​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 22 May 2022

சித்தன் அருள் - 1139 - அன்புடன் அகத்தியர் - கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில்!




29/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : கோலப்பூர் மகாலட்சுமி ஆலயம் 

உலகை ஆளும் நமச்சிவாயனை மனதில் எண்ணி வாக்குகளாக பரப்புகின்றேன் புஜண்டன்... 

இதையென்று மனிதன் எப்பொழுது?? எப்பொழுது??... உணர்ந்திடுவான்!?!!! உணர்ந்திடுவான்!?!! 

ஆன்மா எதன் கையில் இருக்கின்றது? எவற்றை என்றுகூட தெரியாமல் பிதற்றுகின்றான், பிதற்றுகின்றான் இதை என்று அறியாமலே!!!

மனிதன் வேறு !!ஆன்மா வேறு!! என்று தெரியாமல் ஆனால் ஆன்மாவோ உடம்பில் நுழைந்து ஆனாலும் எண்ணங்களுக்கு ஏற்றவாறே நடக்கின்றது.

ஆனாலும் உண்மையானவை தெளிந்து பின் தெளிந்து பின் பின் இதனையும் அறியாமல் சென்று கொண்டே இருந்தால் வீண் பலன்கள் மிஞ்சும். 

இதனைத்தான் அறிந்து சொல்கின்றேன்... இவையன்றி கூற... இதையென்றும் கூற வரும் காலங்களில் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

இதனால் பின் இவ் ஆன்மா இறைவனிடத்தில் சம்பந்தமாகவே உள்ளது.

இதனால் எது நிரந்தரம் என்று தேடி கொண்டால்.. ஆனாலும் பின்  அவ் ஆன்மா பாவத்திற்கே இவையன்றி கூற தூண்டும் தூண்டும். 

பிறவிகளில் இன்னும் இன்னும் அதிகப்படுத்தும்.ஆனாலும் அவ் ஆன்மா எதையன்றி கூறுவது?? கூறுவது அவ் ஆன்மாவை இறைவன் பால் செலுத்த வேண்டும்.

செலுத்த வேண்டும் அதனால்  ஐம்புலன்களை அடக்க( மெய், வாய், கண், மூக்கு, காது,) வேண்டும்..இவ்  ஐம்புலன்களை அடக்கி விட்டால் உந்தனை நிச்சயம் யாராலும் வெல்ல முடியாது என்பேன்.

இதனை அறிவதற்கும் விளக்கங்கள் பல பல கோடி.கோடி என்பதற்கு விளங்க விளங்க பின் எதனை யாருடைய தொடர்புடையது... அதனால் நோக்கி இவ் ஆன்மா எதனை என்று கூற ஆன்மா க்கு எதை பிடிக்கும் என்று சொல்லி விடுகின்றேன்.

எதற்கிணங்கஇதையும் கூட இறைவன்பால் செலுத்த செலுத்த தரித்திரங்கள் நீங்கும். நீங்கும் என்பதைப்போல் மாற்றமாக உள்ளது சிந்தித்துக் கொள்ளுங்கள் இதனையும் தெரியாமல்.

சிந்தனைக்கு இதுவும் தூண்டவேண்டும் என்பது தான் எனது கருத்தாகவே தோன்றுகின்றது.

அதனால் இதை நிச்சயம் நீங்கள் எதை என்று கூற அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான் தீர்க்கமான தரிசனம். தரிசனம் என்பதைப்போல் ஆன்மாவும் இதை உரைக்க!! அதை உரைக்க!! ஆனாலும் பிடிக்கும் இதையன்றி கூற இறை பலத்தை.

இதனால் உன் ஐம்புலன்களை அடக்க வேண்டும் இதனையுமன்றி கூற... உடலை அடக்குவது அதனினும் பெரிது !!!!என்றால் மனதை அடக்குவது அதனினும் பெரிது!!!

