​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 6 April 2022

சித்தன் அருள் - 1107 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு!


3/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. 

வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ லோபமுத்ரா தேவி சமேத அகத்தியர் கோயில். பாவாசாமி அக்ரஹாரம். ஒத்தை தெரு. திருவையாறு. 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே 

திருவையாறில் அமைந்துள்ள குருநாதர் அகத்தியப் பெருமான் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா குறித்து குருநாதர் அகத்தியர் வாக்கு

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றியே வாக்குகள் பரப்புகின்றேன். 

அப்பனே மாய உலகம் இது இதையென்று அறிவதற்கு எளிதாக எளிதாக சென்றுவிடும் காலங்கள்.

காலங்கள் என்பதற்கிணங்க அப்பனே அவரவர் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை கூட தெரியாமல் வலம் வந்து வலம் வந்து அப்பனே எவை என்று கூற....

ஆனாலும் எவை என்று என்னையும் நம்பி விட்டால் அப்பனே நலன்கள் மேம்படும் என்பதைக்கூட மனிதர்கள் வரும் காலங்களில் உணர்ந்திருக்கவில்லை.

உள்ளவை எவையன்றி கூற உள்ளவை பின் எதை தேடும்பொழுது தேடாமல் தேடுகின்றான் எதனை என்று கூற.

அப்பனே மெய்கள் இன்னும் இன்னும் பல வழிகளிலும் அப்பனே பிறக்குமப்பா இவ்வுலகத்தில் அப்பனே நல் முறையாக எதை என்றும் விளக்கம் அளிப்பதற்கு சமமாக ஒன்றுமில்லை பந்தங்கள்.

அப்பனே இவையன்றி கூற வந்தான் எதை என்று கூறாமல் சென்று விட்டான் மனிதன் இதனையும் அறியாமல் இறைவனிடத்தில் பக்திகள் காட்டுவது பின் இறைவனிடத்திலே செல்வதற்கு சமமான தகுதிகள் உள்ளது அப்பனே. 

அதனால் ஒவ்வொருவரும் எவை என்று கூற எதை என்று கூற யானே!! இங்கு வந்துவிட்டேன் எவை என்று அதனால் உங்களுக்கும் எவை என்று கூற ஆசிகள் தந்து உங்களுடைய எண்ணங்கள் மேம்படும் என்பேன் குறைகள் இல்லை குறைகள் இல்லை என்பேன் எதனை என்று கூற.

அப்பனே சரியாக தன் கடமைகளை செய்து வந்தாலே போதுமானது யாங்கள் நிச்சயம் வருவோம் அப்பனே அங்கங்கு.

தேடி வந்து நல் விதமாகவே தான் தன் எண்ணத்திற்கு எதை என்று கூற தகுதியானவை என்று உணர்ந்து யாங்களே கொடுப்போம்.

அதனால் அப்பனே மனிதனிடத்தில் அப்பனே வெற்றிக்கு வழியில்லை அப்பனே இறைவன் தான் வெற்றிக்கு வழி என்பதைக்கூட தெரிவித்து நல்படியாக ஆக்குவேன் என்பது குறி. 

இதை என்பதை கூட அறியாமல் இன்னும் பல சித்தர்கள் அப்பனே மக்களை திருத்துவார்கள் அப்பனே. 

ஆனால் மனிதர்களோ!!! சித்தர்கள் திருத்துவார்களா!!!??? என்று எண்ணி கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அப்பனே இவையன்றி கூற இனிமேலும் """"அடிகள்""" தான் உள்ளது என்பேன் அப்பனே.

திருந்தினால் அப்பனே உண்டு.

திருந்தாவிடிலும் பலமான சோகங்கள் உண்டு அப்பனே. இவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

அப்பனே நல்லோரை அப்பனே இவ்வுலகத்தில் காக்க வேண்டும் ...   கடமையப்பா இதையன்றி கூற... இன்னும் இன்னும் பல பல வழிகளிலும் அப்பனே சித்தர்கள் எதை என்று கூற நோக்குவார்கள் என்பேன்.

