர்களைப்பற்றி நுழைந்தார்கள் ஆனாலும் இவை இவை என்று கூற..

ஆனாலும் எதனைப் பற்றியும் பின் தெரியாமலே மாய்ந்து மாய்ந்து மாய்ந்து மடிந்து விட்டனர்.

அதனால் எதையென்று கூற இத்திருத்தலத்தை எதனையுமென்றும் ஆனாலும் இவையென்று கூட யுகங்களாக இவைதன் கிருஷ்ணனும் எங்கே எவை என்று கூற இவற்றின் மேலே (ஆலயத்தை தாண்டி அருகில் இருக்கும் கடலில்) இன்னும் பல அதிசயங்கள் காணப்படுகின்றது காணப்பட்டே கொண்டிருக்கின்றன.

ஆனாலும் இன்னும் பல பல திருத்தலங்கள் இதன் வரிசையிலே அமைந்து அமைந்து நீண்ட தொலைவுகளாகவே இருக்கின்றது.

இருக்கின்றது என்பதற்கிணங்க இன்னும்  இவ் அலைகள் பின்(கடலில்) முன்னே சென்றால் பல பல பல பல திருத்தலங்களும் அமைந்துள்ளது என்பேன்.

அதனால் காலப்போக்கில் அதுவும் பின் அக் கடல் மட்டத்திற்கீழே தங்கி நிற்கின்றது அதனையும் நிச்சயமாய் பின் ""தர்மம் எப்பொழுதெல்லாம் பின் உயர்கின்றதோ!!! அப்பொழுதெல்லாம் நிச்சயமாய் எழுந்து நிற்கும் இதுதான் கிருஷ்ணனின் லீலைகள் என்பேன்.

இதுவும் ஒரு லீலை இவையன்றி கூற நிச்சயமாய் தர்மம் இவ்வுலகத்தில் அழியும் பொழுது அவைதன்(கடல்மட்டம்) கீழ் நோக்கி போய்விடும். பின் தண்ணீர் எதையென்று... தண்ணீரால் மூழ்கடிக்கப்படும் இவையென்று... ஆனாலும் பின் இவையன்றி கூற யாரும் இச் சரித்திரத்தை பின் உரைக்காமலே மறந்து போய்விட்டனர்.

ஆனாலும் யான் செப்புகின்றேன்.. இதையன்றி கூற ஆனாலும் தர்மம் மெல்ல மெல்ல பின் எழுந்து நிற்கும்.

அப்பொழுது இத் திருத்தலங்கள் பின் கடலின் ஒலிகள் அலைகள் பின் பின்னோக்கி செல்வதால் பின் அத் திருத்தலங்கள் எழும்.

தர்மங்கள் காக்கப்படும், காக்கப்படும். அவ் தர்மத்தின் வழியே... நிச்சயம் கிருஷ்ணனும் தோன்றிவிடுவான்... எளிதில் கூட....

இன்னும் எதையெதை  என்று கூற இத் தலத்தில் ஒவ்வொரு ரூபத்திலும் இன்னும் 11 திருத்தலங்கள் 11 திருத்தலங்கள் இவ்வாலயத்தின் உள்ளே காணப்படுகின்றது.

எதனையென்று கூற ஆனாலும் வடிவமைத்தான்.

இவ்யுகத்தில் ஒரு யுகத்தில் இப்படித்தான் இதனை பணிய மேற்கோள்காட்டி பின் அதன் மேலே ஒரு ஆலயம் பின் அதன் மேலே ஒரு ஆலயம்... ஆலயம்!! ஆலயம் !!என்று கூட...

ஆனாலும் முற்பட்டது!!!!

முற்ப்பட்டது எதையெதை என்று கூற தர்மத்தை நிலைநாட்ட எப்படியெல்லாம் போராடினான் கிருஷ்ணன் என்பதைக் கூட....

என் குருநாதன் அகத்தியன் அழகாக உரைப்பான்.

