​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 18 October 2016

சித்தன் அருள் - 473 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

இறைவனை வணங்கினாலே, ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை பிறக்கும். தன்னை விட ஒரு பெரிய, உயரிய சக்தியின் அருள் நமக்கு கிடைக்கிறது, என்ற தைரியம் பிறக்கும். இறைக்குப் பிடிக்காததை, செய்யக் கூடாது என்ற எண்ணம் வரும். அவன் நல்லவனாக மாறும்பொழுது, எல்லா கிரகங்களும் நன்மையைத்தான் செய்யும்.

12 comments:

  1. தவறு செய்து தண்டனை அனுபவிப்பவன் மனம் திருந்தி இறைவனை வேண்டினால் இறைவன் தண்டனையை
    குறைப்பாரா
    நீக்குவாரா
    நீட்டிப்பாரா .
    அனுபவம் உள்ளவர்கள் , பெரியோர்கள் ,தெளிந்தவர்கள் விளக்கவும்.

    கும்பமுனி குருவே சரணம் சரணம். ..

    ReplyDelete
    Replies
    1. இறை காத்திருக்கிறது. ஆனால், இறையிடமிருந்து அருளைப் பெரும் பக்குவம்தான் மனிதனுக்கு இல்லை. முதலில் இதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும், அது இன்பமோ, துன்பமோ, ஒரு மாய வலைதான். இதனைத் தாண்டி இறைவனிடம் போகும்போது, "எனக்கு உன்னை தவிர வேறு எதுவும் தேவையில்லை. நீதான் வேண்டும்" என்று, உளமார ஒரு மனிதன் வேண்டத் தொடங்கி விட்டாலே, அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஒடத் துவங்கும். பிறகு அவனுக்கு தேவைகள் என்று எதுவும் இருக்காது.

      Delete
  2. அகத்தியர் பெருமான் காயத்ரி மந்திரம் தெரிந்தவர்கள் கூறவும்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் கும்ப சம்பவாய விதமஹே
      பொதிகை சஞ்சராய தீமஹி
      தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


      ஓம் கமண்டல ஹஸ்தாய வித்மஹே
      காவேரி தீர்த்தாய தீமஹி
      தந்நோ அகத்திய ப்ரசோதயாத்

      Delete
    2. Dear Sir,

      Please translate this Gayatri mantra in English.

      Thank you so much

      Delete
    3. Om Kumba sambavaaya vithmahe
      pothigai sanchaaraaya dheemagi
      thanno gnanaguru prachothayaath!

      Om kamandala hasthaaya vidhmahe
      kaaveri theerthaaya dheemahi
      thanno akaththiyap prachothayaath!

      adding one more from my end

      thath purushaaya vidhmahe
      sivaputhraaya dheemagi
      dhanno sri lobamudra samethe
      agasthiya siddhap prachothayaath!

      Delete
    4. Thank you so much sir for this translation and help

      Delete
  3. வணக்கம் அன்பரே (சித்தரைத்தேடி)
    எப்போது மனம் திருந்தி இறைவனை வேண்டினால் அப்போதே உங்களுக்கு
    எல்லாம் தெளிவாகி விடும்
    குறைத்தல் நீக்குதல் போன்ற கேள்விக்கே இடமில்லை
    மாமுனி அருள் பெற வேண்டுகிறேன்
    அன்புடன் sv

    ReplyDelete
  4. வணக்கம் அன்பரே (சித்தரைத்தேடி)
    எப்போது மனம் திருந்தி இறைவனை வேண்டினால் அப்போதே உங்களுக்கு
    எல்லாம் தெளிவாகி விடும்
    குறைத்தல் நீக்குதல் போன்ற கேள்விக்கே இடமில்லை
    மாமுனி அருள் பெற வேண்டுகிறேன்
    அன்புடன் sv

    ReplyDelete
  5. விளக்கம் அளித்த ஐயா அவர்களுக்கும் அன்பர் வெங்கடேசன் அவர்களுக்கும் சுரேஷ் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    பின் வரும் நாட்களிலும் உதவுங்கள். ..

    ReplyDelete