அதனால் ஒரே முடிவு அப்பனே மனிதனை கஷ்டத்திற்கு அழைத்துச் சென்றால்தான் புத்திகள் பிறக்கும் என்பதைக்கூட யாங்கள் அறிந்து விட்டோம் அப்பனே.

அதனால் எவை எதை என்று பொதுவாகவே இவ்வுலகத்தில் வரும் பின் அலைகள் போன்று கஷ்டங்கள்.

அதனையும் நிரூபிக்கும் அளவிற்குக் கூட கஷ்டத்தை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை கூட தெரிந்து கொண்டால் இறைவன் வந்து வந்து நோக்குவான் அப்பனே.

அப்பனே எதை என்று கூற இதனையும் அறிந்தும் அறிந்தும் கூற ஒன்றுமில்லை.

ஒன்றுமில்லை இதையன்றி கூற சொல்லாமல் வருகின்றான் சொல்லாமல் சென்று விடுகின்றான் மனிதன் அப்பனே.

இவையன்றி கூற ""ஆட்டங்கள் நடுவிலே""!!! உள்ளது.!உள்ளது அப்பனே!!!

அப்பனே இதையென்றும் அறியாமல் அறிந்துவிட்டால் உன் பிறவி  மேலோங்கி போகும் . போகும் அப்பனே அதனால் உன் பிறவியைப் பற்றி ""அறி!!!... அப்பனே.

எதற்காக பிறந்தோம்?? எதற்காக? இவ்வுலகத்தில் வாழ்கின்றோம்?? என்று அப்பனே ஒர்நாள் தியானங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.அப்பனே!!

ஆனாலும் அப்பனே தியானங்கள் யாரும் கடைப்பிடிப்பதில்லை அப்பனே. தியானங்கள் எப்பொழுது செய்ய வேண்டுமென்றால்??? அப்பனே ""பிரம்ம முகூர்த்தத்திலே !!! அப்பனே நல்விதமாகவே செய்யும்பொழுது அப்பனே அவனைப்பற்றி அவந்தனுக்கே தெரியவரும் என்பேன்.

ஆனாலும் அப்பனே சோம்பேறியாகவே அப்பனே காலங்களைக் கழித்துவிடுவான் மனிதன்.

அப்பனே எதை என்று கூற தெரியாமலே வாழ்ந்திட்டு இறைவன் இறைவனை நோக்கி வந்தாலும் பிரயோஜனம் இல்லை   எவை என்று கூற இன்னும் கூட அப்பனே சொல்லுகின்றேன் சொல்வார்கள் என்பேன் அப்பனே பல சித்தர்கள். ஒவ்வொரு வாக்காக அப்பனே...

இன்னும் எதையன்றி கூற யாங்களே நல்லோர்களுக்கு உதவுவோம் அப்பனே வந்து வந்து இதுதான் அப்பனே இக்கலியுகத்தின் சிறப்பு என்பேன் அப்பனே.

அப்பனே பல பல மனிதர்கள் அப்பனே ஒவ்வொரு யுகத்திலும் பல பல பக்திகள் பின்பற்றினார்கள் ஆனாலும் அப்பனே கலியுகத்தில்  அவ்பக்திகள் அழிந்து விட்டது ஆனால் அப்பனே "'இறைவா"...!!! என்று சொன்னாலே வந்து நிற்பான் அப்பனே. இறைவன் எதையன்றி கூற.

ஆனாலும் அப்பனே மனிதன் அதுபோல் அன்பாக வணங்குவது இல்லையே என்பதுதான் கேள்விக்குரியது.

ஆனாலும் அப்பனே அன்பாக வணங்கி விட்டாலே இறைவன் ஓடோடி வந்து விடுவான் தன் பக்தன் இருக்கின்றான் என்று கூட. அப்பனே.

இதையென்றும் அறிவதற்கு சொல்லிவிட்டேன் அப்பனே.

நல் முறையாக நீங்கள் செய்யும் அப்பனே    நல் விதமாகவே எவையென்று கூற தெரிந்திருக்கும் அப்பனே உங்களுக்கு.

