​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 1 August 2019

சித்தன் அருள் - 818 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் - விட்டுப்போனவை!


வணக்கம், அகத்தியர் அடியவர்களே. சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள் நிறைவு பெற்றதும், ஒரு முறை வேகமாக படித்து பார்த்த பொழுது, அடியேன் எடுத்த குறிப்புகளில், ஒன்றிரண்டு விஷயங்களை, கூற விட்டுப்போனேன் என புரிந்தது. அவற்றை தொகுத்து, இங்கே தந்துள்ளேன்.

ஆசாரம் Vs ஆரோக்கியம்:-

உடலை இயக்கத்தை கட்டுப்படுத்துவது தச வாயுக்கள். அதை கண்டுபிடித்த பெரியவர்கள், தின வாழ்க்கையில், பல நல்ல வழிகளை முறை படுத்தி வைத்தார்கள். ஆனால் அந்த வழி முறைகள் என்ன செய்யும், உடலுக்கு எவ்விதம் நலம் தரும் என்று கூறாததினால், பல தலைமுறைக்கு ஒரு செயலின் உள்ளர்த்தம் புரிய வில்லை. உதாரணமாக, பிராணனும், அபானனும் (வாயுக்கள்) ஒன்றுக்கொன்று கைகோர்த்து, ஒருவரை ஒருவர் தன் பக்கம் இழுப்பதால், இதயத்துக்குள், மருத்துவர்கள் சொல்கிற "லப்-டப்" ஓசை உருவாகிறது. எப்பொழுது இந்த வாயுக்கள் ஒருவரை ஒருவர் கைவிட்டு தன் வழியில் செல்கிறதோ, அப்பொழுதே, அந்த  பிராணன் உடலை விட்டு வெளியேறப் போகிறது என்று அர்த்தம்.

இயற்கை உபாதைகளான, உடல் கழிவுகள் உடலைவிட்டு சரியான நேரத்தில் வெளியேற, அபானன் விரிந்து செயலாற்றுகிறது. எந்த வாயுவும், விரிவடைந்தால், உடலுக்குள் மிகுந்த சூட்டை உருவாக்கும். அபானன் விரிவடைந்து கழுத்து முதல், கால் வரை பரவி நிற்கும். அதை உடனேயே குளிரவைக்கவில்லை எனில், வேறு சில பிரச்சினைகளை கிளப்பிவிடும், என்றறிந்த பெரியவர்கள், கழிவறைக்கு சென்று வந்த பின், கால்களில், கைகளில் நீர்விட்டு கழுவி, பலமுறை வாய் கொப்பிளிக்க வேண்டும் என உரைத்தார்கள். அப்படி குளிர்ந்த, சமனான நீர்விட்டு சுத்தம் செய்து கொள்கிற பொழுது, நாம் அறியாமல், அபானனை குளிர்வித்து உடல் இயக்கத்தை காப்பாற்றுகிறோம், என்பதே உண்மை. இதையே, ஒரு சிலர் ஆசாரமாக, பாவித்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை - சித்தர்கள் பார்வையில் ஒரு அதிசயமாக பாவிக்கப் படுகிறதே!

திருவண்ணாமலை, அகத்தியர் கூற்றின்படி, நித்தம் நித்தம், ஒவ்வொரு நொடியும், அதிசயங்கள் நடக்கும் இடம். நிறைய மனிதர்களுக்கு, அவரவர் கர்மாவின்படி, அதிசயத்தில் பங்குபெறுகிற, காண்கிற வாய்ப்பை சித்தர்கள் அளித்துள்ளனர். அப்படிப்பட்ட நிகழ்ச்சியே, பலரது வாழ்விலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது, என்பதும் உண்மை. ஒவ்வொரு கிரிவலமும், முறையாக, அமைதியாக, சிவநாம ஜெபத்துடன், உள் முனைப்புடன் செய்தால், அந்த ஒருவன்/ஒருவள், வந்த பொழுது வாங்கி வந்த மிகப்பெரிய கர்மா கட்டை, அவிழ்த்து, அண்ணாமலையார், தன் மீது கட்டிக்கொள்வர். இவனுக்கு/இவளுக்கு கர்ம பாரம் குறையும்.

