​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 3 October 2016

சித்தன் அருள் - 457 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

மனிதர்களின் குற்றங்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு நாங்கள் வாக்குரைக்கிறோம் என்பதாலேயே, அந்த மனிதர்களை ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்று அர்த்தமல்ல. நாங்கள் வாக்கு உரைப்பதால், ஒரு மனிதன் "பாக்கியவான்" என்று வெளிப்படையாகக் கூறினாலும்  கூட, அதற்காக அவன் செய்கின்ற செயல்கள் அனைத்தும்  நீதி, நியாயம் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை. அதே சமயம் சதாசர்வகாலமும் ஒரு மனிதனைப் பார்த்து, "நீ தவறு செய்கிறாய்! திருந்தி விடு, திருந்தி விடு" என்று கூறிக்கொண்டே இருந்தால், அவன் செய்கின்ற சிறு, சிறு நல்லகாரியங்களைக் கூட செய்யாது விட்டுவிடுவான், என்பதால்தான் சிலவற்றைக் கண்டும், காணாமலும், நாங்கள் மௌனமாகவே இருந்து விடுகிறோம். நாங்கள், அவ்வாறு இருப்பதினாலேயே, வருகின்றவர்கள் எல்லோரும் உயர்ந்த ஆத்மாக்கள் என்றோ, அவன் செய்கின்ற செயல்கள் எல்லாமே எம்மால் அங்கீகரிக்கப்படுகிறது என்றோ, மற்றவர்கள் புரிந்து கொள்ளக்கூடாது.

No comments:

Post a Comment