16/4/2022 அன்று சித்ரா பவுர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .
வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சாரொட்டி, என். எச். 8 தேசிய நெடுஞ்சாலை, தஹானு, தானே மாவட்டம்,
மகாராஷ்டிரா மாநிலம்.
ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.
நலமாக !!நலமாக!! எதையன்றி கூற இவள்தன் அருள் பலமாகவே இருக்க இருக்க எதையென்று செப்புவது!!!!
நலமாகவே கொண்டு வந்துள்ளேன் கொண்டு வந்துள்ளேன் இவற்றைப் பற்றியும் தெளிவாக தெளிவாக பல பல பல வழிகளிலும் தனத்தை ஈந்து தருபவள் இவள். அதனால் மனம் உவந்து இவளை வழிபட்டாலே போதுமானது பல வெற்றிகனிகளை குவிக்கலாம்.
அவைமட்டுமில்லாமல் செல்வங்கள் தேடிவரும் இவையன்றி கூற ஒழுக்கத்திற்கு பின் எவையன்று மாறாக செல்கின்றார்களே. இவைதன் இங்கே அழைத்து வர அழைத்து வர மேன்மை பெருகும் என்பது உண்மை.
இவையன்றி கூற இவள்தனே மாற்றி அமைப்பாள்!! நிச்சயம் சொல்லிவிட்டேன்.
இதனையுமன்றி கூற ஓர் நாளில் இந்நாளில் (சித்ரா பவுர்ணமி) நிச்சயமாய் பின் இவற்றின் இன்றும் கூற பௌர்ணமி அன்றைய தினத்தில் இவள்தன் நிச்சயமாய் இங்கே வருவாள்... அமர்ந்து.
இவையன்றி கூற அமாவாசைத் திதிகளிலும் நிச்சயம் வருவாள் இங்கு. இவையன்றி கூற மற்றபடி இவள்தனக்கு இடம் இவ் மலை மேலே என்பேன்.
இதையன்றி கூற இந்நாளில் வரவர செல்வாக்கு பெருகும் பெருகும் அவை மட்டுமில்லாமல் இதையென்று எவை எவை என்று கூற இன்னும் மாற்றங்கள் நிச்சயமாய் சொல்லிவிட்டேன்.
எவை பின் இவள்தனை மனதார எண்ணி
"""லக்ஷ்மி பதயே நமோ நம...!!!!
இவற்றின் முதலே இவையன்றி கூற இவைதன் உணர உணர இதைச் சொல்லிக் கொண்டாலே போதுமானது.
இவள் தன் நிச்சயமாய் மனம் இரங்குவாள்!!.
இரங்குவாள் என்பதற்கிணங்க பல வழிகளிலும் செல்வாக்கு பெற்றவர்கள் இவளை பின் பின் தொடர்ந்து தொடர்ந்து தான் நிச்சயம் ஏற்படுத்தியுள்ளாள். இவள்தன் . அவர்களும் நல்ல விதமாகவே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே.
இதைச் சுற்றியுள்ள இன்னும் ஊர்கள் பன்மடங்கு உயர்வுகள் உண்டு மக்களுக்கு ஏனென்றால் இவள் தன் கேட்டதை கேட்டபடியே கொடுப்பவள்.
இதனால் ஆனாலும் மக்களுக்கு அறியாமலே பல திருத்தலங்கள் உள்ளது.
அதனைமன்றி கூற வந்து விட்டால் நிச்சயம் செல்வாக்கு செல்வங்கள் சேரும் என்பது மெய்!!
இவையன்றி கூற இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் உண்டு இதையன்றி கூற நோய்களுக்கு...
ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன்... வரும் ஆடி மாதத்தில் நல்முறையாக இவள்தனை வணங்கி இவள்தன் இடத்தில் சிறிதளவு வேப்பிலை வைத்து அதனை கூட பின் ஆடி மாதத்தில் முழுவதும் தன் இல்லத்தில் வைத்து விட இன்னும் சிறப்புக்கள்... தீயவை அண்டாது. இன்னும் சக்திகள் பிறக்கும்.
