​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 15 May 2022

சித்தன் அருள் - 1134 - அன்புடன் அகத்தியர் - கிரௌஞ்சகிரி முருகர் வாக்கு!












30/4/2022 அன்று கந்தன் உரைத்த ஆலய பொதுவாக்கு .

வாக்குரைத்த ஸ்தலம்.
ஸ்ரீ சுப்ரமண்ய குமாரசுவாமி ஆலயம் கிரௌஞ்சகிரி. 
சந்தூர். 
பெல்லாரி மாவட்டம். 
கர்நாடகா. 

புவி உலகத்தை ஆளும் தந்தையையும் தாயையும் பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன். 

எளிதாக, எளிதாக உலகெங்கிலும் மிகும்,  மிகும் பக்தியோடு கந்தன் உரைக்கின்றேன்.

இதனையும் அறியாமல் ஒன்று உண்டா??? ஒன்று உண்டா???

யான் ஞானப் பாலை கக்கியவன்!!!!

கக்கியவனே!!! இதனையும் அறிந்து ஆராயாமல் ஆராயாமல் இருந்துவிட்டால் கூட ஆனால் சில மாமனிதர்கள் குருக்கள், குருக்கள் உண்டு.

உண்டு இதனையும் பின் உண்ண உணவாகவே(பால்கட்டி) செயல் படுத்திக் கொண்டால் ஞானங்கள், ஞானங்கள் பெருகும். வியாதிகள் விலகும்.

ஆனாலும் மனிதனின் குணத்தில் சிறப்புகள் இல்லை. சிறப்புக்கள் இல்லை என்பதாலும் என்னைத் தேடி வந்து அடைகின்றனர் ஆனாலும் யான் அருளை கொடுப்பேனா??? என்ன???

கொருளை, கொருளை கொண்டு வந்து பொருளை ஈட்டுவதற்கும் சமமான வழி வகுத்தது உண்டா??? உண்டா?? இல்லை. காரணத்தால் இல்லையே இல்லை... இவ்புவியுலகில் உண்மையான பக்திகள்.

பக்திகள் என்பதற்கிணங்க உண்மையான பக்திகளே பின் பொய்யாகும். ஆனாலும் மெய்யாகும் உண்மைதனை மனிதன் உணருவதில்லை.

பிடித்தமான இத்தலத்தில் பிள்ளை இதை என்று கூற பின் வரும் நாளில் கூட என்னவென்று அறியாமல். ஆனாலும் இதனையும் ஏற்க, ஏற்க! பக்தி பின் பக்தி என்பது அருணகிரி போல் செலுத்த வேண்டும்.

ஆனாலும் அருணகிரி என் மேல் பக்தி செலுத்தினான் பக்தி செலுத்தினான்!! இவை அனைவரும் உணர்ந்ததே!!

ஆனாலும் இதனையுன்றி அறிய!!  அரிய வகைக்கு உண்டு பக்தி!!  அவ் பக்திதான் பின் உலகம் பேசும். அவ் பக்தி  எவ்வாறு? எவ்வாறு என்பதையும் கூட சொல்லி விடுகின்றேன்.

சொல்லுகின்றேன் இல்லை நன்றாகவே அளவுகடந்த அளவுகடந்த அருணகிரி பக்திகள் மிகுந்து மிகுந்து காணப்பட்டன.

ஆனாலும் என் மீது தந்தையே குழந்தாய் என்றும் கூட...ஆனாலும் இவந்தனை சோதிக்க வேண்டும் என்று கூட யானே!!!  சோதித்தேன், சோதித்தேன் சோதித்தேன் எதை எதை என்றுகூட.

இவைதன் இப்பொழுது கலியுகத்தில் மனிதர்கள் அறிவார்கள்.

அறிவார்கள் சோதித்த பிறகும் எழுந்து நின்றான் அருணகிரி.

கந்தா!!!! முருகா!!!  கதிர் வேலா!!! அழகா!!!  வேலவா!!!  குழந்தாய்!! என்றெல்லாம்.... 

ஆனாலும் மனதில் எந்தனுக்கு  பட்டது!!! ஏன்? இவந்தனுக்கு சோதனைகள் செய்கின்றோம் என்று!!!

ஆனாலும் விடவில்லை இவந்தனை சோதனைகள் செய்து செய்து பின் பின் என்னை விட்டு விலகட்டும் என்று பார்ப்போம் என்று கூட சோதனைகள் தந்தேன்.

ஆனாலும் முருகா!!!! என்ற வார்த்தையை அவன் விட்டுவிடவில்லை.

இதனை ஆனாலும் இவந்தனை பல பல வழிகளில் கஷ்டங்கள் ஆனாலும் என் தந்தையனார்... ஏன்? இதனை இவந்தனை இங்கு ஏன் இவ்வளவு கஷ்டங்களை வைக்கின்றாய்???

யான் தான் சோதனை செய்வேன் ஆனாலும் என்னை பார்த்து நீயும் தெரிந்து கொண்டாயா என்ன????( ஈசன் முருகனிடம்) தெரிந்து கொண்டாயா என்ன??? 

