​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 12 April 2022

சித்தன் அருள் - 1111 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உரைத்தது ஸ்ரீ வாஞ்சியம்!


2/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. 

வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி ஆலயம், ஸ்ரீ வாஞ்சியம். திருவாரூர். 

அகத்தியரின் கட்டளை !!!!

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்.!!!

அப்பனே நலமாக நலமாக  உண்டு என்பேன் ஆசிர்வாதங்கள் அப்பனே. 

இவையன்றி கூற அப்பனே ""அசைக்க முடியாத நம்பிக்கை"" நம்பிக்கை இருந்தால் தான் அப்பனே இறைவனும் அழகாக பாதுகாத்துக்கொள்வான் என்பேன் வரும் காலங்களில்.

ஆனாலும் அப்பனே இவையன்றி கூற எதை எதையோ நினைத்து இறைவனிடம் வந்தாலும் அப்பனே இவையன்றி கூற ஆனாலும் அப்பனே அசைக்க முடியாத நம்பிக்கை  அசைக்க முடியாத ...இதையன்றி கூற பக்தி இவற்றின் மூலம் இறைவனை நேரடியாகவே காணலாம் .

காணலாம் என்பதற்கிணங்க அப்பனே இவ்வாலயம் எவ்வாறு என்பதையும் கூட அப்பனே பல சித்தர்களும் வந்து வந்து  அப்பனே பல பல யுகங்களில் வாழ்ந்த எதையென்று கூற அப்பனே

இவையென்று கூற ஈசுவரனே!!!!சனீஸ்வரன் பட்டம் இதையன்றி கூற இங்கே நலமாகவே அளித்து விட்டான்.ஈசப்பெருமான்.!!!

இதையன்றி கூற அதனால் அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் அப்பனே வரும் காலங்களில் மாற்றி மாற்றி இதை என்றுகூட அறியாத நிலை ஏற்படும் .

அதனால் அப்பனே எவையென்று கூற இங்கு வந்து நல் விதமாகவே அப்பனே பாசத்தோடு இறைவா!!!!!! என்று கூறிவிட்டால் !!அப்பனே இதையன்றி கூற சனிஸ்வரனுக்கும் அப்பனே சனிஸ்வரன் எவையென்று கூற எவையன்றி கூற என் பக்தன் !!!என்று அழகாகச் சொல்லி விடுவான். விலகி விடுவான் என்பது நிச்சயமாக உண்மை. அப்பனே. 

இதையன்றி கூற அறியாத மனிதர்கள் இன்னும் எதை எதை என்று கூற அதனால் தான்  இவையன்றி கூற அப்பனே பல வழிகளிலும் ஞானத்தை பெற்றார்கள்.  இவ்வாலயதிற்கு வந்து. அப்பனே

இவையன்றி கூற அப்பனே பல,  பல மனிதர்கள் உயிர் பிரியும் நிலை ஏற்படும் அப்பனே எதையன்றி கூற எவையென்று கூற ஆனாலும் இறைபக்தியால் அப்பனே அதையும் வென்றுவிடலாம்.

அதனால்தான் யான் பல வாக்குகளிலும் சொல்லி விட்டேன்.......

 """"விதியை மதியால் வெல்ல முடியும்""" என்று!!!! 

ஆனால் அப்பனே விதி எவையன்றி கூற எவையென்று கூற மதி....

""""மதி தான் இறைவன் !!!!!!

மதி தான் இறைவன் என்று சொல்லிவிட்டேன். இறை பலத்தின் மூலம் அப்பனே அதனால் இவையன்றி கூற

இவ் ஆலயம் எவ்வாறு என்பதையும் கூட சரியாக  எதையென்று கூற ஆனாலும் ஈசனும் சொல்லி விட்டான் எதையன்றி கூற

ஓர் முறை அப்பனே பக்தியாக பக்தியாக இருந்த ஈசன் பக்தன் ஒருவன் எவையன்றி கூற அவந்தனுக்கும் குறிப்பிட்ட ஆயுள் காலம். நிறைவடைய போகின்றது ஆனாலும் இவையன்றி கூற.....