பின் அம்மனவள் பேரருள் கிடைக்கும்.
இன்னும் பல திருத்தலங்களை தன் மனதில் எவ்வாறு என்பதைக்கூட அவ் அம்பாளே பின் அனைத்து திருத்தலங்களுக்கும் அழைப்பாள் என்பது மெய்.
இதுமட்டுமில்லாமல் சில சில மன பேய்கள் இதையன்றி கூற... பேய் என்பது மனதே!!!
மனக்குழப்பம் கொண்டவர்களும் இங்கே நல் விதமாக தங்கித் தங்கி வழிபட்டு வந்தாலே மன குறைகளும் நீங்கிவிடும் தெளிவு பெருகும்.
தெளிவு பெருகும் எவையன்றி கூற(மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மூளை வளர்ச்சி குன்றியவர்கள்) செயலிழந்தவர்கள் நிச்சயமாய் அறிவு இயலாதவர்கள் கூட சிறிதளவு இவையன்றி கூற இவள்தனை வந்தடைந்து வந்தடைந்தது சென்றாலே போதுமானது மாற்றங்கள் நிச்சயம் உண்டு.
உண்டு என்பதற்கிணங்க இன்னும் பல வெற்றிப் படிகள் இவள்தன் கொடுப்பாள் என்பது மெய்.
இவள்தன் இடம் இங்கே மேலே உள்ள மலையே என்பேன். அவ் மலை உச்சியில் இவள்தனும் நல் முறையாக பல ஞானியர் களும் தங்கி கொண்டே இருக்கின்றார்கள்..எவையென்று கூற. அவ் ஞானியர்கள் ஒர் நாள் வருவார்கள் அது இன்றைய தினமே!!!
இன்றைய தினமே என்று எவ்வாறு என்பதை கூட பல மக்களுக்கு தெரியப்படுத்துவாள் அவள் தன்...அவள்தன் படியே நிச்சயமாய் யான் சொல்லிய மந்திரத்தையும் நிச்சயமாய் கடைபிடித்துக் கொண்டே இருந்தால்.....
அவள்தனே இங்கே அழைத்து விடுவாள் செல்வாக்கையும் கொடுத்து விடுவாள் ஆனாலும் அதற்கு அனுகிரகங்கள் புண்ணியங்கள் தேவை...இவை இவை என்று கூட..
அதனால் பல திருத்தலங்களை பற்றியும் யான் சொல்கின்றேன்... உரைத்துக் கொண்டே வருகின்றேன் மக்களே தெரிந்து கொண்டு நல் விதமாகவே திருந்திக்கொண்டு சென்றடைந்தால் உண்மை நிலை என்னவென்று தான் தன் இஷ்டப்படி நிச்சயம் நடக்கும் என்பேன் குறைகள் வராது.
அதைவிட்டுவிட்டு இவையென்று கூற இங்கே தெய்வத்தின் அருள் பரிபூரணம். தெய்வத்தின் அருள் சக்தியைவிட இங்கே வேறொன்றுமில்லை இவையென்று கூற... இதன்படியே பின் பல திருத்தலங்களுக்கு சென்று விட்டால் மனோவசிய சக்திகள் நம் உள்ளத்தில் நுழையும் என்பேன்.
இவ்வாறு நுழைந்தால் நன்மைகள் ஏற்படும் என்பேன். கிரகங்கள் எதையென்று கூற கட்டுப்பாடுகள் வராது என்பேன்.
இவர் தான் உணர உணர அதனால் தான் பல திருத்தலங்களை பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.
அங்கெல்லாம் சென்று கொண்டே வந்தால் நிச்சயம் மீண்டு கொள்ளலாம் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ளலாம்!!! நடந்துகொள்ளலாம்!! உண்மை நிலையை அறிந்து, பின் இக்கால நிலையைப் போக்கி தன் காலத்தையும் வென்றுவிடலாம்!! இதுதான் உண்மை.