தந்தையே!! நில் !! 

நீயே சோதனை கொடுத்து இருக்கின்றாய்..... ஆனால் உன் பிள்ளை யான்!! பன்மடங்கு சோதனை கொடுப்பேன். ஆனால்  அது மனிதருக்கு யாருக்கும் தெரிவதில்லை.

அதனால் இவந்தனக்கு சோதனைகளே இவந்தனுக்கு சாதனைகளாக ஆகப்போகின்றது.

ஆனாலும் இவந்தனுக்கே அது தெரியவில்லை....

சரி!!!!  இதையன்றி கூற தந்தையானவன் நீ மனித ரூபத்தில் சென்று... இவனை சில சில சோதனைகள் செய்யலாம் என்று கூட... 

ஆனால் இங்கிருந்து ஆரம்பித்துவிட்டேன் சோதனைகளைச் செய்ய!!!

அமர்ந்தான் அருணகிரி தியானங்கள் செய்து கொண்டிருந்தான்.

யானும் அவனிடத்தில் அமர்ந்து விட்டேன். அமர்ந்து விட்டேன் எதையென்று கூற...

மனிதா!!!!  என்றே யான் அழைத்தேன்!!! ஏனென்றால் பின் வித்தியாசம் பார்க்க வேண்டுமே என்று எண்ணி!! பின்  மனிதனுக்கு மனிதா மனிதா என்று கூப்பிட்டால் அனைவரும் திரும்பி பார்த்து விடுவார்கள் அதனால்தான் பெயர் ஒன்றை வைத்துவிட்டார்கள். மனிதர்களுக்கு.

ஆனாலும் இதனை அறியாமல் மனிதனோ! என்னென்ன? செய்கின்றான்!!! என்பதை உணர்க!!! 

உணர்க!!!   இல்லை ஆனால் மனிதனே என்று அன்பாக பேசினேன் அருணகிரியிடத்திலே!!! 

ஆனால், ஆனாலும் அவந்தனுக்கு புரியும் அளவு தகுதிகள் இருக்கின்றன...

அவ் மதியையும் யான் மயக்கி விட்டேன்...வந்ததை. 

ஆனாலும் அவந்தன் கூர்ந்து கவனித்தான் கண்களையும் பார்த்தான்... ஆனாலும்  மதி  இதையன்றி கூற... தெளிவு பெற்றான்.

வந்தது யார் என்று கூட!!! முருகனே என்று கூட!!!

இவையென்று கூட இப்பொழுது பார்த்தீர்களா!!!....

பக்தி என்பது எங்கு?? அழைத்துச் செல்கின்றது என்று?!!

பக்தி என்று ஒன்று இருந்தால் பாசத்தோடு ஒன்று இருந்தால் அது இறைவன்..!!

எதையென்று கூற இவையென்றும்  அல்லாது!! பிற் பகுதிக்கு ஆட்பட்டு கொண்டு கொண்டு செல்கின்றது .

ஆனாலும் முடியவில்லை என்னால் சோதனைகளைச் செய்ய!!!....

ஏனென்றால் அவ்வளவு அன்பு!!!!! அவ் அன்பின் மூலமே வந்து கொண்டிருக்கின்றான்.

மதியை மயக்கியும் உணர்ந்து கொண்டானே!!! அருணகிரி!!!

இதுதான் பக்தி!!!!

பின் யான் சென்று விட்டேன்.

என் தந்தையோ!? என்னிடம் உன்னால் சோதிக்க முடிந்ததா????

நீயும் சென்று விட்டாய்.

உந்தனுக்கு பிள்ளையாக பிறந்து உன்னை விட யான் சோதிப்பேன் என்று... இப்பொழுது அறிந்து கொண்டாயா?!!!

ஆனாலும் இப்பொழுது தந்தையே!!! என்னை அவந்தன் உணர்ந்து விட்டான்.... எதற்காக? என்று கூட யான் அறிந்து விட்டேன்.

ஆனால் உன்னை எதையென்று கூற அறிய முற்படுகின்றானா? என்று கூட .... நீ சோதனை செய் என்று கூட...யான் அனுப்பினேன் என் தந்தையை.

அனுப்பி வைத்தேன் பின் பக்கத்தில்அமர்ந்துகொண்டார்.... பக்கத்தில் அமர்ந்து கொண்டே பின் தியானங்கள் மிகுந்து காணப்பட்டன அருணகிரியிடம்.

யானும் பக்கத்திலே அமர்ந்து விட்டேன். ஆனால் சூட்சும ரூபத்திலே.... 

பின்... சூட்சம ரூபத்திலே அமர்ந்து விட்டது பின் என் தாயவள் உமா மகேஸ்வரி. தந்தையானவன் ஆனால் மனித ரூபத்தில் அமர்ந்துவிட்டான்.

(ஈசன் அருணகிரிநாதரிடம்) 

துறவியே!!!! உந்தனுக்கு என்ன தேவை??? என்று என் தந்தை கேட்டறிந்தான்.