""யானும். உலோபாமுத்திரையும்""" வந்து அனைவரும் ஆசீர்வதிப்போம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.

நலமாக நலமாக ஆசீர்வதித்து ஆசீர்வதித்து நல் விதமாகவே அப்பனே மீண்டும் எவ்வாறு என்பதை கூட அப்பனே நிச்சயம் இதையன்றி கூற அப்பனே """"ஒரு மண்டலம் ""(48 நாட்கள்) கழித்து திரும்பவும் சிறப்பாக பூஜைகள் செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே அதனுள்ளே சித்தர்களும் வந்திட்டு செல்வார்கள் அப்பனே.

அதனுள்ளே  எதையன்றி கூற அப்பனே நல் விதமான ""என் சீடன் புலத்தியனும்(புலஸ்தியர்) வந்து வந்து செல்வான் என்பேன்.

கவலைகள் இல்லை அப்பனே மாற்றங்கள் உண்டு அப்பனே.

ஆனாலும் பிரம்மன் எதையன்றி கூற அப்பனே எழுதி இருப்பதை சரியாகத்தான் நடத்தி நடத்தி இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்கும் அவை தான் நடக்கும் அதனால் தான் கேட்டு வந்தவை கேட்டவை போல நடக்கும் என்பது விதி.

இதை என்று கூற அறியாமல் அப்பனே ஏதேதோ!!! கேட்டுக்கொண்டிருந்தால் அப்பனே இவை நிலை தடுமாறி சென்று விடும் என்பதுதான் மெய் .

ஆனாலும் அப்பனே இதில் கூட நியாயம் இருந்தால் யான் நிச்சயம் அளிப்பேன் அப்பனே.

இவையன்றி கூற இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே விதவிதமாக அப்பனே வருவார்களப்பா என்றுகூட அனைத்து சித்தர்களும் அறிந்ததே என்பதற்கிணங்க உண்மை.

உண்மைக்குப் புறம்பானவை இவ்வுலகத்தில் எவை என்று கூற அப்பனே கூறும் பொழுதும் கூட சிந்தித்தால் தெளிவுகள் தெளிவுகள் பிறக்கும் அப்பனே. 

அதனால் மனிதனுக்கு தெளிவுகள் பிறக்க வேண்டுமென்றால் அப்பனே நல் விதமாக தியானங்கள் செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் முன்பே எந் நேரத்தில் செய்ய வேண்டும் என்பதைக்கூட சொல்லிவிட்டேன். அப்பனே அவ் நேரத்தில் தியானங்கள் செய்தால் அப்பனே அனைத்தும் தெரிந்துவிடும்.

ஆனாலும் அப்பனே நிச்சயம் கர்மா செய்ய விடாது  தான் என்பேன் அப்பனே இதுதான் உண்மை.

அதையும் மீறி செய்தால் அப்பனே நீ உண்மையான எதை என்று கூற அனைத்தும் அறிந்து விடுவாய் அப்பனே. எதை என்றும்.

ஆனாலும் தன்னைப் பற்றி அறியாமல் அப்பனே ஏதும் நடக்காது என்பேன் இவ்வுலகத்தில் அப்பனே.

முதலில் தன்னைப் பற்றி அறிய வேண்டும் தன்னை பற்றி அறிய வேண்டுமென்றால் தியானங்கள் மூலம் அறியலாம் அப்பனே.

இவையன்றி கூற தன்னைப் பற்றி அறிந்தாலே அனைத்தும் சாதித்து கொள்ளலாம் அப்பனே.

தன்னை அறியாமலே சென்று கொண்டிருக்கையில் அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே!!!!

யார் ??யாருக்கு ??எதை ??எப்பொழுது?? செய்ய வேண்டும் என்பதை கூட இறைவன் நன்றாக கணித்துக் கொண்டிருக்கின்றான்.

அதை மீறி செய்தால் தான் அப்பனே தோல்விகள்.

