2020 வருட பொதிகை பயணத்தை பற்றிய ஒரு தகவல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
2020-ம் ஆண்டிற்கான பாபநாசம் மலையின் மீதுள்ள பொதிகைமலை அகஸ்தியர் பயண முன்பதிவு ஜனவரி 8-ம்தேதி காலை 11 மணிக்கு kerala forest wildlife department இணையதளத்தில் தொடங்குகிறது!
பொதிகை தென்காசி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனத்திற்குள் 6350-அடி உயரத்தில் அமைந்துள்ளது
இந்த இடத்திற்கு தமிழ்நாடு வழியாக செல்ல முடியாது.. கேரளா வழியாகவே செல்ல முடியும்.
ஆர்வமுள்ளவர்கள் மேற்சொன்ன நாள் நேரத்தில் www.forest.kerala.gov.in என்ற இணையதளத்தில் டிக்கட் எடுக்கவும்! மொத்தம் 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கட்களும் தீர்ந்துவிடும்! அக்கவுண்டில் பணம் உள்ள டெபிட் கார்டு, மற்றும் அதிவேக இன்டர்னெட் சென்டர் மூலம் முயலவும்! விண்ணப்பிக்கும் போது அனைவரின் அடையாள அட்டை எண் அவசியம். டிக்கட் கிடைத்துவிட்டால் பயணத்தின்போது அதே ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம்!
நபர் ஒருவருக்கு 1100 ரூபாய்!, அதிகபட்சம் 10 பேர் கொண்ட குழுவாக முன்பதிவு செய்யலாம்! காலையிலேயே கேரள அரசின் வனத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று USERNAME & PASSWORD கிரியேட்டிவ் செய்து வைத்துக்கொள்ளவும்! வாய்ப்புகள் கிடைக்கலாம்!
அகத்தியர் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்!
சித்தன் அருள்.............. தொடரும்!