செப்பிவிட்டேன்!!!!
இன்னும் பல சூட்சமங்கள் ஒளிந்துள்ளன... ஆனாலும் மக்களுக்கு தெரியாமலே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் திரிந்து கொண்டு இருக்கின்றான்.
ஆனாலும் கஷ்டங்கள் எவையென்று கூற தெரியாமல் வருவதுண்டு தெரியாமல் போவதும் உண்டு ஆனாலும் எதையென்று நிரூபிக்கும் அளவிற்கும் கூட இன்னும் கஷ்டங்கள் வரும்.
அவற்றிலிருந்தும் கூட ஆனாலும் பின் இறை பலங்களுக்குத்தான் பின் எவை என்று கூற இவ் கஷ்டங்களை நீக்கும் தகுதி உள்ளது.
ஆனாலும் அதை அறியாமல் மனித நிலை மாறி மனிதனிடத்தில் சென்று எவ்வாறு என்பதை சில காசுகள் கொடுத்து எவ்வாறு செய்யலாம்?? என்று கூட.... ஆனாலும் அது சிறிது காலத்திற்கே....
பின் அடித்தால் அனைத்தும் அழிந்து போகும் என்பதைக்கூட யான் முன்னே சொல்லிவிட்டேன்.
ஆனால் தெய்வ பலங்கள் அப்படி இல்லை.... சோதனைகளைத் தரும் அதையும் தாண்டினால் அனைத்தும் கொடுத்துவிடும். இயல்பில்லா வாழ்க்கையையும் கொடுத்து விடும்...இதையென்று கூற கொடுத்து கொடுத்து நல்வழியாக்கி இறையருள் பெற்று பலமாக இப்பிறவி மோட்சமும் அடையும்.. என்பது நிச்சயமான வாக்கு அதனால் இதனை பல வழிகளிலும் யாங்கள் சித்தர்கள் பல பல வழிகளிலும் பின் திருத்தலங்களை அமைத்தோம்... அங்கெல்லாம் எப்படி சென்று வழிபட வேண்டும் என்பதைக்கூட யான் வரும் வரும் காலங்களில் அவை மட்டுமில்லாமல் இன்னும் ஏனைய சித்தர்களும் பல ரிஷிமார்களும் நிச்சயம் வாக்குகள் உரைப்பார்கள் வந்து இச்சுவடி தன்னில்.
நல் விதமாகவே.
இதனால் பயன்படுத்திக்கொண்டு அப்பனே நல்லோர்கள் எவையன்றி கூற எங்களுக்கு ஒருவர் இருந்தாலும் அவற்றின் மூலம் யாங்கள் மற்றவர்களை கூட எவை என்று கூற தூண்டித் தூண்டி மற்றவரை மற்றவரை இதனால் பல மனிதர்களை உருவாக்குவோம் இதுதான் உண்மை.
எவையன்றி கூற என் வாக்குகளை சரியாக கேட்டு நன்கறிந்தால் அப்பனே நலமாகும் பிழைத்துக் கொள்ளலாம்.
இவ்வுலகத்தில் எப்படி வாழலாம் என்பதை கூட ஏனைய சித்தர்கள் நிச்சயம் செப்பிக்கொண்டே வருவார்கள்.. தெரிவித்துவிட்டேன். """"தெளிவு குருவின் அருள்!!! தெளிவின் குரு அதனால் தான் குருவின் அருள் பரிபூரணம்.
பரிபூரணம் என்பதற்கிணங்க ""தெளிவு குருவின்....... """இதனால் குருவைப் பிடித்துவிட்டால் குருவானவர் நிச்சயம் வழிகள் காட்டுவான்.