ஆனாலும் அப்பனே பின் எதை என்று கூற அப்பனே இவை இவை என்று கூற மாற்றாமல் மாற்றுகின்றனர் மனிதர்கள் அப்பனே.

இப்பொழுது விதியில் ஒரு விளையாட்டு இருக்கின்றதென்றால் அப்பனே அவ் விளையாட்டை விட்டுவிட்டு மற்றொரு விளையாட்டுக்கு சென்றுவிடுவான் அப்பொழுது அவ் விளையாட்டு தோல்வியில்தான் முடியும் பிரம்மா எழுதிவைத்த விளையாட்டு வெற்றியில் தான் முடியும் அப்பனே. இது தான் உலகமப்பா.

அதனால் தான் மனிதன் அப்பனே தன் கடமையைச் செய்யாமல் வேறு ஒரு கடமையை செய்து கொண்டிருந்தால் இதனால் தான் தொல்லைகள் தோல்விகள் எல்லாம் வந்தடைகின்றன.

பின்பு எதை என்று கூற அறியாமல் பின்பு கஷ்டத்திலே மூழ்கி விடுகின்றான் அப்பனே.

இவை எல்லாம்... வீணே!!!!.... என்பேன் அப்பனே.

அதனால்தான் அப்பனே தம்தனக்கு என்ன எழுதி இருப்பதை எவ்வாறு என்பதை உணர்வதற்கு அப்பனே தன்னை அறிய நிச்சயம் வேண்டும் என்பேன் மனிதர்கள் அப்பனே.

குறைகள் இல்லை. " யானும் அப்பனே!! நல் விதமாக அப்பனே முன்பெல்லாம் அப்பனே ஓரொரு காலத்தில் கூட வீடு வீடாகச் செல்வேன் அப்பனே நல்லோர்களை காண்பதற்கு அப்பனே.

நல்லோர்களை அழைத்து நல் விதமாக இப்படி வாழ்ந்தால்!!! இப்பிறவியை கடந்துவிடலாம்!!! என்று கூட அப்பனே இதுபோலத்தான் இனிமேலும் யான் செய்வேன் அப்பனே நல்விதமாக நல்லோர்களை எவ்வாறு என்பதை தேர்ந்தெடுத்து யானே செல்வேன் அவரவர் இல்லத்திற்கு.

நலமாக நலமாக உண்டு மேன்மைகள் அப்பனே கவலைகள் இல்லை.

எதையன்றி கூற அப்பனே நல் விதமாக அப்பனே சொல்கின்றேன் அப்பனே மேலே(கோயிலின் உள்ளே) நல் விதமாக அப்பனே விதை எவையன்றி கூற "ஓர் நல் விதமாக அப்பனே பாயை விரித்து விடு.... அப்பனே நிச்சயம் உறங்குவேன் என்பேன் அப்பனே. சுத்தப்படுத்து. 
(கோயிலுக்கு வந்து தங்கி உறங்கி செல்வேன் நல் முறையாக சுத்தம் செய்து ஓர் பாயை அங்கே வைத்திடு என்று குருநாதர் அகத்தியபெருமான் விருப்பத்துடன் உரைத்தார்). 

நலமாக நலமாக உண்டு உண்டு திறமைகள் அப்பனே  இதையன்றி கூட அறியாமல் அப்பனே உண்டு எதை என்று கூற அப்பனே நிச்சயமாய் அப்பனே யானும் உணவருந்துவேன். அன்றைய தினத்தில்( கும்பாபிஷேக தினம்) அப்பனே.

நலமாகவே நலமாகவே உண்டு உண்டு என்பதற்கிணங்க அப்பனே இன்னும் பல மாற்றங்கள் உண்டு .

எம்முடைய ஆசிகள்.... அன்றைய (கும்பாபிஷேகம்) தினத்தில் யானும் லோப முத்திரையும் நல் விதமாக அனைவருக்கும் ஆசிகள் கொடுப்போம் அப்பனே.

அப்படி அதன் முன்னே எவையன்றி கூற யானும் வந்துவிட்டேன் அப்பனே இதுதான் நம்பிக்கை.!!! எவை என்று கூற.