ஆனால் வந்தது என் தந்தை என்று அருணகிரி உணர்ந்து கொள்ளவே இல்லை.

ஏன் ?என்று தெரியுமா?? தெரிந்து கொள்ளுங்கள் மக்களே....

இதனை பார்த்தும் தெரிந்து கொள்வீர்கள் நீங்கள்.

ஆனாலும் பின் ஏன் இந்த இப்பொழுது கூட தயக்கம்!?

தயக்கம் இதையன்றி கூற உற்றுப் பார்த்தான் அதை யாரும் அறிந்து கொண்டேன். ஆனால் உணரவில்லை என் தந்தை பின் எதையென்று கூற... நமச்சிவாயா என்றே!!! 

ஆனாலும் பின் யாரப்பா நீ??? 

எதையென்று கூற அப்பொழுதுதான் பேச துவங்கினான் அருணகிரி!!

இதையும் கூறக் கூற இதற்கும் இப்பெயருக்கும் சம்பந்தங்கள் உண்டு..

இதற்கும் வரும் காலங்களில் சித்தர்கள் உரைப்பார்கள்... ஏன் அருணகிரியே வந்து வாக்குகளாக செப்புவான்.

ஆனாலும் இதை அறிந்துகொண்டான் என் தந்தை.

ஆனாலும் அறியவில்லை அருணகிரி.

பின் என் தந்தையும் அருணகிரியாரை பார்த்து யாரப்பா!! யாரப்பா.!? நீ?

இங்கே வந்து இவ்வளவு தவத்தை மேற்கொண்டுள்ளாயே என்று கூட....

ஆனாலும் பின் அருணகிரி தயங்காமல் என் பிள்ளைக்காகவே வந்தேன்.!!!!

பின்... என் தந்தையோ (ஈசன்) உன் பிள்ளை !! யாரப்பா???

(அருணகிரி நாதர்) 

என் பிள்ளை  யாரப்பா? என்று கேட்கின்றாயே? நீ யாரப்பா??முதலில் என்று அருணகிரி பின் உரத்த குரலில் கேட்டு விட்டான்.

ஆனால் என் தந்தையோ கோபம் உண்டாயிற்று....

பின் யாருடைய குழந்தையை... யாருடையது என்று கூட....

ஆனாலும் இதற்கு தகுந்த வாறே..... மீண்டும் என் தந்தை .....ஈசன்.... 

யாருக்காக??  நீ இங்கே தவம் செய்து கொண்டிருக்கின்றாய்???

(அருணகிரி நாதர்) 

என் குழந்தையை பார்ப்பதற்கு!!!!

(ஈசன்)

உன் குழந்தை என்றாயே பின் உன் குழந்தையையே!!!!! பார்க்க முடியவில்லையா உன்னால்!!!! 

உன்னால் எப்படி இப்படி தவம் செய்து கொண்டிருக்க முடிகின்றது??!!!

தவம் செய்து கொண்டும் இருக்கின்றாய்...

இது ஆனாலும் இதை முற்பின் அறிவதற்கு.... இதிலும் சூட்சுமம் ஆனாலும்.... உண்டு பலவகை சூட்சுமங்கள்.

சூட்சுமங்கள் இல்லையப்பா ஆனாலும் பதில் அடங்கியுள்ளது...

ஆனாலும் பதில் உள்ளதுபோல் உள்ளதாகவே சொல்கின்றான் உள்ளே நுழையும் பொழுது...

என் தந்தையானவனும் மீண்டும் சோதிக்கின்றான்.

சோதித்து!!! சோதித்து!!!

அருணகிரி என் பிள்ளையை பார்த்திட்டுத்தான் செல்வேன்செல்வேன் என்பதற்கிணங்க....

ஆனாலும் கடைசியில் பின் யானும் ஒரு துறவி தானப்பா என்று கூட வேடம் அணிந்து விட்டான் என் தந்தை.

ஆனால் இதையன்றி கூற நன்றாகவே பின் இவ்வளவு பாசத்தோடு கேட்கின்றாரே!!! இவர் யாரென்று கூட அருணகிரி.

பின் இதையன்றி கூற இங்கிருந்து அண்ணாமலைக்கு புறப்பட மனது ஒத்து வந்தது.(அருணகிரி நாதருக்கு) 

இதனை அறிந்த த(ஈசன்) அவ் துறவியும்.  அத்துறவியே என் தந்தை....

ஓ!!!!! துறவியே நீயும் ஒரு துறவி!!! யானும் ஒரு துறவி!!

இங்கிருந்து அண்ணாமலைக்கு செல்வோமா என்று... அருணகிரி கேட்டு விட்டான்.

என் தந்தையோ!!! நகையாடினான்!!! நகைத்தும் விட்டான்!!!
 
எதையென்று சந்தோஷத்திலே!!! இதையென்று மீறிய அளவிற்கு கூட.... 
(ஈசன்) 

சரி!!! செல்வோம்.!! 

