14/11/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஜீவசமாதி வாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ மோராயா கோஸ்வி கணபதி மந்திர், பிம்பிரி சிஞ்வாட். புனே மகாராஷ்டிரா.
ஆதிபகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே!!!! எதையென்று ஆனாலும் அப்பனே முற்காலத்தில் அப்பனே!!! மிக உயர்ந்த பக்திகளையும் அப்பனே!!! இறைவன் மீது பின் எதை எவ்வாறு என்பதையும் கூட அப்பனே பல பக்திகளை காட்டி காட்டி அப்பனே பின் உயர்ந்த பிள்ளைகளை பெற்றனர்.
அப்பனே!!!
இதனால் அப்பனே!!! எதை என்றும் உணர்த்தும் அளவிற்கும் கூட இப் பிள்ளையை பற்றியும் யான் சொல்கின்றேன் அப்பனே!!!!!
ஆனாலும் பின் """ சுகந்தி தேவி""!!!!!......... ஆனாலும் எதை நிமித்தம் நிமித்தம் என்று... அப்பனே இவள்தன் குடும்பத்தில் பின் பல கஷ்டங்கள்!! பல கஷ்டங்கள் உருவானது !!!
எதனை எவற்றில் இருந்து கூட வந்தவை என்று கூட தெரியாமல்.
ஆனாலும் இவ் தேவி அதாவது பின் குடும்பத்தை பின் சரியாக பார்க்க முடியவில்லை அப்பனே எதை என்று பின் இவளுடைய தாய் தந்தையரும் வறுமை வறுமையில் வாடி வாடி ஆனாலும் நிச்சயமாய் கணபதியை விட்டு விடவில்லை!!!!
பின் கணபதியையே நாடி நாடி... இதன் பக்கத்தில் உள்ள பல பல கணபதிகளையும் ( அஷ்ட விநாயகர் எனப்படும் எட்டு விநாயகர்கள் . மகாராட்டிரா புனே மாவட்டம், ராய்கட் மாவட்டம் மற்றும் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் எட்டு விநாயகர் கோயில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது) பின் துதித்து துதித்து... ஆனாலும் இதனைப் பற்றியும் கூட வரும் காலங்களில் நிச்சயம் கணபதி எவ்வாறெல்லாம் நிச்சயம்!!! பின் தன் மாற்றத்தை ஏற்படுத்தினான் என்பதை கூட நிச்சயம் ஆலயங்களில் சுற்றி சுற்றி தெரிவிக்கின்றேன் அப்பனே!!!! ( அஷ்ட விநாயகர் கோயில்கள் தல வரலாறு பற்றி) இதன் மூலம் அப்பனே நல்முறையாகவே மனிதன் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே வெற்றி நிச்சயம் அப்பனே!!!!
வெற்றி என்பது அப்பனே சாதாரணமாக வருபவை அல்ல அப்பனே!!!!
முன்னோர்கள் அதாவது அப்பனே புண்ணியங்கள் செய்து இறைவன் பக்தியை கடந்து கடந்து அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே இறைவனே கொடுத்ததை அப்பனே இப்பொழுது கூட அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே இதுதான் உலகம்!
ஆனாலும் அப்பனே இதையென்று ஆனாலும்.... தாய் தந்தை மாண்டு ( சுகந்தி தேவியின் தாய் தந்தையர்) ஆனாலும் அப்பனே இதனையும் ( விநாயகர் வழிபாடு) விட்டுவிடவில்லை அப்பனே!!!!
பின் எதை என்று அறிவதற்குள் பின் ஆனாலும் இவள்தனை பின் யாரும் மதிக்கவில்லை என்பதற்கிணங்க உற்றார் உறவினர் எதை என்று தெரிவிக்கும் அளவிற்கு கூட யாரும் உதவிகள் செய்யவில்லை உதவிகள் செய்ய வரவில்லை!!!
இதனால் கணபதி தான் நிச்சயம் துணை என்று எண்ணி பின் கணபதி பின் பல இடங்களில் பின் எதை என்றும் எதை என்றும் ஆங்காங்கே திருத்தலங்களுக்கு சென்று கடைசியில் இங்கே வந்து அமர்ந்தாள்!!!
வந்து அமர்ந்தவுடன் அப்போது இவையெல்லாம் காடுகள் !!!
ஆனாலும் இதனை அறிந்து ஒரு ஞானி அவ் ஞானி எதை... ஆனாலும் எதனையும் காட்டி காட்டி ஆனாலும் நிச்சயமாய் அவ் ஞானி... இவ்வாறு சொன்னான் அவ் பெண்மணிக்கு!!!!
அதாவது இப்படி நீ பல சோகத்தில் மூழ்கி இருக்கின்றாய் அம்மையே!!! ஆனாலும் உந்தனுக்கு கூட யாரும் உதவிகள் செய்ய முன்வரவில்லை அதனால் நிச்சயம் பல பல இடங்களுக்கு சென்றால் நிச்சயம் பல வழிகளிலும் கூட ஞானத்தை பெற்று உந்தனுக்கு ஒரு பிள்ளை பிறப்பான்!!!!!
அப் பிள்ளை நிச்சயமாய் இவ்வுலகத்தில் பல பல இன்னல்கள் அதாவது உன்னைப் போன்ற பல கஷ்டங்கள் படைத்த பெண்களுக்கும் கூட பல பல வழிகளிலும் கூட பின் உதவிகள் அக்குழந்தை செய்யும் என்பது தீர்க்கமான கணிப்பு!!!!
இதனால் அப் பெண்மணி நிச்சயமாய் எதையென்று அறிய அறிய பல திருத்தலங்களுக்கு நாட வேண்டும் ஆனாலும் எங்கிருப்பதை??(ஆலயங்கள்) என்பதை கூட தெரியாமல் போனது!!!!!