நலமாக நலமாக உண்டு ஏற்றங்கள் கவலைகள் இல்லை இதையன்றி கூற கூற அப்பனே இன்னும் மாற்றங்கள் உண்டு உண்டு என்பதற்கிணங்க இதையன்றி கூற அறியாதவர்கள் எதை எதை என்று பின்பற்றி பின்பற்றி மீண்டும் மீண்டும் பல சித்தர்கள் வந்து உரைப்பார்கள்.

உரைப்பார்கள் என்பதற்கிணங்க இவ்வுலகத்தை மாற்றமடைய செய்யவே ஆனால் நிச்சயமாய் எங்களால் முடியும்.

ஆனாலும் இதைதன் உணர உணர ஆனாலும் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம் .உண்மையானவை அப்பனே.

அப்பனே ஒன்றுமில்லை அப்பனே பொய்யானவர்களே இவ்வுலகத்தில் அதிகத்தை அதிகம் எவை என்று கூற அப்பனே நம்பிவிடுவார்கள் அப்பனே 

அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் எதையும் யாரையும் எளிதில் நம்பி விடுதல் கூடாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அனைவருக்கும் கூட.

இதையன்றி கூற அப்பனே இவையன்றி நம்பிக்கை இறைவன் மேலே இறைவன்பால் வைக்க வேண்டும் அப்பனே எவையன்றி கூற அவ் நம்பிக்கை மற்றவர்கள் மீது வைத்தால் அப்பனே அது வீணாகிப் போய்விடும்.

இவைதான் இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

இறைவன் மீது நம்பிக்கை வைக்காமல் அப்பனே பணத்தின் மீதும் பல பல வழிகளில் பல பல தீயவைகள் மீதும் நம்பிக்கை. அதனால் தான் அப்பனே அவையெல்லாம் உயிர் இல்லாதவை அப்பனே.

அவ் உயிர் இல்லாதவை மீது அப்பனே பக்தி வைத்தால் என்ன லாபம்?? அப்பனே ஒன்றுமில்லை அப்பனே

திரும்பவும் அதன் பாதையில் அடைத்துக்கொண்டு உன்னையும் ஒன்றுமில்லாமல் செய்து விடும் அப்பனே.

தெரிந்து கொள்ளுங்கள் நன்றாக அப்பனே எவை என்று கூற.

அதனால் உயிருள்ளவை மேல் அப்பனே இறைவன் காலம் கடந்தவன் அப்பனே முற்றும் துறந்தவன் அவன்மேல் பக்தியை செலுத்துங்கள் அப்பனே. அனைவரும்.

இதையன்றி கூற அப்பனே இவ்வாறு இவ்வாறு நலன்கள் ஏற்படுவதற்கு இன்னும் இவ்வுலகத்தில் மாற்றங்கள் உண்டு அப்பனே எதை என்றும் அறியாமல் அறியாமலும் உண்டு உண்டு சிலசில திறமைகள் அப்பனே.

இவைதன் ஒவ்வொருவருக்கும் நல் முறையாகப் அப்பனே நல்லோருக்கு இனிமேலும் அப்பனே எவ்வாறு உயர்த்தபட வேண்டும் என்பதை கூட சித்தர்கள் யாங்கள் அறிவோம்.
அறிவோம்!! அப்பனே எவை என்று கூற....

""""""" பிறப்பு, இறப்பு அற்றவர்களே"""""""!!!!! சித்தர்கள் என்பேன் அப்பனே.

இவை என்று கூற ஆனாலும் மனிதர்கள் பொய்யானவர்கள்!!!! எவை என்று கூற இன்னும்(சித்தர்கள் பிறப்பார்கள் என்று பொய்கள்) பிறப்பெடுப்பான்...... 
அவந்தன் பிறப்பெடுப்பான் என்று பொய் சொல்லி அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஏது??????!!!!! அப்பனே சித்தர்களுக்கு பிறப்பு கூறுங்கள் நீங்களே!!!!.......