நான் உலகத்தில் என்ன தவறு செய்தேன்???? இவ்வுலகத்தில்.... இறைவா!!!  இறைவா!!! என்றெல்லாம் ஈசனிடத்தில் பக்தி கொண்டான்.

ஆனாலும் நேரடியாக ஈசனிடம் வந்து தொழுதான் தொழுது வேண்டினான் என்பதற்கிணங்க எவ்வாறு  என்பதையும் கூட எந்தனுக்கு.. இவ்வாறு ஏன்?? இவ் வயதிலே என்னை இழுத்துக் கொண்டு இருக்கின்றாய் இதையன்றி  கூற நீதான் காப்பாற்ற வேண்டும்... என்பதைக்கூட ஈசன் அடிமையாக இவற்றை நினைத்து நினைத்து ஈசனிடம் முறையிட...

ஆனாலும் இவையன்றி கூற அதனுள்ளே பின் எவை என்று கூற பின் வந்துவிட்டான் எமன்!! எமதர்மன்!!.... இவையன்றி கூற.

ஆனாலும் இதற்கு அறியாமல் பின் என்னிடத்திலே இவையென்று கூற யானும்(அகத்திய பெருமான்) இங்கேதான் இருந்தேன் விஷயங்கள் நடக்கும் பொழுது.எவையன்றி கூற. 

ஆனாலும் ஈசன் ஈசனை கெட்டியாக பிடித்துக்கொண்டான் (அவ் மனிதன்) ஆனாலும் இவையன்றி கூற ஆனாலும் அவர்களும் வந்தார்கள் எவையென்று கூற...... சித்திரகுப்தனுடன்

வந்து இவையன்றி கூற இவன் ஆயுட்காலம் முடிந்துவிட்டது இவையன்றி கூற யாங்கள் எடுத்துச் செல்வோம்.. அழகாக இவந்தனை என்று கூற..ஈசனிடம். 

ஆனாலும் ஈசனோ!!!! இல்லை!!! இல்லை!!!! 

இவந்தன் புண்ணிய கணக்கு இன்னும் பலமாக பலமாக இருக்கின்றது.

ஆனாலும் இவன் மனது நம்பிக்கை வைத்து இறை பலத்தோடு இறைவனுக்கே சேவை செய்து கொண்டு இருந்தால் இறைவன் நாமத்தை செப்பிக்கொண்டே இருந்தால்... தலைவிதி மாறும் என்பது இவனுடைய குறிக்கோள்.

ஆனால் நிச்சயம் மாறும் அவைமட்டுமில்லாமல் பல பேர்களுக்கும் நல் விதமாகவே வழி காட்டுதல் வேண்டும்.....

வழிகாட்டுதல் வேண்டும் என்பதற்கிணங்க பல ஆலயங்களுக்கும் நற்பணி செய்ய வேண்டும் தொண்டு செய்ய வேண்டும் எனது கடமை.

எந்தனுக்காக!!! இல்லை..!! இவ்வுலகத்தோர்க்கே!!!! என்று கூட இவன் மனம் இருக்கின்றது அதனால் நிச்சயம் மாற்ற வேண்டும் என்பதைக்கூட ஈசன் சரியாக எமதர்மனிடத்திலேயே சொல்லிவிட்டான்.

இதனால் அப்பனே சரி என்று நன்றாகவே இவையன்றி கூற.. கூறி விட்டு ஆனாலும்.....நிறுத்து!!!! என்றுகூட அவ் மனிதன் எவ்வாறு என்பதையும் கூட

ஈசனே!!! என்னை காப்பாற்றி விட்டாய்.

ஆனாலும் பல மனிதர்கள் நல்லோர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவர்களும் முயற்சி செய்து இவ்வுலகத்தை காக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

அதனால் இவை என்று கூற பல மனிதர்கள் இங்கு வந்து சென்றால் தலைவிதி நிச்சயமாய் நீங்கள் எதை என்று கூற எவையன்றி கூற ""பிரம்மனிடத்திலும் ஓதுதல் அதி சிறப்பு.... இவையன்றி கூற ..ஓதி... இதனையென்று உணராமலே..இவ் தர்மனிடமும்(யமதர்மன்) கூறிவிடவும்...இங்கே தங்கி விடு என்று  கூட .

