​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 5 December 2019

சித்தன் அருள் - 829 - அகத்தியரின் அனந்தசயனம்!


இறையை சார்ந்திருக்கும் தேசம் நிச்சயம் வளர்ச்சியுறும் என்பதறிந்த நவகிரகங்கள், கெட்ட சக்திகள் வழி தங்கள் ஆட்சியை நிலை நிறுத்த முயற்சிக்கும், வளர விடாமல் தடுக்கும், என்பதே கலியுக விதி.

கலியுக தொடக்கத்தில், நவகிரகங்களுக்கு ஆட்சி செய்ய அனுமதி கொடுத்து, அவர்கள் ஆட்சி எல்லை மீறி செல்லவே, அனைத்து ஜீவராசிகளுக்கும் ஊரு விளைவிக்கவே, சித்தர் இடைக்காடரை வைத்து, நவகிரகங்கள் ஒருவருக்கொருவர் முகம் பார்க்க விடாமல் செய்து, பூமியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஒரு அனுபவமே, இறைவனை பல தீர்மானங்களை எடுக்க வைத்தது என்பர். நவகிரகங்களின் ஆட்சி உச்சகட்டத்துக்கு சென்று விடாமல் தடுக்கவே, கோவில்களில் அவர்களுக்கு சன்னதி அமைத்துப் பூசை நடக்கிறது. இறைவன் சார்பாக நடக்க வேண்டுமென்பதே தாத்பர்யம். 

மனிதனுக்கான அறிவுரையில், "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என மூத்தோர்கள் சொல்லிப்போனதின் உள் அர்த்தமே, மனிதன், நவகிரகங்களால் அதிகமாக பாதிக்கப்படாமல், தன் உண்மை நிலையை உணர்ந்து, இறைவனில் லயித்து வாழ வேண்டும் என்கிற அர்தத்தில் தான்.

ஒரு சாளிகிராமம் வீட்டில் இருந்தால், அதற்கு நித்ய பூசை செய்ய வேண்டும். அது கண்டகி நதியில் விளைவது. நாராயண ஸ்வரூபம். நாராயணரின் பல ரூபங்கள் அவைகளுக்குள் இருக்கும். அப்படிப்பட்ட சாளிக்ராமத்தை நித்ய பூசை செய்யாவிடில், அந்த வீட்டில் குடியிருக்கும் அத்தனை குடும்பத்தையும் பாடாய் படுத்திவிடும். 

இப்படிப்பட்ட 12000 சாளிக்ராமங்களை தருவித்த அகத்தியர், 10008 சாளிக்ராமங்களை வைத்து பத்மனாபாரின் திருமேனியை உருவாக்கியுள்ளார். மீதியை வைத்து மஹாலக்ஷ்மி தாயாரையும், பிரம்மாவையும், ஆதிசேஷனையும் உருவமைத்து, 9000 மூலிகைகளை கொண்டு "கட்டு சக்கர யோகம்" என்கிற மூலிகை மருந்தினால் பத்மநாபரின் திருமேனிக்கு மூலிகை பூச்சை உருவாக்கினார். ஆதலினால், பத்மநாபர் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது. மூலவருக்கு அர்ச்சிக்கப்படும் பூக்களை, மயிலிறகினால் அகற்றுவார்கள்.

அத்தனை சாளிக்ராமங்களும் ஒரே இடத்தில் இருந்து, மிக பலமான ஆளுமைசக்தியை உருவாக்கியது. பாரத கண்டத்துக்கு மிக உயர்ந்த அரண் உருவாகியது. யாரும் பத்மநாபாருக்கு அருகில் செல்லவே முடியாமல் போயிற்று. அவரை தரிசனம் செய்து, பூசை செய்ய விரும்பிய திவாகர முனிவரின் வேண்டுதலுக்கிணங்கி இறைவன் தற்போதுள்ள திருமேனியின் உருவத்துக்கு தன்னை சுருக்கிக் கொண்டார். அப்படி சுருக்கிக் கொண்டும், இறைவனின் தேஜஸ் தாங்கமுடியாத அளவுக்கு இருந்ததால், திவாகர முனிவரே மறுபடியும் வேண்டிக் கொள்ள, இறைவன், நான்கு வேதங்களை அழைத்து தன்முன்னே சுவராக நிற்கச்செய்து, மூன்று வாசல்களை உருவாக்கி, அவரை மூன்று வாசல் வழி, சிரம்-கரம், நாபி, பாதம் என தன்னை தரிசனம் செய்தால் போதும் என அருள் செய்தார்.  பத்மநாபரை முழுமையாக தரிசிக்கும் சக்தியை முனிவர்களே பெறவில்லை என்பதே உண்மை.

