​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 4 May 2022

சித்தன் அருள் - 1129 - அன்புடன் அகத்தியர் - சோமநாதேஷ்வரம் ஆலயம், சோம்நாத்!







23/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : சோமநாதேஷ்வரம் ஆலயம். ஜோதிர்லிங்கம் 
சோம்நாத். 
பிரபாஸ் பட்டினம். வெராவல் 
கிர் மாவட்டம் 
குஜராத். 

ஆதி சோமனை மனதில் எண்ணி செப்புகின்றேன் வாக்குகள் அகத்தியன். 

அப்பனே இவைதன் உணர உணர மீண்டும் மனிதர்களுக்கு பிறப்புக்கள் இல்லை... இல்லை என்பேன். 

அப்பனே நல்விதமாக பிறப்பை அறிய வேண்டும், பிறப்பை அறிய வேண்டும் என்பேன் அப்பனே....

எதற்காக பிறந்தோம்?? எதற்காக வளர்க்கின்றோம்??
மீண்டும் ஏதுமில்லாமல் செல்கின்றோம் அப்பனே இவையெல்லாம் உணர வேண்டும்.

உணர வேண்டும் என் மக்களே!! சொல்லிவிட்டேன்.

இவற்றை உணர்ந்தாலே அப்பனே கோபங்களும் வளராது அப்பனே காமங்களும் வளராது அப்பனே.

இதையென்று கூற அப்பனே என்றுமே எதையுமே வளராது என்பேன் அப்பனே.

அப்பனே பல சித்தர்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.எதையன்றி கூற அப்பனே நல் முறையாக நல் மனதாக அன்பை மட்டும் செலுத்தினாலே யாங்கள் வருவோம் வருவோம் என்றெல்லாம்.

ஆனாலும் அப்பனே புத்திகெட்ட மனிதர்கள் அப்பனே இவை உருவாக்க அவை உருவாக்க உருவாக்கி காசுகளை சம்பாதிக்கின்றான் அப்பனே . காசுகள் சம்பாதித்து பின் அப்படியே அதனை விட்டு விட்டுச் செல்கின்றான் அப்பனே.

அதனை எதையென்று கூற யார்? காப்பது? அப்பனே !!
தெரிந்து கொள்ளுங்கள் நன்றாக அப்பனே இப்படித்தான் அழிந்து கொண்டிருக்கின்றது அப்பனே.

தேவையில்லாமல் அப்பனே எதை எதையோ உருவாக்கி உருவாக்கி அப்பனே மனிதனிடத்தில் அப்பனே பணபலங்கள் திருட்டின் மூலம் வந்து அப்பனே இவற்றின் மூலம் எவ்வாறு செலவுகள் செய்வது என்று தெரியாமல் அப்பனே  இதையன்றி கூற... அதனால் திருத்தலங்களை உருவாக்குகின்றான்

ஆனால் ஒன்றும் பயனில்லை அப்பனே சொல்லிவிட்டேன்.

அதனால் அன்பை பரிமாறுங்கள் அப்பனே.

அன்பே பின் எதையன்றி கூற அன்பை பரப்பினால் மட்டுமே யாங்களே நிச்சயமாய் உதவிகள் செய்வோம் அப்பனே. 

ஒன்றை சொல்கின்றேன் அப்பனே....

இவ் சோமநாதனின் இதையன்றி கூற தரிசனங்கள் பலபல அப்பனே.

பல கோடிகள் பல பல முன்னின்று மனிதர்களுக்கும் பின் இங்கு தரிசனம் அளித்து அளித்து ஆனாலும் பலபல மன்னர்கள்  எதையென்று மக்கள் முன்னேறுகிறார்களே என்பதற்கிணங்க இத்திருத்தலத்தை அழித்துவிட்டனர்.
 
பலப்பல முறை!!

ஆனாலும் ஈசன் விடவில்லை நிச்சயமாய் அழித்த உடனே பின் எழுந்தருளினான் அப்பனே மீண்டும் எப்படி வந்தது என்பதை கூட மன்னர்கள் முழித்தனர்!!!!

ஆனாலும் திரும்பவும் அழித்தனர்.... திரும்பவும் அப்பனே எதைக் கொண்டு யாரால் ஏற்றவேண்டுமோ மீண்டு எழுந்தான் ஈசன்.

அப்பனை ஆனாலும் உண்மைகள் அவர்களுக்குத் தெரியவில்லை.....

மீண்டும் மீண்டும் அழித்தனர்!!!!

மீண்டும் மீண்டும் எழுந்தான் ஈசன்!!!!