அங்கு என்ன? உள்ளது? என்பதை அறிய, அறிய! 

(அருணகிரி நாதர்) 

ஆனாலும் பின் ஈசன் இருக்கின்றான்!!! பின் அவந்தன் குழந்தையை யான் பார்க்க வேண்டும் ..

எதையென்று ஆனாலும் அவந்தன் குழந்தையும் என் குழந்தை தான்!!!! என்று யான் நிரூபிக்க வேண்டும்.
செல்வோம் வா என்று கூற... 

ஆனாலும் பக்தி ஈசன் மீதா?!! ஈசன் மீதா?? 

கந்தன் யானே!! என் மீதா!!? 

இதையன்றி உள்ளதை உள்ளபடியே ஆனாலும் புறப்பட்டார்கள் இருவரும்.

இருவர்கள் பாதிவழியில் கடந்து கடந்துகடந்து செல்வதற்குள் செல்வதற்குள் முடியவில்லை பின் இங்கே ஓர் திருத்தலம்( ஹம்பி) பின் அவையென்று கூட அதை தன்னும் அனுமான் அங்கே  விளையாடிக் கொண்டே இருக்கின்றான் இப்பொழுதும் கூட.

இப்பொழுது கூட விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தில் போய் சேர்ந்தார்கள் இவர்கள்.ஓய்வு பெற....

ஓய்வு பெற ஆனாலும் வந்தது அருணகிரி இதை பின் ஈசன் என்று அறிந்துகொண்டான் அறிந்து கொண்டான் என்பதற்கிணங்க பொருள் பல வகையில் உள்ளது. இப்பொருட்களை சித்தர்கள் உரைப்பார்கள்.

ஒவ்வொன்றும் அனைத்தும் யானே உரைத்து விட்டால் மதிப்பு !. மதிப்பு என்பதைவிட குறைப்பு !. குறைப்பு என்பதை விட மதிப்பு இதற்கு அர்த்தம் தெரிகின்றதா???

குறைந்து காணப்பட்டால் வரும் காலங்களில் அதற்கு மதிப்புக்கள் அதிகம். மதிப்புகள் ஆகவே இருந்தால் அதன் மதிப்பு குறைவாகவே போய்விடும்.

இது சரியாக கவனித்து விட்டீர்களா மனிதர்களே!!!

ஆனாலும் அருணகிரி சென்றுகொண்டே இருந்தான் பின்  எதையன்றி கூற பின் என் தந்தையானவன் மறைந்து விட்டான் சூட்சும ரூபத்தில்..

ஆனால் துறவி வரவில்லையே வரவில்லையே என்று கூட மீண்டும் அருணகிரி இத்தலத்திற்கு (கிரௌஞ்ச கிரி) வந்துவிட்டான்.

வந்துவிட்டான் வந்து விட்டானே என்பதற்கிணங்க மீண்டும் தவங்கள் செய்வோம்!! மீண்டும் தவங்கள் செய்வோம்!! என்பதையெல்லாம் உணர்ந்து உணர்ந்து உணர்ந்து உணர்ந்து குறிக்கோளாகவே உள்ளது போல் தெரிகின்றது.

மற்றபடி ஆனாலும் அறிந்துகொண்டான் இதையன்றி கூற... இங்கேதான் பின் யான் இருக்கின்றேன் என்று கூட திரும்பவும் வந்து விட்டான்.

எதையன்றி கூற ஆனால் என்னால் சோதனை செய்தாலும் ஆனாலும் இதையன்றி கூற மாறுவேடத்தில் வந்தாலும் அறிந்து கொண்டான் முருகனே !!! என்று கூட....

ஆனாலும் கடைசியாக பின் இவையன்றி  கூற திரும்பவும் அண்ணாமலைக்கு புறப்பட்டான் எதையன்றி கூற...

பின் போகும் வழிகளெல்லாம் பல பாடல்களை பாடிட்டு ஆனாலும் யார் பாடல்களை முருகா!!! கந்தா!! கதிர்வேலா!!!

ஆனாலும் (முருகன்) என் கண்கள் மல்கியது!!!

இவன் செய்த பெரும் புண்ணியம்!!!

ஆனாலும் பல கஷ்டங்கள் என் தாயும் தந்தையும் குறித்து ஆனாலும் எந்தனை விடவில்லை.

ஆனாலும் இதையன்றி கூற சென்று கொண்டே இருக்கையில் பல பாடல்களை பாடிட்டு பாடிட்டு என் தந்தையின் இல்லமான அண்ணாமலையை அடைந்து அங்கேயும் பல பாடல்களை பாடிட்டு  பல திருத்தலங்களை தேடிட்டு... 

ஆனால்!!! முருகா என்ற ஒரே வார்த்தையை விட்டுவிடவில்லை!!!

யானும் கவனித்துக்கொண்டே இருந்தேன்!!!!

ஆனால் இவந்தனுக்கு...இவன் எதையென்று கூற பின் இவந்தன் மேற்சொன்னவாறே!!  யானும் பாசத்திற்கு அடிமையானவனே!!! 
தந்தை என்றே குறிப்பிடுவேன் இவந்தனை.....

