2020 வருட பொதிகை பயணத்தை பற்றிய ஒரு தகவல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
2020-ம் ஆண்டிற்கான பாபநாசம் மலையின் மீதுள்ள பொதிகைமலை அகஸ்தியர் பயண முன்பதிவு ஜனவரி 8-ம்தேதி காலை 11 மணிக்கு kerala forest wildlife department இணையதளத்தில் தொடங்குகிறது!
பொதிகை தென்காசி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக அடர் வனத்திற்குள் 6350-அடி உயரத்தில் அமைந்துள்ளது
இந்த இடத்திற்கு தமிழ்நாடு வழியாக செல்ல முடியாது.. கேரளா வழியாகவே செல்ல முடியும்.
ஆர்வமுள்ளவர்கள் மேற்சொன்ன நாள் நேரத்தில் www.forest.kerala.gov.in என்ற இணையதளத்தில் டிக்கட் எடுக்கவும்! மொத்தம் 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கட்களும் தீர்ந்துவிடும்! அக்கவுண்டில் பணம் உள்ள டெபிட் கார்டு, மற்றும் அதிவேக இன்டர்னெட் சென்டர் மூலம் முயலவும்! விண்ணப்பிக்கும் போது அனைவரின் அடையாள அட்டை எண் அவசியம். டிக்கட் கிடைத்துவிட்டால் பயணத்தின்போது அதே ஒரிஜினல் அடையாள அட்டை அவசியம்!
நபர் ஒருவருக்கு 1100 ரூபாய்!, அதிகபட்சம் 10 பேர் கொண்ட குழுவாக முன்பதிவு செய்யலாம்! காலையிலேயே கேரள அரசின் வனத்துறை அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று USERNAME & PASSWORD கிரியேட்டிவ் செய்து வைத்துக்கொள்ளவும்! வாய்ப்புகள் கிடைக்கலாம்!
அகத்தியர் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்!
சித்தன் அருள்.............. தொடரும்!
1100 rubava omg .. ituku na veetu ku pakkathula irukura kovil ke poituvaruven . kadavula paka kuda kasu kali kalam da ! ...
ReplyDeleteஐயா வணக்கம் , பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா. குருவே துணை! ஐயா பெண்களுக்கு அனுமதி இல்லையா ஐயா. பெண்களால் போக முடியுமா ஐயா.நன்றி ஐயா.
ReplyDeleteOm Sri lopamudra samata agastiyar thiruvadi sàranam.ayya vanakam.
ReplyDeleteமதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
ReplyDeleteமதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கு வணக்கம்,
குரு அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்,
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
குருவருளால் அனைத்து சுகங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறேன்.
இத்துடன், வேல்மாறல் உருவான கதை மற்றும் வேல்மாறல் பற்றிய தொகுப்பு தரவு தந்துள்ளேன் படித்து பயன் பெறுங்கள்.
‘‘பழவினைகள் தீர்த்தவனாம் பழநியுறை திருமுருகன்
கழல் பணிந்து புகழ்பாடும் கடமையுடன் பிறவியறும்
வழிகாட்டும் குருவருளால் வள்ளிமலைப் பணிபுரிந்த
அழகர் சச்சிதானந்தர் அகம் அமர்வேள் பதம்போற்றி’’
ஆங்கிலேயர்கள் காலத்தில், ஜனவரி முதல் தேதியன்று ஆங்கிலேய அதிகாரிகளைப் பார்த்து வாழ்த்து தெரிவிக்கும் வழக்கம் நம் மக்களிடையே இருந்து வந்தது. அரசாங்கத்தில் பணிபுரிவோர் தங்கள் உத்தியோக உயர்வு காரணமாகவும் மற்றும் மேலதிகாரிகளின் நட்பையும் நல்லெண்ணத்தையும் வளர்த்துக்கொள்ளும் விதமுமாக பூமாலைகள், இனிப்பு வகைகள், பழங்கள் முதலியவற்றுடன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறிவந்தனர். ‘இப்படி வருடத்தின் முதல் தேதியன்று அடிமை போன்று ஆங்கில துரையின் காலில் ஏன் விழ வேண்டும்; அதே தினத்தில், திருத்தணிகையில் அருள் வழங்கும் நம் தணிகை துரையைத் தரிசித்து, வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று இன்புறலாமே!’ என்ற சிந்தனையில், 1917-ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, முருகனடியார்கள் ஆறு பேரை அழைத்துக்கொண்டு தணிகை துரையை தரிசிக்கக் கிளம்பினார் ஒருவர்.
இப்படி, 1918 ஜனவரி முதல் தேதியன்று ஆரம்பித்த திருத்தணி திருப்படி விழா என்னும் இயக்கம், இப்போதும் ஒவ்வொரு டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதல் தேதியன்று தணிகை வேலனைக்கண்டு தொழ லட்சக்கணக்கான பேரைக் கூடவைக்கிறது. ‘திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமானே’ என்று பாடிய அருணகிரிநாதரின் வாக்கை மெய்ப்பிக்கிறது இது. திருத்தணி மட்டுமா, மலைத் தலங்கள் அனைத்திலும் திருப்புகழ் பாடி திருப்படி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இப்படித் திருப்புகழ் பாடிக்கொண்டு மலைப்படியேறி திருப்புகழ்த் திருவிழாவை ஆரம்பித்து வைத்த பெருமைக்குரியவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்.
https://siththanarul.blogspot.com/2014/10/blog-post_25.html
https://tut-temple.blogspot.com/2017/08/blog-post_12.html
http://www.nermai-endrum.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81/
மிக்க நன்றி,
இரா.சாமிராஜன்
ஓம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக
ReplyDeleteஅய்யா 2020 எல்லா ஜுவராசிகளுக்கும் தங்கள்
கருணை மழை கிடைக்க அருள்ஆசி தாருங்கள்.
Om Agatheesaya Namaha.
ReplyDeleteImportant New Year Message from Swami Shivananda Bharathi of Saptharishi Marga.
சப்தரிஷி மார்க்கம் சுவாமி சிவானந்த பாரதியிடமிருந்து முக்கியமான புத்தாண்டு செய்தி.
https://youtu.be/g615L791g0A