எதற்காக அப்பனே அன்பு  தான் பிரதானமானது அப்பனே!!!

அப்பனே இவையன்றி கூற மக்கள் விடவில்லை.. அப்பனே.....

நமச்சிவாயா !!நமச்சிவாயா!!! என்றெல்லாம் அப்பனே இங்கு தவம் இயற்றினார்கள்....வா!!!  எதையன்றி கூற அப்பனே பலகோடி மக்களை தேவையின்றி கூட அப்பொழுது அழித்தார்கள் அப்பனே மன்னர்கள்.

இவ் வீட்டை எழுந்து அருள் என்று.. 

ஆனாலும் ஈசன்.... எதையன்றி கூற. அப் பலகோடி மக்களும் எதையென்று கூற அப்பாவி.!!!

பின் அப்பாவிகளே!!! என்று உணர்ந்த என்றென்றும் கூற கூற முற்பட்ட பொழுது திரும்பவும் ஈசனை அடியோடு அழித்துவிட்டனர் திருத்தலத்தை...

அதனால் அமைதியாக இருந்த ஈசன் மீண்டும் எழுந்தருளினான்.!!! எழுந்தருளினான்!!! என்பேன் .

இனிமேலும் பொறுக்கலாகாது என்பேன். என்று கூட மனதில் தோன்றி பின்  திருத்தலங்களை அழித்தவர்களுக்கு தண்டனை கொடுத்தான். மக்கள் சந்தோஷப்பட்டனர்.

அப்பனே!!! இதைத்தான் பின் எதையன்றி கூற ஈசன்!!! எவையென்று கூறும் பொழுதும் கூட அப்பனே..!!

யாங்கள் உருவாக்கியதற்கு அழிவுகளே இல்லை என்று சொல்லி விட்டேன்.அப்பனே.

பல பல மர்மவினைகள் தொடரும் பொழுது கூட அப்பனே புதுமையான திருத்தலங்கள் அப்பனே எப்படி கட்டுவது?? என்பது கூட மனிதன் தெரியாமல் கட்டி விடுகின்றான்.

எதற்காக கட்டுகின்றோம்?? என்பதைக் கூட தெரியாமல் கட்டி விட்டு அப்பனே  எதையன்றி கூற ஆனாலும் அத் திருத்தலத்திலும் அப்பனே போகப்போக அப்பனே அழிந்தும் விடுகின்றது.

ஆனால் அழியாமல் காக்க வேண்டும் அப்பனே...அவ் அழியாமல் இருப்பதற்கு பல சூட்சுமங்கள் இருக்கின்றன அப்பனே.

அதனால் தான் அப்பனே!!! இவையன்றி கூற பின் பலப்பல யுகங்களையும் கடந்து திருத்தலங்கள் வாழ்ந்து வருகின்றன.

எதனால்? எதனால்? என்பதைக்கூட சித்தர் பெருமக்களே அறிவார்கள் இதனையும் கூட.

அதனால்தான் அப்பனே!! எப்படி கட்ட வேண்டும்? எதனையென்று கூற முன்னிறுத்தி அப்பனே ஒவ்வொரு ஆலயத்திலும் நல்விதமாகவே பின் கட்டி முடித்தால் அப்பனே மீண்டும் சிறப்பு பெறும்.

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே மனிதன் தற்சமயத்தில் இக்கலியுகத்தில் திருடி, திருடி அப்பனே பணம் ஈட்டி அப்பனே திருத்தலத்தை கட்டுகின்றான்.

அப்பனே!!!!  இறைவன் எவ்வாறு ஏற்பான்????????

சொல்லுங்கள் அப்பனே!!!! மகன்களே!!!!

இதையன்றி கூற அதனால் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு அப்பனே ஆனாலும் இதையன்றி கூற இவ்வாறு இறைவனுக்கே சேவை அன்பாக மூலம் இயற்றினால் அப்பனே!!! இறைவனே வந்து ஆட்கொண்டு அப்பனே எளிதில் முடித்து விடுவான். அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இக்கலியுகத்தில் அப்பனே.!!!

கலியுகத்தில் அப்பனே எதையென்று கூற முன்னேற்ற பாதையில் செல்லலாம்.அப்பனே. இறைவனை வைத்தே செல்லலாம் என்பேன். மற்றவைகள் வீண்!! அப்பனே.

இவையன்றி கூற இன்னும் அப்பனே மனிதனுக்கு புத்திகள் பெறவில்லை!!!! அப்பனே எவையன்றி கூற ஆனாலும் அப்பனே....