பெரிது பெரிது எதுவும் இல்லாமல் பெரிதாகவே தெரிய கொண்டு தெரிய கொண்டு இருந்தால் அனைத்தும் சிறியதாகவே காணப்படும்...

காணப்படுவது ஏதடா?!! இதையென்று அறிவதற்கு பல வித்தியாசங்கள் உண்டு. உண்டு... இதனால்தான் சொல்கின்றேன்...

இவை என்று கூற இயற்கை சீற்றங்கள்!!! இதனை என்று உணர்வதற்குள் இவ் ஆன்மா தெளிவுபடுத்தி விடும். சிலருக்கு.

எதனால் என்பதைக்கூட முன்கூட்டியே அறிவதற்கு. அறிவதற்கு ஒன்றும் இல்லை ஒன்றுமில்லை இதன் பலன்கள் நிச்சயம் தாமதம். ஆனாலும் நிச்சயம் உயர்வுகள் மனிதர்களுக்கு உண்டு.

ஆனாலும் எதையன்றி  கூற பக்தி செலுத்த வேண்டும்.

யாங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். பிற உயிர் கொள்ளாமை.. என்பதை கூட.... 

எதனையும் அறிந்து அறிந்து நிச்சயம் மனிதன் தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் அழிவுகள் தான் உண்டு என்பதை கூட பல வாக்குகளிலும் பல பல சித்தர்களும் சொல்லிவிட்டனர்.

இதனையுமென்று அறிந்து அதனை திருத்திக் கொள்ள திருத்திக் கொள்ள எதனை என்று கூட மனிதர்கள் திருந்தாத ஜென்மங்களே என்பதே எனது கணிப்பு!!!

ஆனாலும் எத்தனை? மாமனிதர்கள்!!!
எத்தனை? ஞானிகள்!!! எத்தனை? சீடர்கள்!!
எத்தனை?  குருமார்கள்!!! 

இதையன்றி கூற மனிதனை திருத்த பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மனிதனோ  தான்  தன் பாதையில் தான் செல்வேன்... தன் பாதையில்தான் சென்று அழிவேன்!! என்பதைக் கூட ஆணித்தரமாகவே இருக்கின்றான். இதனால் என்ன பயன்??????

என்ன பயன்!?? அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து வருவது பின் மனிதனுக்கு இயல்பாக போய்விட்டது.

அதனால் சித்தர்கள் எதையன்றி கூற வரும் வரும்...எதையன்றி கூற பின்னாளில் வருபவர்களை நிச்சயம் யாங்கள் இனிமேலும் காத்தருள்வோம். நல் முறையாகவே!!! பிறவிப்பிணியை நீக்குவோம்.

எதையன்றி கூற பிணி என்பது வேறப்பா!!!!!! 

இதனையும் அறிவதற்கு ஒன்றப்பா..!!.ஒன்றப்பா!! இல்லையப்பா!!! இதனையென்றும் ஒன்றுமில்லை... மனிதனுக்கு நிலைகள். நிலைகள் தடுமாறும்போது உணர்கின்றான். உணர்வதற்குள் போய்விடுகின்றது உயிர் மூச்சும்.

இதையன்றி கூற உயிர் மூச்சையும் பிடித்து  ஆட கொண்டால் உண்டு..ஆயுட்காலம். அதனையும் எத்தனை முறை சுவாசிக்க!!! இதனையும் என்று அறிவதற்கு அறிவதற்கு இன்னும் கூறுவான் சித்தன்.


சித்தர்கள் எதையன்றி கூறுவதற்கு விளக்குவதற்கு ஒன்றும் இல்லாமல் ஒன்றும் இல்லாமலே எதையன்றி கூற....மனிதா!!  மனிதா!!! 

எதையன்றி கூற... எதனை!! சிந்தித்துக்கொண்டு இருக்கின்றாய்??

ஆனால் !!!அழிவதற்கே சிந்தித்து கொண்டிருக்கின்றாய்!!!.