ஆனாலும் நிச்சயமாய் பின் மீண்டும் மீண்டும் தியானத்தை செய்ய தொடங்கினாள்!!!! தொடர்ந்து செயல்பட்டாள்!!!! தொடர்ந்து செயல்பட்டு ஆனாலும் நிச்சயமாய் பின் விடிவெள்ளி!!!! ஆனாலும் இதற்கு சம்பந்தமான நிச்சயம் பின் அதாவது கணபதியே நிச்சயமாய் இவள்தனுக்கு துணை புரிந்தான்!!!!
கணபதி பின் குழந்தை ரூபத்தில் வந்து அதாவது பின் ஓர் பதினைந்து வயதுடைய குழந்தை ரூபத்தில் வந்து கணபதியே!!!!!!
அவ் தேவியை தாயே!!! என்று எண்ணி பின் எந்தனுக்கும் யாரும் இல்லையே!!! இதனையும் அறிந்து அறிந்து உந்தனுக்கு கூட பல வழிகளிலும் யான் சேவை செய்கின்றேன். நிச்சயமாய் யான் பார்த்துக் கொண்டே இருந்தேன்!!!
ஓர் ஞானியவன் உந்தனுக்கு என்னென்ன? கூறினான் என்று கூட!!!
அதனால் புறப்படுவோம் வா!!!! யானும் எதை என்று அறிந்து அறிந்து இதனால் முதலில் கணபதி எதை என்று கூட கணபதி கையைப் பிடித்து முதலில் பல வழிகளிலும் இங்கிருந்து நடை பயணத்தை மேற்கொள்ள நிச்சயம் அங்கங்கே பல வழிகளிலும் கூட உண்ண ஆகாரங்கள் எதை என்று நிமித்தம் காட்டி ஆனாலும் கணபதி நினைத்திருந்தால் பின் ஏதாவது வழியாக தூக்கிச் சென்றிருக்கலாம்!!!
ஆனால் கர்மா இப்படித்தான் பின் அனுபவித்து பிறந்தால்தான் இவ்வுலகத்தில் உள்ள அனைவருக்கும் நல்லது செய்ய முடியும்!! என்று ஆனாலும் இதனையும் முதலில் பின் பிள்ளையோன்பட்டி தற்பொழுது கூட """பிள்ளையார்பட்டி!!!!! எதை என்று கூட அனைவராலும் அன்பாகவே அழைக்க ஆனாலும் முதலில் அங்கு தான் இவ் அம்மையை அழைத்துச் சென்றான்!!!
அங்கு பல பல வழிகளிலும் கூட உண்மைகளை புரிந்து புரிந்து ஆனாலும் இதையன்றி அறிந்து அறிந்து ஆனாலும் பின் அவ் அம்மைக்கு ஞாபகத்தில் வந்தது நிச்சயம் இறைவன் நிச்சயம் பிள்ளையை கொடுப்பான்!!!
அப் பிள்ளையை இவ்வுலகத்தில் உள்ள பல பல வழிகளிலும் கூட பின் எதை என்று அறியாமலே எதையென்று புரிந்து புரிந்து பல வழிகளிலும் கூட ஞானத்தை பெற்று நிச்சயம் உதவிகள் செய்யும் ஞானிக்கு ஞானி ஆவான் என்று கூட உரைத்திருந்ததை நிச்சயம் அவ் அம்மை நிச்சயம் இறைவன் இன்னும் இன்னும் கூடுதலாக நமக்கு நல்லாசிகள் தந்து கொண்டே இருக்கின்றேன். என்பதிற்கிணங்க நிச்சயமாய் சந்தோஷங்கள் சந்தோஷங்கள்!!!!
ஆனாலும் பிள்ளையோனை பார்த்து இப்பொழுது தான் இவ் அம்மை சந்தோஷபடுகின்றாள் என்பதை கூட...... மீண்டும் அங்கிருந்து பின் செந்தூருக்கு!!!! ( திருச்செந்தூர்) முருகனை காண!!!!
ஆனாலும் இதையென்று அறிய அறிய சரியாகப் புரிந்து கொண்டான் வந்தது யார் ??என்பதை கூட முருகனே!!!!!
ஆனாலும் முதலில் கூட பல பல திருத்தலங்களுக்கு கூட பின் முருகன் தலங்களுக்கு கூட பின் கடைசியில் பழனி தன்னில் அமர்ந்து விட்டாள்!!! இவள்தன் அங்கே நிச்சயம் கர்ப்பம் தரித்தாள்!!!! இறைவன் நிச்சயமாய் பின் எதை என்று ஆனாலும் இதனை நிமித்தம் காட்டி காட்டி பின் பிள்ளையோன் அறிந்து கொண்டான்... நிச்சயம் ஞானி பிறக்கப் போகின்றான் என்று!!!!
ஆனாலும் நிச்சயம் இவ் ஞானி எதை என்று அறியாமலே ஆனால் பிள்ளையோன் மனதில் கூட.... எதையென்று உணர்த்தும் அளவிற்கு கூட இவள் எங்கு எதனை என்றும் அறியாமலே பின் பிறந்தாளோ!!!! அங்கேயே பின் அழைத்து வரப்பட வேண்டும்.... அதனால் பின் இங்கு இருக்கும் ( மகாராஷ்டிரா) அனைவருக்கும் நலம் என்பதை கூட!!!
ஆனாலும் நிச்சயம் இதனையும் அறிந்து கொண்டான் முருகன்!!!! முருகன் அறிந்து கொண்டு பின் தம் பின் எதை என்று மூத்தோனே!!!!!! ( தன் அண்ணன் பிள்ளையார்) இவ்வாறு நினைக்கின்றானே!!!! என்று கூட ஒரு மயில் ஒன்றை அனுப்பினான்!!!!
நிச்சயமா எதை என்று அறிய அறிய இதனால் பின் கணபதிக்கு தெரிந்துவிட்டது!! அவ் மயிலில் அமர்த்தினான் அவ் அம்மையை!!!! அமர்த்தி எதை என்று நிமித்தம் காட்டி முதலில் அண்ணாமலைக்குச் செல்ல!!!!