மேலும், சித்த மார்கத்தில் ஒரு வழக்கு சொல் உண்டு.  "வட்டம் என்பது ஒரு நேர்கோடு" என. திருவண்ணாமலை கிரிவலம் அது என்னவென்று புரியவைக்கும்.

வாழ்க்கையில் மனிதன் இயல்பாகவே சேர்த்துக் கொள்கிற கர்மா என்பது, கிரிவலத்தின் பொழுது செய்கிற தானத்தினால், உடனேயே விலகும்.

கர்மா கழிதல்:-

மரணம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒரு நிலைதான். அது எங்கு, எப்பொழுது, எப்படி என்பதில்தான் வித்தியாசப்படுகிறது. உடல் அசந்து போகும்முன் பௌதீகத்தை சேர்த்துவிடவேண்டும் என்று முனைப்புக்காட்டுகிற மனிதன், உயிர் நீத்தபின் கூட வருவது அவனது பாபமும், புண்ணியமும் தவிர சேர்த்துவைத்த எந்த பொருளோ, தனது உறவோ, சுற்றமோ இல்லை என்பதை உணர்வதே இல்லையே. முனைப்பு அனைத்தும், உலகாயாத பொருட்களில், தன் குடும்பத்தாரிடம் மட்டும் வைத்துவிட்டு, தனக்கொரு பிரச்சனை வந்தால் மட்டும் சித்தர்களை நாடியில் தேடி வந்து, அன்றுவரை செய்த கெட்ட கர்மாவை, அவர்கள்  மொத்தமாக கழித்துவிட, வழி கூற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். சாப்பிட்டது ஜீரணமாக, குறைந்தது ஒரு மணி நேரம் உடலுக்கு தேவைப்படுகிறதென்றால், எத்தனை ஜென்ம கர்மாவுக்கு, எவ்வளவு நேரம் வேண்டி வரும்? இதை ஏன் யோசிப்பதில்லை?

சித்த மார்கத்தில் தானம் செய்யும் முறை:-

சித்த வித்யார்த்திகள், தானம் செய்வது, தங்கள், மூச்சை. அது பார்க்கக் கிடைப்பது அரிது. அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதாக வரித்துக் கொண்டு, இரு கையையும் சேர்த்து, இரு கட்டை விரலும் மூக்கின் இரு பக்கமும் வைத்து, இரு ஆள்காட்டி விரலும் ஒன்றாக சேர்த்து, சுழுமுனையில் இருக்க, மற்ற விரல்கள் மூக்கை மறைத்து நிற்க, பிறர் காணா வண்ணம், இடது மூக்கை அழுத்தி மூடி, வலது மூக்கு வழியாக காற்றை உள்ளிழுக்கும் பொழுது "ஓம் நமச்சிவாய" என்று மனதுள் தியானித்து, கும்பமானதும், "சிவாய நமஹ" என தியானித்து, அந்த நேரத்தில், இடது மூக்கின் வழி மூச்சை, மூடிய விரல்களை திறந்து, இறைவன் பாதத்தில் சமர்ப்பிப்பார்கள். 

சித்தன் அருள்.................. தொடரும்!

40 comments:

 1. ஓம் ஸ்ரீலோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி! போற்றி!!

  ReplyDelete
 2. Om Sri lopamudra samata agastiyar thiruvadi saranamappa.

  ReplyDelete
 3. Mikka nandri ayya ...om Madha Lobha mudra sametha agatheesaya namaha..

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  அரிய பொக்கிஷங்கள் அள்ளி கொடுக்கிறீர்கள் அகத்தியர் அய்யனே.....

  நன்றி ஐயா

  ReplyDelete
 5. ஐயா வணக்கம், ஓம் அகத்தியர் ஐயன் லூபாமுத்ரை அம்மா திருவடிகள் போற்றி!போற்றி! சித்த மார்கத்தில் ஒரு வழக்கு சொல் உண்டு. "வட்டம் என்பது ஒரு நேர்கோடு" என. திருவண்ணாமலை கிரிவலம் அது என்னவென்று புரியவைக்கும். ஐயா இதை புரிய வைக்க வேண்டுகிறேன். மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 6. Get well Soon. Agathiar and Madha Grace.