மாயையே!! விரும்புகின்றாய்!! 

அதனால்தான் சொன்னேன் நீ ஆன்மாவை  எதையன்றி கூற இறைவனிடத்தில் பின் பணிவு வைக்கவேண்டும்.

அப் பணிவு பின் ஐம்புலன்களில் இருக்கின்றதப்பா!!! 

அவ் ஐம்புலன்களையும் அடக்கி விட்டால், அடக்கி விட்டால் ஆளலாம்.  எதையன்றி கூற...உந்தனையே ஆன்மாவையே ஆளலாம். 

ஆனால் இதையன்றி கூற எப்படி? அடக்குவது என்பதைக்கூட சிந்தித்துக் கொண்டிருக்கின்றான்.

அதனால் பொய்கள் நிறைந்த வாழ்க்கையப்பா!! பொய்கள் நிறைந்த பக்திகளப்பா!!! இதையன்றி கூற... விளக்கங்கள் அளிப்பேன் இன்னும். பல பல வழிகளிலும்.

இதனையுமென்று கூற எதனை நீ நிமித்தம் இங்கு எதனை என்று கூற எதனை நீ கொண்டு வந்தாயோ அதனைத்தான் அதன் மூலமாகத்தான் பரிபூரணமாக நடந்து கொண்டிருக்கின்றது.

அதையும் மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை.

ஆனால் எதை என்று கூற பின் இவையன்றி கூற... அகத்தியனுக்கு!!! தகுதியானவைகள் அனைத்தும் உண்டு!!!

மாற்றுவான்!!!! 

இதையன்றி கூற ஆனாலும் தன் பக்தர்களுக்கோ  சில சில சோதனைகளையும் கொடுத்து ஆட்கொண்டு இனிமேலும் நிச்சயம் விதியையும் மாற்றுவான்!!என்பது மெய்!!!! 

இவையன்றி கூற பல பல பல பல யுகங்களாக தோன்றி தோன்றி மறைந்து கொண்டு இருக்கின்றேன் ஆனால்... மனிதனின் முட்டாள் செயலே மனிதனை அழித்து விடுகின்றது!!!

தீர்மானிப்பதற்காக உண்டு உண்டு......இல்லையப்பா இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் நிலைமையை நன்கு அறிந்து கொண்டால் இன்னும் சிறப்புக்கள் உய்க்கும்.அறிவது உறுதி!!! 

உறுதி என்பதைப்போல் பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள் பல ஞானியர்களும் சொல்லி விட்டார்கள்..தன் தன் நிலைமைகளை அறியவேண்டும் முதலில்.

தன் நிலைமையை அறியாவிட்டால் ஒன்றுமில்லை...

தான் தன்னிடத்தில் குறைகள் இருக்கின்றது என்பதை முதலில் சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுதுதான் உயர்வுகள் ஏற்படுமே தவிர பின் தான் எண்ணங்கள் தகுதிகள் ஆயினும், தகுதிகள் இல்லாமல் ஆயினும் நிச்சயம் உயர்வுகள் கிடைக்காது மனிதா!!! தெரிந்து கொள்!!!

மனிதனிடத்தில் புத்திகள் வரும் காலங்களில் தாழ்ந்து கொண்டுதான் போகும் என்பேன்.... இதனையும் அழிந்து தாழ்ந்த புத்திகளோடு சென்று கொண்டே இருந்தால் ஆனாலும் இவையன்றி கூற நிச்சயமாய் என்வழி எதைப் போன்று சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு நிச்சயமாய் சில சோதனைகள் கொடுத்து நிச்சயம் ஆளாக்குவோம்..எவையென்று.

ஆனாலும் சரி முறையாய் அமைதியாகவே பின் புறப்படுவான் பின் நாமத்தால் இதையன்றி கூறியிணங்க கூறியிணங்குவதற்கு இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் இன்னும் பிறக்க வைப்பான் ஈசன்..இதையுமென்று கூற. 

