​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 18 July 2019

சித்தன் அருள் - 817 - அகத்தியப்பெருமானின் நமக்கான அருள் வாக்கு!


[டவுன்லோட் செய்ய]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப் பெருமான், இறைவன் உத்தரவால், தன் சேய்கள் நலமாக வாழவேண்டும் என்பதற்காக, ஒரு அருள் வாக்கை அருளியுள்ளார். ஒரு அகத்தியர் அடியவர் அனுப்பித்தந்த, ஒலிநாடாவிலிருந்து, முக்கியமான விஷயத்தை, சுருக்கமாக, அடியேன் புரிந்து கொண்ட வரையில் கீழே தருகிறேன்.

ஆனிமாத முடிவில் ஏற்பட்ட, சந்திர கிரஹணத்துக்குப்பின், நல்லதை செய்கிற ஏழு கிரஹங்களும், ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனுடன், பஞ்ச பூதங்களும், அந்த இரு கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. இது, கார்த்திகை மாதம் முடியும் வரை தொடரும். இந்த காலகட்டத்தில், நிறைய அனிச்சையாக, சம்பவங்கள் நடக்கும். மனித மனதை, எண்ணங்களை விஷப்படுத்தி, தனிப்பட்ட வாழ்க்கையில், குடும்பத்துக்குள், பொது வாழ்க்கையில், வேண்டாத விஷயங்களை நடத்திவைக்கும். இது, பக்தி மார்கத்தில், சித்த மார்கத்தில், மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களையும் தடுமாற வைக்கும். தேவை இல்லாத கெட்ட பெயர், பேச்சு, தூற்றுதல், போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கும். இவ்வுலகில், நடக்கும் அனைத்தும் இறைவன் அருளால் நடப்பதால், எவ்வளவோ பக்குவத்துடன் இருந்தாலும், சேய்கள் மனம் கலங்கத்தான் வேண்டிவரும். ஆகவே, இறைவன் உத்தரவால், அனைத்து சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும், அனைத்து ஆத்மாக்களையும், இந்த நேரத்தில், அருகிலிருந்து, வழி நடத்தி, காப்பாற்ற அனுப்பப்பட்டுள்ளனர். நாம் காப்பாற்றப்பட்டு, வழி நடத்திட, என்ன செய்ய வேண்டும் என ஒரு வழியையும் அகத்தியப் பெருமான் அருளியுள்ளார்.

இறைவனை, ஜோதி ரூபமாக, (அதுவே கல்யாணக் கோலம்), தினமும் காலையிலும், மாலையிலும் அவரவர், வீட்டில் ஒரு விளக்கேற்றி வைத்து, முடிந்தவரை, குறைந்தது ஒரு நாழிகையாவது, த்யானம் செய்யச் சொல்கிறார். நடப்பது எதுவாயினும், மனதுக்கு பிடிக்காததாக இருந்தாலும், பொறுமையை கைபிடித்து, பெரியவர்கள் இருக்கிறார்கள் என்ற திடமான நம்பிக்கையில், இறைவனிடம் அர்ப்பண மனோபாவத்துடன் இருக்கச்சொல்கிறார்.

இன்னொரு அகத்தியர் அடியவருக்கு, தனிப்பட்ட வாக்குரைத்த பொழுது, சூரியனில் எற்பட்ட மாற்றங்களால்தான், தமிழகத்தில், இத்தனை கடுமையான வெயிலும், தண்ணீர் பஞ்சமும் இருக்கிறது எனவும், அதற்காக நாம் கீழ்காணும் மூலிகைகளை, வாங்கி, பொடித்து, தினமும் காலையிலும், மாலையிலும், அவரவர் வீட்டில், தூப புகை போட்டு, முக்கியமாக, இது சித்தர்களுக்கு சமர்ப்பணம் என்று கொடுத்துவிட்டால், நிச்சயமாக, நாம் கொடுக்கும் மூலிகை தூபத்தை ஏற்றுக்கொண்டு,  வெம்மையிலிருந்து காப்பாற்றுவோம்! என வாக்குரைத்துள்ளார்.

இதை கேட்ட அடியவர், ஒரு வெம்மை நிறைந்த நாளில், அகத்தியப்பெருமான் கூறியதுபோல் செய்ய, மறுநாளே, வெம்மை குறைந்து, அன்று முழுவதும், மேகம் குடைபோட்டு வெப்பத்தை குறைத்ததாம்.

