7/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில், வாணத்திரையன் பட்டினம் கிராமம், உடையார் பாளையம், ஜெயம் கொண்டான் வட்டம், அரியலூர் மாவட்டம்.
""உலகமெல்லாம் ஆளுகின்ற ஈசா!!! போற்றி!!!! ஈசா!! போற்றி!!! உந்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!
இவையென்றும் கூறாத அளவிற்கு, அப்பனே!! இன்னும் பல முன்னேற்றங்கள் உண்டு திருத்தலங்களை யாங்கள் வடிவமைப்போம் இனிமேலும்!!
ஏனென்றால் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.!!
வேண்டும்!! இதனை பல ,பல வழிகளிலும்!!!
இத்திருத்தலமும் சிறப்பு வாய்ந்தது தான்!!! வெற்றிக்கான திருத்தலம் என்பேன்!!!
எதையென்றும் பின் பின் வரும் காலங்களிலெல்லாம் இன்னும் சில திருத்தலங்கள் மறைந்து போயிற்று!!! மறைந்து போயிற்று!!!
இதன் (இவ்வாலயத்தில்) சிறப்பு என்னவென்று செப்புகிறேன்!!
இதைதன் பின் ராஜ ராஜ சோழன்...இதையன்றி ஆண்டுவந்தான் இத்தேசத்தை..... ஆண்டு வந்த பொழுது ஆனாலும் எளிய நடையில் தற்பொழுது ஓய்வு இருக்கும் நேரமெல்லாம் ஈசன் அருளை பலமாக பெற்று சில சுவடிகளை பின் எழுதி வைத்திருந்தான்.சில மர்மமான விஷயங்களைக்கூட....
இதையன்றி கூற கணிப்பதற்கு.. பின் தோல்வியை வெற்றியை இவையன்றி கூற சில விஷயங்கள் இவ்வுலகத்தில் அழிந்து போகும் என்று கூட இதனால் எதையென்று கூறாமலே எழுதி வைத்துவிட்டு சென்றான் சில சுவடிகளில் அழகாகவே!!!!
இதனால் மர்மம் நிறைந்தது நிறைந்தது இன்னும் பல வழிபாட்டுத் தலங்களிலும் உண்டு. உண்டு பின் நன்கறிய இதனையும் அறிந்து அறிந்து பின் மேற்சொன்ன கடைசி காலங்களில் கூட அதை அழகாக ஓர் இதையன்றி கூற அறிவித்த நிலையில் இங்கே(இவ்வாலயத்தில்) புதைத்துவிட்டு சென்றான். இன்னும் சுவடிகள் எதையென்று கூறும் பொழுது இங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.!!!
இதையன்றி கூற ஆனாலும் இவற்றின் தன்மைகளை ஆனாலும் அறிந்தான் இதையன்றி கூற ராஜேந்திரன்!! (ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்) .
இதை, இதனை நலமாக!! நலமாக!! ஆனாலும் இதை தவிர தன் பரம்பரையில் இருக்கும் எதையன்றி கூற அவன் தான் இதனையும் எடுக்க(சோழ வாரிசுகள் மட்டும்) வேண்டுமென்று கூட ..
இதனையன்றி வேறு யாராவது பின் எடுத்து விட்டால் பின் நாகம் தீண்டிவிடும்..(நாகத்தால் தண்டிக்கபட வேண்டும்) என்று கூட ஈசனிடம் வரம் கேட்டு விட்டான் ராஜராஜ சோழன்.
இதையன்றி கூற அவ் நாகத்திற்கும் இன்னும் சாவு நேரம் வரவில்லை( இன்று வரை உயிருடன் சுவடிகளை பாதுகாத்து வருகின்றது).
அழகாக இட்ட கட்டளை அதுபோல் காத்துக் கொண்டிருக்கின்றது ஆனாலும் இதை அறிந்து பின் மாய்ந்தான்.(ராஜ ராஜ சோழன்) பின் ஆனாலும் இவையன்றி கூற ராஜேந்திரனும் அழகாக பின் இறைவனிடத்திலே... தஞ்சம் புகுந்து இதையன்றி கூற.... இவ்வுலகத்தை எப்படி ஆட்சி செய்வது?? என்பதை கூட தெரியாமல் போய் விட்டது.
