​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 April 2022

சித்தன் அருள் - 1112 - அன்புடன் அகத்தியர் - பாம்பாட்டி சித்தர் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறைவன் அருளால், நம் குருநாதர் அருளால், உங்கள், உங்களை சார்ந்தவர்கள் அனைவரின் வாழ்விலும், இந்த சுபக்ரிது வருடத்தில், அனைத்தும் உங்கள் மனோபீஷ்டப்படியே நன்மைகள் நடக்கட்டும் என "சித்தன் அருள்" வலைப்பூவின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்.  


4/4/2022 அன்று பாம்பாட்டி சித்தர் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : தஞ்சை பெருவுடையார் திருக்கோயில். 

""""" ஆடு பாம்பே...!!!! 

நித்தம்!!! 
நித்தம்!!! 
நித்தம்!!! 
நித்தம்!!!
ஆடு பாம்பே!!!

ஆடு பாம்பே!!! 
பாடு பாம்பே!!! 

என் தலைவனை
ஈசனை நம்பி
மனதில் எண்ணி 
ஆடு பாம்பே!!! 
உரைக்கின்றேன்!! 

இதனையுமென்று அறியாது மூடர்களுக்கு உண்டா?!! 

பாம்பாட்டி நின்றவுடன் எதனை ஆட்டுவதே!!! 

நின்ற கோலத்தில் உண்டா? உண்டா?? தோழா !!இதனை அறிவது சுலபமன்றோ!! ஆடு!!! ஆடினால் !!பாடினால்!! துதித்தால்!! வருவது என்ன???

என்ன என்றோ கூறுவது எதற்கு??

எதற்கு பிறவி எடுத்து  ஆடுகின்றாய் மனிதா!!

மனிதா!! ஆட்டின், ஆட்டின் போல்!! மாட்டின் போல்!! கழுதை போல்!! இவையன்றி கூற

புத்திகள் இதன் பின்னே மனிதனுக்கு தோன்றுமடா!!! 

ஆடு பாம்பே!!!!! 

ஆடு பாம்பே!! அசையாமல் ஆடுபாம்பே!!

பாம்பின் மேல் கால் அறியும் போல்
மனிதனின் நிலைமையை யாங்கள் அறிவோம்!

நிதானித்து!! 
நிதானித்து !!
ஆடு!! பாம்பே!! 
மனிதனின் 
கர்மங்கள் நீக்கு!
 பாம்பே!!

நீக்கும் பாம்பே!!
பாம்பின் நீக்கும் பாம்பே!! பாம்பினை
எதனை என்று 
குறிப்பிடும் என்பதற்கு இணங்கவே மனிதனுக்கு 
தெரியாமல் 
போய்விட்டது!!!

பாம்பே!! 
என்ற பொழுது
ஈசனே!!
 ஞாபகத்தில் 
வர வேண்டும்
 இதுதான் உண்மை!!

ஈசனே பாம்போ!!! 
என்னை !!
யானே 
ஈசனை பாம்பன் 
என்றுதான் 
அழைப்பேன்!!!

இதனால் 
ஆடு  பாம்பே!!! 
ஆடு பாம்பே!!
மனிதர்களில்
 உள்ள 
காயகற்பத்தை!! அழுக்குகளை நீக்கு பாம்பே!! 

நீக்கு பாம்பே  மனிதனின் நிலைமைகளை!!

எண்ணி பார்க்கும் பொழுது பொய்யானவை நீக்கு ! பாம்பே!!

நீக்கு பாம்பே!! தரித்திர பிறவியை நீக்கு பாம்பே!! 

நீக்கு பாம்பே மனிதன் தெளிவுகள் பெற கொடுக்க கொடுத்தபின் எடுக்க பாம்பே!!!  எடுக்க பாம்பே!! 

விடாதே !! நிற்க!! நிற்க! 
மனிதனின் நிழல்கள் உண்டா!!! உண்டா!!
என்பதற்கு!! எதற்கு உண்டு??

நிழல்கள் ஏன்?? தொடர்கின்றது?? மனிதனை!!
இதையன்று ஆடுபாம்பே!!