ஆனாலும் அங்கேயும் பல பரிசுத்த பின் ஈசனும் பார்வதி தேவியும் ஆசிர்வதித்து பல சித்தர்களும் ஆசிர்வதித்து நிச்சயமாய் எதை என்றும் ஆனாலும் மயில்வாகனம் பின் எதை நிமித்தம் உண்டு என்பதற்கிணங்க... இங்கே எதை என்று அறிந்து அறிந்து பின் எங்கே நிற்கின்றதோ அங்கே நிச்சயம் பிள்ளையும் பிறப்பான்!!!! என்பதற்கிணங்க.... இதனால் பின் அங்கிருந்து( திருவண்ணாமலை) மேல் நோக்கி பின் எதை என்று அவ் மயிலும் இங்கே தோகை விரித்து இங்கேயே(புனே) பின் நின்று விட்டது!!!!
இதனால் அவ் அம்மையும் பின் நிதானத்து!! நிதானித்து!!! அவ் ஞானி இங்கே தான் பிறந்தான்!!!!
பிறந்திட்டு அறியாமல் எதனை என்றும் ஆனாலும் மகிழ்ச்சி அவள்தனக்கும் மகிழ்ச்சி பிள்ளையோனுக்கு...பின் பெரும் மகிழ்ச்சி!!!!!
இப்படி அவள் நம்தனை நினைத்துக் கொண்டே இருக்க!!!! நிச்சயம் பிள்ளை பிறந்து விட்டான்!! ஆனால் இவன் தன் ஞானி என்பதை கூட பிறக்கும்போதே...பின் எதையென்றும் எவற்றையென்றும் கூட பின் கணபதி...... கணபதியே !! கணபதியே!! என்று கத்திட்டுப் பிறந்தது!!!!
ஆனாலும் இன்னும் ஞானியர்கள் எவ்வாறு? பிறந்துள்ளார்கள் என்பதை கூட ஆனாலும் முதல் குழந்தை """ ஆ !!!!!!என்றே எதை என்று நிமித்தம் காட்டி பிறக்கும்.... ஆனால் பல ஞானியர்கள் """"""" சிவாய நம !!!!!!! நமச்சிவாயா!!!!! என்றெல்லாம் பிறந்திருக்கின்றார்கள்!!!அதிலும் ஒரு ஞானி இவன்!!!
கணபதியே!!! என்று கூட!!!
ஆனாலும் பிறந்திட்டு நலமாகவே வலம் வந்து வலம் வந்து இதனால் வளர தொடங்கியதற்கு சிறுவயதில் இருந்தே எதை என்று சிறுவயதில் இருந்தே.. பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டினான்!!! நிகழ்த்தி காட்டி!! காட்டி!! பல மனிதர்களை பல மனிதருக்குள் இடம் பிடித்து விட்டான்!!!15 வயதினிலே!!!
ஆனாலும் இதற்கும் சம்பந்தங்கள் உண்டு கணபதியும் 15 வயது ஆனாலும் ஆனாலும் கணபதிக்கு நல் எண்ணத்தோடு உயர்ந்த எதை என்று அறியாமலே மீண்டும் எங்கு( சிறுவன் ரூபத்தில் வந்த கணபதி) செல்லலாமோ அங்கு சென்று விட்டான்!!!!
ஆனாலும் அப் பெண்மணியோ தேடிட்டாள் கணபதியை!!!! ஆனாலும் வந்தது கணபதி என்பதை கூட சரியாக புரிந்து விட்டாள்!!!!
இதனால் பின் இப்பிள்ளையை அன்பாகவே ஆனாலும் எதனை என்றும் ஆனாலும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு நிச்சயம் இவன் ஞானி ஆகப் போகின்றான் பல மனிதர்களுக்கு உதவியும் செய்யப் போகின்றான் என்பதற்கிணங்க...அவ் தாய் சந்தோசமடைந்தாள்!!!
சந்தோஷம் அடைந்து அடைந்து நிச்சயம் இப் பிள்ளை பல வழிகளிலும் கூட கணபதியின் அருளை பெற்று பல வழிகளிலும் கூட சித்து விளையாட்டுக்கள் பின் வருவோருக்கெல்லாம் நோய்களை தீர்த்து வைத்தல்!!! ஆனாலும் இத்தண்ணீரை பின் எதை அறிந்து நோய் சாதாரணமாக தீர்க்கப்படவில்லை!!! இத் தண்ணீர் எடுத்து எதை என்று எவ் நோயாக இருந்தாலும் அவர்கள் மீது தெளித்தாலே அனைத்தும் பின் சரியாகிவிடும் என்பதை கூட!!!
இதனால் இவன் புகழ் இவந்தனின் புகழ் அக்கம் பக்கத்திலும் கூட பரவியது!!!!
இதனால் ஒரு ஞானி இருக்கின்றான் என்பதை கூட பல வழிகளில் கூட தேடி வந்தனர்!!!! எதை என்றும் கூட பல வழிகளில் கூட பின் மௌனமாக தியானித்து தியானித்து பல வழிகளில் கூட பல மனிதர்களுக்கு உதவிகள் செய்தான்!!!! இதனால் பின் முன்னேற்றம் இன்னும் இன்னும் தாயவளுக்கும் பின் மிக்க மிக்க சந்தோஷங்கள்!!!!
ஆனாலும் எதனை என்று கூட ஆனாலும் இவ் ஞானி !!!தாயவளுக்கு மரணம் ஏற்படுவதை கூட கணித்து விட்டான் !!!
அதன் முன்னே நிச்சயம் இவள்தனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி நிச்சயமாய் பின் என்ன வேண்டும் தாயே???
உந்தனுக்கும் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது என்று கூற!!!!
அத் தாயவள் ஆனாலும் நிச்சயம் உன் மடியிலே யான் தூங்க வேண்டும் என்று!!!!!