ஆனாலும் இதன் சூட்சமங்கள் எண்ணி, எண்ணி ,எண்ணி, எண்ணி, இதனையும் அறிந்து அறிந்து உண்மைகள் தெளிய,தெளிய !பல திருத்தலங்களுக்கு சென்றான்.
ஓர் நாள் கனவிலே பின் நன்கறிந்து ராஜராஜ சோழன் இதையன்றி கூற பின் ராஜேந்திரன் சொப்பனத்தில் வந்து இவையன்றி கூற பின் .. இச் சுவடிகள் ஓரிடத்தில் உந்தனுக்கு ஒன்றை மட்டும் வைத்திருக்கின்றேன்.
அச் சுவடியில் மாணிக்கம் காணப்படும்!! அச் சுவடியை எடுத்துக்கொண்டால் .. அதில்!! இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் ஆளலாம்? என்று கூட தெரியும்!! அதை மட்டும் எடுத்துக் கொள் என்று கூட சொப்பனத்தில் வந்து சொல்லிவிட்டான் ராஜராஜ சோழன்.
இதையன்றி கூற ஆனாலும் பின் மகிழ்ந்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற...
அதனால் அதை எடுப்பதற்கோ...!!?? பல வழிகளில் நாகங்கள் விடவில்லை. ஆனாலும் இதையன்றி... தயங்கினான்!!தயங்கினான்!! ராஜேந்திரன்.
இதனையன்றி பல பல சோழர்களையும் அழைத்து வந்து ஆனாலும் நாகங்கள் விடவில்லை!! அனைவரையும் கொன்று விட்டது...
நல் முறையாக இதனையுமென்று ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்ததில் மீண்டும் மனக் கவலை அடைந்தான் ராஜேந்திரன்.
இதையன்றி கூற அறியாத அறியாது மீண்டும் மீண்டும் ஆனாலும் சொப்பனத்தில் வரவில்லை. வரவில்லை ராஜராஜ சோழனும்.
மீண்டும் தவங்கள் புரிந்து பல ஆலயங்களுக்குச் சென்று சென்று சென்று ஈசனை வழிபட்ட பிறகு மீண்டும் எதையன்றி கூற.. ராஜராஜசோழன் கனவில் வந்தான்.
ஆனாலும் இதற்கு பல வழிகள் உண்டு உண்டு என்பதற்கிணங்க பின்,பின் இதனையென்றும்... அதற்குள்ளேயே பல விஷயங்கள் நடந்து விட்டது.
ஆனாலும் மேற்கொண்டான்!! மேற்கொண்டான் !! இதையன்றி கூறும் பொழுதும் கூட....
கடைசியில் என்னிடத்திலே (அகத்தியரிடம்) வந்தான்.
இதையென்று அறியாமல், அறியாமல், இவையன்றி கூற அவந்தனுக்கும் யாங்கள் வழிகள் காண்பித்தோம்.
காண்பித்தோம்!! இப்படி செய்தாலே ...நன்று!!! என்று!!!
இதையன்றி கூற ஆனாலும் வந்தான் சொப்பனத்தில் ராஜராஜ சோழன். இதையன்றி அறிந்து பின் நீயே!!! இங்கு சில நாட்களும் தவம் செய்தால்.. உன் நிலைமைகள் அவ் சர்ப்பங்களுக்கு(நாகம்) தெரிந்துவிடும்.
தானாகவே அதை(சுவடியை) எதையன்றி கூற நீ!!! எடுக்காமலே.. அவ் சர்ப்பம் உந்தனுக்கு என்ன வந்து சொப்பனத்தில் உரைத்தானோ!!! அச்சுவடி உந்தனுக்கு கிடைக்குமென்று சொல்லிவிட்டேன் யானே!!!
அதனால் இவையன்றி கூற இங்கே தவம் செய்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற பல ஆண்டுகளுக்கு!!!
பல ஆண்டுகளுக்கு அதனால் மிகுந்த செல்வாக்குடைய ஒரு இதையன்றி கூற சர்ப்பமே!!... அவ் மாணிக்கத்துடன் நல் விதமாகவே பின் எடுத்து வந்து கொடுத்துவிட்டது ராஜேந்திரனிடம்.
அதில் அச்சுவடியில் பல வெற்றி ரகசியங்கள் வெற்றி ரகசியங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனை இதனை சரியாக கவனித்துக் கொண்டு பல வழிகளிலும், பலவழியிலும் வென்றான் ராஜேந்திரன்..இதையன்றிகூற....