இதனையும் அறிந்து ஆனாலும் இனிமேலும் நிச்சயமாய் முருகன் காட்சி தர போவதில்லை என்று எண்ணி விட்டான்.

ஆனால் மாய்த்துக் கொண்டு உயிரை விடுவதற்கு பின் அங்கேயே அண்ணா மலையிலே....

ஆனாலும் கடைசியாக யான் வந்தேன்...!!! ரூபத்தில்.

ஆனாலும் பின் அவந்தன் வரலாறு முற்று பெற்றது என்று எண்ணி ஆனாலும் ஆனாலும் இப்பொழுதும் தொடர்கின்றது இதுதான் பக்தி!!!!

பக்தி என்பதை ஆழ்ந்து கவனித்து விட்டீர்களா!!!!

பின் பக்தி செலுத்தினால் நிச்சயம் அனைத்தும் யான் தருவேன்...

ஆனால் மற்றவைகள் எல்லாம் வீண் என்பது.. எந்தனுக்கே தெரியும். 

அதனால் தான் என்னை நம்பியவருக்கு சில கஷ்டங்களையும் யான் கொடுப்பேன். நிச்சயம் ஏனென்றால் அதனையும் கூட தெரிந்து கொள்ள வேண்டும் அறிவுகள் பலப்பட வேண்டும். என்பதற்கிணங்கவே.

ஆனாலும் இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி முருகா!!! முருகா!!! என்று சொல்கின்றான். சொல்கின்றானே!!! என் தந்தையாகவே ஏற்றுக்கொண்டேன் அருணகிரியை.

ஆனாலும் மனிதனின் இப்போதைய நிலைமை களை பார்த்தால் பொய்யான பக்திகள்... மனிதனும் அதனை உணர்வதில்லை.

இவையின்னும் அதனால் தான் ஆனாலும் இம்மலையை பின் பல மனிதர்கள் பின் எப்படியாவது ஆட்கொண்டு அழித்துவிடவேண்டும் என்று எண்ணினார்கள்.

ஆனாலும் எவை என்று கூட அருணகிரி பின் என் பிள்ளையை எதையென்று கூற உணர உணர்ந்து விட்டான்... என் பிள்ளையையே அழிக்க பார்க்கின்றீர்களா என்று!!!

பின் யான் விடமாட்டேன் என்று கூட காவலுக்காக இங்கே இருக்கின்றான்.

இது!!  இது தான் பக்தி.. சிறந்தது.

இதைவிட பக்தி மனிதர்கள் யாராவது காட்டி விடுவார்களா என்ன????

இல்லை!!!  போலித்தனமான பக்தியை காட்டிக் கொண்டே இருக்கின்றார்கள் மனிதர்கள்.

முதலில் அமைதியாக உட்கார்ந்து எதையென்று சிந்தித்து சிந்தித்து அன்பால் இறைவனை நேசியுங்கள்,  நேசியுங்கள் போதுமானது. 

யான் வருவேன்!!! 
சித்தர்களும் வருவார்கள்!!
ஏன் என் தாய் தந்தையும் வருவார்கள்!!!

யான் சொல்வேன்...ஏன்?? பிரம்மாவிற்கே பாடம் கற்பித்துள்ளேன் யான். 

அதனால் பிரம்மனும் யான் சொல்வதை கேட்டு விடுவான்.

அதனால் இங்கு பக்திகள் தான் சிறந்தது. பக்திகள் தவிர வேறு ஏதும் சிறந்தது இல்லை.

ஆனால் பக்தியை விட்டுவிட்டு அழியக்கூடியவை சிறந்தது என்று எண்ணிக் கொண்டிருக்கிறான்.அவ் சிறந்தவைகள் காப்பாற்றாது பின் அழிவுகள் நிச்சயம்.

அப்படி சென்று கொண்டு இருந்தால் இறைவன் மீது பக்திகள் ஆனாலும் இறைவன் செய்வான் என்றே பின் அளவுக்கு அதிகமாய் அழிவுகள் அற்ற சிறப்புகள் மிக்க சிறப்புகள் அழிவுகள் இதனை பக்தி என்பதா!??

ஆனால் அழிவின் பாதையில் பின் பக்தியை வைத்துவிட்டு இறைவனின் பாதையில் பக்தியைச் செலுத்துவதில்லை மனிதன்.

இதனால் எப்படி?? கஷ்டங்கள் வராமல் போகும்???

எதையென்று ஆனாலும் எதை என்று இப்பொழுது கூட பின் அருணகிரி இவ் ஆலயத்திலேயே தங்கி கொண்டே இருக்கின்றான். பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றான். இதுதான் அன்பு.

அன்பு சாலச்சிறந்தது!!!

இதனால் ஆனாலும் யான்  சொன்னேன்... அருணகிரியே..... எந்தனை அழிப்பதற்கு மனிதர்களா!!! என்று கூட.... 