  ReplyDelete
 7. Sri lopamudra samedha agasthia peruman thiruvadigal potri

  ReplyDelete


 8. Sir, namaskaram, I met u in kodaganallur last year
  During thirumanjanam.
  Now I booked tickets for 11 people in my family to go to nambimalai today 8.8.19.But wife of nambimalai gurukkal advised me today not to come there now as forest dept will not allow to go to malai for 3 days. Also she asked me to come over there on 9th sep.
  So I cancelled the trip.
  Sir, why this is happening?

  ReplyDelete
  Replies
  1. You know the rains at kerala. Don't go for the time being.

   Delete


 9. Sir, namaskaram, I met u in kodaganallur last year
  During thirumanjanam.
  Now I booked tickets for 11 people in my family to go to nambimalai today 8.8.19.But wife of nambimalai gurukkal advised me today not to come there now as forest dept will not allow to go to malai for 3 days. Also she asked me to come over there on 9th sep.
  So I cancelled the trip.
  Sir, why this is happening?

  ReplyDelete
 10. ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி

  ReplyDelete
 11. Respected Sir,

  By name I am Lohabiraman from Pondicherry. Just two before I came across your blog; from then I am regularly reading your articles one by one. I have an issue for my elder daughter for which I want to discuss with you to get a solution from Sri Sri Sri Lobamudra sametha Sri Agasthiya Maharish through you. Please tell me your contact details to reach you & discuss about the issue. Please help me to get out of the problem which kills us. Kind Regards K. Lohabiraman, Pondicherry. Ph: 94868 29716.

  ReplyDelete
 12. ayya vanakkam . ayya thanjai kanesan ayyavoda vilasam matrum phone no anuppungal ayya adiyenukku peruthaviyaga erukkum nanri...

  ReplyDelete
  Replies
  1. ஐயா திரு.கணேசன் அவர்களை தொடர்பு கொள்ள முதலில் +91- 94434 21627 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.ஒரு வேலை ஐயாவால் அழைப்பை ஏற்க முடியாத போது ,அழைத்ததின் நோக்கத்தை குறுந் தகவலாக ஐயாவின் மற்றும் ஒரு எண் +91 - 94445 18902 ற்க்கு WhatsApp செய்யவும்.பிறகு தகவல் பார்த்து ஐயா அவர்களே திரும்ப அழைப்பார்கள்.

   மேலும் புதிய அன்பர்கள் ஜீவ அருள் நாடி வாக்கு கேட்க ஐயாவை அழைக்கும் போது உங்களது பெயர் மற்றும் ஊர் குறித்த தகவல்களை ஐயாவின் WhatsApp எண்ணிற்க்கு குறுந்தகவல் அனுப்பவும்.ஐயா அவர்கள் திரும்ப அழைக்க ஏதுவாக இருக்கும்.

   Delete
 13. Om Sri lopamudra. Samata Sri agastiyar thiruvadi pottri.mikka nandri Thai tantai.

  ReplyDelete
 14. பதிவு போடுவதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

  ReplyDelete
 15. ஓம் நமசிவாயம்

  ReplyDelete
 16. We went to Nambimalai and had nice dharsan on 08.08.2019. Only we were 6 people - gurukkal, his assistant and 4 devotees. We prayed for Loga shemam. Om Agatheeswaraya namaha

  ReplyDelete
 17. ஐயா🙏🙏🙏

  நான் மிகவும் மன உளச்சலில் உள்ளேன் ஜிவ நாடி எங்கு பார்க்கலாம்

  ReplyDelete
  Replies
  1. Please contact Somasundaram from Palani. He is jeeva naadi jothidar

   Delete
 18. ஐயா,
  தங்களின் பதிவுகள் தொடர்ந்து ஏன் வரவில்லை. மனதுக்கு வருத்தமளிக்கிறது.

  ReplyDelete
 19. Can anyone give me nambimalai gurukal phone number please

  ReplyDelete
 20. ஐயா.... அகத்தியர் அய்யன் அருள் நிறைந்த பதிவிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றோம்....