இரவு !!!இரவாகவே இருக்காது.... என்பதைக் கூட பல சித்தர்கள் எடுத்துரைத்தனர்.

அப்பனே பகல் பகலாகவே இருக்காது என்பதுதான் முன்பே இதையென்று கூற அறிவித்து விட்டேன் தெளிவாகவே அப்பனே...

எதையன்றி கூற அப்பனே இவை இவை என்று கூற உணராதபடி அப்பனே நல்நோக்கங்கள் உண்டு உண்டு என்பதற்கிணங்க அப்பனே இதையென்றும் கூற மறுத்தாலும் கூட அப்பனே உண்டு ஆனாலும் இவை பின் இவை ஓட எவ்வாறு என்பது அப்பனே அப்பாவி மக்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள்

ஏனென்றால் அப்பனே இவையன்றி கூற புத்திகள் கெட்ட மனிதன் இவ்வுலகத்தில் பக்தி பக்தி என்றெல்லாம் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்றான்.

அதனால் அப்பனே இறைவன் அவனையும் ஏமாற்றி விடுகின்றான். அதனால் அப்பனே அன்பே அன்பின் வழியாகத்தான் இறைவனை காண முடியும்.அவ் அன்பின் வழியாய் அனைத்தும் நிறைவேற்றுவான் அப்பனே எதையென்று கூற ...

அதனால் அப்பனே.... எதற்கும் ஆசைப்படாமல் அப்பனே எவை எவையென்று கூற அப்பனே மூலனும் சொன்னான் அப்பனே

எதன் மீது பற்று வைக்க?? பற்றே வைக்க வேண்டாமே.... துறந்து விடு அனைத்தும் கூட.. நிச்சயம் ஈசன் வந்து அழைத்துச் செல்வான் கையோடு...

யாங்களும் வந்து அழைத்துச் செல்வோம் அப்பனே.

உண்மையானவை எதையெதை என்று கூற அப்பனே இனிமேலும் வாக்குகள் சொல்வோம்.

அப்பனே சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே இரவு எப்பொழுதும் இரவாக இருக்காது பகலும் கூட எப்பொழுதும் கூட பகலாகவே இருக்காது அப்பனே.

அதர்மம் !!!அதர்மம் ஆகவே இருக்காது.

தர்மம், தர்மம் ஓங்கும்!!!! அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே நேற்றைய பொழுதில் கூட அப்பனே!!  துவாரகாவில் எதையென்று கூற கிருஷ்ணன் அப்படியே வருவானப்பா.!!!!

இதையன்றி கூற கீழ்நோக்கி... இவையன்றி கூற அவ் வழியாக வந்து அப்பனே இவையன்றி கூற ஓர் கீழே இருக்கும் எதையன்றி கூற கடைசியில் வந்தடைவான். அப்பனே...இவையன்றி கூற.

அங்கும் இங்கும் சென்று கொண்டே இருப்பான் !!!

அப்பனே இவையென்று கூற இங்கும் பல பல ரூபங்களில் அப்பனே காட்சியளிப்பான்...

அப்பனே!! உண்மை உண்டு.!!!

எதையென்று கூற கூற அப்பனே இவையன்றி கூற அப்பனே!! இன்னும் பல கிலோமீட்டர் எதையென்று கூற
எவையென்பதை கூட துவாரகாவில் இருந்து அப்பனே அவ்வழியே கடலோரத்திலே பின் வந்தே செல்வான் அப்பனே.(துவாரகா- உடுப்பி- குருவாயூர்) அப்படியே பார்த்துகொண்டு அப்பனே கடைசியில் அப்பனே உண்மைப் பொருளை உணர்வதற்காக அப்பனே கடைசிப் பகுதியில் நிற்பான் அப்பனே அவன்தான் குழந்தை வடிவம் ஆனவன் அப்பனே.

எதையன்றி கூற இப்பொழுது புரிகின்றதா? அப்பனே !!!எங்கிருந்து? வந்தவன்!! எங்கிருந்து? செல்கின்றான்!! என்பதையெல்லாம் பார்க்கும் பொழுது அப்பனே இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே.

இவை, இவை, என்று என்பதை கூறும் பொழுது கூட அப்பனே உண்மைப் பொருளை அறியாதவரை அப்பனே ஒன்றுமில்லை அப்பனே உண்மைப் பொருளை அறிந்தவனே அப்பனே அமைதியாக இருப்பான்!!!  ஒன்றும் சொல்ல மாட்டான்.