இல்லை  இல்லை இவ்வுலகத்தை அழித்தாலும் யான் உன்னை காப்பேன் என் பிள்ளை போல் என்று!!!

இதனால் இங்கு வந்து வழிபடுபவர்களை யானும் காப்பேன்... காப்பேன் அதுமட்டுமில்லாமல் நிச்சயமாய் நீ எந்தனுக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று கூற.... 

அருணகிரி!!! செப்பு!!!

உந்தனுக்கு என்ன தேவை?? கொடுக்கின்றேன் என்று கூட....

அருணகிரி  !!!  செப்பு!!!  செப்பு!!!! 

முருகா!!!!  கந்தா!!!  அப்பனே!!!  குழந்தையே!!! யான் கேட்கின்றேன். மனிதர்கள் பல பல இன்னல்களை பட்டு வருகின்றனர் இவ்வுலகத்தில் அவை மட்டும் இல்லாமல் இக்கலியுகத்தில் கலியுகத்தில் கஷ்டங்கள் வரும் வரும் காலங்களில் இன்னும் கூட...

அதனால் தெரிந்தும் தெரியாமலும் இன்னும் பல கோடி மக்கள் கஷ்டத்தில் ஆழ்வார்.

ஆனாலும் அவர்கள் உணர்ந்து பக்தியை காட்டி இங்கு வந்து விட்டால் அவர்களுக்கு நீ மோட்சம் தரவேண்டும்...

ஆகட்டும் !!!அருணகிரி!!! அதுபோலவே.... என்று கூட.. 

அதனால் இங்கு வந்து வழிபட்டுச் செல்பவர்கள் நிச்சயம் மோட்சத்தை அருணகிரியே!! கொடுப்பான்!!.

ஆனாலும் எதற்கும் தகுதியானவை ஆனாலும் வரத்தை வாங்கிக் கொண்டான்.

சத்தியம் செய்துவிட்டேன் யான்!!! 

இதையன்றி கூற ஆனாலும் நிச்சயம் என் பக்தர்களையும் இங்கே அழைத்து வருவேன்.யான்.

ஆனாலும் இவையென்று கூற... அதற்கும் அனுகிரகங்கள் உண்டு உண்டு. 

அதனால் மோட்ச கதியானவர்களே இங்கு வரவழைப்பேன். 

பின் மனிதன் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது இவ் எதையன்றி ஆனாலும் இன்னொரு வாக்கையும் வாக்கையும் யான் வரமாக கேட்கின்றேன்...முருகா!! 

சொல் அருணகிரி!!! 

ஆனாலும் நீ ஞானப்பாலை இங்கு கக்கினாய்... ஆனால் உன் பாலை அருந்துபவர்கள் இன்னும் ஞானம் இன்னும் பக்தியில் நுழைய வேண்டும் அனைத்தும் தெரிந்துகொள்ளவேண்டும் பின் தீய செயல்களை செய்யக்கூடாது... அதனால் இம்மலையிலுள்ள உன் பாலை மக்கள் நிச்சயமாய் நல் மக்கள் அருந்த வேண்டும்.

சரி ஆனால் இவ்வுலகத்தில் நல் மக்கள் இல்லையே என்று யானும் கூறிவிட்டேன்.

நிச்சயம் யான் அழைத்து வருவேன் என்று கூட.

அதனால் என் பக்தர்கள் எதையன்றி கூற...அருணகிரியே பின் நிச்சயமாய் அழைத்து வருவான்... என் பாலையும் எதையென்று கூற பின் அதை உண்ணுபவர்கள் பின் தெளிவுகள் பெறுவார்கள். ஞானத்தின் உள்ளே நுழைவார்கள்... அனைத்தும் இறைவனே என்ற நிலைமைக்கு வந்து விடுவார்கள்!!! மற்றவை அனைத்தும் பொய்யே என்று கூட...

கூறுவார்கள் இன்னும் இன்னும் சித்தர்கள் அலைந்து சுற்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.. பல வகைகளிலும் பல வழிகளிலும். காடுகளிலும். மலைகளிலும்.

எதையெதை என்று கூற ஏன்?? இதற்கும் சம்பந்தங்கள் உண்டு. 

ஏன் இங்கு வந்து அமர்ந்து விடுகின்றார்கள் என்று கூட. 

உலகத்தை கணித்துக் கொண்டு இருக்க ஆனாலும் மனிதனின் செயல்களோ எல்லை மீறிக் கொண்டே போகின்றது.

நிச்சயம் இவ்வாறே நீண்டு கொண்டே இருந்தால்... என் தந்தையானவன் நிச்சயம் தண்டித்தே தீருவான் மனிதர்களை.

ஆனால் மனிதன் கூட எண்ணத்தில் நாம் வாழ்ந்து விடுவோம் என்று கூட எண்ணி கொண்டிருக்கின்றான்.

அதனால் ஆனால் இதையன்றி கூற மாயை தன்னை காப்பாற்றும் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றான் ஆனால் நிச்சயம் மாயை காக்காது.