அதனால் மனிதனே ஒழுங்காக திருந்திக் கொள் என்பதுதான்... இதையன்றி கூற மனிதா எத்தனை எத்தனை கஷ்டங்கள் எதனை என்று கூற!!! எவையென்று கூற... 

இவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் ஏன் திருந்துவதில்லை???

ஏன் இப்படி வருகின்றது என்பதை ஒரு நாள்கூட சிந்தித்து சிந்தித்து இருக்கின்றாயா???

மனிதா!!இவையெல்லாம்  வீணான! போதனைகள்!!!

போதனைகள் இன்னும் கூட... இன்னும்கூட வீணான போதனைகள் கூட எடுத்துரைப்பார்கள் மனிதர்கள். அதனையெல்லாம் நம்பி விட்டால் ஆனாலும் கடைசியில் ஆன்மா சிறிது தயங்கும் ஏற்பதற்கு.

ஏற்றும் கொள்ளும். ஆனால் அவ் ஆன்மா திரும்பவும் அனைத்தும் இழந்துவிடும்.. எதையென்று ஆனாலும் அவ் ஆன்மா பற்றி விரிவாக வரும் காலங்களில் சித்தர்கள் உரைப்பார்கள்.

ஆன்மா எதை குறிக்கின்றது?? எவற்றிலிருந்து தோன்றுகின்றது?? எதை எதை என்று கூட தீபம் எதை இவற்றிலிருந்து கூட ஆன்மா இவற்றுக்கு வேறுபாடு உண்டு. இதனைத் தான் எங்கிருந்து செல்கின்றது பின்....

பெருமாளுக்கு நாமம்!!! இதில் கூட ஆன்மா அடங்கியுள்ளது.

ஈசனுக்கு இதையன்றி கூற அவந்தனக்கும் இட்ட திருநீறு!!!! இதிலும் அடங்கியுள்ளது ஆன்மா!!!!

இவையன்றி கூற இவைதனை புரிந்தாலே!!! மனிதா!!! நீ நிச்சயம் கர்மத்தை வென்று விடலாம்.

ஆனாலும் இதுவரை இதை புரிந்திருக்க ஆள் இல்லை!!!வருத்தம்!!! இதையன்றி கூற....

ஆனாலும் உண்டு உண்டு நிச்சயம் மெய்ஞானியர்களுக்கு, உண்மையான மனிதர்களுக்கு யாங்கள் இதை எடுத்துரைப்போம் இனிமேலும்.

தெரிந்துகொள்ளுங்கள்!!! தெளிவு கொள்ளுங்கள்!!!
தெளிவு கொண்டு விட்டாலே !!! மனிதா சிறப்பாக வாழ்ந்து கொள்ளலாம். நோய்நொடிகள் இல்லாமல் வாழ்ந்து விடலாம்.

இவ்வுலகத்தில் பரிசுத்தமாக நீந்திவிடலாம் (பிறவிப்பெருங்கடல்) கடலை!!! பிறவி ஆகவே....

எண்ணி!!!
எண்ணி !!!
பிறவி!!
பிறவி!!
எடுத்து!! 
எடுத்து!! 
வருந்தி !!
வருந்தி!!
வந்து !!
வந்து...!!
சென்று!! 
சென்று !!
மீண்டும் !!
மீண்டும்!!
கஷ்டங்கள் பட்டு பட்டு!!
இறந்து!! இறந்து பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு பிறப்பு....... வித்தியாசம் உண்டா???

இறப்பின் போது எங்கோ!! செல்கின்றாய்... பிறப்பின் போதும் எங்கே வருகின்றாய்!!?.... தெரியாமல் வாழ்ந்து வருகின்றாய். 

இவையன்றி கூற ஆனால் தெரியுமாடா!!! அனைத்தும் மனிதனால் !!!தெரிந்து கொண்டபின் ஏதுமில்லை பாவங்கள் சுமக்கின்றாய்!!! 