  ReplyDelete
 21. ஓதிமலையும் வள்ளிமலையும்

  அனைவருக்கும் வணக்கம். ஓதியப்பர் பிறந்த நாளை வள்ளி மலையில் “தேடல் உள்ள தேனீக்களாய்” குழுவின் சார்பில் அன்னதானம், அபிசேகம், தீபமேற்றல் என கொண்டாடினோம். வழி நடத்தும் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு ஓதிமலையும்,வள்ளிமலையும் என்ற தொகுப்பை கீழே தருகின்றோம்.

  பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

  சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

  ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

  ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

  நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

  தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

  வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

  வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

  குருவின் தாள் பணிந்து,

  ரா.ராகேஷ்
  7904612352
  கூடுவாஞ்சேரி

  ReplyDelete
 22. Can anyone who knows Shri. Agnilingam Sir's residence visit him and update please. All of us are awaiting his posts.

  ReplyDelete
 23. ஸ்ரீ லோபமுத்திரா சமேத ஸ்ரீ அகத்தியர் திருவடிகள் சரணம் அனைத்து ஸ்ரீ அகத்தியர் ஐயா அடியார்கள் திருவடிகளே சரணம் அடியேன் சிறிய சந்தேகம் குலதெய்வம் கோயிலுக்கு நாம் செய்யும் பூஜை முறையில் உயிர் பலிகள் ஆடு கோழி போன்ற வழிபாடு முறைகள் உள்ளன அவ்வாறு செய்யும் வழிபாடுகள் சரியான முறைதானா அல்லது உயிர்பலி இல்லாமல் குலதெய்வ வழிபாடுகள் சிறந்த முறையில் செய்வது எப்படி குலதெய்வத்தின் பரிபூரண ஆசிகள் பெறுவது எந்த பூசை முறை இதை தயவு கூர்ந்து தெளிவுபடுத்துங்கள் ஐயா இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  ReplyDelete
 24. Ayya Shri Agnilngam Posts are stopped. Self anxius to know the reason.HOPE keeping good health
  __Agastheesaya namah....

  ReplyDelete
 25. All of you pray Agasthiyar ayyan. He will show the way .

  Hope Agnilingam ayya is well.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். உடல் நிலை தேறியதும் திரும்பி வருகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கு மிக்க நன்றி. அக்னிலிங்கம்.

   Delete
  2. தங்களது உடல்நிலை விரைவில் குணமடைந்து தேறி வர எல்லாம் வல்ல நமது அகத்திய குரு பகவானை வேண்டுகிறேன். 🙏🙏🙏

   Delete
  3. தங்களது உடல்நிலை விரைவில் குணமடைந்து தேறி வர எல்லாம் வல்ல நமது அகத்திய குரு பகவானை வேண்டுகிறேன். 🙏🙏🙏

   Delete
 26. தந்தை அகஸ்தியர் கருணையால் விரைவில் குணமாகும்

  ReplyDelete
 27. ஐயா,
  உங்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி.
  ஐயன் அகத்தியர் அருளால் விரைவில் உடல்நலம் பெற நானும் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 28. ஐயா,
  உங்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி.
  ஐயன் அகத்தியர் அருளால் விரைவில் உடல்நலம் பெற நானும் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 29. Ayya ungal udalnilai nalamudan irruka Sri lopamudra samata agastiyar thiruvadi vanaing prarthanai pannukiroam.nalamudan varungal ayya.

  ReplyDelete
 30. we r anxious to see shri agnilingam Arunachalam posting at the earliest

  ReplyDelete
 31. அகத்தியர் அய்யனே உங்களுக்கு துணையாக இருப்பார்.... தாங்கள் விரைவில் உடல் நலம் ஆரோக்கியமாக நலமடைவீர்....

  ReplyDelete
 32. புரட்டாசி ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ்

  நிகழும் மங்களகரமான விகாரி வருடம் புரட்டாசி மாதம் 8 ஆம் நாள் 25.09.2019 புதன்கிழமை அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப தினத்தில் காலை 9 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

  மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

  மேலும் விபரங்களுக்கு : ரா.ராகேஷ் - 7904612352

  ReplyDelete