ஆனாலும் பின் இவ் ஞானிக்கு சரியாக தெரிந்து விட்டது மடியில் தூங்கும் பொழுதே நிச்சயம் உயிர் போய்விட வேண்டும் என்பதை கூட!!!!! இதனால் நிச்சயமாய் எதை என்று அவ் தாய் எதை என்று எதை என்று உணர்த்தும் அளவிற்கும் கூட இவ் ஞானியின் மடியில் சாய!!!!! அப்படியே உயிரும் பிரிந்தது!!!
ஆனாலும் உயிர் பிரிந்த இடத்தில் நிச்சயமாய் இங்கேயே எதை என்று அறிந்து அறிந்து நல்விதமாகவே இன்னும் எண்ணற்ற பல வழிகளிலும் கூட இங்கே தான் அவள்தனும் இருக்கின்றாள்!!!
ஆனாலும் இன்றளவும் கூட பல பல பெண்களுக்கும் கூட உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றாள்!!!
ஆனாலும் மிக்க மிக்க மகிழ்ச்சிகள் மகிழ்ச்சிகள் பொங்கி கொண்டே !!!!!தன்மகன் இங்கு இன்னும் இன்னும் ஏராளமான எதை என்று ஆனாலும் இன்னும் கூட அவள்தன் கணபதியிடம் வரம் பெற்று இன்னும் கூட பல வழிகளில் கூட சுற்றித் திரிந்து கொண்டே இருக்கின்றாள்!!!!
ஆனாலும் கணபதியும் பிறப்புகள் கொடுக்கவா??? கொடுக்கவா??? என்றெல்லாம் எண்ணி!!!
அவ் அம்மையும் ஆனால் நிச்சயம் கணபதியே!!!! பிறப்புக்கள் வேண்டாம் ஆனால் நிச்சயம் யான் கேட்பேன் இவ்வுலகத்தில் இன்னும் பின் கர்மங்கள் எதை எதை என்று உணர்ந்து நிச்சயமாய் அக் கர்மங்கள் வந்த பிறகு பின் மனிதன் இன்னும் இன்னும் கஷ்ட நிலைகளுக்கு செல்வான் அப்பொழுது பிறவி கொடுத்தால் போதும் !! என்பதை கூட அவ் அம்மை கூறிவிட்டாள்!!!
இதனால் மிக்க மகிழ்ச்சியோடு இங்கு வருபவர்களுக்கெல்லாம் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள் நலமாகவே நலமாகவே!!!
நலமாகவே இதை என்றும் ஆனாலும் இவ் ஞானி பல மனிதர்களை இன்னும் உருவாக்கினான்!!! பல பல வழிகளில் கூட இதனால் பல அரசர்களுக்கும் இவ் விஷயம் தெரிந்தது!!!!
இதனால் ஓடோடி வந்தார்கள்.... பின் நிச்சயம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் இவ் தேசத்தை என்று கூட!!!!
அதனால் பல வழிகளிலும் கூட பல அரசர்கள் இவர்களிடம் இவந்தனிடமே நிலைமை எதை என்று அறியாமல் கேட்டு கேட்டு நிச்சயம் இவ்வாறு செய்தால் நலன்கள்!!!
கணபதியை வணங்கினால் நலன்கள்!!!!!
அங்கு சென்றால் இங்கு சென்றால் நிச்சயம் யாராலும் பின் ஒன்றும் செய்ய இயலாது என்பதற்கிணங்க அதனால் அதைப்போலவே பன் மடங்கு நிச்சயமாய் எதை எதை என்று கூட அவ்வழியை பின்பற்றினார்கள்!!!! இதனால் பின் மகிழ்ச்சிகள் பொங்க பொங்க இளவரசிகளும் இளவரசர்களும் நன்றாக வாழ்ந்து வாழ்ந்து மடிந்தனர்!!!!-
ஆனாலும் நிச்சயம் அவர்களுக்கு எல்லாம் பிறப்புக்கள் இன்னும் பின் வந்து கொண்டே இருக்கும் ஏனென்றால் இவ்வுலகம் நிச்சயம் மாற்றப்பட வேண்டும் அப்பொழுதுதான் இயக்கம் இன்னும் தொடரும்!!!! தொடரும்!!!!!
அவ்வியக்கத்தை பெற்று பெற்று பல வளங்கள் வந்து வந்து இவ் ஞானி நிச்சயம் எதை என்று கூட இதனால் இவ் ஞானியை பின்பற்றியவர்கள் பலர்!!!!
ஆனாலும் அதில் கூட சீடர்கள் பல வழிகளில் கூட இவ் ஞானியை புரிந்து கொண்டு ஆனாலும் புரிந்து கொண்டார்கள். ஆனாலும் இவ் சீடர்களை யார் அனுப்பினார் என்று ஆனாலும் இவ் ஞானி யோசித்தான்!!!!
ஆனாலும் சரியாக கணபதி தான் அனுப்பினான் என்பதை உணர்ந்து கொண்டான்!!!!
இதனால் நிச்சயம் பற்று கொண்டு பற்று கொண்டு நிச்சயம் அவர்களும் பல வழிகளிலும் கூட உதவிகள் செய்தனர் அவர்களுக்கும் கூட !!! இவ்ஞானியவன் உண்மையான பின் வித்தைகளை காட்டினான்!!!
ஏனென்றால் பின் குருவானவனுக்கு தெரியும் சீடர்கள் யார்? யார் ? என்பதை கூட அறிந்து அறிந்து இதனால் நிச்சயம் அது போலத்தான் எதை என்று அறிந்து அறிந்து எதை என்று உணர்ந்து உணர்ந்து!!!!!
""""" அப்பனே கேட்டுக் கொள்ளுங்கள்!!!!
"""""யானும் அது போல தான் கொடுப்பேன்!!!!!!
அகத்தியன்!! அகத்தியன்!! என்று என்னை பல பேர் வணங்கலாம்!!!!....... ஆனால் அனைவருக்கும் யான் அருளாசிகள் கொடுத்து விடமாட்டேன்!!!!!