அதனால் தெரியாமல் இருப்பதே நல்லது!!!

இவையன்றி கூற அதனால் கண்ணிருந்தும் இவையன்றி கூற குருடன் ஆகவே இரு...பின் பெரியோர்கள் இட்ட வாக்கு..

இவையன்றி கூற... காதுகள் எவை! என்று கேட்க?? இறைவன் நாமத்தையே கேட்க வேண்டும். மற்றவை எல்லாம் இவையன்றி கூற பின் அனைத்தும் இறைவன் செயலே என்று கூட மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.எனினும் சித்தர்கள் வாக்கையும் பயன்படுத்திக்கொள்க!! எது வந்தாலும் இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவனுக்கு அதுவும் கேட்டு விடும் .

நிச்சயம் இறைவன் இருக்கின்றான் இவையன்றி கூற...பின் நம்தனையே நம்பிக் கொண்டு இருக்கின்றானே!!! என்றுகூட மனம் இரங்குவான் இறைவன்.

அதை விட்டுவிட்டு எவையன்றி கூற இறைவன் எந்தனுக்கு இதைச் செய்யவில்லையே !!அதைச் செய்யவில்லையே!!! என்றெல்லாம் மனம் பிதற்றிக் கொண்டிருந்தால்... நிச்சயம் இவ்வாறு கடைசிகாலம் வரையிலும் கூட இவ்வாறுதான் பிழைப்பை நடத்த வேண்டும் சொல்லிவிட்டேன்.

இவ்வாலயத்தின் (கோலப்பூர் மகாலட்சுமி தேவி) சிறப்பு என்னவென்று கூறுவது???

இதனை இதனையுமன்றி பல பல அரசர்கள் இங்கு வந்து..எவையென்று கூற பல சேவைகளும் இதற்கும் வித்தியாசங்கள் கூட செய்து செய்து பல லட்சியங்களை அடைந்து பல பொருட்காசுகளைப் பெற்று...இவையன்றி கூற... இவ் தேவியை வணங்கி விட்டால்  இதையன்றி கூற இன்னும் சூட்சமங்கள்...இவையன்றி கூற.... யான் மனிதனுக்கு உரைத்திடமாட்டேன்!!!!... மனிதன் தெளிவு பெற்ற பின் அநியாயங்களில் இறங்கி விடுவான்.

அதனால் எதையன்றி கூற... இன்னும் சிறப்புக்கள் நல் மனிதர்களுக்கு எடுத்துரைப்பேன் என்பதுதான் எனது வாக்காகவே தோன்றுகின்றது.

தோன்றுகின்றது நிச்சயமாய் இனிவரும் நாடிகளில் நாடி நாடி வருவது என்பதை கூட எடுத்துரைப்பது இவையன்றி கூற

அதனால் மனதிற்கிணங்க யான் எதை என்று கூற எவை என்று கூறும் பொழுது கூட ஒன்றும் இல்லை.

இதனால் பொய் சொல்லி பிழைப்பு நடத்துகின்றவர்களுக்கு யான் ரகசியத்தை சொல்லி விட்டாலும் பின் பொய் தான் என்பேன். இதையன்றி கூற.பின் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவ் ரகசியத்தை நிச்சயமாய் எப்படி? கூற வேண்டுமோ?! அப்படி கூறுவான்!!! அகத்தியன்.

இதையன்றி கூற தன் பக்தர்களுக்கே.... !!!!!

இவை மிகச் சிறந்த காலமாகவே இல்லை என்பது தான் இதை இதை அறிந்து கொண்டு அறிந்து கொண்டு வீணான மனிதர்களே எதையென்று கூற?!!  வீண் அதையே நம்பி கொண்டு இருக்கின்றீர்கள்.

எதனையென்று அருமை பெருமை இதற்கும் வித்தியாசம் உண்டா?? இல்லை.