ஆனால் மனித வடிவில் உருவானது குருவானவனை பிடித்தால் தரித்தரமே!! என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே இவையன்றி கூற அவற்றின் தன் மூலமாக பின் பிடித்துக் கொண்டாலும் அவர்களுக்கும் சிறு நிம்மதி தரும் ஆனால் சில கஷ்டங்கள் வந்து அவர்கள் பிள்ளைகளை தாக்கக்கூடும் .
ஏனென்றால் மனித குருவானவன் எவையென்று கூற எவற்றை சொல்லித்தரப் போகின்றான்?? சுகங்களுக்காகவே சொல்லித்தர போகின்றான்.
அதனால் தான் சொல்லிவிட்டேன் மனித குருமார்களை யார் பிடித்துக்கொண்டார்களோ அவர்கள் வீண்!!! என்று சொல்லிவிட்டேன்.
இவையன்றி கூற நேரடியாக எவையன்றி கூற பின் எதையென்று கூற சீடன் என்பவன் குருவைத் தேடி வர கூடாது என்பேன்.
பின் எவையென்று கூற குரு தான் சீடனைத் தேடி வரவேண்டும்.
இவையென்று கூற அவற்றிற்கு எவையென்று தகுதியானவைகள் சீடன் படைத்திருக்க வேண்டும் அதனால் சொல்கின்றேன்.
அமைதியாக தியானங்கள் செய்து நல் விதமாக நல்லெண்ணங்களை மேம்படுத்தி ஒழுக்கமாக வாழ்ந்திட்டு பின் பொறாமைப் படாமல் எதையன்றி கூற நல்தனமாக வாழ்ந்திட்டு சென்றால் யாங்கள் அவந்தனை சீடனாக ஏற்றுக்கொள்வோம். எவையன்றி கூற அவந்தனுக்கு பல வழிகள் காட்டுவோம்... மேலும் உயர்த்தி கொண்டே போவோம் .
இதுதானப்பா வாக்கு....
எவையன்றி கூற இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே.
எதை எதை என்று கூறும் அளவிற்கு கூட இன்னும் மாற்றங்கள் எதனை எதனை என்று கூறும் அளவிற்குக்கூட இவ்வுலகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பின் மற்ற எதையென்றும் எவற்றினென்றும் அப்பனே நல்விதமாக இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் ஏறக்கூடும்....பின் சொல்கின்றேன் வாக்குகளாக... இன்னும் இன்னும் பல சித்தர்களும் வந்து செப்புவார்கள் அப்பனே கவலைகள் இல்லை.....மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன்.
அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்!!!
பின் குறிப்பு :
வணக்கம் அகத்தியர் அடியவர்களே.....
குருநாதர் அகத்தியரின் ஜீவநாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் கடந்த மாதம் சிவராத்திரி காசி பயணத்தின் போது செல்லும் வழியில் குருநாதர் அகத்தியர் செல்லும் வழியில் இருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரின் திருக்கோயிலில் தரிசனம் செய்வித்தார்.
நல்ல முறையில் தரிசனம் செய்துவிட்டு தொடர்ந்து காசி பயணத்தை மேற்கொண்டார்.
இந்த மாதம் குருநாதர் அகத்தியப் பெருமான் உத்தரவுப்படி வட இந்திய யாத்திரையில் சித்ரா பௌர்ணமி அன்று திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் தரிசனத்தில் போது காகபுஜண்டர் வாக்குகளுக்கு பிறகு குருநாதர் அகத்தியர்.... அவ் அம்மை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றாள்.... இன்றைய தினம் அவளுடைய தினம்.... அதனால் அங்கு விரைந்து செல்க!!! வாக்குகள் உரைத்தார்..
அதன்படியே சாரொட்டி மகாலட்சுமி ஆலயத்திற்கு வந்தடைந்தார். அன்றைய தினம் மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் திருவிழா தினம்.... நல்முறையாய் தரிசனம் செய்வித்த குருநாதர் வாக்குகளையும் உரைத்தார்.