ஆடுபாம்பே!!! நடுவில் ஆடுபாம்பே!!! 

ஆட்டம் தெரிந்தபின் நிற்பது 
உயிரின் பாம்பே!!

அறியும் வண்ணம் 
எதனால்?? ஆடும் 
பாம்பின் பாம்பே!!
பாம்பே!! மனிதனை நிச்சயமாய் தரித்திர பிறவியை அறுத்து விடு ஆடு பாம்பே!! 

மனிதனால்
நிலைமையில்
தடுமாறி !
தடுமாறி!!
வாழ்ந்தே
வந்திருக்கின்றான்.
ஆடு பாம்பே!! 
அதை நீக்கும் தகுதி பாம்பே!!! நல் பாம்பே உன்னிடத்திலே!!!

உன்னிடத்திலே!! நிலைதடுமாறி
உற்றது!!
பெற்றது !!
நிற்பது !!
நகர்வது!!
நகர்ந்த பின் செல்வது அறியாத மூடர்களா மனிதர்கள் பாடு!!!
பாடு பாம்பே!! 
தெளிவுபெறு மனிதா!!

மனிதன் இனத்தை
மனிதனே அழிப்பது
வரும் பாம்பே!!! 

ஆனால் அதை அழிக்கக்கூடியவன்
 பாம்பே (ஈசன்) 
என்பது தெரியாமல் போய் விட்டது பாம்பே!!! 

ஆட்டின் மேல் ஆடடி
ஆட்டின் மேல் ஆடிட்டு
பின் வலம் வருவது 
வலம் வந்து பின் நிற்பது 
பின் கடையில் சவுக்கால் 
அடிப்பது!!! அடித்து உறங்குவது பின் தூக்கி எரிப்பது தூக்கி எரிப்பதும் மனிதா!!! 

மனிதனின் குணங்கள் நிற்ப்பதா?? 
நிற்ப்பதா? 
மறைப்பதா?? 
தொழுவதா?? 
பொய்களா?? 
கற்பனையா?? 
மூப்பா ?? 
இளமையா?? 
அனைத்துமே 
வீணானது பாம்பே!!!! 

இவற்றிக்கும் மேலான
ஆடுதிறன் பெற்ற பாம்பே!!!
பாம்பே!!! 

மனிதனை
நிலைநிறுத்த பார்ப்பது 
ஆட்டின்  (ஆட்டத்தின்) முடிவில் ஆட்டத்தை நாடுவது
நாட்டின் பின் 
நிற்பது 
கைலாயத்தில்
வாசிப்பது பாம்பே!!! 

நின்றாமல் இருப்பது 
நின்று தரிசனம்
 காண்பது எக்காலம்??? 
பாம்பே!!! 

மனிதனின் நிலைமைகளை
மாற்றுவது 
எக்காலங்கள்?? பாம்பே!!!

பாம்பே!!!! 
நிதானத்தை கடைபிடிப்பது எக்காலம்??
பொறாமை நிற்பது எக்காலம்?? பாம்பே!!! 

எதை??
 நல் நிதானத்தை கடைபிடிப்பது எக்காலம்?? பாம்பே!!!

மனிதனின் 
மூடத்தனம் நிற்பது எக்காலம் பாம்பே?? 

பாம்பே!! பாம்பே!!!
அறியாமல் செல்கின்றார்கள் மனிதர்கள் .
மனிதர்களின் 
பிறப்பின் ரகசியத்தை அறியாமல் செல்கின்றார்களே!!! 
பாம்பே!!! 

பாம்பே !! ஆடுபாம்பே!! 
நிற்பது உண்மையென
மனிதனின் லீலைகளை பொய்யானவையே பின்பற்றுகின்றான் 
பாம்பே!!!! 

இதற்கெல்லாம் தண்டனைகள் உண்டா??
உண்டா ??
நிற்பது 
கடப்பது வடப்பது
வட்டின் பின் வட்டி கடன் உடன் செலுத்துவது
செலுத்துவது ஆட்டின் பின் ஆட்டின் பின் நதிகளோடு
கரைகள் சேருகின்றதே!! 
இதனையும் அறிந்து செயல்பட்டு கொண்டாலே ஆட்டின் ஆடுபாம்பின் மூலம் பாம்பே!!!