ஆனாலும் இதையன்றி கூற
யான் இப்பொழுது சொல்கின்றேன் இத்திருத்தலத்தில் இருந்து....

கீதை(பகவத்கீதை) ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்... எதை?? இன்னும் ராமாயணத்தையும் கூட எவையெவை என்று கூற ஒவ்வொரு இடத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் அதற்கு பூஜைகள் செய்ய இவையன்றி கூற இன்னும் வாசகம் ,திருவாசகத்தை எவையென்று கூற இன்னும் இன்னும் பல பல விதமான பாகவதம் எதையன்றி கூற இன்னும் பல பல நூல்கள் காணப்படுகின்றது இதனையெல்லாம் இல்லத்தில் அமைத்து பின் இதனையும் ஏதாவது மனதில் தோன்றியவாறு ஒரு பாடலையாவது அனுதினமும் படித்தாலே போதுமானது இறை பலங்கள் அதிகமாக காணப்படும்.

அதை விட்டுவிட்டு எவை எவை என்றுஆனாலும் உண்டு உண்டு திறமைகள் இன்னும்.. பல பகுதிகள் இன்னும்  எதையென்றும் இன்னும் விளக்கங்கள் ஆனாலும்

 """பறப்பது""""  ஒரு எளிதான செயல் அல்ல !!!!

இவையன்றி கூற மகாபாரதத்தில் இதையென்று இவற்றினிருந்தும் கூட....

எப்படி?????  ஈசா!!!!  இதையென்றும் கூற ஈசனையும் வழிபட்டான்..கிருஷ்ணன்.

அங்கே காணப்படுகின்றது (துவாரகை ஆலயத்தில் இருந்து 16 கிலோமீட்டர் அருகிலேயே அமைந்துள்ளது நாகேஸ்வர் ஜோதிர்லிங்கம்) நாகேஸ்வரன் ஆக....

ஆனாலும் இதையன்றி கூற அவ் நாகேஸ்வரனும் பின் கிருஷ்ணனை நோக்கி...

நீ!!! அகத்தியனிடம் செல்!!!இதை(மகாபாரத யுத்தம்) சரியான முறையில் கணித்து கொடுப்பான் என்றுகூட.

ஆனாலும் அகத்தியனோ இதையன்றி கூற... கிருஷ்ணனும் அகத்தியனிடம் சென்றான்.

என் குரு நாதனை பற்றி யான் மிக்க மிக்க பெருமையாகத் தான் சொல்வேன்.

ஆனால் மானிட ஜென்மங்களோ!!! 

என் குருநாதனைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளவில்லை தெளிவாக தெரிந்து கொள்ளவில்லை ஏமாற்றி பிழைப்பு ஏமாற்றியே பிழைப்பு நடத்தி நடத்தி கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் இவையன்றி கூட பின் என் குருநாதன் அகத்தியனிடம் வந்தான் கிருஷ்ணன்.

இதையன்றி கூற எப்படி இவையன்றி கூற ஆனாலும் நீ ஒரு வேலை செய்ய வேண்டும்.!!!

இதையன்றி கூற போர் எதையன்றி கூற நிச்சயமாய் வரும் சண்டைகள் சடுதியாக.....

இதையன்றி கூற அப்பொழுது எதன் மூலம் அடையலாம் என்று கூட யோசனைகள் பலபல உண்டு. ஆனாலும் பறப்பது மிக்க எளிமையான செயல் என்று என் குருநாதன்.. ஆனால் இதையன்றி கூட ...

எப்படி பறப்பது என்பதை கூட தெளிவாக விளக்கவில்லை... ஆனாலும் கிருஷ்ணனிடமே பின் சொன்னான் மறைமுகமாக !!சூட்சுமமாக!!!.... எதனையென்று கூட...

இதை உன்னிடத்தில் தான் செப்புகின்றேன் என்று காதால் செப்பிவிட்டான்..

