​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Wednesday, 5 October 2016

சித்தன் அருள் - 459 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

எம்மை நாடி வருகின்ற மனிதனின் விதியை அனுசரித்து, இறைவனின் கட்டளையையும் அனுசரித்துத்தான் நாங்கள் வாக்கை கூறுவோம்.  இதழில் ஓதப்படுகின்ற விஷயங்கள் ஏற்புடையதாக இல்லை, நம்பக்கூடியதாக இல்லை என்று கூறுவது கூட, ஒரு மனிதனின் தனி சுதந்திரம். இகுதொப்ப நிலையிலே  மீண்டும், மீண்டும் கூறுவது என்னவென்றால், அறம், சத்தியம், பரிபூரண சரணாகதி தத்துவம், இவற்றை கடைபிடித்தால், கடுமையான விதி, மெல்ல, மெல்ல மாறத் துவங்கும். எடுத்த எடுப்பிலேயே மாற்றத்தை எதிர்பார்த்தால், மாற்றம் வராது, ஏமாற்றம்தான் வரும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் இறை வழியில், அற வழியில், சத்திய வழியில் நடக்க, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று கூறி, நல்லாசி கூறுகிறோம். ஆசிகள்.

4 comments:

  1. ஐயா எனக்கு நாடி படிக்கவேண்டும். தயவு செய்து எங்கு வரவேண்டும் என்று கூறவும்.

    ReplyDelete
  2. https://siththanarul.blogspot.in/2015/11/to-read-naadi-palm-leaf.html

    ReplyDelete
  3. Agarthiyar Ayyan thiruvadigal saranam. Ayya avarkalukku! Engalukku naadi paarkka venum. Engu paarppadhu?Naadi paarkkapadum idam patri kooravum Ayya. Panivudan kayttu kolhiren ayya

    ReplyDelete