ஆலயம் பற்றிய விவரங்கள்
தானே கோயில் கொண்ட தஹானு திருமகள்
பால்கார் மாவட்டம் தஹானு ஸ்ரீ மஹாலட்சுமி மஹாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்பையிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பால்கார் மாவட்டம், தானே எனப்படும் தஹானு என்ற கிராமத்தில் மலை மீது ஒரு ஆலயமும், மலையடிவாரத்தில் ஒரு ஆலயமுமாக இரண்டு ஆலயங்களில்ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.
அடிவாரத்தில் உள்ள ஆலயம் சரோட்டி நாகா என்ற இடத்திலும் இன்னொரு ஆலயம் இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியிலும் உள்ளன. இந்த மலை, மஹாலட்சுமி மலை என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஆலயங்களில் ஸ்ரீ மஹாலட்சுமியின் சிரசு மட்டுமே கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடற்கரை நகரமான தஹானு ஒரு காலத்தில் இங்கு வளர்க்கப்பட்ட ஏராளமான பசு மந்தைகளின் காரணமாக தேனு (பசு) கிராம் என்று அழைக்கப்பட்டு அதுவே தஹானு கவோன் என்றும், தஹானு என்றும் அழைக்கப்பட்டது. காமதேனுவின் உடலில் அனைத்து தேவர்களும் உறைவதாக ஐதீகம். அதன் வால் பகுதியில் ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். இத்தலத்தில் ஏராளமான பசு மந்தைகள் இருந்ததால் பசுக்களில் வாசம் செய்யும் ஸ்ரீ மஹாலட்சுமி இத்தலத்தை தான் கோவில் கொள்ளும் தலமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சஹ்யாத்ரி மலையில் தஹானு கிராமப் பகுதியில் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்க எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி இம்மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ஹாப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது.
ஸ்ரீ கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி கோலாசுரனோடு போரிட்டு அவனை வதம் செய்த பின்னர் கோல்ஹாப்பூரில் தங்கி அருள்பாலிப்பது போன்றே, தானே மஹாலட்சுமியும் இங்கு ஒரு அசுரனோடு போர் புரிந்து, அவனை வதம் செய்த பின்னர் ஓய்வு எடுக்கும் பொருட்டு மலையின் உச்சியிலும், கீழும் இரண்டு ஆலயங்களில் கொலு வீற்றிருப்பதாக ஐதீகம். மேலும் தேவி இங்கு வந்து தங்கியதன் பின்னணியில் இன்னொரு நிகழ்வை மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பல நுற்றாண்டுகளுக்கு முன்பாக மலையின் மீது வாழ்ந்த ஒரு ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணிப்பெண் பிரசவ வலியால் அவதிப்பட்டதை பார்த்த தேவி அந்தப் பெண்ணைப் பார்த்து பவித்திரமான அந்த மலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு கூறி, தான் அவளைத் தொடர்ந்து வந்து அவளுக்கு உதவுவதாக வாக்களித்ததோடு அந்தப் பெண் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும் ஆணையிட்டாளாம். ஆனால், அந்தப் பெண் மலையடிவாரத்தில் வந்த போது திரும்பிப் பார்க்க, தொடர்ந்து வந்த தேவி மலையின் கீழேயுள்ள சரோட்டி நாக் என்ற அந்த இடத்திலேயே பிரதிஷ்டை ஆனாளாம்.
மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்த ஆலயம் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. வட இந்திய ஆலயக் கட்டிடப் பாணியில் கருவறை மீது ஒரே கலசத்துடன் நாகரம் எனப்படும் நான்கு பட்டை விமானம் அமைந்துள்ளது. இந்த விமானத்தின் மீது வெண்மை, செந்நிறக் கொடிகள் பறந்த வண்ணம் உள்ளன.