அப்பனே உண்மைப் பொருளை அறியாதவனோ!!??  அதை, இதை இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம் புறங்கூறி கூவிகொண்டிருப்பான் அப்பனே. ஆனாலும் ஒன்றும் இல்லையப்பா அவையெல்லாம் அப்பனே.

அதனால் அப்பனே இவையன்றி கூற சித்தர்கள் யாங்கள் நிச்சயமாய் நல்லோர்களை காப்போம் அப்பனே எதையன்றி கூற இனிமேலும் அப்பனே...

அதனால் நீங்கள் தகுதி உள்ளவனாக இருக்கவேண்டும் அப்பனே!!!!

கோபத்தையும் பின் விலக்கி வைக்க வேண்டும் ,

பொறாமை குணத்தையும் அப்பனே சொல்கின்றேன்!!!

பொறாமை பட்டால் அப்பனே அனைத்தும் அழிந்துவிடும் அப்பனே. ஒன்றுமில்லாமல் சென்றுவிடும் அப்பனே.

யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன் அப்பனே!! என் பக்தர்களுக்கும் அது மிகுந்து காணப்படுகின்றது என்பேன்.

அவையெல்லாம் விட்டு விடுங்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

இவையன்றி கூற அகத்தியன் !!!அப்பனே கருணை உள்ளவன் எதையென்றும் அப்பனே யான் பல மக்களுக்கும் பல பல உதவிகளையும் பலப்பல யுகத்திலும்....ஏன்? இக்கலியுகத்திலும் செய்துகொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே... பல பல பன்மடங்கு.

ஆனால் அப்பனே மனிதர்களைப் பார்த்தால் அப்பனே வேதனைக்குரியதே!!!

என்னை நம்பியே விட்டு அப்பனே பொறாமை குணம் ஓங்கி நிற்கின்றது.... ஆனாலும் அப்பனே சொல்கின்றேன்.... """பொறாமை பட்டால் யான் எதையும் செய்ய மாட்டேன்.!!!!! சொல்லிவிட்டேன் அப்பனே..கனிவாக.

அப்பனே !!!அன்போடு ஒன்றிணைந்து இணைந்து வாழுங்கள்!!! ஒற்றுமையாகவே.

அப்பனே """ஒற்றுமையே வலிமை!!!!! என்பதைக்கூட அனைவருக்குமே தெரியும் அப்பனே. இவ்வாறு இருந்தால் தான் மனிதன் இனிமேலும் காத்துக்கொள்ள முடியும் அப்பனே.

யாங்களும். வழி நடத்துவோம் இன்னும் பல சூட்சுமங்களை காண்பிப்போம் காண்பிப்போம் சொல்லிவிட்டேன்.அப்பனே .

கிருஷ்ணனும் அழகாகவே தாழ்ந்து நிற்கின்றான் சிறு குழந்தை வடிவில் அப்பனே...

எதற்காக என்று கூட அப்பனே கேரளம்!!! (கேரளா) இதையன்றி கூற...அப்பனே அவ் தேசத்தில் குழந்தை வடிவிலே காட்சி அளிக்கின்றானென்றால் ( குருவாயூர் உன்னிகிருஷ்ணன்) அப்பனே அதற்கும் அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே.

இவையன்று குழந்தை வடிவமாகவே இருந்துவிட்டால் அப்பனே அனைத்தும் கிடைக்கும் என்பதே உறுதியானது அதனால்தான் அப்பனே அவ் தேசத்திலே கூட பின் இதையன்றி கூற அறியாத அளவிற்கு கூட குழந்தை ரூபமாக இருந்து அனைத்தும் வாரி வழங்குகின்றான்.

ஆனால் அங்கிருந்து புறப்படும் பொழுது அப்பனே எதையென்று கூற துவாரகாவிற்கு அப்பனே ஆனாலும் அதிலும் கூட சூட்சமங்கள் உள்ளது அப்பனே.

அவந்தன் அவ்வழியாக  வரும் பொழுது அப்பனே இன்னும் கடலில் எதையென்று கூற ஒளிந்திருக்கிறது பலபல உண்மைகள்.

இதையன்றி கூற பல பல அரண்மனைகள்.. இவையன்றி கூட.... அதனால்தான் அப்பனே மேலிருந்து கீழ் நோக்கிச் செல்வதும் கீழிருந்து மேல்நோக்கி செல்வதும் விளையாட்டாகவே கிருஷ்ணன் கொண்டுள்ளான்.