மறு நொடியே பின் கிருஷ்ணனும் பறந்தான்!!! பறந்தான் !!! அவைமட்டுமில்லாமல் பல நபர்களையும் ஏற்றிச்செல்ல இதையென்றும் கூற எளிதாக உதவியது.

அதனால் என் குருநாதனே பறப்பதற்கு பின் முதன் முதலில் வழி வகுத்தவன்..

ஆனால் மனிதர்களோ இன்று எதனை எதனையோ பயன்படுத்தி கொண்டு இவற்றின் மூலம் பறவையின்(விமானம்) மூலம் பின் எவையென்று கூட கண்டுபிடித்தான் மனிதன் என்று கூட...

பொய் சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறான் இதையன்றி கூற..

ஆனால் என் குரு நாதனே பறப்பதற்கு முதலில் வழி வகுத்தவன் என்பேன் யான்.

இதை இதையன்றி கூட இன்னும் எவையன்றி கூற இன்னும்

""இங்கு நடப்பது அங்கு காண!!

அங்கு நடப்பது இங்கு காண!!! 

இவ்வுலகத்தில் என்னென்ன நடக்கின்றது என்று காண!!!

என் குரு நாதனே இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தான்.

ஆனால் மனிதனோ அவையெல்லாம் பின் தவறாகப் போய் பயன்படுத்திக் கொண்டான்.

என் குருநாதன் இவ்வுலகத்தில் மிக்க மிக்க எவையெல்லாம் இன்னும் மக்களுக்கு தெரிவித்தான் அதனால்... என்குரு நாதனை இவ்வுலகத்தில் பின் எதையன்றி கூற.... என் குருநாதன் பெயரைச் சொல்லி ஏமாற்றி வருபவர்களை யான் விடமாட்டேன்...எதையன்றி கூற... 

ஆனாலும் அர்ஜுனன் கர்ணன் இவையன்றி இன்னும் பல பல பல மாமனிதர்கள் என் குருநாதனிடத்தில் எப்படி வாழ்வது? எப்படி வாழ்வது? என்றெல்லாம் பின் இதையன்றி கூற... 

இப்படி வாழ்ந்தால் !!இப்படி வாழ்ந்தால்!! என்பதையெல்லாம் என் குருநாதனே அழகாக எடுத்துரைத்திருக்கின்றான்.

ஆனாலும் அவையெல்லாம் மனிதன் மறந்து விட்டான்... மறந்தும் விட்டான் எதற்கு என்று கூட...

ஆனாலும் இனிமேலும் என் அகத்தியன் இதையன்றி கூற பல சித்தர்களும் நிச்சயமாய் இவ்வுலகத்தை காக்க ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்திருப்பது உண்மையப்பா!!!

அதனால் கருணையுள்ள இதையன்றி கூற கருணையோடு என் குருநாதன் அகத்தியனை வழிபட்டாலே!! வழிபட்டாலே!!

அகத்தியா!!
அகத்தியா!!!
தந்தையே!!!

நீரே !!!!!...... என்றுகூட அழைத்தால் நிச்சயமாக ஓடோடி வருவார்.... 

ஓடோடி வருவார் என்பதற்கிணங்க ஆனாலும் விதியின் பாதையையும் மாற்றத்தக்கதல்லவா!!

அதனால் விதியின் பாதையும் ஆராய்ந்து இவந்தனுக்கு எவ்வாறு என்பதை கூட கஷ்டங்கள் கொடுத்தால் இவன் தாங்கிக் கொள்வானா!!!!?? இல்லையா!!?? என்றெல்லாம் யோசித்து தான் குருநாதனும் நல்விதமாக.....

ஆனால் என் குருநாதனை வணங்குவோருக்கு நிச்சயமாய் பிறவிகளே இல்லையப்பா!!! பிறவிகளே இல்லையப்பா!!!

யான் ஆணித்தரமாக கூறி விடுகின்றேன்.

