அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
"இகுதொப்ப "ஒரு மனிதன் தர்மம் செய்ய வேண்டும்" என்று நாங்கள் கூறுகிறோம். "தர்மம் செய்யாதே" என்று ஒரு மகான் வாயிலிருந்து வாக்கு வராது. ஆனால், அதே தருணம் ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தகுதிக்கு மீறி, அகுதொப்ப, சில ஜாதகத்தின் சூட்சும பலன் காரணமாக "ருணம்" (கடன்) பெற்று தர்மம் செய் என்று கூறுகிறோம். பெரும்பாலான மனிதர்கள், தங்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப தர்ம காரியங்களை செய்தால் போதும். அகுதொப்ப மனிதர்கள், முதலில் தான், தன் மனைவி, தன் குழந்தைகள், தன் குடும்பம் என்று கவனித்துவிட்டு அதன் பிறகு தர்ம காரியத்தில் கவனம் செலுத்தினால் போதும். இன்னொன்று, தனத்தை வைத்து செய்வதுதான் தர்மம் என்று எப்பொழுதுமே எண்ணிவிடக்கூடாது. அது ஒரு சில ஜாதகருக்கு பொருந்தலாம். மற்றபடி தன வசதி இல்லாத மனிதர்கள் உடல் உழைப்பால் தொண்டுகள் செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்துக்கொள்ளலாம். இதமான வார்த்தைகளை பயன்படுத்தி, பிறர் மனம் புண்படாமல் எப்பொழுதுமே பணிவாக பேசுவதும், ஒரு உயர்ந்த தர்மமே, புண்ணியமே. எனவே, ஒரு மனிதன் சினத்தை அடக்குவது என்பது கூட தவறுதான். சினமே எழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் சினத்தை விலக்கத்தவறினால், எத்தனை ஆலயங்கள் சென்றாலும், எத்தனை தர்மகாரியங்கள் செய்தாலும், முழுமையான இறைவன் அருளை பெற இயலாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஐயா
ReplyDeleteஹனுமத்தாசன் ஐயா வைத்திருந்த ஜீவ நாடியின் தற்போது நிலை பற்றி கூற இயலுமா
அவர் வாசித்த நாடி இன்று இல்லை. அகத்தியப் பெருமானால் திருப்பி எடுத்துக் கொள்ளப்பட்டது என்று விசாரித்ததில் தெரிய வந்தது.
Deleteநாடி யாரிடம் போக வேண்டும் என்று முன்பே எழுதப்பட்டிருக்கும் இதனை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்
ReplyDeleteiyya oru chinna vendukol
ReplyDeleteagathiyar iyyavin padathei intha mathiri graphics panni poda vendam
satharanama nilayil iyya padam nanragave ullathu
ithu ennudaya karuthu, ungalukku saraiyaga thonrinal intha mathiri graphics padathei podavendam
ippadikku
sithan adimai
Deleteஇதுதான் அவர் உருவம் என்று நினைத்து, பக்தியுடன் பார்த்தால், எந்த படத்தில் எப்படி இருந்தாலும் அவர் அருளுவார் என்பது, எனது அனுபவம். நிறைய படங்களை அப்படி தயார் பண்ணிவிட்டேன். நிச்சயமாக அதில் அநாகரீகம் இருக்காது. என் அப்பனை அழகுபடுத்தி பார்க்கிற ஆசையின் விளைவுதான் இது. இருக்கட்டுமே, எல்லா சூழ்நிலையிலும் அவர் தரிசனம் தருவதாக உணருவோம். உணர்வது முக்கியம். ஏன் என்றால், ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் "திருவண்ணாமலையில் நான் வருகிறேன். முடிந்தால் என்னை கண்டுபிடி" என ஒரு அடியவருக்கு சவால் விட்டார். அப்படி இருக்கையில், உலகில் எங்கும், எப்படியும் அவர் வரலாம், இருக்கலாம் என்று என்னுள் தோன்றுகிறது. யாருடைய எண்ணத்தையும், மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை அடியவரே!
OM Agatheesaya Namah
ReplyDeleteThe mentioned Mahamuni's words translated as: Sage agasthiar advises some people to get some money from others to perform dharma according to their horoscope.For others who have money they can do dharma with the money they earned in good way even if it is a little one. others can participate in dharma by giving physical work.People who avoids harsh words also get punya.Avoiding anger is very important according to sage agasthiar.
"Get some money from others" means - "if at all you had to borrow" do it. It does not mean bribe or other wrong means. Overall what you have perceived is correct.
Delete