ஆனால் இவ் மர்மங்கள் எதையென்றும் கூட கடலுக்கு அடியில் புகுந்து நிற்கின்றது அதனால் தான் சொல்லிவிட்டான்.

"""தர்மமெல்லாம் எப்பொழுது தாழ்ந்து நிற்கின்றதோ??!! அப்போதெல்லாம் யான் வருவேன் என்று கூட...

நிச்சயம் வருவான்!!! என்பதை உறுதியாகச் சொல்லி விட்டேன் அப்பனே.

இவையன்றி கூற தர்மம் !!!தர்மம்!!! உயர்ந்து நிற்க வேண்டும்.

என் வழியில் வந்தவர்கள் அப்பனே பொறாமைகள் படக்கூடாது அப்பனே!!!

 """தான் !! என்ற அகங்காரம் வந்துவிடக்கூடாது.....அப்பனே!!!!

அனைத்தும் இறைவன் செயல் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

அதையும் மீறி நடந்தால் அப்பனே நிச்சயம் என் சீடர்களே பின் வந்து கஷ்டத்தை அள்ளித் தருவார்கள் அப்பனே...எதையன்றி கூற.

அதனால் அப்பனே சரியாக இருங்கள்!!! ஒழுங்காக இருங்கள் அப்பனே.!!!

வேண்டாம் அப்பனே!!! அப்பனே!!! இப்பிறவி என்பது சிறிது காலமே.... 

மாயை என்பேன்!!! அப்பனே. கனவு என்பேன்.!!!

அதையன்றி கூற அப்பனே!!! இக் கனவில் வாழும் மனிதர்கள் எவ்வாறு? வாழ்ந்து வருதல்!! வேண்டும்!! என்பதைக்கூட அப்பனே இவையன்றி கூற அப்பனே பலபல இதிகாசங்கள் உள்ளது அப்பனே.

இவையன்றி கூற அப்பனே அதில் கூட அப்பனே கூர்ந்து கவனித்து அப்பனே பின் படித்தறிந்தால் உண்டு லாபங்கள் அப்பனே.

உண்டு உண்டு அப்பனே இன்னும் பலவகையான வாக்குகள் சித்தர்கள் அப்பனே செப்புவார்கள்... மனித குலத்திற்கு எவ்வாறு? எடுத்துரைக்க வேண்டும் என்பதை கூட யாங்கள் அறிந்து விட்டோம்.

அதனால் எங்களுடைய வாக்குகள் அப்பனே இன்னும் பன்மடங்கு பெருகும்.

எப்படி என்பதை கூட அப்பனே இவையன்றி கூற பன்மடங்கு பெருகிட்டு மக்களை போய்ச்சேரும் அப்பனே.

ஆனால் புண்ணியங்கள் அப்பனே அவந்தனை அழகாக காத்துக் கொள்ளும்.. புண்ணியம் மிகுந்தவர்கள் இவ்வுலகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் வாக்குகள் சேரும். சேருமென்பது மெய்யே!!!! அப்பனே.

அவர்களும் பயன்படுத்தி அப்பனே நல்லோர்கள் வாழ்வார்கள் அப்பனே...இதையன்றி கூற.

அதனால் அப்பனே இவையன்றி கூற இன்னும் சொல்கின்றேன் திரும்பவும்!! திரும்பவும் !!அப்பனே தன்னைப்போல அப்பனே பிறரையும் எண்ணும் எண்ணம் வேண்டும்.

அப்பனே அப்படி எண்ணி முடித்தால் கருணை வேண்டும். அக் கருணை தான் இறைவன் அப்பனே.

அவை வந்துவிட்டால் அப்பனே அனைத்தும் கற்றுக் கொடுப்பான் இறைவன் என்பேன் நேரடியாகவே வந்து. அழைத்துக் கொள்வான் அப்பனே தம்தன் இல்லங்களுக்கு.!!! அப்பனே.

அப்பனே அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்பனே இவையன்றி கூற திருத்தலங்கள்!!! திருத்தலங்கள்!!! என்றெல்லாம்.

ஆனால் அப்பனே அவையெல்லாம் யான் சொல்வேன்....இறைவனின் இல்லங்களே என்று கூட.

ஆனாலும் அதற்கு தகுதி படைத்தவர்கள் தான் தன் இல்லத்திற்கும் இறைவன் அழைப்பான் சொல்லிவிட்டேன் அப்பனே.

பின் தகுதி இல்லாதவர்களுக்கு அப்பனே நீங்கள் முயன்றாலும் அங்கே நிச்சயம் செல்ல இயலாது என்பேன்.