அதனால் இதிலும்கூட ராஜராஜ சோழன் இவையன்றி கூட இப்படி செய்தால்!! இப்படி திருத்தலங்களை பின் கட்டினால் இவையன்றி கூற பின் சிறப்பாக வாழலாம் என்று கூட ஆனாலும் அதற்கு கூட பன்மடங்கு பல வழிகளிலும் திருத்தலத்தில் பல பல விஷயங்களை இட வேண்டும் என்பதெல்லாம் அச் சுவடியில் நிலைத்துவிட்டது... இப்பொழுதுகூட ...
அத் திருத்தலம் கங்கை கொண்ட சோழபுரம்!!!! என்றே...
இவையன்றி கூற அங்கேயே வைத்து விட்டான் பின் ராஜேந்திரன்.
இதனையென்று கூற.. அங்கும் அத்தலம் சிறப்பு வாய்ந்தது என்பேன்.
அச் சுவடியும் இப்பொழுதும் கூட ஒளிவட்டமாகவே மாணிக்கம் போல் காட்சியளிக்கும் என்பேன்.
அறிவதற்குள் இதனை பயன்படுத்தி ஆனாலும் கட்டடங்கள் கட்டினான் அதி விரைவிலே!!!
பல திருத்தலங்களும் எதற்காக ?எவையென்று கூற !!!ஆனாலும் அதில் "ஒன்று" உங்களுக்கு குறிப்பிடப் போகிறேன்.
இதையன்றி பின் பல கஷ்டங்கள் அவமானங்கள் பட்டு பட்டு இங்கு வந்தவனுக்கு இங்கே வந்தால் சனீஸ்வரன் விலக்கம்( சனி விலகல்) அளித்து விடுவான். இதுதான் இத் தன்மையின்(ஸ்தல மகிமை) சிறப்பு!!!. ஆனாலும் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் கருத்து..
இவையன்றி கூற இப்படித்தான் முதலில் எழுதப்பட்டது இப்படித்தான் முதலில் எழுதப்பட்டு இருந்தது ..
இவை ஆனாலும் சனீஸ்வரன் பின் இதையன்றி கூற பிடித்துக்கொண்டால் இதனைமென்றறிவதற்கு ஆனாலும் சில கஷ்டங்கள் தோன்றித் தோன்றி வெற்றிநடை போடுவதில்லை இதனால் இவையன்றி கூற....
இதனையும் ஓர் மண்டலம் இவந்தனுக்கே பின் எவையென்று கூற சனியவனே பின் பின் வந்து பின் அழகாகவே இவந்தனை தரிசித்து பார்த்தாலே( 48 நாட்கள் ஒரு மண்டலம் சென்னீஸ்வரர் தரிசனம்) பின் சனியவன் போய்விடுவான். கஷ்டங்கள் சடுதியாக(விரைவாக) நீங்கிவிடும். என்பதே முதல் கருத்து.
இதை அப்படியே செய்தான் பின் ராஜேந்திரன்!! (சுவடியில் முதலில் எழுதப்பட்டு இருந்த விஷயம்).... இவையன்றி கூற கஷ்டங்களும் கலைந்துவிட்டது அனைத்தும் ஏற்பாடு செய்தான் .உடனே...
இதையன்றி கூற ஆனாலும் இவைதன் உணர்வதற்கு இத் தலத்தில் ராகுவும் கேதுவும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர்.
இதனால் இங்கு எதையன்றி கூற வணங்கி கொண்டே வருபவர்களுக்கு கூட திடீரென்று மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பேன் .
சர்ப்பமும்( ராகு கேது தோஷம்) பின் எதையன்றி கூற... அடியோடு அழிந்து விடும் இது உண்மை.
இவையன்றி கூற இங்கே இதையன்றி பின் நன்றாகவே இதைப் பயன்படுத்தி பின் கங்கை கொண்ட சோழபுரம் நல்விதமாகவே அங்கே சென்றால் அங்கேயும் தீர்க்கம்!!!! (முதலில் சென்னீஸ்வரர் வழிபட்டு பின் கங்கை கொண்ட சோழபுரம் தரிசனம்) தீர்க்கம் என்பேன். நிச்சயம் வெற்றிகள் பிடித்துக்கொள்ளும் இதுதான் உண்மை.