நிச்சயமாய் சத்தியம் வாங்கிக்கொள் என்பதற்கு எதையென்று உணர அவ் மனிதனும் ஈசனிடத்திலும் முறையிட.. 

ஆனாலும் ஈசனும் எவை என்று கூற  " சரி !!!!தன்போல்(அவ் மனிதனின் இஷ்டம் போல்) ஆகட்டும் என்று கூட எமதர்மனே!!! சித்ரகுப்தனே!!!!  நில் என்று கூறி... இவையன்றி கூற இங்கு அருள் பாலிக்க வேண்டும் வந்தவர்களை நல்வழிப்படுத்தி நல்லோர் மனதை புரிந்து கொண்டு அவர்களுக்கும் நோய் நொடி இல்லாமல் வாழ்க்கை நீ கொடுக்க வேண்டும் என்று கூட ஈசன் சொல்லிவிட்டான். அழகாக.

அதனால் நல் விதமாக வந்து செல்பவர்களை எமதர்மனும் சித்திரகுப்தனும்... நல் விதியாக விதியில் சிலசில மாற்றங்கள் இருந்தாலும் அதையும் மாற்றிவிட்டு இவையன்றி கூற ஆனால் இதையன்றி கூற ....அவ் மனிதன் இப்பொழுதும் கூட எவை என்று கூற வந்து கொண்டே இருக்கின்றான். இத்தலத்திற்கு .

அவந்தன் பெயரை எவ்வாறு உச்சரிப்பது என்பதைக்கூட மனிதர்கள் எவ்வாறு என்பதைக்கொள்ள நலன்களே!!! அதனால் சொல்லி விடுகின்றேன் அடுத்தடுத்த வாக்குகளில் நலமாகவே.

இப்பொழுது புரிகின்றதா!?? நலமாகவே!!! விதியும் மாறும்.!!! இவையென்று கூற... எமதர்மனும் நெருங்க முடியாது எவை என்று கூற சித்திரகுப்தனும் நல் வழியாக மனதில் என்ன வேண்டிக்கொண்டீர்களோ நிச்சயமாய்.... உண்டு என்பேன்.

நலமாக நலமாக எவை?? எப்பொழுது?? எதை?? என்று கூற அப்பனே நல் விதமாக மாற்றங்கள் உண்டு....

இன்னும் கூட கலியுகத்தில் தேய்வுகள் தேய்பிறை போல நகர்ந்து செல்லும்  மனிதரின் நிலைமைகள்.

அதனால்தான் ஒவ்வொரு ஆலயத்தை பற்றி யான் குறிப்பிடுகின்றேன்... ஆனாலும் இவையன்றி கூற வழிபட்டு வந்தாலே போதுமானது. சில மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும்!! ஏற்படும்!! எவையென்று கூட.

எவையன்றி கூற யானும் எதை என்று கூற பிற்பாடும் இன்னும் பல மனிதர்கள்  எவையன்றி கூற நல் விதமாக .....

ஆனாலும் """"யான் சொல்வதையும் கேட்க அவர்களுக்கும் புண்ணிய பலம்""""" இருக்க வேண்டும்.

புண்ணியம் இல்லையென்றால் எவ்வாறு என்பதையும் கூட நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்.

ஆனாலும் கடமை!!! இவை என்று கூற கடைசி வாய்ப்பாக யாம் திரும்பவும்..மனிதர்களுக்கு நல்வழிப்படுத்த போகின்றோம்.

எவையென்றும் எவையென்றும் பின் எதையென்றும் இதனையும் மீறினால் நிச்சயம்  தண்டனைகள் அவரவர் பெறுவார்கள். என்பது வாக்கு.

அதனால் மேலும் நல்லோர்களுக்கே போய்ச் சேரும் எனது வாக்குகள் நிச்சயமாய் எவையன்றி கூற.