இதையன்றி கூறும் அறிவுகளுக்கும் அறிவு படைத்த ஜீவியாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றாய் மனிதா !!!

ஆனால் இறைவனோ  இவன் எதையென்று கூற மனிதன் குறைவாகவே இருக்கின்றானே!! என்று கூட... 

ஆனாலும் இதையன்றி கூற மனிதனின் நல்லெண்ணங்களை பின் உயர்த்தும் அதனையும் என்று கூற இவை இவை என்று கூற பிறக்கும் பொழுதும் இதனை எதனை எதனையோ நினைத்து நினைத்து வருந்தி வருந்தி இல்லையப்பா பிறவிகள்.

ஆனால் நடுவில் தான் மனிதன் சிக்கி கொள்கின்றான்... மாயையில் ஒருவன் மாயையில் சிக்கிக் கொள்ளாத அளவிற்கு கூட அவந்தன் வார்த்தைகள் இதையன்றி கூற முப்பது வயதிற்குள் எதையன்றி கூற மாயையில் சிக்கி விடுகின்றான் அவ் முப்பது எதையென்று தொடும் அளவிற்கும் கூட...

அவந்தன் மாயையில் சிக்க வேண்டும் என்று என்றால் இறைவன் மாயையில் சிக்க வேண்டும்.!!!!

இவ்வாறு சிக்கிவிட்டால் அவன் எப்பொழுதும் அழியமாட்டான்.... உறுதியாக சொல்லி விட்டேன்.

ஆனால் யாங்கள் காப்போம்  அவந்தனை.. இதுதான் மாயையப்பா!!!!

இறைவன் மாயையில் விழுங்கள்... மற்ற மாயையில் விழுந்து விடாதீர்கள்.

எதையன்றி கூற இதனை பக்குவ படுத்துவதற்கு ஐம்புலன்களை அடக்குங்கள்.!! நிச்சயமாய் அடக்கிவிடலாம் அதை விட்டுவிட்டு ...எதையெதை என்று கூற வருத்தங்கள்!!!

வருத்தங்கள் எதற்கு வருகின்றன??? என்று தெரியுமா???...... எதையன்றி கூற நீங்கள்தான் ஏற்படுத்திக் கொண்டீர்கள். நினைத்து கொள்ளுங்கள். உந்தனுக்கு என்னென்ன எவை என்று கூற உன்னால் இறைவனை எவையன்றி கூற... இறைவனை மனதால் வைத்துக் கொண்டு வாழத் தெரியாதா???  என்ன!! ????

இதையன்றி கூற அவ்வாறு வாழ்ந்திட்டு பார்.... எவ்வாறு வாழ்கின்றாய்??? என்று... அதை விட்டுவிட்டு சுகங்களுக்காக பின் தேடிச் சென்றால் ஆனாலும் உண்மை சொல்கின்றேன். ஆன்மா  பாவக்குழியிலே பின் எதையென்று கூற அழைத்துச் சென்றே கொண்டிருக்கின்றது.. இதற்கு விதி விலக்கங்கள் இன்னும் உண்டு.

அதற்கும் சரியான பதிலை எடுத்துரைப்பான்... அகத்தியனே!!!! 

இவையன்றி கூற இவ்வுலகத்தை எதை எதை என்று கூற பின் நல்லோர்கள் வாழச் செய்வார்கள் எதையன்றி கூற....பின் நேசம் மிக்கவனும்.... எவையன்றி கூற பொய் கூறி கொண்டு இருக்கின்றான். சித்தர்களைப்பற்றி இதையன்றி  கூற...

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்..... சித்தர்களைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள்,தெரிந்து கொள்வோர் இவ்வுலகத்தில் யாரும் இல்லை..... அப்படி தெரிந்து கொண்டாலும் எவையன்றி கூற நிச்சயம் தெரிந்து கொள்ள முடியாது என்பேன்.