ஆனாலும் பல மனிதர்களுக்கு இதுவும் தெரியும் என்பேன் ஆனாலும் சொல்வதில்லை!!!!
இதையன்றி கூறிய அளவிற்கு மேலாகவே புண்ணியங்கள் அதனால் புண்ணியங்கள் சேரவில்லை என்றால் இன்னொரு விஷயத்தையும் சுவடியில் எழுதி வைத்திருந்தான் ராஜராஜசோழன் இதையன்றி கூற....
புண்ணியங்கள் பின் சேர்த்துக் கொண்டே இருந்தாலே... இவ்வாலயம் தானாகவே!! அழைத்துக் கொள்ளும். அழைத்துக் கொண்டு வந்துவிடும்.
இதனால் இவையென்றும் அதில் அச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது.
இதையன்றி அறிவதற்குள் அதனால் சில சில எவை என்று கூட புண்ணியங்கள் ஆனாலும் செய்ய முடியவில்லையே!!! இறைவா !!!என்று தேடி வந்து விட்டாலும் அவந்தனை புண்ணியப் பாதையில் அழைத்துச் செல்வான் இவ் இறைவன்!!(சென்னீஸ்வரர்). இவ் இறைவன்!!! சொல்லி விட்டேன் யான்.!!
இதன்போலே!! புண்ணியங்கள் செய்து செய்து பல வெற்றிகளை குவித்து விடலாம் என்பேன்.
ஆனாலும் அனைத்து ரகசியங்களும் அதிலே!! அடங்கியுள்ளது!!!
அதனையும் யான் செப்பிவிட்டால்?!! மனிதர்கள் தவறான நோக்கத்தையே!!! பயன்படுத்துவார்கள்.
சில, சில வினைகளை அறுப்பதற்கு பின் சொல்லிவிட்டேன்.!!
ஆனாலும் இவையென்று கூட... (கோயில்) அடியில் கூட.... பல சர்ப்பங்கள்!!!! இவையன்றி கூற காத்தும் நிற்கின்றது...
அச் சுவடிகள்!!! யாரும் அண்டவும் விடவும் முடியாது சொல்லிவிட்டேன்!!!
பல ரகசியங்கள்!!! அவ் ரகசியங்களை தெரிந்து கொண்டால் ஆனாலும் இவைதன் உணர, உணர, இனிமேலும் எதையன்றி கூற கூற ஆனாலும் திருத்தலங்களை அடிமட்டம் ஆக்குவார்கள் மனிதர்கள்.
ஏனென்றால் இவையன்றி கூற..ஓர் மனிதனுக்கே!!(மனிதர்களுக்கு மட்டும்) இவ் விஷயங்கள் ரகசியங்கள் தெரியும்.
ஏனென்றால் எதையன்றி கூற அவ் ஆலயத்திற்கு கீழே!!! பல ரகசியங்கள் பல சுவடிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒளிந்து விட்டது.
இதனை எப்படி!?? எடுத்து வந்து விட்டு வந்து விட்டாலே கைக்கு வந்து விட்டாலே அவன் செல்வாக்கு உடையவன்.. இவ்வுலகத்தை ஆளலாம் நிச்சயம்.
ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) தடுப்போம் யாங்கள் நிச்சயமாய் மனிதர்களுக்கு இவை கொண்டு செல்ல விடமாட்டோம்.
பல திருத்தலங்களும் இது போலவே மாறி மாறி மாறி மாறி அமைந்துள்ளது.
இதனால் எதையன்றி கூற எவையன்றி இன்னும் இன்னுமின்னும் காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இதனருகே இங்கிருந்து ஒரு வட்டத்திற்குள்ளவே!!! பின் இவையன்றி கூற இருநூறு!! (அடி வட்டத்திற்குள்) பின் இதையன்றி கூற அமைந்துள்ளது.
அதனை நிச்சயம் எங்கள் அருள் இல்லாமல் எடுக்க முடியாது!!!
ஆனாலும் தற்போது நிலைமைகள் தானாகவே மனிதர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் பொய்யாகவே(போலியான ஓலைச்சுவடிகள்) இதுதான் பலிப்பதில்லை வாக்குகள் சொல்லிவிட்டேன்.
நலமாக புண்ணியங்கள்!!!
இதையன்றி கூற இதனால் ஒன்றை சொல்கின்றேன்.
""ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களே வரமுடியும் என்பேன்.