அதனால் யான் """திருத்தலங்களை இல்லம்!!!! என்றே குறிப்பிடுவேன் சொல்லிவிட்டேன் அப்பனே.

அப்பனே உண்மைப் பொருளை உணர்க...!!!!

அப்பனே எதையன்றி கூற அதனால் இவையென்றும் எதனையென்றும் கூற அப்பனே சொல்கின்றேன் அப்பனே.

அப்பனே!!! ஓர் செல்வந்தன் எதையன்றி கூற ஓர் இல்லத்தை அமைக்கின்றான் ஆனாலும் அப்பனே சாதாரண மனிதன் எதையன்றி கூற  அவ் இல்லத்திற்கு சென்றடைய முடியுமா ?? 

அப்பனே !!!ஆனாலும் அப்பனே !!

அவந்தன் நல்லோன்,!!! பக்தன்!!! எதையன்றி கூற பின் எவையன்றி கூற செல்வந்தனுக்கு புரியும் அப்பனே.

நல் விதமாக இவந்தன் என்று கூட... அதனால் அழைப்பான் என்பேன் அப்பனே.

அதுபோலத்தான் அப்பனே!!!  நல் மனதாக......

 பிறரைக் கெடுக்கும் மனம் வேண்டாம் அப்பனே.

பொய் சொல்லாமை வேண்டும் !!அப்பனே.

எதையென்று கூற.... """பிற உயிர் கொல்லாமை.!!!!!

ஏற்க வேண்டும் அப்பனே ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளை தன் போல ,தன் போலவே பார்க்க வேண்டும் .!!!!

இப்படி இருந்தால் """இறைவன் பின் ""ராஜா அலங்காரத்தோடு"""" தன் இல்லத்திற்கு அழைப்பான் என்று சொல்லிவிட்டேன்.

அப்பனே இதுதான் விஷயமப்பா. மற்றவையெல்லாம் திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.

அப்பனே  !!! உங்களை அழைக்க வேண்டும் இறைவனே!!!!!

அன்புடன்!!! வாப்பா..!!!! என்று கூட.

அப்பனே அதனால் அப்பனே!!! இவையெல்லாம் செய்யாவிடில் நிச்சயமாய் இறைவனின் இல்லத்திற்குச் செல்ல ஆகாது என்பேன்.

அப்பனே !!!இல்லம் !!திருத்தலம்!! என்று குறிப்பிட்டு விட்டேன்.

அப்பனே நலமாக!! நலமாக !!அப்பனே இன்னொன்றையும் சொல்கின்றேன் அப்பனே

பிறப்புக்கள் இல்லையப்பா.. எங்களை நம்பியவர்களுக்கு நிச்சயம் யான், யாங்களே அகற்றுவோம்.

அதனால் அப்பனே பொறுத்துக் கொள்ளவேண்டும்!!!! அப்பனே காலங்கள் பதில் சொல்லும்!!! அப்பனே.

காலங்கள் பதில் சொல்லாவிடில் யாங்கள் நிச்சயமாய் சொல்லிவிடுவோம் அப்பனே.

எதற்காக ?!ஊனுடம்பு அப்பனே!!!

இவ்வுடம்பை வளர்ப்பதற்காகவே அப்பனே பிறந்தாயா???

இல்லையென்று... அப்பனே !! மற்றவருக்காக உழை!!!!!

உந்தனுக்காக இறைவன் உழைப்பான்.!!!!

அப்பனே!!! இதுதான்ப்பா!!! உண்மையப்பா!!!! மெய்யப்பா!!!!!

இதை,இதை என்று அறிய இன்னும் பல மாற்றங்கள் உண்டு அப்பனே.

இவ் சோமநாதனின் அருள்கள் பல கோடி....எதையன்றி கூற மக்களுக்கும் ஆழ்ந்துள்ளது என்பேன். அப்பனே.

இங்கு வந்து எதை எதை என்று கூற அப்பனே இவையன்றி கூற அதனால் அப்பனே புண்ணியங்கள் செய்ய
கற்றுக்கொள்ளுங்கள் .அப்பனே.!!!

அப்பனே இனியும் அப்பனே வாழ்க்கையில் சிறு சிறு குழந்தைகளாகவே இருக்கும் பொழுது அவர்களுக்கும் புண்ணியங்கள் செய்!! புண்ணியங்கள் செய்!! என்றெல்லாம் கற்றுக்கொடுத்தால் அப் புண்ணியங்கள் வரும் காலங்களில் அப்பனே சிறப்பாக செயல்பட வைக்கும்.

