​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 26 December 2019

சித்தன் அருள் - 832 - 2020 வருட புத்தாண்டு வாழ்த்துக்களுடன் .....!வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் அருளால், பலவிதமான சூழ்நிலைகளை கடந்து புத்தாண்டை நோக்கி வந்துவிட்டோம்.

புது வருடம் ஒவ்வொருவருக்கும், நல்வாழ்வை தந்து, நல்விஷயங்களை செய்கிற வாய்ப்பை தந்து, அமைதியையும், ஆனந்தத்தையும், நம் குருநாதர் அருளால் வழங்கட்டும் என வேண்டிக்கொண்டு, "சித்தன் அருள்" சார்பாக 2020ஆம் ஆண்டின் நாட்காட்டியை உங்களுக்கு வழங்குகிறது.

தினம் பன்னிரெண்டு (12) முறை "பிராணாயாமம்" (இடமிருந்து வலம் 12, வலமிருந்து இடம் 12) சித்த மார்கத்தின் பாதைக்கு எளிதில் அழைத்து செல்லும் என அகத்தியரின் சித்த சாஸ்த்திரம் உரைக்கிறது. நாள்பட குரு வருவார், கைபிடித்து அழைத்து செல்வார் என்கிறது. விருப்பமுள்ளவர் முயற்சிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................... தொடரும்!6 comments:

 1. Om Agatheesaya Namaha..
  Swami Shivananda Bharathi of Saptharishi Marga explains about various spiritual matters..video link below.
  சப்தரிஷி மார்க்கம் சுவாமி சிவானந்த பாரதி பல்வேறு ஆன்மீக விஷயங்களைப் பற்றி விளக்குகிறார்.. வீடியோ இணைப்பு கீழே.

  https://youtu.be/EsyviiFLbUk

  ReplyDelete
 2. Arunachalam sir can you explain briefly about pranayamam..

  ReplyDelete
 3. HAPPY NEW YEAR to agathiyar and to most brilliant and englighten sage agnilingam ..


  agnilingam sir arul kidaithal agarthiyar arul kidaichamari !! ;pp pappon indha varushamavathu agathiyar kupuduraratu .. 2 varusham kazhi pesarantu sonnaru ippo 10 varusham meal aachi kupudavae illa . avaruku en mela enna gando lol lets hope best ...

  ReplyDelete
 4. அக்னிலிங்கம் அய்யா அவர்களுக்கு வணக்கம்..

  திருஆதிரை நட்சத்திரம் பற்றிய இந்த செய்தியை சித்த வித்யார்த்திகளிடத்தில் கேட்டு சொல்லுங்கள்.

  https://relay.nationalgeographic.com/proxy/distribution/public/amp/science/2019/12/betelgeuse-is-acting-strange-astronomers-are-buzzing-about-supernova

  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 5. வணக்கம் ஐயா, ஓம் குரு பிரான் , தாயின் திருவடிகள் போற்றி! ஐயா நாடி சுத்தி 12 முறை செய்வது தாங்கள் கூறும் பிராணாயாமம் அதில் சேருமா ஐயா. சற்று விளக்கி கூறுங்கள் ஐயா. நன்றி. பல்லாண்டு வாழ்க வளமுடன் ஐயா. குருவே துணை!

  ReplyDelete
 6. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
  மிக்க நன்றி ஐயா... கண்டிப்பாக செய்கிறேன்

  ReplyDelete