எவையன்றி கூற அப்படி எவையன்றி கூற முழுவதுமாக சித்தனை தெரிந்து கொண்டபின் உள்நுழைந்தால் அவன் கடைசியில் மாய்ப்பான் ஒன்றும் தெரியாமலே... 

யான்!!!! பலமுறை பல பல கலியுகங்கள் எதையன்றி கூற.....இக்கலியுகத்திலும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.... பல யுகங்களாகவும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

இறைவனைப் பற்றியும் எதையன்றி கூற சித்தனைப் பற்றியும் தேடுவதற்கு எவ்வாறு என்பதையும் கூட தேடித் தேடிச் சென்று கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் ஒன்றும் புரியாத புதிராகவே உள்ளது.

சொல்லுகின்றேன் வாக்குகளாக....

மனிதன் நல் மனிதனாக தெரிந்து கொள்...!!!

ஆனாலும் காலங்கள் சரியில்லையே.... அழிவதற்காகவே செல்கின்றதே!!! 

அவ் அழிவை நீ தான் தக்க வைக்க... எதையன்றி கூற அதனை நீக்குவதற்கு தகுதிகள் உன்னிடத்திலே உள்ளது....

காலமும் கடந்து விடலாம் சொல்லிய வார்த்தைகள்....

சித்தனை பிடித்துக் கொண்டால் என்பதை கூட.. இன்னும் பல சித்தர்கள் சொல்லிக் கொண்டே வருவார்கள்.எவை என்பதை கூட.... 

அப்பனே!!!  எதையன்றி கூற ஒன்றைச் சொல்கின்றேன் ...இவையன்றி கூற... 

அகத்தியன் கருணை மிகுந்தவன்...!!! 

இவையன்றி கூற அதனால் அப்பனே!!  அப்பனே!!! என்றெல்லாம் உரைத்து. கருணையோடு கூறுகின்றான்.

ஆனால் அதனை ஏற்கும் மனிதர் இல்லையே!!?? சக்திகள் இல்லையே!!!??

எவையன்றி கூற அகத்தியன் இவ்வளவு பாசம் வைத்திருக்கின்றான் மனிதர்களின் மீது.. மனிதர்களுக்கிடையே!!!

ஆனாலும் மனிதனோ!?  பின் அகத்தியன் மீது பற்றற்று பின் ஏமாற்றி  யான் அகத்தியன் பக்தன்...இவையன்றி கூற அகத்தியன் பக்தை!!!....இவையன்றி கூற என்று பொய் பக்தியாக பொய் அன்பாகவே காட்டுகின்றார்கள்.

எவ்வாறு என்பதை கூட நிலைமையை கூறுவது??

ஆனாலும் இவையன்றி கூற பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் சித்தர்கள்.
எப்பொழுது எதை என்று கூட...

அதனால் வரும் காலங்களில் நிச்சயமாய் திருத்திக்கொள்ளுங்கள் !!! திருந்திக் கொள்ளுங்கள்!!! அதனால் எவையன்றி கூற நல்வழிப்படுத்தி நல்வாழ்க்கைக்காகவே யாங்கள் வித்திடுவோம்.

இவையன்றி கூற அதனால் எண்ணம் எதையன்றி கூற சீர்படுத்துக!!!!  முதலில். 

அவ்வெண்ணத்தை சரியான முறையில் சீர்படுத்தினால் இன்னும் வாக்குகளாக யான் செப்பிவிடுகின்றேன்.

எதையன்றி கூற நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். இவையன்றி கூற. 

அதனால் மனிதனே!! மனிதன் எவையென்று கூற மனிதன் எல்லை மீறிய அளவிற்கு சென்று கொண்டே இருந்தால் பின் உலகம் தாழ்வடைந்து  அழிவை நோக்கி பின் செல்லும் சொல்லி விட்டேன் அதனால் நல்லெண்ணங்களை விதையுங்கள் மனதில்... பின் நல் விதமாகவே
உரைப்பார்கள் சித்தர்கள்.. நலமாகவே.