இதையன்றி கூற அவன் சரித்திரத்தையும் இன்னும் இன்னும் ஆண்டுகள் சொல்லச் சொல்ல......தீராது
ஆனாலும் ராஜேந்திரன் ஒரு தவறு செய்து விட்டான் இதையன்றி கூற ...அச் சுவடியை பணத்திற்காக கொடுத்துவிட்டான். இதனால் அவந்தன் பரம்பரையையும் பின் அழிந்துவிட்டது அடியோடு!!!.......
ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் உண்டு!! உண்டு!! ஆனாலும் அதையும் கூட பின் அவந்தனும் பின் பெற்றுச் சென்றானே... சில ரகசியங்கள் தெரிந்து கொண்ட பிறகும் ஆனாலும் அவனும் மாய்ந்து விட்டான் .
பின் சர்ப்பம் அழகாக அச்சுவடி அங்கே(கங்கை கொண்ட சோழபுரத்தில்) கொண்டு திரும்பவும் சேர்த்துவிட்டது.
இதையன்றி கூற அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!! ஓவ்வொரு இதையன்றி கூற இங்கும் ஆளும் திறன் பெற்றவர்கள் எதையென்று கூற அறியாமலே ஒவ்வொரு லிங்க வடிவமான ஈசனின் இடத்தில் அடியில் சுவடிகள் கிடந்துள்ளது. அதன்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது அதற்கு ஒளி வடிவம் உண்டு என்பதற்கிணங்க ஈசனே!!! இதையன்றி கூற..
ஆனாலும் உண்டு!! உண்டு!! இன்னும் பன்மடங்கு வெற்றிகள்!!!. இத் திருத்தலத்தை வந்து நாடினால் அப்பனே....
ஏனென்றால் அப்பனே தர்மம் மறைந்துவிட்டது ஏனென்றால் அநியாயம்!! அக்கிரமங்கள்!!! மிகுந்து விட்டது. இதையன்றி கூற அதனால் கலியுகத்தில் அப்பனே சில திருத்தலங்களை நாடினாலே போதுமானது!!
""வெற்றிகள் குவியும்!!!!
ஆனாலும் அவ் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால்தான் நலமாகும் என்று விதி இருந்தால் மட்டுமே இத்திருத்தலத்திற்கும் வரமுடியும் என்று சொல்லிவிட்டேன்.
ஆனாலும் இதையன்றி கூற வந்து வணங்கி விட்டால் பணம் ,,பணம்,, என்று மாயையை நோக்கி கொண்டிருக்கிறார்களே!! அவர்களுக்கு நிச்சயம் குவியும்!!! என்று சொல்லிவிட்டேன்.
ஆனாலும் அதைதன்(பணத்தை) நல்நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.
பின் ராஜேந்திரன் செய்தானே !!!அவை போன்று செய்துவிட்டால்!!! இன்னும் பேராசை கொண்டு பின் அவந்தனும் அடியோடு கூட அழிந்து விடுவான் சொல்லிவிட்டேன்.
ஆனாலும் நிச்சயமாய் வெற்றிகள் உண்டு!!!
நல் விதமாகவே புண்ணியம் செய்தவர்க்கே உண்டு திறமைகள் என்பேன்.
ஏனென்றால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்!!!
ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் பல உள்ளது.
ஆனாலும் அவற்றையெல்லாம் ஈசனிடம் (வரமாக) கேட்டுக்கொண்டான்.
யார் ??யார்?? எவையென்று கூற புண்ணியம் செய்தவர்களே!!!
நான்!! எதையென்று உருவாக்கிய தலத்திற்கு வரவேண்டும்!! அவர்கள் வெற்றி நடை போட வேண்டும்!!
இதையன்றி கூற இன்னும் பல ஆலயங்கள் எவ்வாறு என்று சீரமைக்க வேண்டும் யான் சென்று விட்டாலும் இன்னும் எதையன்றி கூற என்னுடைய திருத்தலங்களை நல் விதமாகவே நீதி!! நேர்மையுடன்!!! செய்ய வேண்டும் என்று கூட ஈசனிடமே எதையென்று கூற சத்தியத்தை வாங்கிக் கொண்டான்.
அதனாலே ஈசனும் கொடுத்துவிட்டான்.
அதனால் இன்னும் பல திருத்தலங்கள் பின் வடியமைக்கவே முடியவில்லை என்பேன்.