எவையன்றி கூற இன்னும் இன்னும் சிறப்புக்கள் இத்தலத்தில் மர்மமாக மறைந்து கொண்டிருக்கின்றது.

ஆனாலும் இவற்றினுள்ளே ஒவ்வொரு படியாக ஏறினாலே உச்சத்தை அடையலாம் என்பதை கூட கிருஷ்ணன் அழகாக வடிவமைத்து எதனையுமென்று  கூறி... 

அதனால் ஒவ்வொரு படியிலும் மேன்மையாக... இவ்வாறு செய்தால் ஒரு பிறவி இவ்வாறு செய்தால் மறுபிறவி இவ்வாறு செய்தால் மறுபிறவி மறுபிறவி என்றெல்லாம் ஒவ்வொரு குகையிலும் பின் மேற்சொன்னவாறு பின் உயரத்திற்கே சென்றுவிட்டான் பன்மடங்கு படிகளாக...

இதனை உணர்த்துவதே... மிக்க இன்பம் இன்பம் இதனை கூடச் சொல்வது!!!

பல லீலைகள் !!! எதை எதை என்றுகூட இன்னும் சிறப்பான விஷயங்களும் காணப்படுகின்றது..

இவ்வாலயம் எதையன்றி கூற பின் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து நிற்கின்றதோ அப்பொழுதெல்லாம் இவ்வாலயத்தின் வழியே சிலசில எதையென்று கூற சித்தர்கள் வெளியேறுவார்கள்.

ஆனாலும் தர்மம் ஓங்கி நிற்கும் வருவார்கள் சித்தர்கள்  பின் மகரிஷிகள் ஏனைய தேவர்களும் எதையன்றி கூற... கிருஷ்ணனை காண உலகம் இதையென்று அறிவதற்கு பல தேவர்கள் பல ரிஷிகளெல்லாம் இங்கு வந்துதான் வழிபட்டு இவையன்றி கூற இவ்வாறு தான் தெளிவு பெற்று தெளிவு பெற்று மர்மங்கள் ஒவ்வொரு குகையிலும் இப்பொழுதுகூட ரிஷிகள் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் எதனையென்று கூற....

அதனால் எதையென்று கூறும் பொழுதும் கூட பின் யான் முன் நின்று பின் குருகுலத்தில் என் அகத்தியன் எதையென்று கூற இன்னும் பல பல மனிதருக்கு பல பல வழிகளையும் காட்டியுள்ளார்.

இந்திரனுக்கும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் இன்னும் பல பல வழிகள் எவ்வாறு வழிகள் காட்டுவார் என்பதைக்கூட... 

என் குரு நாதனை பற்றி தெளிவாக தெரிவிப்பேன் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை மேற்சொன்ன இன்னும் பல வழிகளிலும் ஞானத்தைப் பெற மனிதர்களுக்கு இன்னும் சில சித்தர்கள் உரைப்பார்கள் என்பேன்.

கவலைகள் இல்லை நல் விதமாக குருநாதனை மனமிரங்கி இன்னும் பல பல வழிகளிலும் பின் மனம் உவந்து அனைவருக்கும் நல்லதை செப்பி நல்வழிப்படுத்தி மனதை மாற்றுவார்கள் தெளிவு படுத்துவார்கள்.

இப்படி வாழ்ந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்பதெல்லாம் சித்தர்களும் வழி வகுப்பார்கள் குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை மீண்டும் வாக்குகளாக பரப்புகின்றேன் என் குருநாதர் அருளால்......