கருவறையின் நடுநாயகமாக நான்கு தூண்களைக் கொண்ட வெள்ளி மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சியளிக்க சிந்தூர வண்ணம் பூசப்பட்ட ஸ்ரீ மஹாலட்சுமியின் பெரிய முகம் மட்டும் பத்ம பீடத்தின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்ரீ ரேணுகா தேவி ஆலயங்களில் சிரசு மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், இத்தலத்தில்ஸ்ரீ மஹாலட்சுமியின் சிரசு மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. கோல்ஹாப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயம் சதிதேவியின் கண்கள் விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடமாக வணங்கப்படுவதைப் போல இங்கும் தேவியின் பெரிய நயனங்களுக்கு மகிமை உள்ளன.
மேலும், தேவியின் நீண்ட அழகிய நாசியில் அணிவிக்கப்பட்டுள்ள, மீன் உருவில் உள்ள மத்ஸ்யாபரணம் இக்கோவிலுக்கே உரிய தனிச் சிறப்பாகும். மலை உச்சியின் மீது கொலுவீற்றிருக்கும் தேவியை மூல மூர்த்தி என்று பக்தர்கள் கருதுவதாலும், மலையேறி தன்னை தரிசிக்க முடியாத பக்தர்களுக்கு தான் எளிதில் காட்சி தரவேண்டும் என்ற கருணையோடு தேவி மலையடிவாரத்திலும் குடி கொண்டிருப்பதாலும் கீழ் கோயிலில் நடைபெறும் பூஜைகள், வழிபாடுகள் அனைத்தும் மலை உச்சியிலுள்ள மூலவிக்ரகத்திற்கு நடைபெறும் பூஜைகளாகவே கருதப்படுகின்றன.
குன்றின் உச்சியில் அமைந்துள்ள மூலஸ்தான ஆலயத்திற்குச் செல்ல 900 படிக்கட்டுகள் உள்ளன. அங்கும் தேவியின் சிரசு மட்டுமே கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடப்படுகிறது. சுமார் 1540 அடி உயர செங்குத்தான இந்த மலை உச்சியில் ஒரு சிறிய ஆலயத்தில். ஸ்ரீ மஹாலட்சுமி தேவி எழுந்தருளியிருக்கிறாள்.
அக்காலத்தில் இப்பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் ஸ்ரீ மஹாலட்சுமியை தங்கள் குல தேவதையாக வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றனர். மகாலட்சுமி தேவி இப்பகுதி மக்களால் ஆதி வாசி மாயி (ஆதிவாசிகளின் தாய்) என்றே பக்தியோடு வழிபாடு செய்து வருகின்றார்கள்.
இரண்டு ஆலயங்களிலுமே ஆதிவாசிகளும் அந்தணர்களும் இணைந்தே ஆலய வழிபாடுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சித்ரா பௌர்ணமி நாளன்று நள்ளிரவில் மலை உச்சி மீது ஜோஹார் ஆதிவாசி வகுப்பினைச் சேர்ந்த ஒருவர் கொடியேற்றி வைப்பது வழக்கம்.
மும்பை-அஹமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மும்பையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள சஹ்யாத்ரி மலைத் தொடரில் மலைஉச்சியிலும், அடிவாரத்திலும் தேவிக்கு இரண்டு ஆலயங்கள் உள்ளன.
ஆலய முகவரி ஸ்ரீ மஹாலட்சுமி மந்திர் சரோட்டி அஞ்சல் என்.எச்.8 தஹானு, தானே மாவட்டம் 401607. ஆலயத் தொடர்புக்கு: 092724 56489
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...........தொடரும்!
Sir, if we try to contact, it says invalid number. Any other contact number is available sir
ReplyDeleteTranslation:
ReplyDeletehttps://drive.google.com/file/d/1Kzk0P5odM2z27UaXQuf0jsk36ZZ33-N0/view?usp=share_link
ReplyDeleteஇறைவா !!!!! நீயே அனைத்தும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
சித்தன் அருள் - 1121 - ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சரொட்டி,தானே மாவட்டம், மகாராஷ்டிரா மாநிலம்.
=======================================================
https://www.youtube.com/watch?v=pwt_FPSm_4o
=======================================================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!