இதையன்றி கூற மனிதனை ஆட்டுவிக்கும் பாம்பே!! 
நின்றாது(நில்லாமல்) செல்மின் பாம்பே!! 

உண்டானது எது??
எது??  எதன் பின் ஓட
ஓட விட்டு!! ஓடவிட்டு!!
நிற்பது? எதனிடையே பாம்பே!!!

பாம்பே!! பாம்பே!! 
நில்லாது செல் பாம்பே!! 

இதனை மனிதனின் நிலைமைகளும் அறியாது 
பாம்பே!!! 
படியாது!!
திருந்தாது!! 
அடித்த பின்!! 
நொறுக்காது!!
நொறுக்கபின்
நிற்காது!!
நிற்காது!!
எழும்பாது!!
எழும்பாது!! படுத்த பின்.

படுத்த பின்
 எழும்பாது!! பின்
ஆற்றின் வழியே சென்று
மறைந்து விடும் ஊனுடம்பு ஆடுபாம்பே!! 

பாம்பே!!! பிறப்பெடுத்து விட்டாய் இவ்வுலகத்தில் உலகத்தின் மனிதர்களையும்பிறப்பெடுத்தான் ஆனால் பாம்பின் எதையென்று 
குரங்கின் போல ஆடுகின்றது  மனம்
அக் குரங்கை எப்பொழுது நிறுத்துவது?? ஆடுபாம்பே!!

ஆடுபாம்பே!! குரங்கை நிறுத்திவிட்டால் அனைத்தையும் அடக்கி ஆளலாம் பாம்பே!!!

குரங்கே!! மனிதன்
மனிதனே குரங்கு
ஆனால் ஆட்டத்தைப் பார்த்தால் மனிதனின் ஆட்டத்தைப் பார்த்தால் பாம்பே குரங்கை தான் யானே சொல்வேன்.

சொல்லின்று போதாது
போதாது நிலைமைகள் மனிதனுக்கு மாறுவது
நில்லாது!!
செல்லாது!!
செல்லாது! சென்றபின்
நிற்காது...நிற்காது !ஓயாது!
ஓயாது ஆட்டங்கள் கற்பனை ஆவது இச்சையாவது
தோல்வியானது வெற்றியானது

பாம்பே!!  ஆடுபாம்பே!! 
குரங்கு குரங்கு மனிதனுக்கு வித்தியாசம் உண்டா?? பாம்பே!!
இல்லை பாம்பே!!! 

ஒன்றின்று ஒன்றின்று
அன்றின்று மன்னின்று
மன்னிருந்து நின்னின்று 
கண்ணின்று கண்றில்லாத
வண்றின்று வண்றின்று
முட்றின்று முற்று பெறாதது 
எக்காலம் பாம்பே!!!! 

பாம்பே!! பாம்பே!! நிலையறியாத உலகத்திலே
பாம்பே!!! 
மனிதனின் நிலைமைகள் நகைக்க! தக்கது பாம்பே!!

விடாது மனிதனின் தரித்திரம் விடாது துரத்தி விடும் மனிதப்பிறவி தரித்திர பிறவி கருவியே தொடர்ந்து கொண்டால் பொய்யானவை பாம்பே!! 

பாம்பே!! பாம்பே !!காலறியும் பாம்பே கால்களும் உண்டா?? பாம்பிற்கு என்று நினைப்பதும் உண்டா மனிதன்!!

இதை கண்டுபிடித்தாலே
போதுமானது பாம்பே!!! 
மனிதனும் ஆடுவான் சேர்ந்து.

குரங்கு மனம் படைத்தவனே மனிதன் பாம்பே!!! 

இக் குரங்கு மனதை எப்பொழுது? ஜெயிக்கின்றானோ!! அப்பொழுது மனித வாழ்க்கையை ஜெயிக்கலாம் பாம்பே!!! 

ஆனால் ஜெயிக்க முடியாது பாம்பே!! ஏனென்றால் எதனை கற்பனைத் திறத்தில் ஓடுகின்றான் பாம்பே!!!