ஆனாலும் இன்னும் சித்தர்கள் வருவார்கள் எவையன்றி கூற இப்படி செய்!! அப்படி செய் !!!இப்படி இருந்தால்தான் மாற்றங்கள் உண்டு என்று சொல்வார்கள்  அதன்படியே நடந்து கொண்டாலே ""மிச்சம்!!! எவையன்றி கூற.

பின் எதையன்றி கூற யாங்கள் சொல்கின்றோம் எங்களை வணங்குவதற்கும் அருகதைகள் வேண்டும் என்பேன்.....

அருகதைகள் இல்லாதவர்களை யாங்கள் நிச்சயமாய் எவை என்று கூற எங்களை வணங்க விடமாட்டோம் எங்கள் செய்தியையும்(வாக்குகள்) கூட அவர்களுக்கு உரைத்து விடமாட்டோம் என்பதுதான் நிச்சயமான உண்மை.

அதனால் எவையென்று கூற நல் மனிதர்களை இனிமேலும் தேர்வு செய்வோம் நல் பாதைகளை காட்டுவோம் எவையென்று கூற.

அதனால் சொல்லிவிட்டேன் சில சில ஆலயங்களைப் பற்றியும் இன்னும் விவரமாக விவரிக்கிறேன்.

இன்னும் பலப்பல சமாதிகளிலும் நல் விதமாகவே பின் ஞானிகள் தங்கி இருக்கின்றனர்.

அவ் தலத்திற்கு சென்று வந்தால் எவ்வாறு என்பதையும்கூட தன்னலம் காக்காது பிறர் மனதை எண்ணி அவர்கள் படியே இவ்வாறு என்பது கூட நடந்துகொண்டால் வெற்றி இது தான் அனைத்து ஞானிகளும் விரும்புவார்கள் என்பேன்.

""தன்னைப்பற்றி வேண்டி கொள்ளுதல் ஆகாது!!! எதையென்று கூற. 

எவையன்றி கூற ஏனென்றால் சொல்லி விடுகின்றேன் சில ஜீவசமாதிகளில் வாழும் ஞானிகளை பற்றி இதையன்றி கூற அவர்களுக்கு எவை என்று கூற இதையும் கூட மற்றவர்களுக்கு மற்றவர்களுக்காகவே வணங்குவது தான் சிறப்பு என்பதை கூட அவர்களுக்கு தெளிந்து விட்டனர். அவர்களுக்கு தெரிந்து விட்டது.

அதனால் அங்கு சென்று பின் தன்னைப் பற்றியோ!!! தன் மனைவியைப் பற்றியோ!!! தன் சிந்தனையை பற்றியோ !!!
தான் நன்றாக இருக்க வேண்டும் தான் எப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் படுகுழியில் தான் உண்டு.

ஆனாலும் வெற்றி தருமே தவிர திரும்பவும் தோல்வி அதி விரைவிலே ஏற்படும்.

அதனால் பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் எவை என்று கூற அனைவரும் உயர வேண்டும் பின் இறைவா!!! அவர்களுக்கெல்லாம் கொடு!!!

இன்னும் ஏழை எளியோர் எல்லாம் உணவு இல்லாமல் பின் மாய்ந்து கிடக்கின்றார்கள்.. உயிர்பிழைத்து கொடு!!! என்றுகூட வேண்டிக்கொண்டால் பின் ஞானிகள் சந்தோஷம் அடைந்து அப்பனே!! இவந்தன் போல ஆட்கள் தேவை .

ஆனாலும் சிறிது சோதனைகள் வைத்தாலும் உயர்ந்த நிலைக்கு அடைந்து விடுவீர்கள் எவையென்று கூற....

ஆனாலும் ஏன்??  யாங்கள் உயர்த்தவில்லை பக்தர்களாக என் பக்தர்களாக இருந்து கொண்டுமென்றால் உயர்த்தி விட்டாலும் அவன் பொய் சொல்லி பிழைத்துக் கொள்வான் எவை என்று கூற.