அப்பனே உண்டு உண்டு மேன்மைகள் அப்பனே எவை என்றும் அறியாத அறியாத உண்மைகள் இன்னும் உண்டு விளக்கங்கள் அப்பனே.

இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் நடக்கும் பொழுது நல்லோர்களை அப்பனே யாங்கள் அழைத்துக் கொள்வோம் அப்பனே கவலைகள் இல்லை.

ஆனாலும் எதை எதை என்று கூட அப்பனே ஐந்தறிவு கள்போல் ஐந்தறிவு உள்ள ஜீவராசிகள் போல் மனிதன் எவை என்று கூற வாழ்ந்துதான் கொண்டிருக்கின்றான் அப்பனே.

இவையன்றி கூற அதனால்தான் அப்பனே மனிதனையும் ஐந்தறிவு தான் என்று சொல்வேன்.அப்பனே.

இவை என்று கூற தான் என்னவோ!!!! இவையன்றி கூற தான் என்னவோ!!! தான் மட்டும் வாழ்ந்து அப்பனே தன் பிள்ளைகளுக்கும் மட்டும் எவனொருவன் அப்பனே எதை என்று கூற தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறானோ அவன் ஐந்தறிவு உள்ளவன் என்பேன் அப்பனே.

அனைத்தும் செய்யும் ஐந்தறிவு உள்ளவன்.இவையன்றி கூற ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளும் இதைத்தான் செய்து கொண்டிருக்கும். தான் என்னவோ அது போல் நடந்து கொண்டிருக்கும் என்பேன்.

ஆனாலும் ஆறாவது அறிவிற்க்கு வாருங்கள் அப்பனே அனைவரும் கூட.

அவ் ஆறாவது அறிவிற்கு வந்துவிட்டால் அப்பனே யான் அழைத்துச் செல்கின்றேன் அப்பனே.

ஆறாவது அறிவு என்பது நம்பிக்கை இறைவன்பால் செலுத்துதல்!!!, நன்மை செய்தல்!!! அப்பனே கோபம் கொள்ளாமை!!!, பொறாமை கொள்ளாமை!!! அப்பனே தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே. 

கருணை மனதாகவே சொல்கின்றேன் அப்பனே மனிதன் இன்னும் ஆறாவது அறிவுக்கே வரவில்லையென்றால் அப்பனே புரிந்துகொள்ளுங்கள் எவை என்று கூற.

ஆனால் ஜீவராசிகளோ ஆறாவது அறிவிற்கும் வந்துவிட்டது அப்பனே...

எவை என்று கூற ஆனால் மனிதனால் ஏன்?? வரமுடியவில்லை ??அப்பனே!!!

வாருங்கள்!!! அப்பனே....

நன்றாக விளக்கங்கள் உண்டு உண்டு உண்டு  என்பதற்கிணங்க இன்னும் சித்தர்கள் ஒவ்வொருவரும் வந்து அப்பனே இதையன்றி கூற அவரவர் திறமைக்கு எவ்வாறு என்பதையும் கூட அனைவரும் திறமை மிக்கவர்களே... அப்பனே பார்த்து நல் விதமாக நடந்து சென்று கொண்டு இருந்தாலே போதுமானது அப்பனே. 

அனைத்தும் தேடிவரும் அப்பனே அதனால்தான் அப்பனே எவையன்றி கூற மனிதன் எதை என்று கூற ஓர் எதை என்று பின் போகும்பொழுது எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் தான் போகின்றான்.

அதனால் பிரயோஜனம் உள்ளவைகளாக மாற்ற வேண்டுமென்றால் அப்பனே இறைவனே கதி என்று இருக்க அப்பனே நல்லவை.என்பேன்.

அதை விட்டுவிட்டு அப்பனே இவையன்றி ன்றி கூற அதன் பின்னே இதன் பின்னே ஓடினால் அப்பனே கடைசியில் வருவது துன்பமே என்பேன் அப்பனே.

அதனால் துன்பத்திற்கு காரணம் மனிதன் தான் என்பேன் அப்பனே.