இதனால் எப்பொழுது கற்பனை திறத்தால் மனிதன் ஓடுகின்றானோ அப்பொழுது தன் உடலை ஜெயிப்பது கஷ்டமே!! 

பாம்பே!! பாம்பே!! மனிதனால்  நீடூழி வாழ முடியும் இறப்பில்லாமல் வாழ முடியும்!! ஆனாலும் பாம்பே அனைத்தும் ஆசைப்பட்டு கடைசியில் ஏதுமில்லாமல் ஆடு பாம்பிட்டுச்சென்று ஆட்டின் வழியே தூக்கி வீசப்படுகின்றான் மனிதனே!!

மனிதனே ஆட்டின் போல் வரு வருகின்றது நதியில் சேர்கின்றது கடலில் அலைகின்றது!! அலைகின்றது !!
மீண்டும்!! மீண்டும்!! மனிதப் பிறப்பெடுத்து அவ் இச்சைகளை பூர்த்தி செய்ய உடம்பு தேடுகின்றது!!

மனிதன் இறந்தாலும்!! நின்றாலும்!! பல மனிதர்களுக்கு கஷ்டமே ஏற்படுத்துவது! ஆடுபாம்பே!

ஆடு பாம்பே மனிதன் துன்பத்தில் சிக்கித் தவிப்பது தன்னை மட்டும் சிக்கித்தவித்து மற்றவர்களையும் சிக்க வைப்பது மனிதனின் இயல்பே!! பாம்பே!! 

இதனால் எதையென்று? கூறுவது? பாம்பே??

பாம்பே!!! பாம்பே!! 
காவேரி நீரை குடித்தவனே பாம்பே!!! அறியும் நீரே!!!
அகத்தியன் நீரே!!

அகத்தியனே இதையென்று
ஜெயிப்பது?? மக்களை எக்காலம்??

அக்கரைக்கும்! இக்கரைக்கும் !ஏது? வழி??
வழி என்பது இல்லையடா
மனிதா!! 

மனிதா!! எதை?? குறிக்கோளாக வைத்து
வாடுகின்றாய்?? 
ஆடு பாம்பின் மூலமாகவே!! 

உண்மையன்று தலையாட்டி போல் வாழ்கின்றாயடா!! ஆடுபாம்பே!!

முதன்மை ஏதடா?? 
ஆடு பாம்பே!!
கடைஏதடா ??
ஆடுபாம்பே!!

ஆட்டத்தின் பின் ஓதுவது எதை?? பாம்பே!!

எதை பாம்பே!!! 
எதை பாம்பே!! 
நாடி!! நாடி!!சென்று வருவது
எதை பாம்பே!!! 

தேடி தேடி செல்வது!!
 எதை பாம்பே??

மனதை! வருத்தி !வருத்தி! பாடுவது!! எதை பாம்பே??

அனைத்தும் மாயை பாம்பே! 

பாடு !!பாம்பே!!! 
நிதானித்து ஆடுபாம்பே!!!

மனிதன் ஆமை போலே இருக்க வேண்டியது.

தீராத நோய் நோய் என்பதே ஆமை போல் மனிதன்
இனிமேலும் வாழ்ந்தாலே வெற்றிகொள்ள முடியும்
வெற்றி கொண்டபின் அதுவும் நிற்காது 
ஆடு பாம்பே!!

மனிதனின் நிதானத்தை கடைபிடிக்க முடியாது ஆடுபாம்பே!!

இதனை குதிரைபோல் போக வேண்டும் என்று எண்ணுவானே!! ஆடுபாம்பே!! 

அது!! அதுவும் முடியாது என்ற பாம்பே!!!

இறைவன் தரிசனத்தை பார்க்க வேண்டுமென்று எண்ணினானோ!! அவ் ஆடுபாம்பே!! ஆடுபாம்பே!! 

நில்லாது!! செல்மின்!! ஆடுபாம்பே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.............. தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Translation:
    https://drive.google.com/file/d/156SoDLCS5VJsygiEfniQhktB1pdBxCdW/view?usp=sharing

    ReplyDelete