துவாரையில் நடந்த அற்புதம் 

துவாரகை ஆலயத்தில் நல் முறையாக தரிசனம் செய்து பின் பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்த பொழுது சௌராஷ்டிர குஜராத்தி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது பிரகாரத்தை சுற்றி வலம் வந்து கிருஷ்ணனுக்கு எதிராக தூரத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை கிருஷ்ணனை காண பக்தர்கள் வரிசை கூட்டத்தின் அருகே நின்று தரிசனம் செய்தபோது அவ் பக்தர்கள் கூட்டத்தில் நான்கு பெண்கள் ஜீவநாடி பெட்டகத்தை பார்த்து இன் முகத்தோடு( அவர்களுக்கு பெட்டகத்தில் ஜீவநாடி உள்ளது என்பது தெரியாது) அருகே அழைத்து ஜீவநாடி பெட்டகத்தை பக்தியோடு  தொட்டு வணங்கினார். நான்கு பெண்களில் இரு இளம் பெண்களும் நடுத்தர வயதுள்ள பெண்களும் அடக்கம்.

ஆசையோடு குஜராத்தி மொழியில் ஜீவநாடி பெட்டகத்தை எங்கள் தலையில்  வையுங்கள் என்று உரிமையுடன் கேட்டு வாங்கி தலையில் ஒரிரு நிமிடம் நான்கு பேரும் வைத்துக்கொண்டு பரவச பட்டனர்.

எங்களுக்கோ ஏதோ பக்தர்கள் விருப்பத்துடன் சுவடியை வணங்க கேட்டனர் .சரி என்று நிறைவேற்றி கொடுத்தோம்.

எங்கள் மனித கண்களுக்கு அது மட்டும் தான் தெரிந்தது. பலநூறு பேர் தரிசனத்திற்காக வரிசையில் நின்று இருந்த பொழுதிலும் குறிப்பிட்ட நான்கு பெண்மணிகள் மட்டும் இவ்வாறு செய்தது ஆச்சரியமாக இருந்தது.

இச்சம்பவத்தைப் பற்றி மீண்டும் புலத்தியர் பெருமான் எடுத்துரைத்த போது தான் தெரிய வந்தது வந்தவர்கள் நான்கு பேரும் முறையே ராதா, ருக்மணி, சத்யபாமா, யசோதா என்று. மிக அற்புதமான தெய்வீகமான அனுபவமாக அமைந்தது அச்சம்பவம் எல்லாம் இறைவனின் திருவருள்.

இச்சம்பவத்தை பற்றி புலத்திய பெருமான் கூறிய வாக்கு!!

நலமாக நலமாக அழைத்துக் கொண்டே வருகின்றேன் எதையன்றி கூற நல்ஆசீர்வாதங்கள் தந்து கொண்டே இருக்கின்றேன்... குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை நல் விதமாகவே இன்னும் பல வழிகளிலும் ஞானத்தைப் பெற நல்வழிகள் காட்ட நல் நேரங்களாக அனைத்தையும் நடத்தி வைப்பேன் குறைகள் இல்லை.

இவையன்றி கூற மேற்சொன்னவைகள் இவை என்று கூற இன்னும் விளக்கம் அளிப்பதற்கு ஒன்றுமில்லை...

எதையன்றி கூற இச் சுவடியை வாங்கிக்கொண்டார்கள் எதையன்றி கூற.... இதையென்று கூற....

ராதா!!!  இதை பின் எதனையென்று அறிவதற்கு ஒன்றுமில்லை. ருக்மணி.... எதையென்றும் எவை எவை என்றும் இன்னும் முற் சொன்னதை அனைத்தும் அவள்தனுக்கு தெரிந்துவிட்டது.

சத்யபாமாவிற்கு.... அதனால் அவர்களே வாங்கிக் கொண்டு... நல் விதமாகவே அவர்களும் ஆசீர்வதித்து விட்டனர் என்பேன்.

இதையன்றி கூற இன்னும் பல மாற்றங்கள் உண்டு எதையெதையென்று கூற இன்றளவும் மறைமுகமாக வந்து பின் ராதா!! இவை எவை பின் சத்யபாமா  இவையன்றி கூற  ருக்மணிக்கும்...இச் சத்யபாமா விற்கும் எவையன்றி கூற ஒற்றுமைகள் உண்டு .