பொய் சொல்லி எதை என்று கூற அவந்தனும் பிழைத்துக் கொள்வதற்கிணங்க மற்றவர்களையும் கெடுத்து விடுவான் சோம்பேறி ஆக்கி விடுவான்.

அதனால் தான் என்னுடைய பக்தர்களுக்கும் யான்  ஆராய்ந்து தான் கொடுப்பேன் என்பேன்.

நல் விதமாக நல் விதமாக எவையென்று கூற

"""அகத்தியனை வணங்கி விட்டால் அனைத்தையும் கொடுத்து விடுவான்!!! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் அவை பொய்!!! என்பேன்.

எதையன்றி கூற என்னை வணங்கி வணங்கி பொருள்தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.

அப்பனே!!! இவையன்றி கூற ஆனால் தண்டனை என்னவென்று தெரியாமல் போய்விடுகின்றது. யானும் பல சித்தர்களுக்கும் எவையன்றி கூற அகத்தியா!! !!இவையன்றி கூற உன்னுடைய இவ்வாறு என்பதை கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கிணங்க ஆனாலும் ""யான் பொறுமை தான் காத்துக் கொண்டிருக்கிறேன்!!!

எவையன்றி கூற மனிதா!!! இவையன்றி கூற இனிமேலும் பக்திகளில் நுழைந்து பொய்கள் சொல்ல வேண்டாம். பொய்கள் சொல்லிட்டாலும் தண்டனைகள் உடனடியாக கிடைக்கும் என்பதை கூட யோசித்துக் கொள்.

சிறிது உன் மூளைக்கும்  வேலை கொடுத்துக்கொள். 

எப்படி நீ இருக்கின்றாய் என்பதை கூட பின் எதையென்று கூற தெரியாமலே இவையன்றி கூற....

இவ் புத்திகள் தேவையா??? இவ் ஞானிகள் மூலம் எவ்வாறு என்பதையும் கூட அறியாது....

""" உண்மையைச் செய்!!! """""நன்மையை செய்!!!!!

உலகம் எதை என்று கூற எங்களை தேடி வந்து நல் விதமாக யாங்களே தேடி வந்து அனைத்தையும் கொடுப்போம் எவையன்றி கூற...

இன்னும் பல ஆலயங்களை பற்றி தெரிவிக்கின்றேன் மனிதர்களே!! பிழைத்துக் கொள்ளுங்கள்...

மீண்டும் மீண்டும். செப்புகின்றேன்... அதற்கும் புண்ணியம் ஏனென்றால் எவையன்றி கூற யான் சொல்லுவதற்கும் சில தகுதிகள் உண்டு.

ஏனென்றால் முன் ஜென்மத்திலே என்னையும் எவ்வாறு வேண்டி வேண்டி கர்மத்தை தீர்க்க வேண்டி எவ்வாறு தீர்க்கப்பட வேண்டும் என்பதைக்கூட ஆனாலும் வலம் வந்தார்கள் என்னிடத்திலே எவை என்று கூற """பொதிகை தன்னிலே"""

ஆனாலும் இப்பிறப்பில் கூட அவர்களும் இப்பிறப்பில் பிறந்துள்ளார்கள் என்பேன்.

அதனால் என்னுடைய வாக்கு எவையன்றி கூற அவ் வாக்கினை எவ்வாறு என்பதையும் கூட...

முன் ஜென்மத்தின் பந்தம் உள்ளவர்கள் மட்டுமே இதையும். (இந்த வாக்கினை) ஓத முடியும் என்பேன்.

இதனால் யூகித்துக் கொள்ளுங்கள் எதை என்று கூற அதனால்...

பொறுமை காக்க வேண்டும் பொறாமைப்படுதல் கூடாது!!!
 நன்மைகள் செய்ய வேண்டும்.

இப்படி தவறான வழிகளில் சென்றாலும்!!!!  இப்படி சென்றால் இறைவன் நல்வழி காட்டுவான் இறைவன் நல்வழி காட்டுவான் என்பதைக்கூட ஆனாலும் சொல்லிப் பாருங்கள் அது புண்ணியம்.