அப்பனே கல்வி நிலையங்கள் மாறிவிட்டன அப்பனே.!!!!

புண்ணியத்திற்கு மதிப்பு ஏது?? அப்பனே!!!

எதை எதையோ நினைத்துக் கொண்டு செல்வங்களுக்காகவே அப்பனே பணத்திற்காகவே அனைத்தும் என்றுகூட மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் .

வேண்டாம் அப்பனே!!!!!!.

பணமெல்லாம் போய்க்கொண்டே இருக்கும் அப்பனே!!!

ஆனால் இறைவன் பக்தி எப்பொழுதும் அழியாது என்பேன்.

இறை பக்தி இருந்தால் அப்பனே அனைத்தும் தேடிவரும் என்பதைக்கூட யாங்கள் வாக்குகளாக சொல்லிவிட்டோம் அப்பனே.

எதையெதை என்று கூட அப்பனே இவையன்றி கூற அப்பனே...
ஒரு குருவானவன் அமைதியாக அமர்ந்திருந்தான்.

பின் எதையென்று கூட பின் ஓர் சீடன் வந்து குருவே!!!  நீ இப்படியே அமர்ந்து கொண்டிருந்தால்... எங்களுக்கெல்லாம் ஒன்றும் ஆகப்போவதில்லை ...

நீ!!!  எல்லாம் குருவா?????

எதையன்றி கூற ஆனாலும் இவ்வுலகத்தில் அனைத்து விஷயங்களும் உந்தனுக்கு தெரியும் என்று மக்கள் கூறுகின்றனர்.  ஆனால் .... குருவே !!!நீயே இங்கு அமர்ந்திருக்கின்றாய்.

நீ உண்மை குருவா??? போலி குருவா?? என்றெல்லாம் ஒரு சீடன் எடுத்துரைத்தான்.

ஆனால் குருவிற்கோ!!தெரியும்.

ஆனால் சீடன் பொய்யானவன் என்று.

எதையென்று கூற ஆனால் எவையன்றி கூற பொய்யானவனுக்கே பின் எதையன்றி.. ஆனாலும் அமைதி காத்து கொண்டு இருந்தான் குருவானவன்.

ஆனால் சரி குருவே!! உன்னால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
யான் வீட்டிற்குச் செல்கின்றேன்.

பின் எதையன்றி கூற பணத்திற்காக பணம் பணம் என்று சொல்லிக்கொண்டே இருந்தால்தான் அனைத்தும் நல்கும் என்றுகூட. இல்லத்திற்குச் சென்றான்.

அப்பனே ஒன்று நடந்து விட்டது எவையன்றி கூற.. ஆனால் இல்லத்தில் எதை எதை என்று குறிப்பிடாமலே அப்பனே ஆனாலும் சீடன் நடந்தான் பணத்திற்காக !!! உழைத்தான் உழைத்தான் பணங்கள் சேர்த்துக் கொண்டான். பணங்கள் மிக்க மகிழ்ச்சியை தந்தது.

ஆனால் நோய்கள் பற்றிக்கொண்டது ஆனால் அந் நோயை அகற்ற பின் எவையன்றி கூற மருந்துகளுக்காகவே சென்று சென்று பின் அழித்துவிட்டான்.

கடைசியில் இல்லத்தையும் விற்று விட்டான்.

கடைசியில் நினைத்தான் குருவை...

திரும்பவும் வந்தான். குருவே !!குருவே!!! எதையன்றி கூற யான் உன்னையும் சீண்டி விட்டேன்.

ஆனால் யான் ஆசைகள் பல பல ஆனாலும் அவ் ஆசைகள் எல்லாம் நிறைவேறியது.

ஆனால் கடைசியில் எந்தனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்பதைக்கூட குருவிடம் கூறினான்.

அப்பொழுது தான் பேச தொடங்கினான் குரு.
ஏன்! இப்படி அமைதியாக இருந்தேன் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்பனே!! எது வந்தாலும் கஷ்டங்கள்!! நஷ்டங்கள் !!துன்பம் , அயராத துன்பம் இவையென்று வந்தாலும் ஒருவன் அமைதியாக இருந்தால்.. அவனை ஒன்றும் செய்ய இயலாது.

அதனால் தான் இவ்வாறு என்பதைக் கூட இதையன்றி கூட பின் மீண்டு வந்தாயே!!!

இப்போது ஏற்கின்றேன். அனைத்தும் செய்து தருகின்றேன் நோயையும் அகற்றி விடுகின்றேன்.

அப்பனே இப்பொழுது புரிகின்றதா?!! நோயை அப்பனே எங்களால் அப்பனே மாற்ற இயலும்.