வேண்டிய மூலிகை பொருட்கள்:-

1.  கஸ்தூரி மஞ்சள்.
2.  வெண் கடுகு.
3.  பச்சை கற்பூரம்.
4.  மஞ்சள் தூள்.
5.  நாய் கடுகு.
6.  மருதாணி விதை.
7.  சாம்பிராணி.
8.  அருகம் புல்.
9.  வில்வ இலை.
10. வேம்பு இலை, குச்சி.
11. வன்னி இலை, குச்சி.
12. கருங்காலி குச்சி.
13. பேய் மிரட்டி குச்சி.
14. வெண் குங்குலியம்.
15. அகில்.
16. சந்தனம்.

மேற் கூறிய இரு விஷயங்களையும், "லோக ஷேமத்துக்காக" என்று வேண்டிக்கொண்டு செய்தால், "எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ, அப்படி வாழ்ந்துவிடு" என நம் குருநாதர் அடிக்கடி கூறுவது, எப்படிப்பட்ட நிலை என்று அனைவராலும் உணர முடியும்.

நலமாக வாழுங்கள்.

ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................... தொடரும்

13 comments:

 1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
  ஓம் அருள்மிகு மூத்தோன துணை
  ஓம் அருள்மிகு அம்மை அப்பன் போற்றி
  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் துணை

  இறை அருள் வாக்கு கிடைத்ததற்கு நன்றிகள் கோடி ஐயா

  அய்யன் அருளானைபடி செய்கிறோம் ஐயா

  ReplyDelete
 2. ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம் !! குருவடி சரணம்

  ReplyDelete
 3. Om agastiyar thiruvadi. Saranam.

  ReplyDelete
 4. Iya vanakkam. Om sri agasthiyar iyan thiruvadigal potri! Om sri lobha muthrai amma thiruvadigal potri!mikka nandri iya.

  ReplyDelete
 5. மேல் கண்ட அனைத்தையும் கலந்து அகர்பத்தி வடிவில் உள்ளது. தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவும்.9629496486.

  ReplyDelete
 6. குருநாதர் எனக்கு ஆயுள்விருத்தி யாகம் செய்து கொள்ள ஜீவநாடியில் உரைத்துள்ளார் . என்னால் தற்போது ஆயுள் விருத்தி யாகம் செய்யமுடியாத பொருளாதார சூழ்நிலையில் உள்ளேன் . அதற்கு மாறாக வேறு பரிகாரம் உள்ளதா . அப்படி இருந்தால் தயவு செய்து கூறவும்

  ReplyDelete
  Replies
  1. You can chant Mruthinjaya and Dhanvanthri moola and Gayathri Manthra as much as possible in the bramha mugurtha time.

   Delete
 7. Om Sri lopamudra samata agastiyar thiruvadi saranam.ungal arulm,arugamiyum eppoum engali Vali natha vendukiran.saranm Thai thanthaiku.

  ReplyDelete
 8. Om agastiyar thiruvadi Saranam saranam

  ReplyDelete
 9. ஐயா

  வணக்கம். தங்களின் ஆசியுடன் ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி "தேடல் உள்ள தேனீக்களாய்" வலைப்பதிவில் தொடங்கி உள்ளோம். தினம் ஒரு அருள்வாக்கும் இந்த பதிவுகளில் தொடர உள்ளோம். குருநாதரின் அருளால் மோட்ச தீப வழிபாடு இன்றோடு முதலாம் ஆண்டு முழுமை பெறுகின்றோம்.அடியார் பெருமக்கள் மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.

  ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

  ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

  ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

  ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

  கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


  குருவின் தாள் பணிந்து

  ரா.ராகேஷ்
  7904612352
  கூடுவாஞ்சேரி

  ReplyDelete
 10. Athu suriyanaal yerpatta mattrathal alla , suriyanuku vandha kovathaal yewrpatta vilavu. sarva vallamai porindhya ennai , muppathu mookodi thevagar vanagum emmai , kevalam oru arkakka inathil thondriya indha Rahu pidithu avamana paduthivitane endra kovam than , andha kovam thaniya margazhi matham varai pogum , athai than agathiya nasukaga mattram engirar , anal nan athai kovam engirane ! :P suriya mattum chandiran num kovamathan ullan . ellam andha rahu kethu val vandha vinai....

  ReplyDelete