யார்??? எதனை கொண்டு சரியான வழியில் பின்பற்றி இவந்தனுக்கு கொடுத்து எதை என்று இவன் தவறான வழியில் பின் செல்வானா?????????? என்றெல்லாம் உணர்ந்துதான் யான் கொடுப்பேன்!!!!!!!
"""""ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!!!!!!!!!
ஏனென்றால் இன்னும் இன்னும் பின் சித்தர்கள் பெயரைச் சொல்லிச் சொல்லி இன்னும் எதை என்று கூட கீழ்நோக்கி போய்க் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!
மனிதர்கள் பலர் சித்தர்களை வைத்துக் கொண்டே ஏளனம்!!!!!!
எதை என்று அறியாமலே அதனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன்!!!!
அகத்தியன் வாக்கு எதை என்று அறிந்து அறிந்து!!!!
ஒன்றை விட்டு விட்டால் நிச்சயம் அது நடக்காமல் எப்பொழுதும் கூட செல்லாது என்பேன்!!!!
இதனால் ஆனாலும் தற்போது நிலைமைகளில் என்னுடைய பெயரை சொல்லி பின் அகத்தியன் சொன்னான் என்று கூட பலர் பல வழிகளிலும் கூட பின் வார்த்தை பின் அவன் வழியாகவே விட்டுவிட்டு தோல்வியும் அடைந்ததுண்டு அப்பனே!!!
இது எவ்வாறு நலன்கள் ஆகும்??????
அதனால் மீண்டும் எதனை என்று அறிந்து """
"""""அகத்தியன் ஒரு """""சொல் !!!!!! விட்டு விட்டால்!!!!!!!!! அச் சொல் ஜெயிக்குமே!!!! தவிர தோல்வி அடையாது!!!!!!
தோல்வி என்றால் தோல்வி என்று சொல்லிவிடுவேன்!!!!
வெற்றி !!! என்றால் வெற்றி!!! இதுதான் நிச்சயம்!!!!
ஆனால் இல்லையப்பா!!!!
எதனையென்றும் அறிந்து அறிந்து அப்பனே பொய்களப்பா!!!!!
இன்னும் இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அவர்களுக்கெல்லாம் என்னதான் காத்துக் கொண்டிருக்கின்றது!??? என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!!
அதனால் யாராக இருந்தாலும் அப்பனே என்னை வழிபட்டாலும் நிச்சயம் அவந்தனுக்கு எதை என்று அறியாமலே எதை என்று புரியாமலே அப்பனே எதை எதை என்று கூட எந்தனுக்கு எவை படைத்தாலும்!!!!!!!
ஏன்???? எந்தனுக்கு திருத்தலம் கட்டினாலும்!!!!! வணங்கினாலும்!!!! பூஜைகள் பல செய்தாலும் !!!!அவன் எதை என்று அறிய அறிய பின் மனம் சரியில்லை என்றால் அங்கேயே அவனை அழிப்பேன்!!!!! சொல்லி விட்டேன்!!!
இதை ஞாபகத்தில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும்!!!!!
அப்பனே பின் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே சித்தர்கள் எதற்காக இவ்வுலகத்தில் வந்து விட்டார்கள் என்பதற்கிணங்க.... அப்பனே அன்பை காட்டினால் அப்பனே யாங்களே அனைத்தும் உந்தனுக்கு கொடுப்போம்.
எதை என்று அறிந்து அறிந்து யாங்களே செய்வோம்!!!
திடீரென்று அப்பனே பின் எதை என்று அறிய பின் உயர் மாற்றங்கள் ஏற்படுத்துவோம் அப்பனே இதுதான் அப்பனே எங்கள் கடமையாகும்!!!!
அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே மனிதர்களை காக்கவே யாங்கள் அவதரித்து விட்டோம் அப்பனே இதன் மூலம் இறைத்தூதர்களாகவும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!
இறைவனுக்கு எதை என்று அறிய அறிய ஈசனுக்கு எவ்வகையில் ஆயினும் யாங்கள் சொல்லிவிட்டால் அப்பனே.... ஈசனும் நிச்சயம் முடிவெடுப்பான்!!!! அதுபோலவே!!!!
அதனால்தான் அப்பனே பின் பல பல எதை என்று கூற ஞானியர்களின் வாக்கு அதாவது........ சித்தனின் வாக்கு!!!! சிவனின் வாக்கு!!!! என்பது கூட அப்பனே !!!
இதனால் இவ் ஞானி எதை என்று அறிந்து அறிந்து அனைத்து திறமைகளையும் கூட அப்பனே யான் தெரிந்து வைத்திருப்பதை எல்லாம் எதையென்று உணராமலே பின் அனைத்து சீடர்களுக்கும் சொல்லிக் கொடுத்தான்!!!! அப்பனே!!!
அதனால் அப்பனே உண்மையான பக்தனுக்கு நிச்சயமாய் எந்தனுக்கு தெரிந்த அனைத்து விஷயங்களும் யான் சொல்வேன் அப்பனே சொல்லியும் தருவேன் அப்பனே!!!!! ....
ஆனால்??
ஆனாலும் அப்பனே அறிவதில்லை!!! அதை வைத்துக் கொண்டு மனிதன் பல ஆட்டங்களை ஆடி விடுவான் இப்பொழுது உள்ள நிலைமையில் கலியுகத்தில்!!!! அதனால்தான் யான் எதுவும் சொல்லித் தருவதில்லை அப்பனே!!!
நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து யார்? யாருக்கெல்லாம் சொல்லித் தர வேண்டுமோ ? அதை நிச்சயம் யான் சொல்லித் தருவேன் அப்பனே!! நலன்களாகவே!!!!
அப்பனே வித்தைகள் இதனால் அவ் சீடர்களும் அப்பனே நலமாக பல பல தேசங்களுக்கும் சென்று சென்று அப்பனே பல வழிகளில் கூட அப்பனே எதை என்று அறியாமலே இதனால் பின் அதாவது கணபதியின் நாமத்தை பின் உச்சரியுங்கள்!!! உச்சரியுங்கள்!!! என்பதையெல்லாம் கூறி கூறி அப்பனே பல தேசங்களுக்கு சென்று அங்கேயும் கணபதியின் பின் நாட்டத்தை நாட்டினார்கள் அப்பனே!!!!
