​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 12 December 2019

சித்தன் அருள் - 830 - அகத்தியரின் அனந்தசயனம்!


"குபேரனுக்குற்ற தனத்தினும் மிகுத்து
கிடக்கு அம்பலத்தடியதினிலே"

என்ற அகத்தியர் நாடியின் வாக்கில், சிதம்பரம், சீர்காழி, தஞ்சை பெரிய கோவில், குற்றாலம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவானைக்கா, ராமேஸ்வரம், திருவாரூர், பழனி, திருச்செந்தூர், அழகர் கோவில், மதுரை, போன்ற கோவில்களில் பாதுகாப்பாக இருக்கும் பொக்கிஷங்களை கணக்கிடவே முடியாது. சோமநாதர் கோவிலை 18 முறை அந்நியன் படையெடுத்ததே அங்குள்ள பொக்கிஷங்களை கவர்ந்து செல்லத்தான்.

பத்மநாப சுவாமி  சன்னதிக்கு முன் உள்ள ஒற்றைக்கால் மண்டபத்தில், மன்னரை தவிர வேறு யாரும் கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய அனுமதிப்பதில்லை. இந்த கோவிலின் ஆகம விதிப்படி, அப்படி செய்பவரின் அனைத்து சொத்தும் பத்மநாபருக்கு சென்று சேர்ந்துவிடும். ஆதலினால், அங்கு நமஸ்காரம் செய்கிற உரிமையை கோவிலை நிர்வகித்துவரும் அரசருக்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு தனிப்பட்ட மனிதரின் எந்த பொருளும் அந்த மண்டபத்தில் கை தவறி விழுந்தால், அங்கிருக்கும் ஊழியரால், பறிமுதல் செய்யப்பட்டு, உடனேயே பத்மநாபரின் உண்டியலில் சேர்க்கப்படும்.

வருடத்தில் இருமுறை, ஐப்பசி, பங்குனி மாதங்களில் பத்து நாட்கள் உற்சவம் நடை பெரும். மாலையிலும், இரவிலும், கோவிலுக்குள் நான்கு முறை ப்ரதக்ஷிணமாக பத்மநாபர், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகிய இறை மூர்த்தங்கள் வித விதமான வாகனங்களில் எழுந்தருளுவார்கள். எட்டாவது நாள் "காணிக்கை" எனப்படும். முதலில் மன்னரும், அவர் குடும்பத்தாரும் தங்க குடத்தில் பத்மநாபாருக்கு காணிக்கை செலுத்துவார்கள். அதன் பின் யார் வேண்டுமானாலும், பத்மநாபாருக்கு காணிக்கை சமர்ப்பிக்கலாம். ஒன்பதாவது நாள் "வேட்டை"  என்கிற உற்சவம் நடை பெறும். பத்தாவது நாள், பத்மநாபர், நரசிம்மர், கிருஷ்ணர் ஆகிய இறை வடிவங்கள், பல்லக்கில் வைக்கப்பட்டு, தீர்த்தவாரிக்காக கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் பூஜைகள்  செய்யப்படும். இதை "ஆராட்டு" என்பார்கள். ஸ்வாமிகளை, விமானநிலைய ஓடுபாதை வழியாகத்தான் பல்லக்கில் கொண்டு செல்வார்கள். உலகத்திலேயே, ஒரு கோவில் விசேஷத்துக்காக, விமான ஓடுபாதையை விட்டு கொடுத்து, ஸ்வாமியை எடுத்து செல்ல அனுமதிப்பது, அனந்தசயனத்தில் மட்டும்தான் நடக்கிறது. அன்றையதினம் மதியத்துக்குப்பின் விமானநிலையம், மூடப்படும், ஒரு விமானமும் ஏறவோ, இறங்கவோ அனுமதிக்கப்படாது.

ஆராட்டுக்கு மூன்று தெய்வங்களும் செல்வதை கண்டு பிரார்த்தனையை சமர்ப்பித்திட, அது உடனேயே நிறைவேறும். இதை அனுபவ பூர்வமாக உணர்ந்த அடியவர்கள், இறைவனை தரிசிக்க மறப்பதில்லை.

வேட்டை என்கிற ஒன்பதாவது நாள் நிகழ்ச்சியின் தொகுப்பை கீழே தருகிறேன்.


மூன்று தெய்வங்களும் விமான ஓடுபாதை வழி ஆராட்டுக்கு செல்கிற ஒரு தொகுப்பை கீழே தருகிறேன்.


முடிவுரை:-

பத்மநாபர் உலகின் முதல் செல்வந்தர் என்கிற செய்தி வெளியுலகுக்கு தெரிந்து போனபின், கோவிலை சுற்றியும், ஊரிலும் நிறையவே கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்துள்ளது. எங்கும் துப்பாக்கி ஏந்திய காவல். கோவிலுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் யாரும் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

பத்மநாபரை தரிசிக்க செல்பவர்கள், அவரை மட்டும் மனதுள் அமர்த்தி, அதுவே அவாவாக இருக்க செல்வதே நல்லது. அந்த நிதி எங்கிருக்கிறது, அந்த அறையின் கதவு எங்கு தொடங்குகிறது என்கிற எண்ணங்கள், ஒவ்வொருவருக்கும் தோஷங்களைத்தான் உருவாக்கும், என்கிறார் அகத்தியப்பெருமான். அங்கிருக்கும் "பொருள்" யாருக்கோ சொந்தம். அதை காப்பாற்ற வேண்டியது, அகத்தியப்பெருமானின்  வேலை என்றிருந்துவிடுங்கள்.

அகத்தியர் அடியவர்களான ஒவ்வொருவரின் கவனமும், எண்ணமும், இறையிடம், அகத்தியப்பெருமானிடம் (அவரின் ஆத்ம சொரூபத்தின் சமாதியில்) மட்டும் இருக்க வேண்டும் என்பதே, இந்த தொகுப்பின் நோக்கம்.

அகத்தியரின் அனந்தசயனம் தொடர் இத்துடன் நிறைவு பெற்றது! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................. தொடரும்!

5 comments:

 1. ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி.

  மிக அற்புதம் ஐயா. மிக்க நன்றி. அனந்தசயனம் சென்று இறையை தரிசிக்க மனம் விரும்புகிறது. அகத்திய பெருமானின் பேரருளால் நிச்சயம் நடக்கும்.

  ReplyDelete
 2. நன்று ... அய்யா ஒரு வேண்டுகோள் அகத்தியரிடம் கேட்டு நக்ஷத்திரத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதவும் ஓரு நக்ஷத்திரம் எப்படி உண்டானது அதன் இயல்பு என்ன தன்மை என்ன எப்படி நக்ஷத்திர பலன் சொல்லவேண்டும் என்று . ஜோதிடம் பயிலும் அனைவர்க்கும் இது மிக்க உபயோகமா இருக்கும்

  ReplyDelete
 3. நன்றி ஐயா...
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 4. ஆயிரம் கோடி நன்றி

  ReplyDelete
 5. Sir please say about Law of attraction

  ReplyDelete