இதையன்றி கூற இன்னும் யசோதா இவையன்றி கூற அனுதினமும் இங்கு வலம் வந்து தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் மனித ரூபத்தில் கூட...

அதனால் யாரும் அறிவதில்லையப்பா.... இதனை.... 

எவையென்று கூற ஆனாலும் வரத்தைப் பெற்று விட்டனர் பிரம்மாவிடம்.. 

எதையன்றி கூற காலங்கள் காலங்களாக நாங்கள் சிரஞ்சீவிகளாக இருக்க வேண்டும் என்பதற்கிணங்க பின் பிரம்மாவிடமே ஆசி பெற்று
இன்றளவும் இங்கே வந்து சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள்.

அதனால் எதையன்றி கூற அவர்களுக்கு தெரிந்து விடும்.

அதனால் இச்சுவடியையும் அவர்கள் வாங்கிக் கொண்டார்கள் என்பது எதையென்று கூற.... இச் சுவடிக்கும் நல் வாழ்த்துக்கள் தெரிவித்து எதையன்றி கூற... இன்னும் நலன்களாகப் பெற்று வாழ வழிவகுத்து ஆசீர்வாதங்கள் இன்னும் இன்னும்.

எதையன்றி கூற அவர்களும் இதையன்றி கூற....

""" மகனே!!! வா!!!  வா!!! தர்மத்தை நிலை நாட்ட வா!!! 

என்று கூட யசோதா எதையன்றி இன்னும் பின் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். 

அதனால் பின் இவையன்றியும் கூற பல பல பல ரூபங்களிலும்...பின் தர்மத்தை நிலைநாட்ட நிச்சயமாய் வந்தருள்வான்... எவையென்று கூற  இக் கிருஷ்ணனும்....

நிச்சயமாய்.... ஆனால் வெல்வான்!!! வெல்வது உறுதியானது ஆனால் எதையன்றி கூற தோல்விகளே தோல்விகளாக செயல்படாது.

ஆனால் வெற்றிகளோ வெற்றிகளாக செயல்படாது. 

தோல்விகள் காலம் கடந்து கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றது.... 

வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றது

அதர்மம் பின் தலைநிற்கின்றது... எதையென்று ஆனால் தர்மம் தலை தூக்குகின்றது வந்து கொண்டே இருக்கின்றது.

இதனால் நன்மைகள் எதை எதை என்று கூற ஏராளமான எவையன்றி கூற சில அழிவுகள் ஏற்பட்டுத்தான்... தர்மம் நிச்சயம் தலை நிற்கும் தலை நிற்கும் என்பதை தெரிவித்து விட்டேன்.

நலமாகவே நலமாகவே உண்டு இன்னும் பல காலங்களில் வாழ்ந்த சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும் பின் வந்துகொண்டே இருப்பார்கள்.

எவை இன்னும் பல பரிசுத்தமான தலங்களுக்கும் இதையன்றி கூற அனுபவிக்க பின் மனிதர்களை வழிநடத்துவார்கள் குற்றங்கள் இல்லை!!! குறைகள் இல்லை!!!!

நல் விதமாக ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

5 comments:

  1. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  2. The kind of divine services that you are rendering via "Sithan Arul" is really exceptional. It has changed the lives of many people including me. It has immensely benefitted many more and it has shown the right path to various people from different walks of life. It is a perfect introduction and way of life to siddha path, dharma , gurunathar and various things in the spiritual path. We are really blessed and forever thankful to you for the services.

    ReplyDelete
    Replies
    1. Namaskaram! Am just executing the orders of our guru. Full credit goes to him. I am happy that he assigned me to do something on the front. Om Agatheesaaya Namaha!

      Delete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Translation:
    https://drive.google.com/file/d/1lts0cfsS92PFkpClVt14vPm6p0SxjIkL/view?usp=share_link

    ReplyDelete