​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 4 October 2016

சித்தன் அருள் - 458 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு


"இகுதொப்ப "ஒரு மனிதன் தர்மம் செய்ய வேண்டும்" என்று நாங்கள் கூறுகிறோம். "தர்மம் செய்யாதே" என்று ஒரு மகான் வாயிலிருந்து வாக்கு வராது. ஆனால், அதே தருணம் ஒரு சில ஆத்மாக்களுக்கு மட்டுமே தகுதிக்கு மீறி, அகுதொப்ப, சில ஜாதகத்தின் சூட்சும பலன் காரணமாக "ருணம்" (கடன்) பெற்று தர்மம் செய் என்று கூறுகிறோம். பெரும்பாலான மனிதர்கள், தங்கள், தங்கள் சக்திக்கு ஏற்ப தர்ம காரியங்களை செய்தால் போதும். அகுதொப்ப மனிதர்கள், முதலில் தான், தன் மனைவி, தன் குழந்தைகள், தன் குடும்பம் என்று கவனித்துவிட்டு அதன் பிறகு தர்ம காரியத்தில் கவனம் செலுத்தினால் போதும். இன்னொன்று, தனத்தை வைத்து செய்வதுதான் தர்மம் என்று எப்பொழுதுமே எண்ணிவிடக்கூடாது. அது ஒரு சில ஜாதகருக்கு பொருந்தலாம். மற்றபடி தன வசதி இல்லாத மனிதர்கள் உடல் உழைப்பால் தொண்டுகள் செய்து அதன் மூலம் புண்ணியம் சேர்த்துக்கொள்ளலாம். இதமான வார்த்தைகளை பயன்படுத்தி, பிறர் மனம் புண்படாமல் எப்பொழுதுமே பணிவாக பேசுவதும், ஒரு உயர்ந்த தர்மமே, புண்ணியமே. எனவே, ஒரு மனிதன் சினத்தை அடக்குவது என்பது கூட தவறுதான். சினமே எழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் சினத்தை விலக்கத்தவறினால், எத்தனை ஆலயங்கள் சென்றாலும், எத்தனை தர்மகாரியங்கள் செய்தாலும், முழுமையான இறைவன் அருளை பெற இயலாது, என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

7 comments:

  1. ஐயா
    ஹனுமத்தாசன் ஐயா வைத்திருந்த ஜீவ நாடியின் தற்போது நிலை பற்றி கூற இயலுமா

    ReplyDelete
    Replies
    1. அவர் வாசித்த நாடி இன்று இல்லை. அகத்தியப் பெருமானால் திருப்பி எடுத்துக் கொள்ளப்பட்டது என்று விசாரித்ததில் தெரிய வந்தது.

      Delete
  2. நாடி யாரிடம் போக வேண்டும் என்று முன்பே எழுதப்பட்டிருக்கும் இதனை நாம் எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்

    ReplyDelete
  3. iyya oru chinna vendukol

    agathiyar iyyavin padathei intha mathiri graphics panni poda vendam

    satharanama nilayil iyya padam nanragave ullathu

    ithu ennudaya karuthu, ungalukku saraiyaga thonrinal intha mathiri graphics padathei podavendam

    ippadikku

    sithan adimai

    ReplyDelete
    Replies

    1. இதுதான் அவர் உருவம் என்று நினைத்து, பக்தியுடன் பார்த்தால், எந்த படத்தில் எப்படி இருந்தாலும் அவர் அருளுவார் என்பது, எனது அனுபவம். நிறைய படங்களை அப்படி தயார் பண்ணிவிட்டேன். நிச்சயமாக அதில் அநாகரீகம் இருக்காது. என் அப்பனை அழகுபடுத்தி பார்க்கிற ஆசையின் விளைவுதான் இது. இருக்கட்டுமே, எல்லா சூழ்நிலையிலும் அவர் தரிசனம் தருவதாக உணருவோம். உணர்வது முக்கியம். ஏன் என்றால், ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் "திருவண்ணாமலையில் நான் வருகிறேன். முடிந்தால் என்னை கண்டுபிடி" என ஒரு அடியவருக்கு சவால் விட்டார். அப்படி இருக்கையில், உலகில் எங்கும், எப்படியும் அவர் வரலாம், இருக்கலாம் என்று என்னுள் தோன்றுகிறது. யாருடைய எண்ணத்தையும், மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை அடியவரே!

      Delete
  4. OM Agatheesaya Namah

    The mentioned Mahamuni's words translated as: Sage agasthiar advises some people to get some money from others to perform dharma according to their horoscope.For others who have money they can do dharma with the money they earned in good way even if it is a little one. others can participate in dharma by giving physical work.People who avoids harsh words also get punya.Avoiding anger is very important according to sage agasthiar.

    ReplyDelete
    Replies
    1. "Get some money from others" means - "if at all you had to borrow" do it. It does not mean bribe or other wrong means. Overall what you have perceived is correct.

      Delete