எதையன்றி கூற நீங்கள் செய்யும் தரித்திரமே கடைசியில் நோய்களாக வருவதுண்டு.

அப்பனே இதனால் அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே நோய்களின் தாக்கம். அதனால் அப்பனே சிலசில நிச்சயமாய் மூலிகைகளையும் யாங்கள் சொல்லிவிட்டோம் அப்பனே.

அதனை பயன்படுத்தி நன்று கொள்க.

அப்பனே குறைகள் இல்லை .எவை, எவை என்று கூறும் பொழுதும் கூட.....

அப்பனே சிந்தித்து வாழ வேண்டும் அப்பனே.......

மனிதனுக்கும் இறைவன் பலமாக அறிவுகள் கொடுத்துவிட்டான். இதனால் அப்பனே அவ் அறிவை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே வாழ்க்கையில் விடிவெள்ளி!!!!! உண்டு என்பேன் அப்பனே.

இன்னும் பல சூட்சமங்கள் ரகசியங்களோடு பல வாக்குகளும் செப்புவார்கள் என்பேன் சித்தர்கள்.

அப்பனே நலமாகும்!!!! என்னுடைய ஆசிகள் அனைவருக்கும் கூட....

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

3 comments:

  1. ஆதி காலத்தில் 24 மணி நேரமும் வேதங்கள் யாகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. வேத மந்திரங்கள் விண்ணை தொடும் அளவுக்கு மந்திர ஒலி சத்தம் இருக்கும்.. இந்த கோவில் சிறப்பு என்னவென்றால் சிவன் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும். எந்த விதத்தில் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கிறது இந்த சிவலிங்கம் என்று ஆராய்ந்து பார்த்து தோல்வி அடைந்தனர் பகைவர்கள்.இந்த கோவில் வாசல் தங்கத்தினால் ஆனது. சுவர்களில் கருங்கல் மதிப்பது போல் நவரத்தினம் பதிந்து ஜொலிக்கும் எந்தநேரமும். முதலில் கோவில் தங்களுக்கு வாசலை வேரோடு மரத்தை பெயர்த்து செல்வது போல் சென்று விட்டனர் பாவிகள் படையெடுத்து. ஈசனே எந்த விதமான support இன்றி அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தார். அனைத்து வளங்களும் கொள்ளை அடிக்கப்பட்டது. இறுதியில் அந்தரத்தில் தொங்கிய ஈசனை எதுவும் செய்யமுடியாமல் ஈசனை சுற்றிஇருக்கும் தூண்களை இடிக்க ஆரம்பித்தனர். ஒரு துணை இடிக்கும் போது ஒரு பக்கம் சிவலிங்கம் சாய்ந்தது.அடுத்த துணை இடிக்கும் போது இன்னி ஒரு பக்கம் சிவலிங்கம் சாய்ந்தது. அப்போது தான் எதிரிகளுக்கு புரிந்தது. சிவனை சுற்றியுள்ள நான்கு தூண்களில் உதவியோடு தான் சிவலிங்கம் அந்தரத்தில் எந்தவிதமான பக்க support இன்றி ஈசன் உள்ளார் என்று. நான்கு தூண்களை இடித்து தள்ளினர். அந்தரத்தில் உள்ள ஈசன் கீழ் வந்தார்.சிவலிங்கம் துண்டு துண்டாக உடைக்கப்பட்டது. இது தான் இந்த சிவன் உண்மை.

    ReplyDelete
  2. ஈசனே உங்களுக்கு மனிதன் மீது கருணை இருக்கலாம். அதற்காக மொத்தம் அழிக்கப்பட்டு உடைக்கப்பட்டு எரியும் வரை அமைதி காத்தது ஏன்.மனிதர்களை கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிப்பது போல் மனித தலைகள் வெட்டி எரியும் போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.. தப்புக்கு தண்டனை உடனே கொடுத்து இருந்தால் இன்று இந்த நிலையில் மனிதன் வந்து இருக்க மாட்டார்கள். அந்தரத்தில் தொங்கிய நிலையில் உள்ள சிவலிங்கம் தரிசனம் நாங்கள் தரிசனம் செய்து இருப்போம். ஆரம்பத்தில் உள்ள ஈசனை இனி யாரும் அமைக்க முடியாது. ..

    ReplyDelete
  3. Translation:
    https://drive.google.com/file/d/1j1lKercEdrkioKLfSsaKyME3zOtn-r6z/view?usp=share_link

    ReplyDelete