​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 2 October 2016

சித்தன் அருள் - 456 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

நாடி வரும் ஒருவனின் மனதை ஆற்றுப்படுத்தி, ஆறுதல்படுத்தி, பரிகாரங்களை கூறி, விதியை எப்படியாவது மாற்றுவதற்குத்தான் நாங்கள் முயற்சி செய்வோம். ஆனால், அதற்காக எங்கள் சக்தியை பயன்படுத்தி வருகின்ற அனைவருக்கும் எல்லா துன்பங்களையும் மாற்றிவிட மாட்டோம். ஆனாலும், எண்ணி கடுமையாக பின்பற்றி வருகின்ற மனிதனுக்கு, கடுமையான விதிகளைக், கூடுமானவரை கடை வரையில் குறைக்க முயற்சி செய்வோம். இன்னும் அப்படியே தந்துகொண்டும் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, வந்த துன்பம் மனிதனுக்கு பெரிதாக தெரிகிறது. ஆனால், வரவேண்டிய துன்பம் அதை விட அதிகம். அதை நாங்கள் தடுத்தது, அவனுக்குத் (துன்பம் வராததால்) தெரியவில்லை. எனவே, மிக உன்னதமான பக்குவத்தை வளர்த்துக் கொண்டு ஒருவன் எம்முன் அமர்ந்தால், ஏதாவது ஒரு சில வார்த்தைகளை கூற முயற்சி செய்கிறோம். பக்குவமில்லாத மனிதர்களையும், என்னதான் உரைத்தாலும், இன்னும்  எமது வகை பின்பற்ற முடியாத மனிதர்களையும் இங்கு அழைத்து வந்துவிட்டு "ஏதாவது கூறுங்கள்" என்றால், நாங்கள் எதைக் கூறுவது? "எது நடந்தாலும் சித்தர்களை விட்டு விடப்போவதில்லை" என்று விடாப்பிடியாக உறுதியோடு, "எது நடப்பினும் அது இறை சித்தம், சித்தர்கள் சித்தம்" என்று எண்ணி எம்பின்னே வருபவர்களுக்கு, நாங்கள் இரவு, பகல் மட்டுமல்ல, எக்காலத்திலும், எல்லாப்பிறவியிலும், உற்றதுணையாக என்றுமே இருந்து கொண்டுதானிருக்கிறோம்.

No comments:

Post a Comment