இன்றும் கூட அப்பனே பல பல தேசங்களில் கூட கணபதி நாமத்தை கணபதி கூட அங்கேயே தவழ்ந்து வருகின்றான் அப்பனே இதனால் வெற்றியை குறிப்பவன் கணபதியே!!!
அப்பனே ஆனாலும் கூர்ந்து கூர்ந்து கவனித்து பார்த்தாலும் அப்பனே இன்னும் உண்மை நிலைகள் தெரிய வரும் என்பேன் அப்பனே.. இவ்வுலகத்திற்கு!!!!
அதனால் இவ் ஞானியானவன் எதை என்று அறிய அப்பனே மீண்டும் எதை என்று அறிய இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்தான் என்பேன் அப்பனே!!!!
பின் கணபதியே நேரில் தோன்றி பின் எதை என்று அறிய அறிய பின் பிறப்புக்கள் எதை என்று அறிய இன்னும் வேண்டுமா??? என்று கூட....
ஆனாலும் நிச்சயம் பிறப்புக்கள் வேண்டாம் இப்பொழுது என்னால் முடிந்தவரை சேவை செய்து விட்டேன்!!!!
என் சீடர்களும் இனிமேலும் செய்வார்கள் என்பதற்கிணங்க நிச்சயமாய் யான் செல்கின்றேன்!!.....அதாவது எதை என்று இவ் உடலை விட்டு உயிர் நிச்சயமாய் ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட...
கணபதியே என்று உணர்ந்து உணர்ந்து நீயும் தவழ்ந்திட வேண்டும் என்னிடத்தில்!!!
பின் எதையென்று யான் என்னிடத்திற்கு எதை என்று அறிய அறிய நிச்சயம் பின் உயிராக இருந்து ஆனாலும் பின் உடம்பு இல்லாமல் நிச்சயமாய் பல மனிதர்களுக்கு நிச்சயம் சேவை செய்ய வேண்டும் என்பதற்கிணங்க.... இதனால் நிச்சயம் இங்கேயே உயிர் இருந்து கொண்டே இருக்கின்றது!!! சேவைகள் செய்து கொண்டே இருக்கின்றான்!!! இன்றளவும் கூட!!!!
பல மனிதர்களை உயர்ந்த மனிதர்களை உருவாக்கியுள்ளான் இவந்தன்.
ஆனாலும் நிச்சயம் அறிந்து வரும் காலங்களில் இவந்தனும் பிறப்பெடுப்பான்... இன்னும் தெய்வ காரியங்கள்!!!!
ஏனென்றால் இப்படியே சென்று கொண்டிருந்தால் இறைவன் பொய் என்பதை கூட இக்கலி யுகத்தில் சொல்லி விடுவான் மனிதன்!!!! இதனால் இவந்தனுக்கு நிச்சயம் எதை என்று அறியாமலே உடம்பைத் தேடிக் கொள்வான் என்பது சத்தியமான உண்மை!!!
இதையென்று அறிந்து அறிந்து பின் சீடர்களும் இவந்தன் எதை என்று அறியாத அளவிற்கும் கூட போய்விட்டானே என்பதற்கிணங்க.......... சீடர்களும்
ஐயோ!!!!!!!!! நம் குருவானவன் இப்படி செய்து போய்விட்டானே!!!! எதையென்று அறிய அறிய இதனால்....நம் குருவானவன் எதையென்று அறியாமலே எங்கே!? பின் உடம்பை விட்டு உயிர் மட்டும்..... அதாவது ஜீவசமாதி!!!!!!! என்று அறிந்து அறிந்து யாங்களும் இங்கே விடுவோம் என்று கூட அச் சீடர்கள் அனைவரும் இங்கேயே பின் எதை என்று அறிந்து அறிந்து.....(சீடர்களும் ஜீவசமாதி அடைந்துவிட்டனர்) இதனால் அப்பனே.... பல வழிகளிலும் கூட இன்னும் தவழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!!
இதனால் நிச்சயம் இவ் ஞானி பிறப்பெடுத்து விட்டால் அவ் சீடர்களும் தானாகவே வந்து விடுவார்கள் என்பேன் அப்பனே!!!!
அவ்வளவு!!! எதையென்று அறிய அறிய அதிவிரைவிலே நிச்சயம் செந்தூரிலே ( திருச்செந்தூர்) அவ் பிள்ளை நிச்சயம் எதை என்று கலியுகத்திலே பிறக்கும் என்பேன் அப்பனே!!!! பல வழிகளிலும் கூட நன்மைகளாக ஏனென்றால் எதையென்று அறிந்து அறிந்து பின் முன் ஜென்மத்திலே இவ் ஞானி அங்கே பிறந்திருக்க வேண்டும்!!!!
ஆனாலும் பின் கணபதியின் அருளைப் பின் எதை என்று அறிந்து மனதில் என்ன எதை என்று அறிந்து அறிந்து பின் முருகனும் இங்கே தன் மயில் வாகனத்தை அனுப்பி வைத்து விட்டான்!!!
இதனால் அப்பனே செந்தூரிலே!!!! நிச்சயம் உயர்ந்த ஓர் ஞானி பின் பிறப்பெடுப்பான் என்பது சத்தியமான உண்மை அப்பனே!!!!
இது கணபதிக்கும் தெரியும்!! கந்தனுக்கும் தெரியும் அப்பனே !!எதை என்று அறிய அறிய இதனால் அங்கே பிறந்து பல வழிகளிலும் கூட உயர்வுகள் பெற்று பல பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்று அறியாமல் மனிதர்களுக்கு சேவை செய்வதற்கே பிறப்பு அதிவிரைவிலே நிகழப் போகிறது அதிவிரைவிலே நிகழப்போகும் என்பேன் அப்பனே!!!!