ஆனாலும் கேட்காவிடிலும் அதுவும் பல மடங்கு புண்ணியம் உந்தனுக்கு எவையன்றி கூற...

ஆனாலும் எளிமையாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது என்பேன். 

பல பல இதிகாசங்களையும் படித்து இப்படித்தான் வாழவேண்டும் என்பதையும் கூட இனிமேலும்  வரும் பிள்ளைகளுக்குச்(குழந்தைகளுக்கு) சொன்னால் வாழ்க்கை வளமாகும் எவையென்று கூற.

தன் தன் பிள்ளைகளுக்கு அனைத்தும் நலமாக வேண்டும் என்பது கூட மனிதர்களின் நினைப்பு.

ஆனாலும் சொல்கின்றேன் சிறுவயதிலிருந்தே இப்படித்தான் வாழ வேண்டும்  பல இறை பலங்களையும் இப்படித்தான்.. வாழ்ந்து ஜெயித்தார்கள் என்பதைகூட அவந்தனுக்கு சிறு வயதிலே அவள்தனக்கும் சிறுவயதிலே(ஆண் பெண் குழந்தைகளுக்கு) சொல்லிவிட்டால் அவர்கள் வளர வளர இப்படித்தான் வாழ வேண்டும் உலகத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகின்றது.

இப்படிப்பட்ட பிள்ளைகள் உயர்வார்கள்!!! உயர்வார்கள்!!! உயர்ந்த நிலைக்கு செல்வார்கள்!!!

அவை மட்டும் இவையன்றி கூற அதனால் இப்படி சொல்லுங்கள் எவையன்றி ஆனால் குழந்தை பிறந்து விட்டது அவந்தன் அவன் பால் (அவர்கள் போக்கிலே) வளரட்டும் என்று விட்டு விட்டால் அப்பனே ஒன்றும் செய்ய இயலாது.

கடைசியில் தன் பிள்ளை இப்படி வாழ்கின்றானே!!!! என்றுகூட கேள்விக்குறியாகிவிடும்.

அப்பொழுது இறைவனிடத்தில் சென்றாலும் என்ன லாபம்???  இவையன்றி கூற

அதனால்தான் சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுங்கள் பக்தியை!!!!

ஓரு பக்தியை நிலைநிறுத்தி இறை பக்தியோடு  பக்தியோடு அன்புகூர்ந்து அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து உணர்ந்து விட்டால் அவன் இவ்வுலகத்தை ஆளுவான் என்பது சமமான விளக்கம். 

இன்னும் எளிய !!எளிய !!வகையிலும் சொல்கின்றேன்

சரியாக பின்பற்றி வந்தால் அப்பனே எவ்வொரு குறையும் வராது....

அப்பனே சித்தர்கள் மனிதர்களை காக்கவே வந்துவிட்டார்கள் ஆனால் மனிதன் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பதை கூட தெரியாமல் தவித்து விடுகின்றான்..

ஆனாலும் இவையன்றி கூற நல்லோர்களை இனிமேலும் பிழைக்கச் செய்வோம் யாங்கள்... கைவிடமாட்டோம் நிச்சயமாக.... எவை எவையென்று கூற.. 

அதனால் பொய் சொல்லி நல் விதமாகவே பிழைத்துக் கொள்ளாதீர்கள்...

அவ் பொய் தன்னை அழித்து விடும் என்பதைக்கூட தன்னை அழித்துவிடும் ஆனாலும் தன் கூடவே இருக்கும் அனைவரையும் அழித்து விடும் .

அதனால் பின் ஆணவம்!!! ஆகாது !!!பொறாமை ஆகாது!!!

எவையென்று கூற உண்மையைச் சொல்லுகின்றேன்!!!!

எதையென்று கூற என்னுடைய பக்தர்கள் எவையென்று கூற யாரும் உண்மையானவை எவை எவை என்று கூட இன்னும் இருக்கின்றார்கள் அமைதியாக!!! பொறுமையாக!!! எவையென்று கூற... 

ஆனாலும் அவர்களையெல்லாம் யான் தேடிப்போய் சென்று நலமாகவே அவந்தனுக்கு  அனைத்தும் கொடுப்போம் இனிமேலும்.