மனித பெருமக்களே அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். எங்கெல்லாம் சிறு சிறு பாதைகளாகும் நிச்சயம் சித்தர்கள் காட்டுவார்கள்.

அகத்தியனும் இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றான்.

நிச்சயம் ஆனாலும் பெருமக்களே உணர்ந்து கொள்ளுங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் .

வழிபட்டு நல் விதமாக ஆசிகள்!! ஆசிகள்!!!

இதனைப் பற்றியும் இன்னும் விரிவாக சொல்வார்கள் சித்த பெருமக்கள்!!!

குருநாதர் அகத்திய பெருமான் ஜீவநாடியை முருகன் திருவடியில் வைத்து தீபாராதனை நடந்தது.. அரோகரா என பக்தியோடு விளித்து வழிபாடு செய்த போது முருகன் அலங்காரத்திலிருந்து பூக்களை சொரிய வைத்து ஆசிர்வாதங்கள் தந்தார்.. மேலும் ஆலயத்தில் முருகன் சன்னதிக்கு எதிரே ஜீவநாடி வாசிக்கும் பொழுது முருகனே வந்தார்.... அருணகிரி நாதர் அங்கேயே தங்கி இருக்கின்றார் என்று வாக்குரைத்த பொழுது ஒரு கிளி சுற்றி சுற்றி வந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தது.... முருகனும் அருணகிரியாரும் நடத்திய நிகழ்வுகள் பக்தி பரவசமாக இருந்தது. 

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ சுப்ரமண்ய குமாரசுவாமி ஆலயம் 
கிரௌஞ்சகிரி. 
சந்தூர். 583119
பெல்லாரி மாவட்டம் 
கர்நாடகா. +91 9481753750

அருகிலுள்ள ரயில் நிலையங்கள்: ஹோஸ்பெட், பெல்லாரி & தோரணகல்லு (24 கிமீ) குண்டக்கல்-ஹூப்ளி வழித்தடத்தில்.

கோவில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஹயாத் ஹம்பி (17 கி.மீ.), தோரணகல்லு சந்திப்பு மற்றும் ஹம்பி (57 கி.மீ.) போன்ற அருகிலுள்ள முக்கிய இடங்களிலிருந்து குமார சுவாமி ஆலயத்திற்கு செல்லலாம்.

சந்தூரில் இருந்து இடது புறம் செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் மலைப்பாதையில் சென்றால் ஆலயத்தை அடையலாம். 

ஆலயத்தில் முருகன் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. 

ஆலயம் மற்றும் வனப்பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆலயம் தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ளது. 

கனிம சுரங்கள் செயல் படுவதால் எந்நேரமும் லாரிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. 

முருகனின் ஞானப்பால் கட்டி. 

முருகன் கக்கிய ஞானப்பால் கட்டியை பார்வதி தேவியின் சன்னிதானத்தில் ஒரு தாம்பாளத்தில் வைத்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. 

சிறிது காலத்திற்கு முன் பால் கட்டியை எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம்.

ஆனால் தற்போது கனிம வளங்களை எடுக்கும் காரணத்தினால் பக்தர்கள் அங்கு பால்கட்டி மலைக்கு சென்று எடுக்க அனுமதி இல்லை. கோயில் பூசாரிகளே தேவையான அளவிற்கு எடுத்து வந்து வழங்குகின்றனர். 

ஆலயம் மலை மீது அமைந்துள்ளதால் அங்கு செல்போன்கள் இணைப்பு கிடைக்காது. 

மலையின் மீது கோயில் அருகிலும் கடைகள் எதுவும் கிடையாது.

தேவையானவற்றை முடிந்தவரை பூஜை பொருட்கள், பூக்கள் மாலைகள் என பூஜா திரவியங்கள் சந்தூர் ல் வாங்கி கொண்டு செல்வது நலமாகும். 

மலையின் மீது தற்காலிகமாக ஒரு பெரியவர் தேங்காய் பழம் போன்றவை ஒரு பெரியவர் அவ்வப்போது விஷேச நாட்களில் வந்து விற்பனைக்காக வந்து செல்கின்றார். 

ஆலயத்தில் வன அலுவலர் அலுவலகம் உள்ளது. பக்தர்கள் தங்குவதற்கு வசதிகள் பெரிதாக இல்லை. அலுவலகத்தில் அவர்கள் அனுமதித்தால் ஒரு நாள் தங்க முடியும்.. அதுவும் அவர்கள் முழு அனுமதி இருந்தால் மட்டுமே. 

ஸ்ரீ க்ரௌஞ்ச கிரி கோவில்

க்ரௌஞ்ச கிரி தென்னிந்தியாவில் சுப்பிரமணிய பகவானின் முதல் உறைவிடம். இது கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் சந்தூரில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

மலையின் தனிச்சிறப்பு அதன் நீள்வட்ட வடிவம் குறுகலான பாதையுடன் உள்ளது.