சித்தர்கள் இன்னும் இன்னும் அப்பனே நல்முறையாக மனிதர்களை மாற்றினாலும் ஆனாலும் ஏதோ எதையென்று அறிய அறிய ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொன்றையும் அழித்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே. ஆனாலும் அழித்து என்ன பலன் ?? என்பதை கூட!!
ஆனாலும் அழித்து வருவது எதனை என்று கூட மாறுபட்ட விஷயமாகவே போய்க்கொண்டிருக்கின்றது அப்பனே!!!
இதனால் நிச்சயம் நல்லோர்க்கு நல்லோர்கள்!!! தீயோருக்கு தீயோர்கள்!!! அப்பனே பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்படியே யான் செய்வேன். அப்பனே!!!!
ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே என்னை வணங்குபவர்கள் நிச்சயமாக!!!!!! இங்கிருந்து யான் சொல்கின்றேன் அப்பனே!!!! போட்டி பொறாமைகள் எதையென்று அறிய அறிய இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!
நிச்சயம் அவரைப் போன்று எதை என்று அறிய அறிய இப்படி இருப்பவர்களுக்கு """""யான் எதுவும் செய்ய மாட்டேன்!!!!! எதையும் செய்ய மாட்டேன்!!!! செப்பிவிட்டேன்""" அப்பனே!!!!
தெரிந்து கொள்ளுங்கள்!!!!!
பின்.... பின் நாளில் அப்பனே எதை என்று அறிய.... அகத்தியனே உன்னை நம்பிக் கொண்டிருந்தேனே என்றெல்லாம் பிதற்றிக் கொள்ளாதீர்கள் என்பேன்!!! அப்பனே!!
ஏனென்றால் அகத்தியனை வணங்குபவர்கள்..... அகத்தியனுக்கு புகழ் சேர்க்க வேண்டுமே தவிர!!!.......
ஆனாலும் யான் புகழை விரும்புவதில்லை!!!!!!
ஆனாலும் எதை என்று அறிய அகத்தியன் பொய் என்று கூட யாரும் சொல்லலாகாது என்பேன் அப்பனே!!!!!!
இவைபோலே யான் விட்டிருந்தாலும் இனிமேலும் அப்பனே வரும் காலங்களில் அகத்தியன் பொய் என்பதை கூட மனிதன் அப்பனே பின் ஆணித்தரமாக சொல்லி இருப்பான்!!!
அதனால் யான் விட்டுவிடவில்லை சித்தர்களும் விட்டுவிடவில்லை அப்பனே!!!
ஒவ்வொரு அடியும் ஒவ்வொருவனுக்கும் உண்டு உண்டு சொல்லி விட்டேன்!!! அப்பனே!!!
அகத்தியன் எதை என்று அறிய அறிய சித்தர்களை வணங்கினால் கஷ்டம் என்பதை எல்லாம் அப்பனே மனிதன் பின்... அதாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றான்!!! அறிவிழந்த மனிதன் அப்பனே!!!
ஆனாலும் உண்மை நிலைகளை யாங்கள் எடுத்துக் கொண்டே வருவோம்!!!! அப்பனே எப்படி எல்லாம் இவ்வுலகத்திற்கு நிச்சயம் எடுத்துக்கொண்டு எதை என்று செல்வோம் என்பதை கூட யானே அறிவேன் அப்பனே!!!!
இதனால் நிச்சயம் இவ் பூமி எதை என்று கூட நிச்சயம் எதை எதை என்று கூட எப்படி ஆக்குவது என்பதை கூட நிச்சயம் பின் கணபதியின் அருளாலும் கந்தப் பெருமானின் அருளாலும் ஈசனுடைய அருளாலும் அப்பனே!!!
ஆனாலும் இதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசங்கள் அப்பனே மூலனும்( திருமூலர்) வந்து வாக்குரைப்பான் என்பேன் அப்பனே.... நல்விதமாக!!!!
மூலன் இனிமேலும் ஒவ்வொரு ஞானியை பற்றியும் கூட உரைப்பான் என்பேன் அப்பனே!!!!
எப்படியெல்லாம் பக்திகளை பின்பற்றினார்கள் என்பதை கூட அப்பனே ஆனாலும் அவையெல்லாம் மறைந்து விட்டது என்பேன் அப்பனே... மூலன் வரும் காலங்களில் தெரிவிப்பான் என்பேன் அப்பனே நல் முறைகளாக இன்னும்!!!
பின்ஔஷதங்களும் கூட( மருந்துகள்) சொல்லி வைப்பான் அப்பனே!!! அவற்றை பயன்படுத்திக் கொண்டால் அப்பனே!!!!!.......
சித்தர் வழியில் வருபவர்களுக்கு அப்பனே சில கஷ்டங்கள்!!!! ஆனாலும் அப்பனே மனக்குழப்பங்கள் வரும் என்பேன் அப்பனே!!! நிச்சயம் ஏன் வருகின்றதென்றால் அப்பனே பின் வரும் காலங்களில் அதை தெரிவித்து விடுகின்றேன் அப்பனே!!!!
நிச்சயம் வந்துவிட்டாலும் நிச்சயம் எங்கள் வழியில் வருவோருக்கு பிறப்புக்கள் இல்லை அப்பனே!!!!
எதையென்று நிமித்தம் காட்டி காட்டி ஆனாலும் இன்னும் இன்னும் அப்பனே இவ் ஞானியும் சீடர்களும் இங்கேயே தவழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்பனே!!! வருபவருக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் ஆசிகள்!!! இதன் மூலம் அப்பனே அனைவரும் நன்றாக தான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!
இதனால் யான் சொல்லியவற்றை சரியாக பயன்படுத்திக் பயன்படுத்தி வந்தாலே போதுமானது அப்பனே!!!! அதிவிரைவிலே மாற்றங்கள் காண்பது உறுதி!!! உறுதி!! என்பேன் அப்பனே !!
ஆனாலும் இதற்கும் பல புண்ணியங்கள் செய்து இருக்க வேண்டும்!!!!