அதனால் எவையென்று கூற இனிமேலும் சொல்லாதே பொய்!!!! இவையன்றி கூற பொறாமை படாதே!!!!

நல் தூய உள்ளம் ஆக இருந்து கொள்!!!

பின் சுத்த தூய சன்மார்க்கத்தையும் கடைபிடி !!!வள்ளலாரின் வழிகளை பின்பற்றினால் நலமாக கடுகளவும் துன்பங்கள் வராது என்பதுதான் எனது கருத்து.

ஆனாலும் இவையென்று கூற திரும்பவும் திரும்பவும் சொல்கின்றேன்.

யான் அகத்தியனை!!  இறைவனை!!! வணங்கினாலும் கஷ்டங்கள் வருகின்றதென்றால்??? அப்பனே நீ எவ்வாறு செய்திருக்கின்றாய் என்பதை கூட பின் என்னிடத்தில் கூறு !!!

உன் வாழ்க்கையை யான் குறிப்பிடுகின்றேன் நீ என்ன தவறு செய்கின்றாய் என்று!!!!

ஆனால் மனசாட்சிக்கு விரோதமாக பின் எதையும் செய்தால் அப்பனே அவை அழித்துவிடும் என்பேன்...

அதனால் அப்பனே என்னாலும் ஒவ்வொரு மனிதனின் நிலைமையை கணிக்க முடியும் அதனால் இவையன்றி கூற...

நீ!! செய்த தவறினால் தான் உந்தனுக்கு தண்டனைகள் வருகின்றது என்பேன்.

அப்பனே யான் தவறே செய்யவில்லை!!! பின் ஏன்?? தண்டனைகள் வருகின்றது!!! என்பதை கூட யாராவது பின் என்னிடத்தில் கூறிவிட்டால்  அவன் என்னென்ன??? செய்வான்!?!? என்பதை கூட யான் சொல்லி விடுகின்றேன்....

அப்போது தலைகுனிய வேண்டாம்.... செப்பிவிட்டேன் அப்பனே!!! 

அதனால் உண்மை நிலை என்னவென்று கூறி நல் விதமாகவே இனிமேலும் திருந்தி பக்தியை செலுத்தி நல்விதமாக அன்புடன் வாழ  கற்றுக் கொள்ள!!! இறைவனே நேரடியாக தரிசனம் கொடுப்பான் ஒவ்வொரு மனிதனுக்கும்.

கலியுகத்தில் இறைவனை பிடிப்பது பின் சுலபமானதே!!!!! ஆனாலும் கஷ்டங்கள் வரும் அவையெல்லாம் தாங்கிக் கொண்டாலே போதுமானது என்பேன்.

அப்பனே இன்னும் நல்வாக்குகள் பல காத்துக் கொண்டிருக்கின்றது பலவகைகளிலும் பல சித்தர்கள் செப்புவார்கள் என்பேன் அதனால் கவலைகள் இல்லை... எதையென்று கூற  அப்பனே. 

அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி ஆலயம், ஸ்ரீ வாஞ்சியம். 610110
திருவாரூர். மாவட்டம். 

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாஞ்சியம். குடவாசலில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருவாஞ்சியம் திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!


4 comments:

  1. நலமாக நலமாக உண்டு உண்டு இவையன்றி கூற அப்பனே இவையன்றி கூற பின் தியாகராஜனும் ( திருவையாறு தியாகராஜ பாகவதர் சுவாமிகள்) அவந்தனும் வலம் வந்து கொண்டே இருக்கின்றான் அங்கும்!! இங்குமாக!!! நீங்கள் அனைவரும் அவன் கண்ணில் பட்டவர்கள் தான் அவனும் ஆசிர்வதித்து கொண்டே இருக்கின்றான்.

    ReplyDelete
  2. அகத்தியர் திருவடிகள் போற்றி

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Translation:
    https://drive.google.com/file/d/1Ztmi3S1HMMDSyPT7ljAkbXhd0A3ynMU5/view?usp=sharing

    ReplyDelete