இதனை விட்டுவிட்டு தெரிந்துகொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

அவை மட்டுமில்லாமல் அப்பனே இன்னும் அப்பனே அனைத்தும் செய்து விட்டு இளமையில் கூட அப்பனே எதை என்று கூற அனைத்தும் அனுபவித்துவிட்டு கடைசியில் அப்பனே எங்களை(சித்தர்களை) பற்றினால்??? எவ்வாறு என்பதையும் கூட செப்புவார்கள்.

ஆனாலும் பொய்யப்பா!!!!

அவந்தனுக்கு வேலைகள் இல்லாமல் எங்கள் பெயரைச் சொல்லிச் சொல்லி இப்படி அகத்தியன் நடக்கின்றான்!!! போகன் நடக்கின்றான்!!! சிவவாக்கியன் நடக்கின்றான்!!! ஈசன் நடக்கின்றான்!!! அப்பனே!!! இவையெல்லாம் அவந்தனுக்கு  வாழ்க்கையில் வெறுத்துவிட்டது. இதனால் அப்பனே பைத்தியம் போல் திரிவான் என்பேன் அப்பனே. சித்தர்களைப் பற்றி எண்ணி.

நலமாக நலமாக எதை எதை என்று கூற அப்பனே இவை என்று கூற அறிவதற்குள் காலங்களே சென்று விடுகின்றது அப்பனே.

எவை என்று கூட காலங்கள் செல்கையில் கடைசியில் அப்பனே பின் இறைவனை நோக்கி வருகின்றான் ஆனால்!! என்ன?? என்ன?? பிரயோஜன!!ம் அப்பனே...

மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கூட யாங்கள் அறிவோம் அதை ஆனாலும் எவை என்று கூற ஆனாலும் மனிதன் நினைத்துவிடுகின்றான். யாங்கள் எங்களாலும் செய்ய முடியும் என்றுகூட அப்பொழுதுதான் அவந்தன் விளையாட்டே தொடங்குகின்றது.... இறைவன் விளையாடுவான் என்பேன்.

இதை அனைவருக்கும் சொல்லிவிட்டேன் இதை என்று கூற என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று அமைதியாக இருந்தாலே போதுமானது இறைவன் நோக்குவான் என்பேன் மனிதர்களை.

அதை விட்டுவிட்டு யான்தான் பெரியவன் எந்தனக்கு அனைத்தும் தெரியும்... யான் முன்னே செல்கின்றேன் எவை என்று கூற அனைத்தும் யானும் செய்ய முடியும் என்று சொன்னால் அங்கேயே முதல் குழியில் விழுந்து விடுகின்றான் மனிதன்.

ஆனால் பின்பு கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு அப்படியே என்னால் அப்பனே எதை என்று கூற இறைவனே...... என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூட திரும்பவும் இறைவனிடத்தில் வருகின்றான் அது முதலிலேயே தெரிந்து கொண்டால் நல்லது என்பேன்.

அதனால் தான் இப்பொழுதும் சொல்வேன் என்னால் ஒன்றும் முடியாது இறைவா!!!! நீ பார்த்துக் கொள்... இதுதான் இறைவனுக்கு பிடித்த விஷயம் இறைவனுக்கு பிடித்த விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!!!

நலமாக நலமாக உண்டு உண்டு இவையன்றி கூற அப்பனே  இவையன்றி கூற பின் தியாகராஜனும் ( திருவையாறு தியாகராஜ பாகவதர் சுவாமிகள்) அவந்தனும்  வலம் வந்து கொண்டே இருக்கின்றான் அங்கும்!! இங்குமாக!!! நீங்கள் அனைவரும் அவன் கண்ணில் பட்டவர்கள் தான் அவனும் ஆசிர்வதித்து கொண்டே இருக்கின்றான்.

நலமாகவே நலமாகவே உண்டு அப்பனே என்று கூற புசுண்ட முனியின் அருளும் நல் விதமாக உண்டு.