என் வாக்கினை ஏற்று நடப்பவர்களுக்கும் பல எதையென்று அறியாமலே.... ஆனாலும் அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்!!!!
அகத்தியா!!!!!!!!!!! எதையென்று அறிய அறிய ஆனாலும் என்னால் முடியவில்லையே!!!! என்று மனதாலே வருந்தினாலே பின் யானும் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் இல்லத்திற்கு வந்து எதையென்று அறிய அறிய நிச்சயம் பல ஞானியர்களை எதையென்று அறியாமலே இல்லத்திற்கு வரச்செய்வேன்!!! அப்பனே!!!
இதனால் தான் எதை என்று அறிய இன்னும் மாற்றங்கள் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே அதனால் நிச்சயம் எதை எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் பல வழிகளிலும் கூட யானும் செய்வேன்!!!! என் பக்தர்களுக்கு அப்பனே உண்மையான பக்தர்களுக்கே அப்பனே!!!!
நலமாக இதனால் இவ் ஞானியவன் இன்னும் இன்னும் அப்பனே பல மனிதர்களை உருவாக்குவான் என்பேன் அப்பனே!!
அதனால் அப்பனே அனைத்து சீடர்களும் இங்கே தான் அமர்ந்திருக்கின்றார்கள் அப்பனே!!! இதனால் பரிசுத்தமான சில வியாதிகளும் அப்பனே சில கர்மாக்களும்..... இங்கு வந்து சென்றாலே தீரும் என்பது மெய்யான உண்மையப்பா!!!!
அதனால் யான் எங்கெல்லாம் சென்றிருக்கின்றேனோ அப்பனே!!!! அங்கெல்லாம் நிச்சயம் இச் சுவடியும் சென்று அப்பனே நல்முறைகளாகவே வாக்குகள் செப்பி!!!!!
எதையென்று கூற நிச்சயம் அப்பனே பயன்படுத்துவார்கள் என்பேன் அப்பனே....
வரும் காலங்கள் அப்பனே எதை எதை என்று அறிய ஒருவன் இருந்தாலே போதுமானது பின் பற்றுவதற்கு!!!!!!!
அவனை வைத்துக்கொண்டு பல வழிகளிலும் கூட யான் உருவாக்கிவிடுவேன் அப்பனே!!!!
இதுதான் சித்தர்களின் ரகசியம் என்பேன் அப்பனே!!!
பல மனிதர்கள் இருந்தும் அப்பனே ஒருவன் கூட உருவாகவில்லை அப்பனே!!! மனிதர். ஏனென்றால் அனைவரும் எதோ ஒரு மூலதனத்திற்காகவே இறைவனை வணங்குகின்றார்கள் அப்பனே!!!
அப்படி வணங்கினால் நிச்சயம் இறைவனும் கொடுக்க மாட்டான் யானும் கொடுக்க மாட்டேன் சொல்லி விட்டேன் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!
நலமாகவே. !!!அப்பனே இன்னும் இன்னும் மாற்றங்கள் அப்பனே உண்டு!!! இவ்வுலகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு இடத்தில் செப்புகின்றேன் அப்பனே!!!
நலன்கள் ஆசிகள் ஆசிகள் அப்பனே இன்னும் இவ் ஞானியை பற்றியும் கூட எங்கெங்கு?? அமர்ந்தான் என்பதை கூட அப்பனே அவ் திருத்தலங்களை பற்றி அப்பனே இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய சொல்கின்றேன் அப்பனே நலமாகவே!!!
இதனால் இவ் ஞானி மிக உயரத்தில் எதை என்று அறிய கருணை மிக்கவன் அப்பனே.. நல்முறையாக வேண்டுதலை வேண்டிய படியே கொடுத்து விடுவான் அப்பனே முதலில் அப்பனே கர்மா அழியும்!! அழியும்!!!
அப்பனே!! மற்ற வாக்கும் எதை என்று அறியாமல் ஓர் திருத்தலத்தில் சொல்கின்றேன் அப்பனே நலமாகவே ஆசிகள் ஆசிகள்!!!
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
நாம் காணும் விநாயகர் ஊர்வலம் கணபதி வழிபாடுகளில் இந்த வார்த்தை கண்டிப்பாக நாம் கேட்டிருப்போம்
கணபதி பப்பா மோரியா”
மங்கள் மூர்த்தி மோர்யா!!!
இதன் விளக்கம் கணபதி அப்பனே மோரியா என்று அர்த்தம்.
இதில் மோரியா என்ற சொல்லுக்கு முக்கியத்துவம் உண்டு!! விநாயகப் பெருமானின் துதிகளைப் பாடுவதற்காக பக்தர்கள் கணபதி பாப்பா மோரியாவை எப்போதும் கோஷமிடுகிறார்கள். ஆனால் மோரியா என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? மோரியா என்ற வார்த்தையானது, பதினான்காம் நூற்றாண்டில், மோரியா கோசாவி என்ற புகழ்பெற்ற விநாயகப் பக்தரைக் குறிக்கிறது, “மோரியா கோசாவி கணபத்யா பிரிவைச் சேர்ந்த 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி. இவர் விநாயகரின் பெரும் பக்தர்.கணபதி பாப்பா மோரியா என்ற வார்த்தைகள் அவருக்குக் காரணம்மோரியா என்ற வார்த்தை, புனேவுக்கு அருகிலுள்ள சின்ச்வாட்டைச் சேர்ந்த, பதினான்காம் நூற்றாண்டில், மோரியா கோசாவி என்ற புகழ்பெற்ற விநாயகப் பக்தரைக் குறிக்கிறது. இது கடவுளுக்கும் பக்தனுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை சித்தரிக்கிறது இவருடைய ஜீவசமாதி இங்கே உள்ளது.
ஶ்ரீ மொரயா கோசவி கணபதி மந்திர்.பிம்பிரி சிஞ்வாட். புனே மகாராஷ்டிரா. 411033. தொடர்பு எண். 077688 81133
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!