இதனால் நன்மைகள்!! வெற்றிகள்!! நிச்சயம் உண்டு!!.... இவையன்றி கூற...
இத் திருத்தலமே ""பணம்"" திருத்தலம் என்பதுதான் யான் சொல்லிவிட்டேன். கலியுகத்தில்.
இவையன்றி கூற அப்பனே இன்னும் பன்மடங்கு எதை எதை என்று கூற இன்னும் உள்ள திருத்தலங்கள் பற்றியும் சொல்கின்றேன் விவரமாகவே!!!
இவையன்றி கூற இன்னும் திருத்தலம் இதனையும் சரிசெய்ய வருவான் என்பேன். எவை!! எவை!! என்று கூற....
நல் விதமாகவே ஆக்குவார்கள் இதையன்றி கூற இன்னும் பல விஷயங்கள் அடங்கியுள்ளது..
சொல்லிவிட்டேன் நல்படியாக இதனால் தான் இதிலும் சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அதனுள்ளே நன்றாகவே அனைத்தும் ஏற்பாடு செய்வேன். யானும் இங்கு( ஆலயத்திற்கு) வந்துவிட்டேன். கவலைகள் இல்லை
வரும் வைகாசி திங்களிலும் விரிவாக விவரிக்கின்றேன்!!
அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
ஸ்ரீ பெரியநாயகி உடனுறை சென்னீஸ்வரர் ஆலயம். வாணதிரையன்பட்டணம் கிராமம் உடையார்பாளையம் வட்டம் ,ஜெயம் கொண்டான்.
அரியலூர் மாவட்டம் .
ஆலயம் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. கோவில் புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.
ஆலயம் தொடர்பாக விபரங்களை அறிய அணுக வேண்டிய எண்.
திருமதி :ஆனந்தி 8056116062
ஸ்ரீ சென்னீஸ்வரர் பக்தர்கள் அறக்கட்டளை
Contact no:8524844709 வாணதிரையன்பட்டணம்
அறக்கட்டளையின் பதிவு எண் - 6/2019
Acc.Name – SRI CHENNESWARAR PAKTHARGAL TRUST
Bank Name - State Bank of India.
Acc.No – 38992242280.
IFSC – SBIN0000998.
Branch – Jayankondacholapuram.
Branch Code – 998.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.........தொடரும்!
ஐயா வணக்கம் லோப் முத்ரா சமேத அகத்தீசாய நமஹ பஞ்சட்டி ஸ்தலத்தை பற்றி கூறவும் ஐயா தங்கள் அருள் வாக்கை படிக்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிரேன்
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
ReplyDeleteஎன் பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்றால் மேன்மை அடைவார்கள் என்று சொல்லி இருக்கலாமே அகத்தியரே. பணம் கொட்டும் என்ற தெய்வ ரகசியத்தை ஏன் இப்படி வெளிப்படுத்த வேண்டும். ஏற்கனவே அகத்தியர் என்று உங்க பெயரை தன்பெயரோடு சேர்த்து கொண்டு மனிதன் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. தெய்வ ரகசியத்தை மறைமுகமாக கூறி இருக்கலாம் நீங்கள்.
ReplyDelete
ReplyDeletePLEASE RESUME ENGLISH GNANABOOMI ASAP.It doesnt make any sense to close it as siddhas messages are for all the seekers all over the world.There is no respose from the blogger for previous requests too.Do let us know the valid reason behind it.
Translation:
ReplyDeletehttps://drive.google.com/file/d/1Dj5V5VwskAEPpuV35ttq05SLjmfE90cs/view?usp=sharing
இறைவா!!!!! அனைத்தும் நீ
ReplyDeleteவணக்கம் அடியவர்களே ,
நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த இவ் ஆலய வழிபட்டு ரகசியங்களை கீழ்காணும் youtube பதிவில் கண்டு அனைவர்க்கும் பகிர்க. அனைவரும் நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய வழியில் சென்று பலன் அடையட்டும்.
https://www.youtube.com/watch?v=ZxWX81vVY4E
ஓம் ஶ்ரீ அன்னை லோபாமுத்ரா சமேத அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்
“இறைவா!!! நீயே அனைத்தும்”
ReplyDeleteவிதியின் தன்மையும், ஆலய வழிபாட்டு ரகசியங்களும்.
https://youtu.be/hBtWWjn6jDc
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!