​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 22 October 2016

சித்தன் அருள் - 478 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறைவனின் கருணையை கொண்டு, இயம்புவது யாதென்றால், இகுதொப்ப காலகாலம், வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு. துன்பங்கள் எல்லாம் ஒரு கணப்பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்படவேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழவேண்டும், சதா சர்வகாலமும் இன்பமும், சாந்தியும் வாழ்வில் நிலவவேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால் இந்த இன்பமும், நிம்மதியும் இந்தந்த விதத்தில் தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே, அந்த எதிர்பார்ப்புதான் குறையாக மாறிவிடுகிறது. எனவே, மனிதன் எதிர்பார்க்கிற நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரணடைந்து, இறையோடு, சாயூச்சமோ, சாரூபமோ, சாலோகமோ, சாமீபமோ, ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

3 comments:

 1. Ayyavin padam arumai. Agni roopathil jolikkiraar. Om agatheesaya namaha.

  ReplyDelete
 2. ஐயா வணக்கம்,

  மனிதன் எதிர்பார்க்கிற நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரணடைந்து, இறையோடு, சாயூச்சமோ, சாரூபமோ, சாலோகமோ, சாமீபமோ, ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.
  இதில் எனக்கு புரியாத வார்த்தைகள் உள்ளன.விளக்க இயலுமா. .

  இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி போற்றி..
  ஓம் அகத்தீசாய நமஹ. .

  ReplyDelete
  Replies
  1. SIVA-VAKYAM BY SIVA-VAKIYAR:
   தெளிந்த நற் சரியை தன்னில் சென்று சாலோகம் பெறும்
   தெளிந்த நற் கிரியை பூசை சேரலாம் சாமீபமே
   தெளிந்த நல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
   தெளிந்த ஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே 436

   TIRU-MANDIRAM BY TIRU-MOOLAR:
   ''பாசம் பசுவானது ஆகும்இச் சாலோகம்!
   பாசம் அருளானது ஆகும்இச் சாமீபம் !
   பாசம் சிரமானது ஆகும்இச் சாரூபம்!
   பாசங் கரைபதி சாயுச்சியமே!''

   Delete