அகத்தியப் பெருமான் அருள் வாக்கு
ஒரே பிறவியிலே ஞானம் அடைந்தவர்கள் என்று யாருமே கிடையாது. இறை மனது வைத்தால், வேண்டுமானால் அப்படி அமையலாம். பல பிறவிகள் எடுத்து, பல அனுபவங்களை நுகர்ந்து, பல்வேறு கர்மாக்களை கழித்த பிறகுதான், ஞானம் என்பது சித்திக்கும். உண்மையான ஞானத்தை அடைந்து விட்டால் ஒரு மனிதன் யாருடனும் பேசமாட்டான். அவன் பேசுவதற்கும், கேட்பதற்கும் எதுவுமே இல்லை. பார்ப்பதற்கும், உணர்வதற்கும் எதுவுமே இல்லை. அவனுக்குத் தேவையுமில்லை. அவன் தேவையும் யாருக்கும் இல்லை. இதுதான் ஞானத்தின் உச்ச நிலையாகும். இதை அடைவதற்குத்தான் அனைத்து வழிபாடுகளும், சடங்குகளும், புறச் செயல்களும் கூறப்பட்டுள்ளன. விட்டு விடுதல், சகித்துக் கொள்ளுதல், எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளுதல், எத்தனை துன்பத்திலும் இறைவனை இகழாமல் இருத்தல் - ஞானத்தை இப்படித்தான் விளக்கம் தரலாமே ஒழிய, "இதுதான்" என்று தனியாக உனக்கு காட்ட முடியாது. ஏனென்றால், நீ ஞானமாகிவிட்டால், அப்போது நீயே இருக்க மாட்டாய்.
om agathesaya namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ
ReplyDeleteஐயா, வணக்கம்.
அடுத்த மாதம் 12/11/2016 அன்று கோடகநல்லூர் வர விரும்புகிறேன். நான் மதுரையில் இருந்து வர வழி கூறவும். அன்று எத்தனை மணிக்கு வர வேண்டும்.அன்று வரும் அனைவருக்கும் அகத்தியர் பெருமானின் அருள் கிடைக்குமா. என் துயர் தீர்ப்பார்களா பெருமாளும் அகத்திய பெருமானும்..
அகத்தியர் ஜீவ நாடி யாரேனும் (தற்போது)வாசித்துக் கொண்டு இருக்கிறார்களா என்று விளக்கவும்.
மதுரையிலிருந்து திருநெல்வேலி வரவேண்டும். திருநெல்வேலியிலிருந்து சேரன்மாதேவி செல்கிற வழித்தடத்தில் "நடுக்கல்லூர்" என்கிற நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் நடந்து கோடகநல்லூர் வரவேண்டும். காலை 10 மணிக்குள் கோவிலுக்கு வந்துவிடுவது நல்லது. பூசை அபிஷேகம் பார்க்கலாம். மற்றவை அகத்திய பெருமான் அருள்கிற வழி.
Deleteநன்றி ஐயா. .
Delete