பெருமாளின் வலது கரமாக விளங்குபவர், நம் குருநாதர் அகத்தியப்பெருமான் என்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட அகத்தியப்பெருமானுக்கு, இறைவனுக்கு திருமேனியை செய்து சன்னதியை அமைத்து, தன் சித்த சமாதியை உருவாக்குகிற பாக்கியத்தை இறைவன் கொடுத்தார் என்றால், ராமபக்த ஆஞ்சநேயர் மேலும் ஒரு பெருமையை கொடுத்தார்.

கிழக்கு வாசல் வழி பத்மனாபாரை தரிசனம் செய்ய வந்தால் கொடிமரத்துக்கு அருகில் ஆஞ்சநேயர் சன்னதி இருப்பதை காணலாம். அவர் வெண்ணை சார்த்தப்பட்டு, கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பார். அனைவரும் தரிசிக்கலாம், ஆயின் அனுமனின் பாதத்தை காண முடியாது. ஏன் எனில், அனுமனின் பாதங்கள் இருப்பது, அகத்தியப்பெருமானின் தோள்களில்.

தவக்கோலத்தில் இருந்த ஆஞ்சநேயர், அனைத்து தேவர்களும், முனிவர்களும், இறைமூர்த்தங்களும், சித்தர்களும், நாரயணரின் பத்மநாபர் அவதாரத்தை கண்டு மகிழ்வதாக கேள்வியுற்று, தானும் அனந்தன் காட்டிற்கு எழுந்தருளினாராம். வெகு தூரத்தில் நிற்பதை தவிர, வேறு வழியில்லை என்ற நிலை நிலவியது அனந்தன் காட்டில். அத்தனை உயர் ஆத்மாக்களும் சூழ்ந்து நின்று பத்மனாபரின் அருளை பெற்றுக் கொண்டிருந்ததினால், ஆஞ்சநேயருக்கு பத்மநாபரின் திருப்பாத தரிசனம் கூட கிடைக்கவில்லை. மிகுந்த வருத்தமுற்ற ஆஞ்சநேயரின் மனநிலையறிந்த பெருமாள், அகத்தியரை நோக்கி கண் அசைக்க, அவரும் அனுமனை கண்டார்.

"வாருங்கள் ராமதூதனே! நாங்கள் அனைவரும் பத்மனாபரின் திருமேனியை கண்டு மனம் மகிழ்ந்துள்ளோம்! தாங்களும் வந்து இறையருளை பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

"நன்றி! அகத்தியரே! இருப்பினும் இங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தால், அடியேனுக்கு அவர் தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகமாக உள்ளது. பத்மநாபரின் திருப்பாத தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும். ஆனால், அத்தனை பேரும் அவர் முன் நின்று மறைப்பதால் ஒன்றுமே தெரியவில்லை!" என்றார் ஆஞ்சநேயர்.

"அடடா! தாங்களுக்கு பத்மநாபரின் தரிசனம் தானே வேண்டும்! இதோ, அடியேன் தோள்களில், தங்கள் திருப்பாதம் பதித்து ஏறி நின்று, அவரின் தரிசனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறி அவர் முன் நின்றார்.

அனுமனும் பத்மநாபரை, அகத்தியப்பெருமானின் தோள்களில் ஏறி நின்று தரிசித்துவிட்டு, மன நிறைவுடன், அகத்தியப்பெருமானை, அவரின் சேவைக்கு பாராட்டி ஆசிர்வதித்து சென்றார் என்பதை சுட்டும் விதமாக, அந்த ஆஞ்சநேயர் திருப்பாதத்தில் அகத்தியர் தோள்கள் இருப்பதாக வடிவமைத்துள்ளனர். ஆனால், அனுமன் திருப்பாதத்தை காண்பதே மிக அரிது என்கிற நிலையில் தான் இன்றைய சூழ்நிலை. அப்படியிருக்க, அகத்தியரை எங்கு பார்க்க!

சித்தன் அருள்.................. தொடரும்!    

 

15 comments:

  1. எல்லாம் வல்ல குருவை வணங்கி
    அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்

    ப்ரசன்னம் பார்த்த விடயம் என்ன ஆயிற்று? பெருமாள் சொன்ன சிறுவன் யார் அவர் பெயர் விபரம் ?

    ReplyDelete
    Replies
    1. Pls read Siththan arul 827 for prasna vidhi

      Delete
    2. yes naanum athan kekanum nu nenachen oru flow ah pogumbothu en sir takunu topic change pandringa .. agathiyar sollavenam nu sonnara .;p;p

      Delete
  2. அகத்தீசாய நம

    ReplyDelete
  3. மிகவும் அருமையாக உள்ளது கேட்க கேட்க ஆனந்தம் .....

    ReplyDelete
  4. அய்யா வணக்கம், கண்டகி நதி தற்பொழுது எந்த பெயரில் அழைக்கப்படுகிறது.
    தற்பொழுது யாருடைய ஆட்சியின் கீழ் இவ்உலகம் உள்ளது . ஓம் மூத்தோனே போற்றி. ஓம் முருக பெருமான் திருவடிகள் போற்றி. ஓம் அகஸ்தியர் மலரடிகள் போற்றி.

    ReplyDelete
    Replies
    1. ஓம் மூத்தோனே போற்றி.
      அய்யா வணக்கம், ஆஞ்சேநேயர் அவர்களுக்கு உயர பறக்கும் சக்தியும் உயர்ந்து வளரும் சக்தியும் இருக்கும் பொழுது , அந்த சக்திகளை உபயோக படுத்தாமல் அகஸ்தியர் அவர்களின் தோள்களின் மேல் நிற்கும் சூட்சமம், சொல்லும் செய்தி என்ன என்று அறிந்து கொள்ளலாமா.
      ஓம் அகஸ்தியர் போற்றி. ஓம் போகர் போற்றி. ஓம் பதினெட்டு சித்தர்கள் போற்றி போற்றி .

      Delete
    2. சக்தியும், திறமையும் இருக்கிறது என்பதற்காக, சித்தர்களும், முனிவர்களும், பிற தெய்வங்களும், இறைவனின் முன் அதை உபயோகிப்பதில்லை, காட்டிக்கொள்வதில்லை. அடங்கி, அடியவனாய் இருப்பதே அழகு என உணர்ந்தவர்கள் அவர்கள். இந்த நிகழ்ச்சியினால், அகத்தியப்பெருமானுக்கு பெருமைதான் உண்டாயிற்று. அனுமன் திருவடி கிடைப்பது அத்தனை எளிதல்ல.

      Delete
    3. நன்றி அய்யா.

      Delete
  5. ஓம் லோபமுத்ர சமேத அகத்தீசாய நமக

    ReplyDelete
  6. Message from MahaSiddhar Agastyar..

    அகத்தியர் அடியவர்களே.
    அகத்தியர் அருளிய உபதேசம் .. 11ம் Dec.

    Request someone to translate in Tamil and post here..

    https://twitter.com/YogiligoY/status/1204311923812163584?s=09

    https://drive.google.com/file/d/1323J-4sjwwoKVOP68CNLccKmmj3XEnOi/view?usp=drivesdk

    ReplyDelete
  7. ஐயா வணக்கம் இந்த பருவ மழை தொடங்கியதில் இருந்து எப்போதும் இல்லா வண்ணம் நோய்களின் தீவிரம் இந்த வருடம் மிக அதிகமாக உள்ளது சிறியவர் முதல் மிகவும் வயதானவர்கள் வரை மிகவும் சிரமப்படுகிறார்கள் எத்தனை முறை மருத்துவங்கள் பார்த்துக் கொண்டாலும் நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது என்ன காரணம் மக்கள் சிரமத்தில் இருந்து விடுபட என்ன செய்வது தயவுகூர்ந்து ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் இந்த நிலை எப்போது மாறும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி 15, 2020ம் ஆண்டு வரை அனைத்து நல்ல விஷயங்களும் "கால சர்ப்ப தோஷத்திற்குள்" அகப்பட்டு கொண்டதால். மனிதர்கள் அனைவரும் நிறைய ஸ்ரமங்களை சந்திக்க வேண்டிவரும் என இந்த வருட முதலிலேயே அகத்தியப்பெருமான் எச்சரித்திருந்தார். அதை சித்தனருளிலும் பதிவிடப்பட்டிருந்தது. அதனுடன் சிறு பரிகாரமும் தொடர்ந்து செய்யச் சொல்லியிருந்தார். எத்தனை பேர் செய்தோம்? சரி! இந்த மாதம் 25, 26, 27 தியதிகளில் கிரகநிலைகள் பாதகமாக உள்ளதே. என்ன செய்வதாக தீர்மானம்?

      Delete
    2. ஐயா, அகத்தியர் தான் வழி நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

      ॐ असतो मा सद्गमय ।
      तमसो मा ज्योतिर्गमय ।
      मृत्योर्मा अमृतं गमय ।
      ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
      Om Asato Maa Sad-Gamaya |
      Tamaso Maa Jyotir-Gamaya |
      Mrtyor-Maa Amrtam Gamaya |
      Om Shaantih Shaantih Shaantih ||


      Lead me from the unreal to the real: Lead from the darkness to the light:
      Lead me from death to immortality:
      Let there be peace peace and peacefulness.


      அசதோ மா சத் கமய
      தமஸோ மா ஜ்யோதிர்
      கமய ம்ருத்யோர்மா அம்ருதம் கமய
      ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!!!

      (Brhadaranyaka Upanishad — I.iii.28)

      Delete
  8. எல்லாம் வல்ல குருவை வணங்கி

    அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்

    கால சர்ப்ப தோஷத்துக்கு சம்பந்தர் அருளிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று தொடங்கும் தேவாரம் ஓதும் படி குரு சொன்னார் கார்த்திகை மாதம் வரை.
    இதுவரை தேவாரம் பாட முடியாமல் விட்டவர்கள் இனி மேலாவது பாட முயற்சி செய்யலாம்

    ReplyDelete