நலமாகவே நலமாகவே உண்டு ஆனாலும் எதை என்று அறிவதற்கு அப்பனே புசுண்ட முனியும் எதை என்று கூற அவந்தனுக்கும் அப்பனே கோபங்கள்.... இவையன்றி கூற இதை என்று கூட வந்துவிட்டால் அப்பனே  சீறிப்பாய்ந்து விடுவான்!!! அப்பனே எதை என்று கூற. அனைத்தையும் நொறுக்கி விடுவது தான் அவனுடைய இயல்பு என்பேன், ஆனாலும்.

அப்பனே இவையன்றி கூற அப்பனே பலமுறையும் யான் புசுண்டனை(காகபுஜண்டர்முனி) பார்த்திருக்கின்றேன் அப்பனே ஆனாலும் என்னை பார்த்தால் அப்பனே அமைதியாக மௌனத்தை கடைப்பிடித்து தலைகுனிந்து நிற்பான் என்பேன் அப்பனே இதுதான் அவனுடைய வேலை.

நலமாக நலமாக உண்டு உண்டு இவையன்றி கூற என்னிடத்திலும் பின் பேசியவன் உண்டு கருணை அகத்தியா இவையன்றி கூற கருணைமிக்க நீயே இவை என்று கூற மனிதர்களுக்கும் இன்னும் இரங்கி கொண்டே இருக்கின்றாய்!! ஆனால் மனிதனோ இவையன்றி கூற தன் செய்கைகளால் எதை என்று கூற ஏமாற்றி ஏமாற்றியே நடத்துகின்றான் பிழைப்பை.

ஆனாலும் எவை என்று கூற நீயே எதை என்று கூற யானும் சொல்லிவிட்டேன்.. இதையன்றி கூற பார்ப்போம் பார்ப்போம் என்று கூட அதனால் அப்பனே நல்லோர்களுக்கு சொல்கின்றேன் அப்பனே.

எவை என்று கூற அப்பனே உன் மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்ய வேண்டாம் என்பேன் அப்பனே இதை அனைவருக்கும் யான் செப்புவேன் அப்பனே இனிமேலும் சித்தர்கள் அப்பனே எதை என்று கூற அதனால் இன்னொரு முறையும் செப்புகின்றேன் அப்பனே.....

சித்தர்கள் அப்பனே பிறப்பும் இறப்பும் இல்லாதவர்களாவார்கள். அப்பனே அதனால்தான் எதை என்று கூற அப்பனே இப்பிறவியிலும் அப்பனே எதையன்றி கூற அப்பனே எதை என்று கூட """உடம்பு தான் இல்லை!!!!! பின் "வலம் வந்து கொண்டே தான் """!!!!!இருக்கின்றோம்.

ஆனாலும் எங்களால் உடம்பை தேர்ந்தெடுக்க முடியும்!!!!  அத் தரித்திர உடம்பு எங்களுக்கு வேண்டாம் என்பேன்.

தரித்திர உடம்பு வந்துவிட்டால் அப்பனே அனைத்தும் வந்துவிடும் என்பேன் அப்பனே !!! 

பின்,  பின் பின் எவ்வாறு?? என்பதையும் கூட மனித உடம்பில் ஏற்படுத்தி ஏற்படுத்தி கஷ்டங்கள் படுத்தி படுத்தி வாழ வேண்டும் என்பேன் அப்பனே அதனால்தான் யாங்கள் உடம்பை தேர்ந்தெடுப்பதே இல்லை என்பேன்..

நலமாக நலமாக எவை என்று கூற மீண்டும் பிறக்கப் போவதில்லை அதனால் எதை என்று கூற அப்பனே நல் விதமாகவே அப்பனே நடக்கட்டும் யாங்களே முன்னின்று இதனை நடத்தியும் வைப்போம் அப்பனே மீண்டும் ஒரு மண்டலம் கழித்து (ஆலயத்திற்கு) செப்புகின்றேன் வாக்குகளை அப்பனே....

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

2 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Translation:
    https://drive.google.com/file/d/1iho2nbRN0j_RBfO7PNZQ2uOxkqkLqOV5/view?usp=sharing

    ReplyDelete