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ  கர்வீர்  அம்பாபாய் மகாலக்ஷ்மி ஆலயம்.
மகாத்வர் சாலை. 
கோலப்பூர் 416012
மகாராஷ்டிரா. 
போன். 0231 2541779

ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 

கோலப்பூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி

108 சக்தி பீடங்களில் ஒன்றாக கோலாப்பூர் மகாலட்சுமி கோவில் விளங்குகிறது. மஹாலட்சுமியின் வாசத்தால் இந்த நகரமே சுபிட்சபூமியாக திகழ்கிறது.

தேவி, கோலாஹாசுரன் என்ற அரக்கனைச் சிங்கவாகனத்தில் எழுந்தருளி கதையால் அழித்த தலம் இது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.

சகல செல்வங்களையும் தரும் இக்கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்  

கோலாப்பூர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் சிறப்புக்கள்” 

கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது கோலாப்பூர் மகாலட்சுமி கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தேவி இருக்கிறார். பாரதத்தில் இருக்கும் தேவி வழிபாடு சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. மராட்டிய கட்டிடக்கலையின் அடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

தல புராணங்களின் படி கோலாசுரன் எனும் அரக்கனை அம்பாள் சிம்ம வாகனத்தில் வந்து வதம் புரிந்த இடமாக இந்த கோலாப்பூர் தலம் இருக்கிறது. மேலும் பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விட இந்த கோலாப்பூர் பகுதியை மட்டும் தனது வீரத்தால், தன் கரத்தை கொண்டு தூக்கி பிடித்து லட்சுமி தேவி காத்ததாக தல வரலாறு கூறுகின்றது 

இந்த கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலை சுற்றி 50 சிறு கோயில்களும், ஊர் முழுவதும் சுமார் 3000 சிறு கோயில்களும் கட்டப்பட்டுள்ளது அதிசயம் ஆகும். மேலும் இக்கோயிலில் ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி கோயிலின் கர்ப்ப கிரக பால்கனி வழியாக லட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. லட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது தாயாரை வணங்குவது மிகுந்த நன்மை தரும் என கூறுகிறார்கள். மகாதுவாரம் எனப்படும் மேற்கு வாயிலில் அழகிய தீபஸ்தம்பங்ககளை காண முடியும்.

காளி, சரஸ்வதி, நவகிரகங்கள், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதன், சீதை, லட்சுமணன், மாருதியுடன் கூடிய ஸ்ரீராமன் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.  
      
தோஷங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பிரார்த்தனை செய்தால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
    
இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.  
      
மகாத்வாரம் என்ற மேற்கு வாசலில் அழகிய தீபஸ்தம்பங்களைக் காணலாம். கருட மண்டபமும் கணேசர் சன்னதியும் கருவறைக்கு எதிரில் உள்ளன. அன்னை ஒரு சதுரபீடத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறாள். அன்னையின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் அரிதான கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.  
   
தல வரலாறு:
   
பிரளய காலத்தில் கடல் பொங்கி எல்லா இடங்களையும் கொண்டுவிட, இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலக்ஷ்மியின் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தப்பட்டது. கரவீர்= கர- கை,வீர்-வீரம். காசியை விட்டு வெளியேறிய அகத்தியர் கயிலைநாதனிடம் வேண்ட, அவருக்காக ஈசன் கட்டிய, காசிக்குச் சமமான இத்தலம் குளபுரம் என்றும் அழைக்கப்பட்டது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

2 comments:

  1. ஓம் காகபுஜண்டர் திருப்பாதம் போற்றி.
    வாழ்க வளமுடன்.
    நற்பவி,நற்பவி,நற்பவி.

    ReplyDelete
  2. ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி.
    அனைத்து ஜீவ ராசிகளும்
    வாழ்க வளமுடன்
    .நற்பவி,நற்பவி,நற்பவி.

    ReplyDelete