"எங்கள் தன்முனைப்பும், ஆணவமும், சினமும்தான் முக்கியம்" என்று மனிதர்கள் வாழ்ந்தால், அப்படி அவர்களை விதி அழைத்து சென்றால், அதற்கு சித்தர்களோ, நவக்ரகங்களோ அல்லது இறைவனோ எப்படி பொறுப்பேற்க இயலும்? எனவே மனிதர்கள் தமக்குள் சிந்தித்துப் பார்த்து தன் குறைகளை அன்றாடம் பகுத்துப் பார்த்து ஒவ்வொன்றாக விட்டுவிட முயற்சி செய்ய வேண்டும். ஆனால் மனிதனுக்கு எப்பொழுதுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிவது அடுத்தவனின் குறையும், குற்றமும்தான். அதனால்தான் இத்தனை பிரச்சினைகளும் வாழ்க்கையிலே ஒவ்வொரு மனிதனுக்கும் நடந்து கொண்டேயிருக்கிறது. தன் குறைகளை ஒவ்வொரு மனிதனும் சீர்தூக்கிப் பார்த்து அதனை மெல்ல, மெல்ல விட்டுவிட்டாலே இந்த உலகிலே பெரும்பாலும் அமைதி நிலவும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete