​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 19 December 2019

சித்தன் அருள் - 831 - அகத்தியப்பெருமான் அளித்த தகவல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த வருட தொடக்கத்தில், அகத்தியப் பெருமான் நாடியில் வந்து ஒரு முக்கிய செய்தியை நமக்காக உரைத்தார். அதை கீழ்கண்ட தொகுப்பில் அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என பதிவிடப்பட்டிருந்தது.


அன்று அகத்தியப் பெருமான் உரைத்த மிக கடுமையான கிரகநிலை இந்த மாதம் 25, 26, 27, 28 ஆகிய நாட்களில் வருகிறது. அமாவாசை, அதற்கடுத்தநாள் சூரிய கிரகணம், ஆறு கிரகங்கள் ஒருவீட்டிலும், ராகுவின் பார்வை அவைகள் மீதும் படுவது அத்தனை நல்ல நிகழ்வாக ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.

சமீபத்தில், ஒரு நாடியில் நம் குருநாதர், இந்த கிரகநிலை, எப்படிப்பட்ட நல் மனதையும், கெடுத்துவிடும் என்றார். இதிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள, அந்த நான்கு நாட்களும், அதற்கு முன்னரும், கணபதியையும், ஆஞ்சநேயரையும் சிரத்தையுடன் வழிபட்டு வர வேண்டும் என்கிறார்.

மேலும் அந்த நான்கு நாட்களில், அகத்தியர் அருளிய, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தையும், இந்திராக்ஷி சிவ கவசத்தையும் வீட்டில் விளக்கேற்றி வைத்து, காலை, மாலை என இரு வேளையும் கூறவோ, கேட்கவோ செய்வது மிகுந்த பாதுகாப்பை, கவசத்தை ஒவ்வொருவருக்கும் உருவாக்கும் என கூறியுள்ளார்.

மேலும், குடிக்கும் நீரில், சிறிது தர்ப்பை புல்லை போட்டு வைத்து அருந்தி வந்தால், மனித மனது இந்த காலங்களில் அதிக சேதப்படாமல் தப்பிக்கும் என்ற அருளுரையையும் தந்துள்ளார்.

அகத்தியர் அடியவர்களே!

கிடைத்த தகவலை அப்படியே தெரிவித்துவிட்டேன். நடைமுறைப் படுத்தவேண்டியது, இனி உங்கள் கையில்.

அகத்தியர் காட்டிய வழியில் நடந்து சென்று, அவர் அருளை பெற்று, நலமுடன் வாழ, இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், நமஸ்காரம்!

சித்தன் அருள்.............. தொடரும்!

4 comments:

 1. அகத்திய உள்ளங்களுக்காக அடியேன் அனுபவ பதிவு. ஓம் அகத்தீசாய நமஹ

  http://fireprem.blogspot.com/2019/05/blog-post.html?m=1

  ReplyDelete
  Replies
  1. padithen ayya migavum nandraga irundhathu thiraipadathil kuda ippidi eludhamatargal thangal thiraikadhaiyil therchi pettravar ! thiraithuraiyil nuzhandhaal pragasaman vaazhkai ullathu !


   oru jothidan engira muraiyil ketkiren thangal jathagam parkalama enakku oru nalla anubavamaga iukum athan ketkiren ....

   Delete
 2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

  ReplyDelete
 3. எல்லாம் வல்ல குருவை வணங்கி
  அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்

  நம் குருநாதர் குரு பூஜை ( ஆயில்ய நட்சத்திரம்) சனவரி 13 2020 ல் வருகிறது. இவ்வலைப்பூ அகத்தியர் அடியவர்கள் சார்பில் குரு பூஜை செய்ய ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா அக்கினிலிங்கம்அவர்களே. வங்கி கணக்கு ஒன்று திறந்து அடியார் எல்லாம் ஒரு தொகை கொடுத்தால் குரு பூஜை மட்டும் அல்லாமல் மாதாமாதம் கூட பூஜை செய்யலாம், இது என் மனதில் உதித்த யோசனை.
  குருவிடம் கேட்டால் வழி சொல்லுவார்

  ReplyDelete