புராணங்களின்படி, மலையில் மறைந்திருந்த அரக்கனைக் கொல்வதற்காக, சுப்ரமணிய பகவான், தாரகா என்ற அரக்கனுடன் நடந்த போரில், தனது கோள ஆயுதமான வேல் மூலம் மலையை வெட்டியபோது, ​​இந்த இடைவெளியை ஏற்படுத்தினார். இந்த மலை அகஸ்திய மற்றும் பரசுராம முனிவர்களின் புராணங்களுடன் தொடர்புடையது. மேக சந்தேசம் என்ற படைப்பில் காளிதாசர் மலையின் மகத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். 

இக்கோயில் இந்தியாவின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பார்வதி மற்றும் குமாரசாமி கோவில்கள் உள்ளன. இக்கோயிலில் உள்ள விநாயகர் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது.

புராணங்களின் படி, பார்வதி கோவில் பாதாமி சாளுக்கியர்களால் கட்டப்பட்டது மற்றும் கோவிலில் பார்வதி தேவி முக்கிய தெய்வமாக உள்ளார். தற்போது, ​​இக்கோயில் குமாரசுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது மற்றும் ராஷ்டிரகூடர்களின் (8-10 ஆம் நூற்றாண்டு) ஆட்சியாளர்களால் புனிதப்படுத்தப்பட்டது. இக்கோயிலின் முதன்மைக் கடவுள் சுப்ரமணியர் ஆவார். கோவில் இப்போது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது. இது 15 ஆம் நூற்றாண்டில் அடர்ந்த மரங்கள் நிறைந்த சுவாமிமலை மலையில் உள்ளூர் ஆட்சியாளர்களான கோர்பேட்ஸால் கண்டுபிடிக்கப்பட்டது.

மலை பற்றிய புராணக்கதை :

க்ரௌஞ்சா என்ற வார்த்தை விசித்திரமாகத் தெரிகிறது. புராணங்களின்படி, க்ரௌஞ்சன் ஒரு அரக்கன், இந்த வழியாக செல்லும் முனிவர்களைக் கொல்ல மலையின் வடிவத்தை எடுத்தான். அகத்திய முனிவர் கார்த்திகேயரால் மலையைப் பிளந்து கொல்லும் வரை அவரை மலையாக மாறும்படி சபித்தார்.

கிரௌஞ்ச கிரி மலையின் தனிச்சிறப்பு என்னவென்றால், அது ஒரு நீள்வட்ட வடிவில் உள்ளது, அதன் குறுக்கே ஒரு கணவாய் வெட்டப்பட்டுள்ளது. புராணங்களின் படி, இந்த மலையின் உள்ளே மறைந்திருந்த தாரகா என்ற அரக்கனைக் கொல்ல இந்த மலையைத் துண்டித்தபோது, ​​​​கார்த்திகேய பகவான் (தென்னிந்தியாவில் சுப்ரமணியர் அல்லது முருகன் என்று அறியப்படுகிறார்) மலையில் இந்த இடைவெளியை ஏற்படுத்தினார்.

இப்போது சுவாமிமலை வனச்சரகத்தில் ரோஸ்வுட், சந்தனம், தேக்கு போன்ற மரங்கள் முழு மகிமையுடன் செழித்து வளர்ந்துள்ளன.

புவியியலாளர்களின் கூற்றுப்படி , இந்த விசித்திரமான மலை எரிமலை வெடிப்புகளால் ஆனது மற்றும் கனிம வளங்கள் அதிகம் கிடைக்கின்றது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இங்குள்ள மண் மற்றும் ஏரி சிவப்பு சதுப்பு நிலமாக உள்ளது,  இரும்பு மற்றும் மாங்கனீசு கனிம சுரங்கம் இயங்குகின்றது. 

மயில்களும் இங்கு அதிகம் காணப்படுகின்றன. வனப்பகுதி சிறுத்தைகளின் நல்ல வசிப்பிடமாகவும் உள்ளது.

சந்தூரிலிருந்து 10 கிமீ தொலைவில் கிரௌஞ்ச கிரி உள்ளது. கர்நாடக மாநில நெடுஞ்சாலை (SH-40) மலையின் இடைவெளி வழியாகச் செல்கிறது, சந்தூரை மாநிலத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. கோயில் வளாகம் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது மற்றும் சாலை வழியாக சந்தூருடன் இணைக்கப்பட்டுள்ளது. சில கரடுமுரடான திட்டுகள் இருந்தாலும் சாலையின் நிலை நன்றாக உள்ளது. இருப்பினும் கண்ணிவெடிகளை ஏற்றிச் செல்லும் கனிம வளத்துறை கனிமங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிக அளவில் இயங்குகின்றன. கனரக வாகனங்கள் இந்த வழித்தடத்தில் தொடர்ந்து செல்வதால் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

1 comment:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    ஓம் முருகா சரணம்.... உன்னை காணும் பாக்கியம் கிடைக்க வேண்டும் ஐயனே...உன் பால்கட்டி பிரசாதம் வேண்டும் முருகா சரணம்

    ReplyDelete